சென்னை: "உண்மையான துறவிகள் யார், மக்களுக்கு சேவை செய்யும் மடங்கள் எவை என்பதை, மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்' என, திருப்பனந்தாள் அதிபர் எஜமான் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீன இளைய சன்னிதானமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு, பாரம்பரியம் மிக்க சைவ ஆதீனகர்த்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் மதுரை ஆதீனகர்த்தர் இன்று வரை தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில் நித்யானந்தா தலைமறைவானதை அடுத்து, பிடதி ஆசிரமத்தை கர்நாடக அரசு கைப்பற்றியது. இதுகுறித்து திருப்பனந்தாள் அதிபர் எஜமான் சுவாமிகள் "தினமலருக்கு' அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது: இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகாவது உண்மையான துறவிகள் யார், பாரம்பரியம் மிக்க மடங்கள் எவை, அவற்றின் சமூக சேவைகள் என்னென்ன என்பதை, மக்கள் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
நித்யானந்தா ஏற்கனவே இதற்கு முன்பு, இதைப்

பாரம்பரியம் மிக்க சைவ ஆதீனங்கள், விளம்பரம் இல்லாமல், சத்தம் இல்லாமல் பல சமூக சேவைகளைச் செய்து வருகின்றன. ஆனால், மக்கள் விளம்பரங்களை நம்பி, போலி சாமியார்கள் பின்னால் சென்று, அவர்களால் துன்பப்படுகின்றனர். புதிது புதிதாக தோன்றுகின்ற சாமியார்கள் "டியூப் லைட்' போன்றவர்கள். பாரம்பரியம் மிக்க சைவ ஆதீனங்கள் குத்துவிளக்கு போன்றவர்கள். வழிபடும் தகுதி படைத்தது குத்துவிளக்கு என்பதை
இதுகுறித்து தருமையாதீனத்தின் குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் கூறுகையில், "மதுரை ஆதீன விவகாரத்தில், சைவர்கள் மிகவும் மனம் புழுங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசின் செயல் பாராட்டுக்குரியது. தமிழக அரசும் இவ்விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.