RightClick

நமக்கு வளமான வாழ்க்கையை அருளும் பைரவர் வழிபாடு!!!சிவபெருமான் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை;ஆனால்,தேவைப்படும்போது தனது சக்தியை அனுப்புகிறார்.அப்படி சிவனின் மனதிலிருந்து உருவான சிவசக்தியே பைரவர் ஆவார்.நவக்கிரகங்களை தனது காலச் சக்கரத்தால் இயக்கிவருபவர் பைரவரே! பெரும்பாலான சிவாலயங்களில் காவல் தெய்வமாக இருப்பவர் பைரவர் ஆவார்.ஒரு சில வைஷ்ணவ ஆலயங்களிலும் காவல் தெய்வமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.பைரவர்களில் மொத்தம் 64 அம்சங்கள் இருக்கிறார்கள்.கோவிலில் வைத்து வழிபடத் தக்கவர்  கால பைரவர் ஆவார்.வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர்         ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரே!!!


செல்வ வளத்துக்கு மஹாவிஷ்ணு,மஹாலட்சுமி,குபேரன் இவர்களை வழிபட வேண்டும்;பல வருடங்களாக இப்படி வழிபட்டுவந்தாலும்,ஒரு சிலருக்கே செல்வ வளம் விரைவில் கிடைக்கிறது.பெரும்பாலானவர்களுக்கு விரைவான பணக்கஷ்டம் நீங்குவதில்லை;இதற்கான காரணத்தை ஜோதிட ரீதியாக மட்டுமே கண்டுபிடிக்கமுடிந்தது. கடுமையான கர்மவினைகள் ஒருவருக்கு இருக்கும்போது,அவர்கள் மஹாவிஷ்ணுவை வழிபடும்போது பல ஆண்டுகளுக்குப் பிறகே அவர்களுக்குச் செல்வ வளம் உண்டாகிறது.கர்மவினையை நீக்கும் சக்தி எல்லாக் கடவுளர்களுக்கும் இருக்கும்போது, விரைவாக நீக்கும் ஆற்றல் உள்ள தெய்வம் பைரவருக்கே இருக்கிறது.

சரி,எப்படி பைரவரை வழிபட வேண்டும்?


முதலில் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்.அசைவம் சாப்பிடுபவர்களுக்கு எந்த ஒரு கடவுளின் அருட்கடாட்சமும் கிடைக்காது .அடுத்தபடியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.வீட்டில் செய்வதற்கு என்று சில விதிமுறைகள் உண்டு.மாதம் ஒருமுறை தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று,அந்த நாளில் வரும் இராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி குறைந்தது 12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்தாலே நமது கடுமையான கர்மவினைகள் நீங்கி,மகத்தான செல்வ வளம் கிடைத்துவிடும்.அரசியலில் இருப்பவர்கள் மாபெரும் அரசியல் வெற்றியைப் பெறுவார்கள்;நீண்டகாலக் கடன்கள் தீர்ந்துவிடும்; நீண்டகாலமாக வராத கடன் வசூலாகிவிடும்;கர்மநோயால் அவதிப்படுபவர்கள் நோயின் தீவிரம் குறைவதை உணருவார்கள்.


ஏன் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண் ஆகர்ஷண பைரவரை வழிபட வேண்டும்?


மனிதர்களாகிய நமக்குச் செல்வ வளத்தை அள்ளித்தருவது அஷ்டலட்சுமிகள் ஆவர். அவரவர் முன் ஜன்ம பூர்வபுண்ணியத்துக்கு ஏற்ப நமக்கு வேலை அல்லது தொழில் அல்லது சேவை மூலமாக தினமும் பணம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.இப்படி நமக்குச் செல்வ  வளத்தை தருவதால்,அஷ்ட லட்சுமிகளின் செல்வ ஆற்றல் குறைகிறது.எனவே,ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலத்தில் அஷ்டலட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண     ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.அவ்வாறு வழிபாடு செய்வதை ஆன்மீக ஆராய்ச்சியாளர் திரு.சகஸ்ரவடுகர் ஐயா 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்துள்ளார்.நாமும் அதே நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபட்டால்,நமக்கு விரைவான செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது அனுபவ உண்மை.


ஆன்மீகக்கடலுக்குத் தொடர்புகொண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவையும்,வழிபாட்டுமுறையையும் தட்சிணை கொடுத்து வாங்கிக்கொண்டு,வீட்டில் வைத்து தினமும் வழிபாடு செய்துவரவும்.யார் வழிபாடு செய்கிறார்களோ,அவர்கள் மட்டும் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் போதுமானது.இப்படி ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் குறைந்தது 6 மாதங்களுக்கு வழிபட்டு வந்தால்,பணப்பிரச்னைகள் தீரும்;செல்வச் செழிப்பு அதிகரிக்கும்;வராத கடன் வசூலாகிவிடும்;கொடுக்க வேண்டிய கடனை கொடுக்குமளவுக்கு வருமானம் படிப்படியாக உயரும்;அரசியலில் ஈடுபட்டிருப்போர் முன்னேற்றத்தை அடைவார்கள்;நோயாளியாக இருப்பவர்கள் நோயிலிருந்து மீள்வார்கள்.


ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பின்வரும் நகரங்களில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகளுக்கு இராகுகாலத்தில் வழிபட வேண்டும்.அவருடைய மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்துவிட்டு,நேராக அவரவர் வீடுகளுக்கு மட்டும் செல்ல வேண்டும்.கோவில்களில் தரப்படும் எந்த ஒரு பானகத்தையும்,மோரையும் கோவிலுக்குள் நுழையும்போதும்,கோவிலில் வழிபாடு முடித்துவிட்டு வெளியேறும்போதும் ஒருபோதும் அருந்தக் கூடாது.அப்படி அருந்தினால்,நீங்கள் சொர்ண பைரவரிடம் வாங்கிய வரம்,உங்களோடு வராது.


1.திண்டுக்கல் அருகில் இருக்கும் தாடிக்கொம்பு

2.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பெரியகடைவீதி

3.வயிரவன் பட்டி(பிள்ளையார்பட்டி அருகில்) 700 ஆண்டு பழமையான கோவில் & சித்தர்களே வந்து வழிபட்ட      ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இவர்!!!

4.இலுப்பைக்குடி(காரைக்குடி அருகில்)சித்தர்கள் காலம்முதல் இருக்கிறது.கொங்கண சித்தரின் ஜீவசமாதி இது.
5.சிதம்பரம்
6.திருச்சி டூ புதுக்கோட்டை சாலையில் திருச்சியிலிருந்து 45 கி.மீ.தூரத்தில் இருக்கும் தபசுமலை
7.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி
8.சென்னை அருகில் இருக்கும் வானகரம்
9.சென்னையின் ஒரு பகுதியான பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் ஒரு திருமண மண்டபம்
10.சென்னை படப்பையில்  இருக்கும் ஸ்ரீஜெயதுர்கா பீடம்
11.திருஅண்ணாமலை கோவிலின் உட்பிரகாரம்
12.திரு அண்ணாமலையிலிருந்து  காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆசிரமம்(சித்தர்களின் முறைப்படி ஸ்தாபிக்கப்பட்டது)
13.(விரைவில்)பெரம்பலூர்
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ