RightClick

ஒரே நாளில் நமது பாவவினைகளைத் தீர்க்க உதவும் அமாவாசைத்திருவாதிரை நாளன்று பைரவ மந்திர ஜபம்!


இந்த நந்தன ஆண்டின் திருவாதிரை அமாவாசையானது 19.6.2012 செவ்வாய்க்கிழமை இரவு மணி 9.02க்குத் துவங்கி,20.6.2012 புதன் இரவு 10.11க்கு நிறைவடைகிறது.ஆனால்,திருவாதிரை நட்சத்திரமோ 19.6.12 நள்ளிரவு 1.08(புதன் விடிகாலை)க்குத் துவங்கி,20.6.12 புதன் நள்ளிரவு 2.52க்கு(வியாழன் விடிகாலை)நிறைவடைகிறது.எனவே,செவ்வாய்க்கிழமை இரவு திருவாதிரையும் அமாவாசையும் சேர்ந்துவருவதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

மும்மூர்த்திகளின் தலைவராக சிவபெருமான் இருப்பதாலும்,அவரது ஒரே  அவதாரமாக பைரவர் இருப்பதாலும்  20.6.2012 புதன் கிழமையன்று முழுவதும் விரதமிருந்து பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து ஒரு நாள் முழுக்க ஜபிக்கவேண்டும்;இப்படி ஜபிப்பதற்கு 19.6.2012 செவ்வாய்க்கிழமையும்,206.2012 புதன்கிழமையும் ரொமான்ஸ் விஷயங்களை அடியோடு நிறுத்தவேண்டும்;காமரீதியான படங்கள்,வீடியோக்கள்,பேச்சுக்கள்,சிந்தனைகளை நினைக்கவே கூடாது.இப்படிப்பட்ட கட்டுப்பாடு இல்லாமல் இந்த வழிபாட்டுமுறையைச் செய்தால்,நிச்சயம் உங்களை நாய் வந்து கடிக்கும்.தேவையில்லாத புதுப்புதுப்பிரச்னைகள் வெடிக்கும் ஜாக்கிரதை!!!

தமிழ்நாடு தவிர,அயல்நாடுகள்,வெளி மாநிலங்களில் வசிப்போர் தனது அறையை சுத்தப்படுத்தி,ஆடைகளையும் சுத்தமாக்கிவிட்டு, அறையில் மேற்கு திசையில் இருக்கும் சுவற்றில் சந்தனத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;இப்படி மேற்கு சுவற்றில் வரைந்தால் நாம் வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்;தெற்கு சுவற்றில் வரைந்தால், நாம் கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்.


பின்வரும் பைரவ ஸ்தலங்கள் பைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்கள் ஆகும்.இதற்கு அட்டவீரட்டானங்கள் என்று பெயர்.இங்கு பைரவர் சிவபெருமானாகவே காட்சியளிப்பதால்,சிவபெருமானின் அவதார நட்சத்திரமான திருவாதிரையன்று பைரவரின் மந்திரத்தை ஒரு நாள் முழுக்கவும் ஜபிப்பது நன்று.ஒரு வேளை அப்படி ஜபிக்கமுடியாதவர்கள்,ஒரு மணி நேரம் மட்டுமாவது ஜபிப்பது அவசியம்.இதன் மூலமாக ஒரே நாளில் நமது அனைத்துக் கர்மவினைகளும் தீர்ந்துவிடும்.


1.ஆதி வில்வாரண்யம் என்று போற்றப்படும் திருக்கண்டியூர்.இந்த ஊரில் பிரமசிர கண்டீஸ்வரர்.இங்கு வடமேற்கு திசையில் சுற்றுப்பிரகாரத்தில் பைரவரின் சன்னதி இருக்கிறது.இந்த ஊரானது தஞ்சாவூர் திருவையாறு சாலையில் திருவையாற்றுக்கு அருகில் இருக்கிறது.


2.திருக்கோவிலூர்.அண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.இங்கு அந்தஹாசுர சம்ஹாரமூர்த்தி,சிவானந்தவல்லி என்ற பெரியநாயகி என்ற பெயரில் பைரவர் அருள்பாலித்துவருகிறார்.


3.திருவதிகை:பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கும் இங்கே வீரட்டானேஸ்வரர் என்ற பெயரில் பைரவர் சிவவடிவில் ஆட்சிபுரிந்துவருகிறார்.


4.திருப்பறியலூர்: மாயவரம்(மயிலாடுதுறை) திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் அமைந்திருக்கிறது.இங்கே வீரட்டேஸ்வரர் இளங்கொம்பனையாள் என்று தம்பதி சமேதராக பைரவர் சைவவடிவம் தாங்கி இருக்கிறார்.


5.திருவிற்குடி:திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2கி.மீ.தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.இங்கு ஸ்ரீஜலந்தராசுவதமூர்த்தியாக இருக்கிறார்.


6.வழுவூர்:மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் சென்று,வலப்புறம் அரை கி.மீ.தூரத்தில் வழுவூர் அமைந்திருக்கிறது.இங்கே கிருத்திவாஸர் என்ற பெயரில் பைரவர் சிவலிங்கமாகக் காட்சியளித்துவருகிறார்.கேரளமாநிலத்தின் தெய்வம் ஐயப்பன் அவதரித்த இடம் இதுவே!


7.திருக்குறுக்கை:மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற ஊருக்கு வர வேண்டும்.அங்கிருந்து பிரிந்து 3 கி.மீ.தூரம் சென்றால் திருக்குறுக்கை வரும்.இங்கே வீரட்டேஸ்வரர் ஞானாம்பிகை தம்பதியாக பைரவர் அருள்பாலித்துவருகிறார்.
8.வில்வாரண்யம் என்ற திருக்கடவூர்:இங்கே அமிர்தகடேஸ்வரர் அபிராமி தம்பதியாக பைரவர் ஆண்டு வருகிறார்.


இந்த அட்ட வீரட்டானங்களைத் தவிர,ஏராளமான பைரவ ஸ்தலங்கள் இருக்கின்றன.இவைகளில் ஏதாவது ஒரு ஸ்தலத்தில் 20.6.12 அன்று பின்வரும் பைரவ மந்திரத்தை ஒரு நாள் முழுக்க உபவாசம் எனப்படும் விரதமிருந்து ஜபித்து,நமது கர்மவினைகளைத் தீர்ப்போம்;

எப்படி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்?

இந்த கோவில்களில் மூலவரை நோக்கி அமரலாம்;அல்லது இங்கிருக்கும் பைரவரின் சன்னதியில் மஞ்சள் துண்டு விரித்து,இரு கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு,பத்மாசனமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.

முதலில் நமது குலதெய்வத்தை நினைத்துக்கொள்ள வேண்டும்.(உதாரணமாக,ஓம் முனீஸ்வராய நமஹ=ஒருமுறை மட்டும்) அடுத்தபடியாக நமது இஷ்டதெய்வத்தை நினைத்துக்கொள்ள வேண்டும்.(குல தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை முதலில் நினைத்துக்கொள்ள வேண்டும்=ஓம் பத்திரகாளியே நமஹ=ஒருமுறை மட்டும்)பிறகு ஓம் கணபதியே நமஹ என்று ஒரு முறை ஜபித்துக்கொண்டு,

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


என்று ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு மணி நேரம் வரை மட்டுமாவது ஜபிக்க வேண்டும்.
இறுதியாக இந்த மந்திரத்தை நமக்கு அருளிய காகா சித்தருக்கு கோடி நன்றிகள் என்று ஒரே ஒருமுறை நினைத்துக்கொள்ள வேண்டும்.


பின்குறிப்பு:படத்தில் திரு அண்ணாமலையில் அமைந்திருக்கும் காலபைரவர்!!!
ஓம்சிவசிவஓம்