RightClick

இந்தியாவைக் காப்பாற்றிவரும் குடும்பம் என்ற அமைப்பு:இந்துமதத்தின் வேர் குடும்பம் என்ற அமைப்புதான்

சுதேசிச் சிந்தனை: இந்தியாவைக் காப்பாற்றி வரும் குடும்பம் என்ற அமைப்பு

இந்தியாவில் 25 கோடி குடும்பங்கள் உள்ளன.ஒரு குடும்பத்தில் குறைந்த பட்சம் ஒரு தம்பதியும் அதிக பட்சம் 150 பேர்களும் இருக்கின்றனர்.

சங்கரன்கோவில் அருகே இருக்கும் ஒரு கிராமம் கூட்டுக்குடும்பமாக இருந்தது.ஒரு கணவன்,9 மனைவி,110 பிள்ளைகள் என அந்த குடும்பத்தில் மொத்தம் 120 பேர்கள் அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,மச்சான்,மாமா,அத்தை,சித்தி,பெரியம்மா,பேரன்,பேத்தி என வாழ்ந்து வந்தார்கள்.அந்த குடும்பத்தின் தலைவர் கி.பி.1980 ஆம் ஆண்டு மறைந்த பின்பே தனியாக சமைக்கவும்,வாழவும் துவங்கினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்தின் பெயரே 16 பிள்ளைக்காரி குடும்பம் ஆகும்.ஒரே ஒரு கணவன் மனைவிக்கு மொத்தம் இருப்பது இன்றும் 16 குழந்தைகள்.தற்போதுதான் 6 ஆம் குழந்தைக்கு திருமணம் செய்துள்ளனராம்.இவையெல்லாம் வெறும் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள்.இவற்றை விட பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்ன வென்றால் எந்த வித பொருளாதார நெருக்கடியையும் தாங்கி வல்லரசு நிலைக்கு நமது பாரத நாடு வந்ததற்குக் காரணம் குடும்பம் என்ற அமைப்புதான்.அது எப்படி? பார்ப்போம்.

உங்கள் தெரு அல்லது கிராமம் அல்லது பகுதியில் உள்ள வசதியான குடும்பங்களை கூர்ந்து கவனியுங்கள்.அங்கு பெரும்பாலும் அந்தக்குடும்பத்தின் குடும்பத்தலைவியின் கையிலேயே மொத்த அதிகாரமும் இருக்கும்.அப்படி இருக்கும் குடும்பங்களின் வருமானம் 10 முதல் 25 வருடங்களுக்குப் பாதுகாக்கப்பட்டு அவை அசையாத சொத்துக்களாக மாற்றப்பட்டிருக்கும்.அந்த அம்மா என்ன சொன்னாலும் அவளின் கணவன் மறுக்கவே மாட்டார்.ஏன் எனில்,அவளின் கணவனுக்குத் தெரியும்.தனது மனைவி எடுக்கும் சிறு முடிவு அல்லது முக்கிய முடிவு எதுவாக இருந்தாலும் சரியாக இருக்கும் என்று.ஆனால்,இதை தனது உயிர் நண்பனிடம் கூட ஒரு தடவை கூட சொல்லியிருக்க மாட்டான்.போடா பொண்டாட்டிக்கு பயந்தவனே என பலரும் அவனை நக்கல் செய்திருப்பர்.ஆனாலும் அவனுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.எனக்குத் தெரிந்து ஒரு தி.மு.க.நகர் மன்றத் தலைவராக இருப்பவர், பல தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்.அரசியலில் இவரை பார்த்தாலே நடுங்குவர்.ஆனால்,இவர் அடிக்கடி தனது மனைவியிடம் அடி வாங்குவார்.இவர் திருமணம் செய்த போது குடிசைவீட்டில் இருந்தவர்.இன்று கோடிகளில் புரளுபவர்.

இவர் வசிக்கும் பகுதியிலேயே இன்னொரு அரசியல்வாதி! பரம்பரை பணக்காரர் அல்ல.அரசியல் சம்பாதித்த கோடிகளை, மனைவியையே அடக்கி ஆண்டதால் அத்தனையையும் இழந்துவிட்டார்.எப்போதும் ஆல்கஹாலில் மிதப்பவர்.
முதலில் சொன்ன அரசியல்வாதி போல நமது பாரதப்பொருளாதாரம் இருக்கிறது.இரண்டாவதாக சொன்ன அரசியல்வாதியைப் போல மேல்நாடுகளின் பொருளாதாரம் செயல்படுகிறது.சரி! இதற்கும் பொருளாதார வலிமைக்கும் என்ன தொடர்பு?

ஒரு சோப் கம்பெனி ஒருவர் ஆரம்பித்தால், அதன் மூலமாக 10 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.இதற்குத் தேவையான முதலீடு வெறும் ரூ.2,00,000/-மட்டுமே.ஆனால், மறைமுகமாக உருவாகும் வேலைவாய்ப்பு சுமார் 120 பேர்களுக்கு.இந்த இரண்டு லட்ச ரூபாய்கள் அரசு வங்கி,தனியார் வங்கி தரும் சதவீதம் வெறும் 1% ஆக இருக்கின்றது நமது இந்தியாவில்!!!
ஆக,மீதி 95% தொழிற்கடன் எப்படி உருவாகிறது?குடும்பங்களின் சேமிப்புக்களே தொழில் முதலீடாக மாறுகின்றது.நமது அம்மாக்கள், சித்திகள்,சகோதரிகளின் சேமிப்புக்களே இந்தியாவின் தொழில்வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றன.4% அளவுக்கான தொழிற்கடன் சுயசேமிப்பு மற்றும் நண்பர்கள் அல்லது மனைவியின் சேமிப்பாகக் கிடைக்கின்றன.

சில புள்ளிவிபரங்களைப் பார்த்தாலே புரியும்.இந்தபுள்ளி விபரங்கள் பிஸினஸ் பத்திரிகைகள்,இந்திய வங்கி அமைப்புக்கள், தேசிய புள்ளிவிபர வெளியீடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை:

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள குறைந்த பட்ச இருப்பு( மினிமம் பேலன்ஸ்)த் தொகைகளின் மொத்தம் எவ்வளவு தெரியுமா?
ரூ.38,00,000 கோடிகள்.

எல்.ஐ.சி.ஆப் இந்தியாவில் ஒழுங்காக கட்டாமல் விடப்பட்ட பிரீமியத்தொகைகளின் மொத்தம் எவ்வளவு தெரியுமா?
ரூ.3,000 கோடிகள்.

நமது அம்மாக்கள் நமது அப்பாக்களுக்கும் நமக்கும் தெரியாமல் அவசரத் தேவைக்கு என கடுகுடப்பாக்களில் சேமித்துவைத்திருக்கும் தொகையை இந்திய அரசு நிதித்துறை மதிப்பிட்டுள்ளது.அந்தத் தொகை எவ்வளவு தெரியுமா? மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
ரூ.50,000 கோடிகள்!
நூறு CIAக்கள் வந்தாலும் இந்த பழக்கத்தை நிறுத்த முடியாது.
.

இதனால், இரண்டாம் வகுப்பு கூட தாண்டாத 5000 திருப்பூர் தொழிலதிபர்கள்தான் உலக பனியன்,ஜட்டி சந்தையில் 85% அளவுக்கு கைப்பற்றியுள்ளனர்.இந்த மாபெரும் சாதனைக்குக் காரணம் கொங்குவேளாளர்களின் இந்து வாழ்க்கை முறையே காரணம்.
இதேபோல், டெக்ஸ்டைல் என் ஜினியரிங், ஸ்பின்னிங் தொழிலில் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை புகழ் பெறக்காரணம் நாயுடு மற்றும் கவுண்டர் சமுதாயத்தின் இந்து வாழ்க்கை முறையே!!
தமிழ்நாட்டின் பலசரக்கு வணிகம் 80% அளவுக்கு வளர்த்தெடுப்பதில் நாடார் சமுதாயத்தின் பங்கு மிக முக்கியமானது.இவர்களின் சமுதாய ஒற்றுமையே நம்மை வல்லரசு நிலைக்கு உயர்த்திவருகின்றது.

இந்தியாமுழுக்க உணவுத்தொழிலில் 90 % செட்டியார் மற்றும் பட்டேல் இனத்தவர்களின் கடும் உழைப்பும் இந்துப் பாரம்பரிய வாழ்க்கை முறையுமே காரணம்.
திருப்பூரைப் போல இந்தியா முழுவதும் சுமார் 400 சிறுதொழில் நகரங்கள் உள்ளன.இவற்றில் சிவகாசி,கோயம்புத்தூர்,ஈரோடு என தமிழ்நாட்டில் சில உதாரணங்களைச் சொல்லலாம்.சிவகாசியின் தீப்பெட்டிகள் இந்தியாவின் தீப்பெட்டிச் சந்தையில் சுமார் 90% அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளன.

ஆக, எப்போது அரசியலில் ஜாதி நுழைந்ததோ அப்போதும், எப்போது ஜாதியில் அரசியல் நுழைந்ததோ அப்போதும் மாபெரும் அழிவுகளை சந்தித்து வருகிறோம்.

குடும்ப அமைப்பால் ஜெயித்த ஒரு நிறுவனத்தை இங்கு கூற விரும்புகிறேன்:
திருப்பூரில் ஒரு குடும்பம்.அவர்களின் முதல் மகனுக்கு படிப்பே வரவில்லை.இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்துகிறார் அவனது அப்பா.கூடவே,அவனை மறுநாள் முதல் ஒரு டீக்கடைக்கு வேலைக்கு அனுப்ப முடிவெடுக்கிறார்.இந்த 7 வயது சிறுவன் அன்று இரவே தனது பாட்டியைத் தேடிச் செல்கிறான். “பாட்டி எனக்கு படிப்பு வரலைங்கறதால என்னை டீக்கடையில் வேலைக்கு அனுப்பப் போறாராம் அப்பா”எனக்கூறுகிறான்.
பாட்டி அப்போதே தனது மருமகனைத் தேடி வருகிறார்.
“மாப்ளே! என் பேரனை நீங்க எப்படி டீக்கடைக்கு அனுப்பலாம்?”
“அவனுக்கு படிப்பு வரலை.அதனால டீக்கடைக்கு அனுப்பறேன்”
“வேற எங்கேயாவது அனுப்புங்க”
அப்பாவின் முடிவு பாட்டியின் யோசனையால் மாறுகிறது.பனியன் கம்பெனியில் 7 வயது சிறுவன் வேலைக்குச் சேர்க்கப்படுகிறான்.10 ஆண்டுகள் கழிகின்றன.பனியன் கம்பெனியின் சகல நிர்வாக சூட்சுமங்களும் 7 வயது சிறுவனுக்கு 17 வயதுக்குள் அத்துப்படியாகின்றன.18 ஆம் வயதில் தனது அப்பாவிடம் கேட்கிறான்.

“அப்பா நான் பனியன் கம்பெனி ஆரம்பிக்கப்போறேன்.”
“ஒழுங்கா வேலையைப் பாரு.”

மறுபடியும் 18 வயது இளைஞர் பாட்டியைத் தேடிச் செல்கிறார்.பாட்டி தனது பேரன் மீதான பாசத்தில் தனது தங்க நகைகளையெல்லாம் தருகிறார்.கூடவே, கேள்விகளும் கேட்கிறார்.
“எப்படிப்பா கம்பெனியைநிர்வாகிப்பே?”
“பாட்டி, பி.ஏ.படிச்ச ஒருத்தர் எங்க கம்பெனியில் மேனேஜராக இருக்குறார்.அவரை பார்ட்னராக சேர்க்கலாம்னு இருக்கேன்”
“சரிப்பா நல்லா வளர்க”

ஆறே மாதம் தான்.அந்த பி.ஏ.படித்த மேனேஜரும்,இந்த 18 வயது இளைஞரும் சேர்ந்து கம்பெனி ஆரம்பிக்கின்றனர்.பி.ஏ.படித்த மேனேஜர் இந்த 18 வயது பார்ட்னரிடமிருந்து பணத்தை திருடி ஓடியே போய்விட்டான்.மீண்டும் பாட்டியை சந்தித்து என்ன செய்யட்டும் எனக் கேட்கிறார் 18 வயது.

பாட்டியின் ஆறுதல் தான் அந்த இளைஞனை திடப்படுத்தியது.என்னிடம் 4 ஏக்கர் நிலம் இருக்கு.உனது அம்மாவின் பங்கு 2 ஏக்கரை உனக்குத்தருகிறேன் எனக்கூற அதன்படி 2 ஏக்கர் பாரம்பரிய சொத்து பனியன் கம்பெனியின் முதலீடாக மாறுகிறது.
இன்று அந்த பனியன் கம்பெனியே பனியன் தொழிலில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வைக்கிங்!!!


இதுபோல சுமார் 1,00,000 நிஜக் கதைகள் நம்மைச் சுற்றிலும் உண்டு.பெரும்பாலும் தமிழ்நாட்டில் தனது தம்பி அல்லது அண்ணன்மார்களுக்கு தனது நகைகளையும்,சேமிப்பையும் தொழில்முதலீடாக வழங்கும் அக்காக்களும் தங்கைகளுமே அதிகம்.ஆக,குடும்பம் அமைப்பே இந்தியாவின் பொருளாதார வலிமையாக இருக்கிறது.

இந்த குடும்ப அமைப்பைச் சிதைப்பதில் செல்போன் கேமிராக்கள்,இண்டர்நெட்,ஐ.டி.நிறுவனங்களின் அமெரிக்க நிர்வாக முறை, வெளிநாட்டு வங்கிகள்,வெளிநாட்டு இன்சூரன்ஸ்கள்,அமெரிக்காவின் திட்டத்தை நிறைவேற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.எல்.எம். எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன.இவற்றை நாம் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும்.