RightClick

இதுதான் உண்மையான ஆன்மிகச் சேவை பாகம் 4


அந்தக் குடும்பத்தின் தலைவரான அப்பா நீதி நேர்மைக்குப் பேர்போனவர்; சுமார் 30 ஆண்டுகளாக தனது விவசாய நிலத்தை வைத்து,ஓடி ஓடி சம்பாதித்து,சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு சொத்துக்களை சம்பாதித்தார்.இப்போது அவர் ஓய்வு நிலையினை எட்டியதும்,அவரது ஒரே மகன் அவரது இடத்தைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறான்.அவரைப் போலவே காலை 4 மணிக்கு எழுந்து,விவசாய வேலைகளைப்பார்த்துவிட்டு கூடவே, தனது பட்டப்படிப்பையும் முடித்தான்.எவரிடமும் எந்த ஒரு பொருளையும் இலவசமாகப் பெற்றது கிடையாது.கடன் வாங்குவது கிடையாது;கொடுப்பதும் கிடையாது.எல்லா உறவினர்கள்,நண்பர்களிடமும் உண்மையை மட்டுமே பேசிப்பழகுவது அவனது குணம்;அவனது அப்பாவைப்போலவே! இதன் விளைவாக அவர்களின் சொத்துக்குப்பிரச்னை வந்தது.ஒரு நாள் ஒரு அரசியல்வாதி தனது பினாமி மூலமாக அவர்களுடைய மிகப்பிரம்மாண்டமான பண்ணை நிலத்தைப்பிடுங்கிக்கொண்டான்.அதுவும் எப்படி? ரொம்பவும் யோசித்து,மிக அருமையாகத் திட்டமிட்டு!! இந்த நேர்மையான குடும்பத்தினர் அந்த பினாமியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.நமது நாட்டில்தான்  ஒரு வழக்கின் வேகம்தான் தெரியுமே?தீர்ப்பு சொல்லும் சூழ்நிலை  நெருங்கியபோது,தான் நேர்மையாக 30 ஆண்டுகளாக சம்பாதித்த சொத்து கிடைக்காது என்ற மன உளைச்சலில் அப்பா இறந்தே போனார்.மீதி மகனும்,அம்மாவுமே இருக்கிறார்கள் என்ற மிதப்பில் நீதித்துறையையே வளைக்க ஆரம்பித்தனர் அரசியல்வாதியின் பினாமி குழு!!


இந்த சூழ்நிலையில் இவர்கள் நமது ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களை சந்தித்தனர்.தங்களுடைய சூழ்நிலையை விவரித்தனர்.இவர்கள் சந்தித்ததும்,இவர்களின் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பித்ரு தோஷமும் வேறு சில தோஷங்களும் இருப்பதும் அவர்களின் ஜாதகத்தைப்பார்த்ததில் தெரியவந்தது.


(ஜோதிடப்படி,ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பித்ரு தோஷம் இருப்பது மிக மிக அரிது.ஏனெனில்,எந்த ஒரு குடும்பத்திலும் ஒரே ஒரு வாரிசுக்குத்தான் பித்ரு தோஷம் இருக்கும்.இந்த பித்ரு தோஷத்துடன் யார் பிறக்கிறார்களோ அவர்களே இந்த கலிகாலத்தில் ஓரளவாவது பக்தியுடனும்,தர்மப்படி நடப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.இவர்களை அப்படி பிறக்க வைப்பது அவர்களின் இறந்துபோன முன்னோர்கள் என்பது சூட்சும தேவ ரகசியம் ஆகும்)


எனவே,அம்மா மற்றும் மகனுக்கு விஜயாபதியில் நவகலசயாகம் செய்து வைத்தார் நமது ஆன்மீககுரு சிவமாரியப்பன் அவர்கள்.நவகலசயாகம் செய்து முடித்த 44 ஆம் நாளில் இவர்களின் வழக்கறிஞர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.அந்த மனுமீதான விசாரணை மிகக் குறுகியகாலத்துக்குள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அந்த விசாரணையின் முடிவின்படி,அந்த அரசியல்வாதியின் பினாமி போலியாக பட்டா தயாரித்து,இந்த நேர்மையான குடும்பத்தினரின் கையெழுத்தை வேறு போலி நபர்களைக் கொண்டு போட வைத்து,பண்ணையை தமது பெயருக்குச் சுருட்டியிருக்கின்றனர் என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.இவர்களுடைய சொத்து இவர்களுக்குத் திரும்பக் கிடைத்தது.தமது சொத்து கிடைத்த மகிழ்ச்சியில் நமது ஆன்மீக குருவை நேரில் வந்து சந்தித்து கோடி நன்றிகளைத் தெரிவித்ததோடு,ஏதாவது பிரதியுபகாரம் செய்ய விரும்புவதாக பல நாட்கள் திரும்பத் திரும்ப வந்து கேட்டுக்கொண்டே இருந்தனர் அந்த நேர்மையான அம்மாவும்,மகனும்!!!எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை நமது ஆன்மீக குரு அவர்கள்!!!


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ