RightClick

ஏன் நாம் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்? பகுதி 2


இன்று அரசியலும்,அரசியல்நடவடிக்கைகளும் சாதாரணமக்களின் நலனை மையமாகக்கொண்டு செயல்படவில்லை;இந்த சூழ்நிலை நமது தமிழ்நாடு,இந்தியாவில் மட்டுமல்ல;உலகம் முழுக்கவுமே இந்த சூழல்தான்! அதேசமயம்,நான் கடவுளை நம்புவதில்லை;என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள்,அதிகார மையங்கள்; மாவட்டம்,மாநிலம்,நாட்டின் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் வெளியே நாத்திகவாதிகளாகக் காட்டிக்கொண்டாலும்,அவர்களால் நிம்மதியாகவும்,அவர்களின் மனசாட்சிப்படியும் அவர்களின் முழு அரசுப்பணிகாலம் முழுவதும் காலம் தள்ளமுடிவதில்லை;இந்த சூழ்நிலையில் தனது பதவியையும்,கவுரவத்தையும் அவர்கள் எப்படிகாப்பாற்றுகிறார்கள்?
அவர்களின் உள்வட்டத்தில் ஏதாவது ஒரு ஆன்மீகத் தொடர்பு இருக்கிறது.இந்த ஆன்மீகத் தொடர்பு காலங்காலமாகவே இருந்துவருகிறது.ஆனால்,இதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.அந்த உள்வட்டத்தில் அஞ்சனம் எனப்படும் மாந்திரீகம் செய்யப்பட்ட மையை தனக்குச் சாதகமாகப்பயன்படுத்துவது,தனது உயரதிகாரியை வசியம் செய்து வைத்துக்கொள்வது என அடுக்கலாம்;இந்த மாந்திரீகபொருட்களைத் தயாரிப்பவர்கள் நிச்சயம் பைரவரின் அருளைப் பெற்றவர்களாக மட்டுமே இருக்கமுடியும்.வேறு எவர் இம்மாதிரியான செயல் செய்தாலும்,அதில் உயிரோட்டம் இராது.மாந்திரீகம் என்பதை இன்றைய மக்கள் இழிவானதாகவும்,பயமுள்ளதாகவும் நினைக்கின்றனர்.நிஜத்தில் இறைவனது அருளைப் பெற உதவும் ஒரு ஆன்மீக வழிமுறையே மாந்திரீகம் ஆகும்.(கத்தியைக் கொண்டு காய்கறிகளை வெட்டலாம்;மனிதர்களையும் வெட்டலாம்;) மாந்திரீக சக்தி நமது ஆன்மீக முன்னேற்றத்தின் போது கிடைக்கும் இறைபரிசு ஆகும்;இதுபோல தொடர்ந்து அஷ்டமாசக்திகள்,சித்திகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்;அப்போது நமது மனம் தடுமாறும்;அந்த தடுமாற்றத்தை தடுத்து,நமது மனதை தன்வசப்படுத்திவிட்டாலே,நம்மை இறைவன் ஏற்றுக்கொள்வார்.
           
300 ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆங்கிலேயன் நம்மை ஆள்கிறேன் என்ற பெயரில் நமக்குள் பிரிவினைகளை விதைத்தான்;அந்த விதையானது இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது.அந்தப் பிரிவினையின் விஸ்வரூபமே,இன்று நாத்திக முகமூடியை பலர் அணிந்திருப்பது;பிராமண எதிர்ப்பு,இந்து தர்மத்தின் அர்த்தம் நிறைந்த பண்பாட்டு வழிமுறைகளை கேலி செய்வது,இந்தியாவின் ஆத்மா இந்துதர்மம் என்பதை உணராமல் இருப்பது;கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களை கொள்ளையடிப்பது;என்று வரிசைப்படுத்தலாம்.


அதே சமயம்,அதே மேல்நாட்டினர் நமது இந்துதர்மத்தினுள் பொதிந்து அல்லது புதைந்திருக்கும் விஞ்ஞான ரகசியங்களை நவீன ஆராய்ச்சிகள் மூலமாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.அப்படி வெளிப்படுத்தப்படும் இந்துதர்மத்தின் விஞ்ஞான ரகசியங்களை தொகுப்பதற்கு தமிழ்நாட்டில் ஒருவர் கூட இல்லை;தொகுத்தால் அவைகளை நமது இளைஞர் சமுதாயத்துக்கு போதிக்கலாம்.அப்படி போதிப்பதன் மூலமாக தேசபக்தியும்,தெய்வபக்தியும் நிறைந்த புதிய இந்திய தலைமுறையை உருவாக்கிவிடலாம்.அப்படி உண்டாக்கிவிட்டால்,எத்தனை வல்லரசுநாடுகள் ஒன்று சேர்ந்து,நமது நாட்டை நாசமாக்கிடநினைத்தாலும்,அவர்களால் முடியவே முடியாது.(தொகுக்க யார் இருக்கிறார்கள்?)

ஓரளவே உள்பலமுள்ள வேறுமதங்கள் இன்று உலக அளவில் வளர்ந்துவிட்டதற்கு ரகசிய வழிபாடான பைரவ வழிபாடுதான் காரணம் ஆகும்.ஏனெனில்,பைரவர் வழிபாடுகளில் மொத்தம் 64 விதங்கள் இருக்கின்றன.இந்த 64 விதங்களைக்கொண்டு ஒவ்வொரு ஆன்மீகக்குழுவுமே இந்த உலகத்தையே ஆள முடியும்;அதுவும் பல நூற்றாண்டுகளாக!! பைரவர் வழிபாட்டு முறைகளை இந்த உலகிற்கு எந்த மதம் தந்ததோ,அந்த மதம் இன்று அதைப்பற்றிய முழுமையை உணராமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.அதனாலேயே,இந்து மக்களும் பலவிதமான சிரமங்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனர்.இந்த சூழ்நிலையை அடியோடு மாற்றி நமது பாரத மக்கள் வலிமையும்,செல்வ வளமும் பெற்று வாழவே இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது.

பைரவர் வழிபாட்டைப்பின்பற்ற நாம் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு கட்டுப்பாடுகள்தான்! ஒன்று அசைவம் சாப்பிடுவதைக் கைவிடுவது;இரண்டு காமரீதியான கட்டுப்பாட்டுடன் இருந்து பைரவர் வழிபாட்டைப்பின்பற்றுவது! சர்வ சக்தி என்பார்களே அது வேண்டுவோர்,தினமும் பைரவர் வழிபாட்டைத்தான் பின்பற்ற வேண்டும்.

பலவிதமான கர்மவினைகளோடு நாம் பிறந்து,பலவிதமான சோகங்கள்,ஏக்கங்கள்,சிரமங்களோடு வாழ்ந்து வரும் நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாட்டை பின்வரும் முறையில் பின்பற்றினால்,ஒரு சில வருடங்களில் நமது இயல்பான திறமையால் சிலலட்ச ரூபாய்களை நேர்மையாகவே சம்பாதித்து சேமித்துவிடமுடியும்.அது என்னவெனில்,ஓராண்டு வரை மனக்கட்டுப்பாட்டுடன் இருந்து,தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாட்டுமுறையைப் பின்பற்றினால் போதும்.இந்த ஓராண்டு வரையிலும் தாம்பத்தியமோ,அது சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையுமோ கண்டிப்பாக தவிர்த்தே ஆகவேண்டும்;அடுத்தபடியாக அசைவம் சாப்பிடவே கூடாது.இந்த இரண்டையும் உறுதியாகப் பின்பற்றுபவர்கள் மட்டுமே இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள்,இந்த இறைமுயற்சியைத் துவங்காமலே இருப்பது நல்லது.

ஸ்ரீகுரோத பைரவரை வெள்ளிக்கிழமையும் பவுர்ணமியும் வரும் நாளிலும்(31.8.2012,28.12.2012,25.1.2013);வெள்ளிக்கிழமையும் அஷ்டமியும்(9.8.2012,7.12.2012) வரும் நாட்களில் வெள்ளிக்கிழமையும் திருஓணம் நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாட்களில் விரதமிருந்து ஸ்ரீகுரோதன பைரவரை உபாசித்து(வழிபட்டுவந்தால்) கனவிலும் வறுமை என்பது இல்லை;இது சித்தர்கள் அருளிய இரகசிய அனுபவ வாக்கு ஆகும்.நமக்கு இந்த பைரவ ரகசியத்தைப் போதிப்பவர் சித்தர் ஸ்ரீஸ்ரீகாகபுஜண்டர் தர்மலிங்கசுவாமிகள் ஆவார்.

குரோதன பைரவர் தமிழ்நாட்டில் ஒருசில கோவில்களில்தான் இருந்து அருள்பாலித்துவருகிறார்.சிதம்பரம்,சீர்காழி மற்றும் சில தமிழக ஊர்களில் அஷ்டபைரவர்களாக இருந்து அருள்பாலித்துஅருளுகின்றனர்.

முற்பிறவிகளில் நாம் சித்தர்களின் சீடராக இருந்தாலோ,ஆழ்ந்த சிவ அனுபவமுள்ள சிவனடியாராக இருந்தால் மட்டுமே இப்பிறவியில் பைரவர் வழிபாட்டைச் செய்ய முடியும் என்பதை உணருங்கள்.இதுவும் சித்தர்களால் நமக்குக் கிடைத்திருக்கும் அருள் செய்தி  ஆகும்.

இதுதொடர்புடைய பிற பதிவுகள்:


ஓம்சிவசிவஓம்