மும்மூர்த்திகளான பிரம்மா எனப்படும் அயன்,விஷ்ணு எனப்படும் திருமால்,சிவன்
என நம்மால் நம்பப்படும் ருத்ரன் =இம்மூவருக்கும் மேலே இருக்கும் உயரதிகாரியே சிவன்
ஆவார்.சிவனும் ருத்ரனும் ஒருவரல்ல;சிவன் நிரந்தரமான தெய்வ சக்தி;ருத்ரன் நிரந்தரமில்லாத
தெய்வசக்தி.
சிவனுடைய ஆளுமைப்பகுதியே திரு அண்ணாமலை ஆகும்.தமிழ்நாட்டில் விழுப்புரம்
அருகே அமைந்திருக்கும் மாவட்டத்தலைநகரமே திரு அண்ணாமலை ஆகும்.இந்த அண்ணாமலையானது சைவத்தின்
சக்தி மையமாகவும்,உலகத்தின் ஆத்ம கட்டுப்பாட்டு மையமாகவும் அமைந்திருக்கிறது.தியானத்தில்
ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவர்களுக்கு புருவ மத்தியில் அமைந்திருக்கும் மூன்றாவது
கண் திறந்துவிடும்;அப்படி மூன்றாவது கண் திறந்தவர்கள் இந்த அண்ணாமலையைப் பார்த்தால்,இந்த அண்ணாமலையானது பூமிக்கு
மேலே இருக்கும் ஏழு உலகங்களுக்கான தொடர்பு மையமாக இருப்பதை உணருவார்கள்.மற்றவர்களுக்கு அப்படித் தெரியாது.
ஒருமுறை அண்ணாமலை கிரிவலம்(14 கி.மீ) சென்றால்,நமது கர்மவினைகள் பெரும்பகுதி
வலுவிழக்கத் துவங்கும்;36 பவுர்ணமிகளுக்கு கிரிவலம் வந்துகொண்டே இருந்தால்,அதில் ஏதாவது
ஒரு பவுர்ணமியன்று நமது முன்னோர்களில் யார் சித்தராக இருக்கிறாரோ,அவரது அருட்பார்வை
நமக்குக் கிடைக்கும்.அப்படி ஒரே ஒருமுறை நம்மையறியாமல் கிடைத்துவிட்டால்,அன்றுமுதல்
நமது அனைத்துப் பிரச்னைகளும்,வேதனைகளும்,ஏக்கங்களும் அண்ணாமலையின் அருளால் தீர்ந்துவிடும்.எனவே
தான் அண்ணாமலைக்கு ஒவ்வொரு பவுர்ணமிக்கும் உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.அடுத்த சில ஆண்டுகளில்
பவுர்ணமி கிரிவலத்துக்கு சீனர்களும்,ஆப்ரிக்கர்களும்,ஸ்பானியர்களும் அலைஅலையாக வருவதை
பார்க்கப் போகிறோம்.(நம்ப முடியலையா?காத்திருந்து பாருங்கள்)
துவாதசி திதி அன்று அண்ணாமலை கிரிவலம் வந்தவாறு அன்னதானம் செய்தால்,அப்படிச்
செய்பவர்களுக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என்று சிவமஹாபுராணம் சொல்லுகிறது.(நடைமுறை
அனுபவத்தில் அவ்வாறு செய்தால்,நம்முடைய கடுமையான கர்மவினைகள்தீர்ந்துவிடுகின்றன.துவாதசி
திதி அன்னதானம் ஒரே ஒரு முறை செய்தபிறகு,நமது
தினசரி வாழ்க்கை எளிமையாகவும்,மென்மையாகவும்,இனிமையாகவும்,செல்வச் செழிப்பாகவும்
மாறிவிடுகிறது)ஒவ்வொரு முறையும் நாம் கிரிவலம் செல்லும்போதும் நம்முடன் நமது முந்தைய
மனிதப் பிறவிகள் அனைத்தும் நம்மோடு சூட்சுமமாக கிரிவலம் வரும்;இதன்மூலமாக ஓவ்வொரு முற்பிறவிகளின்
பாவ வினைகளும் அண்ணாமலையிலிருந்து பரவும் செங்கதிர்களால் அழிந்துகொண்டே வரும்.(இந்த
தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளியவர் சித்தர்களின் தலைவர் அகத்தியர் ஆவார்)
சிவனின் அவதார நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.ஒவ்வொரு ஆனி மாதமும் வரும்
அமாவாசையானது சிவனது அவதார நட்சத்திரமான திருவாதிரை அன்றுதான் வருகிறது.1,00,008 விதமான
அண்ணாமலை கிரிவலங்கள் இருக்கின்றன.
ஒன்று பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வது;
இரண்டு அமாவாசையன்று கிரிவலம் செல்வது;
மூன்று துவாதசி திதியன்று கிரிவலம் சென்றவாறே அன்னதானம் செய்வது;
நான்கு நமது ஜன்ம நட்சத்திர நாளாகப் பார்த்து அந்த நாளில் கிரிவலம் செல்வது(அப்படி
12 முறை கிரிவலம் செல்ல வேண்டும்;அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு முறையும் அன்னதானம்
செய்ய வேண்டும்.இதனால் ஓராண்டுக்குள் நமது பொருளாதார வாழ்க்கையும்,ஆன்மீக வாழ்க்கையும்
முன்னேற்றமடையும் என்பது அனுபவ உண்மை!!!)
ஐந்தாவது சிவராத்திரியன்று கிரிவலம் செல்வது;
ஆறாவது தலையில் ஒரு வில்வ இலையை வைத்துக்கொண்டு,உள்ளங்கையில் தலா ஒரு
ருத்ராட்சம் வைத்துக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் செல்வது;
ஏழாவது சட்டைப்பையில் ஒரு எலுமிச்சை பழம் வைத்துக்கொண்டு கிரிவலம் செல்வது(கிரிவலம்
முடிந்ததும்,அந்த எலுமிச்சையை நமது தொழில் ஸ்தானத்தில் பத்திரப்படுத்தி வைக்க அந்த
தொழில் விறுவிறுவென வளர்ந்து கொண்டே செல்லும்)
எட்டாவது நமது முழு உடலாலும் கிரிவலம் செல்லுவது;இன்றும் இந்த நடைமுறையை
பலர் பின்பற்றிவருகின்றனர்;அண்ணாமலையின் கிழக்குக் கோபுரவாசலின் அருகே இருக்கும் இரட்டைப்பிள்ளையாரை வணங்கி,அங்கப்பிரதட்சணம்
செய்தாவாறு அங்கிருந்து உருண்டு வந்து தேரடி முனீஸ்வரரை வழிபட்டு,கிரிவலப்பாதையான
14 கி.மீ.தூரத்தையும் முழு உடலால் உருண்டு வலம் வருவது! நினைக்கவே பிரமிப்பாகவும்,ஆச்சரியமாகவும்
இருக்கிறதே! நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்?
ஒன்பதாவதாக ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என சொல்லிவிட்டு,ஒரு அடி எடுத்து
வைத்துவிட்டு,அங்கே 1008 முறை ஓம் அண்ணாமலையே போற்றி என மனதுக்குள் சொல்வது;பிறகு ஓருமுறை
ஓம் அருணாச்சலாய நமஹ என்று சொல்லிவிட்டு அடுத்த அடி எடுத்து வைத்து 1008 முறை ஓம் அண்ணாமலையே
போற்றி என ஜபிப்பது;இந்த முறைப்படி ஒரு முறை கிரிவலம் முடிக்க பல மாதங்கள் ஆகும்.
பத்தாவதாக மிகவும் கடினமான முறை ஆகும்.கால்களின் விரல்களால் மட்டும்
கிரிவலம் செல்வது;யோக முறைகளின் மூலமாக மட்டுமே இந்த கிரிவலம் செல்ல முடியும்.
இந்த நந்தன ஆண்டின் திருவாதிரை அமாவாசையானது 19.6.2012 செவ்வாய்க்கிழமை
இரவு மணி 9.02க்குத் துவங்கி,20.6.2012 புதன் இரவு 10.11க்கு நிறைவடைகிறது.ஆனால்,திருவாதிரை
நட்சத்திரமோ 19.6.12 நள்ளிரவு 1.08(புதன் விடிகாலை)க்குத் துவங்கி,20.6.12 புதன் நள்ளிரவு
2.52க்கு(வியாழன் விடிகாலை)நிறைவடைகிறது.எனவே,செவ்வாய்க்கிழமை இரவு திருவாதிரையும்
அமாவாசையும் சேர்ந்துவருவதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த 19.6.12 செவ்வாய் நள்ளிரவு 1.08 மணிக்குப் பிறகு அண்ணாமலையில் கிரிவலம்
துவங்கலாம்.அப்படித் துவங்கும்போது,தலையில் வில்வ இலையை பசை வைத்து ஒட்டிக்கொள்ள வேண்டும்;இரண்டு
உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,மஞ்சள் நிற ஆடையை அணிந்துகொண்டு
மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று ஜபித்துக் கொண்டு கிரிவலம் வருவது நன்று.
அல்லது
அண்ணாமலைக்கு கிரிவலம் வர இயலாதவர்கள் 20.6.12 புதன் கிழமையன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள்ளும்;மாலை 4 மணி முதல்
6 மணிக்குள்ளும் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் உட்பிரகாரத்தைச் சுற்றியவாறு
ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.
அல்லது
மேற்கூறிய நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் நமது வீட்டில் ஒரு மணி நேரத்துக்குக்
குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.
அல்லது
நமது ஊரில் இருக்கும் சித்தர்களின் ஜீவசமாதிகளில் 20.6.2012 அன்று மாலை
5 மணி முதல் 6 மணிக்குள் மஞ்சள் துண்டை கிழக்கு அல்லது வடக்கு நோக்கிவிரித்து,அதில்
அமர்ந்து,இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபிக்க
வேண்டும்.
இவ்வாறு செய்வதால்,சிவபெருமானின் அருட்கடாட்சம் வெகு விரைவில் நமக்குக்
கிடைக்கும்.
ஓம்சிவசிவஓம்