RightClick

நமக்கு வளமான வாழ்க்கையை அருளும் பைரவர் வழிபாடு!!!சிவபெருமான் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை;ஆனால்,தேவைப்படும்போது தனது சக்தியை அனுப்புகிறார்.அப்படி சிவனின் மனதிலிருந்து உருவான சிவசக்தியே பைரவர் ஆவார்.நவக்கிரகங்களை தனது காலச் சக்கரத்தால் இயக்கிவருபவர் பைரவரே! பெரும்பாலான சிவாலயங்களில் காவல் தெய்வமாக இருப்பவர் பைரவர் ஆவார்.ஒரு சில வைஷ்ணவ ஆலயங்களிலும் காவல் தெய்வமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.பைரவர்களில் மொத்தம் 64 அம்சங்கள் இருக்கிறார்கள்.கோவிலில் வைத்து வழிபடத் தக்கவர்  கால பைரவர் ஆவார்.வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர்         ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரே!!!


செல்வ வளத்துக்கு மஹாவிஷ்ணு,மஹாலட்சுமி,குபேரன் இவர்களை வழிபட வேண்டும்;பல வருடங்களாக இப்படி வழிபட்டுவந்தாலும்,ஒரு சிலருக்கே செல்வ வளம் விரைவில் கிடைக்கிறது.பெரும்பாலானவர்களுக்கு விரைவான பணக்கஷ்டம் நீங்குவதில்லை;இதற்கான காரணத்தை ஜோதிட ரீதியாக மட்டுமே கண்டுபிடிக்கமுடிந்தது. கடுமையான கர்மவினைகள் ஒருவருக்கு இருக்கும்போது,அவர்கள் மஹாவிஷ்ணுவை வழிபடும்போது பல ஆண்டுகளுக்குப் பிறகே அவர்களுக்குச் செல்வ வளம் உண்டாகிறது.கர்மவினையை நீக்கும் சக்தி எல்லாக் கடவுளர்களுக்கும் இருக்கும்போது, விரைவாக நீக்கும் ஆற்றல் உள்ள தெய்வம் பைரவருக்கே இருக்கிறது.

சரி,எப்படி பைரவரை வழிபட வேண்டும்?


முதலில் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்.அசைவம் சாப்பிடுபவர்களுக்கு எந்த ஒரு கடவுளின் அருட்கடாட்சமும் கிடைக்காது .அடுத்தபடியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.வீட்டில் செய்வதற்கு என்று சில விதிமுறைகள் உண்டு.மாதம் ஒருமுறை தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று,அந்த நாளில் வரும் இராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி குறைந்தது 12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்தாலே நமது கடுமையான கர்மவினைகள் நீங்கி,மகத்தான செல்வ வளம் கிடைத்துவிடும்.அரசியலில் இருப்பவர்கள் மாபெரும் அரசியல் வெற்றியைப் பெறுவார்கள்;நீண்டகாலக் கடன்கள் தீர்ந்துவிடும்; நீண்டகாலமாக வராத கடன் வசூலாகிவிடும்;கர்மநோயால் அவதிப்படுபவர்கள் நோயின் தீவிரம் குறைவதை உணருவார்கள்.


ஏன் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண் ஆகர்ஷண பைரவரை வழிபட வேண்டும்?


மனிதர்களாகிய நமக்குச் செல்வ வளத்தை அள்ளித்தருவது அஷ்டலட்சுமிகள் ஆவர். அவரவர் முன் ஜன்ம பூர்வபுண்ணியத்துக்கு ஏற்ப நமக்கு வேலை அல்லது தொழில் அல்லது சேவை மூலமாக தினமும் பணம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.இப்படி நமக்குச் செல்வ  வளத்தை தருவதால்,அஷ்ட லட்சுமிகளின் செல்வ ஆற்றல் குறைகிறது.எனவே,ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலத்தில் அஷ்டலட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண     ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.அவ்வாறு வழிபாடு செய்வதை ஆன்மீக ஆராய்ச்சியாளர் திரு.சகஸ்ரவடுகர் ஐயா 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்துள்ளார்.நாமும் அதே நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபட்டால்,நமக்கு விரைவான செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது அனுபவ உண்மை.


ஆன்மீகக்கடலுக்குத் தொடர்புகொண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவையும்,வழிபாட்டுமுறையையும் தட்சிணை கொடுத்து வாங்கிக்கொண்டு,வீட்டில் வைத்து தினமும் வழிபாடு செய்துவரவும்.யார் வழிபாடு செய்கிறார்களோ,அவர்கள் மட்டும் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் போதுமானது.இப்படி ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் குறைந்தது 6 மாதங்களுக்கு வழிபட்டு வந்தால்,பணப்பிரச்னைகள் தீரும்;செல்வச் செழிப்பு அதிகரிக்கும்;வராத கடன் வசூலாகிவிடும்;கொடுக்க வேண்டிய கடனை கொடுக்குமளவுக்கு வருமானம் படிப்படியாக உயரும்;அரசியலில் ஈடுபட்டிருப்போர் முன்னேற்றத்தை அடைவார்கள்;நோயாளியாக இருப்பவர்கள் நோயிலிருந்து மீள்வார்கள்.


ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பின்வரும் நகரங்களில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகளுக்கு இராகுகாலத்தில் வழிபட வேண்டும்.அவருடைய மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்துவிட்டு,நேராக அவரவர் வீடுகளுக்கு மட்டும் செல்ல வேண்டும்.கோவில்களில் தரப்படும் எந்த ஒரு பானகத்தையும்,மோரையும் கோவிலுக்குள் நுழையும்போதும்,கோவிலில் வழிபாடு முடித்துவிட்டு வெளியேறும்போதும் ஒருபோதும் அருந்தக் கூடாது.அப்படி அருந்தினால்,நீங்கள் சொர்ண பைரவரிடம் வாங்கிய வரம்,உங்களோடு வராது.


1.திண்டுக்கல் அருகில் இருக்கும் தாடிக்கொம்பு

2.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பெரியகடைவீதி

3.வயிரவன் பட்டி(பிள்ளையார்பட்டி அருகில்) 700 ஆண்டு பழமையான கோவில் & சித்தர்களே வந்து வழிபட்ட      ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இவர்!!!

4.இலுப்பைக்குடி(காரைக்குடி அருகில்)சித்தர்கள் காலம்முதல் இருக்கிறது.கொங்கண சித்தரின் ஜீவசமாதி இது.
5.சிதம்பரம்
6.திருச்சி டூ புதுக்கோட்டை சாலையில் திருச்சியிலிருந்து 45 கி.மீ.தூரத்தில் இருக்கும் தபசுமலை
7.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி
8.சென்னை அருகில் இருக்கும் வானகரம்
9.சென்னையின் ஒரு பகுதியான பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் ஒரு திருமண மண்டபம்
10.சென்னை படப்பையில்  இருக்கும் ஸ்ரீஜெயதுர்கா பீடம்
11.திருஅண்ணாமலை கோவிலின் உட்பிரகாரம்
12.திரு அண்ணாமலையிலிருந்து  காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆசிரமம்(சித்தர்களின் முறைப்படி ஸ்தாபிக்கப்பட்டது)
13.(விரைவில்)பெரம்பலூர்
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

பசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி: முன்னோடியாகும் ஈரோடு மாவட்டம்


ஈரோடு: பசுவின் கோமியம் மற்றும் சாணத்திலிருந்து, மருந்துப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில், ஈரோடு மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது.
ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த விவசாயிகள், மெதுவாக இயற்கை வேளாண்மைக்கு மாறுகின்றனர்.

பஞ்ச கவ்யம் தயாரிப்பு:விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட ஈரோடு மாவட்டத்திலும், ஏராளமான விவசாயிகள், ரசாயன உரத்தை தவிர்த்து, பால், தயிர், மோர், நெய், சாணம், கோமியம் ஆகிய, மாட்டின் பொருட்களை வைத்து "பஞ்ச கவ்யம்' தயாரித்தும், சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றால் "ஜீவாமிர்தம்' தயாரித்தும், பயிர்களுக்கு தெளித்து, நல்ல மகசூல் காண்கின்றனர். நாட்டுப் பசுவை, ஒரு இயற்கை உரத் தொழிற்சாலையாகவே, ஈரோடு விவசாயிகள் கருதுகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக, நாட்டுப் பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றில் இருந்து, பல்வேறு மருத்துவப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். ஈரோடு, சாவடிப்பாளையம், லக்காபுரம், கோபி, குட்டப்பாளையம் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் சேவை அமைப்புகள் மற்றும் தனி நபர்களால், கோசாலைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும், 350 முதல், 500 நாட்டுப் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.இவற்றிடம் இருந்து பெறப்படும் கோமியம், சாணம் ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு, காய்ச்சி வடிக்கப்பட்ட கோமியம், குளியல் சோப்பு, விபூதி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஷாம்பு, ஹேர் ஆயில், பினாயில் உட்பட, ஏராளமான பொருட்களை தயாரிக்கின்றனர்.

"அரசு உதவ வேண்டும்':பஞ்ச கவ்யப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் முன்னோடி விவசாயிகள், கவுந்தப்பாடி பாலசுப்பிரமணியம், வெப்படை முரளி, முத்தூர் முத்துசாமி, கோபி கணேசன் கூறியதாவது:கோசாலைகள் தவிர, 25க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பஞ்சகவ்யா, அர்க் (கோமியம்), சோப்பு, சாம்பிராணி, விபூதி உள்ளிட்டவற்றைத் தயாரிக்கின்றனர். காய்ச்சி வடித்த கோமியத்தை, நாள்தோறும் இருவேளையும், ஐந்து மி.லி., குடித்தால், சகல நோய்களுக்கும் உடலில் இடமிருக்காது. குறிப்பாக, கேன்சருக்கு சிறப்பான நிவாரணியாக உள்ளது. இதுபோல், ஒவ்வொரு தயாரிப்பும் தனிச் சிறப்பு வாய்ந்தது. இப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சந்தைப்படுத்தவும், அரசு உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

thanks:dianamalar 27.6.2012

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்; புத்தக விமரிசனம்


பொதுவுடைமை சித்தாந்தம் என்று பிரபலப்படுத்தப்பட்டுள்ள ஒன்றைப்பற்றி வழக்கம்போல ஆதாரங்களுடன் “பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்” என்று நூலாக்கி (இரும்புத்)திரை மறைவு தகவல்களை பரிமாறியிருக்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.தமிழகத்தில் ‘த ஹிந்து’ நாளிதழ் என்.ராம் என்ற பொதுவுடைமைவாதியால் எப்படி சீன கம்யூனிஸ்டு கட்சி பிரச்சாரக்கருவி ஆக்கப்பட்டது என்ற தகவல் ஒரு உதாரணம்:
இந்திய ஊடகங்களில் ரஷ்ய உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஊடுருவல் வெற்றிகரமாக நடந்தது.கே.ஜி.பி.ஆவணங்களின்படி 1972இல் இந்திய ஊடகங்களில் சோவியத் உளவுத்துறையால் 3,789 செய்திக்கட்டுரைகள் ‘நடப்பட்டன’.இதுவே 1975 இல் 5510! கம்யூனிஸ்ட் அல்லாத நாடு ஒன்றில் இந்த அளவு வெற்றி கே.ஜி.பி.க்கு இந்தியாவில் மட்டுமே கிடைத்தது.
மாவோ ஆன மஹாவிஷ்ணு
“இந்தியாவில்  சோவியத் ஆதரவு போலவே சீன ஆதரவும் ஊடக ஊடுருவல் மூலமாக நிகழ்ந்தது".இதன்மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது சென்னையிலிருந்து வெளியாகும் ‘த ஹிந்து’ நாளேடு.இதன் ஆசிரியக் குழுவில் என்.ராம் வந்தப்பிறகு,அது ஏறக்குறைய சீனச் செய்தி நிறுவனத்தின் இந்திய பதிப்பாகவே நடந்து வந்துள்ளது எனச் சொல்கிறது சென்னையிலிருந்து இயங்கும் திபத்திய மாணவர் அமைப்பு.இதனை வெறும் சீன எதிர்ப்பு எனச் சொல்லிவிடமுடியாது.ஏனெனில் அவர்கள் இது குறித்து கொடுத்துள்ள தரவுகள் அத்தனை எளிதில் மறுக்க இயலாதவை.
“உதாரணமாக,ஏப்ரல் 19,2006 இல் சீன அதிபர் அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தலைவரான பில்கேட்ஸைச் சந்திக்கிறார்".இதனைப் பிரதான செய்தியாகச் சீனப் பத்திரிகைகள் வெளியிட்டன.இதனை புகைப்படம் சகிதம் பிரதான செய்தியாக வெளியிட்ட இந்திய நாளேடு ‘த ஹிந்து’தான்!!
சீன கம்யூனிஸ்ட் தலைவர் பில்கேட்ஸிடம், “நான் மைக்ரோஸாஃப்ட்டின் எதிரி அல்ல” என வாய்நிறையப் பல்லுடன் கூறியதை பிரதான செய்தியாக வெளியிட்ட த ஹிந்து, அதே நாள் இரண்டு முக்கிய சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் சீனா குறித்து வெளியிட்ட அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிடவில்லை; அவையாவன: 2005 இல் உலகிலேயே அதிக மரண தண்டனைகளை நிறைவேற்றிய நாடு சீன ‘மக்கள் குடியரசு தான்’ என்கிறது சர்வதேச அம்னெஸ்டி நிறுவனம்.மற்றொன்று சீனாவின் குற்றவாளிகள் கொல்லப்பட்டு அவர்களின் உடல் உறுப்புகள் விற்கப்படுகின்றன.(ஆதாரம்:ராய்ட்டர்) இந்த்ய நாளேடான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இவற்றை வெளியிட்டிருந்தது.
என்.ராம் ‘த ஹிந்து’வின் அதிகார வட்டத்துக்குள் வந்தவுடன் தொடங்கிய மாதம் இருமுறை இதழ் ஃப்ரண்ட்லைன். பலர் இப்பெயர் மூலத்திலிருக்கும் நுண்ணிய செய்தியைக் கவனிக்கவில்லை;சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ இதழ் க்யான்ஸியானின் பொருள் அது.(Qian xian=front line)
பொருள் பொதிந்த பின்வரும் வரிகளுடன் நூல் முடிகிறது. “இந்து தேசத்தின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் சுதந்திரத்துக்கும் மேலாக சித்தாந்தத்தை வைக்கும் எந்த அமைப்பும் இயக்கமும் ஒதுக்கப்பட வேண்டியதே” ஒதுக்கப்பட வேண்டியதை குறைந்த பட்சம் கேரள,மேற்கு வங்க வாக்காளர்கள் ஒதுக்கியிருக்கிறார்கள்.திரிபுரா வாக்காளர்களுக்கும் தகவல் எட்டினால் சரி.
புத்தகத்தின் பெயர்:  பஞ்சம்- படுகொலை- பேரழிவு கம்யூனிஸம்
நூலாசிரியர்:அரவிந்தன் நீலகண்டன்
வெளியீடு:கிழக்குப்பதிப்பகம் பக்கங்கள்:312 விலை ரூ.160/-

நமது குடும்பத்தையும் குடும்ப அமைப்பையும் பாதுகாப்போம்


உலகமயமாக்கல் என்னும் பூதம் இந்த பூமியினை விழுங்கத் துவங்கிய 1995 முதல் இன்று நாம் ஒவ்வொருவருமே பணத்தின் பின்னால் பிசாசு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் நமது முன்னேற்றத்துக்கு காரணமாக அமையும் விதமாக இருக்கும் வேளையில், குடும்பத்தை கவனிக்க
மறந்துவிடுகிறோம்; அன்போடு பேச வேண்டிய நமது வீட்டில் வேலைப்பளுவின் காரணமாக எரிந்துவிழுகிறோம்; நமது ஆளுமை எல்லையைத் தாண்டி உள்ளே நுழையும் சக ஊழியர்/மேலதிகாரியைத் தடுப்பதற்குப்பதிலாக போலிச்சிரிப்பை உதிர்த்து வைக்கிறோம்; எப்படிப்பார்த்தாலும்,குடும்பம் என்ற அமைப்பு இன்றும் தாக்குப்பிடித்து நிற்பதற்குக் காரணம் யார் தெரியுமா?

நமது குடும்பத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆத்மாவின் ஆழ்ந்த அன்பும், அளவற்ற பொறுமையும்,விடாப்பிடியான விட்டுக்கொடுக்கும் குணமுமே இன்று நமது ஒட்டுமொத்த குடும்பத்தையே தாங்கிக்கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலை வெகுநாட்களுக்கு நீடிக்காது போலிருக்கிறது.அந்த அளவுக்கு நமது வேலை/தொழிலின் சூழ்நிலை நம்மை மன அழுத்தம் மிக்கவர்களாகவே மாற்றிவிட்டது. இந்த மன அழுத்தத்தை நீக்கிட இன்று யாரும் இல்லை; 1970களில் கூட்டுக்குடும்பம் சிதையத் துவங்கி, 1990களில் தனிக்குடும்பங்களும் (வல்லரசு அமெரிக்காவைப் போல) அந்த தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒரே வீட்டில் வசித்தாலும், தனித்தனி அறைகளில் வசிக்கத் துவங்கினர்.தற்போது ஒரே வீட்டில் ஒரு குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருமே வாரம் ஒரு நாளாவது ஒன்றாக சாப்பிடுகிறார்களா?

ஒவ்வொரு நிமிடத்தையும் மிக கவனமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ரூபாயையும் மிக ஆழ்ந்து சிந்தித்து செலவழிக்க வேண்டியிருக்கிறது. இப்படி இருந்தாலும் கூட, மக்கள் நலமில்லாத இந்தியாவின் மத்திய அரசு சராசரி இந்திய மக்களின் உழைப்பையும், ஆத்மாவையும்,சேமிப்பையும் உறிஞ்சிக்கொழுக்கவே செய்கிறது. சாதுக்கள் நாடான நமது இந்தியாவை இந்தியாவின் மன்மோகன் அரசு மேற்கு நாடுகளின் எண்ணங்களுக்கேற்ப வெறுப்பேற்றிக்கொண்டே இருக்கிறது.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது தமிழ்ப் பழமொழி! சாதுக்கள் நாடான இந்தியா மிரண்டால், எத்தனை வல்லரசுகளும்,அதன் நரித்தனமான உளவுத்துறைகளும் தாங்குமா?

அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அமெரிக்காவில் குடும்ப அமைப்பை வலுப்படுத்தும் காரியங்களைச் செய்யத் துவங்கியிருக்கிறார். ஆனால், அதே ஒபாமா அரசு இந்தியாவின் குடும்ப அமைப்பைச் சிதைக்கும் வேலையை கச்சிதமாகச் செய்யத் துவங்கியிருக்கிறார் .இந்தியான்னா இவனுங்களுக்கு என்ன கேவலமாத் தெரியுதோ?

நாம் தினமும் ஒருமுறை முடியாவிட்டாலும்,வாரம் ஒருமுறை நமது குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்; மாதம் ஒருமுறை நமது குடும்பத்தோடு அருகில் இருக்கும் பழமையான கோவிலுக்குச் செல்வோம்; மாதம் ஒருமுறை நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு அனைவரது செல்போன்களையும் அணைத்துவிட்டு, நமது அலுவலகத்தில் நமக்கு உண்டான பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டோம்? என்பதை பரிமாறிக்கொள்வோம்; நமது குடும்ப உறுப்பினர்கள் எப்பேர்ப்பட்ட தவறு செய்தாலும், இந்த மாதாந்திர குடும்ப கூட்டத்தில் அதை நடுநிலையோடு ஆராய்ந்து, அந்த உறுப்பினர் மீண்டும் அந்த தவறு செய்யாதவிதமாக அவருக்கு வழிகாட்டுவோம்; அவரை மன்னிப்போம்;

நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆண்டுக்கு குறைந்தது இரண்டு முறை குடும்பத்தோடு ஆன்மீகச் சுற்றுலா செல்லுவோம்; செல்வதற்கு முன்பு, ஆன்மிகச் சுற்றுலாத் தளங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்ட பின்னர்,அதை நம் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்ட பின்னர்,புறப்படுவோம்;

நமது குடும்பத்தை, குடும்ப அமைப்பை பாதுகாக்க இதுவே சிறந்த வழி! நமது குடும்பத்தை பாதுகாத்தால்,நமது தெரு சிறப்பானதாக மாறும்;நமது தெரு சிறப்பானதாக மாறினால்,நமது ஊர் பொறுப்புள்ளதாக உயரும்; நமது ஊர் பொறுப்புள்ளதாக உயர்ந்தாலே அதன் தொடர்விளைவாக நமது இந்து தர்மம் பாதுகாக்கப்படும்.

இதுதான் உண்மையான ஆன்மிகச் சேவை பாகம் 4


அந்தக் குடும்பத்தின் தலைவரான அப்பா நீதி நேர்மைக்குப் பேர்போனவர்; சுமார் 30 ஆண்டுகளாக தனது விவசாய நிலத்தை வைத்து,ஓடி ஓடி சம்பாதித்து,சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு சொத்துக்களை சம்பாதித்தார்.இப்போது அவர் ஓய்வு நிலையினை எட்டியதும்,அவரது ஒரே மகன் அவரது இடத்தைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறான்.அவரைப் போலவே காலை 4 மணிக்கு எழுந்து,விவசாய வேலைகளைப்பார்த்துவிட்டு கூடவே, தனது பட்டப்படிப்பையும் முடித்தான்.எவரிடமும் எந்த ஒரு பொருளையும் இலவசமாகப் பெற்றது கிடையாது.கடன் வாங்குவது கிடையாது;கொடுப்பதும் கிடையாது.எல்லா உறவினர்கள்,நண்பர்களிடமும் உண்மையை மட்டுமே பேசிப்பழகுவது அவனது குணம்;அவனது அப்பாவைப்போலவே! இதன் விளைவாக அவர்களின் சொத்துக்குப்பிரச்னை வந்தது.ஒரு நாள் ஒரு அரசியல்வாதி தனது பினாமி மூலமாக அவர்களுடைய மிகப்பிரம்மாண்டமான பண்ணை நிலத்தைப்பிடுங்கிக்கொண்டான்.அதுவும் எப்படி? ரொம்பவும் யோசித்து,மிக அருமையாகத் திட்டமிட்டு!! இந்த நேர்மையான குடும்பத்தினர் அந்த பினாமியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.நமது நாட்டில்தான்  ஒரு வழக்கின் வேகம்தான் தெரியுமே?தீர்ப்பு சொல்லும் சூழ்நிலை  நெருங்கியபோது,தான் நேர்மையாக 30 ஆண்டுகளாக சம்பாதித்த சொத்து கிடைக்காது என்ற மன உளைச்சலில் அப்பா இறந்தே போனார்.மீதி மகனும்,அம்மாவுமே இருக்கிறார்கள் என்ற மிதப்பில் நீதித்துறையையே வளைக்க ஆரம்பித்தனர் அரசியல்வாதியின் பினாமி குழு!!


இந்த சூழ்நிலையில் இவர்கள் நமது ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களை சந்தித்தனர்.தங்களுடைய சூழ்நிலையை விவரித்தனர்.இவர்கள் சந்தித்ததும்,இவர்களின் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பித்ரு தோஷமும் வேறு சில தோஷங்களும் இருப்பதும் அவர்களின் ஜாதகத்தைப்பார்த்ததில் தெரியவந்தது.


(ஜோதிடப்படி,ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பித்ரு தோஷம் இருப்பது மிக மிக அரிது.ஏனெனில்,எந்த ஒரு குடும்பத்திலும் ஒரே ஒரு வாரிசுக்குத்தான் பித்ரு தோஷம் இருக்கும்.இந்த பித்ரு தோஷத்துடன் யார் பிறக்கிறார்களோ அவர்களே இந்த கலிகாலத்தில் ஓரளவாவது பக்தியுடனும்,தர்மப்படி நடப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.இவர்களை அப்படி பிறக்க வைப்பது அவர்களின் இறந்துபோன முன்னோர்கள் என்பது சூட்சும தேவ ரகசியம் ஆகும்)


எனவே,அம்மா மற்றும் மகனுக்கு விஜயாபதியில் நவகலசயாகம் செய்து வைத்தார் நமது ஆன்மீககுரு சிவமாரியப்பன் அவர்கள்.நவகலசயாகம் செய்து முடித்த 44 ஆம் நாளில் இவர்களின் வழக்கறிஞர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.அந்த மனுமீதான விசாரணை மிகக் குறுகியகாலத்துக்குள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அந்த விசாரணையின் முடிவின்படி,அந்த அரசியல்வாதியின் பினாமி போலியாக பட்டா தயாரித்து,இந்த நேர்மையான குடும்பத்தினரின் கையெழுத்தை வேறு போலி நபர்களைக் கொண்டு போட வைத்து,பண்ணையை தமது பெயருக்குச் சுருட்டியிருக்கின்றனர் என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.இவர்களுடைய சொத்து இவர்களுக்குத் திரும்பக் கிடைத்தது.தமது சொத்து கிடைத்த மகிழ்ச்சியில் நமது ஆன்மீக குருவை நேரில் வந்து சந்தித்து கோடி நன்றிகளைத் தெரிவித்ததோடு,ஏதாவது பிரதியுபகாரம் செய்ய விரும்புவதாக பல நாட்கள் திரும்பத் திரும்ப வந்து கேட்டுக்கொண்டே இருந்தனர் அந்த நேர்மையான அம்மாவும்,மகனும்!!!எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை நமது ஆன்மீக குரு அவர்கள்!!!


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

இதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை பாகம் 3ஒரு இஸ்லாமியத் தம்பதியினருக்கு திருமணமாகி,15 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்தது.ஒரு நண்பர் மூலமாக நமது ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களை வந்து அந்த இஸ்லாமியத்  தம்பதியினர் சந்தித்தனர்.


அந்த தம்பதியர் இருவர்களின்  பிறந்த நேரப்படி பித்ரு தோஷம் இருப்பது அவ்ர்களைப் பார்த்ததும்,திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்குத் தெரிந்தது.ஆனால்,அவர்களுக்கு பிறந்த ஜாதகங்கள் இல்லை;இந்த பித்ரு தோஷம் இருப்பதைப்பற்றி அந்த இஸ்லாமியத்தம்பதியிடம் சகஸ்ரவடுகர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

(ஜோதிடப்படி,திருமணப்பொருத்தம் மட்டும் பார்த்து இக்காலத்தில் திருமணம் செய்வது தவறு;வரதட்சிணை அடிப்படையில்  திருமணம் செய்விப்பதும்தவறு;         வேறு தோஷங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால்,அந்த தோஷங்களை நிவர்த்தி செய்துவிட்டார்களா? என்பதையும் பார்க்க வேண்டும்.

ஒரு தம்பதியினரின் பிறந்த ஜாதகத்தில் கணவன் அல்லது மனைவிக்கு பித்ரு தோஷம் இருந்தாலே,அவர்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்காது;அல்லது மிகவும் தாமதமாகக் கிடைக்கும்;


அவர்களோ எங்களுக்கு ஒரே ஒரு குழந்தையாவது வேண்டும்.நீங்கள்தான் எங்கள் ஆன்மீக குருவாக இருந்து,வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடி,தங்களுடைய கடந்த கால மருத்துவரீதியான முயற்சிகளையும்,ஆன்மீக ரீதியான தேடுதல்வேட்டையையும் விவரித்தார்கள்.


ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் மேற்பார்வையில் செய்த சுயபரிகாரத்தினால்,பரிகாரம் செய்து முடித்த 60 நாட்களில் அந்த இஸ்லாமியப் பெண் கருவுற்றார்.குழந்தை பிறந்து சில மாதங்களுக்குப்பிறகு,குழந்தையோடு நமது ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களை சந்தித்து,குழந்தைக்கு ஆசி பெற்றனர்.ஆசி பெற்ற கையோடு,தங்கள் ஆண் குழந்தைக்கு  பெயர் வைக்கக் கோரினர்.சிவமுகமது என்று பெயர் சூட்டப்பட்டது.இந்தப் பெயரை அவர்களின் ஜமா அத்தும் ஏற்றுக்கொண்டது.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஆண்டாள் பற்றி தவறான தகவல் : ஸ்ரீவி.,பக்தர்கள் எதிர்ப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர்: மனோன்மணி பல்கலை பாடபுத்தகத்தில், ஆண்டாள் பற்றி தரக்குறைவாக வெளியிட்டதற்கு ,ஸ்ரீவில்லிபுத்தூர் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனோன்மணி பல்கலை கழக பாடபுத்தகத்தில் ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தேவதாசியாகவும், பெரியாழ்வாருக்கு தவறான முறையில் பிறந்தவராகவும், ஆண்டாள் மீது வல்லபதேவன் மன்னன் மோகம் கொண்டு பரிசுகள் அனுப்பியதாக கூறப்படும் சிறுகதையை, பாடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரியாழ்வார் பரம்பரையை சேர்ந்த அனந்தராம கிருஷ்ணன்,வேதபிரான் பட்டர்," பெரியாழ்வார் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், ஆண்டாள் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.மகாலட்சுமியின் அம்சமாக பூமியில் அவதரித்தவர் ஆண்டாள். இதில் தான் பிறக்கும் போது ,தனக்கு பெரியாழ்வார் தந்தையாகவும், துளசி தாயாகவும் இருப்பர் எனக்கூறியுள்ளார். தன்னை கோதை என்று அழைக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். புராணங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. புராணங்களை சரியாக படிக்காமல் மாணவர்களிடையே ஆண்டாள் பற்றி தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும், இந்த பாடத்தை நீக்க ,பல்கலை கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்,'என்றனர்.


மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகம் 2012-13 ஆம் ஆண்டு பாட திட்டத்தில் இளநிலை (BA, BSc) முதலாண்டு முதல்_பருவம் தமிழ் பாடப் பகுதியில் தோழர்.டி.செல்வராஜ் எழுதிய_நோன்பு என்னும் சிறுகதைதொகுதி இடம் பெற்றுள்ளது. இச்சிறுகதை தொகுதியில் அமைந்த 'நோன்பு' என்னும் சிறு கதை பாட நூலில் இடம்பெறும் தகுதி அற்றது.

இச்சிறுகதையின் நோக்கம் விஷமத்தனமானது; மரபுவழி வந்த பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்தும் எண்ணமுடையது. ஆண்டாள், பெரியாழ்வார், பாண்டிய மன்னன் ஆகிய மூவரும் இச்சிறுகதையின் முக்கிய பாத்திரங்கள்.'புதிய கோணத்தில் மறுவாசிப்பு' என்னும் போர்வையில் இம்மூவர் மீதும் அவதூறு பேசுவதே கதையின் நோக்கம் ஆகின்றது.

ஆண்டாள் துளசிச்செடி அருகில் கண்டெடுக்கப்பட்டவள் என்பது வைணவ மரபு. அவளை தாசிமகள் ஆக்கியுள்ளது இக்கதை. பெரியாழ்வார் அகத்தில் கண்ணனையும் புறத்தில் ஆண்டாளையும் வளர்த்த பெரும் பேறு உடையவர். அவரை ஆன்மஞானம் பெற்றவராகவும், பக்தியில் கனிந்த சீலம் நிரம்பியவராகவும் தமிழ்மரபு போற்றும். அவரை தாசி உறவு பெற்றவராகச் சித்தரிக்கிறது இக்கதை. பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லப தேவன் தெய்வீக விஷயங்களில் ஆர்வம் மிக்கவனாகவும், சம்வாதங்களை ஆதரித்தவனாகவும் மரபுச் செய்திகள் கூறும். அவனைப் பெண் பித்தனாகச் சித்தரிக்கின்றது இச்சிறுகதை. இச்சிறுகதை காட்டும் இச்சித்தரிப்புகள் அனைத்துமே சான்றாதாரங்கள் அற்றவை. உயர்மனச் சூழலில் மானுட விழுப்பம் கருதிப் பேணியப் பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்தும் கதாசிரியரின் உள்நோக்கம் சிந்தித்தற்குரியது. கற்பனை சுதந்திரம் என்னும் பெயரில் இவர் நிகழ்த்தும் கலாச்சார அவதூறு கண்டிக்கத்தக்கது, 'மறுவாசிப்பு' என்னும் பெயரில், முதல் வாசிப்பே அறியாத மாணவ மன வயலில் இவர் விதைக்கும் 'பிழை வாசிப்பு' கல்வி ஆர்வலர்களால் தண்டிக்கத்தக்கது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் மரபு வழிப் போற்றப்படும் மேன்மைச் சித்திரங்களை எழுத்தாளர் சுதந்திரம் என்னும் முகமூடி அணிந்து சேறுவாரி எறிதல்; அதனைப் பாடத்திட்டக்குழுவுக்கு பரிந்துரை செய்தல்; அது பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறுதல் ஆகிய மூன்று குற்றங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும். நிகழ்ந்த குற்றங்களுக்கு காரணமாகிய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இனிமேல் இவ்வகைக் குற்றங்கள் நிகழாவண்ணம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் இது பல்கலைக்கழகத்தின் பெயருக்குக் கேடு விளைவிக்கும் செயலாகும்.

நமது சிந்தனையில் தெளிவு வேண்டும். இது கல்விசார்ந்த (academic) விஷயம். பிரச்சார மண்டபம் அன்று. நல்லவற்றை இழிவுபடுத்துவதும், தீயவற்றை அங்கீகரித்து மேலெடுத்துச் செல்வதும் ஷேக்ஸ்பியரின் மாக்பெத்தில் வரும் வழி கெடுக்கும் நடனப்பாட்டு. 'Fair is foul and foul is fair' என்று வீரன் மாக்பெத் வரும் வழியில் பாடி ஆடிக்கொண்டிருக்கும் இருட்குரலே நாடகத்தில் வியாபிக்கும். இந்த நடனப்பாட்டின் நிழல் விழுந்த ஆய்வுகள் ஏற்கனவே முற்போக்கு என்னும் பெயரில் தமிழில் நிறையவே வருகின்றன. காரைக்காலம்மையைக் கொச்சைப்படுத்தி, ஔவையாரை இழிவுபடுத்தி, ஆண்டாளை அவதூறு செய்து 'தோழர்கள்' சிலர் எழுதியுள்ளனர். இடக்கை ஆசிர்வாதங்கள் இவர்களுக்கு உண்டு. உலக அரங்கில் தமிழின் பெருமிதங்களாக கருதவல்ல உயர் சிகரப்படைப்புகள் தந்த இப்பெண்களை அவமானப்படுத்துவது தமிழினத்தை அவமானப்படுத்துவது ஆகும்.

அன்னியச் சித்தாந்தங்களுக்கு விலைபோகும் போது, சின்னஞ்சிறு சௌகரியங்களில் மிதப்பு காணும் போது, உயர் லட்சியங்களுக்கு கண்ணடைக்கும் போது, இது நிகழும். இவர்களின் செயல்பாடு மானுட மேன்மைக்கு எதிரானது. சிந்தனை மண்டலத்தில் பிழை மனச்சித்திரங்கள் சித்தாந்த முலாம் பூசி நுழைய முற்படும்போது எளிதில் வலிமை பெற ஏற்ற இடமாகப் பாமர வாக்குவங்கிகளையும், பல்கலைக்கழக வளாகங்களையும் குறி வைக்கக் காண்கின்றோம். பல்கலைக்கழகம் பன்மடங்கு எச்சரிக்கையுடன் செயலாற்றக் கடமைப்பட்டிருக்கிறது.

அவதூறு பரப்பும் ஒரு மனநோய்க்கு பாடத்திட்டத்தில் இலக்கிய அறிமுகம் வழங்குவது மிகவும் தவறான முன்னுதாரணம். மாணவர் நலனும், பல்கலைக்கழகத்தின் தரமும், நாட்டின் எதிர்காலமும், ஒரு சிலரின் சித்தாந்த வெறிக்கும் பொருளாதார லாபத்துக்கும் பலியாகிவிடக்கூடாது.

வாழ்க்கைச் சிதறல்களில் ஏதேனும் ஓர் அனுபவத்துளி நோக்கிய அழகிய பாய்ச்சல் மொழிநுட்பத்தோடு சிறுகதைகளில் நிகழல் வேண்டும். Singleness of aim and singleness of effect முக்கியம் என்பது பாலபாடம். குருவிக் கழுத்துக்குக் குறிபார்க்கும் அர்ஜுன அம்பு சிறுகதை. வாமனம் நெடுமாலாகும் வித்தையும் அங்குண்டு. மனிதநேய தடாகங்களில் குள்ளக் குளிர்ந்து நீராடாத போது, மன அழுக்கைச் சுரண்டிச் சுருட்டும் சோம்பல் விரலுக்கு 'நோன்பு' போலும் சிறுகதையே திரளும். அனுபவத்தில் நேர்மை, கருத்தோட்டத்தில் தெளிவு, வாழ்வியலில் அழகும் ஆழமும் பருகும் துடிப்பு, உலகத்தரத்துக்கு உன்னதங்களைத் தரும் திறன் – என விரியும் சிறுகதை உலகம் தமிழுக்கு உண்டு. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்', ஜெயகாந்தனின் 'யுக சந்தி', சுந்தர ராமசாமியின் 'சீதைமார்க் சீயக்காய்த் தூள்', லாசராவின் 'ஜனனி', ஜெயமோகனின் 'அறம்' ... என ஒரு பல்வண்ணப் பார்வை குழல் (Kaleidoscope) தந்து மாணவ மன மண்டலத்தை உயர் சிகரங்களில் உலவச் செய்ய வேண்டியது பல்கலைக்கழகத்தின் கடமை. இதற்கு ஏற்ப பாடத்திட்டக் குழுவை நெறிமுறைப்படுத்த வேண்டும்.

சில வினாக்கள்:

1. 'ஆண்டாள் தேவதாசி வம்சத்துக் குலக்கொடி' என்கிறது 'நோன்பு' என்னும் சிறுகதை. இது வரலாற்று ஆதாரம் சிறிதும் அற்றது. எனவே அவதூறு. ஆண்டாளை அவ்வாறு கூறுவதற்கு ஆதாரம் தர இயலுமா?

2. ஆண்டாளைத் தேவதாசியாகச் சித்தரிப்பது 'எழுத்தாளன் சுதந்திரம்' என்று கூறித் தப்பலாம்; 'தேவதாசி என் பார்வையில் இழிந்தவர் அன்று' என கூறி வாதிடலாம். எனில், சமகாலப்பெண்களில் யாரையேனும் அல்லது தமது உறவுப் பெண்டிர் (மன்னிக்கவும்) யாரையேனும் இவ்வாறு சித்தரிப்பது தோழர்களுக்கு ஏற்புடையதுதானா?

3. பெரியாழ்வார் ஆண்டாளை வளர்த்த செய்தி குருபரம்பரைக் கதைகள் வழி அறியலாகும் மரபுச்செய்தி. இதை நிராகரித்து ஆண்டாள் மனத்துக்கு ஒவ்வாத, ஆண்டாளை மதிப்போர்க்கு மனம் ஏற்காத – இழிவுச் சித்திரம் படைத்தல்தான் மறுவாசிப்பா? இது இலக்கிய கயமை ஆகாதா?

4. 'கோட்டை மதிலுக்கு வெளியே கேட்கும் தோட்டி மகனின் ஓலம் ஓநாயின் ஒப்பாரியாகக் காற்றில் கலந்து மறைகிறது.' என்கிறது கதை. மானுட நேயம் பேசுவோரிடம் சாதி இழிவுப்பார்வையின் உவமை வரலாமா? மதுரைவீரன் திரைப்படத் தாக்கத்தின் முதிராப் பார்வைப் பதிவா? அது மட்டும்தானா? இது அடிமனத்தில் ஒளிந்திருக்கும் சாதிய வக்கிரத்தின் வெளிப்பிதுங்கல் என ஆழப்பார்வை காட்டவில்லையா? இப்புத்தகத்தையே பாடத்திட்டத்தில் வருவதைத் தடுக்க இது போதுமான காரணம் ஆகாதா? ஔசித்தியம் என ஒன்று பாரத மரபில் காட்டப்படுமே!

5. 'விளக்கின் கதிர்கள் காமன் எறிந்த கனலாகத்' தகிப்பது முதிரா மனத்தின் மூன்றாந்தர எழுத்தாளர்களின் 'வாய்ப்பாடுகள்' அல்லவா?

6. 'கைக்கட்டாரியுடன் ரோந்து வரும் ஊமையான கச்சணிந்த காவற் பெண்டிர்' ஆண்டாள் காலப்பின்னணியில் இல்லையே? சங்க இலக்கியத்திலிருந்து அல்லது சாண்டில்யனின் கதைகளிலிருந்து H.G.வெல்ஸின் காலயந்திரத்தில் ஏறி எப்படி வந்தார்கள்?

7. 'ஸ்ரீ வில்லிபுத்தூர் என்னும் அப்புண்ணிய ஸ்தலம் நிலவொளியில் ஜலக் கீரிடையாடிக் கொண்டிருக்கிறது' என அறிமுகப்படுத்துகிறது சிறுகதை. கோபுரக் காட்சியின் சித்திரமோ 'பூரித்து எழுந்து நிற்கும் குமரிப்பெண்ணின் கச்சணிந்த கொங்கை'யாக ஆசிரியருக்குக் காட்சியளிக்கிறது. தமிழக உன்னதங்களை இளநிலை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் நடையா இது? ஆசிரியரின் இழிமனப் பிதுங்கல்கள் அல்லவா இவை?

8. தமிழக அரசின் சின்னம் கோயிற் கோபுரம். அது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரப்பதிவு, இரண்டையும் இழிவுபடுத்தும் இக்கதைக்குப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அனுமதி வழங்கலாமா? இம்மனநிலை தவறென எச்சரிக்கும் வகையில் இவரது நூற்களுக்குப் பல்கலைக்கழக 'மஞ்சள் அட்டை' (வேணுமானால் சிவப்பு அட்டை) எனும் ஒரு தடைமுறை உருவாக்கலாமே.

9. "எத்தனை எத்தனையோ ஆரணங்குகளைக் கண்டிருந்தாலும் அனுபவித்திருந்தாலும்..." என்றெல்லாம் பாண்டிய மன்னனின் பலவீனத்தைச் சித்தரிப்பது விரசமான வருணனை அல்லவா? கீழ்த்தர கதைத் தொழிலில் பாமர பலவீனத்துக்கு தீனி தரும் கருவும் பின்னலும் நடையும் கொண்ட சிறுகதையைத் தாங்கிய இந்நூல் எந்தத் துணிவுடன் பாடத்திட்டத்தின் முன் சென்று நின்றது? மாணவர்க்குப் பல்கலைக் கழகம் வழி அறிமுகப்படுத்த வேண்டிய செய்தியும் அதைச் சுமக்கும் நடையும் இத்துணை அளவு தரம் தாழலாமா?

10. நூலின் அட்டைப்படத்திலும் ஆடும் தோற்றத்தில் தரப்பட்ட சலங்கை அணிந்த பாதம் அதிர்ச்சி தருகிறது. பெண்ணொருத்தியின் குனிந்த நிலைச் சித்திரம் போலும் அருவருக்கும் தோற்றம் அதில் உண்டு. ஆசிரியரின் மனவிகாரம் தரும் விரசம் இச்சித்திரத் தேர்வில் வெளிப்படவில்லையா? மாணவ மாணவியர் கையிலேந்தும் நூலில் இவ்வகை அட்டைப்படத்தை பல்கலைக் கழகமே தருதல் சரியா?

11. 'மார்க்சீயப் பார்வையில்' படைத்ததாக 'முற்போக்கு இலக்கிய வட்டத்தில் இயங்கியவராக' 'சோஷலிஸ்ட் யதார்த்தப் படைப்பாளியாக' இந்நூலின் பின்னட்டை புகழ்கிறது. இக்கதை ஆண்டாள் வரலாற்றைப் புதிய கோணத்தில் மறுவாசிப்பு செய்த முதல்கதை என புகழப் பட்டுள்ளது. அருவருப்பான அபத்தத்தை இவர் சார்ந்திருக்கும் சித்தாந்த வட்டம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

12. தரம் தாழ்ந்து பாடத்திட்டக் குழுவில் பரிந்துரை சந்தைகளில் தந்திர லாவகங்களுடன் செயல்படும் தற்கால இலக்கிய வணிகர்கள் கல்லூரியின் அறிமுகநிலை மாணவர்களுக்கு இவ்வகை நூல்களை விலைப் படுத்துவது – மொழிக்கும், பண்பாட்டுக்கும், நாட்டுக்கும் பெருங்கேடு. நவீன இலக்கிய சோலைக்குள் இளங்கலை மாணவர்கள் செல்ல உதவ வேண்டிய பல்கலைக்கழகத்தை 'நச்சுப் பொய்கை'யாக்கவே வழிவகுக்கும் இத்தகைய செயல்பாடுகள் நிறைந்த சூழ்நிலையில் பல்கலைக்கழகம் கல்விக் கடமையாற்றத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டாமா?                                                                                                                                    
ஆன்மீகக்கடலின்கருத்து: இந்த புத்தகத்தை எழுதியவன் நிச்சயமாக கம்யூனிஸ்டு மற்றும் நாத்திக எண்ணமுள்ளவனாக மட்டுமே இருக்கமுடியும் என்பது எனது யூகம்.இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்தே இந்த கயவன்கள் நமது நாட்டின் பாடத்திட்டத்துறை,கல்வித்துறை,வரலாற்று ஆவணப்படுத்தும் துறை,வரலாற்றை ஆராயும் துறைகளில் ஊடுருவி இந்து தர்மத்தின் பெருமைகளைச் சிதைப்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றன.கம்யூனிஸ்டுகள் எப்போதும் அறிவுசார்ந்த தீவிரவாதிகள் ஆவர்.இதை உணரும் சக்தி நமது பாமர இந்துக்களுக்கு சிறிதும் இல்லை;                                    கி.பி.1950களில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.இந்த பல்கலைக்கழகம் துவக்கப்பட்டதன் நோக்கம்: இந்து தர்மத்தை சித்தாந்த ரீதியாக அழிப்பதற்கு!!! இந்த பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இந்தியாவின் புராதனப் பெருமைகளை ஆராயப் போகிறோம்.எனவே,பொதுமக்கள் அவர்களிடம் இருக்கும் ஓலைச்சுவடிகள்,பழைய எழுத்து ஆவணங்களை பல்கலையில் ஒப்படைக்கவும் !!!! பொதுமக்களும் சாரை சாரையாக கொண்டு வந்து நமது அறிவுக் கருவூலங்களான ஓலைச்சுவடிகளை பல ஆயிரக்கணக்கில் கொடுத்தனர்.ஆனால்,அந்தப் பல்கலை.யின் வரலாற்றுத்துறையில் இருந்த கம்யூனிஸ்டுகள் செய்தது என்ன தெரியுமா? பொதுமக்கள் கொடுத்த அத்தனை ஓலைச்சுவடிகளையும் எரித்ததுதான்!!! 

நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய ஆன்மீகக்கடமை!!!இந்த பிட் நோட்டீஸை ஒரு பென் டிரைவ்வில் பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.அருகில் இருக்கும் அச்சகம்/மினி ஆப்செட்டிற்குச் சென்று குறைந்தது 1000 பிரதிகள் உங்களின் சொந்தச் செலவில் அச்சடியுங்கள்.அதை உங்களின் நட்பு வட்டத்தில் யாரெல்லாம் ஓரளவாவது ஆன்மீக சிந்தனை,அறச்சிந்தனை,பிறருக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கும்,யாரெல்லாம் உங்களின் வார்த்தையை மதிக்கிறார்களோ அவர்களுக்கும் ஒருபிரதி கொடுத்து, இதை ட்ரைப்பண்ணிப்பாரு என்று மட்டும் சொல்லுங்கள்.


ஒவ்வொரு பிரதோஷ நாளன்றும் அருகிலிருக்கும் சிவாலயத்துக்குச் செல்லுங்கள்.அங்கே மீதி பிரதிகளை கூச்சப்படாமல் விநியோகியுங்கள்.உங்களிடம் போதுமான அளவுக்கு பணவசதி இருந்தால் 1000 பிரதி என்பதை 5000 அல்லது 10000 பிரதிகள் அச்சடித்து பிரதோஷ வேளையில் அருகிலிருக்கும் சிவாலயத்தில் விநியோகம் செய்யுங்கள்.


இப்படி 31.12.2012 வரை மாதம் ஒருநாள் வரும் பிரதோஷ நாளிலும்,சனிப்பிரதோஷ நாட்களிலும் இவ்வாறு விடாமல் செய்துவந்தாலே போதுமானது.சனிப்பிரதோஷ நாட்களின் பட்டியல்:13.10.2012,    27.10.2012,   23.2.2012, 9.3.2012
ஒருவேளை விநியோகம் செய்ய இயலாத வேலை அல்லது தொழிலில் தாங்கள் இருந்தால்,தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:இந்த பிட் நோட்டீஸை 1000 அல்லது 2000 அல்லது 5000 என்ற எண்ணிக்கையில் உங்களுக்கு வசதிப்படும் விதத்தில் அச்சடித்து ஆன்மீகக்கடல் அறக்கட்டளைக்கு (தொடர்பு  கொள்ளவும்:=aanmigakkadal@gmail.com)அனுப்பலாம்.இந்த வருடம் முழுவதும் தமிழ்நாட்டில் பல சிவாலயங்களில் இந்த நோட்டீஸ் விநியோகம் செய்துகொண்டே இருக்கிறோம்.


(இதுவரை நமது ஆன்மீகக்கடல் வாசக வாசகிகளால் விநியோகம் செய்யப்பட்டுள்ள ஊர்கள்:ஸ்ரீவில்லிபுத்தூர்,இராஜபாளையம்,சங்கரன்கோவில்,திருநெல்வேலி,தென்காசி,குற்றாலம்,நாகர்கோவில்,சதுரகிரி,மதுரை,மானாமதுரை,காளையர்கோவில்,இராமேஸ்வரம்,கோயம்புத்தூர்,திருச்சி,மணப்பாறை,நாமக்கல்,ஈரோடு,கரூர்,திருஅண்ணாமலை,கும்பகோணம்,கோவில்பாளையம்(கோயம்புத்தூர்),விழுப்புரம்,சென்னையில் பாம்பன்சுவாமிகள் ஆலயம்,மயிலாப்பூர்,பள்ளிக்கரணை,ஓசூர்,நாகப்பட்டிணம் மற்றும் சில வெளிநாடுகள்.ஆனால்,இது போதாது.)இவ்வாறு நீங்கள் செய்வதால்,உங்களின் இந்த ஆன்மீகத் தொண்டினால் குறைந்தது 100 தமிழர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குவார்கள்;அவர்களின் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தினால்,உங்களது அனைத்து மன அழுத்தங்களும் தீர்ந்துவிடும்;உங்களின் தீராத பிரச்னைகள் தீர திடீரென வழிகிடைக்கும்;உங்களின் வாழ்க்கை இனி மென்மையாகவும்,வசந்தமாகவும்,செல்வச் செழிப்பாகவும் மாறும் என்பது எனது அனுபவ உண்மை!!!இதை ஜபிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய நீண்டகால மற்றும் நியாயமாக ஏக்கங்கள் தீரத் துவங்கும்;உடல்நலம் மேம்படும்;உங்கள் ஊரில் இருக்கும் அனைத்து கோவில்களின் தெய்வீக சக்தியும் அதிகரிக்கும்;இதனால்,உங்கள் ஊருக்கு வர இருக்கும் நோய்,ஆபத்து,பிரச்னைகள் வராமலேயே போய்விடும்;
தமிழ்நாட்டில் மட்டுமல்ல;உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஒரு கோடிபேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கிவிட்டால்,இந்தியாவை சுரண்டிக்கொண்டிருக்கும் மேல்நாட்டு அழிவு சக்திகள் வலுவிழந்துபோய்விடும்.தமிழினத்துக்கு இருக்கும் அத்தனைப்பிரச்னைகளும் விலகிஓடி விடும்.
தோள்கொடுக்க வருகிறீர்களா?
ஓம்சிவசிவஓம் பரவ உதவத் தயாரா?
நமது  குடும்ப அமைப்பைக் காப்பாற்ற வேண்டாமா?
நமது நாட்டை நமது தர்மத்தை பாதுகாக்க வேண்டாமா?
ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;பிறரும் ஜபிக்கத் தூண்டுவோம்!!!
வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுவோர் ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்கச் செய்வோம்!!!
ஓம்சிவசிவஓம்      ஓம்ஹரிஹரிஓம்

ரூ.1,500 கோடி: ஆண்டவன் சொத்து ஆக்கிரமிப்பு: ம.சண்முகவேல்


சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ஆன்மிக திருப்பணியை தலையாய கடமையாக கொண்டு, கிராமங்கள் தோறும் ஆலயங்களை எழுப்பினர். கோவிலுக்கு ஊழியம் செய்தவர்களுக்கு "ஊழிய தானமாக' நஞ்சை, புஞ்சை நிலங்களையும் வழங்கினர். "கோவிலில் வழிபாடு செய்யாமல் கடவுளை பட்டினி போடக்கூடாது; கடவுளுக்கு சேவகம் செய்பவர்களும் பசி, பட்டினியால் வாடக்கூடாது' என்பதற்காக மன்னர்கள் கோவிலுக்காக நிலங்களை ஒதுக்கினர்.

சைவ கோவில்களில் மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், பவுர்ணமி, தைப்பூசம், சஷ்டி வழிபாடு, பங்குனி உத்திரம், வைணவ கோவில்களில் புரட்டாசி வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, திருவோணம், மார்கழி வழிபாடு, சித்திரை திருவிழா... என ஒவ்வொரு விசேஷத்திற்கு தனித்தனியாக நிலங்களை பிரித்து கொடுத்தனர். அந்த நிலங்களை பராமரிப்பதில் கிடைக்கும் நிதியை கொண்டு கோவில் விழாக்களை சிறப்பாக நடத்த, நிலதானம் செய்தனர்.அதேபோன்று, கோவில் குருக்கள், பண்டிதர், ஓதுவார், இசைக்கலைஞர்களுக்கு ஊதியத்திற்கு பதிலாக நிலங்கள் ஒதுக்கி கொடுத்தனர். அதில் விவசாயம் செய்து வருவாய் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு ஊழியம் செய்ய வேண்டும். தவிர, நேர்த்திக்கடனாக கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களும் உள்ளன. கோவில் நிலங்களை அனுபவித்து வந்தவர்கள், அந்த நிலத்தை காலப்போக்கில், தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கொண்டனர். நில உரிமை பதிவேடுகள், நில உடமை மேம்பாட்டு திட்டம் (யுடிஆர்) மூலம் மாற்றம் செய்யப்பட்ட போதும், கம்ப்யூட்டர் சிட்டாவாக பதிவேடுகளில் மாற்றம் செய்தபோதும், கோவில் நிலங்கள் தனியார் பெயருக்கு மாறி விட்டன. பெயர் மாற்றம் செய்ததன் பின்னணியில் அரசியல் கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. எழுதப்படிக்க தெரியாதவர்களின் பெயரில் மாற்றம் செய்த கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மாற்றி எழுதி விற்பனை செய்தனர்.மேலும், கோவில் நிலத்தை அனுபவித்து வந்தவர்களின் வம்சாவழிகள், கோவில் திருப்பணிகளை மறந்து அந்த நிலத்தை அவர்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர். கடந்த 1963ல் கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயத்து வாரியாக மாற்றுதல்) சட்டத்தின் கீழ் கோவில் சேவைக்காக மாற்றப்பட்டது. அதன்பின், கடந்த 1996ல் கோவில் நிலங்கள் கோவில் பெயருக்கு மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.

பட்டா மூலம் சிக்கியது:இந்த வகையில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட கோவில் நிலம், கோவை மாவட்டத்தில் 4,518 ஏக்கர், இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 10, 094 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 4,827 ஏக்கரும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 4,518 ஏக்கரில், 2,733 ஏக்கர் நிலம் கோவில்களின் பெயரில் உள்ளது. மீதமுள்ள 1,785 ஏக்கர் கோவில் நிலம், தனியார் பெயர்களில் உள்ளது.அதில், 863 ஏக்கர் கோவில் நிலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 55 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 42 வழக்குகள் தீர்வு செய்யப்பட்டது. அதன் மூலம் 596 ஏக்கர் நிலம் கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளது.மேலும், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 41 வழக்குகளில் 706.40 ஏக்கர் தனியார் வசமுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் விசாரணை முடிந்த 12 வழக்குகளில் 206 ஏக்கர் நிலம் கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, மாவட்ட வருவாய் அலுவலர் (கோவில் நிலம்) பிரிவில், மொத்தம் 900.4 ஏக்கர் நிலம் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அறநிலையத்துறை வசமுள்ள நிலம்:வருமானத்தின் அடிப்படையில் பெரிய, சிறிய கோவில்கள் வகைப்படுத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானமுள்ள 515 பெரிய கோவில்களும், 1,800 சிறிய கோவில்களும் உள்ளன. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன் கூறியதாவது:கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்கள் உள்ளடங்கிய, இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டலத்தில், நஞ்சை நிலம் 1,130 ஏக்கர், புஞ்சை நிலம் 7,055 ஏக்கர், மானாவாரி நிலம் 184 ஏக்கர் உள்ளது. மனையிடங்கள் 16 லட்சத்து 43 ஆயிரத்து 148 சதுர அடி உள்ளது. கட்டடங்கள் வகையில் எட்டு லட்சத்து எட்டாயிரத்து 186 சதுர அடியில் 1,417 கட்டடங்கள் உள்ளன. இதில், கோவை மாவட்டத்தில் மட்டும், நஞ்சை நிலம் 548.43 ஏக்கர் உள்ளது. அதில், குத்தகைக்கு 353 ஏக்கர் விடப்பட்டுள்ளது. காலி இடமாக 25 ஏக்கரும், வழக்கு விசாரணைக்கு உட்பட்டு 170 ஏக்கரும் உள்ளது.கோவை மாவட்டத்தில் புஞ்சை நிலம், 2,062.62 ஏக்கர் உள்ளது. அதில், ஆயிரத்து 44 ஏக்கர் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. காலி இடமாக 245 ஏக்கரும், வழக்கு விசாரணை நிலுவையில் 373 ஏக்கரும் உள்ளது. மீதமுள்ள 387.43 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. மானாவாரி நிலம் 1.36 ஏக்கர் அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. கோவை மாவட்டத்தில் மனையிடங்கள் இரண்டு லட்சத்து 53 ஆயிரத்து 316 சதுர அடி உள்ளது. அதில், இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. கோவில் பராமரிப்பில் 4,610 சதுர அடி நிலமும், 28,671 சதுர அடி நிலம் காலியிடமாகவும் உள்ளது. மீதமுள்ள இரண்டாயிரம் சதுர அடி நிலத்தின் மீது வழக்கு விசாரணை உள்ளது. கட்டடங்கள் வகையில், கோவை மாவட்டத்தில் மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 956 சதுர அடியில் 672 கட்டடங்கள் உள்ளன. அதில், 561 கட்டடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கோவில் பராமரிப்பில் 33 கட்டடங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் வசம் 6,480 சதுர அடியில் 27 கட்டடங்களும், வழக்கு விசாரணை நிலுவையில் 3,435 சதுர அடியில் 35 கட்டடங்களும் உள்ளன.இவ்வாறு, இணை ஆணையர் தெரிவித்தார்.

மொத்தம் ரூ.1,500 கோடி மதிப்பு:பட்டா பெயர் மாற்றம் செய்த வகையில், கோவை மாவட்டத்தில் 900 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வசமுள்ள நிலத்தில் 930 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,830 ஏக்கர், கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.கிராம பகுதிகளில் நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 15 லட்சமும், மாநகர பகுதியில் ஒரு சென்ட்க்கு 15 லட்சமும், மாநகரை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாயும் மதிப்பு உள்ளதாக அறநிலையத்துறையினர் கணித்துள்ளனர். அந்தவகையில், கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு 1,500 கோடி ரூபாய் என்பது எல்லோரையும் மிரள வைக்கிறது.

ஸ்ரீ ரங்கநாதர் சொத்து...:கோவை, வெள்ளலூர் எல்.ஜி., நகர் பேஸ்-1 பின்பக்கம் திருச்சி ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான 54 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்நிலத்தை எட்டு பேர் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வந்தனர். ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் தர்ம ஸ்தாபனம் என்ற அறக்கட்டளையின் பெயரில் இந்நிலம் உள்ளது. இதன் முதல் நிர்வாக அறங்காவலராக விஜயராகவ அய்யங்கார், இரண்டாவதாக வெங்கட்ரமண அய்யங்கார், மூன்றாவதாக சீனிவாச அய்யங்கார் ஆகியோர் இருந்தனர். இவர்களுடன் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் அறங்காவலர்களாக இருந்தனர். கோவில் பெயரில் இருந்த ஆவணங்களை தனியார் பெயருக்கு மாற்றி, சமீபத்தில் வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளது இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரியவந்துள்ளது. ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் நிலத்தை தற்போது சமப்படுத்தி லே-அவுட்கள் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருப்பதால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. கோவில் நிலத்தை கோவிலுக்கு சேர்க்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள், இந்த பிரச்னை குறித்து முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

சுப்ரமணியர் சொத்து விற்பனை:பொள்ளாச்சி சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான 6.33 ஏக்கர் நிலம் மாக்கினாம்பட்டி கிராமத்தில் உள்ளது. தற்போது அந்த நிலம் தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து, அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலருக்கு (கோவில் நிலம்) புகார் வந்துள்ளது. அதிகாரிகள் விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவில் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு கோவில் மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும். ஆனால், கோவில் நிலத்தின் மூலம் வருமானம் கிடைக்கவில்லை என்று கூறி, அந்த நிலத்தை குறைந்த விலைக்கு விற்று, பணத்தை கோவிலுக்கு செலுத்தியுள்ளனர். அதற்கு வருவாய்த்துறையில் தாசில்தார், துணைக்கலெக்டர் பணியில் இருந்தவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். வருவாய்த்துறை, கோவில் அறங்காவலர் பொறுப்பில் இருந்தவர்கள் சேர்ந்து அந்த நிலத்தை பட்டா மாறுதல் செய்து விற்பனை செய்துள்ளனர். அதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அந்த லே-அவுட்டில் இடங்களை இனாமாக ஒதுக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவில் நிலத்தை விற்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாத போது, நிலத்தை அறநிலையத்துறை வசம் ஒப்படைத்து விட வேண்டும். ஆனால், அதிகாரிகள் துணையோடு 19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 53 சைட்களாக பிரித்து சூறையாடியுள்ளனர். அந்த நிலம் கட்டாயம் கோவிலுக்கு திரும்ப மீட்கப்படும். இவ்வாறு, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனிமேலாவது செய்வார்களா?வி.ஏ.ஓ.,க்கள் மூலம் கிராமத்தின் பழைய ஆவணங்களை ஆய்வு செய்து கோவில் நிலங்களை முழுமையாக கண்டறிய வேண்டும். கண்டறியப்பட்ட கோவில் நிலங்களுக்கு வேலி அமைத்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும். அந்த இடங்களில் வருவாயை பெருக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.கோவில் நிலம் முழுவதும் மீட்கப்பட்டு, வாடகை வசூலிக்கும் போது, ஒவ்வொரு கோவிலின் வருவாயும் உயரும். கோவில் வருவாயை கொண்டு மக்களுக்கு தேவையான நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிலம், வருவாய் இல்லாத கோவில்களை, மற்ற கோவில்களின் வருவாயை கொண்டு மேம்படுத்த வேண்டும்.முதல்வர் ஜெயலலிதா, கோவில் நிலம் மீட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அரசியல் தலையீடுகளை களைந்து கோவில் நிலங்களை காக்க வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் சொத்தும்...:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், பொள்ளாச்சியில் மாக்கினாம்பட்டி கிராமத்திலும், பொள்ளாச்சி நகரத்திலும் உள்ளது. பொள்ளாச்சி நகரில் பல்லடம் ரோடு பெரியார் காலனி வார்டு எண் 12ல் "பழைய சாராய கோர்ட்' அருகில் உள்ளது.பழங்கால கோவில், குடியிருப்புகள், காலி இடங்கள் என மொத்தம் 12 ஏக்கர் பரப்பில் உள்ளது. அந்த இடம் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனி நபரால் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அருணாச்சலேஸ்வரர் கோவில் தர்ம காரியங்களுக்கு பயன்படுத்த ஒப்படைக்கப்பட்ட நிலத்தை தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து அனுபவித்து வருகின்றனர். கோவில் நிலத்தை மீட்டு, பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

"டயல்' செய்யுங்க...:கோவில் நிலங்களை மீட்பதற்காக தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த கடந்த 2004ல் அரசு உத்தரவிட்டது. கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் இந்த பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் மேலும் ஐந்து மாவட்டத்தில் கோவில் நிலம் மீட்புக்காக மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. கோவையிலுள்ள கோவில் நிலம் டி.ஆர்.ஓ., கட்டுப்பாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் கோவில் நிலங்கள் பற்றி புகார்கள் ஏதாவது இருந்தால் 0422 - 224 8999 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

"விசுவாச' அதிகாரிகள்:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனித்து செயல்படும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு (கோவில் நிலம்) வழங்கப்பட்டுள்ளது. நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் மூலம், நிலத்தை பராமரித்தவர்கள் பெயருக்கு நிலப்பட்டா வழங்கிய போது ஏற்பட்ட குளறுபடிகளால் கோவில் நிலங்கள் தனியார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது.வருவாய்த்துறையினரின் குளறுபடி, கோவில் நிலங்கள் கைநழுவி செல்ல முக்கிய காரணமானது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவில் நிலங்களை கண்டுபிடித்து, அவற்றை மீட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைத்து வருகிறார்.அந்த நிலங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வேலி அமைத்து, கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகையை உடனடியாக வைப்பதில்லை. மேலும், கோவில் நிலங்களுக்கு அதிகபட்சமாக குத்தகை தொகை நிர்ணயம் செய்வதில்லை. இதனால் வருவாய் இழப்பும், நிலம் ஆக்கிரமிப்பும் ஏற்படுகிறது.அறநிலையத்துறை அதிகாரிகள் அரசியல் கட்சியினர், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து "சன்மானத்திற்கு' விசுவாசமாக செயல்படுகின்றனர். இதனால், கோவில் நிலங்கள் தனியார் வசம் தொடர்கிறது.

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள்:* மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில், செஞ்சேரிமலை - 228.38 ஏக்கர்
* திருவேங்கட நாதர் பெருமாள், வைத்தியநாத சுவாமி கோவில், சூலூர்- 258 ஏக்கர்
* பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் இடம், மாக்கினாம்பட்டி - 6.33 ஏக்கர்
* பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் இடம், மார்ச்சநாயக்கன்பாளையம் - 8.32 ஏக்கர்
* உக்கடம் நரசிம்ம பெருமாள் கோவில், குனியமுத்தூர் - 7 ஏக்கர்
* உக்கடம் நரசிம்ம பெருமாள் கோவில், கழிவு நீர் குட்டை அருகில் - 8 ஏக்கர்
* பெரியகடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால் சுவாமி கோவில், செல்வசிந்தாமணி குளம் எதிரில் - 12 ஏக்கர்
* பிரசண்ட விநாயகர் கோவில், மார்ச்சநாயக்கன்பாளையம் - 28.25 ஏக்கர்
* மாட்டேகவுண்டன் கோவில், காளியாபுரம் - 1.21 ஏக்கர்இதுதவிர நீதிமன்ற வழக்கு விசாரணையில் கோவில் நிலங்கள் ஏராளமாக உள்ளன.

ஓராண்டில் மீட்கப்பட்ட கோவில் நிலங்கள்:
(10 ஏக்கருக்கும் அதிகமானவை)
* பொங்காளியம்மன் கோவில், தேவணாம்பாளையம் - 20.5 ஏக்கர்
* பகவதியம்மன் கோவில், தேவம்பாடி - 16.36 ஏக்கர்
* அழகு திருமலைராயப்பெருமாள், நல்லூர்- 19.43 ஏக்கர்
* பகவதியம்மன் கோவில், கிணத்துக்கடவு - 15.62 ஏக்கர்
* விநாயகர் கோவில், மெட்டுவாவி - 14.29 ஏக்கர்
* சோளியம்மமன் (எ) பனப்பட்டி அம்மன், வடசித்தூர் - 36.70 ஏக்கர்
* வெங்கடேச பெருமாள் கோவில், கரியாஞ்செட்டிபாளையம்- 20.49 ஏக்கர்
* மாதங்கியம்மன் கோவில், சேர்வக்காரன்பாளையம் - 36.40 ஏக்கர்
* அமணீஸ்வரர் கோவில், ஜல்லிபட்டி - 24.70 ஏக்கர்
* அமணீஸ்வரர் கோவில், தொண்டாமுத்தூர் - 15.3 ஏக்கர்
* கரியகாளியம்மன் கோவில், தொண்டாமுத்தூர்- 39.42 ஏக்கர்
* மாரியம்மன் கோவில், தொண்டாமுத்தூர் - 23.58 ஏக்கர்
* அமணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம் - 13.56 ஏக்கர்
* அங்காளம்மன் கோவில், ஏரிப்பட்டி
- 26.68 ஏக்கர்
* அங்காளம்மன் கோவில், நாட்டுக்கல்பாளையம்- 14.40 ஏக்கர்
* புத்தாரம்மன் கோவில், செஞ்சேரிமலை, சூலூர்- 25.59 ஏக்கர்
* செஞ்சேரிமலையம்மன் கோவில், ஜல்லிபட்டி - 12.8 ஏக்கர்
* காணியப்பசுவாமி கோவில், அரசூர் - 36.9 ஏக்கர்
* வரதராஜ பெருமாள், அனுமந்தராயர் கோவில், கணியூர் - 15.61 ஏக்கர்

· ம.சண்முகவேல் ·படங்கள்: ஆர்.பிரபு, அ.லட்சுமிநாராயணன் thanks:dinamalar 26.6.2012

அளவுக்கு மீறி மொபைலைப் பயன்படுத்தினால்....


அன்றாட வாழ்வில் மொபைல் போன் பயன்பாடு இன்றியமையாததாக மாறிவிட்டது. மொபைல் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கக் கூட யாரும் தயாராக இல்லை. அதன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் தேவை. இல்லையென்றால் பல வித பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளையும் காண்போம்.

கண்களை காத்துக் கொள்ளுங்கள்:* மொபைல் போன் திரை, கண்களை பாதிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (சி.வி.எஸ்.,) எனும் நோய் தாக்குகிறது.
* அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் மொபைல் திரையை பார்க்கிறார்.

சி.வி.எஸ்.,சின் அறிகுறிகள்:கண்கள் வறண்டு போதல்: சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16-20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் மொபைல் போன்களை பார்க்கும் போது 6-8 முறைதான் சிமிட்டுகிறோம்.

தலைவலி: கழுத்தை சாய்த்து வைத்துக் கொண்டு, கண்களை வருத்தி மொபைல் திரைகளை பார்ப்பதால் தலைவலி ஏற்படும்.
பார்வை மங்குதல்: தொடர்ந்து திரைகளை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பார்வை மங்கலாகும். பின் அதுவே நிரந்தரமாகும்.

கிட்டப் பார்வை: மொபைல் போன் திரையினால், கிட்டப் பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* குறைபாடை சரி செய்ய கண்ணாடி அணிதல், கான்டாக்ட் லென்ஸ் பொருத்துதல், லேசர் அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
* 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர்.
* ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் அமெரிக்கர்கள், லேசர் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

கண்களை காக்க...:* அடிக்கடி கண் சிமிட்டுங்கள்
* பாதுகாப்புக்காக சன் கிளாஸ் அணியுங்கள்
* விழிகளை சுத்தம் செய்யும் மருந்துகளை பயன்படுத்துங்கள்

காதுகளுக்கு ஏற்படும் பாதிப்பு:தொடர்ந்து மொபைலில் பேசும் 37 சதவீதம் பேருக்கு காதிரைச்சல் நோய் ஏற்படுகிறது. மொபைலில் பேசாத நேரங்களிலும் காதில் முணுமுணப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
* மொபைலில் பத்து நிமிடத்திற்கு மேலாக தொடர்ந்து பேசுவோருக்கு காதிரைச்சல் ஏற்பட 71 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.
* காதிரைச்சல் நோயை சரி செய்யவது கடினம்.

காதிரைச்சலை தவிர்க்க...:* அதிகப்படியான ஒலியைக் கேட்கக் கூடாது. உப்பு, காபியின் அளவை குறைக்க வேண்டும். புகைக்கக் கூடாது. வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை தவிர்க்க வேண்டும்.
* எளிய உடற்பயிற்சி செய்யவும். ரத்த அழுத்தத்தை சீராகவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும்.

கவனமாக இருங்கள்:* 40, 50 வயதில் வரும் பிரச்னைகள், தற்போது 15 வயதிலே ஏற்படுகிறது. இதற்கு கம்யூட்டர், மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதும் முக்கிய காரணம்.
* மொபைலில் "டைப்' செய்யும் போது 91 சதவீதம் பேர் அளவுக்கு அதிகமாக கழுத்தை சாய்க்கின்றனர். இதனால் கழுத்துவலி ஏற்படுகிறது.
* 10-20 சதவீதம் பேர், மொபைல், கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
* இடைவெளி எடுங்கள்
* "வார்ம் அப்' செய்யவும்
* தினமும் உடற்பயிற்சி செய்யவும்
* அதிகம் நீர் அருந்தவும்

தூக்கத்தை கெடுக்கும் மொபைல்:* மொபைல் போனை உபயோகிப்போருக்கு தூக்கம் வர 6 நிமிடம் தாமதமாகிறது. ஆழ்ந்த தூக்கத்தையும் பல நிமிடங்கள் மொபைல் போன் தடுக்கிறது.
* பத்து ஆண்டுகளுக்கும் மேல் மொபைல் உபயோகிப்போருக்கு, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளைக் கட்டிகள் ஏற்பட 50 சதவீத வாய்ப்பு உண்டு.
* ஒரு வகை நரம்பு புற்றுநோய், மூளைப்புற்று நோய் ஆகியவை மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் என கண்டறிப்பட்டுள்ளது.
* அதிகப்படியான வேலைப்பளுவை குறைக்கவும்.
* படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* முடிந்தவரை "ஹெட் போனை' பயன்படுத்தவும்.
* தூங்கும் போது மொபைலை தலை யிலிருந்து குறைந்தது 98 இன்ச் தள்ளி வைக்கவும்.
கவனத்தை சிதற வைக்கும் மொபைல்
* போதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் பாதிப்பை விட, மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டும் போது, நான்கு மடங்கு அதிகமாக விபத்து ஏற்படும்.
* மொபைலில் "டைப்' செய்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 23 மடங்குக்கும் அதிகமாக விபத்து ஏற்படும்.

விபத்தை தவிர்க்க...:* வாகனத்தை ஓட்டும் போது அவசியமாக பேசியாக வேண்டிய கட்டாயத்தில் "ஹேண்ட்ஸ் பிரீயை' பயன்படுத்தலாம்.
* டிரைவிங்கின் போது மொபைலை "வைப்ரேஷனில்' வைக்கவும்.
மொபைல் போன் தகவல் தொடர்பை எளிதாக மாற்றியுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இழப்புகளை தவிர்த்து பயன் பெறலாம்.
thanks:dinamalar 24.6.12

உலகின் மிகப்பெரிய இந்துக்கோவில் ஆங்கோர்வாட்,கம்போடியா


தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !!
PETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள்
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
*********************************
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.
நன்றி ! பார்கவி கேசவன்..
__._,_.___

செல்வ வளத்தை அள்ளித்தரும் சதுர்க்கால பைரவர் வழிபாடு


கும்பகோணத்துக்குக் கிழக்கே 5 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் இடமே திருவிசநல்லூர் ஆகும்.இதன் பழைய பெயர் வில்வவனம் ஆகும்.பூமியில் உருவான இரண்டாவதுகோவில் இது என்பார்கள்.இங்கு சிவனும்,மஹாவிஷ்ணுவும்  ஒரே கோவிலில் இருந்து அருள்பாலித்துவருகிறார்கள்.இங்குள்ள சிவனுக்கு வில்வ வன ஈசன்,புராதன ஈசன்,சிவயோகி நாதர் என்ற பெயர்கள் உண்டு.ஓவ்வொரு பெயருக்கும் ஒரு புராணம் உண்டு.இங்கு ஈசான மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.த்ரேதாயுகம்,க்ருதயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்ற நான்கு யுகத்துக்குமான பைரவர்கள் இங்கு இருந்து அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகின்றன என்றால்,இந்த கோவில் சுமார் 20,00,000 ஆண்டுகளாக இருக்கின்றதாகத் தானே அர்த்தம்!!!

ஒரே இடத்தில் நான்கு பைரவர்கள் இருப்பதால் இவர்களுக்கு சதுர்யுகபைரவர் என்றும்,சதுர்க்கால பைரவர் என்றும் பெயர்கள் இருக்கின்றன.நமது வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய பைரவர்கள் இவர்கள்! ஆமாம்,நான்கு யுகங்களையும் இவர்கள் கண்காணித்துவருகிறார்கள் எனில்,இவர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்?!!?


இந்த சதுர்யுகபைரவர்களை ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியன்றும் வரும் இராகு காலத்தில் 108 ஒரு ரூபாய் வைத்து அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட தாமரைப்பூவை வைத்து பின்வரும் பொருட்களைக் கொடுத்து பூஜை செய்ய வேண்டும்.
அவைகள்:சிகப்பு அரளி மாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளை நான்கு,நான்காக வாங்கிட வேண்டும்.


இந்த பூஜைப்பொருட்களை பூசாரியிடம் கொடுத்து வளர்பிறை அஷ்டமியில் பூஜை செய்துவிட்டு,108 ஒரு ரூபாய் நாணயங்களை நமது வீடு அல்லது அலுவலகத்தில் இருக்கும் பணப்பெட்டியில் வைத்து தினமும் பூஜை செய்ய வேண்டும்.


ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
          ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் 
          சகவம்ஸ ஆபதுத்தோரணாய
          அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய
          ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
          மமதாரித்திரிய வித்வேஷணாய
          ஓம்ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ

பிறகு,தினமும் இந்த  ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் ஒரே நேரத்தில் நமது கர்மவினைகள் தீர்ந்து,பெரிய பணக்காரராக ஆகிவிடுவோம்.

அப்படி ஆவதற்கு,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;மது,போதைப்பொருட்களை நிரந்தரமாகப் பயன்படுத்துவதைக்கைவிட வேண்டும்;முறையான தாம்பத்தியம் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்.இதில் ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்ற முடியாமல் போனாலும் இந்த வழிபாடு பலன் தராது.

ஓம்சிவசிவஓம்


தொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் செல்வ வளத்தையும் தரும் திருவிற்குடி பைரவர் வழிபாடு!!!நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி,உங்களுக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டகாலம் தற்போது இருந்தாலும் சரி ;நீங்கள் இந்தப் பதிவில் உள்ளபடி பைரவர் வழிபாடு செய்துவிட்டால் பின்வரும் நன்மைகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்.இது சத்தியம்.அப்படி வழிபாடு செய்யும்முன்பாக நீங்கள் செய்ய வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் கூறிவிடுவது எனது கடமை! இந்த கட்டுப்பாடுகளுடன் இந்த வழிபாட்டைச் செய்தால் மட்டுமே நீங்கள் நினைக்கும் நன்மைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.அதென்ன நன்மைகள்?


1.தொழிலில் எப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை நீங்கள் அடைந்திருந்தாலும் சரி! அதிலிருந்து மீண்டு பழைய நிலையை எட்டிவிடுவீர்கள்.

2.இன்று உங்களுடைய பொருளாதார நிலை எப்பேர்ப்பட்ட தாழ்ந்த/சராசரியான/மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தாலும் சரி.அந்த சூழ்நிலை அடியோடு மாறி பெரும் செல்வச் செழிப்பை எட்டிவிடுவது சர்வ நிச்சயம்.


நீங்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்:


1.அசைவம் நிரந்தரமாக சாப்பிடக்கூடாது;(முட்டை,புரோட்டாவையும் மறந்துவிட வேண்டும்)ஏனெனில்,இந்த வழிபாடு செய்தபின்னர்,சில குறிப்பிட்ட மாதங்களில் அதற்குரிய பலன்கள் உங்களைத் தேடி வரும்.அப்படி வரும்போது,நீங்கள் அசைவம் சாப்பிடத் துவங்கியிருந்தால்,பைரவ வழிபாட்டுப்பலன்கள் உங்களை வந்துசேராது.
2.மதுவை(போதைப்பொருட்கள் அனைத்தையும்;இதில் சிகரெட் அடங்காது) நிரந்தரமாக மறந்துவிட வேண்டும்.ஏனெனில்,நீங்கள் சிந்திக்கும் திறனையும்,எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியத்தையும் இழந்துவிடுகிறீர்கள்.இதனால்,தினசரி வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை சரியாக புரியாமல் போய்விடுகிறது.

3.எந்த நாளில் இந்த வழிபாட்டைச் செய்யச் சொல்லுகிறோமோ,அந்த நாளும்,அதற்கு முந்தய நாளும் தாம்பத்தியம்/காமச் செயல்களில் ஈடுபடக்கூடாது.

4.இதற்காக நான் இந்த கோவிலுக்குப் போய்,இப்படிச் செய்யப் போகிறேன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது.

சரி,அடுத்து என்ன? திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் திருப்பயந்தங்குடி என்னும் ஊர் வரும்.அந்த ஊரை அடைந்ததும்,அங்கே திருவிற்குடிக்கு எப்படிச் செல்வது? என்பதை விசாரிக்க வேண்டும்.திருப்பயந்தங்குடியிலிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.இங்கே காலபைரவர் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவபெருமானாக இருந்து அருள்பாலிக்கிறார்.அது மட்டுமல்ல:


இங்கேதான் செல்வத்தின் அதிபதியான மஹாவிஷ்ணு துளசியால் இறைவனாகிய பைரவருக்கு அர்ச்சனை செய்து தனது சின்னமான சக்கரத்தை பெற்றார்.எனவே,அட்டவீரட்டானங்களில் திருவிற்குடி மிகமுக்கியமான கோவிலாக இருக்கிறது.இங்கே நாம் செய்ய வேண்டியது என்ன?
விநாயகர்,மூலவராகிய அருள்மிகு ஜலந்தராசுரவத மூர்த்தி,அம்பாள்,இலக்குமி ஆகியோருக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இங்கிருக்கும் பைரவருக்கு செவ்வரளிமாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளைக்கொண்டு அபிஷேகம்  செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் பைரவரைத் தவிர,மேற்கூறிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இந்த நேரத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.இவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகளுக்குத் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகம் முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும்/வேறு எவரது வீட்டுக்குச் செல்லாமலும் அவரவருடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.அவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு முடித்த 100 நாட்களுக்குள் வீழ்ச்சிநிலையில் இருக்கும் தொழில் மறுமலர்ச்சி அடையத் துவங்கும்;அல்லது பொருளாதார நெருக்கடி நிலை நீங்கி மிகப்பெரிய செல்வ வளத்தை அடையத் துவங்கும்.


பின்குறிப்பு: படத்தில் காணப்படுவது திரு அண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பாதங்கள் ஆகும்.முதல் யுகத்தில் மனிதர்கள் ஒவ்வொருவரின் உயரம் 24 அடிகள்.அந்தக் காலத்தில் ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தி   இவ்வளவு உயரமாக இருந்திருக்கிறார்.                                   ஆதாரம்:ஸ்ரீகாகபுஜண்டரின் உபதேசங்களின் தொகுப்பாகிய பைரவ ரகசியம்.                                 ஓம்சிவசிவஓம்