RightClick

ஒரு கேள்வி பதிலும்;இந்த செல்யுகத்தில் நமது சிந்தனைக்கு!!!பரதனாரே! எப்பேர்ப்பட்ட விசுவாமித்திரரே மேனகையின் அழகில் சறுக்கவில்லையா?

பதில்:எவ்வளவு பெரிய தவயோகியாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் உதாரணம் ஆகும்.(ஆண் என்பது பஞ்சும்,பெண் என்பது நெருப்பும் போன்றது)பொதுவாக கீழே வீழ்ந்த பலர் எழுந்ததே இல்லை;ஆனால்,விசுவாமித்ரர் எழுந்தது மட்டுமல்ல; மந்திரங்களுக்கெல்லாம் தாய் மந்திரமாகிய காயத்ரி மந்திரத்தை தனது தவ ஆற்றலால் இந்த உலகுக்கு வழங்கினார்;(நன்றி:விஜயபாரதம்,25.5.12)

நமது சிந்தனைக்கு ஆன்மீகக்கடலின் கருத்து:

அது மட்டுமா? காயத்ரி மந்திரத்தின் சக்தியால் புதியபிரபஞ்சத்தையே உருவாக்கினார்; புதிய பிரம்மாவையும் படைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன;இந்த  புராணச் செய்தி உண்மை என்பதை இன்றைய நவீன வானியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன.பூமியின் தெற்குப்பகுதிக்கு நேர் மேலே இருக்கும் விண்மீன் கூட்டங்கள் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக உதயமாகியிருக்கின்றன என்பதே அந்த வானியல் ஆராய்ச்சியின் முடிவாகும்.

மனிதன் ஒவ்வொருவரும் தனது மன சக்தியை ப்ராணயாமம்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் மூலமாக அதிகப்படுத்திக்கொண்டே சென்றால்,அடுத்த சில வருடங்களில் பிரபஞ்சத்தில் மறைந்திருக்கும் அஷ்ட கர்ம சக்திகளும் நமக்குக்கைகூடும்;அப்படிக்  கைகூடும்போது மனதில் காமகுரோதம்(வக்கிர அல்லது தீய எண்ணங்கள்) அதிகரிக்கும்;

அனுபவப்படி, சில மாதங்கள் நாம்  ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்தாலே தீய அல்லது வக்கிர எண்ணங்கள் தலைதூக்கவே செய்யும்.அந்த தீய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்குப்பதிலாக,மந்திர ஜபத்தில் கவனத்தைச் செலுத்தப் பழகுவது அவசியம்.ஏனெனில்,கலியுகத்தில் மாயை என்னும் சக்தி நம்மை ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கக்  கூடியது.இந்த ஒரே ஒரு படியைத் தாண்டிவிட்டால் போதும்;அப்புறம் ஆன்மீக வாழ்க்கையில் மள மளவென்று முன்னேற ஆரம்பித்துவிடுவோம்;

தவறு அல்லது சபலம் உண்டாவதற்கு நம்மிடம் இருக்கும் காரணிகள் எவைஎவையோ(சேமிக்கப்படும் மெமரிகார்டுகள்,தவறான வழிகாட்டி நமது சேமிப்பு/சம்பளம்/தயாளகுணத்தை காலிசெய்யும் நண்பன்/அலுவலக நட்பு,டிவிடிக்கள்,தேவையற்ற மின் அஞ்சல்கள்,சேகரிப்பட்ட மனதைக்கெடுக்கும் படைப்புகள்) அவை அனைத்தையும் நம்மிடமிருந்து நீக்கிவிடவேண்டும்;அப்படி நீக்கிவிட்டாலே நாம் மாயையின் சக்தியிடமிருந்து விலகிச் செல்ல முடியும்.

சித்தர்களின் தலைவராகிய அகத்தியரின் போதனைப்படி,நமக்கு ஒரு சிறந்த ஆன்மீக குரு அமைய நமது முந்தைய 3000 பிறவிகளை சீர்திருத்த வேண்டும்;அப்படி இல்லாமல்,விரைவாக நமது ஆத்ம சக்தியை சீர்திருத்தவேண்டுமெனில், நாம் இந்த ஜன்மத்தில் செய்ய வேண்டியது என்னென்ன தெரியுமா?


1.அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.ஏன் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்? ஏன் எனில்,நாம் பலவிதமான ஆன்மீக சேவைகள் அடிக்கடி செய்து வருவோம்;உதாரணமாக நமது கஷ்டங்கள் நீங்கி,நமது லட்சியங்கள் நிறைவேற பிரதோஷம் தோறும் சிவாலயம் செல்வோம்; தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்துக்கொண்டு வருவோம்;அல்லது தினமும் அன்னதானம் செய்வோம்;
இவையெல்லாம் செய்தும் கூட,நமக்கு ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது.அதற்கு நாம் மட்டுமெ காரணம் ஆவோம்.


ஆமாம்,ஆட்டுக்கறி,ஃப்பீF,சிக்கன் 66 என்று நோக்கம் போல சாப்பிட்டுக்கொண்டிருந்தால்,நமது ஆத்மபலம் தள்ளாடிக்கொண்டிருக்கும்;நாம் செய்த இறைவழிபாடுகள்,புண்ணிய காரியங்களுக்கான பலன்கள் சூட்சுமமாக நாம் வாழும் இடத்துக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வரத் துவங்கும்;அப்படி வரும்போதெல்லாம் நாம் அசைவம் சாப்பிடிருப்போம்;இதனால்,நமக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து நல்லவைகளும் நமது வீட்டு வாசலிலேயே நின்றுவிடும்.நாம் ஜோதிடரையும்,பரிகாரம் செய்தவரையும் திட்டிக்கொண்டே இருப்போம்;


தவிர,இன்னொரு குழுவினர் இருக்கிறார்கள்.எனது மகன்/ள் அசைவம் சாப்பிடாமல் இருக்கவே மாட்டான்/ள்.நாங்க என்ன செய்யுறது?

ஆமா மேடம்,உங்கள் குழந்தை பிறக்கும்போதே அசைவம் தான் சாப்பிடுவேன் என்ற கொள்கையோடுதான் பிறந்ததா? இல்லையே? நீங்கள் தான் குழந்தைப்பருவத்திலேயே அவர்களுக்குப் பழக்கப்படுத்திவிடுகிறீர்கள்.

ஒருவேளை அப்படி மீளமுடியாதவர்கள் தினமும் உணவுக்காளான் எடுத்துச் சாப்பிடவேண்டியதுதான்.வேறு வழியே இல்லை;

2.நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியபின்னர், தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.ஒரு நாளுக்கு 45 நிமிடம் வரை ஒதுக்க முடிந்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யலாம்.இப்படி தொடர்ந்து  3 ஆண்டுகள் வரையாவது வழிபட்டு வந்தால்,இந்த பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் நமக்கு மிகச் சிறந்த ஆன்மீக குரு  கிடைத்துவிடுவார்;


எனக்குத்தெரிந்து,ஒருவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டுக்கொண்டு வருகிறார்.இப்போது அவர் சிவாலயத்துக்குச் சென்றால்,கால பைரவரின் சன்னிதியில் மணிக்கணக்காக உட்கார்ந்து மனப்பூர்வமாக வேண்டுகிறார்.அதுவும் ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் அவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து மனப்பூர்வாக ஸ்ரீகாலபைரவரிடம் முறையிட்டுக்கொண்டிருக்கிறார்.இப்படி இவர் 4 மாதங்கள் செய்து வந்ததும்,அவரது கோரிக்கைகள் நிறைவேறத் துவங்கியிருக்கின்றன.வீட்டிலோ ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடும் செய்து வருகிறார்.மாதம் ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்குச் செல்வதோடு சரி;எம்மிடம் அவர் வாங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவை குலதெய்வம் கோவிலில் வைத்து ,தனது பெயருக்கு குலதெய்வத்திடம் அர்ச்சனை செய்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்கியிருக்கிறார்.


3.சிலருக்கு பைரவர் வழிபாடு உகந்ததாக இருக்காது;அவர்கள் ஓம்சிவசிவஓம்அல்லது ஓம்ஹரிஹரிஓம் மந்திரத்தை ஒரு நாளுக்கு  ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது ஓராண்டு வரையிலும் ஜபித்துவர வேண்டும்.100 நாட்கள் மந்திரம் ஜபித்தபின்னர்,நமது வாழ்க்கையில்,சிந்தனையில்,செயல்பாட்டில் மகத்தான மாறுதல்கள் வெளிப்படும்;நமது கடந்த கால,முன் ஜன்ம,எதிர்கால பாவ வினைகள் சூட்சுமமாக வெளியேறுவதை மானசீகமாக உணருவோம்;அடுத்து வரும் வருடங்களில் நாம் செய்ய இருக்கும் பாவங்களையும்,கர்ம வினைகளையும் தடுத்து நம்மைக் காக்கும் சக்தி ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்துக்கு உண்டு என்பது இப்போது உணர்ந்திருக்கிறோம்.(ஓம்ஹரிஹரிஓம் ஜபிப்பவர்கள் தங்களுடைய அனுபவங்களை அவ்வளவாக பகிர்ந்து கொள்ளவில்லை;தயவு செய்து தெரிவிக்கவும்)


நமது மனதில் இருக்கும் வக்கிர எண்ணங்கள்,தீய எண்ணங்களை நீக்கும் சக்தி  ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்துக்கு உண்டு.நாம் நினைப்பதையெல்லாம் நடத்திக்காட்டும் சக்தி நாம் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டு வரையிலும் அல்லது 1,00,000 தடவைக்குமேல் ஜபித்தப்பின்னர் நமக்குக் கிட்டும்.10,00,000 தடவைக்கு மேல் ஓம்சிவசிவஓம் ஜபித்தாலே இந்தப் பிறவியிலேயே நமக்குப் பொருத்தமான ஆன்மீக குருவை நாம் அடைவோம்;(எனது குருவின் வார்த்தையை மீறி இந்த ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்;என்ன செய்வாரே?)

ஓம்சிவசிவஓம்