சந்தேகமில்லாமல் வரமே தான்.எப்படி என்பதை விளக்கவே இந்த பதிவு!!!
நான்கு யுகங்களாக நமது இந்து
தர்மம்,காலத்தைப் பிரித்திருக்கிறது.அவை:கிருத யுகம்,திரோதாயுகம்,துவாபர யுகம்
மற்றும் கலியுகம்
முதல் யுகமான க்ருதயுகத்தின் கால அளவு 17,28,000 ஆண்டுகள்(இந்த யுகத்தின்
முடிவில் இராமாயணம் நிகழ்ந்தது)
இரண்டாம் யுகமான திரோதாயுகத்தின் கால அளவு 12,96,000 ஆண்டுகள்
மூன்றாம் யுகமான துவாபரயுகத்தின் கால அளவு 8,64,000 ஆண்டுகள்(இந்த யுகத்தின்
முடிவில் மஹாபாரதம் நிகழ்ந்தது)
தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது கலியுகம் ஆகும்.கலியுகத்தின் கால அளவு
4,32,000 ஆண்டுகள்.இப்போது நாம் கலியுகம் துவங்கி 5113 ஆண்டுகள் தான் ஆகின்றன.கலியின்
தாக்கம் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இருந்தே தீரும்;நல்ல விஷயங்கள் மனதிற்குள்
ஊடுருவும் முன்பு,தீய மற்றும் அழிவுதரும் விஷயங்களே மனதை ஆக்கிரமிக்கின்றன.
முதல் யுகமான க்ருதயுகத்தில் பத்து ஆண்டுகளாக தினமும் ஜபம் செய்தால்,என்ன
புண்ணியம் கிடைக்குமோ,அதே புண்ணியம் கலியுகத்தில் ஒரே ஒரு நாள் ,ஒரே ஒரு மணி நேரம்
ஒரு சிவாலயத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்தால் கிடைத்துவிடும்.
க்ருதயுகத்தில் ஆயுள் முழுவதும் ஜபம் செய்தால்,என்ன புண்ணியம் கிடைக்குமோ,அதை
விடவும் அதிகமான புண்ணியம்,நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ஒரு நாளுக்கு ஒரு மணி
நேரம் வீதம் ஓராண்டுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்தால் கிடைத்துவிடும்.
க்ருதயுகம் முழுவதும் வாழ்ந்து ஏதாவது ஒரு கடவுளை நினைத்து ஏராளமான யாகங்கள்
நடத்தினால்,அந்த கடவுளின் அருள் கிடைக்கலாம்;கிடைக்காமல் போகலாம்.ஆனால்,நாம் வாழ்ந்து
வரும் கலியுகத்தில் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்றே மூன்று ஆண்டுகளுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண
ஆகர்ஷண பைரவர் வழிபாடு வீட்டில் செய்தாலே,க்ருதயுகம் முழுவதும் யாகங்கள் செய்த புண்ணியத்தை
விடவும் அதிக புண்ணியமும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் தரிசனமும்,நிலையான செல்வச்
செழிப்பும்,கர்மவினையே இல்லாத நிலையும்,நமது அடுத்த ஏழு தலைமுறை(நமது குழந்தைகள்,அவர்களின்
குழந்தைகள் என்று அடுத்தடுத்து ஏழு தலைமுறை)க்கும் நிம்மதியும்,செல்வச் செழிப்பும்
உண்டாகும்.
ஏராளமான கவனத் திசைத் திருப்பல்கள்,முதுகெலும்பில்லாத கருத்துக்களை நகைச்சுவையான
விதத்தில் பரிமாறி நம்மை நாகரீக முட்டாளாக்கும் நாத்திகம்,காமத்தின் மீதான அளவற்ற ஆர்வம்,ஒரே
ஒரு விஷயத்தின் மீது அளவற்ற பைத்தியம்,எல்லோரிடமும் விரைவாக பணம் சம்பாதிக்கத் தூண்டும்
முதலாளித்துவம் என கலிகாலத்தில் நம்மை சிந்திக்க வைக்கவிடாமல் தடுக்கும் குழப்பம் நிறைந்த
யுகத்தில் இப்படி நமது இந்து தர்மத்தை விடாப்பிடியாக பின்பற்றுவோர் நாம் அனைவருமே சித்தர்களின்
வழித்தோன்றல்கள் என்றால் நம்பவா போகிறீர்கள்?
நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்
மூன்றே மூன்று மாதங்களுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துப்பாருங்கள்;உங்களது வாழ்க்கை,சிந்தனை,செயல்
இவை அனைத்திலும் ஒரு உள்முகமான பயணம் துவங்கியிருக்கும்;ஏராளமான நமது வாசக,வாசகிகளின்
அனுபவம் அது.
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்
மூல மந்திரத்தை உங்கள் வீட்டில் உள்ள அவரின் படத்தின் முன்பாக ஜபிக்க வேண்டும்; ஒரு
நாளுக்கு 33 முறை வீதம் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இவ்வாறு செய்வதால்,உங்களின் கடன்கள்
எப்படித் தீருகின்றன அல்லது உங்களுக்கு வர வேண்டிய பணம் எப்படி வந்து சேருகின்றது அல்லது
உங்களது குடும்பப்பிரச்னைகள் எப்படி தீர்ந்து குடும்ப ஒற்றுமை ஏற்படுகிறது அல்லது உங்களின்
நீண்டகால மற்றும் நியாயமான ஏக்கங்கள் எப்படி நிறைவேறுகின்றன என்பதை நீங்களே உணரலாம்.
கலியுகத்தில் நாம் பிறந்தது நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு வரம் மட்டுமே;வரம்
மட்டுமே;வரம் மட்டுமே!!!
நமக்குத் தேவை மனத்தை முழுக்க முழுக்க இந்த வழிபாடு அல்லது மந்திர ஜபத்தை
நோக்கித் திருப்பக் கூடிய மனவலிமை மட்டுமே!!!
ஓம்சிவசிவஓம்