RightClick

காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியார் பாடலுக்கான விஞ்ஞான ஆதாரங்கள்!!!
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் எண்ணங்களை உணர்ந்துகொள்கிற,புரிந்து கொள்கிற ஆற்றல் உள்ளது.இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்:
ஒருவர் பல பசுக்களை பராமரித்து வந்தார்.பால் வியாபாரம் தான் அவரது தொழிலாகும்.ஒரு பசுவை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.தரகர் ஒருவரிடம் இது குறித்து அவர் சொல்லி வைத்திருந்தார்.
சில நாட்களுக்குப்பிறகு தரகர்,ஒரு நபரைக் கூட்டிக்கொண்டு வந்தார்.வந்தவர்கள் பால்வியாபாரியின் தொழுவத்திற்குச் சென்றனர்.அவர்களைப் பார்த்த பசுக்கள் மிரண்டுவிட்டன.அவை சத்தமாக அலறின.அவற்றின் நடவடிக்கையை புரிந்துகொள்ள முடியவில்லை;கட்டிப்போட்டிருந்த போதிலும் அவை ஆவேசமாக திமிறின.பால் வியாபாரி தரகரை நோக்கி,
“நீங்கள் அழைத்து வந்திருப்பது கசாப்புக்கடைக்காரரா?” என்று கேட்டார்.அது மட்டுமல்லாமல்,அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேறிச்சென்று விடுமாறு பால் வியாபாரி கேட்டுக்கொண்டார்.அந்த நபர் அங்கிருந்து வெளியேறியதும்,பசுக்கள் யாவும் இயல்பு நிலைக்குத் திரும்பின.

கசாப்புக்கடைக்காரர்  என்ன நினைக்கிறார் என்பதை பசுக்கள் எப்படிப்  புரிந்துகொண்டன? இதற்கு எண்ண அலைகளின் தாக்கம் தான் காரணம்!கசாப்புக்கடைக்காரர் கொலை செய்வதற்காகத் தான் தொழுவத்தை நாடி வந்துள்ளார் என்பதைப்  புரிந்துகொண்ட காரணத்தினால்தான் தங்களது எதிர்ப்பை பசுக்கள் வெளிப்படுத்தின.

ஒவ்வொரு வீட்டிலும் அங்கு வாழ்பவர்களின் எண்ணங்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.இந்த எண்ணங்கள் ஜீவனற்றவையல்ல:ஜீவத் துடிப்பு மிக்கவை;சிலந்தி பின்னுகிற வலைகளைப் போல நமது எண்ணங்கள் விரிந்து பரவுகின்றன.எதிர்மறையான எண்ணங்களுக்கு பதிலடி கொடுக்கின்றன.ஆக்கபூர்வமான எண்ணங்களுக்கு வரவேற்பு கொடுக்கின்றன.

ஒரு வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே நிறைந்திருந்தால் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பல்வேறு துன்பங்கள் நேர்கின்றன.உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.எதிர்மறை எண்ணங்களை விலக்குவதற்காக பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.நல்லெண்ணங்களை நிரப்புவதே சிறந்த பரிகாரமாகும்.*


ஒருவர் நம்பினாலும் சரி,நம்பாவிட்டாலும் சரி,ஏற்றுக்கொண்டாலும் சரி,ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி எண்ண அலைகளின் தாக்கத்திலிருந்து தப்பவே முடியாது.ஒவ்வொரு வீட்டிலும் எண்ண அலைகள் மிதந்து கொண்டே இருக்கின்றன.


வீடு “கடாக்க்ஷா” என்று அழைக்கப்படுகிறது.தயை,அருள் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும்.கிரகலட்சுமி என்றால் திருமகள் என்று பொருள்.ஒவ்வொரு வீடும் திருமகள் வாழும் இல்லமாகத் திகழ வேண்டும்.நல்லெண்ண அலைகள் எப்போதும் உலா வந்துகொண்டிருக்கும் இடத்தில்தான் திருமகள் வாசம் செய்வாள்.அங்குதான் மகிழ்ச்சி பொங்கிக்கொண்டிருக்கும்.கணவன்,மனைவிக்கிடையே பெற்றோர் குழந்தைகளுக்கிடையே பாசம் ததும்பி வழியும்.இப்படிப்பட்ட வீட்டில்தான் கிரகலட்சுமி நீங்காது உறைவாள்.
நன்றி:விஜயபாரதம்,பக்கம்30,31;1.6.12


*ஆன்மீகக்கடலின் கருத்து:

நமது வீட்டில் அழுக்குத் துணிகளை ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்க வேண்டும்;புதிய மற்றும் துவைத்து அயர்ன் செய்தவைகளை வேறொரு இடத்தில் அழகாக அடுக்கி வைத்திருக்க வேண்டும்.வீட்டில் ஒருபோதும் துர்நாற்றம் வீசக்கூடாது.


தினமும் காலையில் ஒரு முறை மற்றும் மாலையில் ஒருமுறை வீட்டை தண்ணீரால் அலசிவிட்டு,தரமான பத்தி ஒன்றை பொருத்தி வைக்க வேண்டும்.இதன்மூலமாக நல்லெண்ணங்கள் நம்மைத் தேடி வரும்.தினமும் ஒருமுறையாவது இப்படிச் செய்துவர வேண்டும்.


பத்திபொருத்திய பின்னரே,நாம் நமது கடவுளைக் கும்பிடுகிறோம்.அப்போது நமது நியாயமான கோரிக்கைகளை கடவுளிடம்கேட்கிறோம்.பத்தியிலிருந்து பரவும் நறுமணம் நமது ஆழ்மனத்தை விழிக்கச் செய்யும். விழித்திருக்கும் ஆழ்மனத்தில் நமது வேண்டுகோளை பதிய வைக்கிறோம்.இப்படி தினமும் செய்வதால்,நமது நியாயமான ஆசைகள் நமது ஆழ்மனதிற்குள் பாய்ந்து,பதிந்துவிடுகிறது.ஆழ்மனதிற்குள் எது பதிந்தாலும்,ஆழ்மனம் அதை பிரபஞ்ச மனதுக்கு அனுப்பி விடுகிறது.பிரபஞ்ச மனதுக்கு எந்த ஒரு கோரிக்கை (மனிதனிடமிருந்து சென்றாலும்) குறிப்பிட்ட காலத்துக்குள் நிறவேறிவிடுகிறது.இதுதான் நாம் நமது வாழ்க்கையில் முன்னேற உதவும் பிரார்த்தனை ரகசியம்.


இதுவேதான் சிறிது வேறுவிதமாக பிற மதங்களில் பின்பற்றப்பட்டுவருகிறது.
ஓம்சிவசிவஓம்