1980 முதல் இன்றுவரையிலும் மெட்ரிக் பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன;இது
வளர்ச்சி என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்;ஆனால்,நமது இந்து தர்மத்துக்கும்,நமது
குடும்ப அமைப்புக்கும் எதிரான வளர்ச்சி என்பதை நாம் சுலபமாக மறந்துவிடுகிறோம்.எப்படி
என்பதைப் பார்ப்போம்.
என் புள்ள இங்கிலீஷ் மீடியத்துல படிக்குது என்று பெருமையடிப்பதற்காகவே
நாம் நமது செல்லக் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளிலும்,(தற்போது) இண்டர்நேஷனல் ஸ்கூல்களிலும்
பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாகக் கட்டி பள்ளியில் சேர்க்கிறோம்;ஆனால்,அந்த பள்ளிக்குள்
நடப்பது என்ன?
ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து வேலைக்கு வந்திருக்கும் ஆசிரியை,நமது
தெரு அல்லது வீட்டு வாசலில் இருந்தே பள்ளிக்குச் செல்ல வாகன வசதி(நாங்களே எங்க பிள்ளையை
பள்ளியில் தினமும் கொண்டு வந்துவிட்டு,பள்ளிமுடிந்ததும் அழைத்துச் செல்கிறோம் என்று
சொன்னாலும்,ட்ரான்ஸ்போர்ட் ஃபீஸை கட்டித்தான் ஆகணும்),வெப்பம் மிகுந்த நம் நாட்டிற்கு
சிறிதும் பொருந்திவராத டை மற்றும் ஷீ,இறுக்கமான ஆடைகள் மற்றும் விளையாட்டுக்கள்
.முதல் நாளிலிருந்தே நமது தாய்மொழியிடமிருந்து பிரித்து செல்லும் கல்வி
முறை;சரி பரவாயில்லை என்று விட்டுக்கொடுப்போம்; (நாம் தான் சகிப்புத்தன்மையோடு வளர்க்கப்பட்டிருக்கிறோமே?)
மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் எத்தனை குழந்தைகள் நான் இனிமேல் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க போக
மாட்டேன் என்று படிப்பை பாதியில் விட்டவர்கள் எத்தனை ஆயிரம்பேர்கள் தெரியுமா?
அல்லது
மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் இங்கிலீஷ் மீடியத்திலிருந்து தமிழ் மீடியத்துக்கு
மாறியபின்னர், தமிழில் வார்த்தை எழுத தடுமாறும் நமது குழந்தைகளின் மனநிலை எவ்வளவு கொடூரம்
தெரியுமா?
குழந்தைகளுக்கான மனோதத்துவம் சொல்வது என்ன?
எந்த குழந்தையாக இருந்தாலும் அதன் ஐந்து வயது முதல் 12 வயது வரையிலும்
அதன் தாய்மொழியில் ஆரம்பக் கல்வி கற்பது அவசியம் ஆகும்.இப்படி ஆரம்பக் கல்வியை தனது
தாய்மொழியில் கற்பதால்,அந்த குழந்தையின் தாய்மொழியில் சரளமாகப்பேசுதல்,தவறின்றி எழுதுதல்,சுலபமாக
பிறர் கூறுவதைப் புரிந்துகொள்ளுதல் போன்றவை கைகூடும்.இந்த முதல் ஏழு ஆண்டுக் கல்விதான்
,ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் இயல்பான படைப்புத்திறனை வெளிப்படுத்திட உதவி செய்யும்.
அதென்ன
படைப்புத்திறன்? படம் வரைதல்,ஓட்டப்பந்தயம்,கட்டுரை எழுதுதல்,கதை எழுதுதல்,கவிதை எழுதுதல்,பாடல்களை
ராகத்தோடு பாடும் திறன், மனிதர்களை ஒருங்கிணைக்கும் திறன்,எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும்
திறன்,நடனம் ஆடும் சாமர்த்தியம்,ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களில் கவனம்
செலுத்தும் திறன்(போராளி படத்தில் இடைவெளி முடிந்ததும் ஹீரோவின் பள்ளிக்கூட வாழ்க்கையை
விவரிக்கும் காட்சிகள்),நகைச்சுவையாகப் பேசும் திறன்,சண்டை அல்லது வாக்குவாதத்தின்
போது பயப்படாமல் அந்த வாக்குவாத தீவிரத்தை தணிக்கும் சாமர்த்தியம்,நினைவாற்றலை அதிகரிக்கும்
சக்தி,தகவல்களை தொகுத்தல்,தொகுத்த தகவல்களை ஒருங்கிணைத்தல்,ஒருங்கிணைத்த தகவல்கள் மூலம்
புதிய ஆச்சரியமான உண்மைகளைக்கண்டறிதல்,புள்ளிவிவரங்களைக் கண்டறிதல்,தேடுதலில் ஆர்வம்,படிப்பதில்
ஆர்வம்,கூச்சப்படாமல் எவரிடமும் பேசுதல்,தனது சந்தேகங்களை உரியவர்களிடம் தெளிவுபடுத்தும்
துணிச்சல்,ஆன்மீகத்தில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்த கையோடு அதில் புதிய சிந்தனைகளை
செயல்படுத்திப் பார்த்தல் என சுமார் 640 விதமான திறமைகள் இருக்கின்றன.
இப்படி எட்டாம் வகுப்பு வரையிலும் தாய்மொழிக்கல்வியில் பயின்ற குழந்தைகள்,தனது
12 முதல் 15 வயது தாய்மொழியின் துணையைக் கொண்டு ஆங்கிலம் மற்றும் வேறு எந்த மொழியையும்
கற்றுக்கொள்ளும் மனநிலைக்குத் தயாராகிவிடும்.15 வயது முதல் 25 வயது வரையிலான காலகட்டத்தில்
சுயமாக சிந்தித்துச் செயல்படும் திறனும் வந்துவிடும்.
ஆங்கில மீடியத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே படிக்கும் குழந்தைகளுக்கு
மேற்கூறிய திறன்கள் அவ்வளவாக வளர்வதில்லை;அவர்கள் எதையும் சமாளிக்கும் திறனை மட்டுமே
பெற்றுவிடுகிறார்கள்.நமது வட்டாரத்து/சமுதாய திருவிழாக்கள் மீதான உள்ளார்ந்த மதிப்பீட்டை
உணர்ந்து கொள்வதில்லை;நமது இந்து தர்ம சம்பிரதாயங்களுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞான
ரகசியங்களை உணர்வதில்லை;விளக்கிச் சொன்னாலும் நம்புவதில்லை;வேலைவாய்ப்புச் சந்தையில்
இவர்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை;ஏனெனில்,இவர்கள் நுனிப்புல் மேய்ந்தவர்களாகவும்,தன்னம்பிக்கையற்றவர்களாகவும்,தனது
பெற்றோரை மதிக்கத் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.இது எந்த அளவுக்கு உண்மை என்பதை
வாசக,வாசகிகளாகிய உங்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.
உங்களின் கமெண்டுகளை எதிர்பார்க்கிறேன்.
எனவே,இந்த கல்வி வருடத்திலிருந்து உங்களின் குழந்தைகளை பள்ளிப்படிப்புக்கு
தமிழ் மீடியத்தில் சேருங்கள்!!!
ஓம்சிவசிவஓம்