நெதர்லாந்து நாட்டின் தேசிய அருங்காட்சியகமான ரிஜ்க்ஸ் மியூசியத்தில்
நமது நாட்டுக்குச் சொந்தமான ஒரு நடராஜர் விக்கிரகம் இருக்கிறது.இந்த நடராஜர் விக்கிரகம்
வெண்கலத்தால் ஆனது;153 செ.மீ.,உயரமும்,114.5 செ.மீ.அகலமும்,300 கிலோ எடையும் கொண்டது.இந்த
வெண்கல நடராஜர் சிலை 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் வார்க்கப்பட்ட உற்சவர்
ஆகும்.இந்த மியூசியத்தின்காப்பாளர்கள் ,இந்த வெண்கலச்சிலை(நமக்கு உற்சவர்!) உள்ளீடற்றதாக
இருக்கும் என்று நினைத்தார்கள்.ஏனெனில்,வெண்கலத்தை உள்ளீடற்றதாக அல்லாமல் வார்ப்பது
இன்றும் கூட மிகக்கடினமான தொழில் நுட்பம் என்பதுதான் காரணம்!எனவே,இந்த நடராஜர் விக்கிரத்தை
எக்ஸ்-ரே எடுத்துப்பார்க்கத் தீர்மானித்தார்கள். இந்த மியூசியம் இருக்கும் நகரத்தில்
இருக்கும் எந்த ஒரு எக்ஸ் ரே கருவியும்,இந்த விக்கிரகத்தை எடுக்கும் சக்தியுள்ளதாக
இல்லை;எனவே, கண்டெய்னர்களை எக்ஸ் ரே எடுத்துச்
சோதிக்கும் எக்ஸ் ரே குகைக்குள் ஒரு லாரியில்
விக்கிரகத்தை வைத்து அனுப்பினார்கள்;முழு விக்கிரகமும் நடராஜர் காலடியில் உள்ள முயலகன்,நடராஜரைச்
சுற்றியுள்ள பிரபை எல்லாமே உள்ளீடற்றதாக இல்லாமல் திடமான வெண்கலத்தால் ஆனது என்று எக்ஸ்
ரே காட்டியது;இந்தச் செய்தியானது நெதர்லாந்தின்
அனைத்துச் செய்தித் தாள்களிலும் தலைப்புச்
செய்தியானது;இந்த அதிசயச் செய்தியை அமெரிக்காவின் முன்னணிப்பத்திரிகைகளும் மறு பிரசுரம்
செய்தன.
இந்து தர்மத்தின் ஆத்மாவும் இதே போலத்தான்;இந்து தர்மமே இந்த உலகிற்கு
அமைதியையும்,அன்பையும்,ஒற்றுமையையும்,சகிப்புணர்ச்சியையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.அப்பேர்ப்பட்ட
இந்து தர்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.இருப்பினும் ஏன் நாம் நமது இந்து தர்மத்துக்கு
ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி அறிந்தும் கொதித்தெழுவது இல்லை?
நன்றி:ஏ.என்.ஐ.செய்தி ஸ்தாபனம் 9.1.12
விஜயபாரதம் பக்கம் 23,வெளியீடு 25.5.12