RightClick

நமது குழந்தை பொறுப்புள்ளவராக வளர,இவர்களைப் போல நாமும் டிவியை தலைமுழுகுவோம்!!!


கோயம்புத்தூரில் டிவிக்கள் விற்கும் கடை வைத்திருக்கும் அஜய்குமார் தன் வீட்டு டிவியை மூன்று மாதங்களுக்கு முன் விற்றுவிட்டார்.அவருடைய 3 வயது மகள், ‘டிவியில் எனக்குப்பிடித்த நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தால்தான் சாப்பிடுவேன்’ என்று அடிக்கடி சொல்லுகிறாள்.பார்த்தார்! எவன் எவனோ எங்கிருந்தோ இருந்துகொண்டு எனது மகளின் அறிவுவளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து தடை போட,அதை நான் ஏன் ஏற்றுக்கொள்ளணும்? என்று யோசித்து தனது வீட்டில் இருந்த டிவியை விற்றுவிட்டார்.
இதே போல கோவையில் இதுவரை 35 பேர்கள் தங்கள் வீட்டு டிவியை விற்றுவிட்டார்கள்.டிவி இல்லாமல் தங்கள் குழந்தைகள் வளர வேண்டும் என்பது இவர்களது ஆசை. ‘என் பிள்ளைகள் படம் வரைவது, பாட்டுப்பாடுவது, மற்ற பிள்ளைகளோடு கூடி விளையாடுவது என்று இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்’ என்கிறார் அஜய்குமார்.

‘என் சின்னஞ்சிறு மகன் டிவியில் வரும் அடிதடி காட்சிகள் ஒன்றுவிடாமல் பார்க்கிறான்.அது அவன் மனதை பாதிக்கிறது.சிறுவர்களுக்கான சேனல்களும் மோசம்தான்!’ என்கிறார் மருந்துக்கம்பெனி நிர்வாகி சேதுராமன்.எனவே,இவரும் தனது டிவியை விற்றுவிட தீர்மானித்துவிட்டார்.
சிவானந்தா காலனியில் ‘எல்லோ ட்ரைன்’ என்ற மழலையர் பள்ளி நடத்தும் சந்தியா விக்ரம் தனது பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வரும் பெற்றோர் தங்கள் வீட்டில் டிவி இல்லை என்று உறுதிமொழி அளிப்பதை நிபந்தனையாக வைத்திருக்கிறார்.இதற்கு அருமையான பலன் கிடைத்தது.எங்கள் பள்ளி பிள்ளைகளின் பெற்றோர் டிவி பார்ப்பதை நிறுத்தினார்கள்.அடுத்து அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் கூட!!
நன்றி:த டைம்ஸ் ஆப் இந்தியா 24.2.12;விஜயபாரதம் பக்கம் 17,தேதி 30.3.12
ஆன்மீகக்கடலின் கருத்து: 1995 ஆம் ஆண்டில் நாம் உலகமயமாக்கலில் கையெழுத்திட்டோம்;1995 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் நாம் வீட்டுக்கு வீடு கேபிள் டிவி கொடுத்துக்கொண்டிருந்தோம்;அதே ஐந்தாண்டுகளில் அமெரிக்காவில் ஏப்ரல் முதல் வாரத்தை டிவி பார்க்காத வாரம் என்று கொண்டாட ஆரம்பித்தார்கள்.
ஏன் தெரியுமா?
உலக நாடுகளின் அரசுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க போராடுவது அமெரிக்காவும்,சீனாவும் இன்னும் பிற வல்லரசு நாடுகளும்!
இந்த வல்லரசு நாடுகளை இயக்குவது இந்த நாடுகளின் உளவுத்துறையும்,ஆயுத தயாரிப்பாளர்களும்,வியாபாரிகளும்;இவர்களது யுகம் முடிந்துவிட்டது;இப்போது இந்த வல்லரசு நாடுகளையும்,ஐ.நா.சபை அமைப்புகளையும் இயக்குவது சர்வதேச கார்பரேட் நிறுவனங்களும்,அதன் கொள்(ளை)கை வகுப்பாளர்களும்தான்!!!

புத்தகம் வாசிப்பதை ஒரு அவசியமான பழக்கமாக்குவோம்!!!


வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது". நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; முடிவுகள் எடுக்க புத்தகம் துணைபுரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி துலங்கும் !
அடிமைகளின் சூரியன் எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், புத்தகங்கள் படித்தே உயர்ந்தவர். அவர் ஒரு தச்சுத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். தனது தீவிரப் படிப்பினால் தேசம் புகழத் திகழ்ந்தார்! "ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு" என்னும் நூலை இரவல் வாங்கிப் படித்தார். அந்த நூல், அவர் மனதில், தான் எதிர்காலத்தில் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை உருவாக்கியது. அந்த சிந்தனை, அவரை அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகவும் உயர்த்தியது! இது வரலாறு நமக்கு கூறும் செய்தி.
லண்டன் நூலகத்தில், இருபது ஆண்டுகள், அரிய நூல்களைப் படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ், உலகின் பொதுவுடைமைத் தந்தையாக உயர்ந்தார்.
"காஞ்சிபுரத்திலிருந்து, முதுகலைப் பட்டதாரியான ஓர் இளைஞன், சென்னை நோக்கிச் சென்றான்; முடிவில் தமிழகத்தின் முதல்வராகத் திரும்பினான்" - என்று பேரறிஞர் அண்ணாவைப் புகழ்வார்கள்! அவர், சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் படித்தவர். நூலகம் திறக்கும் பொழுது உள்ளே நுழைந்து, இரவு அடைக்கும் பொழுது வெளியே வருவார். அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டபோது, அவர் அரிதான நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். அந்த நூல் முழுவதையும் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையையே ஒரு நாள் ஒத்திவைக்கும்படி மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது, வாசிப்பின் மேல் வைத்த அவரின் நேசிப்பை உணர்த்துகிறது!
இந்தியாவின் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு, "நான் மறைந்தபின் உடல் மீது மலர் மாலைகளை வைக்கவேண்டாம்; என் மடி மீது புத்தகங்களைப் பரப்புங்கள்" – என்று கேட்டுக் கொண்டார்!.
இந்தியாவின் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், மாஸ்கோ நகருக்குச் சென்ற பொழுது, தங்கும் விடுதியில் தனக்கு இரண்டு அறைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். முதலில் அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டன. அவர் அங்கு சென்ற பின்னர்தான் புரிந்தது. அவர் தங்குவதற்கு ஓர் அறை; படிப்பதற்காக எடுத்துச் சென்ற புத்தகங்களை வைப்பதற்கு ஓர் அறை! இதுவும் வாசிப்பின் மீதான வரலாற்றுச் செய்தியல்லவா?.

புத்தகங்களை படித்தவர்கள் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தரப் போராடியுள்ளர்கள்; வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்கள்! புத்தகங்கள் மட்டுமே, நமக்கு ஏற்படுகிற பிரச்சனைகளைத் தீர்க்க நல்ல வழியை நயம்படச் சொல்லும்.
மனச் சோர்விலும், இறுக்கத்தில் உழலும்போதும் நல்ல புத்தகங்கள் அமைதியையும், தெளிவையும், வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கும். நமக்கும், நமது வீட்டிற்கும் தேவையான பொருட்களை நாம் தவறாமல் வாங்குகிறோம். அதைப் போல, நமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்கிடத்தரப்படும் பணம், செலவு அல்ல; மூலதனமாகும்! அது, வட்டியை ஈட்டித் தருவதைப்போல அறிவைப் பெருக்கச் செய்யும் மூலதனம்!
புத்தகங்கள் படிக்க நேரம் இல்லை என்று பெரும்பான்மையோர் கூறுகிறார்கள். விமானம், பேருந்து, தொடர்வண்டி பயணத்தின் போது, மருத்துவரை, உயர் அலுவலர்களை, தலைவர்களைச் சந்திக்க காத்திருக்கும் போதும், புத்தகங்கள் படிக்கலாம். நேரம் வீனாய்க் கழியாமல், பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புத்தகப் படிப்பிற்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கலாம்.
நாம் நமது நண்பர்களுடன் கேளிக்கைகளிலும், வீண் பேச்சுகளிலும், அரட்டைகளிலும் பொன்னான நேரத்தை வீணடிக்கிறோம். ஆனால், நம்மை உயர்த்திக் கொள்ள புத்தகங்களைப் படிப்பதற்கு மட்டும் நேரம் இல்லை என்று புலம்புகிறோம். இது வேடிக்கையாக இல்லை?! எனவே, நமக்கு கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் புத்தகங்களைப் படிப்போம்.
நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்ட வேண்டும்.
ஒவ்வொருவரும், புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது, குடும்பமே, வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள்.
நல்ல புத்தகங்களைப் படித்து, கெட்டுப் போனவர்கள் யாரும் உலகில் இல்லை. புத்தகங்கள் படிப்பதைக் கடமையாய்க் கொண்டவர்களும், வாசிப்பதை உயிர் என மதித்தவர்களும் மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்.
புத்தகங்கள் பெற்றோரைப் போல அறிவுரை கூறும்; மனைவியைப் போலத் தாங்கி நிற்கும்; மக்களைப் போன்று மகிழ்ச்சியளிக்கும்; நெருங்கிய நண்பனாய் ஆலோசனை வழங்கும்!
அதனால் தான் அறிஞர் ரஸ்கின், "புத்தகங்களைப் போன்ற சிறந்த கருவூலம் வேறு எதுவும், மனிதனுக்கு இருக்க முடியாது" – என்றார். "ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது" என்பார் பேரறிஞர் விக்டர் ஹியுகோ. அறிவை விருத்தி செய்ய நல்ல புத்தங்களை நாளும் படிப்போம். வாசிப்பை நேசிப்போம்! வாழ்க்கையிலும் பயன்படுத்துவோம்! புத்தகங்களை, காலமென்னும் அலை கடலின் ஓரம் உயர்ந்து நிற்கும், கலங்கரை தீபங்கள் என்போம்!!
நன்றி:தமிழ்தாமரை.காம்

மதமாற்றம் ஒரு வன்முறை என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது


ஹிந்து மதத்தை பல்வேறு ஆபத்துகளிலிருந்து காக்க பாடுபட்டுபவர் சுவாமி தயானந்த சரஸ்வதி என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; சுவாமி தயானந்த சரஸ்வதி சித்தாந்தங்களை காக்கவும், பாதுகாக்கவும்
பாடுபட்டுவருகிறார். நாட்டையும், சமுகத்தையும் ஆரம்பத்திலிருந்து காப்பதற்க்காக செயல்பட்டுவருகிறார். அவரை சந்தித்து பழகிய வாய்ப்பு கிடைத்தபிறகு, எனது சிந்தனையிலும், கோட்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது.

மதமாற்றத்தை ஒரு வன் முறை என கூறியவர். இந்த சித்தாந்தத்தை உலகமே ஏற்று கொண்டுள்ளது . பணம் தந்தோ , ஆசைகாட்டியோ மத மாற்றத்தினில் ஈடுபடுவது பாவ செயலாகும். ஒருவர் விருப்பத்தின் படி மதம் மாறுவது தவறில்லை.

2002ல் ஹிந்து தர்ம ஆச்சார்ய சபை உருவாக காரணமாக இருந்தவர். இந்துக்களுக்காக போராடவும், பாடுபடவும் ஒருஅமைப்பு உருவாவதற்கு காரணமானவர் . உலகில் யூதர்களிடம் மட்டும் தான் மத மாற்றம் இல்லை. அதேபோன்று ஹிந்துமதம், மத மாற்றத்தில் ஈடு படுவதில்லை. நமது பாரம் பரியத்தையும், மதத்தையும் இஸ்ரேலிய யூதகுருமார்கள் புரிந்துகொண்டார்கள். 2,000 ஆண்டுகளாக ஹிந்து மதத்தைபற்றி அவர்களுக்கு இருந்த தவறான எண்ணம் மாறியது. அதைதொடர்ந்தே இந்தோ-யூத ஒப்பந்தம் உருவானது .

இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு இஸ்ரேலுடன், இந்தியா பலதுறைகளில் இணைந்து பணியாற்றுகிறது. சனாதன தர்மத்தையும், அத்வைத_வேதாந்தத்தையும் சுவாமி தயானந்த சரஸ்வதி பரப்பிவருகிறார் என்றார்                                          நன்றி:தமிழ்தாமரை.காம்

மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றமல்ல, பண்பாட்டு மாற்றம்


உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை - அதாவது ஹிந்துத் தன்மை - அதாவது ஹிந்துத்துவம். இதன் சிறப்புகள் பல;


ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம். ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம். ""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள்."யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான்.

இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள். இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை.

இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது. ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன.

"எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான்".

நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை. இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான். எனவே,

ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை.

ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய சிறீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்?

அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான். நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது. ""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள். பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு! எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை! இந்த நாட்டின் தனித்தன்மை-பண்பாடு-மண்வாசனை-ஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும்.

இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள். நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது. மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.

ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் - மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''. அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம். அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது. கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன.

பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள். திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை. அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை. மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு. படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான்.

மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்? எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
thanks:www.http://tamilthamarai.com/

காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியார் பாடலுக்கான விஞ்ஞான ஆதாரங்கள்!!!
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் எண்ணங்களை உணர்ந்துகொள்கிற,புரிந்து கொள்கிற ஆற்றல் உள்ளது.இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்:
ஒருவர் பல பசுக்களை பராமரித்து வந்தார்.பால் வியாபாரம் தான் அவரது தொழிலாகும்.ஒரு பசுவை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.தரகர் ஒருவரிடம் இது குறித்து அவர் சொல்லி வைத்திருந்தார்.
சில நாட்களுக்குப்பிறகு தரகர்,ஒரு நபரைக் கூட்டிக்கொண்டு வந்தார்.வந்தவர்கள் பால்வியாபாரியின் தொழுவத்திற்குச் சென்றனர்.அவர்களைப் பார்த்த பசுக்கள் மிரண்டுவிட்டன.அவை சத்தமாக அலறின.அவற்றின் நடவடிக்கையை புரிந்துகொள்ள முடியவில்லை;கட்டிப்போட்டிருந்த போதிலும் அவை ஆவேசமாக திமிறின.பால் வியாபாரி தரகரை நோக்கி,
“நீங்கள் அழைத்து வந்திருப்பது கசாப்புக்கடைக்காரரா?” என்று கேட்டார்.அது மட்டுமல்லாமல்,அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேறிச்சென்று விடுமாறு பால் வியாபாரி கேட்டுக்கொண்டார்.அந்த நபர் அங்கிருந்து வெளியேறியதும்,பசுக்கள் யாவும் இயல்பு நிலைக்குத் திரும்பின.

கசாப்புக்கடைக்காரர்  என்ன நினைக்கிறார் என்பதை பசுக்கள் எப்படிப்  புரிந்துகொண்டன? இதற்கு எண்ண அலைகளின் தாக்கம் தான் காரணம்!கசாப்புக்கடைக்காரர் கொலை செய்வதற்காகத் தான் தொழுவத்தை நாடி வந்துள்ளார் என்பதைப்  புரிந்துகொண்ட காரணத்தினால்தான் தங்களது எதிர்ப்பை பசுக்கள் வெளிப்படுத்தின.

ஒவ்வொரு வீட்டிலும் அங்கு வாழ்பவர்களின் எண்ணங்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.இந்த எண்ணங்கள் ஜீவனற்றவையல்ல:ஜீவத் துடிப்பு மிக்கவை;சிலந்தி பின்னுகிற வலைகளைப் போல நமது எண்ணங்கள் விரிந்து பரவுகின்றன.எதிர்மறையான எண்ணங்களுக்கு பதிலடி கொடுக்கின்றன.ஆக்கபூர்வமான எண்ணங்களுக்கு வரவேற்பு கொடுக்கின்றன.

ஒரு வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே நிறைந்திருந்தால் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பல்வேறு துன்பங்கள் நேர்கின்றன.உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.எதிர்மறை எண்ணங்களை விலக்குவதற்காக பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.நல்லெண்ணங்களை நிரப்புவதே சிறந்த பரிகாரமாகும்.*


ஒருவர் நம்பினாலும் சரி,நம்பாவிட்டாலும் சரி,ஏற்றுக்கொண்டாலும் சரி,ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி எண்ண அலைகளின் தாக்கத்திலிருந்து தப்பவே முடியாது.ஒவ்வொரு வீட்டிலும் எண்ண அலைகள் மிதந்து கொண்டே இருக்கின்றன.


வீடு “கடாக்க்ஷா” என்று அழைக்கப்படுகிறது.தயை,அருள் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும்.கிரகலட்சுமி என்றால் திருமகள் என்று பொருள்.ஒவ்வொரு வீடும் திருமகள் வாழும் இல்லமாகத் திகழ வேண்டும்.நல்லெண்ண அலைகள் எப்போதும் உலா வந்துகொண்டிருக்கும் இடத்தில்தான் திருமகள் வாசம் செய்வாள்.அங்குதான் மகிழ்ச்சி பொங்கிக்கொண்டிருக்கும்.கணவன்,மனைவிக்கிடையே பெற்றோர் குழந்தைகளுக்கிடையே பாசம் ததும்பி வழியும்.இப்படிப்பட்ட வீட்டில்தான் கிரகலட்சுமி நீங்காது உறைவாள்.
நன்றி:விஜயபாரதம்,பக்கம்30,31;1.6.12


*ஆன்மீகக்கடலின் கருத்து:

நமது வீட்டில் அழுக்குத் துணிகளை ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்க வேண்டும்;புதிய மற்றும் துவைத்து அயர்ன் செய்தவைகளை வேறொரு இடத்தில் அழகாக அடுக்கி வைத்திருக்க வேண்டும்.வீட்டில் ஒருபோதும் துர்நாற்றம் வீசக்கூடாது.


தினமும் காலையில் ஒரு முறை மற்றும் மாலையில் ஒருமுறை வீட்டை தண்ணீரால் அலசிவிட்டு,தரமான பத்தி ஒன்றை பொருத்தி வைக்க வேண்டும்.இதன்மூலமாக நல்லெண்ணங்கள் நம்மைத் தேடி வரும்.தினமும் ஒருமுறையாவது இப்படிச் செய்துவர வேண்டும்.


பத்திபொருத்திய பின்னரே,நாம் நமது கடவுளைக் கும்பிடுகிறோம்.அப்போது நமது நியாயமான கோரிக்கைகளை கடவுளிடம்கேட்கிறோம்.பத்தியிலிருந்து பரவும் நறுமணம் நமது ஆழ்மனத்தை விழிக்கச் செய்யும். விழித்திருக்கும் ஆழ்மனத்தில் நமது வேண்டுகோளை பதிய வைக்கிறோம்.இப்படி தினமும் செய்வதால்,நமது நியாயமான ஆசைகள் நமது ஆழ்மனதிற்குள் பாய்ந்து,பதிந்துவிடுகிறது.ஆழ்மனதிற்குள் எது பதிந்தாலும்,ஆழ்மனம் அதை பிரபஞ்ச மனதுக்கு அனுப்பி விடுகிறது.பிரபஞ்ச மனதுக்கு எந்த ஒரு கோரிக்கை (மனிதனிடமிருந்து சென்றாலும்) குறிப்பிட்ட காலத்துக்குள் நிறவேறிவிடுகிறது.இதுதான் நாம் நமது வாழ்க்கையில் முன்னேற உதவும் பிரார்த்தனை ரகசியம்.


இதுவேதான் சிறிது வேறுவிதமாக பிற மதங்களில் பின்பற்றப்பட்டுவருகிறது.
ஓம்சிவசிவஓம்

ஜெயா டிவியில் பைரவரின் பெருமைகள்+ நேரடி ஒளிபரப்பு!!!அண்ணாமலையில் இருந்து 12 கி.மீ.தூரத்தில் காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பெரியகுளம் என்னும் கிராமத்தில் காகா ஆஸ்ரமம் அமைந்திருக்கிறது.சித்தர்களில் மூத்தவர் காகபுஜண்டர் அவர்களின் ஆசியோடு கொல்லிமலை சித்தர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ காகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
தருமலிங்க சுவாமிகள் 1957 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்தூர் என்னும் கிராமத்தில் பிறந்தார்.இந்த கிராமத்திலிருக்கும்  ஸ்ரீதான் தோன்றி நாதர் கோவிலில் ஸ்ரீகாகபுஜண்டர் ஜோதி வடிவாய் இன்னும் சூட்சும தரிசனம் தந்தருளிவருகிறார்.
கடந்த ஆறுக்கும் மேற்பட்ட பிறவிகளில் தொடர்ந்து ஸ்ரீகாகபுஜண்டரின் அருளால் ஸ்ரீபைரவரை வழிபட்டு வந்தததால்,காகபுஜண்டர் ஜோதிவடிவில் காட்சியளிக்கும் இடையாத்தூரில்  ஸ்ரீதருமலிங்க சுவாமிகள் பிறந்து,கொல்லிமலையில் 48 நாட்கள் வீதம் 4 ஆண்டுகளுக்கும் மேலாக பைரவ பூஜைகளை விடாமல் செய்துவந்திருக்கிறார்.
சித்தர்களின் ஆசியாலும்,வழிகாட்டுதலாலும் திரு அண்ணாமலை அருகில் இருக்கும் பெரிய குளம் கிராமத்தில் ஸ்ரீகாகா ஆஸ்ரமத்தை நிறுவினார்.இங்கு பைரவர்களில் கலியுக தெய்வமாகிய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை சித்தர்கள் வழிமுறையில் நிறுவி,3.9.2010 அன்று குடமுழுக்கு செய்து திறந்துவைத்தார்.
சித்தர் வழிபட்ட பைரவர் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பைரவரைப் பற்றிய ஏராளமான ஆன்மீக ஆய்வுகள் செய்து மக்கள் நலனுக்காக பைரவ ரகசியம் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.இதற்காக  ஸ்ரீ காகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகளுக்கு இந்த மானுட உலகமே நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
இப்பேர்ப்பட்ட சிறப்புடைய ஸ்ரீகாகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் பைரவரைப் பற்றி ஜெயா டிவியில் 1.6.2012 வெள்ளி முதல் 10.6.2012 சனிக்கிழமை வரை தினமும் காலை 6 மணி முதல்  6.30 வரை உரையாற்ற இருக்கிறார்.அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிப்போம்;பைரவர் வழிபாடு செய்யத் துவங்குவோம்;
 VLC Player இருந்தால் www.livetvchannelsfree.in என்னும் இணையதளத்தின் மூலமாக ஜெயா டிவியை பார்க்கலாம்

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்:பாகம் 13கேள்வி:நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப பைரவர் வழிபாடு,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் செய்வதைப்  பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள்.இதனால்,உங்களின் வாசக,வாசகிகளுக்கு போரடிக்காதா?
பதில்:எமக்கு பைரவரைப் பற்றிய பல அரிய ரகசியங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.அவைகள் அனைத்தையும் ஆன்மீகக்கடலில் வெளியிட முடியவில்லை;அவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்களை மட்டுமே வெளியிட்டுவருகிறோம்;
இன்னும் பைரவரைப் பற்றிய பல்வேறுவிதமான தெய்வீக ரகசியங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.இருப்பினும்,அவைகளை முடிந்தவரையிலும் பின்பற்றி,அந்த பின்பற்றும் வழிமுறை சுலபமாக இருந்தால் மட்டுமே வெளியிட முடிகிறது.
நேர்மையாளர்களுக்கு உடனடி பாதுகாப்பையும்,உதவியையும் தருவது பைரவர் வழிபாடு மட்டுமே!!!
ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் மகிமைகளை நீங்கள்  உணர வேண்டுமெனில்,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது 100 நாட்கள் விடாமல் நீங்களும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்.அதன் சக்தி என்னவென்பதை அப்போதுதான் உணருவீர்கள்.
கேள்வி:அப்படியா,மிக்க மகிழ்ச்சி!!!
இருப்பினும் ஒரு சந்தேகம்.நீங்கள் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக பைரவர் வழிபாடு பற்றியும்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக எழுதி வருகிறீர்கள்.இந்த பதிவுகளை வாசித்துவிட்டு,பலர் பைரவரின் அனுக்கிரகத்தைப் பெற்றிருப்பார்கள். . . பெற்றுக்கொண்டும் இருப்பார்கள். . .
அதே போல ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தை பலர் தினமும் ஜபித்துக்கொண்டிருப்பார்கள்.அதன் மூலமாக பலருக்கு ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் சக்தியை பலர் பலவிதமாக உணர்ந்திருப்பார்கள்.
இருந்தும் கூட,நீங்கள் ஏன் அந்த அனுபவங்களை இதுவரை பதிவாக எழுதவில்லை?
பதில்:மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய,பெருமை தரக்கூடிய கேள்வியை கேட்டிருக்கிறீர்கள்.
பைரவர் வழிபாட்டின் மூலமாக கோவையில் இருக்கும் நமது வாசகிக்கு ஒருவிதமான அனுபவம் கிட்டியிருக்கும்.சென்னையில் இருக்கும் வாசகர் ஒருவருக்கு வேறுவிதமான அனுபவத்தை உணர்ந்திருப்பார்; நாமக்கல்லில் இருக்கும் நமது வாசகர் இன்னொரு விதமான அனுபவத்தையும் கண்டிருப்பார்.இவைகளை பதிவாக வெளியிட்டால்,அந்த அனுபவம் நமக்கு எப்போது கிட்டும் என்ற எண்ணமே  புதிதாக பைரவ வழிபாடு செய்பவர்களுக்கு வருமே ஒழிய,அவர்களது சொந்த அனுபவத்தை ஏற்கும் மனோபாவம் உருவாகாது.

நாமக்கல் வாசகர் கடந்த சில பிறவிகளாக பைரவ வழிபாடு செய்திருப்பார்;அவரது அனுபவம் மற்றவர்களுக்கு இந்த பிறவியிலேயே கிடைக்கலாம்;கிடைக்காமல் அடுத்த பிறவியில் கிடைக்கலாம்.

இதேபோலத்தான் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் சக்தியும்!
ஆன்மீகக்கடல் துவங்கிய சில மாதங்களில் எனது ஆன்மீக மற்றும் ஜோதிட குருக்களின் எழுத்துக்களைப்பரப்புவதில் பெருமை கொண்டேன்.


அடுத்த சில வருடங்களில் அந்த எழுத்துக்களைப் பின்பற்றியதால் ஏற்பட்ட அனுபவங்களை கேட்டு நானே பிரமித்துப்போனேன்.அப்போது அடியேன் சீடனாகும் தகுதியைப் பெற்றேன்;எனவே,என்னைத் தேடி எனது குரு வந்தார்.(பழமொழி:சீடன் தயாராக இருக்கும்போது குரு தானாகவே தோன்றுவார்!!!)


கடந்த ஓராண்டாக பைரவர் வழிபாடு,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் அனுபவம் போன்றவைகளை குருவின் அனுமதியின்றி வெளியிடுவது தவறு என்று புரிந்தது.

மேலும் இந்த தெய்வீக வழிபாட்டின் அனுபவங்களை பதிவாக வெளியிடும் போது,அது ஒரு சில பக்தர்களுக்கு மட்டுமே போய்ச் சேருகிறது.மற்றவர்கள் இதை கேலியும்,கிண்டலும் செய்கிறார்கள்.எனவே,நமது ஆன்மீகக்கடல் நடத்தும் ஆன்மீகப்பயிற்சி வகுப்புகள்,குறிப்பிட்ட கோவில்களில் நமது வாசக,வாசகிகள் வழிபாட்டுக்கு வரும்போது நேரடியாக இந்த அனுபவங்கள் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.


ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்:இதுவரை எத்தனையோ பரிகாரங்கள் செய்து களைத்தும்,ஏமாந்தும்போனவர்கள் ஆன்மீகக்கடலில் வெளிவந்திருக்கும் ஏதாவது ஒரே ஒரு பரிகாரம் அல்லது வழிபாட்டை ஓராண்டு வரை பின்பற்றினால்,அதன்பிறகு அவர்களின் பெரும்பாலான கஷ்டங்கள்,சிரமங்கள்,வேதனைகள் அடியோடு தீர்ந்துவிடும் என்பது பல நூறு வாசக,வாசகிகள் கூறும் அனுபவ உண்மைகள் ஆகும்.

யாராக இருந்தாலும் குரு அருளும்,திரு அருளும்,இறை அருளும் இருந்தால் இந்த கொடூரமான கலியுகத்திலும் நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழலாம் என்பது அனுபவ உண்மை!!!

ஓம்சிவசிவஓம்

காஞ்சி பரமாச்சாரியார் ஜெயந்தி:வைகாசி 8,அனுஷம்(ஜீன் 4)
விழுப்புரத்தில் ஜய வருடம்,வைகாசி மாதம் 8 ஆம் நாள்,அனுஷம் நட்சத்திரத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி என்ற வேத விற்பன்னருக்கும்,ஸ்ரீமஹாலட்சுமி அம்மாளுக்கும் புதல்வனாக அவதரித்தவர் காஞ்சி பரமாச்சாரியார்.
இவர் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக பிலவங்க வருடம்,சித்திரை மாதம் 27 ஆம் நாள் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,8.4.1994 அன்று முக்தியடைந்தார்.இன்றும் இந்துக்களாகிய நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.
பெரியவர் ஒரு முறை சம்ஸ்க்ருத கல்லூரியிலிருந்து மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.லஸ் கார்னரில் இவருக்கு கருப்புக்கொடி காட்டி பழிப்பதற்கென்று நாத்திகக் கூட்டம் கூடியிருந்தது.(அந்த முட்டாள் கூட்டத்துக்குத் தெரியாது:காஞ்சிப்பெரியவர் தான் தமிழ் பண்பாடுதான் இந்துப்பண்பாடு என்பதைக் கண்டறிந்தார் என்று! தமிழினத்தின் ஆன்மீக அப்பா காஞ்சிப்பெரியவர் தான் என்பது தெரியாது)
பெரியவருக்கு எதிரே வந்து கறுப்புக்கொடியை உயர்த்தி,  ‘ஒழிக,ஒழிக சங்கராச்சாரியார் ஒழிக’ என்று அக்கும்பல் கோஷமிட்டது.அதைக் கேட்டுக்கொண்டே வந்த பெரியவர் நகரவில்லை;அவர் ஓடிவிடுவாரென எதிர்பார்த்த கும்பல் கத்தி கத்தி களைத்து ஓய்ந்தது.அதற்கென்றே காத்திருந்தவர் போல,அவர்களை அருகில் வரச் சொன்னார்.கும்பலுக்கு உள்ளூர பயம் வந்துவிட்டது.அவர் மகிமை அவர்களுக்கும் தெரியும்.ஆதலால் ஏதேனும் சபித்துவிடுவாரோ என்ற பயம்தான்.அதை தெரிந்துகொண்டு, “பயப்படாமல் அவர்களை வரச் சொல்லு” என்று மறுபடியும் சொன்னார்.எல்லோரும் அருகில் வந்தவுடன் இரு கைகளையும் தூக்கி, “நீங்க எல்லோரும் க்ஷேமமாக இருக்கணும்” என்று ஆசிர்வதித்தார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அந்நிய மதத்தவர்களுக்கு அறிவுரை


ஒரு பிள்ளையார் கோவிலில் பூப்பந்தலெல்லாம் போட்டு,மிக அழகாக அலங்காரம் செய்த அந்த புகைப்படங்களை ஒருவர் காஞ்சிப் பெரியவர் பார்வைக்கு எடுத்து வந்தார்.”இதற்கு  உபயம் செய்தவர் ஒரு இஸ்லாமியர்!” என்றார்.
“அந்தப்பெரியவரை முடிந்தால் என்னை வந்து பார்க்கச் சொல்லு” என்றார் காஞ்சிப் பெரியவர்.

இஸ்லாமியப் பெரியவர் காஞ்சிப்பெரியவரின் வார்த்தைகளைக் கேள்விப்பட்டு உடனே காஞ்சி மடத்துக்கு வந்தார்.

 “இப்படி மத வேற்றுமை பாராட்டாமல் நல்ல காரியங்களுக்கு உதவுகிறீர்கள்.ஆனால்,உங்கள் மத அனுஷ்டானங்களை விடாமல் செய்து வருகிறீர்களா?” என்று காஞ்சிப்பெரியவர் அவரிடம் கேட்டார்.
அதற்கு அவரும், “எனக்கு நம்பிக்கை உண்டு; முடிந்தவரை விடாமல் பண்ணுகிறேன்” என்றார்.
எத்தனை முறை தொழுகை செய்வீர்கள்?
“ஐந்து முறை” என்றார்.

இல்லை;உங்களுக்கு ஆறுகாலத் தொழுகை உண்டு.உங்கள் நபிகள் நாயகம் அப்படித்தான் பண்ணி வந்தார்.ஆறாவது நடுநிசியில் பண்ண வேண்டிய தொழுகை.அந்த நேரம் ஜனங்கள் தூங்கிவிடுவதால் விட்டுப் போய்விட்டது போலும் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி அவருடைய மதத்தைப்பற்றிய உண்மையை எடுத்துரைத்தார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


இந்து சமுதாயத்தில் பிளவு,இந்த நாட்டுக்கே அழிவு!


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1950 களின் தொடக்கத்தில் ஜாதி  மோதல் நடந்தது.பெரிய அளவில் வன்முறை வெடித்தது.இந்தச் செய்தியைப் படித்த பெரியவர் ‘இந்து சமுதாயத்தின் இரு சமூகங்கள் மோதிக்கொள்வது நாட்டுக்கு நல்லதல்ல’ என்பதை உணர்த்துவதற்காக, வன்முறையால் பாதிக்கப்பட்ட இரு சமூகத்தாருக்கும் வேட்டி,சேலை,அரிசி,பருப்பு என்று நிவாரணப்பொருட்களை உடனடியாக அனுப்பி வைத்தார்.அதன் பிறகே ஆன்மீகக்கடமைகளை அன்றைய தினம் ஈடுபட்டார்.


இந்து ஒற்றுமைக்காக பாடுபடும் இந்து இயக்கங்களின் பலம்  இருமடங்கானால் இந்தியாவில் ஊழல்,ஒழுங்கீனம் போன்றவை காணாமல் போய்விடும் என்பதால் ஒவ்வொருவரும் இந்து தர்மத்தின் பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றார் பரமாச்சாரியார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


தமிழ் மொழியிலே கூட காஞ்சிப் பரமாச்சாரியாருக்கு இருக்கும் அறிவு முத்தமிழ் அறிஞர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.
ஒரு முறை கி.வா.ஜ.விடம், “தமிழ் என்றால் என்ன?,சமஸ்க்ருதம் என்றால்,செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்.அப்படியானால் தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?” என்று பெரியவா கேட்டார்.
அதற்கு கி.வா.ஜ.அடக்கமாக, “நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன்” என்றார்.
“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது.இந்த எழுத்து வரக்கூடிய எந்தச் சொல்லும் அழகும்,இனிமை அவற்றைக் குறிப்பதாக இருக்கும்.மழலை,குழல்,அழகு,குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தமானவை.ஆகவே, ‘ழ’வைத் தம்மிடம் வைத்திருக்கும் தமிழ்(தமி+ழ்)என்று சொல்லலாமா?” என்று விவரித்தார்.உடனே,கி.வா.ஜ. ‘இதைவிடப்பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்’ என்கிறார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


ஆன்மீகக்கடலின் கருத்து: தமிழ்ப் பண்பாடுதான் இன்றைய இந்துப்பண்பாடு என்பதற்கான ஆதாரங்கள் தெய்வத்தின்குரல் என்ற புத்தகம் முழுவதும் நிரம்பியுள்ளன.தெய்வத்தின் குரல் என்பது காஞ்சிப் பரமாச்சாரியார் அவர்களின் பேச்சுக்களின் தொகுப்பு ஆகும்.


ஆக,தமிழ்,தமிழ் உணர்வாளர்கள் பிராமணரை எதிர்ப்பதும்,சமஸ்க்ருதத்தை வெறுப்பதும்,சங்கராச்சாரியாரை அவமதிப்பதும் பெற்ற தாயை இழிவுபடுத்துவதற்குச் சமம் என்பதே எனது கருத்து.


தமிழ் உணர்வாளர்கள் இப்படி எடுப்பார்க்கைப்பிள்ளையாகப் போனது ,அவர்களுக்கு இன்னும் தமிழின் தொன்மை பற்றிய போதிய ஞானமில்லை என்பதையே காட்டுகிறது.
சரியா?


ஓம்சிவசிவஓம்

ஆவியுலகத்தொடர்புகளாலும்,ஆறுமுகக்கடவுள் மூலமாக அருள்வாக்கு சொன்னதாலும் நான் உணர்ந்த உண்மைகள்!!!


1.மனப்பூர்வமான பிரார்த்தனை மகத்தான சக்தி கொண்டது.மலையைக்கூட அசைக்கக்கூடியது.பிரார்த்தனை மனிதரின் வாழ்க்கையையே மகத்தான முறையில் மாற்றி அமைக்கக்கூடியது.
2.பிரார்த்தனைகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் ஆவிகளுக்கும் (இறந்துபோன நமது முன்னோர்கள்,நண்பர்கள்) தேவைப்படும் அருமருந்தாகும்.
3.ஆலயத்திலுள்ள விக்கிரகங்களிலும்,நமது வீட்டின் பூஜை அறையில் உள்ள திரு உருவப் படங்களிலும் தெய்வங்கள் வசிக்கவே செய்கின்றன.அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் உளப்பூர்வமான பக்தியையும்,வழிபாட்டையும்தான்!!!
4.நாம் கடவுளைக் காண வேண்டும்;பேச வேண்டும் என்று நாம் விரும்புவது போல அவரும் நம்மோடு பேச விரும்புகிறார்.
ஆதாரம்:ஆவி உலகத் தொடர்பும்,ஆறுமுகக்கடவுளும்,பக்கங்கள் 140,141.
ஓம்சிவசிவஓம்

பாவத்தின் சம்பளம் மரணம் என்பது சரியா?


ஆறுமுகக்கடவுளிடம் ஒரு பெரியவர் கேட்டார்:பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேறு மதத்தினர் கூறுகிறார்களே? பாவம் செய்யாதவனும் மரணம் அடைகிறானே? இது எப்படி?
அதற்கு ஆறுமுகக்கடவுள்,
பாவத்தின் சம்பளம் மரணமல்ல;மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.
பாவத்தின் சம்பளம் துன்பம்,துயரம்,கவலை,கஷ்டம் ஆகியன.பாவத்தின் பரிகாரம் பக்தி,பரிவு ஆகியன.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கடவுளே ஏன் எனக்கு மட்டும் இவ்வ்வ்வளவு கஷ்டங்களைத் தருகிறாய்?
மனித வாழ்வில் நிகழும் இன்ப,துன்பங்கள்,லாப நஷ்டங்கள்,செல்வச் செழிப்பு,வறுமை போன்றவைகளுக்கு அவனவன் முற்பிறவிகளில் செய்த கர்மவினையே! அந்த கர்மவினைகளே அவனை/ளை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டதேயன்றி கடவுள் காரணம் அல்ல;கடவுள் என்பது வெறும் சாட்சிப் பூதமே!
அப்படியானால் ஏன் கடவுளை வணங்க வேண்டும்?எப்படியும் கர்மவினைகள் நம்மை இம்சித்து சித்தரவதை செய்யத் தான் போகின்றன?
கடவுள் பக்தி கர்மவினைகளின் கடுமையைக் குறைக்கும்;கரைக்கும்;தாங்க முடியாத கஷ்டங்களைத் தாங்கக் கூடியதாக மாற்றும்.அவ்வளவே!
அதேபோல ஒருவனுக்கு நல்ல நேரம் வரும்போது கடவுள் அருள் அவனுக்கு உயர்ந்த நிலையை  அளிக்கும்.
நன்றி:ஆவியுலகத் தொடர்பும்,ஆறுமுகக்கடவுளும்.பக்கங்கள்56,84,85.
ஓம்சிவசிவஓம்

ஆலயத் திருப்பணிக்கு உதவுவோமா?


உங்கள் குழந்தைகளை ஏன் தமிழ்மீடியத்தில் படிக்க வைக்க வேண்டும்?


1980 முதல் இன்றுவரையிலும் மெட்ரிக் பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன;இது வளர்ச்சி என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்;ஆனால்,நமது இந்து தர்மத்துக்கும்,நமது குடும்ப அமைப்புக்கும் எதிரான வளர்ச்சி என்பதை நாம் சுலபமாக மறந்துவிடுகிறோம்.எப்படி என்பதைப் பார்ப்போம்.

என் புள்ள இங்கிலீஷ் மீடியத்துல படிக்குது என்று பெருமையடிப்பதற்காகவே நாம் நமது செல்லக் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளிலும்,(தற்போது) இண்டர்நேஷனல் ஸ்கூல்களிலும் பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாகக் கட்டி பள்ளியில் சேர்க்கிறோம்;ஆனால்,அந்த பள்ளிக்குள் நடப்பது என்ன?


ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து வேலைக்கு வந்திருக்கும் ஆசிரியை,நமது தெரு அல்லது வீட்டு வாசலில் இருந்தே பள்ளிக்குச் செல்ல வாகன வசதி(நாங்களே எங்க பிள்ளையை பள்ளியில் தினமும் கொண்டு வந்துவிட்டு,பள்ளிமுடிந்ததும் அழைத்துச் செல்கிறோம் என்று சொன்னாலும்,ட்ரான்ஸ்போர்ட் ஃபீஸை கட்டித்தான் ஆகணும்),வெப்பம் மிகுந்த நம் நாட்டிற்கு சிறிதும் பொருந்திவராத டை மற்றும் ஷீ,இறுக்கமான ஆடைகள் மற்றும் விளையாட்டுக்கள்
.முதல் நாளிலிருந்தே நமது தாய்மொழியிடமிருந்து பிரித்து செல்லும் கல்வி முறை;சரி பரவாயில்லை என்று விட்டுக்கொடுப்போம்; (நாம் தான் சகிப்புத்தன்மையோடு வளர்க்கப்பட்டிருக்கிறோமே?)

மூன்று அல்லது ஐந்து   ஆண்டுகளுக்குள் எத்தனை குழந்தைகள் நான் இனிமேல் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க போக மாட்டேன் என்று படிப்பை பாதியில் விட்டவர்கள் எத்தனை ஆயிரம்பேர்கள் தெரியுமா?

அல்லது

மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் இங்கிலீஷ் மீடியத்திலிருந்து தமிழ் மீடியத்துக்கு மாறியபின்னர், தமிழில் வார்த்தை எழுத தடுமாறும் நமது குழந்தைகளின் மனநிலை எவ்வளவு கொடூரம் தெரியுமா?


குழந்தைகளுக்கான மனோதத்துவம் சொல்வது என்ன?

எந்த குழந்தையாக இருந்தாலும் அதன் ஐந்து வயது முதல் 12 வயது வரையிலும் அதன் தாய்மொழியில் ஆரம்பக் கல்வி கற்பது அவசியம் ஆகும்.இப்படி ஆரம்பக் கல்வியை தனது தாய்மொழியில் கற்பதால்,அந்த குழந்தையின் தாய்மொழியில் சரளமாகப்பேசுதல்,தவறின்றி எழுதுதல்,சுலபமாக பிறர் கூறுவதைப் புரிந்துகொள்ளுதல் போன்றவை கைகூடும்.இந்த முதல் ஏழு ஆண்டுக் கல்விதான் ,ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் இயல்பான படைப்புத்திறனை வெளிப்படுத்திட உதவி செய்யும்.


அதென்ன படைப்புத்திறன்? படம் வரைதல்,ஓட்டப்பந்தயம்,கட்டுரை எழுதுதல்,கதை எழுதுதல்,கவிதை எழுதுதல்,பாடல்களை ராகத்தோடு பாடும் திறன், மனிதர்களை ஒருங்கிணைக்கும் திறன்,எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் திறன்,நடனம் ஆடும் சாமர்த்தியம்,ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தும் திறன்(போராளி படத்தில் இடைவெளி முடிந்ததும் ஹீரோவின் பள்ளிக்கூட வாழ்க்கையை விவரிக்கும் காட்சிகள்),நகைச்சுவையாகப் பேசும் திறன்,சண்டை அல்லது வாக்குவாதத்தின் போது பயப்படாமல் அந்த வாக்குவாத தீவிரத்தை தணிக்கும் சாமர்த்தியம்,நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி,தகவல்களை தொகுத்தல்,தொகுத்த தகவல்களை ஒருங்கிணைத்தல்,ஒருங்கிணைத்த தகவல்கள் மூலம் புதிய ஆச்சரியமான உண்மைகளைக்கண்டறிதல்,புள்ளிவிவரங்களைக் கண்டறிதல்,தேடுதலில் ஆர்வம்,படிப்பதில் ஆர்வம்,கூச்சப்படாமல் எவரிடமும் பேசுதல்,தனது சந்தேகங்களை உரியவர்களிடம் தெளிவுபடுத்தும் துணிச்சல்,ஆன்மீகத்தில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்த கையோடு அதில் புதிய சிந்தனைகளை செயல்படுத்திப் பார்த்தல் என சுமார் 640 விதமான திறமைகள் இருக்கின்றன.


இப்படி எட்டாம் வகுப்பு வரையிலும் தாய்மொழிக்கல்வியில் பயின்ற குழந்தைகள்,தனது 12 முதல் 15 வயது தாய்மொழியின் துணையைக் கொண்டு ஆங்கிலம் மற்றும் வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளும் மனநிலைக்குத் தயாராகிவிடும்.15 வயது முதல் 25 வயது வரையிலான காலகட்டத்தில் சுயமாக சிந்தித்துச் செயல்படும் திறனும் வந்துவிடும்.ஆங்கில மீடியத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே படிக்கும் குழந்தைகளுக்கு மேற்கூறிய திறன்கள் அவ்வளவாக வளர்வதில்லை;அவர்கள் எதையும் சமாளிக்கும் திறனை மட்டுமே பெற்றுவிடுகிறார்கள்.நமது வட்டாரத்து/சமுதாய திருவிழாக்கள் மீதான உள்ளார்ந்த மதிப்பீட்டை உணர்ந்து கொள்வதில்லை;நமது இந்து தர்ம சம்பிரதாயங்களுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞான ரகசியங்களை உணர்வதில்லை;விளக்கிச் சொன்னாலும் நம்புவதில்லை;வேலைவாய்ப்புச் சந்தையில் இவர்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை;ஏனெனில்,இவர்கள் நுனிப்புல் மேய்ந்தவர்களாகவும்,தன்னம்பிக்கையற்றவர்களாகவும்,தனது பெற்றோரை மதிக்கத் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.இது எந்த அளவுக்கு உண்மை என்பதை வாசக,வாசகிகளாகிய உங்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.
உங்களின் கமெண்டுகளை எதிர்பார்க்கிறேன்.


எனவே,இந்த கல்வி வருடத்திலிருந்து உங்களின் குழந்தைகளை பள்ளிப்படிப்புக்கு தமிழ் மீடியத்தில் சேருங்கள்!!!

ஓம்சிவசிவஓம்


சித்திரை பவுர்ணமியன்று சதுரகிரியில் நமது குருவின் வழிகாட்டுதல்கள்
5.5.2012 சனிக்கிழமையன்று நந்தன ஆண்டின் சித்திரா பவுர்ணமி நாள் வந்தது;இந்த நாளில் சித்தர்கள்,சிவ வழிபாட்டின் சானித்தியம் அறிந்தவர்கள் அனைவரும் சதுரகிரிக்கு வருகை தந்தனர்;அப்படி வருகை தந்தாலும்,அந்த சித்ரா பவுர்ணமி வழிபாட்டை எப்படிப் பின்பற்ற வேண்டும்? என்பதைப் பற்றி நமது ஆன்மீக குரு,ஆன்மீகத் தென்றல் திரு.சிவமாரியப்பன் அவர்கள் சதுரகிரிக்கு வருகை தந்திருந்த நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு ஆன்மீகப்  பயிற்சியளித்தார்; நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்ட அறிவிப்பின் படி,நவதானியங்கள்,டயமண்டு கல்கண்டு போன்றவைகள் சதுரகிரியின் வனப்பாதையில் தூவப்பட்டன;பாயாசம் செய்யத் தேவையான பொருட்கள் அங்கிருக்கும் கஞ்சிமடத்தில் கொடுக்கப்பட்டு,பிரசாதம் செய்யப்பட்டு,சதுரகிரி சுந்தரமகாலிங்கத்துக்கு படையலாக்கப்பட்டன;உலக நன்மைக்காக பூஜை செய்யப்பட்டு,அனைவருக்கும் அந்த பிரசாதம் பகிர்ந்தளிக்கப்பட்டன.மேலும் ஒரு சில ஆன்மீக அதிசயங்களும்,சித்தர் தரிசனமும் சிலருக்குக் கிடைத்தன .ஓம்சிவசிவஓம்

ஆண்டுக்கு ஒருமுறை வரும் அபூர்வமான ரிஷபப் பிரதோஷமும்,ஆண்டுக்கு சிலமுறை வரும் சனிப்பிரதோஷமும் 2.6.2012 அன்று வருகிறது!!!


நித்தியப் பிரதோஷம் என்பது தினசரி மாலை 4.30 முதல் 6 மணி வரையில் வரும் நேரம் ஆகும்.
மாதாந்திரப் பிரதோஷம் என்பது மாதம் இருமுறை வருவது ஆகும்.
சனிப்பிரதோஷம் என்பது சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் ஆகும்.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பிரதோஷம் சனிக்கிழமை நிகழ்ந்ததால்,சனிப்பிரதோஷம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக சைவ வழிபாடு செய்பவர்களுக்கு இருக்கிறது.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயத்துக்குச் சென்றால்,ஐந்து ஆண்டுகளுக்கு தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியப்பலன்கள் கிட்டும் என்பது முன்னோர்கள் வாக்கு!!!
இந்த நந்தன வருடத்தில் வரும் முதல் சனிப்பிரதோஷம்,ரிஷபப்பிரதோஷமாகவும் அமைந்திருக்கிறது. ரிஷபராசியில் ரவி எனப்படும் சூரியன் இருக்கும்போது ஏற்படும் பிரதோஷமே ரிஷபப்பிரதோஷம் ஆகும்.

ரிஷபராசியில் சூரியன் இருந்து,சனிக்கிழமையன்று வந்தால் பிரதோஷம் வந்தால்,அந்த பிரதோஷம் மிகமிகமிக அரிய அபூர்வமான பிரதோஷம் ஆகும்.பல ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட ரிஷப சனிப்பிரதோஷம் வரும் என நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இந்த ரிஷபச் சனிப்பிரதோஷத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன?
அத்தர்,சந்தனாதித்தைலம் போன்றவைகளையும்,சந்தனக்காப்புக்குத் தேவையான சந்தனத்தையும் ரிஷபவாகனமாகிய நந்திபகவான் அபிஷேகத்திற்குத் தர வேண்டும்.மேலும்,அபிஷேகம் நிறவடைந்ததும்,முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை ஒன்றை (நமது குடும்பத்தின் சார்பாக) நந்திபகவானுக்கு அணிவிக்க வேண்டும்;அபிஷேகம் நிறைவடைந்தப் பின்னர்,தாமரை மலர்களின் மடல்களால் நம் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு அர்ச்சிக்க வேண்டும்;
இவ்வாறு செய்வதால்,நந்திபகவானின் முழுமையான அருளாசியைப் பெறலாம்;இந்த சனிப்பிரதோஷ நாளன்று மட்டுமல்ல;எந்த பிரதோஷ நாளாக இருந்தாலும்,இந்த முறைப்படி வழிபாடு செய்ய பிரதோஷத்தின் முழுப்பலன்களையும் நாம் பெற முடியும்.

எந்த ராசியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,இப்படிப்பட்ட பொருட்களை வாங்கிட முடியாத சூழ்நிலை (எப்போதாவது) ஏற்பட்டால்,பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும்,சிவாலயத்தின் எதாவது ஒரு பகுதியில் மஞ்சள் துண்டினை விரித்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அதில் அமர்ந்து,இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்து,கைகளை மடக்கி ஓம்சிவசிவஓம் ஜபிப்பதே போதுமானது;பல வேலைப்பளுவின் காரணமாக இந்த ஒன்றரை மணி நேரத்துக்கு ஜபிக்க முடியாவிட்டால்,கடைசி அரை மணி நேரமான மாலை 5.30 முதல் 6.00 மணி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;(ஒரு வேளை கோவிலில் ஜபிக்க இயலாதவர்கள் இதே நேரத்தில் நமது வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்!!!)
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!

ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்

நாம் பிறருக்குச் செய்யும் பிரார்த்தனையின் சக்தி!!! ஆன்மீக ஆதாரங்களுடன்!!!


எனது பால்ய நண்பனைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.அவன் பெயர் ராஜேந்திரன்.மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவன்;சந்தர்ப்ப சூழ்நிலையால் மது,மாது,சூது என்று அனைத்து தீயப் பழக்கங்களுக்கு ஆளாகி,படிப்பு பாதியிலேயே நின்றுவிட்டது.இவனது பெற்றோர்கள்,இவனுக்கு திருமணம் செய்து வைத்தால்,திருந்திவிடுவான் என நம்பி,திருமணம் செய்துவைத்தனர்.ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையான பின்னரும்,அவன் திருந்த நான் செய்த முயற்சிகள் பலன்  தரவில்லை;இதற்கிடையில் அவனது தீயப்பழக்கங்களின் விளைவாக உடல்நலம் கெட்டு துன்பப்பட்டான்;இதனால் ஒரு நாள் அவனே மனம் வெறுத்து விஷம் குடித்து தற்கொலையும் செய்துகொண்டான்.


எனது ஆவியுலகத் தொடர்பின்போது ஒரு நாள் அவன் என்னிடம் பேசினான்; “நீ பகவான் சாயிபாபாவிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால் எனக்கும் பாப விமோசனம் கிடைத்தது.என் பெயரையே குறிப்பிட்டு எனக்காக பிரார்த்தனை செய்து வா” என்று என்னிடம் வேண்டினான்.
அவ்வாறே நானும் செய்து வந்தேன்.நான் செய்யும் பூஜைகளின் பலனை அவனுக்கு அர்ப்பணித்தேன்.சில காலம் கழித்து என் நண்பனின் ஆவி பேசியபோது, “நான் இப்போது பாவலோகத்திலிருந்து முற்றிலும் வெளியேறி புண்ணியலோகத்துக்கு புதிய சக்தியோடு மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கிறேன்” என்று உற்சாகமான குரலில் குறிப்பிட்டான்.


கேரளாவில் எங்களுக்கு ஏலக்காய் தோட்டம் இருக்கிறது.ஒரு நாள் தோட்டத்தில் நடந்து சென்ற போது திடீரென மழை பிடித்துக்கொண்டது.அப்போது என் நண்பன் ராஜேந்திரனை நினைத்து பிரார்த்தனை செய்தேன்.என்ன ஆச்சரியம்! உடனே மழை நின்றுவிட்டது.அடுத்த முறை என் நண்பனை அழைத்து கேட்டபோது, “அன்று நீ என்னை நினைத்தவுடன் மேகங்களைத் திசை திருப்பி உன்னை மழையில் நனையாமல் காப்பாற்றியது நான் தான்.இதற்கு இறைவன் உதவி செய்தார்” என்று கூறினான்.
அதற்குப் பிறகு என் மனதில் ஒரு விசித்திரமான ஆசை தோன்றியது.பூஜை அறையில் பகவான் பாபாவிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.


“சுவாமி,தாங்கள் என் நண்பனைப்  பாவலோகத்திலிருந்து விடுவித்து புண்ணிய லோகவாசியாக்கினீர்கள்.அதிலிருந்து இன்னும் உயர்ந்த நிலையை அவனுக்கு அளிக்க வேண்டும்”
சில காலம் கழித்து ராஜேந்திரன் பேசியபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.”நான் இப்போது தேவதையாக மாறப்போகிறேன்.அதற்கான சக்தி  எனக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.பிறகு உன்னை சந்திக்கிறேன்” என்று கூறினான்.


வீரராஜேந்திரப் பெருமானாக மாறிய ராஜேந்திரன்
அதன்பிறகு சென்ற ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று,மறுபடியும் பேசினான். “எல்லாம் முழுமை அடைந்துவிட்டன.இன்று முதல் யாம் வீர ராஜேந்திரப் பெருமான் என்ற பெயரில் காவல் தெய்வமாகி விட்டோம்.எம்மை வணங்கி வழிபடுபவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்திடுவோம்.ஆசிகள்” என்று கூறினான்.இன்று வரையிலும் பலவிதங்களில் வீரராஜேந்திரப்பெருமான் எனக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறருக்காக நாம் செய்யும் பிரார்த்தனைகள் வலிமை வாய்ந்தவை;உடனே பலன் தரக்கூடியவை என்பதை இதன் மூலமாக நான் உணர்ந்தேன்.

ஆதாரம்:ஆவி உலகத் தொடர்பும்,ஆறுமுகக்கடவுளும் பக்கம்23,24,25.

ஒரு கேள்வி பதிலும்;இந்த செல்யுகத்தில் நமது சிந்தனைக்கு!!!பரதனாரே! எப்பேர்ப்பட்ட விசுவாமித்திரரே மேனகையின் அழகில் சறுக்கவில்லையா?

பதில்:எவ்வளவு பெரிய தவயோகியாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் உதாரணம் ஆகும்.(ஆண் என்பது பஞ்சும்,பெண் என்பது நெருப்பும் போன்றது)பொதுவாக கீழே வீழ்ந்த பலர் எழுந்ததே இல்லை;ஆனால்,விசுவாமித்ரர் எழுந்தது மட்டுமல்ல; மந்திரங்களுக்கெல்லாம் தாய் மந்திரமாகிய காயத்ரி மந்திரத்தை தனது தவ ஆற்றலால் இந்த உலகுக்கு வழங்கினார்;(நன்றி:விஜயபாரதம்,25.5.12)

நமது சிந்தனைக்கு ஆன்மீகக்கடலின் கருத்து:

அது மட்டுமா? காயத்ரி மந்திரத்தின் சக்தியால் புதியபிரபஞ்சத்தையே உருவாக்கினார்; புதிய பிரம்மாவையும் படைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன;இந்த  புராணச் செய்தி உண்மை என்பதை இன்றைய நவீன வானியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன.பூமியின் தெற்குப்பகுதிக்கு நேர் மேலே இருக்கும் விண்மீன் கூட்டங்கள் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக உதயமாகியிருக்கின்றன என்பதே அந்த வானியல் ஆராய்ச்சியின் முடிவாகும்.

மனிதன் ஒவ்வொருவரும் தனது மன சக்தியை ப்ராணயாமம்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் மூலமாக அதிகப்படுத்திக்கொண்டே சென்றால்,அடுத்த சில வருடங்களில் பிரபஞ்சத்தில் மறைந்திருக்கும் அஷ்ட கர்ம சக்திகளும் நமக்குக்கைகூடும்;அப்படிக்  கைகூடும்போது மனதில் காமகுரோதம்(வக்கிர அல்லது தீய எண்ணங்கள்) அதிகரிக்கும்;

அனுபவப்படி, சில மாதங்கள் நாம்  ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்தாலே தீய அல்லது வக்கிர எண்ணங்கள் தலைதூக்கவே செய்யும்.அந்த தீய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்குப்பதிலாக,மந்திர ஜபத்தில் கவனத்தைச் செலுத்தப் பழகுவது அவசியம்.ஏனெனில்,கலியுகத்தில் மாயை என்னும் சக்தி நம்மை ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கக்  கூடியது.இந்த ஒரே ஒரு படியைத் தாண்டிவிட்டால் போதும்;அப்புறம் ஆன்மீக வாழ்க்கையில் மள மளவென்று முன்னேற ஆரம்பித்துவிடுவோம்;

தவறு அல்லது சபலம் உண்டாவதற்கு நம்மிடம் இருக்கும் காரணிகள் எவைஎவையோ(சேமிக்கப்படும் மெமரிகார்டுகள்,தவறான வழிகாட்டி நமது சேமிப்பு/சம்பளம்/தயாளகுணத்தை காலிசெய்யும் நண்பன்/அலுவலக நட்பு,டிவிடிக்கள்,தேவையற்ற மின் அஞ்சல்கள்,சேகரிப்பட்ட மனதைக்கெடுக்கும் படைப்புகள்) அவை அனைத்தையும் நம்மிடமிருந்து நீக்கிவிடவேண்டும்;அப்படி நீக்கிவிட்டாலே நாம் மாயையின் சக்தியிடமிருந்து விலகிச் செல்ல முடியும்.

சித்தர்களின் தலைவராகிய அகத்தியரின் போதனைப்படி,நமக்கு ஒரு சிறந்த ஆன்மீக குரு அமைய நமது முந்தைய 3000 பிறவிகளை சீர்திருத்த வேண்டும்;அப்படி இல்லாமல்,விரைவாக நமது ஆத்ம சக்தியை சீர்திருத்தவேண்டுமெனில், நாம் இந்த ஜன்மத்தில் செய்ய வேண்டியது என்னென்ன தெரியுமா?


1.அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.ஏன் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்? ஏன் எனில்,நாம் பலவிதமான ஆன்மீக சேவைகள் அடிக்கடி செய்து வருவோம்;உதாரணமாக நமது கஷ்டங்கள் நீங்கி,நமது லட்சியங்கள் நிறைவேற பிரதோஷம் தோறும் சிவாலயம் செல்வோம்; தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்துக்கொண்டு வருவோம்;அல்லது தினமும் அன்னதானம் செய்வோம்;
இவையெல்லாம் செய்தும் கூட,நமக்கு ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது.அதற்கு நாம் மட்டுமெ காரணம் ஆவோம்.


ஆமாம்,ஆட்டுக்கறி,ஃப்பீF,சிக்கன் 66 என்று நோக்கம் போல சாப்பிட்டுக்கொண்டிருந்தால்,நமது ஆத்மபலம் தள்ளாடிக்கொண்டிருக்கும்;நாம் செய்த இறைவழிபாடுகள்,புண்ணிய காரியங்களுக்கான பலன்கள் சூட்சுமமாக நாம் வாழும் இடத்துக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வரத் துவங்கும்;அப்படி வரும்போதெல்லாம் நாம் அசைவம் சாப்பிடிருப்போம்;இதனால்,நமக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து நல்லவைகளும் நமது வீட்டு வாசலிலேயே நின்றுவிடும்.நாம் ஜோதிடரையும்,பரிகாரம் செய்தவரையும் திட்டிக்கொண்டே இருப்போம்;


தவிர,இன்னொரு குழுவினர் இருக்கிறார்கள்.எனது மகன்/ள் அசைவம் சாப்பிடாமல் இருக்கவே மாட்டான்/ள்.நாங்க என்ன செய்யுறது?

ஆமா மேடம்,உங்கள் குழந்தை பிறக்கும்போதே அசைவம் தான் சாப்பிடுவேன் என்ற கொள்கையோடுதான் பிறந்ததா? இல்லையே? நீங்கள் தான் குழந்தைப்பருவத்திலேயே அவர்களுக்குப் பழக்கப்படுத்திவிடுகிறீர்கள்.

ஒருவேளை அப்படி மீளமுடியாதவர்கள் தினமும் உணவுக்காளான் எடுத்துச் சாப்பிடவேண்டியதுதான்.வேறு வழியே இல்லை;

2.நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியபின்னர், தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.ஒரு நாளுக்கு 45 நிமிடம் வரை ஒதுக்க முடிந்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யலாம்.இப்படி தொடர்ந்து  3 ஆண்டுகள் வரையாவது வழிபட்டு வந்தால்,இந்த பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் நமக்கு மிகச் சிறந்த ஆன்மீக குரு  கிடைத்துவிடுவார்;


எனக்குத்தெரிந்து,ஒருவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டுக்கொண்டு வருகிறார்.இப்போது அவர் சிவாலயத்துக்குச் சென்றால்,கால பைரவரின் சன்னிதியில் மணிக்கணக்காக உட்கார்ந்து மனப்பூர்வமாக வேண்டுகிறார்.அதுவும் ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் அவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து மனப்பூர்வாக ஸ்ரீகாலபைரவரிடம் முறையிட்டுக்கொண்டிருக்கிறார்.இப்படி இவர் 4 மாதங்கள் செய்து வந்ததும்,அவரது கோரிக்கைகள் நிறைவேறத் துவங்கியிருக்கின்றன.வீட்டிலோ ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடும் செய்து வருகிறார்.மாதம் ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்குச் செல்வதோடு சரி;எம்மிடம் அவர் வாங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவை குலதெய்வம் கோவிலில் வைத்து ,தனது பெயருக்கு குலதெய்வத்திடம் அர்ச்சனை செய்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்கியிருக்கிறார்.


3.சிலருக்கு பைரவர் வழிபாடு உகந்ததாக இருக்காது;அவர்கள் ஓம்சிவசிவஓம்அல்லது ஓம்ஹரிஹரிஓம் மந்திரத்தை ஒரு நாளுக்கு  ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது ஓராண்டு வரையிலும் ஜபித்துவர வேண்டும்.100 நாட்கள் மந்திரம் ஜபித்தபின்னர்,நமது வாழ்க்கையில்,சிந்தனையில்,செயல்பாட்டில் மகத்தான மாறுதல்கள் வெளிப்படும்;நமது கடந்த கால,முன் ஜன்ம,எதிர்கால பாவ வினைகள் சூட்சுமமாக வெளியேறுவதை மானசீகமாக உணருவோம்;அடுத்து வரும் வருடங்களில் நாம் செய்ய இருக்கும் பாவங்களையும்,கர்ம வினைகளையும் தடுத்து நம்மைக் காக்கும் சக்தி ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்துக்கு உண்டு என்பது இப்போது உணர்ந்திருக்கிறோம்.(ஓம்ஹரிஹரிஓம் ஜபிப்பவர்கள் தங்களுடைய அனுபவங்களை அவ்வளவாக பகிர்ந்து கொள்ளவில்லை;தயவு செய்து தெரிவிக்கவும்)


நமது மனதில் இருக்கும் வக்கிர எண்ணங்கள்,தீய எண்ணங்களை நீக்கும் சக்தி  ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்துக்கு உண்டு.நாம் நினைப்பதையெல்லாம் நடத்திக்காட்டும் சக்தி நாம் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டு வரையிலும் அல்லது 1,00,000 தடவைக்குமேல் ஜபித்தப்பின்னர் நமக்குக் கிட்டும்.10,00,000 தடவைக்கு மேல் ஓம்சிவசிவஓம் ஜபித்தாலே இந்தப் பிறவியிலேயே நமக்குப் பொருத்தமான ஆன்மீக குருவை நாம் அடைவோம்;(எனது குருவின் வார்த்தையை மீறி இந்த ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்;என்ன செய்வாரே?)

ஓம்சிவசிவஓம்

இந்திய வல்லரசின் விமான வியூகங்கள்இந்த நூற்றாண்டின் முதல் மெகா ஆயுத கொள்முதல் செய்த நாடு நம் இந்தியாதான்!!!

இந்திய ராணுவத்தில்  கொஞ்சமே பலவீனமான பகுதியாக இந்திய விமானப்படைப்பிரிவைச்  சொல்லலாம்(இப்படி எனது நாட்டின் ராணுவத்தைப் பற்றிச் சொல்லவே  ஆன்மீகக்கடல் வெட்கப்படுகிறது;வேதனைப்படுகிறது)அடிக்கடி கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் மிக் ரக விமானங்களுக்குப் பதிலாக சுகோய் 30 ரக விமானங்களை ரஷ்யாவோடு இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் செய்தது இந்தியா.ஆனாலும் சுகோய்-30,மிராஜ்-2000,ஜாக்குவார்,தேஜஸ் போன்ற இந்தியப் படைப்பிரிவின் விமானங்களை வல்லரசு நாடுகளின் போர்விமானங்களோடு ஒப்பிடும்போது,கொஞ்சம் சுள்ளான்கள் தான்.மாறிவரும் போர் வியூகங்களுக்கு ஈடுகொடுத்துத் தயாரிக்கப்படுவதால், போர் விமானங்களிலும் ‘ஜெனரேஷன் கேப்’ உண்டு.

மூன்றாம் தலைமுறைப் போர் விமானத்தால் கடல்,பனிமலை,நிலம் என அனைத்துப் பிரதேசங்களிலும் தாக்குப்பிடித்து போர் புரிய முடியாது.அனைத்துப் பிரதேசங்களிலும் நிலைகளிலும் தாக்குப்பிடிக்கும் நான்காம் தலைமுறை போர்விமானங்களை வாங்க இந்தியா ரூ.50,000 கோடிகளை ஒதுக்கீடு செய்து,126 விமானங்களை வாங்க டெண்டர் விட்ட போது,பல ஆயுத நிறுவனங்கள் அதற்கு அடித்துக்கொண்டன.

நான்காம் தலைமுறைப் போர் விமானங்களில் பெஸ்ட் ரஃபேலும்,யூரோஃபைட்டரும்தான். இரண்டுமே வான்,நிலம் ,கடல் மூன்றிலும் தாக்குதல் நடத்தக்கூடியவை.ரஃபேல் பிரான்ஸின் தயாரிப்பு.யூரோஃபைட்டர் ஜெர்மனி,இத்தாலி,ஸ்பெயின்,இங்கிலாந்து,ஆஸ்திரியா,சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு.
யூரோஃபைட்டரை விட ரஃபேலின் விலை குறைவு.அதுவும் போக,இந்திய விமானப் படையில் இருக்கும் மிராஜ்-2000 ரஃபேலின் முந்தைய வெர்ஷன்! அதனால் ரஃபேலை இயக்க இந்திய போர்விமானிகள் சிரமப்பட மாட்டார்கள்.இதனால்,ரஃபேலின் பக்கம் பார்வையை திருப்பியது இந்திய விமானப்படை.

அவ்வளவுதான். . . இங்கிலாந்து,இத்தாலி ஆகியவை முட்டி முறைக்க ஆரம்பித்தன. ‘இந்தியா தன் முடிவை மறுபரிசீலினை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று அழுத்தமாகவே சொன்னார் இங்கிலாந்து பிரதமர். ‘இந்தியா வளர்ந்த நாடு ஆகிவிட்டது.அதன் சேரிப்பகுதி முன்னேற்றத்துக்காக என்.ஜி.ஓ.க்களுக்கு அளிக்கும் தொகையை இங்கிலாந்து நிறுத்திக்கொள்ள வேண்டும்!’என்று ஐரோப்பிய பத்திரிகைகள் கருத்துச் சொல்ல ஆரம்பித்தன.ஆனாலும்,ரஃபேலை வாங்குவதில் உறுதியாக இருக்கிறது இந்தியா.

முதலில் 18 விமானங்களை நேரடியாக அளிக்க வேண்டும்.பிறகு மீதி 108 விமானங்களை இந்திய நிறுவனங்களோடு இணைந்து அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தயாரித்துக்கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தது.அதாவது ரஃபேல் விமானங்களைச் சொந்தமாக உருவாக்கிக்கொள்ள இந்தியாவுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

அட,நல்லா இருக்கே என்று தோன்றுகிறதா? உண்மையில் இப்போது இருப்பதை விட 10 ஆண்டுகள் கழித்து இந்திய விமானப்படை பலமாகத்தான் இருக்கும்.ஆனால்,நமது பங்காளி சீனா பலவானாக இருக்கும்.பெங்களூரில் போர் விமானம் தயாரிக்கும் பாரத் ஏரோநாட்டிகல் லிமிடெட்டை விட,சீனாவின் போர்ப்படைப் பிரிவான செங்க்டு பல படிகள் முன்னணியில் நிற்கிறது.

அங்கே ஜே-20 என்ற ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை 2011 ஜனவரி மாதமே உருவாக்கிவிட்டார்கள்.தற்போது அமெரிக்கா,ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக செயல்திறன் மிக்க விமானத்தை உருவாக்கும் தகுதி படைத்த மூன்றாவது நாடாகிவிட்டது சீனா.2017க்குள் சீன ராணுவத்தில் ஐந்தாம் தலைமுறை ஜே-20 இருக்கும்.10 வருடங்கள் கழித்து,இந்தியாவில் நான்காம் தலைமுறை ரஃபேல் விமானங்கள் இருக்கும்.

இப்போது இந்திய ராணுவத்தில் உள்ள சுகோய்,மிராஜ் விமானங்களைச் சமாளிக்க 2005லேயே ஜே-10 விமானங்களை வடிவமைத்துவிட்டது சீனா.அப்போது அவர்களிடமிருந்து 36 ஜே-10 விமானங்களை வாங்க சீனாவோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது பாகிஸ்தான்.இந்தியா ஏன் ஐந்தாம் தலைமுறை விமானங்களை வாங்கவில்லை?


2000 ஆண்டுவாக்கிலேயே ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வாங்க பட்ஜெட் ஒதுக்கியும்,அப்போது எதுவும் விலைக்குக்கிடைக்க வில்லை;வல்லரசு நாடுகள் தங்களுக்குத் தேவையான அளவு தயாரித்து வைத்துக்கொண்டு பின்னர்தான்,விற்பனைக்காக விமானத்தை மார்க்கெட்டுக்கு அனுப்பும்.அது விற்று முடிவதற்குள் அடுத்த தலைமுறை விமானம் தயாராகிவிடும். இந்தியா ஐந்தாம் தலைமுறை விமானத்துக்காக காத்திருக்க,சீனா பட்ஜெட்டில் எக்கச்சக்க பணம் ஒதுக்கி சொந்தமாக ஐந்தாம் தலைமுறை விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது.

சமீபத்தில்,நமது பிரதமர் மன்மோகன்சிங் வருத்தத்தோடு சொன்னது: பாதுகாப்புத்துறையில் சீனாவை  விட,இந்தியா பின் தங்கியே இருக்கிறது.(ஐயா சிங்கு,நாம் பின் தங்குதறதுக்கு யாரோ காரணம்ங்கற மாதிரி ஃபீல் பண்ணுறீங்க,நீங்க செய்ய வேண்டிய கடமைய்யா இது??!!)

இப்போதைக்கு போர் வராததுதான்.போர் வராத வரை பிரச்னை இல்லைதான்.யாருக்கு என்கிறீர்களா? யாருக்கோ!
நன்றி:ஆனந்த விகடன்,பக்கம் 44,45;வெளியீடு 28.3.12

ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்கடந்த 3000 ஆண்டுகளாக உலகெங்கும் இருக்கும் இந்துக்கள்,இஸ்லாமியர்கள்,கிறித்தவர்கள்,புத்தர்கள்,சீக்கியர்கள் மற்றும் சைவ & வைணவ மார்க்கத்தினரால் பல்வேறு பெயர்களில் இன்றுவரை நேரடியாகவும்,மறைமுகமாகவும் செய்யப்படும் வழிபாடு ஸ்ரீஸ்ரீபைரவர் வழிபாடு ஆகும்.சிவனின் அம்சங்களில் ஒருவர் ஸ்ரீபைரவர் ஆவார்.

சிவனின் அம்சம் என்பதும் மூர்த்தம் என்பதும் ஒன்றாகும்.அவதாரம் என்பது இறைவனே மனிதனாகப் பிறந்து வளர்ந்து நல்லது செய்வதாகும்.அந்த காலகட்டத்தில் அக்கடவுள் வாழும் உலகத்தில் அந்த கடவுளின் இடம் காலியாக இருக்கும்;மூர்த்தம் என்பது அப்படியல்ல;எங்கும் அந்த இறைவன் இருப்பவர்;அப்படிப்பட்ட மூர்த்தமே ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் ஆவார்.


நைமிசாரண்யம் என்பது வடபாரதத்தில் இருக்கும் ஒரு புண்ணிய ஸ்தலம் ஆகும்.ஒளிமயமான சிவபெருமானே பரம் பொருள் என்று உணர்ந்த பல ஆயிரக்கணக்கான முனிவர்கள் அத்திருத்தலத்தில் வாழ்ந்து வந்தார்கள்.சூட்சுமமாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்;திருமேனி முழுவதும் திருவெண்ணீறு பூசி,திரிபுண்டரமணிந்து,அக்கமாலை சூட்டி சிவதியானத்தில் மூழ்கியவாறு,வேத ஆகமங்களால் இந்த முனிவர்கள் சிவனை துதித்து வாழ்ந்து வந்தனர்.சூட்சுமமாக இன்றும் வாழ்ந்து,வழிபட்டு வருகின்றனர்.


ஒரு சமயம் சூதபுராணிகர் நைமிசாரண்ணியத்திற்கு எழுந்தருளினார்.அங்கிருந்த முனிவர்கள், “தாங்களைத்துன்புறச் செய்யும் இடுக்கண் களைந்து இஷ்ட சித்தி அருளும் அறுபத்து நான்கு மூர்த்தமாகிய சிவபராக்கிரமத்தை விளக்கிக் கூற வேண்டுகிறேன்” என்று கேட்டுக்கொண்டார்கள்.அதனை, “ஒரு வகையாக உங்களுக்கு விவரிக்கிறேன்”என்றவாறு சிவபராக்கிரமப் புகழைக் கூறலானார்.


சிவபராக்கிரமம் என்பதும் அட்டாட்ட விக்கிரக லீலை என்பதும் சிவபிரான் அறுபத்து நான்கு திருவுருவமந்து அடியார்களுக்கு அருள் செய்த திருவிளையாடல் எனப்படும் இவ்விக்கிரக லீலையை வேதாகம புராணங்களும் வேதம் தியானம் ரூபமாகவும்,ஆகமம் அதனை விரித்து உருவத் திருமேனியில் அடியவர்கள் வழிபட்டு உய்யும் பொருட்டுக் கிரியா உருவமாகவும்,புராணங்கள் அவ்வாறு வழிபட்டுப் பேறு பெற்றோர் இவரெனக்குக் கதை வடிவமாகவும் கூறுகின்றன.
அறுபத்து நான்கு மூர்த்தங்களுக்குரிய சிறப்பான அறுபத்து நான்கு கோவில்கள் எங்குள்ளன? அங்கு எப்படி வழிபட வேண்டும்;அந்த அறுபத்து நான்கு மூர்த்தங்களுக்கும் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் எனவும்,எவ்வகையில் நமக்கு நன்மை கிடைக்கும் எனவும்  புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.ஆன்மீக சொற்பொழிவாளர்கள்கள்,ஆன்மீக ஆர்வலர்கள்,சிவ சிந்தையுள்ளவர்கள்,சோதிடர்கள் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த அட்டவீரட்டானக் கோவில்கள்(ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவரின் படைவீடுகள்) அமைந்திருக்கின்றன.


திருமூலர் காலத்திற்கு முன்பு ஆறு சமயங்கள் வழக்கில் இருந்துள்ளன.1) பாசுபதம் 2) மாவிரதம்(மஹாவ்ரதம்) 3)காபாலம்(காளம்);4)வாமம்(சாக்தேயம்) 5)பைரவம்(வைரவம்) 6)ஐக்கிய வாத சைவம் என்பனவே அச்சமயங்களாகும்.


‘காபாலிகம்’ பாசுபத சமயம் போல மிகவும் பழமையான ஒன்றாகும்.இக்கொள்கையை ‘காலம்’ எனும் தத்துவத்தில் உருவாக்கியவர் உருத்திரர் ஆவார்.உடம்பெல்லாம் திருநீறு பூசி,தலைமாலை அணியும் சமயத்தவர்கள் காபாலிகர்.சாம்பலை உடலில் பூசிக்கொள்ளுதல்,பைரவர் வழிபாடு ஆகியவை அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக எண்ணினார். காபாலிக மதமும் பைரவ மதமும் கிட்டத்தட்ட ஒன்றுபோல தோன்றும்.பைரவ சமயக் கொள்கை என்பது பைரவரே பரம்பொருள் என்றும் அவரடியிற் சேருவதே வீடுபேறு என்பதும் ஆகும்.உயிர்களுக்குப் பந்தமும் வீடும் பைரவக்கடவுளிடமிருந்து எட்டுத்தலைகள் தோன்றி அளிக்கும்.இவர்கள் கொள்கை போக மார்க்கமே முக்தியைத் தரும்.இவர்களுக்கு நரபலி இடுதல்,மண்டையோட்டில் உணவருந்துதல்,மது அருந்துதல் பழக்கமுண்டு. படைவீரர்கள் தலைகளை அரிந்து கொற்றவையையும் பைரவக்கடவுளையும் வழிபட்டனர் என்றும் பைரவி மந்திரத்தைச் செபம் செய்தனர் என்றும் தமிழ்ப்புலவர் ஒட்டக்கூத்தர் தமது தக்கயாகப் பரணியில் கூறியிருக்கிறார்.


நல்லவை தோன்றும்போது அல்லவையும் சேரத்தான் செய்யும்.பைரவ வழிபாடு எங்கும் பரவியிருந்த சமயம் சிலரின் வன்னிலை வழிபாடும்,பைரவ வழிபாட்டுடன் சேர்ந்தது.அமைதி வாழ்க்கை மேற்கொள்ள விரும்பிய சைவ சமயத்தினர்,இவ்வன்னிலை வழிபாட்டை ஒதுக்கத் துவங்கினர்.சாதி சமய வேறுபாடின்றி அனைவரும் பைரவத்தில் சேரலாம். அனைவரும் பைரவக் கடவுளின் முன்பு சமமே என்ற பைரவ மதத்தின் கொள்கை,சில குறிப்பிட்ட சாதியினருக்குப் பிடிக்கவில்லை;


வன் நிலை வழிபாட்டினை மட்டும் ஒதுக்கிவிட்டுச் சிறந்திருந்த பைரவ வழிபாட்டினை மட்டும் சுத்தசைவ முறைப்படி தொடர்ந்திருக்கலாம் என்பது எமது கருத்தாகும்.
காசியில் வழிபாட்டுமுறை செய்பவர்கள் பண்டாக்கள் என்னும் பண்டாரங்கள்.பழனியில் வாழும் பைரவருக்குப் பெயர் சுப்ரமணிய பைரவர் என பைரவர் அஷ்டோத்திரத்தில் வருகிறது.பழனியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்புகூடப் பண்டாரங்கள் தான் வழிபாடு செய்து வந்தனர்.பிற்காலத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.


தமிழ்நாட்டில் ஸ்ரீபைரவர் என்னும் கடவுளை வைரவர் எனவும் அழைக்கின்றனர்.இவரே கிராமக் காவல் தெய்வமாக நின்று தந்திர சாத்திரப்படி பலி ஏற்கின்றார்.மேலும் இவர் கோவில்களில் காவல் தெய்வமாக இருந்து ஆகமசாத்திரப்படி பூசையும் நைவேத்தியமும் பெறுகிறார்.முதலில் தொடங்கும் காலை பூசையும் இறுதியாக நடக்கும் இரவுபூசையும் இவருக்கே உரித்தானவை.பைரவருக்கெனத் தனியாகப் புராணம் இருப்பதாகத் தெரியவில்லை;ஆனால்,பல்வேறு புராணங்களில் இவர் பாடலால் பெருமை பெருகிறார்.


இலங்கையில் சிவன்மலை என்ற சிவன் ஒளி மலை உள்ளது.இம்மலையின் உச்சியில் சூரியன் உதயமாகும் காலத்தில் வானவில்லின் நிறமுடைய ஒளி தோன்றுகிறது.இச்சிவவழிபாடே சில இடங்களில் பைரவ வழிபாடாக மாறியது.இலங்கையில் பல்வேறு இடங்களில்  இவரே ஸ்ரீபைரவராக வணங்கப்படுகிறார்.உலகக் காவல் தெய்வமும் மக்கள் வணங்கிய உடனே பலன் வழங்குபவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவரே!!!


பெண்களும் கோழைகளும் பைரவ உபாசனை செய்யக்கூடாது என்பது பண்டைய பெரியோர்களின் கருத்து.பக்தி வழியில் சாதிமத வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் வணங்கலாம்.அந்தக் காலத்தில் முள்ளுபாதிரிக்குச்சியைக் கையில் வைத்துக்கொண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் கோவிலின் முகப்பில் அமர்ந்து குறி சொல்வார்களாம். “பைரவ”ராகம் என்ற ஓர் ராகம் உண்டு.பலிபீடத்திற்கு அபிஷேகம் நடக்கும்போது பைரவ ராகம் நாதஸ்வரத்தில் வாசிப்பார்கள்.பைரவருக்குண்டான பொது காயத்ரி மந்திரம் ஜெபம் செய்தும் அவர் அருள் பெறலாம்.


ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் காயத்ரி மந்திரம்


சுவாநந் வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீ மஹி
தந்நோ பைரவ; ப்ரசோதயாத்

இருளை நீக்கி ஒளியைத் தருபவர்;திரிசூலம் அவருக்கே உண்டான சிறப்பான ஆயுதம்.திரிசூலத்தை மனக்கண்ணினால் எண்ணினாலே போதும்.நம் பயம் மற்றும் இக்கட்டான நிலையிலிருந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் நம்மைக் காப்பாற்றுவார்.முற்காலத்தில் வீட்டில் பைரவர் சிலை வைக்கமாட்டார்கள்.சுவரில் மஞ்சள் பொடி அல்லது குங்குமத்தால் திரிசூலம் போட்டு அதன்முன் குத்துவிளக்கு வைத்து வழிபடுவர்.அதுவும் ஸ்ரீபைரவருக்குண்டான வழிபாடுதான்.கிராமக் காவல்தெய்வமும் அவரே.கோவில் திறந்த உடனும்,கோவில் நடை இரவில் சாத்தப்படும் பொழுதும் இருநேர பூஜையை அவர் ஏற்கிறார்.


எதிரிகள் விலக மகா பைரவரை வணங்க வேண்டும்.உலக இயக்கத்தைத் தம்பனம் செய்ய உரிய பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.அபிசாரப் பிரயோகத்தையும் பூர்வஜென்ம தோஷத்தையும் நீக்க ஸ்ரீகால பைரவரின் அருள் வேண்டும். புதையல் இருக்கும் இடம் காட்ட,குறி சொல்ல ஸ்ரீபீஷண பைரவர்  அனுசரணை வேண்டும்.எதிர்த்து வரும் எதிரியைப் பைத்தியம் பிடிக்கச் செய்பவர் ஸ்ரீஉன்மத்த பைரவர் ஆவார்.நம் ஆயுளை நீட்டிக்கச் செய்பவர் ஸ்ரீகால பைரவரே!வீட்டில் வைத்து வணங்கத்தக்கவர் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்தான்!!!


யோக மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் விரும்புவோர் ஸ்ரீபைரவ காயத்ரியை ஜெபித்து யோக பைரவரையும் ஆகாச பைரவரையும் வழிபடலாம்.ஒரு மனிதனுக்குள் சூட்சுமமாக இருந்து அவனுக்குத் தைரியத்தைக் கொடுக்கும் காவல்தெய்வம் ஸ்ரீபைரவரே!


ஸ்கந்த புராணத்தில் எட்டுவகையான பைரவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.1.தண்டபாணி,2.விக்ராந்தன்  3.மகா பைரவர் 4.படுக்கன் 5.பாலகன் 6.நந்தி 7.கால பைரவர் 8.சேத்திர பாலன் என அவர்கள் அழைக்கப்படுவார்கள்.


பைரவர் தமது அம்சமாக எட்டுப் பைரவர்களைப் படைத்தார் என்று தந்திரசாரா என்னும் நூல் கூறுகிறது. அவை 1.அசிதாங்க பைரவர் 2.ரூரு பைரவர் 3.சண்ட பைரவர் 4.குரோத பைரவர் 5.உன்மத்த பைரவர் 6.காபால பைரவர் 7.பீடண பைரவர்  8.சங்கார பைரவர்.


இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள ‘சிவபராக்கியம்’ என்னும் நூல் அஷ்ட பைரவர் என்னும் எட்டு பைரவர்கலைப் பற்றிக் கூறுகிறது.அதில் மற்ற நூல்களில் இருந்து சில பெயர்கள் வேறுபட்டு உள்ளன.

1.கால பைரவர்
2.கல்பாந்த பைரவர்
3.க்ரோதந பைரவர்
4.காபால பைரவர்
5.ஸம்ஹார பைரவர்
6.உந்மத்த பைரவர்
7.சண்ட பைரவர்
8.உக்ர பைரவர்

வாமன புராணம் வேறு வகையான எட்டுப்  பைரவர்களைப் பற்றிப் பேசுகிறது.சிவனுக்கும் அந்தகாசுரனுக்கும் நடந்த போரில் சிவனின் தலையிலிருந்து பெருக்கெடுத்து ரத்தம் எட்டு வடிவங்களைத் தாங்கியது.அந்த எட்டும்,எட்டு பைரவ வடிவங்களாக ஆயின எனக் கூறுகிறது.அவை:

1.வித்யா ராஜா
2.கால ராஜா
3.காமா ராஜா
4.சோம ராஜா
5.ஸ்வச்சந்தர ராஜா
6.லலிதா ராஜா
7.விக்ன ராஜா
8.சிவா

ஸ்ரீபைரவர் உபாசனை தங்க வியாபாரிகளுக்கும்,உயர்நிலை அதிகாரிகளுக்கும்,சிவபூஜகர்களுக்கும்,மடாதிபதிகளுக்கும் , காவல் துறை மற்றும் ராணுவத்துறை அதிகாரிகளுக்கும் அவசியமானது.காவல் துறை மற்றும் ராணுவத்துறை தவிர,இதர மக்கள் ஸ்ரீபைரவருக்கு சைவ உணவையே நிவேதனமாகப் படைக்க வேண்டும்.மது மாமிசம் என்பது கொட்டை நீக்கிய பேரீச்சம்பழமும்,தேனும் கலந்த கலவையாகும்.பக்தர்களுக்கு தினமும் பொற்காசுகளும்,பொன் தாம்பாளம்,புதையல்,அட்சயப் பாத்திரம் கொடுத்து ஆதரிப்பவரும் ஸ்ரீ சொர்ண பைரவரே!


இரவில் படுக்கப் போகும் முன்,கைகால் முகம் கழுவவேண்டும்.பின்னர்,வலது கை ஆள்காட்டிவிரலால் நெற்றியில்,மார்பில்,இடது புஜத்தில்,திரிசூலம் இட வேண்டும். வலது புஜத்தில்,இடது கை ஆள்காட்டி விரலால் திரிசூலம் இட வேண்டும்.இப்படிச் செய்துவிட்டுப் பின்னர் படுத்தால் துர் ஆவிகள் வராது.நல்ல உறக்கம் வரும்.


இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் அறுபத்தி நான்கு பைரவர்களுக்கும் அப்பாற்பட்டவர்.ஒவ்வொரு வீட்டுப் பூசை அறையிலும்,ஒவ்வொரு வழிபாட்டுத்தலத்திலும்,ஒவ்வொரு நகைக்கடைகளிலும்,குறிப்பாக தங்கம் இருக்க வேண்டிய இடங்களிலும் இவரது படமும்,டாலரும் இருக்க வேண்டியதாகும்.மனதில் பயம் ஏற்படாது.வீட்டிலேயே பொன் மழை பொழியும்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் கலர் படத்தினை பூசை அறையில் வடக்கு நோக்கி வைத்து வணங்குதல் வேண்டும்.படத்துக்கு காய்ந்த மலர்களையும்,செயற்கை மலர்களையும் அணிவித்தல் கூடாது.அன்று மலர்ந்த மல்லிகை,தாமரை போன்ற மலர்களை அணிவிக்கலாம்.பெரிய அளவுகளில் படங்களை மாட்டி வழிபடக்கூடாது.ஆகர்ஷண சக்தி அதிகம் என்பதால் நாம் அந்த சக்தியை தாங்கும் அளவுகளிலேயே உள்ள படங்களை வணங்க வேண்டும்.ஸ்ரீசொர்ண பைரவர் ஸ்டிக்கரை வீட்டின் பீரோவின் உள்ளே ஒட்டி வைத்துக் கொள்ளலாம்.


அலங்காரத்துக்காக வெளியே ஒட்டக் கூடாது.குறிப்பாக கார்,மோட்டார் பைக்கில் இவைகளிலும்,வீட்டின் அறைகளின் முகப்புகளிலும் ஒட்டக் கூடாது.ஸ்ரீசொர்ண பைரவர் நாணயத்தை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் அல்லது தங்க நகை வைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.ஆண்கள் தமது சட்டைப்பைக்குள் அல்லது பர்ஸில் சிறிய அளவிலான ஸ்ரீசொர்ண பைரவர் படத்தையும்,பெண்கள் தமது கைப்பையிலும் வைத்துக் கொள்ளலாம்.(பெண்கள் மாதவிலக்கு நாட்களில் வைத்துக்கொள்ளக் கூடாது)

இந்த ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகளை நமக்காக ஆராய்ந்து கண்டறிந்தவர் ருத்ராட்சத் தெரபிஸ்ட் ஐயா அவர்களுக்கு  கோடி கூகுள் நன்றிகள்!!!
இது தொடர்பான பிற ஆன்மீகக்கடல் பதிவுகள்:       1.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினை நமக்கு அறிமுகப்படுத்திய நமது ஆன்மீக குரு திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக சாம்ராஜ்ஜியம்            2.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு நமது வீட்டில் செய்யும் முறை                                                 3.தேய்பிறை அஷ்டமியும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடும்                                              4.ஏழரைச்சனியில் ஜன்மச்சனியின் துயரம் நீங்க(டிசம்பர் 2014 வரை துலாம் ராசியினர்) செய்ய வேண்டிய பைரவர் வழிபாடு   5.அஷ்டமச்சனியின் துயரம் நீங்க ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வழிபாடு   
ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்