RightClick

தெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்!!!


டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் என்ற ஆய்வாளர் ‘சக்தியும் ஆதிக்கமும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த உலகம் தனித்தன்மை வாய்ந்தது.ஏனெனில் இங்கு உள்ள எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு உடையவைதான்.சில தொடர்புகள் வெளிப்படையாகத் தெரியலாம்.மற்றவை தெரியாமலேயே இருக்கக்கூடும்.29 ஆண்டு கால ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் பல முடிவுகளை அறுதியிட்டு உரைத்துள்ளார்.
மனிதர்களை ஆற்றலின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளலாம்.ஆற்றல் அளவில் அடிநிலையில் இருப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.இந்தப் பிரிவின் கீழ் 87 சதவீதத்தினர் உள்ளனர்.இதற்கு மேற்பட்டவர்கள்,எண்ணிக்கையில் சொற்பமே!மேம்பட்ட நிலையில்  உள்ளவர்களையும் பல படிநிலைகளில் உள்ளவர்களாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.

கடவுளின் கருணையோடு இரண்டறக் கலந்தவர்கள் வெகு சிலரே.இத்தகைய மகான்களின் பார்வையே மற்றவர்களை தூய்மைப்படுத்திவிடும்.அவர்களது உடல்களிலிருந்து,உள்ளங்களிலிருந்து புறப்படுகின்ற அதிர்வுகள் மற்றவர்களின் மாசுகளை சுட்டெரித்துவிடுகின்றன.மற்றவர்களை புனிதர்களாக மாற்றுகின்றன.மற்றவர்களின் குறைபாடுகளை முழுமையாக நீக்குகின்றன.

‘எனது விழி’ என்ற புத்தகத்தையும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் இதைத் தொடர்ந்து எழுதியுள்ளார்.மகான்களின் அதிர்வலைகள் எப்படி அடிநிலையில் உள்ளவர்களை மாற்றுகிறது என்பது குறித்தும் மகான்களின் படிநிலைகள் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்துள்ளார்.87 சதவீதத்தினர் ஆன்மீகரீதியில் ஒளிநிலை பெறாதவர்களாக உள்ளனர்.எஞ்சிய 13 சதவீதத்தினரால் 87 சதவீதத்தினரை எப்படி ஒளிநிலைக்கு கொண்டுவர முடியும் என்று கேள்வி எழுவது இயல்பானதே.

ஒளிநிலை பெற்ற ஒருவர், ஒளிநிலை பெறாத ஒருவரை மட்டுமே மாற்ற முடியும் என்று நினைக்கக் கூடாது.ஒளிநிலை பெற்ற ஒருவர் அவரது ஆற்றலுக்கு ஏற்ப பல்லாயிரக்கணக்கான்னோரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

ஓரளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் ஒளிநிலை பெறாத ஒளிநிலை பெறாத 90,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.சுமாரான அளவுக்கு ஒளிநிலை பெற்றவரால் 7,50,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் 1,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திவிட முடியும்.இந்தப்பிரிவைச் சார்ந்த ஒளிநிலை பெற்றவர்களின் எண்ணிக்கை 22 ஆக இருக்கிறது என்று டேவிட் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு யூகம்தான்.

மகத்தான மகான்களால் 7,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திட முடியும்.இத்தகைய மகான்கள் சுமார் 10 பேர் வாழ்ந்துவருவதாக டேவிட் ஹாக்கின்ஸ் அனுமானித்துள்ளார்.

உலகம் முழுவதையும் ஒளிநிலைக்கு உயர்த்தக்கூடிய அவதாரங்களாக க்ருஷ்ண பரமாத்மா,புத்தர் ஆகியோரைக் கருதுகிறோம்.இத்தகைய அவதார புருஷர்களால் ஒட்டு மொத்த உலகத்தையும் ஒளிநிலைக்கு ஒரு நொடிப் பொழுதில் உயர்த்திவிட முடியும்.

உலகில் நல்லதிர்வுகளும்(மகான்களின் ஜீவசமாதிகளிலும்,புராதனமான கோவில்களிலும்,சிதிலமடைந்துள்ள கோவில்களிலும்), மோசமான அதிர்வுகளும்( இணைய மையங்களாலும்,மெமரி கார்டுகளாலும்,பொறாமை பிடித்தவர்களாலும்,காவல்நிலையங்களிலும்) சமகாலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மோசமான அதிர்வுகளை வீழ்த்தி நல்லதிர்வுகளை ஓங்கச் செய்வதுதான் மகான்களின் அருட்பணியாகும்.

மகான்களின் நல்லதிர்வுகள் அளவுக்கதிகமாக ஓவ்வொரு அமாவாசை,பவுர்ணமி ,கிரகண நாட்களிலும்,சிவராத்திரி இரவுகளிலும் வெளிப்படும்.அப்போது நாம் அங்கே தங்க வேண்டும்.அந்த இரவுகளில் சில நிமிடங்கள் அந்த ஜீவசமாதிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகளில் பிரார்த்தனை அல்லது தியானம் அல்லது பிராணயாமம் அல்லது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் செய்தாலே போதுமானது.நமது வேண்டுகோள்கள்,கோரிக்கைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்கள்/மாதங்களில் நிறைவேறிவிடும் என்பது அனுபவ உண்மை!!!

ஓம்சிவசிவஓம்
ஆதாரம்:விஜயபாரதம்,பக்கம் 20,21;வெளியீடு 4.5.12        இது தொடர்பான பிற ஆன்மீகக்கடல் பதிவுகள்: 1.ஜீவசமாதிகளின் அருளாற்றலைப் பெறும் ஆன்மீக வழிமுறைகள்                                   2.சென்னை மாநகருக்குள் இருக்கும் ஜீவசமாதிகள்                                                             3.விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஜீவசமாதிகள்           4.அளவற்ற சக்திவாய்ந்த பாம்புக்கோவில்சந்தை மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி,(சங்கரன்கோவில் அருகில்)  5.சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதி ஜீவசமாதிகள்          6.திண்டுக்கல்,பெரியகுளம்,கரூர்,திருச்சி,தஞ்சை,திருவாரூர்,நாகை பகுதியில் இருக்கும் ஜீவசமாதிகள்                       7.திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி(புதுச்சேரி) பகுதி ஜீவசமாதிகள்                                          8.சென்னையின் சுற்றுப்புறங்களில் இருக்கும் ஜீவசமாதிகள்      9.நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை,காரைக்குடி,திருப்பத்தூர்,மானாமதுரை பகுதியில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகள்                

இயற்கைச்சீற்றங்களை நிறுத்தவும்,நமது கர்மவினைகள் தீரவும் திரு.சிவமாரியப்பன் அவர்கள் தலைமையில் சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு




இந்த நந்தன ஆண்டில்5.5.2012 சனிக்கிழமை காலை 8.12 வரையிலும் சித்திரை நட்சத்திரமும்,அதன்பிறகு சுவாதி நட்சத்திரம் மறுநாள் 6.5.2012 ஞாயிறு காலை 6.35 வரையிலும் இருக்கிறது.(பவுர்ணமியானது 5.5.2012 சனிக்கிழமை மதியம் 12.25க்கு ஆரம்பித்து,6.5.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.01 வரையிலும் இருக்கிறது)சித்திரை மாதம் வரும் பவுர்ணமி எப்போதும் சித்திரை நட்சத்திரத்தில் தான் உதயமாகும்.அபூர்வமாக பவுர்ணமியானது இரண்டு நட்சத்திரங்களில் வரும்;அப்படி வரும் நாள் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடத்தில் அமைந்திருக்கிறது.
அப்படி உதயமாகும்போது பின்வரும் வழிபாட்டுமுறையைப்பின்பற்றினால்,நமது கர்மவினைகள் அடியோடு நீங்கிவிடும்;குழந்தைப்பேறின்மையால் ஏக்கமடைபவர்களின் துயரம் நீங்கும்;பிரிந்திருக்கும் தம்பதியினர் ஒன்று சேர்ந்துவிடுவர்;(அவர்களுக்கிடையே இருக்கும் எப்பேர்ப்பட்ட பிணக்கும் தீர்ந்துவிடும்);பெண்ணுக்கு ஆணால் ஏற்பட இருக்கும் அவமானங்களும்;ஆணுக்கு பெண்ணால் ஏற்பட இருக்கும் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.மேலும் இந்த நந்தனவருடத்தில் வர இருக்கும் இயற்கைச் சீற்றங்கள் இந்த வழிபாட்டினால் தணித்துவிட முடியும்.(ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது!!!)

எனவே,இந்த சித்ராபவுர்ணமி வழிபாடு நமது ஆன்மீக வாழ்க்கை வழிகாட்டியும்,ஆன்மீகச் செம்மலுமாகிய திரு.சிவமாரியப்பன் அவர்களின் தலைமையில் 5.5.2012 சனிக்கிழமை காலை 6 மணியளவில் சதுரகிரியின் நுழைவாசலான தாணிப்பாறையில் துவங்க உள்ளதால், அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சொந்த ஊரில் வாங்கி வர வேண்டியவை:

குறைந்தது ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,
அரை கிலோ விதையில்லாத கறுப்பு திராட்சை
விதையில்லாத பேரீட்சை பழ பாக்கெட்(இவைகளை சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் சன்னிதியில் படையலிட்டுவிட்டு,கொஞ்சம் அங்கேயே பகிர்ந்துகொடுத்துவிட்டு,மீதியை வீட்டுக்குக்கொண்டு சென்று  நமது குடும்ப உறவுகளுக்கு கண்டிப்பாகத் தர வேண்டும்)

குறைந்தது 5 கிலோ நவதானியங்களை வாங்கி வர வேண்டும்.இவைகளை சதுரகிரி மலைப்பாதை ஓரங்களில்  தூவ வேண்டும்.இந்த நவதானியங்கள் நவக்கிரகங்களின் பிரதிநிதிகளாக இருப்பதால்,நமது ஜாதகத்தில் இருக்கும் நவக்கிரக தோஷங்கள் அடியோடு நீங்கிவிடும்.

வீட்டில் தயார் செய்து கொண்டு வர வேண்டியது:

   1)எள்ளை இடித்து,அத்துடன் கருப்பட்டி சேர்த்து  அதை 27 உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.இந்த 27 எள் உருண்டைகளையும் உடையாமல்,கொண்டுவர வேண்டும்.சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி சன்னதியில் வைத்துவழிபட வேண்டும்.இதன்மூலமாக முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேறும்.

2)குறைந்தது 2 கிலோ பொறியை(பொறிகடலையில் பொறி மட்டும்) வாங்கி,அத்துடன் குறைந்தது அரைக்கிலோ பூந்தியைக் கலக்கிக் கொள்ள வேண்டும்.இதை படையலாக்குவது நமது முன்னோர்களாகிய சித்தர்களின் ஆசி நேரடியாக நமக்குக் கிடைப்பதற்காக!!!ஆமாம்,நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வழித்தோன்றல்களே!!!(* பூர்வபுண்ணியம் உள்ளவர்கள்  இந்த நாளில் சதுரகிரியில் நமது முன்னோராகிய சித்தரையும் தரிசிக்கமுடியும்)

3) சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு படையலாக சர்க்கரைப்பொங்கலும்,அவல் பாயாசமும் படைக்க வேண்டும்.இந்த இரண்டும் தயார் செய்யத் தேவையான பொருட்களை நாம் ஒவ்வொருவரும் கொண்டு வர வேண்டும்.சதுரகிரியில் இரவு நேரத்தில் நாம் கொண்டு வந்த பொருட்களை ஒன்றாக்கி,ஒரே படையலாக தயார் செய்ய வேண்டும்.அவ்வாறு தயார் செய்து இரவு 9 மணி முதல் 12 மணி வரை சதுரகிரி சுந்தர மஹாலிங்க சுவாமிக்குப் படைக்க வேண்டும்.படைத்துவிட்டு,நமது மஞ்சள்துண்டில் சுந்தரமஹாலிங்கத்தின் முன்பாக அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ஜபித்துமுடித்தப்பின்னர்,இந்த படையலை அங்கிருப்போர்களுக்கு விநியோகிக்க வேண்டும்;நாமும் கொஞ்சம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.(மறக்காமல் டார்ச் லைட்,பாத்திரம் கொண்டு வரவும்)

இவ்வாறு செய்துவிட்டு,5.5.2012 சனிக்கிழமை இரவு கண்டிப்பாக சதுரகிரியில் தங்க வேண்டும்.மறு நாள் 6.5.2012 ஞாயிறு காலையில் அவரவர்களின் வீடுகளுக்குத் திரும்பலாம்.இவ்வாறு செய்வதால்,நீண்டகாலப் பிரச்னைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்களில் தீர்ந்துவிடும்;பொருளாதார நெருக்கடிகள் உடனடியாகத் தீர்ந்துவிடும்.நமது பூமிக்கு வர இருக்கும் இயற்கைச் சீற்றங்கள் விலகிவிடும்.

ஓம்சிவசிவஓம்

*** இந்த நந்தன வருடத்தின் முதல் பவுர்ணமியன்று இரவு முழுக்க சித்தர்களின் வீடாகிய சதுரகிரியில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஒரு சந்தர்ப்பம் நமது ஆன்மீக குருவாகிய சிவமாரியப்பன் அவர்களால் கிடைத்திருக்கிறது.இது எப்பேர்ப்பட்ட ப்ராப்தம்!!!
ஓம்சிவசிவஓம்

அத்தியாவசியமான மறுபதிவு:அறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும் பழக்கம்







1940 களில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது;அதன் விளைவாக அடுத்த 30 ஆண்டுகளில் வாகனப்போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை மனித குலம் சந்தித்தது.

1970களில் மின்காந்த அலைகளைக் கட்டுப்படுத்தும் திறனை மனிதன் அடைந்தான்.அதன் விளைவாக ஓரிடத்தில் பேசுவதை உலகம் முழுக்கவும் பரப்பும் சாமர்த்தியமாக வானொலி நிலையங்கள் உருவாகின;

1980களில் ப்ளாஸ்டிக் மனித குல வாழ்க்கையில் அனைத்தையும் எளிமையாக்கத் துவங்கின.அதுவே இன்று பூமியை மலடாக்கும்,குருடாக்கும் வேலையையும் செய்யத்துவங்கியிருக்கிறது.


1990களில் மனிதகுலத்தில் 5 கோடி ஆண்டு வரலாற்றில் ஒரு புதிய ,இதுவரையிலும் இல்லாத மகத்தான புரட்சியை உண்டாக்கியிருக்கிறது.மனித குலத்தை தகவல் யுகத்துக்குக் கொண்டு வந்த கணிப்பொறி, தகவல் நெடுஞ்சாலை எனப்படும் இணையம் உலகம் முழுக்கப்பரவத் தொடங்கியது.மனிதனின் மூளையின் வடிவமைப்பைப் போலவே, கணிப்பொறியை கண்டுபிடிப்பு அமைந்ததால்,அது மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது.


2000களில் தகவலே ஆயுதம் என்ற சூழ்நிலை உண்டாகிவிட்டது.என்னதான் கணிப்பொறி,தகவல் தொழில்நுட்பம் என்று வளர்ந்தாலும்,தொழில் நுட்ப வளர்ச்சி மனிதர்களிடையே நெருக்கத்தை உருவாக்குவதற்குப்பதிலாக, பெரும் பிளவையே உருவாக்கி வருகிறது.இந்த சூழ்நிலையில்  கடந்த 400 ஆண்டுகளாக உலக வல்லரசு என்று போற்றப்படும் அமெரிக்கா ஒரே ஒரு தனிமனிதனுக்கும்,ஒரே ஒரு இணைய தளத்துக்கும் பயப்பட ஆரம்பித்திருப்பதே, தகவல் யுகத்தின் ஆரம்ப வீச்சு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.அந்த ஒரே ஒரு தனி மனிதன் ஒசாமா பின்லேடன்;அந்த ஒரே ஒரு இணைய தளம் விக்கிலீக்ஸ்!!!

இந்த சூழ்நிலையில் நாம் பிரதமர்,முதலமைச்சர்,உலக அமைப்புக்களின் செயலாளர்கள், ஒரு நாட்டின்  தூதுவர்,பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளி போன்றவர்களின் வாரிசாகப் பிறந்திருந்தால் இந்த பிறவி முழுவதுமே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை;ஆனால்,நடைமுறையில் அப்படி நாம் பிறக்கவில்லை என்பதே நிஜம்.இன்னொரு பக்கம் ஆளும் அரசுகளை கைப்பிடிக்குள் வைத்து,ஆட்டிப்படைப்பது உளவு நிறுவனங்களும்,சர்வதேச கார்பரேட் நிறுவனங்களுமே!குடிக்கும் தண்ணீரைக்கூட வணிகமயமாக்கியது அவைகளின் மாபெரும் வெற்றி.

ஒரு கவுன்சிலரானாலே, மக்கள் நலனை ஓரளவுக்கு மேல் பின்பற்றமுடியாத இக்கட்டான சூழல் இன்று உருவாகிவிட்டது.மறுபுறம்,மனித உணர்வுகளான மொழிப்பற்று,தேச பக்தி, குடும்பப் பாசம்,உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தெய்வ பக்தி,  தியாக மனப்பான்மை போன்றவை சுருங்கத் துவங்கியிருக்கின்றன.இதைத்தான் அடிக்கடி மெட்டீரில் வேர்ல்டு இது; நாம் ஒவ்வொருவருமே ரொம்பவும் பாசம் வைக்கக் கூடாது.அன்பை விட நடிப்பான பாசத்தை நம்பியும், உதவியை விட துரோகத்தாலும்,விட்டுக்கொடுப்பதை விட தன்னை முன்னிலைப்படுத்துவதாலும் பல குடும்பங்கள் சிதைந்து போய்க்கொண்டிருக்கின்றன.சில குடும்பங்கள் வாழும் விதத்தை எழுதினால், தெய்வ நம்பிக்கையே போய்விடும்;இப்பேர்ப்பட்ட கொடூரமான காலகட்டத்தில்,நாம் பிறரை விட கொஞ்சம் கூடுதல் அறிவாளியாக இருந்தால் மட்டுமே உயர்ந்த சம்பளத்தில்,சிறந்த வேலையில் வாழ முடியும்.அப்படி வாழ்வதற்கு உங்கள் குழந்தைகளை நீங்கள் அவர்களின் எட்டாம் வகுப்பிலிருந்து தயார் செய்ய வேண்டும்.உங்கள் வயது 25ஐ விடவும் குறைவாக இருந்தால்,இதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்;ஒருவேளை வயது 45 ஐவிடவும் அதிகமாக இருந்தால்,ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் வீதம் ஓராண்டுக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவேண்டும்;அல்லது ஒரு நாளுக்கு 15 நிமிடம் வீதம் மூன்றாண்டுக்குக் குறையாமல் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.இதன் மூலமாக பொருளாதார தன்னிறைவை எட்ட முடியும்.

உங்கள் குழந்தை எட்டாம் வகுப்பு படித்துவரும் எனில்,தினமும் 30 நிமிடம் வரை தினசரி செய்தித்தாள் படிக்க வைக்க வேண்டும்;அப்படி வாசித்தலிருந்து நீங்கள் உங்கள் குழந்தையோடு (டிஸ்கஸ்) கலந்துரையாட வேண்டும்;அவ்வாறு கலந்துரையாடும்போது உங்களின் குழந்தையை மட்டம் தட்டியோ,முந்திரிக்கொட்டை போலவோ நீங்கள் பேசக்கூடாது;உங்கள் குழந்தையின் சிந்தனையைத் தூண்டும் விதமாக தினசரிச் செய்தித்தாளிலிருந்து செய்திகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்;

தினசரி இவ்வாறு செய்ய முடியாவிட்டால்,வாரம் ஒரு நாள்(ஞாயிற்றுக்கிழமைதான்!) இவ்வாறு உங்களின் குழந்தையை தினசரி வாசிக்கச் சொல்லி,அதிலிருந்து உங்கள் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும்,நிதானமாகவும் பதிலளிக்க வேண்டும்.இந்த 30 நிமிட நேரத்தில் நீங்கள் செல்போன்,டிவி,கணினி,ஐபேடு என அனைத்தையும் தூர வைத்து விடுவது நன்று.இவ்வாறு ஓராண்டுக்குக் குறையாமல் செய்து வந்தால்,அதன் பிறகு உங்கள் குழந்தைக்கு வாசிக்கும் பழக்கம் தானாகவே வந்துவிடும்.
நீங்கள் ஓடி ஓடி யார் யாரிடமோ அவமானப்பட்டும்,கெஞ்சியும் பணம் சம்பாதிப்பது யாருக்காக? அப்படி சம்பாதிக்கும் பணத்தை நிர்வாகிக்க உங்கள் குழந்தைக்கு யார் சொல்லித் தருவார்? எந்த பள்ளிப்பாடத்திட்டத்தில் இதையெல்லாம் சொல்லித் தருகின்றனர்? தினமும் உங்கள் குழந்தையை வீட்டில் சந்தித்ததும்,அவளின்/அவனின் முகம் நோக்கி இன்று பள்ளியில் என்ன நடந்தது? நீ செய்த சாதனை என்ன? உனக்கு எதில் சாதிக்க ஆசை ? என கேட்க நேரமில்லாத அளவுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறோம்.இது நியாயமா?

மேற்கூறியவாறு வாசிக்கும் பழக்கம் வந்தபின்னர்,பத்தாம் வகுப்பு விடுமுறையில் தினமும் உங்கள் ஊரில்  இருக்கும் நூலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் விதவிதமான பத்திரிகைகள்,மாத இதழ்களைப் பற்றி ஒரு விளக்கமளிக்க வேண்டும்.

உதாரணமாக, தினசரி செய்தித்தாள்களில் தினமலர்,தினத்தந்தி,தினகரன்,தினமணி போன்றவை இருக்கின்றன.
அரசியல் புலனாய்வு வார இதழ்களில் ஜீனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் இருக்கின்றன;எல்லோருக்கும் பிடிக்கும் இருவார இதழ்களில் ஆனந்தவிகடன்,இந்தியா டுடே,தமிழ் கம்யூட்டர் உலகம்,தமிழ் கம்யூட்டர்,PC friend போன்றவை இருக்கின்றன.

மாத இதழ்களில் மோட்டார் விகடன்,குமுதம் பக்தி ஸ்பெஷல்,கலைக்கதிர் என ஏராளமாக இருக்கின்றன.சுயமுன்னேற்ற மாத இதழாக தன்னம்பிக்கை என்ற ஒரே ஒரு இதழ் கோயம்புத்தூரிலிருந்து வெளிவருகிறது.மனதத்துவம் பற்றிய மாத இதழ் மனோ சக்தி என்ற இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது.
சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு,இன்றைய நடைமுறை வாழ்க்கையில் உங்கள் குழந்தை தனது லட்சியத்தை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை இந்த வாசிக்கும் பழக்கம் தானாகவே உருவாக்கிவிடும்;அடுத்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு நேர்காணலாக இருந்தாலும்,உங்கள் குழந்தை மிகச் சிறப்பாக எதிர்கொள்வதோடு,வேலையில் சேர்ந்த பின்னர்,வெகு வேகமாக பதவி உயர்வைப் பெற்றுக்கொண்டே இருக்கும்.

25 வயதுக்காரர்கள் தினமும் தினசரி படிக்க வேண்டும்.ஒரே செய்தியை தினமலர் எப்படி வெளியிட்டிருக்கிறது? தினகரன் எப்படி வெளியிடுகிறது? தினத்தந்தி அதை எப்படி செய்தியாக்கியிருக்கிறது?என்பதை சிந்திக்கப் பழக வேண்டும்;தினசரிகளில் வரும் செய்திகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து,அதைப் பற்றி புலனாய்வு செய்து வாராந்திர அரசியல் இதழ்களான ஜீனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்றவை வெளியிடுகின்றன.பல சமயம் வார, இருவார,மாத இதழ்களில் வெளிவரும் செய்திகள் தினசரிகளில் வெளிவருவதில்லை;


9 ஆம் வகுப்புமுடிக்கும்போது,இரண்டு மாதங்களுக்கு ஆங்கில டைப் ரைட்டிங் வகுப்பு அனைவருமே செல்ல வேண்டும்;தவறின்றி டைப் அடிக்கும் பழக்கம் வந்தபின்னர்,கணினியில் அடிப்படைப் பயிற்சியான எம்.எஸ்.ஆபிஸ் மட்டும் பயில கணினி பயிற்சி மையங்களுக்குச் செல்ல வேண்டும்.தனியார் கணிப்பொறி மையங்கள் தரும் டிப்ளமோ பயிற்சிகளால் ஓரளவுக்கு மேல் பலனில்லை; எம்.எஸ்.ஆபிஸ் முடித்தபின்னர்,ஓவியம் வரையும் திறமை இருந்தால், டிடிபி பயிலலாம்;வீட்டில் படிப்புக்கு நன்றாக செலவழிக்கும் திறனிருந்தால் அனிமேஷன் படிக்கலாம்.அனிமேஷனில் டிகிரி படித்தால் மட்டுமே சிறந்த வேலையில் உயர்ந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர முடியும்.கணிதத்தில் , அக்கவுண்டன்சியில் ஆர்வமுள்ளவர்கள் டேலி படிக்கலாம்.இவைகளில் எதுபடித்தாலும்,விரைவாகவும்,தவறின்றியும் பணிபுரியும் திறனே வேலை வாய்ப்புச் சந்தையில் விரும்பத்தக்க தகுதியாகக் கருதப்படுகிறது.

உங்கள் மகன்/மகள் வீட்டில் இருக்கும் கருவிகளை பிரிக்கவும்,சேர்க்கவும் செய்யும் குணமுள்ளவரா?மறக்காமல் ஆண்டு விடுமுறையில் கணினி பழுதுநீக்கும் பயிற்சியான ஹார்டுவேர் ட்ரெயினிங்கில் சேர்ப்பது அவசியம்.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளே இன்று இணையப் பெருங்கடலில் புகுந்துவிளையாடுகின்றன.காரணம் முக நூல் எனப்படும் Face Book இன் அதீதப் பரவவே காரணம் ஆகும்.இது ஆபத்தை நிச்சயம் உண்டாக்கும்.அதே சமயம் எம்.சி.ஏ.முடித்தும் கூட ஒரு மின் அஞ்சலை பார்வேர்டு செய்யத் தெரியாமல் திணறும் கணினி பட்டதாரிகளையும் தமிழ்நாட்டில் நெடுக சந்திக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும் அறிவே சக்தி;வாசிக்கும் பழக்கமே வளமான வாழ்க்கைக்கு வழி!!!

உங்களின் சிந்தனையைத் தூண்டும் சில புத்தகங்களை பரிந்துரைக்கிறேன்.இவை ஒவ்வொன்றையும் ஒரு வருடத்தில் சுமார் 100 முறை திரும்ப திரும்ப வாசிக்கவும்;சிந்திக்கவும்;உங்களது நெருங்கிய நட்பு வட்டத்தில் கலந்துரையாடவும்.நீங்களும் சாதனையாளர் ஆகமுடியும்.

1.கர்மயோகம்=சுவாமி விவேகானந்தர்

2.எண்ணங்கள்=எம்.எஸ்.உதயமூர்த்தி

3.ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

4.உங்களால் வெல்ல முடியும்= ஷிவ் கெரா

5.மறைந்திருக்கும் உண்மைகள்= ஓஷோ

6.காமத்திலிருந்து கடவுளுக்கு= ஓஷோ

7.இது உங்களுக்காக=விகடன் பிரசுரம் வெளியீடு

8.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்=சி.எஸ்.தேவ்நாத்

9.வந்தார்கள்,வென்றார்கள்=விகடன் பிரசுரம் வெளியீடு

10.ஆழ்மனதைப் பயன்படுத்துவது எப்படி?=கண்ணதாசன் பதிப்பகம்

11.மனம் தரும் பணம்=கண்ணதாசன் பதிப்பகம்

12.ஆத்மாவின் ரகசியங்கள்=பி.எஸ்.பி.

13.ஓம்சக்தியும் அணுசக்தியும்

14.என்று காண்போம் எங்கள் சிந்துவை

15.தேசப்பிரிவினையின் சோக வரலாறு

16.நாதுராம் விநாயக் கோட்சே=Z.Y.ஹிம்சாகர்

17.ஸ்ரீரங்கன் உலா

18.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்

19.வீரபாண்டியன் மனைவி= மூன்று பாகங்கள்

20.கூடு=பால குமாரன்

21.விழிமின் எழுமின்=சுவாமி விவேகானந்தர்=விவேகானந்த கேந்திரம் வெளியீடு

22.விவேகானந்தர் பாறைச்சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திரம் வெளியீடு

23.ஒரு யோகியின் சுயசரிதை

24.மனித சக்தியும்,மன சக்தியும்

25.நான் ஏன் நாத்திகனானேன்?=ஈ.வே.ரா.

26.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப் பதிப்பகம்,நாகப்பட்டிணம்

27.வானம் வசப்படும்=பிரபஞ்சன்

28.இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள்

29.விலை ராணி= சாண்டில்யன்

30.ஞான கங்கை = மாதவ சதாசிவ கோல்வல்கர் குருஜி

ஓம்சிவசிவஓம்

அவசியமான மறுபதிவு:மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி?=அனுபவ மனோத்ததுவ உண்மைகள்




கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது மாணவ,மாணவியருக்கு இந்த மனோதத்துவ உண்மைகளை பாடமாக நடத்திவருகிறேன்.ஒரே நாளில் இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களைப் பின்பற்றுவது கடினமே.

நமது ஒவ்வொரு செயலினைச் செய்யத்துவங்கும்போதும்,இந்த கருத்துக்களை நினைவில் நிறுத்தி,அதன்படி செயல்படுத்த வேண்டியிருக்கும்.இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றிட குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும்.இந்தக் கருத்துக்களைப் பின்பற்றத்துவங்கி,ஓராண்டுக்குப்பின்னரே, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நாம் முந்தி மாதிரி இல்லை என்பதை நம்மிடமே சொல்லத் துவங்குவர்;


இப்படிப்பட்ட வார்த்தைகளைக்கேட்டப்பின்னர், நாம் இன்னும் விடாப்பிடியாக இவைகளைப் பின்பற்றிட வேண்டும்.சில ஆண்டுகளுக்குப்பின்னர்,நமது பழகும் விதம்(பிஹேவியரிங்) அடியோடு மாறியிருக்கும்.

இந்த மனோதத்துவ உண்மைகளை நாம் பின்பற்றிவருவதன் மூலமாக,நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் நம்மை மதிக்கத் துவங்குவார்கள்.முயன்று பார்ப்போமா?

1.உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக் கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டுவிடாதீர்கள்;

2.எப்போதும் குறைவாகப் பேசுங்கள்;நிறைய கற்றுக்கொள்வீர்கள்.

3.எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.

4.ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டால்,அவர் அதற்கு என்ன பதில் கூறுகிறார்? என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே அதற்கு விடை கூற முற்படாதீர்கள்.

5.ஒருவர் உங்களிடம் உதவி கேட்கும்போது,அந்த உதவி செய்வதில் சிறிது சந்தேகமிருந்தாலும்,அந்த உதவியைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.

6.உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் கூட்டாளிகள்;நீங்கள் வாழும் உலகமே அதுதான்.அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

7.நீங்கள் செய்த தவற்றை ஒருவர் கண்டுபிடித்து சொன்னால்,தயங்காமல் ஒப்புக்கொள்ளுங்கள்.

8.மற்றவர்களின் குழந்தைகளிடம் எப்போதும் அன்பாக இருங்கள்.இதனால்,எல்லோருக்கும் உங்களைப் பிடித்துப்போகும்.

9.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை எனில்,தெரியாது என சொல்லிவிடுங்கள்.தெரியும் என்று கூறி,வகையாக மாட்டிக்கொள்ளாதீர்கள்.

10.வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.

11.பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.
12.பிறர் நேரத்தை வீணாக்க வேண்டாம்;அதே சமயம்,பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்க வேண்டாம்.

13. ஒருவரைப் பாராட்டும்போது தாரளமாக பாராட்டுங்கள்;போலியான பாராட்டுக்களை ‘அள்ளி’விட வேண்டாம்.

14.தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

15.உங்களின் வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

16.முடிவு செய்தல்,செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் (உங்களிடம் பணிபுரிபவருக்கு) முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

ஓம்சிவசிவஓம்

அவசியமான மறுபதிவு:நந்தன வருடத்தின் திருவாதிரை நட்சத்திர நாட்கள்






தென்னாடுடைய சிவனே போற்றி: எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற தெய்வீக வாசகங்களுக்கான ஆதாரங்களை நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருக்கிறோம்.
சிவபெருமானது அருளை பெருமளவு பெறவும்,விரைவாக பெறவும் நாம் சிவபெருமானது அவதார நட்சத்திரமான திருவாதிரையன்று அண்ணாமலைக்கு வருகை தர வேண்டும்;முடிந்தால் விரதமிருந்து(சாப்பிடாமல்)  திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நேரத்திற்குள் கிரிவலம் செல்ல வேண்டும்;
விரதமிருக்க இயலாதவர்கள்,சிறிது பால் மற்றும் பழங்கள் சாப்பிட்டுவிட்டு,கிரிவலம் செல்லலாம்.

அவ்வாறு கிரிவலம் செல்லும்போது,மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்திருக்க வேண்டும்;கிரிவலத்தை கிழக்குக் கோபுர வாசலுக்குள் இருக்கும் விநாயகரை முதலில் வழிபட வேண்டும்.பிறகு தேரடி முனீஸ்வரரை வழிபட்டு, அண்ணாமலையாரை கிழக்குக் கோபுர வாசலில் அமைந்திருக்கும் சாலையில் இருந்தவாறே அவரை நோக்கி வழிபட்டுவிட்டு, துவக்கிட வேண்டும்.

அஷ்ட லிங்கங்களும் 14 கிலோ மீட்டர்கள் தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.இந்த தூரத்தை கடக்க சராசரியாக 4 முதல் 6 மணி நேரம் வரை ஆகும்.இந்த 4 முதல் 6 மணி நேரமானது நமக்கு அருணாச்சலேஸ்வரர் வழங்கிய ப்ளாட்டின நேரம் ஆகும்.இந்த நேரத்தில் நாம் ஒவ்வொரு விநாடியும் ஓம்சிவசிவஓம் என்றவாறு ஜபித்தவாறே கிரிவலம் செல்ல வேண்டும்.
நாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையில் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் சேமிப்பாகிக்கொண்டே வரும்; (இதை துவைத்தால்,அதுவரையிலும் சேமிப்பாகியிருந்த மந்திர அலைகள் நீரில் கரைந்து போய்விடும்;எனவே,அண்ணாமலை கிரிவலம் வரும் போது மட்டும் அணியும் விதமாக ஒரு மஞ்சள் ஆடையை தனியாக தயார் செய்து வைக்கவும்)

நமது இரண்டு உள்ளங்கைகளில் இருக்கும் இரண்டு ருத்ராட்சங்களிலும் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் சக்தி சேமிப்பாகிக் கொண்டே வரும்;(நமது ஆயுள் முழுக்க இவ்வாறு ஜபித்த பின்னர்,நமது மூன்றாவது தலை முறை வரையிலும் இவ்வாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைத்துவிட்டால்,நமது நான்காவது தலைமுறையில் சிவனது கடாட்சம் பெற்ற ஞானி பிறப்பார்.ஒரு குடும்பத்தில் ஞானி பிறந்தால்,அவரோடு முடிவடையும் முந்தைய 71 தலைமுறையினருக்கு முக்தி கிடைக்கும்)
ஒவ்வொரு லிங்கத்தின் சன்னதியிலும் சில நிமிடங்கள் அமர்ந்தும்,ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த அஷ்ட லிங்கங்களின் சன்னதியிலும்,அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மஞ்சள் நிறத் துண்டு விரிக்காமலும்(விரித்தாலும் தப்பில்லை) ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ஏனெனில்,மலையே சிவபெருமானாக இருப்பதாலும்,அவரை நாம் வலம் வருவதே கிரிவலம் எனப்படுவதாலும்,இந்த அண்ணாமலையில் மட்டும் ஓம்சிவசிவஓம் எந்த நேரமும் ஜபித்துக்கொண்டே இருக்கலாம்;


நாம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது நமது முந்தைய மனிதப்பிறவிகளும் நம்முடன் சூட்சுமமாக கிரிவலம் வரும்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அகஸ்தியர் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.இதன் மூலமாக நமது கர்மவினைகள் விரைவாக தீர்ந்துவிடும்.

இனி திருவாதிரை நட்சத்திர நாட்கள்:

8.1.12 ஞாயிறு முழுவதும்;

4.2.12 சனி காலை 11.30 முதல் 5.2.12 ஞாயிறு மதியம் 12.22 வரை;

2.3.12 வெள்ளி இரவு 7 மணி முதல் 3.3.12 சனி இரவு 8.18 வரை;

30.3.12 வெள்ளி விடிகாலை 2.14 முதல் மாலை 4.01 வரை;

26.4.12 வியாழன் காலை 10.07 முதல் 27.4.12 வெள்ளி காலை 11.38 வரை;

23.5.12 புதன் மாலை 5.38 முதல் 24.5.12 வியாழன் இரவு 7.16 வரை(24.5.12  பகல் முழுவதும் என கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்)

19.6.12 செவ்வாய் இரவு 1.08 முதல் 20.6.12 புதன் இரவு 2.52 வரை;

17.7.12 செவ்வாய் காலை 8.32 முதல் 18.7.12 புதன் காலை10.21 வரை;

13.8.12 திங்கள் மதியம் 3.48 முதல் 14.8.12 செவ்வாய் மாலை 5.42 வரை;

9.9.12 ஞாயிறு இரவு 11.01 முதல் 10.9.12 திங்கள் நள்ளிரவு 1.02 வரை( 10.9.12 சோமவாரம் + திருவாதிரை+ சூரியன் ஆட்சி பெறும் மாதமான ஆவணி மாதம்=மிக மிக புனிதமான நாள்; சிவ கடாட்சம் பெருமளவு கிடைக்கக் கூடிய நாள் இது)

7.10.12 ஞாயிறு காலை 6.08 முதல் 8.10.12 திங்கள் காலை 9.54 வரை;

3.11.12 சனி மதியம் 1.14 முதல் 4.11.12 ஞாயிறு மதியம் 3.24 வரை;

30.11.12 வெள்ளி மாலை 5.19 முதல் 1.12.12 சனி இரவு 10.34 வரை;

27.12.12 வியாழன் நள்ளிரவு 3.24 முதல் 28.12.12 வெள்ளி நள்ளிரவு 5.45 வரை(திருவாதிரை பவுர்ணமி எனப்படும் ஆருத்ரா தரிசன நாள்!!!)

24.1.13 வியாழன் காலை 10.36 முதல் 25.1.13 வெள்ளி மதியம் 12.59 வரை;

20.2.13 புதன் மாலை 5.52 முதல் 21.2.13 வியாழன் இரவு 8.18 வரை;

19.3.13 செவ்வாய் நள்ளிரவு 1.11 முதல் 20.3.13 புதன் நள்ளிரவு 3.39 வரை;(20.3.13 முழுவதும் என கணக்கில் கொள்ளலாம்)

நந்தன ஆண்டின் சனிப்பிரதோஷங்கள்:

2.6.2012

16.6.2012

13.10.2012

27.10.2012

23.2.2013

9.3.2013

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து ஆண்டுகள் தினமும் சிவாலயத்திற்குச் சென்றதாக அர்த்தம்; இந்த நன்னாளில் அண்ணாமலைக்குச் சென்று,பிரதோஷ நேரத்திற்குள் கிரிவலம் முடித்து,பிரதோஷத்தில் கலந்து கொள்வது சிறப்பு;


அல்லது


நவகைலாசங்கள் எனப்படும் நவக்கிரகங்களின் தன்மையோடு இருக்கும் சிவாலயங்கள் நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கின்றன.இதில் சனிபகவானின் அம்சமான சிவாலயமாக ஸ்ரீவைகுண்டம் இருக்கிறது.மிகச் சிறிய கோவில்;இந்த கோவிலுக்குள் நுழைந்தாலே,மனதிற்குள் ஒருவித ஆழ்ந்த அமைதியை உணர முடியும்.இங்கு இந்த 6 சனிப்பிரதோஷங்களுக்கும் சென்று ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாமே?
திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே ஸ்ரீவைகுண்டம் அமைந்திருக்கிறது.


ஓம்சிவசிவஓம்

அவசியமான மறுபதிவு:நந்தன வருடத்தின் துவாதசி திதி வரும் நாட்கள் பட்டியல்








நமது கர்மவினையை மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு என்ற ஆன்மீகப் பேருண்மையை ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கண்டறிந்துள்ளார்.ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகளாகிய நீங்கள், உங்களின் அனைத்துப்  பிரச்னைகளும் வெகு விரைவாக தீரவே அன்னதானத்திலேயே மிக உன்னதமான அன்னதானத்தை தங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் நாம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்? அவ்வளவு புண்ணியம் நம்ம அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒரு வேளைக்கு ஒருவர் வீதம்,மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?
நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 (ஒரு கோடி)பேர்களுக்கு காசியில் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.அது மட்டுமா? ,மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.ஆதாரம்:சிவமஹாபுராணம்(சிவபுராணம்)
அதென்ன முக்தி?: 84,00,000 விதமான உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன.இந்த 84,00,000 விதமான உயிரினங்களாக நாம் பிறந்து,பிறந்து,பிறந்து கடைசியில் நமக்கு கடவுளால் வழங்கப்படுவது மனிதப்பிறவி!!!
மனிதனாகப் பிறந்த பின்னர்,நமது தீய எண்ணங்களால் பாவங்களையும்,நல்ல எண்ணங்களால் புண்ணியத்தையும் ஒவ்வொரு மனித பிறவியிலும் சேகரிக்கிறோம்;இந்த மனித இயல்பினால்,ஒவ்வொரு ஐந்து மனித பிறவிகளுக்கும் ஒரு முறை    நாம் பணக்காரனாகவோ,பரம ஏழையாகவோ பிறந்துகொண்டே இருப்போம்;

இந்த மனித பிறப்பு,மனித இறப்பு சுழலில் இருந்து விடுபட நாம் பல ஜன்மங்களாக தியானம்,தவம்,அன்னதானம்,ஆடைதானம்,ருத்ராட்ச தானம்,தீபதானம்,கோவில் கட்டுதல்,கல்வி தானம்,தண்ணீர் தானம் என பலவிதமான தானங்களைச் செய்ய வேண்டும்.அப்படிச் செய்தாலும்,நமது பாவக்கணக்கு ஜீரோ பேலன்ஸ் வரும் வரை பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.



நிறைய்ய புண்ணியம் செய்தால்,இந்திர உலகம்,சந்திர உலகம்,வைகுண்டம்,சிவ லோகம் ,சங்கு உலகம்,சக்கர உலகம் என இவற்றில் ஏதாவது ஒரு உலகிற்குச் சென்று சகல விதமான போகங்களை(ஜாலிகளை!!!) அனுபவித்துவிட்டு,மீண்டும் மனித பிறப்பாக பிறக்க வேண்டும்.

நிறைய்ய பாவங்களை செய்தால்,பூமிக்கு கீழே(தெற்கு திசையில் விண்வெளியில் சூட்சுமமாக இருக்கும்) நாக உலகம்,பேய் உலகம்,பைசாச உலகம்,நரக உலகம் போன்றவைகளுக்குப் போய் பூமியில் இதுவரையில்லாத கொடூரமான சித்திரவதைகளை பல ஆயிரம்(?!?!!) ஆண்டுகளாக அனுபவித்துவிட்டு,மீண்டும் ரொம்ப சாதாரண மனிதனாக பூமியில் பிறக்க வேண்டும்.ஆக,இந்த பூமியே கர்ம பூமி; மற்றவை அனைத்தும் மோட்ச பூமி;

இந்த பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து தப்பிக்க துவாதசி திதி அன்னதானம் செய்வதன் மூலமாக ஒரு போதும் பூமியில் நாம் மனித பிறவியெடுக்காமலேயே போவதுதான் முக்தி!!!
அசைவ அன்னதானம் செய்யக்கூடாது;நள்ளிரவு அன்னதானம் செய்யக்கூடாது;கட்டாயப்படுத்தி அன்னதானம் செய்யக்கூடாது;வீடு வாசல் இல்லாதவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தால் மட்டுமே அது அன்னதானம் என்று கருதப்படும்.அன்னதானம் பெறுபவர்களை ஒரு விநாடி மானசீகமாக நன்றி செலுத்த வேண்டும்.(முடிந்தால் கையெடுத்தும் கும்பிடலாம்)

இந்த நாட்களில் ஏதாவது ஒரே ஒரு நாளை நாம் தேர்ந்தெடுத்து நமது குடும்பத்தோடு அண்ணாமலைக்குச் செல்வோம்;குறைந்தது காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவு ஒருவர் வீதம் அன்னதானம் செய்வோம்;முடிந்தால் மதிய நேர அன்னதானத்தை எட்டாவது லிங்கமான ஈசான லிங்கம் இருக்கும் பகுதியில் செய்வது மிகுந்த நன்மைகளையும்,புண்ணியத்தையும் தரும்.மேலும் நமது வாதைகளை அறவே நீக்கும்.

வசதியிருப்பவர்கள் எட்டு லிங்கங்களின் வாசல்களிலும் அன்னதானம் செய்வது நன்று.ஒவ்வொரு லிங்கத்திலும் இருக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்ய நவக்கிரகங்களினால் ஏற்பட இருக்கும் பிரச்னைகள்,கர்மங்கள் முழுமையாக விலகிவிடும்.இதை துவாதசி திதி அன்னதானம் செய்த சில நாட்களிலேயே உணரலாம்.எல்லாம் அருணாச்சலத்தின் மகிமை!!!

நந்தன ஆண்டின் துவாதசி திதி வரும் நாட்கள்

17.4.12 செவ்வாய் காலை 8.12 முதல் 18.4.12 காலை 8.52 வரை;

2.5.12 புதன் மாலை 6.49 முதல் 3.5.12 வியாழன் மாலை 4.54 வரை;

16.5.12 புதன் இரவு 10.39 முதல் 17.5.12 வியாழன் நள்ளிரவு 12.09 வரை(17.5.12 முழுவதும் என்று எடுத்துக் கொள்ளவும்);

1.6.12 வெள்ளி முழுவதும்;

15.6.12 வெள்ளி மதியம் 1.48 முதல் 16.6.12 சனி மதியம் 3.42 வரை;

30.6.12 சனி காலை 10.07 முதல் 1.7.12 ஞாயிறு காலை 7.10 வரை;

15.7.12 ஞாயிறு முழுவதும்;

29.7.12 ஞாயிறு மாலை 5 முதல் 30.7.12 திங்கள் மதியம் 2.46 வரை;

14.8.12 செவ்வாய் முழுவதும்(இரவு 9.14 வரை);

28.8.12 செவ்வாய் முழுவதும்;

12.9.12 புதன் காலை 10.18 முதல் 13.9.12 வியாழன் காலை 10.36 வரை;

26.9.12 புதன் காலை 10.20 முதல் 27.9.12 வியாழன் காலை 9.20 வரை;

12.10.12 வெள்ளி முழுவதும்;

26.10.12 வெள்ளி முழுவதும்;

10.11.12 சனி காலை 11.54 முதல் 11.11.12 ஞாயிறு காலை 10.26 வரை;

24.11.12 சனி மதியம் 1.40 முதல் 25.11.12 ஞாயிறு மதியம் 2.45 வரை;

10.12.12 திங்கள் முழுவதும்;

24.12.12 திங்கள் காலை 7.34 முதல் இன்று முழுவதும்;

8.1.13 செவ்வாய் காலை 10.20 முதல் 9.1.13 புதன் காலை 8.02 வரை;

23.1.13 புதன் முழுவதும்;

7.2.13 வியாழன் முழுவதும்(மாலை 6.36 வரை);

22.2.13 வெள்ளி முழுவதும்;

8.3.13 வெள்ளி முழுவதும்;

23.3.13 சனி மாலை 4 முதல் 24.3.13 ஞாயிறு மாலை 4.39 வரை;

6.4.13 சனி மாலை 5.46 முதல் 7.4.13 ஞாயிறு மாலை 4.36 வரை;

இந்துக்காலக்கணக்குப்படி,ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலான காலமே ஒரு நாள் எனப்படும்.ஆனால்,இந்த பட்டியலில் பல துவாதசி திதி நாட்கள் ஒரு நாள் மதியம் அல்லது மாலையில் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை அமைந்திருக்கின்றன.அந்த நாட்களைத் தவிர,முழுநாட்களில் வரும் துவாதசி திதி நாட்களைப் பயன்படுத்தவும்.


ஒரு  நாளில்,காலை நேரம் என்பது  4.30 முதல் 11 மணிவரையிலான காலகட்டம் ஆகும்;
மதிய நேரம் என்பது மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரையிலான காலகட்டம் ஆகும்;
இரவு நேரம் என்பது இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலான காலகட்டம் ஆகும்.ஆக,இந்த நேரங்களுக்குள் அன்னதானம் செய்துவிட வேண்டும்.

இந்த அரிய ரகசியத்தை எனக்கு அருளிய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுள்கால சீடரும்,எனது ஆன்மீக குருவுமாகிய புளியங்குடி சிவமாரியப்பன் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!


ஓம்சிவசிவஓம்


அவசியமான மறுபதிவு:கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்









கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.


நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
இந்த குடுப்பினை நம்  அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.  “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.


2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.


இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.


நந்தன ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:

30.1.12 திங்கள் காலை 11.05 முதல் மதியம் 1.05 வரை

26.2.12 ஞாயிறு காலை 9 முதல் 11 வரை

27.2.12 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை

13.3.12 செவ்வாய் இரவு 10.10 முதல்  12.10 வரை

25.3.12 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை

9.4.12 திங்கள் இரவு 8.30 முதல் 10.30 வரை

20.4.12 வெள்ளி இரவு 7.35  முதல் 9.35 வரை

7.5.12 திங்கள் மாலை 6.30 முதல் 8.30 வரை

18.5.12 வெள்ளி விடிகாலை 4.05 முதல் 6.05வரை

2.6.12 சனி காலை 8.36 முதல் 10.36 வரை;மதியம் 2.36 முதல் 4.36 வரை;இரவு 8.36 முதல் 10.36 வரை;

3.6.12  ஞாயிறு மாலை 4.44 முதல் 6.44 வரை

15.6.12 வெள்ளி காலை 5.50 முதல்  7.50 வரை

16.6.12 சனி காலை 8.04 முதல் 10.04 வரை;மதியம் 2.04 முதல் 4.04 வரை; இரவு 8.04 முதல் 10.04 வரை;

1.7.12 ஞாயிறு மதியம் 1.50 முதல் 3.50 வரை;

28.7.12 சனி மதியம் 1.08 முதல் 3.08 வரை;

8.8.12 புதன் இரவு 10.40 முதல் நள்ளிரவு 12.40 வரை;

25.8.12 சனி காலை 11.24 முதல் 12.07 வரை;

4.9.12 செவ்வாய் இரவு 8.35 முதல் 10.35 வரை;

21.9.12 வெள்ளி காலை 9.24 முதல் 11.24 வரை;

1.10.12 திங்கள் இரவு 7 முதல் 9 வரை;

13.10.12 சனி காலை 6.16 முதல் 8.16 வரை;மதியம் 12.16 முதல் 2.16 வரை; மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;

18.10.12 வியாழன் காலை 8 முதல் 11 வரை;

27.10.12 சனி காலை 6.02 முதல் 7.32 வரை;காலை 11.32 முதல் மதியம் 1.32 வரை;மாலை 5.32 முதல் இரவு 7.32 வரை;நள்ளிரவு 11.32 முதல் 1.32 வரை;

29.10.12 திங்கள் மாலை 5.12 முதல் 7.12 வரை;

15.11.12 வியாழன் காலை 6.15 முதல் 8.15 வரை;

25.11.12 ஞாயிறு மாலை 3.25 முதல் 5.25 வரை;

12.12.12 புதன் விடிகாலை 4.35 முதல் 6.30 வரை;

23.12.12 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை;

19.1.13 சனி மதியம் 12.55 முதல்  2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;

23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை;  இரவு 9.30 முதல் 11.30 வரை;

9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;


இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்; 



ஓம்சிவசிவஓம்