RightClick

தொடரும் அமானுஷ்யங்கள்


“நமக்குள் இருக்கும் ஆத்மாவைப்பற்றி அலசுபவனும்,அலசாதவனும் அதாவது ஆன்மாவின் நன்மையைத் தேடுபவனும் & தேடாதவனும் முறையே தனக்குத் தானே நண்பனாகவும்,எதிரியாகவும் இருக்கிறான் என்கிறது கீதை.
தர்மம் என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு தாங்கிக் கொண்டிருத்தல் என்று பொருள்.அதாவது நமது ஆத்மாவை தாழவிடாமல் தாங்கிப் பிடித்திருப்பது எதுவோ அதுவே தர்மம் ஆகும்.உடல்,வாக்கு ஆகிய இரண்டிலும் ஒருவன் சுத்தமானவனாகவும் இருக்க வேண்டுமானால்,அவன் மனதை சுத்தமானதாக வைத்திருக்க வேண்டும்.இத்தகைய மனதை சுத்தப்படுத்துவதில் எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ, அவன் தான் தர்மத்தில் சித்தி பெறுகிறான்.மனம் தெளிவாக இருப்பதும்,பிறருடன் பேசும்போது கூட கபடம் இல்லாமல் இருப்பதும் மனதின் உத்தமமான  தர்மம் மற்றவர்களுடைய  மனது புண்படும்படி பேசாமல் இருப்பதும்,நன்மையான அதே சமயம் உண்மையான வார்த்தை பேசுவதும், வேத சாஸ்திரங்களுக்கு உட்பட்டு நடத்தலும்,மந்திரங்களை மனதுக்குள் ஜெபிப்பதும் வாக்கின் உத்தமமான தர்மம் ஆகும்.ஆத்ம ஞானிகள்,பெரிய குருவாக விளங்குபவர்கள்,ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து வரும் மடாதிபதிகள் ஆகியோரை வணங்குபவன் கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமலிருப்பதும்,தம்மால் இயன்றளவு தான,தருமங்கள் செய்வதும் மரபான கடமை ஆகும்.இவைகளுடன் தாம் சுத்தமாக(மனச் சுத்தம்,உடல் சுத்தம்,ஆத்ம சுத்தம்) இருப்பதும் தான்.இன்றைக்கு எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட தர்மங்கள் இருப்பது தெரியும்? என்பது எனக்குத் தெரியாது.ஜோதிடம்,பேச்சுவார்த்தை,பரிகாரம்,வைத்தியம் இந்த நான்கினையும் சாஸ்திர சம்பிரதாயத்திற்கு உட்பட்டுச் சொல்லாதவன் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவனாகிறான் என்கிறது சாஸ்திரம்.தீபத்தினுடைய நிழலும்,மனிதனுடைய நிழலும் யார்மேல் படுகிறதோ,அந்த மனிதனுடைய புண்ணியத்தை அந்த நிழலானது அபகரித்துக்கொள்ளும்.இதுவே வேதம்,சாஸ்திரங்களை அறிந்தவர்களுடைய நிழல் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தைக் கூட போக்கும் வல்லமை பெற்றது.


இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்லும்போது முன்னால் செல்லும் கூட்டத்தைக் காட்டிலும்,பின்னால் செல்லும் கூட்டம் சற்று அதிகமாகத் தானிருக்கிறது.இதற்கு காரணம் என்ன என்று யாரும் யோசிப்பதில்லை.இதற்கும் காரணமிருக்கிறது.
சாஸ்திர சம்பிரதாயம் தெரிந்து,வேதம் கற்றவனுடைய வயிற்றுக்கு யார் உணவளிக்கிறார்களோ அந்த உணவளித்தவனை ஏழு கோத்திரம்,நூற்றியொரு குலத்துடனும் கடைத்தேற்றும்படி செய்யும்.ஜோதிட சாஸ்திரத்தில் மகான்கள் சொல்லியுள்ளபடி பரிகாரம் செய்து நடக்கப்போகும் விதியை வென்றுவிடமுயற்சிக்காமல் “எல்லாம் விதிப்படி தான் நடக்கும்” என்று சும்மா சொல்லிக் கொண்டிருப்பவர்களை விதியானது விளையாடிவிட்டுப் போகும்.வேத சாஸ்திரங்களில் சொல்லியுள்ளது பரிகாரம் செய்து கொள்பவரையும்,இறைவனை நோக்கி தவம் செய்பவர்களையும் பஞ்சபூத சக்திகளையும் வசப்படுத்தத் தெரிந்தவனையும் விதி ஒன்றும் செய்வதில்லை என்பது எனது கருத்து.மார்க்கண்டேயன் செய்த தவ வலிமையால் என்றும் பதினாறு வருட ஆயுளையும்,துருவன் செய்த தவவலிமையால் துருவ பதத்தையும்(துருவ நட்சத்திரத்தையும்),ராவணன் செய்த தவவலிமையால் 3,50,00,000 வருட ஆயுளையும் அருச்சுனன் செய்த தவ வலிமையால் பாசுபத அஸ்திரத்தையும் சாவித்ரி செய்த தவ வலிமையால் கணவன் தீர்க்காயுளுடன் இருக்கப் பெற்றார்கள்.பகீரதன் கங்கா நதியை பூமிக்குக் கொண்டு வந்தான்.இப்படி இவர்கள் எல்லாம் விதியை நம்பியிராமல் தவத்தை நம்பினார்கள்.அதன் பலனாக தவ வலிமையானது விதியைத் தடுத்து விரும்பியதைத் தந்தது.
நன்றி:ஆவிகள் உலகம்,பக்கம்4,5.