RightClick

தேய்பிறை அஷ்டமியின் மகத்துவம்: யூ ட்யூப்பில் பேச்சு

கொல்லிமலை சித்தர் காகபுஜண்டர் தருமலிங்கசுவாமிகளின் தேய்பிறை அஷ்டமி பற்றிய பேச்சு:http://www.youtube.com/watch?v=2EEamxPL3mQ&feature=share இல் காணுங்கள்.அண்ணாமலைக்கு அருகில் இருக்கும் பெரியகுளம் காகாஸ்ரமத்துக்கு வாருங்கள்.பைரவரின் அருள் மழையைப்பெறுங்கள்.நன்றி:நமது அயல்நாட்டு வாசகர்.ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

கர்மவினைகளைத் தீர்க்க உதவும் ஒருநாள் பைரவ மந்திரஜபம்


பின்வரும் நாட்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.அந்த நாளுக்கு முந்தைய 3 நாட்களும்,அந்த நாளன்றும்,அந்த நாளுக்கு பிந்தைய  3 நாட்களும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்;அந்த நாள் மட்டும் தாம்பத்தியம் கூடாது;இந்த நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் புகைப்படம் ஒன்றை லேமினேசன் செய்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.புகைப்படத்தை கிழக்கு நோக்கி வைக்கவும்;புகைப்படத்தின் அருகில் வடக்கு நோக்கி எரியுமாறு ஒரு நெய்தீபம் ஏற்றவும்;பத்தி ஏற்றிவைக்கவும்.படையலாக டயமண்டு  கல்கண்டு,மூன்று வெவ்வேறுவிதமான பழங்களை படையலாக வைக்கவும்;காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பின்வரும் பைரவர் மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும்.ஒரு மணி நேரத்துக்கு 10 முதல் 15 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.இப்படி ஒரே ஒரு நாள் சொன்னாலே,நமது கர்மவினைகள் அனைத்தும் நசிந்துபோகும்.இந்த ஒரே ஒரு நாளில் வேறு எவரிடமும் பேசுவதைத் தவிர்க்கவும்.போனை,தொலைபேசியை,டிவியை,கணினியை மற்றும் அனைத்து தகவல் தொடர்புசாதனங்களையும் அணைத்துவிடவும்.முடிந்தவரையிலும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்;இயலாதவர்கள் பசும்பாலும்,வாழைப்பழமும் சாப்பிடலாம்.அல்லது ஒருவேளை உணவு அருந்தலாம்.ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
இந்த பைரவ மந்திரஜபம் நிறைவடைந்த சில நாட்களுக்குள் உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த சிரமங்கள் குறைந்துவிட்டதாக நீங்கள் உணர்வீர்கள்.ஒருவேளை அப்படி உணரமுடியாவிடில் மேலும் ஓரிரு நாட்களுக்கு இதேபோல் பைரவ மந்திர ஜபம் செய்யலாம்.இதன்  மூலமாக,இப்பிறவியில் அனைத்து கர்மவினைகளையும் தீர்த்துவிட்டு,நிம்மதியும்,செல்வ வளமும் பெற முடியும்.போட்டோ வைக்காமல்,அருகில் இருக்கும் பைரவ ஆலயம் அல்லது சிவாலயத்தில் இருக்கும் பைரவர் சன்னதியில் இவ்வாறு வழிபாடு செய்யலாம்.
இந்த வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்:
13.4.2012  வெள்ளி
13.5.2012 ஞாயிறு
11.6.2012 திங்கள்
11.7.2012 புதன்
9.8.2012 வியாழன்
8.9.2012 சனி
8.10.2012 திங்கள்
6.11.2012 செவ்வாய்
6.12.2012 வியாழன்
5.1.2013 சனிக்கிழமை
3.2.2013 ஞாயிறு
4.3.2013 திங்கள்
3.4.2013 புதன்
நன்றி:பைரவ ரகசியம் 

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

குப்பையில் ‘கோமேதகம்’


சென்னையின் புறநகர்ப் பகுதியான போரூரையடுத்த மவுலிவாக்கம் பஞ்சாயத்தில் கோவிந்தராஜன் நகரில் 50 அடுக்குமாடி வீடுகள்  உள்ளன.அங்குள்ள அனைவருக்கும் வீட்டிலேயே குப்பையை மக்க வைத்து உரமாக்குவதற்கான எண்ணம் ஏற்பட்டுள்ளது.மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள்ளாக இந்த மாற்றம்.எந்த ஒரு சிறிய ப்ளாஸ்டிக் பையோ,காகிதக் குப்பையோ அதை இப்பகுதி சிறுவர்கள் எடுத்து வீட்டு வாசலில் உள்ள பொதுவான குப்பைக் கூடையில் போட்டுவிடுவர்.தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் இயக்குநர் (பயிற்றுவித்தல்)ஏ.சுப்பையா இங்கே 2 ஆண்டுகளுக்கு முன் வந்தவுடன் இந்த மாற்றம் தொடங்கியது.
காய்கறி கழிவுகள்,காகிதம் கழிவுகள் உட்பட சமையலறை குப்பையை மக்க வைத்து இயற்கை உரமாக மாற்ற முடியும்.ஒரு சிறு குழி போதும்.அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்போர் பூந்தொட்டிகளில் உரம் தயாரிக்கலாம்.ஒவ்வொரு மனிதன் மூலமாக 200 முதல் 500 கிராம் குப்பை சேர்கிறது.குப்பையை மக்க வைத்து உரமாக்கினால் இதை 10 கிராம் ஆக்கிவிடலாம் என்கிறார் சுப்பையா.இவர் கோவிந்தராஜன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் காரியதரிசியாகியிருக்கிறார்.இதனால்,குப்பையை மக்கச் செய்து ‘வீட்டு உரம்’ தயாரிக்கும் வேலை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
நன்றி:த ஹிந்து 9.8.12

வைஷ்ணவ வழிபாடு பிறந்த புராதன வரலாறு


வெகுகாலத்துக்கு முன்பு,(சிலபல கோடி ஆண்டுகளுக்கு முன்பு) மஹாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து படைக்கும் கடவுளாகிய அயன்(நான்முகன் எனப்படும் பிரம்மா) பிறந்தார்.பிறந்ததுமே,அகங்காரத்தால்,தனது தந்தையாகிய மஹாவிஷ்ணுவை வம்புக்கிழுத்தார்;அதன் விளைவாக இருவருக்கும் போர் உண்டானது.இந்த போர் நடக்குமிடத்தில் திடீரென ஒரு நெருப்பு வானுக்கும் பூமிக்கும் உண்டானது.திடீரென இவ்வாறு ஒரு நெருப்பு  உண்டானதால்,அவர்களின் போர் நின்றது;யார் இந்த நெருப்பின் அடியையும் முடியையும் முதலில் பார்க்கிறார்களோ,அவர்களே போரில் வென்றவர்கள் என்று சவால் விட்டனர்.
இந்த சவாலின் விளைவாக பறவை வடிவமெடுத்து பிரம்மா மேலே பறக்கத் துவங்கினார்;மஹாவிஷ்ணுவோ வராகம்(பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டியவாறு பாதாளம் நோக்கிச் சென்றார்.பல கோடி ஆண்டுகளாகியும்,இருவராலும் அடியையும்,முடியையும் பார்க்க முடியவில்லை;இந்த சூழ்நிலையில் பறவையாக மேலே மேலே பறந்து சென்று கொண்டிருந்த பிரம்மாவை ஒரு தாழம்பூ கடந்து சென்றது(கீழே விழுந்துகொண்டிருந்தது)உடனே,இருவரும் பேசினார்கள்.அதன்படி,
பிரம்மா,தாழம்பூவே நீ எங்கிருந்து வருகிறாய்? எனக் கேட்டார்.தாழம்பூ, “நான் இந்த நெருப்பின் உச்சியிலிருந்து வருகிறேன்”என்றது.
பிரம்மா, “இந்த நெருப்பின் உச்சியிலிருந்து எப்போது நீ விழத் தொடங்கினாய்?” எனக் கேட்டார்.
அதற்கு அந்த தாழம்பூ சொன்ன பதிலைக் கேட்டு,பிரம்மாவுக்கு தலை சுற்றியது.பிரம்மா இதுவரை எத்தனை கோடி வருடங்கள் பயணித்தாரோ,அதைவிட பல கோடி மடங்கு வருடங்களை அந்த தாழம்பூ சொன்னது.
தாழம்பூ பிரம்மாவிடம் கேட்டது: எதற்காக இதைக் கேட்கிறீர்கள்?
பிரம்மா தனக்கும்,திருமாலுக்கும் நடந்த போரைப் பற்றியும்,அப்போது உண்டான இந்த நெருப்பு பற்றியும் விவரித்து,பிரம்மா தாழம்பூவிடம் ஒரு உதவி கேட்டார்.
அதன்படி,பிரம்மா,இந்த நெருப்பின் முடியை தரிசித்தார்;அப்படி தரிசித்ததை நான் பார்த்தேன் என்று தாழம்பூ சொல்ல வேண்டும் என்பது முடிவானது.இருவரும் மீண்டும் கீழ் நோக்கிப் பயணித்தனர்.வராக அவதாரம் எடுத்த திருமாலிடம் நடந்ததை(பொய்) கூறினர்.இதன்விளைவாக,திருமால்  தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பிரம்மாவை துதித்து வழிபடத் துவங்கினார்.அப்போது அந்த நெருப்பு மறைந்து சதாசிவன் தோன்றினார்.அந்த நெருப்பு தோன்றிய இடமே அண்ணாமலை.எழுதப்படாத பிரபஞ்சவரலாற்றுக்கும் முன்பிருந்தே இந்த திரு அண்ணாமலை இருந்து வருகிறது என்பதற்கு இந்த வரலாறு ஆதாரம் என எடுத்துக்கொள்ளலாம்.
பொய் சொன்ன தாழம்பூவுக்கு சாபமளித்தார்.இனிமேல் நீ எந்த தெய்வ வழிபாட்டுக்கும் உதவமாட்டாய்.
பொய் சொல்லத் தூண்டிய பிரம்மாவுக்கு, உனக்கு பூவுலகத்தில் வழிபாடு இல்லாமல் போகட்டும் என்று சாபமும்,தனது படைப்பாகிய பைரவரிடம்,பொய் சொல்லத் தூண்டிய பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கிள்ளும்படி உத்தரவிட்டார்.
அவ்வாறு கிள்ளியதும்,மஹாவிஷ்ணு சதாசிவனிடம்,பிரம்மாவின் சார்பாக மன்னிப்புக் கேட்டார்.என்னதான் இருந்தாலும் பிரம்மா எனது மகன்! எனவே,தாங்கள் பெருந்தன்மையோடு பிரம்மாவை மன்னிக்க வேண்டும் என வேண்டி,பலவிதமாக சதாசிவனை துதித்தார்.
இதனால் பெருமகிழ்ச்சியடைந்த சதாசிவன்,மஹாவிஷ்ணுவுக்கு பல வரங்களை தந்தருளினார்.அதில் ஒன்றுதான்
“இனி பூலோகத்தில் உன்னையும் வழிபடுவார்கள்” என வரம் தந்தருளினார்.ஆதாரம்:சிவமஹாபுராணம்,வித்யேஸ்வர சம்ஹிதை,பக்கங்கள்1114,1115,1116.
பைரவர்களில் ஸ்ரீகுரோதன பைரவர் முக்கியமானவர் ஆவார்.இவரே ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு சங்கு சக்கரங்களையும்,கருட வாகனத்தையும் வழங்கியவர்.ஸ்ரீமஹாவிஷ்ணு வழங்கும் அனைத்து வரங்களையும் அருள்பவர்.அஷ்டலட்சுமிகளின் கடாட்சத்தையும்,கர்ண எட்சிணி முதல் அஷ்ட எட்சிணி வசியங்களையும் உபாசிப்பவனுக்கு அருள்பவர்.அஷ்ட வீரட்டான பைரவ ஸ்தலங்களில் திருவிற்குடியில் ஸ்ரீ குரோதன பைரவர் அருளாட்சிபுரிந்துவருகிறார்.இந்த ஊர் திருவாரூர் டூ நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கிறது.இந்த கோவில் மேற்கு நோக்கிய திருக்கோவில் ஆகும்.இங்கு ஸ்ரீகுரோதன பைரவர் சிவலிங்க வடிவத்தில்,ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
இங்குதான் மஹாவிஷ்ணு தவமிருந்து,ஸ்ரீகுரோதன பைரவரிடமிருந்து சங்கு சக்கரங்களைப் பெற்றார்.இதனால் தான் இங்கு மட்டும் பைரவருக்கு துளசிமாலையால் அர்ச்சனை நடைபெற்றுவருகிறது.ஸ்ரீமஹாலட்சுமி சன்னதியும் இங்கு சிறந்து விளங்குகிறது.
ஸ்ரீபைரவரின் அஷ்டோத்திர சத நாமாவளியில் 108 வது போற்றியாக ஸ்ரீவிஷ்ணவே என்று வரும்.இந்த ஸ்ரீவிஷ்ணவே போற்றி என்பது ஸ்ரீகுரோதன பைரவரைக் குறிக்கிறது.ஸ்ரீபைரவரின் 1008 போற்றியிலும் ‘ராமாய’ ,லக்ஷ்மிதராய,ஹரிநாம பாராணாய,நாராயணாய,கோபாலாய,க்ருஷ்ணாய என வருவதெல்லாம் ஸ்ரீகுரோதன போற்றியே ஆகும்.
ஸ்ரீகுரோதன பைரவரின் தியானம்:
திரிநேத்ரம் குமாரம் வரதம் சாந்தம் திகம்பரம்!
கதாம் ச சக்கரஞ்ச பான பாத்ரஞ் ச தாரிணம்!!
லக்ஷ்ம்யாச ஸகிதம் வாமே கருடாஸந ஸீஸ்ய்த்திதம்!
நீல வர்ணம் மஹா தேவம் வந்தே ஸ்ரீக்ரோத பைரவம்!!
இதன்பொருள்: மூன்று கண்களையுடையவர்;இளமையான தோற்றமுடையவர்;வேண்டிய வரங்களை வாரி வாரி வழங்குபவர்;சாந்தமான சொரூபர்;நிர்வாண ரூபமுடையவர்;கதை,சங்கு,சக்கரம்,கபால பான பாத்திரங்களை கரங்களில் ஏந்தி அருள்பவர்;கருட வாகனராய் ஸ்ரீ இலக்குமி தேவியுடன் எழுந்தருள்பவர்;நீல வண்ண மேனியரான ஸ்ரீகுரோதன பைரவரை வணங்குகிறேன்.
அஷ்ட லட்சுமிகளின் கடாட்சத்தை அள்ளி வழங்கும் குரோதன பைரவரை வெள்ளிக்கிழமைகளில் துளசியால் அர்ச்சித்து வெள்ளிக்கிழமையும்,பவுர்ணமியும்; வெள்ளிக்கிழமையும் அஷ்டமியும் சேர்ந்து வரும் திருஓண(சிராவண) நட்சத்திர நாட்களில் உபாசித்து விரதமிருந்து வந்தால்,வறுமை என்பது ஒருபோதும் வராது.
நன்றி:பைரவ ரகசியம் பகுதி1,பக்கங்கள்
 4,5,16,17.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

தொடரும் அமானுஷ்யங்கள்


“நமக்குள் இருக்கும் ஆத்மாவைப்பற்றி அலசுபவனும்,அலசாதவனும் அதாவது ஆன்மாவின் நன்மையைத் தேடுபவனும் & தேடாதவனும் முறையே தனக்குத் தானே நண்பனாகவும்,எதிரியாகவும் இருக்கிறான் என்கிறது கீதை.
தர்மம் என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு தாங்கிக் கொண்டிருத்தல் என்று பொருள்.அதாவது நமது ஆத்மாவை தாழவிடாமல் தாங்கிப் பிடித்திருப்பது எதுவோ அதுவே தர்மம் ஆகும்.உடல்,வாக்கு ஆகிய இரண்டிலும் ஒருவன் சுத்தமானவனாகவும் இருக்க வேண்டுமானால்,அவன் மனதை சுத்தமானதாக வைத்திருக்க வேண்டும்.இத்தகைய மனதை சுத்தப்படுத்துவதில் எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ, அவன் தான் தர்மத்தில் சித்தி பெறுகிறான்.மனம் தெளிவாக இருப்பதும்,பிறருடன் பேசும்போது கூட கபடம் இல்லாமல் இருப்பதும் மனதின் உத்தமமான  தர்மம் மற்றவர்களுடைய  மனது புண்படும்படி பேசாமல் இருப்பதும்,நன்மையான அதே சமயம் உண்மையான வார்த்தை பேசுவதும், வேத சாஸ்திரங்களுக்கு உட்பட்டு நடத்தலும்,மந்திரங்களை மனதுக்குள் ஜெபிப்பதும் வாக்கின் உத்தமமான தர்மம் ஆகும்.ஆத்ம ஞானிகள்,பெரிய குருவாக விளங்குபவர்கள்,ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து வரும் மடாதிபதிகள் ஆகியோரை வணங்குபவன் கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமலிருப்பதும்,தம்மால் இயன்றளவு தான,தருமங்கள் செய்வதும் மரபான கடமை ஆகும்.இவைகளுடன் தாம் சுத்தமாக(மனச் சுத்தம்,உடல் சுத்தம்,ஆத்ம சுத்தம்) இருப்பதும் தான்.இன்றைக்கு எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட தர்மங்கள் இருப்பது தெரியும்? என்பது எனக்குத் தெரியாது.ஜோதிடம்,பேச்சுவார்த்தை,பரிகாரம்,வைத்தியம் இந்த நான்கினையும் சாஸ்திர சம்பிரதாயத்திற்கு உட்பட்டுச் சொல்லாதவன் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவனாகிறான் என்கிறது சாஸ்திரம்.தீபத்தினுடைய நிழலும்,மனிதனுடைய நிழலும் யார்மேல் படுகிறதோ,அந்த மனிதனுடைய புண்ணியத்தை அந்த நிழலானது அபகரித்துக்கொள்ளும்.இதுவே வேதம்,சாஸ்திரங்களை அறிந்தவர்களுடைய நிழல் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தைக் கூட போக்கும் வல்லமை பெற்றது.


இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்லும்போது முன்னால் செல்லும் கூட்டத்தைக் காட்டிலும்,பின்னால் செல்லும் கூட்டம் சற்று அதிகமாகத் தானிருக்கிறது.இதற்கு காரணம் என்ன என்று யாரும் யோசிப்பதில்லை.இதற்கும் காரணமிருக்கிறது.
சாஸ்திர சம்பிரதாயம் தெரிந்து,வேதம் கற்றவனுடைய வயிற்றுக்கு யார் உணவளிக்கிறார்களோ அந்த உணவளித்தவனை ஏழு கோத்திரம்,நூற்றியொரு குலத்துடனும் கடைத்தேற்றும்படி செய்யும்.ஜோதிட சாஸ்திரத்தில் மகான்கள் சொல்லியுள்ளபடி பரிகாரம் செய்து நடக்கப்போகும் விதியை வென்றுவிடமுயற்சிக்காமல் “எல்லாம் விதிப்படி தான் நடக்கும்” என்று சும்மா சொல்லிக் கொண்டிருப்பவர்களை விதியானது விளையாடிவிட்டுப் போகும்.வேத சாஸ்திரங்களில் சொல்லியுள்ளது பரிகாரம் செய்து கொள்பவரையும்,இறைவனை நோக்கி தவம் செய்பவர்களையும் பஞ்சபூத சக்திகளையும் வசப்படுத்தத் தெரிந்தவனையும் விதி ஒன்றும் செய்வதில்லை என்பது எனது கருத்து.மார்க்கண்டேயன் செய்த தவ வலிமையால் என்றும் பதினாறு வருட ஆயுளையும்,துருவன் செய்த தவவலிமையால் துருவ பதத்தையும்(துருவ நட்சத்திரத்தையும்),ராவணன் செய்த தவவலிமையால் 3,50,00,000 வருட ஆயுளையும் அருச்சுனன் செய்த தவ வலிமையால் பாசுபத அஸ்திரத்தையும் சாவித்ரி செய்த தவ வலிமையால் கணவன் தீர்க்காயுளுடன் இருக்கப் பெற்றார்கள்.பகீரதன் கங்கா நதியை பூமிக்குக் கொண்டு வந்தான்.இப்படி இவர்கள் எல்லாம் விதியை நம்பியிராமல் தவத்தை நம்பினார்கள்.அதன் பலனாக தவ வலிமையானது விதியைத் தடுத்து விரும்பியதைத் தந்தது.
நன்றி:ஆவிகள் உலகம்,பக்கம்4,5.

மோதி மிதித்து விடு;அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு


பிரபல திரைப்பட பின்னணிப்பாடகி ஆஷா போஸ்லேயும்,தீஜன் பாயி என்ற கலைஞரும் டெல்லியில் ‘லிம்கா’ சாதனைகள் ஏடு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.அது தீஜனை கவுரவிக்கும் நிகழ்ச்சி!அந்தக் கலைஞருக்கோ ஆங்கிலம் ஒரு வார்த்தை கூடத் தெரியாது.நிகழ்ச்சியில் பேசியவர்கள் ஒருவர் பின் ஒருவராக நுனி நாக்கு ஆங்கிலத்தில் பிளந்துகட்டினார்கள்.ஏற்புரை வழங்க எழுந்தார் தீஜன். “எனக்கு ஆங்கிலம் தெரியாது;இங்கே உள்ள சூழல் கண்டு நான் மிரண்டு போயிருக்கிறேன்” என்று கூறிவிட்டு உட்கார்ந்தார்.ஆனால்,நிகழ்ச்சி தொடர்ந்து ஆங்கிலத்திலேயே நடந்தது.ஆஷா போஸ்லேக்கு இதையெல்லாம் பார்த்து முகம் சிவந்தது.அவரிடம் விழா அமைப்பாளர் ‘ஒரு பாட்டு பாடுங்களேன்’ என ஆங்கிலத்திலேயே கேட்டுக்கொள்ள சீறிவிட்டார் ஆஷா!
“இந்த நிகழ்ச்சியை நடத்துவது கோகோ கோலா கம்பெனி.உங்கள் கம்பெனியின் கோக் இப்போதுதான் அருந்தினேன்.தொண்டை கெட்டுவிட்டது.பாடமுடியாது” என்று கூறிவிட்டார்.

மனக்கட்டுப்பாடு தரும் பைரவ ஜபம் & பைரவ உபாசனையின் ஆரம்ப கட்டம்


மனதை தன் வசப்படுத்திட ஒரு வாரம் வரை இந்த பயிற்சியினை செய்ய வேண்டும்.இந்த ஒரு வாரத்துக்கு தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது;(அவ்வாறு இருக்க இயலாதவர்கள் இதை கண்டிப்பாக செய்யக் கூடாது.மீறினால்,எதிர்விளைவுகளாக தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும்;அந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாது:எச்சரிக்கை!!!)
ஒரு பக்கத்திற்கு இரண்டு இன்ச் வீதமாக 45 டிகிரி உள்ள ஒரு முக்கோணம் வரைய வேண்டும்.இது மெல்லிய கோடாக இருந்தால் போதும்.இதன் நடுவில் ஒரு கறுப்பு புள்ளியை இட வேண்டும்.வெள்ளையான சுவரில் நமது நெற்றிக்கு நேரான உயரத்தில் வருவதுபோல இந்த முக்கோணத்தை ஒட்ட வேண்டும்.அந்த சுவற்றில் வேறு நிறமோ,படங்களோ இருக்கக் கூடாது.
நிமிர்ந்து உட்கார்ந்து கண்கலின் இமையை அசைக்காமல் அந்த புள்ளியையே மூன்று நிமிடம் பார்க்க வேண்டும்.உடனடியாக கண்களை மூடி,நெற்றியின் நடுவில் நினைவை வைத்துப் பார்த்தால் இளஞ்சிவப்பு வெள்ளைநிறம் கலந்த புள்ளி தோன்றும்.அதையே பார்த்தவாறு, “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று உதடு அசையாமல் (மனதுக்குள்) ஜபம் செய்ய வேண்டும்.புள்ளி தொடர்ந்து தெரியாமல் இருந்தாலும்,ஒரு நாளுக்கு 30 நிமிடம் வீதம் 7 நாட்களுக்கு இந்த ஜபத்தைச் செய்ய வேண்டும்.
ஆரம்ப நாட்களில் கண் இமையாது பார்ப்பதால்,கண்களில் நீர் வடியலாம்;கண் எரிச்சல் உண்டாகலாம்;ஆகவே,குளிர்ந்த நீரால் முகத்தை(கண்களை) தினசரி நன்கு கழுவவும்.
உறங்கும்போது இடது கைபக்கம் கீழே இருப்பது போல் தூங்க வேண்டும்.
மிதமான உணவு சாப்பிடவேண்டும்.தண்ணீர் நிறைய அருந்த வேண்டும்.அருகில் இருக்கும் பைரவர் சன்னதிக்கு தினசரி மாலை 5 முதல் 7 மணிக்குள் சென்று வழிபட வேண்டும்.இந்த நேரத்தில் முடியாவிட்டால்,உங்களுக்கு வசதியான நேரத்தில் வழிபடவும்.
இந்த 7 நாட்களும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தியானம் (மேற்கூறியவாறு)செய்ய வேண்டும்.
சும்மா இருக்கும் நேரங்களில் “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று ஜபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.(இவ்வாறு ஜபித்துக்கொண்டே இருக்கும்போது,மஞ்சள் விரிப்பில் அல்லது நாற்காலியில் அமர்ந்திருக்க வேண்டும்)
எச்சில் துப்பினால் கூட இடதுபுறமாகத் தான் துப்ப வேண்டும்.
தூங்கும்போது இடதுகை பக்கம் கீழே இருப்பது போல தூங்க வேண்டும்.
திருமணமாகியிருந்தாலும் கண்டிப்பாக பிரம்மச்சாரியம்(தாம்பத்தியத்துக்கு விடுமுறை!) கடைபிடிப்பது அவசியம்.
சுத்தமில்லாத இடங்களில் சாப்பிடக்கூடாது;சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.புகை,மது பழக்கம் கண்டிப்பாக கூடாது.
இவ்வாறு செய்தால் ஓரிரு நாட்களிலேயே கனவில் நாய்களைப்பார்க்கலாம்;அல்லது பைரவரை கனவில் காணமுடியும்.
இது பைரவ உபாசனையில் ஆரம்பப் பயிற்சி ஆகும்.


ஆதாரம்:பைரவ ரகசியம் பகுதி 1,பக்கம்47,48.

தற்கொலைக்குப் பின்னர் என்ன நடக்கும்?


கடன் தொல்லை,தீராத நோய், உறவினர்களின் சொத்து பேராசை,காதல் தோல்வி,சரியான வாழ்க்கைத் துணை அமையாமை,பிரிந்த வாழ்க்கைத் துணையுடன் வாழும் ஆசை,எல்லோரும் உதாசீனப்படுத்துதல்,மேலதிகாரியின் தொல்லை,எதிர்காலம் பற்றிய பயம்,மாந்திரீகக் கோளாறு,தேர்வில் பெயில் ஆகிவிடுவோமோ என்ற பயம் என தற்கொலைக்கு பலவிதமான காரணங்கள் இருக்கின்றன.தற்கொலை செய்தவர்களின் நிலை என்ன? யாருக்குமே தெரியாது.

ஒரு பள்ளிமாணவி,வயது 15.பத்தாம் வகுப்பு படிக்கிறாள் என வைத்துக்கொள்வோம்.பத்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் கணிதத்தில் மட்டும் 90 மார்க்கு வராது;70 அல்லது 80 தான் வரும் என பயந்து,அதனால் தன்னால் பள்ளியில் முதலிடம் பெற முடியாமல் போய்விடும் என வீட்டிற்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில்  விஷம் குடித்து தற்கொலை செய்கிறாள்.(காரணத்தைப் பார்த்தால் நம்ப முடிகிறதா?)அந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு நிஜமான ஆயுள் 69 வருடம், 4 மாதம் 21 நாட்கள் என (ஜாதகப்படி அல்லது விதிப்படி) வைத்துக்கொள்வோம்;அந்த பள்ளி மாணவி தற்கொலை செய்த நாளிலிருந்து முறைப்படி மரணமடையும் நாள் வரையிலும்,எந்த இடத்தில் தற்கொலை செய்தாளோ,அந்த இடத்தில் அவளது ஆத்மா தரையிலிருந்து சுமார் 20 சதுர அடி சுற்றளவுக்கு சுற்றிக் கொண்டே இருக்கும்.அதே சமயம்,அந்த மீதி நாட்களுக்கு அந்த பள்ளி மாணவியின் ஆத்மாவுக்கு தினமும் பசி,தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும்.அந்த பள்ளிமாணவி ஆத்மாவின் அழுகுரல் யாருக்கும் கேட்காது.
நமது ராசியை 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு அல்லது கேது கடக்கும்;நமது ராசியை 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு கடக்கும்.அவ்வாறு கடக்கும்போது,ஒரு ராசியில் 18 மாதங்களுக்கு ராகு இருக்கும்;இந்த 18 மாதத்தில் பெரும்பாலான ஆண் அல்லது பெண்ணுக்கு பேய்பிடிக்கும்;அதுவும் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே பிடிக்கும்;அல்லது ராகு மஹாதிசை அல்லது ராகு சார மஹா திசை நடப்பவர்களுக்கே பிடிக்கும்.
எப்போதும் ஆணை பெண் பேயும்,பெண்ணை ஆண் பேய் மட்டுமே பிடிக்கும்;மிக மிக அபூர்வமாக ஒரே ஆளை ஒன்றுக்கும் மேற்பட்ட பேய்கள் பிடிப்பதுண்டு.அப்படி பிடித்ததும்,அந்த ஆள்(ஆண் அல்லது பெண்) அளவுக்கும் மீறி சாப்பிட்டுக்கொண்டே இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்;கேட்டிருக்கலாம்.பேய் விரட்டுபவர்களைக் கொண்டு அந்த பேயை விரட்டிட மட்டுமே முடியும்.கதி மோட்சம் தர எதுவும் செய்வதில்லை;


அந்த பள்ளிமாணவியின் ஆத்மா படும் அவஸ்தைகளில் 10000 இல் ஒரு பங்கை மட்டுமே இங்கு சொல்ல முடியும்.அப்போது அந்த பள்ளி மாணவியின் ஆத்மா,நாம் தற்கொலை செய்தது மாபெரும் தவறு என்பதை உணரும்.அதற்குள் சில வருடங்கள் ஓடியிருக்கும்;இருந்த போதிலும்,அந்த ஆத்மாவுக்கு சாந்திப்பரிகாரங்களை அவளின் பெற்றோர்கள் செய்துவிட்டால்,அந்த பள்ளிமாணவியின் ஆத்மாவுக்கு கதி மோட்சம் கிடைக்கும்.இல்லாவிட்டால்,அந்த பள்ளிமாணவியின் உடன்பிறந்தவர்களின் குழந்தைகளுக்கு பித்ரு தோஷம் பிடிக்கும்.ஆமாம்! அந்த குழந்தைகளின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு மூன்று,ஐந்து,ஒன்பதாம் இடங்களில் ராகு அல்லது கேது நிற்கும்.இந்த பித்ருதோஷம் பற்றி ஏற்கனவே நமது ஆன்மீகக்கடலில் எழுதிவிட்டோம்.

தற்கொலை தான் இறுதித் தீர்வு எனில்,தினமும் பிறக்கும் குழந்தைகளை விட,தற்கொலையால் இறப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும்.எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு என முடிவெடுப்பதற்கு ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் ஒரு காரணமாக இருக்கிறது.பலரை ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் தான் பிறவி சுபாவத்தை மாற்றுகிறது என்பதை அனுபவத்தில் உணரலாம்.
இனிமேல் யாருடைய தயவும் எனக்குத் தேவையில்லை;யாரையும் நம்பி நான் வாழத் தயாராக இல்லை;யாரும் எனக்காக வாழ வேண்டிய அவசியமில்லை;என்ற எண்ணத்தை ஏழரைச்சனியில் ஜன்மச்சனிக்காலமும்,அஷ்டமச்சனிக்காலமும் உறுதிபடுத்துகிறது.அந்த மன உறுதியை தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்போதே நினைவுக்குக்கொண்டுவந்துவிட வேண்டும்.ஏனெனில்,
தற்கொலை செய்ய முடிவெடுப்போரே!
இந்த நெருக்கடியான நிலை நிரந்தரம் அல்ல;இந்த கஷ்டமும் நம்மை இறுதிவரை சித்தரவதைக்குள்ளாக்காது;எப்படி வசதிகளும்,சொகுசுகளும் நிரந்தரமில்லையோ,அதேபோல அவமானங்களும்,தோல்விகளும்,முட்டுக்கட்டைகளும்,       தடைகளும்,ஏமாற்றங்களும் நிரந்தரம் அல்ல;என்ன உங்களது தற்கொலை எண்ணம் வரும்போது,இவைகளை எடுத்துச் சொல்லிட அருகில்,யாரும் இருப்பதில்லை!!! அதுதான் பிரச்னை!!!

ஒருமுறை தற்கொலை முயற்சி எடுத்து படுதோல்வியடைந்தவர்கள்,அதன்பிறகு அசாத்தியமான துணிச்சலைப் பெறுகிறார்கள்.பலமுறை தற்கொலை எண்ணம் வந்தவர்கள்,ஒரே ஒரு விபத்தை அல்லது ஒரே ஒரு தற்கொலை செய்தவர்களின் இறுதி நாளை நேரில் பார்த்தப்பின்னர்,எதற்கும் கலங்காத மனதை அடைந்துவிடுகிறார்கள் என்பது அனுபவ உண்மை!!!


தற்கொலை முயற்சிக்கு இந்திய அரசியலமைப்புச்சட்டப்படி தண்டனை உண்டு.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் அவர் கூறிய ஒரே ஒரு கருத்து இங்கே ஞாபகம் வருகிறது: மனிதன் தனியாக இந்த பூமிக்கு வருகிறான்;அவரவரின் பாவ புண்ணிய ஊழ்வினைக்கு தகுந்தாற்போல,கஷ்டங்களையும்,போகங்களையும் அனுபவிக்கிறான்;தனியாகவே மரணமடைகிறான்.ஆனால்,வாழும் காலத்தில் அனைவருமே தனக்கு சொந்தம் என நம்புகிறான்.நிஜத்தில்,நாம் ஒவ்வொருவருமே அனாதைகள் என்பதுதான் கசப்பான உண்மை.


இதையே அடிக்கடி சொல்வதுண்டு:அனாதையாகப் பிறக்கிறோம்;அனாதையாக வாழ்கிறோம்;அனாதையாகச் சாகிறோம்;இடையே வரும் அத்தனை உறவுகளும் தற்காலிகமானவையே!


நாம் ஏன் தற்கொலை செய்து சாகணும்?

புராதனமான குருகுலக்கல்வி திட்டமும்;நவீன(மெக்காலே)கல்வித் திட்டமும்!!!


புராதனமான இந்துக்கல்வி முறைக்கு குருகுலக் கல்விமுறை,ஆஸ்ரமக் கல்வி முறை என்று பிரிக்கப்பட்டு இருந்தது; இந்த இரண்டு கல்வி முறையிலும் 6 வயது முதல் 18 வயது வரை என 12 ஆண்டுகள் தேர்ந்தெடுத்து கல்வி புகட்டப்பட்டது.குருகுலக்கல்வியில் அரசவையின் குலகுரு அரச குடும்பத்துக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவார்;அதற்காக அரச குடும்பத்துப் பிள்ளைகள் குல குருவின் குருகுலத்தில் உள்ளுறைப் பயிற்றுவித்தல் மூலம்குலகுருவுக்கும் அவர்தம் பத்தினியாருக்கும் தேவையான சேவைகள் செய்துகொண்டும் அவரவர்களுக்கு விருப்பமான பாடங்களைப் பயிலுவர்.அங்கும் அனைவருக்கும் பொதுவான பாடமாக கவன ஈர்ப்பு  என்ற மனதை ஒருமுகப்படுத்தும்,குண்டலினி சக்தி எழுச்சிக்காக சில மூச்சுப்பயிற்சிகளே கற்றுக்கொடுக்கப்பட்டன.கவனத்தில் நிலைத்த தன்மை உட்சென்று வெளிவரும் சுவாசத்தைப்பொறுத்து அமைகிறது. மனம் அடங்கி ஒன்றில் நிலைப்பதற்கு மூச்சுப்பயிற்சி மிக அவசியம்.மூச்சு அடங்க மனம் அடங்கும்.மனம் அடங்கினால்,பிரபஞ்சமே அடங்கிவிடும்.

ஒரு குருகுல மாணவனின்  செயல்பாடு எப்படி இருக்கும்? 

என்பதை அறிய வேண்டுமானால்,சாண்டில்யன் அவர்கள் எழுதிய விலைராணி,ஜலமோகினி, ஜலதீபம் மூன்றுபாகங்கள், முதலான சரித்திர நாவல்களை வாசித்தால் உணரலாம்;இந்த சரித்திரநாவல்களில் கதையின் கதாநாயகன்  ஓ! தமிழில் சொன்னால் தான் புரியும் இல்லையா? கதையின் ஹீரோவின் செயல்பாடுகளை எழுத்தில் கொண்டு வந்திருப்பார் சாண்டில்யன்.இந்த நாவல்களை வாசித்து முடித்ததும்,நமக்கு ஒரு சந்தேகம் வரும்?


இவ்வளவு திறமைசாலியாகவா நமது முன்னோர்கள் இருந்தார்கள்?
சந்தேகமில்லாமல் நமது முன்னோர்கள் இந்த நாவலில் சித்தரித்திருப்பதை விடவும்,அதி மேதாவிகள்;திறமைசாலிகளே! இருந்தும் கூட நம்மிடம் இவர்களிடம் இருக்கும் திறமையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லையே? ஏன்?

அதுதான் ஆங்கிலேயன் இந்தியாவில் செய்த அழிவு வேலையின் இறுதிகட்டம்!!! ஆமாம்! இவ்வ்வ்வளவு சிறப்புமிக்க குருகுலக் கல்வி முறையை தனது கல்வி முறையாக மாற்றிக்கொண்டுவிட்டான்;

அதே சமயம்,வீணாகப்போன,தேவையில்லாத,முழுக்க முழுக்க நமது நினைவுத்திறனை சோதிக்கும் விதமான பாடத்திட்டத்தை நம் மீது திணித்துவிட்டான்.1947 இல் சுதந்திரம் வாங்கியது முதல், இன்று வரையிலும் இந்த குப்பை நிறைந்த பாடத்திட்டத்தை மாற்றிட நமது ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை;மாற்றிட வேண்டும் என்ற மனோபாவம் உருவாகவில்லை;மாற்றிவிட முயன்ற அரசாங்கத்தை மேற்கு நாடுகள் பலகோடி டாலர்கள் செலவழித்து வீழ்த்துகின்றன.(ஆமாம்,அவர்களால் இந்த உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கு போய் சுதந்திரமாகக் கொள்ளையடிக்க முடியும்?)


நவீன கல்வித் திட்டம் எனப்படும் மெக்காலே கல்வித் திட்டமானது,அகங்காரம் நிறைந்த மனிதர்களை நம் இந்தியாவில் உருவாக்கிவருகிறது;அகங்காரம் நிறைந்த மனிதர்களால் பொறுப்பில்லாத சமுதாயம் உருவாகிவிட்டது;(பொறுப்பில்லாத,தொலைநோக்கு திட்டமில்லாத தலைவர்களையே நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறோம்).பொறுப்பில்லாத சமுதாயத்தினால்,தனது முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷத்தின் பெருமையை உணரக் கூட முடியவில்லை;எனவே,பல அரிய பொக்கிஷங்களை நாம் இழந்து வருகிறோம் இன்று வரையிலும்!!!

1990கள் வரையிலும் பி.எஸ்.ஸி,,பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,பயாலஜி போன்ற பட்டப்படிப்புகளே இருந்தன;இந்தப் பட்டப்படிப்புகளை படித்து முடிப்பவர்கள்,மேல்நாடுகளின் வாழ்க்கை முறைக்கு,மேல்நாடுகளின் தொழில்களுக்கு மட்டுமே தயார் செய்யப்படுகின்றனர் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?


இன்றைய கல்வித்திட்டத்தில் தெருவுக்கு ஒரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியும்,ஊருக்கு ஒரு பொறியியல்(என் ஜினியரிங்) கல்லூரியும் வந்துவிட்டன;வெகு விரைவில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியும் வந்துவிடும்.இந்தக் கல்வித்திட்டத்தில் மனதை மலரச் செய்யக்கூடிய பாடங்கள் மருந்துக்கு கூட இல்லை; நான் ஒரு பி.ஈ; நான் ஒரு பி.டெக்., நான் ஒரு எம்.பி.ஏ., என்ற அகங்காரம்தான் ஒவ்வொரு பட்டதாரிக்கும் உருவாகிவருகிறது.யாருக்குமே அடங்காத பட்டதாரிகள்,காமத்துக்கும் பணத்துக்கும் புகழ்ச்சிக்கும் மட்டுமே பணிகிறார்கள்.எனவே,கள்ளத்தனம் உருவாகிறது.இந்த கள்ளத்தனத்தின் உச்சகட்டமே இன்று நாம் காணும் அரசியல் இழிநிலை!!!

எப்போது அன்புக்கும்,பக்திக்கும்,விட்டுக்கொடுத்தலுக்கும் மதிப்பில்லையோ அப்போது முதலே நமது நாடு அழிவை நோக்கி நகர்ந்து வருகிறது என்பதே உண்மை.நாம் நமது வேர்களை இழந்தோம்;இன்று அரசியலானது,அதர்மத்தின் சொரூபமாகி இந்தியத் தன்மையை(பெண்களை மதித்தல்,கோவில்களையும்,கோவில் வழிபாட்டுமுறைகளையும் பாதுகாத்தல்,சுற்றுச்சூழலை வளர்த்தல்) சிதைத்து வருகிறது.
மெக்காலே கல்வித் திட்டமானது,நமது அப்பா,அம்மாவை முட்டாளாக பார்க்க வைக்கிறது;நமது தாத்தா பாட்டியை அப்பாவியாக எதிர்கொள்ள வைக்கிறது;நமக்கு எல்லாலே தெரியும் என்ற அகங்காரத்தை மட்டுமே தருகிறது;அதே சமயம்,நமது மனதைத் தொடும் விதமாக எதுவும் செய்ய வில்லை;மெக்காலே கல்வித் திட்டத்தின் விளைவாக  நமது அறிவுச்செல்வங்களான புராதனமான பல்லாயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளை  இழந்துவிட்டோம்;இவை அனைத்தும் தற்போது ஜெர்மனி,அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆராயப்பட்டுவருகின்றன.அவைகளில் மருத்துவம்,ஜோதிடம்,அணுசக்தி,வானியல்,வாஸ்து சாஸ்திரம்,மரணமில்லாமல் வாழும் கலை;வேறு நட்சத்திர மண்டலங்களுக்கு சில நாட்களில் சென்று வரும் சூட்சுமப்பயண வழிமுறை,நிர்வாகம்,போர்க்கலை,அரசியல் நிர்வாகம்,நகரமைப்பு,யோகாசனத்தின் அவசியம்,மூலிகைகளின் மருத்துவ அறிவு,பூமி பற்றிய முழுமையான அறிவு,கதிர்வீச்சை எதிர்கொள்ளும் திறன் போன்றவைகள் இருக்கின்றன.


மெக்காலே கல்வித் திட்டத்தால்,நமது 6 தலைமுறையினர்(சுமார்  200 ஆண்டுகள்)நமது முன்னோர்களின் பெருமைகளை சிறிதும் அறியாமல் போய்விட்டனர்.இதை அப்போதே எதிர்த்தவர்கள் ராஜாராம் மோகன் ராய்,சுவாமி விவேகானந்தர்,சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் ஆவர்.இவர்களே மெக்காலே  கல்வித் திட்டத்துக்கு மாற்றாக நமது இந்து தர்மப் பெருமைகளை உணரவைக்கும் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.அவைகளே ராமக்ருஷ்ண மிஷன் பள்ளிகள்,சின்மயா மிஷன் பள்ளிகள்,குருகுல முறைப்படி உருவாக்கப்பட்ட ஏராளமான பள்ளி,கல்லூரிகள் ஆகும்.இவைகளின் பரவல் இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் கொடுமை!!!மாற்றம் என்பதே மாறாத நிரந்தரம் ! என்று இருந்தாலும்,மாற்றத்தை ஏற்றிடும் பாரம்பரியமும்,பாரம்பரியத்தை கைவிடாத மாற்றமுமே நமது இந்தியப் பாரம்பரியம் ஆகும்.அப்பேர்ப்பட்ட இந்தியப்பாரம்பரியத்தை நமது கல்வித் திட்டத்தில் எப்போது நாம் கொண்டு வரப் போகிறோம்?

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


பங்குனி மாத அமாவாசையைப் பயன்படுத்துவோம்!!!


வைவஸ்த மன்வந்திரம்,கலியுக வருடம் 5112ஆம் ஆண்டு,கர வருடம் வரும் பங்குனி மாதத்து அமாவாசையானது பங்குனி 8 ஆம் நாள்(21.3.12 புதன் இரவு 7.37 முதல்) முதல் 9 ஆம் நாள்(22.3.12 வியாழன் இரவு 8.27 வரை)வரையிலும் அமைந்திருக்கிறது.இந்த வருடம்,பங்குனி மாதத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் அமாவாசை அமைந்திருக்கிறது.


ஆத்மாக்காரனாகிய சூரியனும்,மனக்காரனாகிய சந்திரனும் ஒன்று சேரும் திதியே அமாவாசை ஆகும்.அமாவாசை நாளில் குரு ஹோரையில்(21.3.12 புதன் இரவு 11 மணி முதல் 12 மணி வரை;22.3.12 வியாழன் காலை 6 முதல் 7 மணிவரை;மதியம் 1 முதல் 2 மணி வரை;இரவு 8 முதல் 9 வரை)நாம் சிவமந்திரம் ஜபிப்பது நமது ஆத்ம பலத்தை அதிகரிக்கும்.
உங்களுக்கு மேற்கூறிய நேரங்களில் எப்போது ஒய்வு அமையுமோ,அப்போது  ஜபிப்பது அவசியமாகும்;


இந்த நேரங்களில் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் அல்லது சதுரகிரியில் அல்லது அண்ணாமலையில் அல்லது பர்வதமலையில் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் சிவமந்திரம் ஜபித்துவர வேண்டும்;இவ்வாறு செய்வதால்,நமது கர்மவினைகள் விரைவாக கரைந்துவிடும்;


பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரட்டாதியில் லக்னம் இருக்கப் பிறந்தவர்கள்(மீன லக்னத்தில் பிறந்தவர்கள் உங்களின் ஆஸ்தான ஜோதிடரை அணுகினால்,இதுபற்றி எளிமையாக விளக்குவார்),உங்கள் லக்னம் எதுவாக இருந்தாலும்,உங்களின் லக்னாதிபதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நின்றால்;இந்த ஜாதக,ஜாதகிகளுக்கு இந்த அமாவாசையன்று சிவமந்திரம் ஜபிக்க,அபூர்வமான சிவ அனுபவத்தை உணருவார்கள்.


ஓரு நாளுக்கு ஒரு மணி நேரம்வீதம், 1,00,000 தடவைக்கு மேல் சிவமந்திரம் ஜபிக்க ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகின்றன.1,00,000 தடவைக்கு மேல் விடாமல் ஒரு நாளுக்கு 108 தடவைக்குக் குறையாமல் சிவமந்திரம் ஜபித்து வர,நமது வாழ்க்கை வலிமை மிக்கதாக மாறிவிடும்;நாம் என்ன நினைக்கிறோமோ,அது மட்டுமே நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நிகழும் என்பது அனுபவ உண்மையாகும்.பைரவரின் எட்டுபடை வீடுகள்கடவுள்களில் தரிசிக்க மிகவும் அபூர்வமான தரிசனம் சிவபெருமானின் தரிசனமும்,முருகக் கடவுளின் தரினமும் ஆகும்.நாம் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் குறிப்பிட்ட வழிபாடு செய்தால்,உரிய கடவுளின் தரிசனம் நேரடியாகக் கிடைக்கும் என்று எனது ஆன்மீக குருக்களும்,ஜோதிட வழிகாட்டிகளும் அடிக்கடி சொல்லியிருக்கிறார்கள்.ஏன் என்று கேட்டால் அதற்குரிய பதில் பூமியில் இல்லை என்பதுதான் விடை ஆகும்.
ஆறுமுகக்கடவுளுக்கு ஆறுபடைவீடு இருப்பதுபோல,சிவனின் ஒரு பகுதி படைப்பாகிய பைரவருக்கும்,எட்டுபடை வீடுகள் இருக்கின்றன என்பது ஆச்சரியம் மட்டுமல்ல;அந்த எட்டுபடை வீடுகளுக்குச் சென்று தரிசனம் செய்பவர்களுக்கு ,வாழ்க்கை முழுவதும் சிரமங்கள்,துயரங்கள்,கஷ்டங்கள்,தோல்விகள் இராது;மேலும் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் எமவாதனை இருக்காது என்பதும் பைரவ உபாசகர்,கொல்லிமலை சித்தர்,காகபுஜண்டர் ஆசிரமத்தை நிறுவியவருமாகிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ தருமலிங்கசுவாமிகள் தனது அனுபவத்தை பைரவ ரகசியம் என்னும் நூலில் வெளியிட்டிருக்கிறார்.


ஒருவன் இந்த பிறவியில் பைரவ வழிபாடு செய்கிறான் எனில்,அவன் முற்பிறவிகளில் ஏதாவது ஒரு சித்தராகவோ,துறவியாகவோ,ஞானியாகவோ பிறந்திருக்க வேண்டும்.அல்லது முற்பிறவிகளில் ஏதாவது ஒரு சித்தர் அல்லது துறவி அல்லது ஞானி அல்லது பழுத்த சிவாச்சாரியாரின் ஆன்மீக வழிகாட்டுதலோடு வாழ்ந்திருக்க வேண்டும்.குறைந்த பட்சம் முற்பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவியில் இவ்வாறு இருந்திருக்காமல்,இந்த பிறவியில் பைரவர் வழிபாடு,பைரவர் உபாசனை,பைரவர் கோவில் கட்டுதல் என எதுவும் செய்ய இயலாது என்பது அனுபவ உண்மையாகும்.

ஒவ்வொரு மதத்திலும் பைரவர் வழிபாடு இருக்கிறது;அது வேறு வேறு பெயர்களில் இருந்தாலும்,வழிபாட்டுமுறையில் சிறு சிறுமாற்றங்கள்  இருந்தாலும்,முடிவில் அனைத்துமதத்தினரும் பைரவர் வழிபாடு செய்துவருவதும்,பைரவர் தரிசனம் பெறுவதும் யுகயுகமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இன்று உலக அரசியலில் அசையாத சக்தியாக இருக்கும் மதங்களின் தலைமையகங்களில் பைரவர் வழிபாடு பல நூற்றாண்டுகளாக செய்யப்பட்டு வருவதால்தான்,அவர்கள் உலகை ஆண்டுகொண்டிருக்கின்றனர் என்று சொன்னால் நம்ப முடியுமா?நீங்கள் நம்பாவிட்டாலும்,அதுதான் உண்மை.பைரவரின் எட்டு படைவீடுகளுக்கு அட்ட வீரட்டானங்கள் என்று பெயர்.பைரவர் வீரதீரச் செயல்கள் புரிந்த இடங்களாக இருப்பதால் இவை இந்தப் பெயர் பெற்றன.இந்த அட்ட வீரட்டானங்களுக்குச் சென்று பைரவரை முறையாக வழிபாடு செய்தால் மட்டுமே பைரவரின் திரு அருள் முழுமையாக ஒருவருக்குக் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பைரவ ரகசியங்களுள் ஒன்று !!!


தேவாரம் அருளிய நால்வரில் ஒருவராம் என்னப்பர் அப்பர் பெருமான் தேவாரத்தில் அட்ட வீரட்டானத்தின் பெருமையை விவரிக்கிறார்.


காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம்,காமருஞ்சீர் அதிகை
மேவீய வீரட்டானம்,வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம்,விடையூர் திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம்,குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!


திருக்கண்டியூர், திருக்கடவூர்,திருவதிகை,வழுவூர்,திருப்பறியலூர்,திருக்கோவிலூர்,திருக்குறுக்கை,திருவிற்குடி ஆகிய தலங்களில் சென்று சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியிருக்கும் பைரவப் பெருமானை வழிபடும் அன்பர்களை எமன் எக்காலமும் நெருங்கிடான்.இவர்கள் சிவபெருமானுக்கு நெருக்கமானவர்கள் என எமன் இவர்களைக் கண்டு அஞ்சி வணங்கி ஒதுங்குவான்.


1.திருக்கண்டியூர்

இத்திருத்தலம் தஞ்சை திருவையாறு சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இத்திருத்தலம் ஆதி வில்வாரண்யம் என வழங்கப்படுகிறது.
இறைவனின் திருநாமம்  பிரமசிர கண்டீஸ்வரர்.பிரம்மனின் அகந்தையை அழித்து அருள் கொடுத்த இடம்.இத் தலத்திற்கு வந்து பக்தியோடு வழிபாடு செய்தால்,மறுபிறவியில்லை;திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.இந்தக் கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடமேற்குத் திசையில் பைரவரின் தனி சன்னதி உள்ளது.
ஞாயிறு,செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு.இந்த நாட்களில் இலுப்பையெண்ணெய்,புங்கெண்ணெய்,நல்லெண்ணைய் கலந்து 8 விளக்கேற்றி மூலவருக்கு அர்ச்சனை,அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும்.


திரு மூலப்பெருமானும்
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)

என்று திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.இதுவே நான்முகனின் தலையை கொய்த வரலாற்றோடு தொடர்புடையது ஆகும்.
சுவாதிஷ்டமாகிய சக்கரத்திலிருந்து விந்து நாதம் செய்து கொண்டிருந்த அலையும் மனமாகிய நான்முகனை(மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நான்கு முகம்) ,விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து,சுத்தக்கினியால் இறையருளால் விந்து சக்தியை நிலைப்படுத்தி,மனதின் உலகச் செயல்களை செயல்படுமாறு செய்து குறும்பை,அகங்காரத்தை நசுக்கிக் காத்து அருள் செய்தார் பைரவர்.


2.திருக்கோவிலூர்


திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்,திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதி தீரத்தில் அமைந்துள்ளது.
இறைவனின் திருநாமம் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி.அன்னை சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகி.
ஆலயத்தில் ஈசானிய மூலையில் பைரவர் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.ஞாயிறு,வெள்ளி,வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்தல் சிறப்பு.
இங்குள்ள மஹாகணபதி சன்னதியில் தான் ஸ்ரீமஹா கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வையார் விநாயகர் அகவலை அருளினார்.
இத்தலத்தில் அபிஷேகம் செய்தால்,நல்ல குருவின் திருவருள் முழுமையாக அமையும்.சோழச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது!!! ஸ்ரீராஜராஜசோழன்        ஸ்ரீகருவூரார் சித்தரின் அருளின் படி பைரவரை வணங்கி ஈடில்லாத புகழ் பெற்றார்.அவரது சாம்ராஜ்ஜியம் ஆசியா முழுவதும்,ஆஸ்திரேலியா வரையிலும் பரவியிருந்தது.

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ் செய்தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே= திருமூலரின் திருமந்திரம் 339
(மனதில் பொறாமை,காமம் முதலான தீய எண்ணங்கள் இறை வழிபாடு விடாமல் செய்து வரும்போதுதான் எழுச்சி பெறும்;அவ்வாறு எழுச்சி பெற்று நம்மை ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும்;இப்படி காம,பொறாமை எண்ணங்கள் தோன்றிடக் காரணம் நான் என்ற அகங்காரம் தான்!!!இந்த எண்ணங்களை முறியடிக்க நாம் பைரவரை விடாமல் தொழுதால்,மனதில் மெய்ஞான எண்ணங்களை தோற்றுவித்து,நமது மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களை அழித்து,நல்லெண்ணத்தால் மெய் இறைஞான நிலையை பைரவரே உருவாக்கிவிடுவார்.


3.திருவதிகை


பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.இறைவனின் திருநாமம் வீரட்டானேஸ்வரர்.ஈசானிய மூலையில் இங்கு பைரவர் எழுந்தருளியுள்ளார்.திரிபுரம் எரித்த இடம் இதுவே! வித்யுமாலி,தாரகாசுரன்,கமலாக்ஷன் ஆகிய அசுரர்களை அழித்த இடம் இது.வெள்ளி,புதன் கிழமைகளில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.தீராத நோய்கள் தீர இங்கு வந்து வழிபட வேண்டும்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவடி தீட்சை பெற்ற இடம் இது.சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரின் தீராத குன்ம வியாதியை நீக்கி தடுத்தாண்ட தலம் இது.உடல் நோய்களும்,பிறவி நோய்களும் நீங்கும் இடம் இதுவே! நமது கர்மத்தடைகளை நீக்கி,யோக மற்றும் ஞான நிலைகளை வழங்கும் திருத்தலமும் இதுவே தான்!!!


அப்பணி செஞ்சடை ஆதிபுராதனன்
முப்புரஞ்செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமூலரின் திருமந்திரம் 343)

காமம்(உடல் இச்சை மட்டும் காமம் அல்ல;பேராசை;பணத்தாசை;பொன்னாசையும் தான்!), கோபம்,தாபம்(நீண்ட கால ஏக்கம்) ஆகிய மும்மலங்களை(நம்மை ஆன்மீக வாழ்க்கையில் வளரவிடாமல் தடுக்கும் கழிவுகள் அனைத்தும் மலம் ஆகும்)எரித்து நமது மூலாக்கினியை ஞானக்கினியால் சேர்த்து யோக சித்தி,ஞான சித்தி அருளும் சிறப்பான திருத்தலமே இந்த திருவதிகை ஆகும்.


4.திருப்பறியலூர்

மாயவரம் திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இந்த செம்பொனார் கோவிலில் இருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.
சுவாமியின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.அம்பாளின் பெயர் இளங்கொம்பனையாள். அகந்தை கொண்ட தட்சனை அழித்த இடம் இது.தட்சன் யாகம் செய்த இடமே  தற்சமயம் கோவிலின் குளமாக இருக்கிறது.இங்கு வந்து வழிபட்டால்,தீராத கடன்கள் தீரும்;பூர்வ ஜென்மங்களில் ஏற்பட்ட சாபங்கள்,தோஷங்கள்  ஆகியவற்றை நீக்கி,நல்வாழ்வு தருமிடம் இதுவே!!!


5.திருவிற்குடி


திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2கி.மீ.தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.
மேற்கு நோக்கிய திருக்கோவிலாக இது அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி.
திருமால் சுதர்ஸன சக்கரம் வேண்டி இறைவனுக்கு துளசியால் அர்ச்சித்து அருளையும்,சுதர்ஸன சக்கரத்தையும் பெற்றார்.எனவே,இங்கு சிவபெருமான் வடிவில் இருக்கும் பைரவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.இங்கு திருமால் தனது தேவியான லட்சுமியோடு இருக்கிறார்.
பெரும் வறுமை நீங்கிட அல்லது மகத்தான செல்வ வளம் வேண்டுவோர்,இங்கு 16 வெள்ளிக்கிழமைகளுக்கு வர வேண்டும்.வந்து விநாயகர்,சுவாமி,அம்பாள்,இலக்குமி,பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்ய வேண்டும்;இதைச் செய்ய இயலாத அளவுக்கு பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருப்போர் அர்ச்சனை செய்தால் போதும்.இவ்வாறு செய்து முடித்தால், வறுமை நீங்கும்;செல்வ வளம் பெருகும்.


குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் 27 செவ்வாய்க்கிழமைகளுக்கு மேற்கூறியவாறு வழிபாடுகள் செய்து விட்டால்,தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீங்கி புத்திரபாக்கியம் பெறுவது நிச்சயம்.
திருமணமாகாதவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தங்கக் காசுகளை சுவாமிக்கு காணிக்கையாக வேண்டி ஒன்பது மாதங்கள்(வெள்ளி அல்லது தேய்பிறை அஷ்டமியன்று) வேண்டிக்கொள்ள ,நல்ல முறையில் திருமணம் நடக்கும்.
தொழிலில் நசிந்தோர்கள்,இலாபமில்லாதவர்கள் இங்கு பைரவருக்கு அபிஷேகங்கள் செய்துவர அற்புதமான பலன்களை அனுபவத்தில் உணரமுடியும்.நீங்கள் இவ்வாறு வழிபாடுகள் செய்து வர,நாய்கள் உங்களைத் தொடர்ந்து வருவதையும் அனுபவத்தில் காணலாம்.


எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற
அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமூலரின் திருமந்திரம் 341)

6.வழுவூர்


மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் சென்றதும்,வலப்புறம் திரும்ப வேண்டும்.அங்கிருந்து அரை கி.மீ.தூரத்தில் இருப்பது வழுவூர் ஆகும்.
இறைவன் கிருத்திவாஸர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்துவருகிறார்.


அகங்காரத்துடன் தான் என்ற அகந்தையில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அழித்து,திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு ஞானச் செல்வம் தந்தருளும் இடம் இது.
ஸ்ரீஐயப்பன் அவதரித்த இடமும் இதுவே!!! எத்தனையோ பேர்கள் தியானம் செய்கிறேன்;தவம் செய்கிறேன் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என புலம்புபவர்கள்,இங்கு வருகைதந்து,இறைவனை வழிபட வேண்டும்.மாதம் ஒரு நாள் வீதம் பத்து நாட்களுக்கு இங்கிருக்கும் மூலவரின் முன்பாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்;இவ்வாறு செய்வதால்,அவர்களின் தியானம் சித்திக்கும்;கூடவே இறைவனின் திருவருட்காட்சியும்(தரிசனம்!!!) பெற்று இறைமார்க்கத்தில் முன்னேறமுடியும்.


இத்தலத்தில் அமர்ந்து தியானம் செய்து வந்தால், ‘பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்த பரிபூரண ஆனந்தமே’ என்னும் வாக்கினை அனுபவபூர்வமாக உணரலாம்.
இங்கும் ஈசான மூலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார்.இவருக்கு அருகிலேயே சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.


ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்த அஷ்டமச்சனி(4 ஆம் இடத்துச்சனி),சனி திசையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 8 சனிக்கிழமைகளுக்கு இங்கு வர வேண்டும்;அவ்வாறு வந்து,இவரது சன்னிதியில் 8 தீபம் நல்லெண்ணெய் ஊற்றி,ஏற்ற வேண்டும்.அதன்பிறகு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும்;முடியாதவர்கள் அர்ச்சனை செய்து வர சனிக்கிரகத்தின் பாதிப்புகள்,தொல்லைகள் நீங்கி,எல்லையில்லாத மனநிம்மதியைப் பெறலாம்.


7.திருக்குறுக்கை


மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற இடம் வந்ததும்,பிரிந்து செல்ல வேண்டும்.அங்கிருந்து 3 கி.மீ.சென்றால் திருக்குறுக்கை வரும்.
இறைவனின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை ஆகும்.காமனை எரித்த இடம் இதுவே!!!
தியானம் செய்பவர்கள்,இறை நெறி செல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சுழுமுனை கூடி,வாக்கு சித்தியும் தவ உயர்வும் பெறமுடியும்.


குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து 8 வியாழன் அல்லது 8 செவ்வாய்க்கிழமை அல்லது மாதாந்திர வியாழன் அல்லது மாதந்திர செவ்வாய்க்கிழமை என்று  8 முறை வழிபட்டு,அன்னதானம் ஒவ்வொரு தடவையும் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் கண்டிப்பாக மழலைச் செல்வம் பெறுவார்கள்.


இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமூலரின் திருமந்திரம் 346)


இந்தக் கோவிலுக்கு வந்துவிட்டு,வீடு சென்றவர்களுக்கு கனவில் பைரவர் அல்லது கூட்டமாக நாய்களையோ காண்பார்கள்.ஸ்ரீபைரவரின் திருவருளுக்கு இது ஒரு சான்று ஆகும்.


8.திருக்கடவூர்


திருக்கடையூர் என்ற திருக்கடவூர் ஆதியில் வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கியது.
அமிர்தகடேஸ்வரர்,அபிராமி என்ற பெயர்களில் அப்பாவும் அம்மாவும் அருள்பாலித்து வருகின்றனர்.எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காத்தருளிய இடம் இதுவே!!!
இதய நோயில் வருந்துவோர்கள்,ஆயுளுக்கு கண்டமுள்ளவர்கள் இங்கு வந்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.அதன்பிறகு தியானம் செய்ய வேண்டும்.இவ்வாறு 8 சனிக்கிழமைகளுக்குச் செய்து வந்தால்,மரண பயம் அகன்று நீடூழி வாழலாம்.


பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த இடம் இது.


மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று
காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமூலரின் திருமந்திரம் 345)


இது சித்தர்கள் தவம் செய்த பூமி ஆகும்.இங்கு ஈசான மூலையில் அமர்ந்திருக்கும் பைரவரை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்  8 நாட்களுக்கு தவம் செய்து,வில்வம் மற்றும் செண்பகப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால்,அஷ்டமாசித்திக்குச் செல்ல நமக்கு நல்ல குருவை,சித்தரை அடையாளம் காட்டும்.இந்த ஊருக்கு 2 கி.மீ.தொலைவில் திருக்கடவூர் மயானம் என்னும் இடத்துக்குச் சென்று பிரம்மபுரீஸ்வரர்,மலர்க்குழல் மின்னம்மை தம்பதியராக இருக்கும் அருள்ஞான பெற்றோர்களை வழிபட,மெய்ஞானம் கைகூடும்.


கொன்றாய் காலனை; உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,
மான் கன்றாருங் காவாக்கடவூர் திருவீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே என்பது சுந்தரரின் தேவாரப்பாடல் ஆகும்.


நன்றி:பைரவ ரகசியம்


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹஜோதிடர்களுக்கு தட்சிணை கொடுப்பது அவசியம்!!!நீங்கள் பிறந்த நிமிடத்தில் வானில் பல கோடி கி.மீ.தூரத்தில் நவக்கிரகங்கள் இருந்த நிலையைப் பொறுத்தே உங்களது ,பெற்றோர்,உடன்பிறந்தோர்,கல்வி,குணாதிசயம்,மனைவி,சேமிப்பு,சேர்க்கும் சொத்துக்கள்,பார்க்கும் வேலை அல்லது தொழில்,குழந்தைகள்,காதலி,சுகபோகங்கள்,புகழ், அவமானம்,துரோகம்,வரும் நோய்,அரசாங்கத்தின் கோபம்,சந்திக்கும் மகான்கள்/சித்தர்கள்,கற்கும் சூட்சுமவித்தை,தரிசிக்க இருக்கும் கோவில்கள் என அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் அமைகின்றன.அப்படி அமைவதை உங்களால் எப்போது,எப்படி நடைபெறும் என்பதை துல்லியமாகக் கணித்துச் சொல்ல முடியுமா?குறைந்தது 5 வருடங்கள்,அதிகபட்சமாக ஐந்து ஜன்மங்களுக்கு ஜோதிடத்தை தனது தொழிலாகக் கொண்டிருப்பவர்களே உண்மையான ஜோதிடர்கள் ஆவர்.(போலியான ஜோதிடர்கள் இந்தத் தொழிலுக்கு வரக் காரணம்: உடலை வருத்தி உழைக்கும் மனோபாவம் இல்லாததும்,பிரச்னையில்லாத தொழிலாக ஜோதிடம் இருப்பதுமே!)


எந்த ஒரு திறமையான ஜோதிடரும் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் வாதநோய் வந்துதான் மரணமடைவார்;ஏனெனில்,ஒரு  திறமையான ஜோதிடர் ஒவ்வொரு ஜாதகத்தையும் பலன் சொல்வதற்காக ஆராயும்போது அவரது மூளையும்,மனமும்,உள்ளுணர்வும் கடுமையாக உழைக்கிறது.தன்னை நம்பி,இந்த ஜாதகர் தனது வாழ்க்கையையே ஒப்படைக்கிறார்;இவருக்கு இருப்பதிலேயே சிறந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே திறமையை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர்.தவிர,நவக்கிரகங்களில் ரகசியச் செயல்பாடுகளைக் கண்டறிந்து,உரியவர்களிடம் சொல்லி,அவர்களைக் காப்பாற்றுவதால்,நவக்கிரகங்களின் சாபங்களும் ஜோதிடருக்கு உண்டாகும்.

ஒரு திறமையான ஜோதிடரால் ஒரு  ஜாதகத்துக்கு 24 மணி நேரம் பலன் சொல்ல முடியும்.(எங்கள் ஊரில் இவ்வாறு சொல்பவர்கள் இருந்தார்கள்;ஆனால்,தொகை ரொம்ப அதிகம்!!!)இன்றைய வேகமான ,விரைவான வாழ்க்கை வாழும் காலத்தில் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் பலன் சொல்ல முடியும்.அப்படிச் சொல்லும்போது,உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் உங்களைப்பற்றிய ரகசியங்கள் வெளிப்படும்;அந்த ஒரு மணி நேர ஜோதிடப்பலன்கள்,உங்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாக அமையும்.பலர் ஜோதிட ஆலோசனையை பின்பற்ற ஆரம்பித்தப்பின்னரே,சாதாரண ஆளாக இருந்தவர்/ள்,கோடீஸ்வரராக மாறியிருக்கின்றனர்.நீங்கள் இதுவரையிலும் வாழ்ந்துவந்த வாழ்க்கையை இனி வாழ மாட்டீர்கள்.நீங்கள் புது வாழ்க்கையைப் பெற்றுவிடுவீர்கள்.தமிழ்நாட்டில் மட்டுமல்ல;இந்தியா முழுக்க இந்தியப் பிரதமர் முதல் ஒரு சாதாரண அரசு அலுவலகத்தின் கடைநிலை ஊழியர்(ப்யூன் அல்லது துப்புரவுப்பணியாளர்) வரை அவரவர் ரேஞ்சுக்கு ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படியே செயல்பட்டுவருகின்றனர்.


மறைந்த முன்னாள் ஆந்திரமுதலமைச்சர் ஒருவர்,தனது கட்சியை ஆரம்பித்த வெறும் 9 மாதங்களில் ஆந்திராவின் ஆளும் கட்சியானது.இந்த சாதனையை உலக வரலாற்றில் இன்றுவரையிலும் யாராலும் முறியடிக்கப்படவில்லை;இந்த சாதனைக்குப்பின்னால் அந்த ஆந்திரமுதலைமைச்சரின் ஆஸ்தான ஜோதிடர் இருந்திருக்கிறார்.இதற்குப் பரிசாக,ஆந்திர மாநில அரசில் முதன்முறையாக ஜோதிடத் துறை உருவாக்கப்பட்டது;அந்த துறையின் மந்திரியாக அந்த ஜோதிடர் சுமார் 3 ஆண்டுகளுக்கு ஆந்திரமாநிலத்தின் ஜோதிடத்துறை மந்திரியாக இருந்தார்.ஆன்மீக நாடான இந்தியாவில் கூட 1999 இல்தான் ஆன்மீக மேம்பாட்டுத்துறை என்னும் துறை உண்டாக்கப்பட்டது.தமிழ்நாட்டில் சில சமுதாய மக்கள் இன்றும் தமது ஆஸ்தான ஜோதிடருக்கு அளவுகடந்த மரியாதை கொடுத்த பின்னரே,அவரிடம் ஜாதகம் பார்ப்பதுண்டு;இந்த பழக்கம் தற்போது எல்லா சமுதாய மக்களிடமும் பரவி வருவது மகிழ்ச்சியே!!!


இருப்பினும்,பெரும்பாலானவர்கள் ஜோதிடம் பார்ப்பதற்கு ஒரே ஒரு டீ வாங்கித் தருவதும்;மின் அஞ்சல் வழியே பார்க்கும்போது தட்சிணை தராமல் இருப்பதும் மஹாபாவங்களுள் ஒன்று ஆகும்.தட்சிணா தேவி என்று ஒரு தேவதை இருக்கிறது.சூட்சுமக்கலை எனப்படும் ஜோதிடம்,கைரேகை,அருள்வாக்கு,வாஸ்து,நிமித்திகம் போன்ற கலைகளில் தேர்ச்சியடைந்தவர்கள் இவைகளில் ஏதாவது ஒன்றைத் தொழிலாக பார்த்தால்,அவர்களோடு அந்த தட்சிணாதேவதையின் பிரதிநிதி கூடவே செல்லும்.ஒவ்வொரு  முறையும் அவர்களின் தொழில் நிறைவடைந்ததும்(ஜாதகம் பார்த்ததும்/வாஸ்து பார்த்ததும்/நிமித்திகம் எனப்படும் ப்ரசன்னம் பார்த்ததும்) அதற்குரிய தட்சிணையை வாங்குகிறார்களா? என்பதை கவனிக்கும்.அப்படி வாங்காமல் இருந்தால்,அந்த ஜோதிடரின் தலையெழுத்தில் பதிந்து வைக்கும்;கேட்டும் தட்சிணை தராமல் இருப்பவர்களுக்கு அவர்களின் தலையெழுத்தில் நிறைய மாற்றங்களை(இதுவரை சொன்ன ஜோதிடப் பலன்களை செயல்படுத்திட விடாமல்/அல்லது முழுமையாக செயல்படவிடாமல் ) செய்துவிடும்.இந்த தெய்வீகரகசியத்தை  ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக நமக்குச் சொன்னவர் திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்.அவருக்கு கோடி நன்றிகள்!!!


ஜோதிடப்  பலன் சொல்வதற்கு தட்சிணை வாங்குவது பாவம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.இந்தக் கருத்து கலியுகத்துக்கு மட்டும் பொருந்தாது.இதுபோன்ற சூட்சும மற்றும் தெய்வீகக்கலையை இலவசமாக்கி ,மலிவுபடுத்தினால் இதற்குரிய மரியாதையே இராது.மேலும்,இலவச ஜோதிடபலன்களை ஜோதிட இதழ்களில் வெளியிடுவது ஒன்றும் தவறில்லை;ஏனெனில்,ஜோதிட இதழ்களின் விலையே அதற்குரிய தட்சிணை ஆகும்.எந்த ஒரு கலையையும் அதற்குரிய தட்சிணையைப் பொறுத்தே மதிக்கப்படுகிறது.ரூ.10/-க்கும்,ரூ.50/-க்கும் ஜோதிடம்பார்க்கும் ஜோதிடர்கள் ஜோதிடத்தின் மதிப்பை சீர்குலைக்கிறார்கள் என்பதே உண்மை.யாராவது ஓசிக்கு அரசாங்க வேலை பார்ப்பார்களா?ஓசிக்கு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்வார்களா?பிறகு எதற்கு ஜோதிடத்தை இழிவாக நினைக்கிறீர்கள்?இதில் இலவசமாக ஜோதிடம் பார்ப்பதை பெருமையாகவும் நினைக்கும் கூட்டம்,நாத்திகவாதிகளால் உண்டாகிவிட்டது.எனக்குத் தெரிந்து பலர் ,தனது சட்டைப்பையில் தனது பிறந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு செல்லும் வழக்கம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.ஒருவர் ஜோதிடர் என்பது இவருக்குத் தெரிந்தால்,உடனே,தனது சட்டைப்பையில் இருக்கும் ஜாதகநகலைக் காட்டி ஆலோசனை கேட்பதுண்டு;ஆனால்,எந்த ஒரு  ஜோதிடரின் ஜோதிட ஆலோசனையையும் பின்பற்றுவதேயில்லை;எனவே, இந்துதர்மத்தின் அடிப்படைத் தூண்கள் நான்கு வேதங்கள் ஆகும்.இந்த வேதங்களின் கண்களே ஜோதிடக்கலை ஆகும்.ஜோதிடக்கலையில் அங்கங்களே கைரேகை,எண்கணிதம்,வாஸ்து,அங்க லாவண்ய சாஸ்திரம்,நிமித்திகம் ஆகும்.ஜோதிடத்தை மதியுங்கள்;சரியான ஜோதிடரைக் கண்டறியுங்கள்;வளமான வாழ்க்கை வாழுங்கள்!!!


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
மஹா பைரவர் விரதம் இருப்பது எப்படி?நாம் வாழும் பூமியானது கர்ம பூமியாகும்;கர்ம பூமியென்றால்,பூமிக்கு மேலே ஏழு  உலகங்களும்,பூமிக்குக் கீழே ஏழு உலகங்களும் உள்ளன.இந்த பதினான்கு உலகங்களுமே போக உலகம் ஆகும்.அப்படியென்றால்,நாம் கர்மபூமி எனப்படும் நமது பூமியில் நாம் செய்யும் நற்காரியங்களுக்கும்,தீயக் காரியங்களுக்கும் ஏற்றவாறு நாம் இறந்தப்பின்னர்,இந்த பதினான்கு உலகங்களில் ஏதாவது ஒன்றில் பிறப்போம்;அல்லது மீண்டும் இந்த பூமியிலேயே பிறப்போம்;நாம் பிறருக்கு உதவி செய்தல்,அன்னதானம் செய்தல்,கோவில்களில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தல்,பக்தியை பிறருக்கு உருவாக்குதல்,நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு பண உதவி அல்லது கருத்து உதவி அல்லது ஆலோசனை உதவி செய்தல் போன்றவைகளைச் செய்தால்,நாம் செய்யும் புண்ணியத்தின் அளவுக்கேற்ப பூமிக்கு மேலே இருக்கும் ஏழு உலகங்களில் ஒன்றில் சிறிதுகாலம்(பல நூறு ஆண்டுகள்) வாழ்ந்து வருவோம்;அப்படி வாழ்ந்து,நமது பூர்வ புண்ணியங்கள் தீர்ந்ததும்,மீண்டும் இந்த பூமியில் பிறப்போம்;அப்படிப் பிறக்கும்போது பெரும் செல்வந்தராகவும்,ஆன்மீக விஷயத்தில் அளவற்ற ஈடுபாட்டுடனும் பிறப்போம்.(நமது கல்வி ஏழு பிறவிக்கும் கூடவே வரும் என இந்து சாஸ்திரங்கள் கூறியிருப்பது இதைத்தான்!)அடுத்த குடும்பத்தைக் கெடுத்தல்,ஒற்றுமையான கணவன் மனைவியை தந்திரமாகப் பிரித்தல்(இந்தக்காலத்தில் அந்த கணவனின் பெற்றோரே/மனைவியின் பெற்றோரே பிரிப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்),அப்பாவிகளை ஏமாற்றி அவர்களின் வீட்டை/சொத்தை எழுதி வாங்குதல்,பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்தல்,ஈவிரக்கம் பார்க்காமல் பணத்தைக் குவிப்பதையே குறியாக இருத்தல்,தனக்கு மிஞ்சியதே தானம் என்று தெரிந்தும் கூட,தன்னால் தனது ரத்த உறவுகளுக்கு உதவி செய்ய முடியும் என்று தெரிந்தும் கூட உதவாமல் இருத்தல்,பிறரைப் பற்றி கேவலமாகப்பேசுதல், பிறரின் காம அவமானங்களை பிரபலப்படுத்துதல், பிறரின் தாம்பத்திய ரகசியங்களை(இக்காலத்தில் வீடியோ எடுத்து) வெளியிடுதல்,தன்னை விட தனது குழந்தைகள் கூட  புகழடைந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுதல்,பிறரின் அக்கிரமங்களைத் தடுக்க முடியும் சக்தியிருந்தும் வேடிக்கை பார்த்தல் வீம்புக்கென்றே பிறரின் செல்வாக்கைப் பயன்படுத்தி,இருவரின் நல்லுறவைப் பாழாக்குதல்; சுருக்கமாக அடுத்தவரை மனதால்,உடலால் நோகடித்தல் அல்லது சாகடித்தல் அல்லது சாவுக்குச் சமமாக சித்ரவதை செய்தல் போன்றவைகளில் ஏதாவது செய்தால்,மிகவும் இழிவான பிறப்பாக பிறக்க வேண்டியிருக்கும்.
இந்த சூழ்நிலையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே மனம் திருந்துவதற்கு சந்தர்ப்பத்தை கடவுள் அடிக்கடி உருவாக்கித்  தருகிறார்.அப்படி உருவாக்கித் தரும்போது, அதை முறையாகவும்,முழுமையாகவும் பயன்படுத்திக்கொண்டு தன்னை கர்மவினைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது ஒருசிலர் மட்டுமே !
எந்தக் கடவுளைக் கும்பிட்டால்,நமது கர்மவினை அடியோடு விலகும்?
நமது மனிதர்களைவிடவும்,மகான்கள் சக்தி வாய்ந்தவர்கள்;அவர்களின் ஜீவசமாதி வழிபாடு செய்வது சிவ வழிபாடே தான்!!!(தொடர்ச்சியான ஓராண்டு ஜீவசமாதி வழிபாடு,நம்மை பைரவ வழிபாட்டுக்குக்கொண்டு செல்லும்)
மகான்களை விடவும் சித்தர்கள் சக்தி வாய்ந்தவர்கள்;சித்தர்களின் ஜீவசமாதிகளை சென்று அடிக்கடி வழிபடலாம்;
சித்தர்களை விடவும் நவக்கிரகங்கள் சக்தி வாய்ந்தவை;நவக்கிரகங்களை விடவும் அவைகளை இயக்கும் பெருமாள் என்ற மஹாவிஷ்ணு சக்தி வாய்ந்தவர் ஆவார்.மஹாவிஷ்ணுவை வழிபட,வழிபட நமது செல்வ வளம் பெருகும்.
மஹாவிஷ்ணு வழிபாட்டின் ஒரு அம்சமே குபேர பூஜை,குபேர கிரிவலம்,மஹா லட்சுமி வழிபாடு,மஹாலட்சுமியாகம்,சத்திய நாராயண பூஜை போன்றவைகளும்,ஸ்ரீராமஜெயம் எழுதுவதும்,ராமாயணம் படிப்பதும்.
மஹாவிஷ்ணு வழிபாட்டை விட உயர்ந்த வழிபாடு எனில் சிவ வழிபாடு ஆகும்.போதுமான மனப்பக்குவமும்,முதிர்ந்த ஞானமும் உள்ளவர்களே இந்த வழிபாட்டைப் பின்பற்ற முடியும்.பெரும்பாலான சிவவழிபாட்டு முறைகள் குப்தக்கலையாகவே இருக்கின்றன.குப்தக் கலை என்றால் ரகசியக்கலை என்றே பொருள்.சிவ வழிபாட்டு முறைகளில் மிகவும் ரகசியமானதே பைரவர் வழிபாட்டு முறை ஆகும்.
யார் நீதி நேர்மை தர்மம் நியாயம் என்று வாழ விரும்புகிறார்களோ,அவர்கள் மட்டுமே பைரவர் வழிபாட்டுமுறையைப் பின்பற்றிட முடியும்.வேறு யாராலும் பைரவர் வழிபாட்டுமுறையைப் பின்பற்றிட முடியாது.

நீங்கள் பைரவ வழிபாட்டை தொடர்ந்து செய்து வர, உங்களின் கர்மவினைகள் விரைவாக நீங்கும்;அதே சமயம் உங்களின் வருமானம்/லாபம் படிப்படியாக பெருகத் துவங்கும்;நல்லவர் மாதிரி நடிப்பவர்கள்,நியாயப்படி நடப்பதுபோல சீன் போடுபவர்களால் மாதம் தவறாமல் ஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு/தினமும் கால பைரவர் வழிபாடு செய்ய முடியாது.இது அனுபவ உண்மை.
மஹா பைரவர் விரதம் இருக்கும் முறையை நமக்கு கொல்லிமலைச் சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர்  சுவாமிகள் அருளியிருக்கிறார்.இவர் திரு அண்ணாமலையில் வாழ்ந்து வருகிறார்.இந்த முறையை உங்களுக்கு அறிவிப்பதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.
1.உங்கள் பெயர்,முகவரி விபரங்களை காகா ஆஸ்ரமத்தில் பதிவு செய்ய வேண்டும்(முகவரி:காகா ஆஸ்ரமம்,காஞ்சி சாலை,பெரிய குளம்,திரு அண்ணாமலை)
2.உங்களுக்கு ஸ்ரீபைரவர் மாலை இடப்படும்;இதற்கு எந்த கட்டணமும் இல்லை.
3.நீங்கள் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
4.இந்த 48 நாட்களுக்கு மது,மாமிசம்,புகை மற்றும் உடலுறவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
5.தினசரி ஸ்ரீபைரவரை (உங்கள்  ஊரில் இருக்கும் சிவாலயத்தில்) வழிபட வேண்டும்.
6.வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்.
7.இயன்றவரையிலும் பைரவரை வழிபடுபவர்கள் கூட்டு வழிபாடு செய்யலாம்.
8.தினமும் அதிகாலை 4.30க்கு எழுந்து குளித்துவிட்டு,பைரவர் மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.(இந்த 48 நாட்களும்)
9.மாலை 6மணிக்கு மேல் 11 மணிக்குள் பைரவர் மூலமந்திரம் அல்லது பைரவர் 108 போற்றிகளை ஜபிக்க வேண்டும்.
10.சுத்தமான உணவு,ஹோட்டல் உணவைத் தவிர்த்தல்,அமைதியாக அடிக்கடி(ஒவ்வொரு நாளிலும் பலமுறை) தியானம் செய்தல்,தேவாரம்,திருவாசகம் பாடுதல்,சத் சங்கம் எனப்படும் கூட்டு வழிபாடு செய்தல் விரைவான,சக்திவாய்ந்த பலனைத் தரும்.
11.47 நாட்கள் நிறைவடைந்து 48 ஆம் நாள் காகா ஆஸ்ரமம் வந்தால் கர்ப்பக் கிருகத்துக்குள் நுழைந்து இருமுடியை பைரவருக்குப் படைத்து நீங்களே பூஜை செய்யலாம்.
12.எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை;(உங்களுக்கு விருப்பமிருந்தால்,அன்னதானம்,திருப்பணி,பூஜைச் செலவுக்காக நன்கொடை தரலாம்.இது கட்டாயமில்லை)
13.அஷ்டமியன்று காகாஸ்ரமத்தில் நடைபெறும் ஹோமம்,வழிபாடுகளில் கலந்து கொள்வது நல்லது.(மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)
14.ஏழைகளுக்கு உதவினால்,பைரவருக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும்.அவரது அருள் விரைவாகக் கிடைக்கும்.
15.பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு வேளை உணவு உண்டு,அன்று பைரவரின் மந்திரங்கள்,போற்றிகளை வீட்டில் பாடலாம்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ