RightClick

இலங்கயிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய சுயமரியாதை


இலங்கை குடியுரிமைக் கட்டுப்பாட்டு அலுவலர் கலானந்தா பெரேரா, “சுற்றுலா விசாவில் வந்த வெளிநாட்டு முஸ்லீம் மதகுருக்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டோம்”என திடமாக,தெளிவாக விளக்கமளித்தார்.
இலங்கையில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட இலங்கை மதவிவகாரத்துறை அலுவலகத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து,உரிய அனுமதி பெற்றப்பிறகுதான் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்பது இலங்கைச் சட்டம்.சுற்றுலா விசாவில் வந்தால் சுற்றுலாப்பகுதிகளைப்பார்க்க வேண்டும்.ஆனால்,இலங்கையில் நடந்தது என்ன?
தப்லிக் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான்,வங்கதேசம்,மாலத்தீவு,இந்தியா மற்றும் அரபுநாடுகளைச் சேர்ந்த 161 முஸ்லீம் மதகுருக்களை 31.1.2012க்குள் நாட்டை விட்டு வெளியேறிவிடவேண்டும் என உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.
இந்த தப்லிக் ஜாமத் அமைப்பைச் சேர்ந்த முஸ்லீம் மதகுருக்கள், பவுத்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மதப்பிரச்சாரம் செய்தார்கள்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும்,2010ஆம் ஆண்டிலேயே வல்லரசுத் தகுதியை எட்டிவிட்ட நமது பாரதத்தில் என்ன நடக்கிறது?

மேற்கு வங்காளத்திலும்,அஸ்ஸாமிலும்,வடகிழக்கு மாநிலங்களிலும் பங்களாதேஷ் இஸ்லாமிய ஊடுருவல்காரர்களுக்கு ரேஷன் அட்டை கொடுத்து,வாக்காளராகப் பதிவு செய்து,அவர்களின் ஓட்டைப் பெற்று காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.இவர்களுக்கு இந்தியா விசா தரவில்லை;ஆனால் இந்திய பாஸ்போட் கொடுத்துவிடும்.அந்நிய நாட்டு முஸ்லீம்களுக்கு இந்திய பாஸ்போட்!!!
பரந்துவிரிந்த பாரத தேசம் முழுவதும் ஆவி எழுப்புதல் கூட்டங்களும்,அமாவாசை,பவுர்ணமி & முழு இரவு ஜெபக்கூட்டங்களும்,சுவிசேஷ கூட்டங்களும், அல்லேலூயா கூச்சல்களும் எழுப்பும் அந்நிய கிறிஸ்தவ பாதிரி,பாஸ்டர்கள் எந்த விசாவில் வந்து இங்கே மதப்பிரச்சாரம் செய்கிறார்கள்?

சுற்றுலா விசாவில் வந்த பாதிரிகளை யார் கட்டுப்படுத்துவது?இலங்கையில் உள்ளது போல் மத விவகாரத்துறையும் இங்கே இல்லையே?

கிறிஸ்தவர்களைப் போல ‘முஸ்லீம் சுற்றுலா’ வந்தவர்கள்,கேரளாவில் சில பயங்கரவாத சிந்தனைகளை விதைத்துவிட்டுச் சென்றதை சில பத்திரிகைகளில் படித்திருப்போம்.
சின்னஞ் சிறு துளியாய் உள்ள இலங்கை பவுத்தர்கள் வசிக்கும் பகுதியில் அந்நிய முஸ்லீம்கள் மதப்பிரச்சாரம் செய்ததை உடனேயே கண்டுபிடித்து, ஓட்டுப்பிச்சைக்காக இரைந்து வாழாமல் எவருக்கும்,எதற்கும் அஞ்சாமல் முடிவெடுத்து,அந்நிய மதவாதிகளை வெளியேற்றிய துணிச்சல், பெரும்பான்மையாக வாழ்வாங்கு வாழ்ந்து வரும் இந்து மக்களிடம் மதப்பிரச்சாரம் செய்து வரும்  அந்நிய மதவெறியாளர்களை விரட்டி அடிக்கும் தைரியம் நமது பாரத நாட்டை ஆண்டுவருபவர்களுக்கு வரவில்லையே.ஏன்?
எந்த விசாவில் வந்தார்கள்? அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? எங்கெங்கு போகிறார்கள்?எத்தனை நாட்கள் வரை இவர்களுக்கு விசா வழங்கியுள்ளோம்? என்ற எந்தவித திட்டமும் இல்லாத,சட்டத்தையும் பின்பற்றாத அரசுகள் நம்மை ஆளுகின்றன.
தனிக்குடித்தனம் இருக்கும் சகோதரனிடம் பாடம் படித்தால் தப்பில்லை;மிகப்பெரிய பாரத தேசம் தனது காலுக்கடியில் உள்ள இலங்கையிடம் உள்ள துணிச்சலை ஏற்றுக்கொண்டால்,தவறுமில்லை.


நன்றி:விஜயபாரதம்,பக்கம் 32,வெளியீட்டு நாள்:10.2.12