RightClick

திருநங்கைகளின் மனவேதனைகள் தீர ஒரு ஆன்மீக வழிகாட்டுதல்
விதி என்று ஒன்று இருந்தால் விதிவிலக்கு இருந்தே தீரும்;இந்த விதிவிலக்கு பெரும்பாலும் நன்மையளிப்பதாகவே இருக்கிறது.ஒரே ஒரு விதிவிலக்கைத் தவிர! மனித இனங்களில் ஆண்,பெண் என இரண்டே இரண்டு இனங்கள் இருந்தாலும்,பாதி ஆண்;மீதி பெண் அல்லது பாதி பெண்;மீதி ஆண் என்று சேர்ந்து ஒரு மனிதனையும் பிரம்மா படைத்துவருகிறார்;இவர்களுக்கு இந்த காலத்தில் திருநங்கை என்ற அடையாளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இருப்பினும்,இந்த திருநங்கைகளின் மனக்குமுறல்கள் பல நூற்றாண்டுகளாக வெளிப்படுத்திட வாய்ப்பே இல்லாமல் இருந்திருக்கிறது.நவீன தொழில்நுட்பம் நிறைந்த இக்காலத்தில்தான் இவர்கள் ஒருங்கிணைந்து செயல்படத்துவங்கியிருக்கின்றனர்.இருப்பினும்,இவர்களை இழிவாகவும்,கேவலமாகவும் பார்க்கும் நிலை இன்னும் மாறவேயில்லை;மேலும் இவர்களுக்கு மனம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே பிற இனங்கள்(ஆண் இனம்,பெண் இனம்) உணருவதேயில்லை;அந்த அளவுக்கு இவர்களை இழிவுபடுத்துவது தொடர்கிறது.
மனுதர்மம் தொடங்கி,சுக்கிரநீதி வரையிலும் இருக்கும் புராதனமான தர்மநீதி நூல்களில் மனிதனின் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி ஏராளமாக விவரிக்கப்பட்டுள்ளன;

எந்த ஒரு பெண்ணையும் அனாவசியமாக அழ வைத்தால்,அது கடுமையான தோஷமாக உருவெடுக்கும்;எந்த ஒரு பெண்ணையும் கட்டாயப்படுத்தி உறவு கொண்டாலும்,அதனால் ஏற்படும் பாவங்கள், பரிகாரத்தில் தீர்க்கமுடியாத பாவங்களின் பட்டியலில் இருக்கின்றன.அதே போலத்தான்,திருநங்கைகளை மனம் நோகடித்தாலோ,திருநங்கைகளை கதறியழுமளவுக்கு யார்  செய்தாலும் (ஆண் அல்லது பெண்) அவர்கள் பரிகாரத்துக்கு உட்படாத பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளாவார்கள்.அதன்விளைவாக,அவர்களின் குடும்பத்தில் அதேபோன்ற குழந்தைகள் (திருநங்கைகள்) பிறப்பார்கள்;மேலும்,இவ்வாறு நோகடிப்பவர்களுக்கு தொழிலில் அல்லது வேலையில் கடுமையான சிக்கல்கள் உண்டாகும்.அந்தச் சிக்கல்களைத் தீர்க்க யாராலும் முடியாது.ஏனெனில் ,இந்த சாபம் குறைந்தது ஏழு பிறவிகளுக்கு தொடரும்.

திருநங்கைகளின் மன வேதனைகள் தீர என்ன வழி?


அடாவடித்தனம் செய்வதில் திருநங்கைகளும் இருக்கிறார்கள்.இவர்களுக்கு இந்த வழிமுறை சிறிதும் பொருந்தாது;


சுமார் 17,50,000 ஆண்டுகளாக இருந்துவரும் கோவில் திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் ஆகும்.இந்த மாதிரியான பிரம்மாண்டமான வருடக்கணக்கினை 5000 ஆண்டுகளில் நாகரீகமடைந்த ஆங்கிலேயர்களால் நினைத்துப்பார்க்கமுடியவில்லை;இருப்பினும் உண்மை என்பது எப்போதும் உண்மைதானே!


 ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன்,புதன் இந்த இரண்டு கிரகங்களும் உச்சமாக இருந்தாலோ,நீசமாக இருந்தாலோ அவர்கள் இந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதப்பெருமாளை நிச்சயம் நேரடியாக வந்து தரிசிக்க வேண்டும்.சுக்கிரன் உச்சம் அல்லது நீசமாக இருக்கும்போது பிறந்தவர்கள்,குறைந்தது 6 வெள்ளிக்கிழமைகள்; அதிகபட்சம் 24 வெள்ளிக்கிழமைகளுக்கு வந்து சுக்கிரஓரையில் ஸ்ரீரெங்கநாதப்பெருமாளை தரிசிக்க வேண்டும்;


அதேபோல,புதன் உச்சம் அல்லது நீசமானாலோ அவர்கள் குறைந்தது 5 புதன் கிழமைகள்; அதிகபட்சம் 23 புதன்கிழமைகள் இங்கு வந்து புதன் ஓரையில் ஸ்ரீரெங்கநாதப்பெருமாளை வழிபட வேண்டும்.


சுக்கிரனும்,புதனும் ஒருவரது பிறந்த ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால்,அவர்களே திருநங்கைகள் ஆவர்.அவர்களுக்கும் இந்த ஆலயம் பரிகாரம் தரும் ஸ்தலம் ஆகும்.


யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத திருநங்கைகள்,ஏதாவது ஒரு சனிக்கிழமையன்று மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் திருச்சியின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாளை வழிபடவேண்டும்;அவ்வாறு வழிபடும்போது தனது பெயர்,பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;அவ்வாறு செய்தபின்னர்,ஸ்ரீரங்கம் கோவிலின் உட்பிரகாரத்தில் அல்லது கடைசியாக இருக்கும் விசாலமான வெளிப்பிரகாரத்தினை 16 சுற்று சுற்றிவர வேண்டும்;அவ்வாறு சுற்றி வரும்போது,இதுவரை தனக்கு ஏற்பட்ட வேதனைகள்,ஏக்கங்கள் தீரவேண்டும் என்ற வேண்டுதலோடு சுற்றிவர வேண்டும்.அதன்பிறகு,கோவில் யானைக்கு கரும்பு அல்லது உணவுப்பொட்டலம் வாங்கித்தர வேண்டும்;


இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் மட்டும் செய்து வந்தாலே,அவர்களின் சகல விதமான வேதனைகளும்,ஏக்கங்களும் எட்டாவது வாரத்திலிருந்து 90 நாட்களுக்குள் தீர்ந்துவிடும்.
ஒருவேளை யானைக்கு தானம் செய்யமுடியாவிட்டால்,கோவிலுக்கு வெளியே மூன்று பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.


இந்த தெய்வீக ரகசியத்தை ஆராய்ந்து நமக்கு அருளியிருப்பவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா ஆவார்.இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க எந்த நாளாக இருந்தாலும் மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் 9677696967 என்ற எண்ணில் திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்களிடம் பேசலாம்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ