RightClick

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகள் இருக்கும் இடங்கள் பகுதி 6
கலியுகத்தில் வாழ்ந்து வரும் நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தீய குணம் இருக்கத்தான் செய்கிறது;பொறாமை,கடும் கோபம்,முன் கோபம், எப்போ பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பது, தன்னைப் பற்றி ரொம்ப உயர்வாகவும் அதே சமயம் பிறரை மிக இழிவாகவும் நினைப்பதும் & பேசுவதும்; ஒற்றுமையாக இருக்கும் நட்பினைப் பிரிப்பது;ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதியை பிரிப்பது(இதை அந்த தம்பதியரின் பெற்றோரே செய்வதுதான் கொடுமை); நேர்மையாகவும்,கடினமாகவும் உழைக்கும் சுயதொழில் புரிவோரை குடி மற்றும் விபச்சாரப் பழக்கத்துக்கு அடிமையாக்குவது(இந்த ஒரு கெட்டப்பழக்கத்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ நிறுவனங்கள் மூடப்பட்டுவருகின்றன); நேர்மையாக வாழ்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நயவஞ்சகத்தை எதிர்கொள்ளும் திறன் இருப்பதில்லை;எனவே, நேர்மையான குடும்பஸ்தர்களுக்கு கடன் கொடுத்து,அவர்களின் மாதாந்திர வட்டியை வாங்காமல் இருந்து, சில வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வீட்டை/சொத்துக்களை/தொழிலை/சேமிப்பை மிரட்டி எழுதி வாங்குவது;

இது மாதிரியான தீய குணங்கள் இருப்பவர்களிடம் சிக்கியிருப்பவர்கள் மற்றும் மீள விரும்புவோர்,ஜீவசமாதி வழிப்பாட்டை இந்த சிவராத்திரியன்று செய்தால்/ஆரம்பித்தால் சிக்கல்கள் அடியோடு விலகிவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.
சென்னையின் சுற்றுப்புறம் :

புழல்
கண்ணப்ப சாமி
புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

காரனோடை
மல்லையா சாமிகள்

காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்

காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அலமாதி

மார்க்கண்டேய மகரிஷி
அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதி அமைந்திருக்கிறது.

கோவணச்சாமி

அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

பூதூர்
ஷா இன்ஷா பாபா
செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி
புலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)
ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள் ஜீவசமாதி உள்ளது.இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர்
ஐயா சூரியநாத கருவூரார்
பதினெண் சித்தர் மடம்,13,குமாரசுவாமி தெரு,வரதராசபுரம்,அம்பத்தூர்.பிரதி அக்டோபர் 10 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

வடதிருமுல்லைவாயில்
அன்னை நீலம்மையார்
37/1 வடக்கு மாடவீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில் அருகில் ஜீவசமாதி இருக்கிறது.பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

மாசிலாமணி சுவாமிகள்
சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

பூந்தமல்லி
கர்லாக்கட்டை சித்தர்
வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.

பைரவ சித்தர்
பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

கருடகோடி சித்தர்

பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்
அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்= வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.உயரமான சமாதி மேடை.சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளறை கிராமம்
ராஜராஜ பாபா சித்தர்
கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.

மாங்காடு

சர்வசர்ப்ப சித்தர்

மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில் கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்)

மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்

ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

கோவளம்

ஆளவந்தார் சாமி

கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.

திருக்கழுகுன்றம்

குழந்தை வேலாயுத சித்தர்

செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.

அப்பூர்=பதஞ்சலி சுவாமி

திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர் பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

திருப்போரூர்

சிதம்பரச்சாமி

திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டு உள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

செம்பாக்கம்

இரட்டை சித்தர்கள்

செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில் செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.

கூடுவாஞ்சேரி

மலையாள சாமி

கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது.அருகில் இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.

அச்சரப்பாக்கம்

முத்துசாமி சித்தர்

அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ள குன்று இருக்கிறது.இந்த முருகன் கோவில் வெளியே சன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

திருத்தணி

சுரைக்காய் சித்தர்

சென்னை டூ ஊத்துக்கோட்டை சாலையில் புத்தூருக்கு 5 கி.மீ.தூரத்தில் உள்ள நாராயணவனம் என்னும் இடத்தில் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலுக்கு  ஈசானிய திசையில் ஜீவசமாதிகோவில் இருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெற்றிலை தடுக்கு

கங்காதர சுவாமி

புத்தூர் நாராயண வனம் செல்லும் பாதையில் 7 கி.மீ.தூரத்தில் இருக்கும் கிராமம் வெற்றிலை தடுக்கு=ஒட்டப்பாளையம் என்னும் ஊரில் ஜீவசமாதி இருக்கிறது.

அரக்கோணம்=அருளானந்தர்

அரக்கோணத்திலிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காவனூர் நரசிங்கபுரத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

நாகவேடு

அமலானந்தர் & விமலானந்தர்

அரக்கோணத்திலிருந்து 10 கி.மீ.தூரத்திலுள்ள நாகவேடு கிராமத்தில் அமலானந்தர் மடத்தில் இவர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றன.(இவர்கள் இருவரும் அருளானந்தரின் சீடர்கள்!!!)

காஞ்சிபுரம்

ஸ்ரீமஹாபெரியவர்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் உட்பகுதியில் ஸ்ரீமஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் அதி சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

கச்சியப்ப முனிவர்

பிள்ளையார்பாளையம் டூ புதுப்பாளையம் தெருவில் திருவாடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் புனர்பூச நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.

காளாங்கிநாதர்

ஏகாம்பர நாதர் கோவில் தேவஸ்தான அலுவலகத்தின் பின்புறம் உள்ள இஷ்ட சித்தீஸ்வரர் சன்னதியில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

காஞ்சி ஸ்ரீராமன் சாமி(சிவசாமி)

காஞ்சிபுரம் மேற்குப்புறம் உள்ள மயான பூமியின் தொடக்கத்தில் சமாதி கோவிலிருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.(மயான பூமியை ஒட்டியோ,மயானபூமியுடன் சேர்த்தோ இருக்கும் ஜீவசமாதிகளுக்கு அளவற்ற சக்தி உண்டு.உதாரணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி ரோட்டில் இருக்கும் மூவர் சமாதி!!!)

விசுவநாத சுவாமி

சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோடீஸ்வரர் கோவிலுக்கு அடுத்த பண்ணையின் கன்னியம்மன் கோவில் தெருவில் ஜீவசமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சற்குரு சிவசாமி(ஸ்ரீபோடா சாமிகள்)

ஒலிமுகமது பேட்டைக்கு முன்பாக வெள்ளைக் குளக்கரை மயானபூமியின் தொடக்கத்தில் கங்கை அம்மன் கோவில் தெருவில் ஜீவசமாதிக்கோவில் இருக்கிறது.
இங்கு வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் சதயம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

தாண்டவராய சாமி

காஞ்சிபுரத்திலிருந்து 11 கி.மீ.தூரத்திலுள்ள கோவிந்தவாடியில் இவரது சமாதியும் சீடர்களின் சமாதிகளும் இருக்கின்றன.

காகபுஜண்டர்

காஞ்சிபுரம் டூ வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கால் கூட்டுரோடு அருகில் சோதியம்பாக்கம் பாவூரில் திருக்கோவில் அமைந்திருக்கிறது.எத்தனை யுகங்கள் கழிந்தாலும்,எத்தனை பிரம்மாக்கள் அழிந்தாலும் நிரந்தரமாக இருக்கும் ஒரே சித்தர் இவர் மட்டுமே!!

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ