RightClick

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,ஜீவசமாதிகளின் இருப்பிடங்கள் பகுதி 3

கி.பி.2006 ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை உலகின் பல நாடுகளைத் தாக்கியது;இதற்கு புவியியல் வல்லுநர்கள் பெரிய பெரிய விளக்கங்களைக் கொடுத்தனர்;ஆனால்,முன்கூட்டியே அவர்களால் எப்போது,எங்கே  ஆழிப்பேரலை வரும்? அது எந்த நாடுகளைத் தாக்கும்? என்பதை கணிக்கமுடியவில்லை;தமிழினத்தின் ஆதி இருப்பிடமான குமரிக்கண்டம்,இன்றைய இலங்கைக்குத் தெற்கே சுமார் 2000 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கும்,சுமார் 24,000 கிலோ மீட்டர்கள் அகலத்திற்கு(கிழக்கே ஆஸ்திரேலியாவிலிருந்து மேற்கே ஆப்ரிக்கா வரையிலும்) பரவியிருந்தது.மனதின் சக்தியை முழுமையாக பயன்படுத்துவதில் நமது தமிழினம் தேர்ச்சிபெற்றிருந்தனர்;இன்றைய திரைப்படமான ஏழாம் அறிவில் காட்டப்படும் நோக்கு வர்மத்தின் பரம்பரை நாம் மட்டுமே!!! இன்றும் ஒரு சில ஆன்மீகக் குழுவினருக்கு நோக்கு வர்மம் தெரியும்;இந்த குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களையும்,குமரிக்கண்டத்தையும் ஆழிப்பேரலை தாக்கியது.இன்றைய சேலம் போன்று இருந்த கன்னியாகுமரி,தற்போது முக்கடலும் சந்திக்கும் இடமாக உருவாகி,ஓராயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன.


2006 ஆம் ஆண்டில் வந்த ஆழிப்பேரலைக்கு ஆன்மீகரீதியான காரணம் தினத்தந்தியில் முழுப்பக்க கட்டுரையாக வெளிவந்தது.கடலுக்குள் காகபுஜண்டர் என்னும் சித்தர் பல லட்சம்(?!?) ஆண்டுகளாக தவம் செய்துவந்தார்;கடலோரம் நிகழ்ந்த காமக் குற்றங்களால்,அவர் கோப ஆவேசத்தோடு எழுந்தார்;அதனால்,ஆழிப்பேரலை என்னும் சுனாமி வந்தது.அதன்பிறகு, கி.பி.2010இல் சித்தர்களின் வீடாகிய சதுரகிரியில் சித்தர்களின் மாநாடு நடைபெற்றது.இதன் முடிவாக சித்தர்களின் ஆசி பெற்ற ஒருவன்,இந்தியாவின் தலைமை பீடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவான்;அவனது ஆட்சிக்காலத்தில் இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவும் என்று அடிக்கடி செய்திகளாக பல ஜோதிட இதழ்களில் வெளிவந்தது.குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபால் ஐயா அவர்கள் கூட இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அதில்,
“வட நாட்டைச் சேர்ந்த ஒரு மாவீரன்,தென் நாட்டைச் சேர்ந்த ஒரு துறவியிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறான்.அவன் வெகுவிரைவில் இந்தியாவை ஆளத் துவங்குவான்;அவனது ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்கும்;அதே சமயம்,அவனது ஆட்சியில் நேர்மையாக வாழ்ந்து வருபவர்கள் போற்றப்படுவார்கள்;அக்கிரமம்,அநீதி செய்தவர்கள் அனைவரும் மீளமுடியாத கஷ்டத்துக்கு ஆளாகப் போகிறார்கள்”
நாம் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சரி,நமது பகுதியிலிருக்கும் ஜீவசமாதிகளுக்கு தினமும் சென்று ஒரு மணி நேரம் தியானம் செய்வோம்;


சேலத்தில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியல்:


மாயம்மா:கன்னியாக்குமரி கடற்கரையில் நீண்ட காலம் வசித்தவர்;சேலம் மார்டன் தியேட்டர்ஸ் எதிர்ப்புறமுள்ள பகுதியில் மாயம்மா சமாதி பீடம் உள்ளது.
அப்பா பைத்தியம் சாமி: சேலம் ஜங்ஷன் ரயில்  நிலையத்திற்குக் கிழக்கே சூலமங்கலம் பிரதான சாலையில் சாலையை ஒட்டி வடபுறம் சமாதிகோவில் இருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா தைமாதம் வரும் அஸ்வினி நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.
கஞ்சமலை:
காலாங்கிநாதர்:சேலம் கஞ்சமலை சித்தர் கோவில் சேலத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் உள்ளது.
கஞ்சமலை சித்தர்:கஞ்சமலை அடிவாரத்தில் கஞ்சமலை சித்தரே சித்தேஸ்வர சுவாமியாக இருக்கிறார்.
ஓமலூர்
சிரபங்க முனிவர்: சேலம் மேட்டூர் சாலையில் 16 கி.மீ.தொலைவில் ஓமலூர் கோட்டையில் வைத்தியநாத ஈஸ்வரர் கோவில் நவக்கிரக சன்னதி அருகில் இவரது சமாதி இருக்கிறது.
ஆத்தூர்
சந்நியாசி வரதர்: ஆத்தூரிலிருந்து 5 கி.மீ.தூரத்தில் தளவாய்பட்டி;அங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் சாமியார் மடம் இருக்கிறது.இங்கே ஐப்பசி மாதம் வரும் சுவாதி நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
வடக்குமரை
அப்பண சாமிகள்:ஆத்தூரிலிருந்து 15 கி.மீ.தூரத்தில் வடக்குமரை கிராமத்தில் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூசை புரட்டாசி மாதம் வரும் அமாவாசை!
காரியனூர்
நடேச சுவாமி: ஆத்தூரிலிருந்து சற்று தொலைவிலுள்ள காரியனூரில் சமாதி கோவில் இருக்கிறது.

கோயம்புத்தூர் பகுதியில் மறைந்து நின்று காக்கும் மகான்கள்:::


முள்ளங்காடு
ஸ்ரீபிரம்ம வெள்ளியங்கிரி சாமிகள்: கோவை மேற்கே 22 கி.மீ.தூரத்தில் இருட்டுப்பள்ளம்;அங்கிருந்து 6 கி.மீ.தூரத்தில் முள்ளங்காடு செக்போஸ்ட்;பழங்குடி மக்கள் வசிக்கும் காட்டுக்குள் ஸ்ரீவெள்ளியங்கிரி சுவாமிகளின் ஆஸ்ரமம் என்ற பெயருடன் ஜீவசமாதி இருக்கிறது.
பன்னிமடை
சித்தயோகி சாமய்யா:கோவை டூ ஆனைக்கட்டி சாலையில் 10 கி.மீ.தூரத்தில் கணுவாய் என்னும் ஊர்.கிழக்கே 2 கி.மீ. பன்னிமடை சிற்றூர்.ஊரின் கிழக்குப் பகுதியில் பிரம்மஸ்ரீ சித்தயோகி சாமய்யா ஜீவ ஐக்கிய நிலையம் என்னும் பெயருடன் ஜீவசமாதி இருக்கிறது.
நாராயணபுரம்(பல்லடம்)
எட்டிக்கொட்டை சித்தர்:திருப்பூர் பல்லடம் சாலையில் தெற்குபரிளயம் விலக்கு அருகில் நாராயணபுரம்.மேற்குப்புறம் மருதஞ்செட்டியார் தோட்டத்தில் சமாதி பீடம் இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதத்தில் அவிட்டம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

பொள்ளாச்சி புரவிப்பாளையம்

கோடீஸ்வர சுவாமிகள்:பொள்ளாச்சியிலிருந்து 20 கி .மீ.தூரத்தில் புரவிப்பாளையம் இருக்கிறது.இங்கிருக்கும் ஜமீன் தார் அரண்மனை வளாகத்துள் சாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது.இவர் 18 ஆண்டுகளாக ராமேஸ்வரம் அருகில் இருக்கும் தனுஷ்கோடியில் ஒரே இடத்தில்,இரவும் பகலும் உட்கார்ந்திருந்தவர்;இதை பலர் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்;இந்த 18 ஆண்டுகளும் இவர் சாப்பிட்டதில்லையாம்;நீர் அருந்தியதில்லையாம்;இவரை ஒரு ரயில்வே ஊழியர் அடையாளம் கண்டு,இவரை போற்றி வழிபட்டிருக்கிறார்.அந்த ரயில்வே ஊழியரால்,இந்த கோடீஸ்வர சுவாமிகள் கொஞ்சகாலம் திருச்சியிலும்,கொஞ்சகாலம் சென்னையிலும் வாழ்ந்தவர்.இறுதியாக கோவைக்கு வந்து பலதரப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்.விரிவான பதிவு விரைவில் நமது ஆன்மீகக்கடலில்!!!


வேட்டைக்காரன்புதூர்

அழுக்குச்சாமி: பொள்ளாச்சி அருகே ஆனைமலை தாண்டி வேட்டைக்காரன்புதூர் டூ உப்பாற்றங்கரை வேட்டைக்காரச்சாமி கோவிலின் வடபுறம் சாமிகளின் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ