RightClick

காஷ்மோரா என்றால் என்ன?


காஷ்மோரா என்பது உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த மாந்திரீக வித்தை;அதை ஏவினால் போதும்.அதற்கு மாற்று எதுவும் கிடையாது.யார் மீது காஷ்மோராவை ஏவினோமோ,அந்த மனிதனை யாராலும் காப்பாற்ற முடியாது.(பக்கம் 105);யாருடைய வீட்டில் துளசிச்செடி வளர்க்கப்படுகிறதோ,அங்கே காஷ்மோராவால் செயல்பட முடியாமல் போய்விடும்.
சூனியம் என்பது 600 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா முழுவதும் பரவலாக அனைவருக்கும் தெரிந்த ஒரு மனசக்தி கலை;யாருக்கும் தெரியாத,ரகசியம் நிறைந்த அந்த கலையை தற்போது கற்க ஆளில்லாமல் அழிந்துபோயிருக்கிறது.தற்போது இந்தியா முழுவதற்கும் இந்தக் கலை அறிந்தவர்கள் 100 பேர் கூட இருக்கமாட்டார்கள்.
பிரஹத்ஜோதியைப் பயிற்சி பெற்று இருப்பவர்களுக்கு மனித அணுவின் மீது ஆட்சி செலுத்துவது எளிது.சப்த அணுக்கள் எனப்படும் மனித சருமம்,மனித ரத்தம்,மனித சதைப்பகுதி,மனித எலும்புகள்,மனிதனின் எலும்புகளுக்குள் இருக்கும் மஜ்ஜை,ரேதஸ் முதலியவற்றைச் சூனியம் வைப்பவன் தன்னுடைய வசத்திற்குக் கொண்டுவந்து துன்புறுத்துவான்.இந்த சப்த தாதுக்களுக்கும் சப்த அதிஷ்டான தேவதைகள் இருக்கிறார்கள்.சருமத்திற்கு டாகினி முதல் ரேதஸ்ஸிற்கு யாகினி வரை.இந்த சப்த தேவதைகளை சூனியம் செய்யப்பட்டவர்களின் ஏழு அங்கங்களில் காணலாம்.டாகினியை கழுத்தில்,மற்ற தேவதைகளை வரிசையாய் இதயம்,நாபி,சிச்னம்,மூலாதாரம்,பூமத்யம்,பிரம்மத் துவாரத்தில் காணலாம்.இந்த தேவதைகள் பீஜாக்ஷரங்களுக்குப் பிரச்சன்னமாவார்கள்.யம்,ரம்,லம்,வம்,சம்,ஸம்,ஹம் என்ற சப்த பீஜங்களின் மூலமாக அங்கங்களை ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கும் தேவதைகளை வசப்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட ஆளைத் துன்புறுத்தலாம்.அதனால்தான் காஷ்மோராவை ஏவியதும் ஒவ்வொரு நாளும் ஏவப்பட்டவருக்கு ஒவ்வொரு நோயாக தாக்குகிறது.அதன் பிறகு உபாசகன் வாயுக்களை தன் வசத்தில் எடுத்துக்கொள்கிறான்.பிராணவாயுவை மட்டுமின்றி நாபியிலிருக்கும் சமான வாயுவை,கழுத்திலிருக்கும் உதான வாயுவை ஸ்தம்பிக்கச் செய்து துன்புறுத்துவான்.
இதிலிருந்து மீள ஒரு வழி உண்டு.முதுகுத்தண்டின் கடைசியில் இருப்பது ஸ்ரீசக்கரம்.இதை மூலாதாரச்சக்கரம் என்றும் அழைப்பார்கள்.குண்டலினியை எழுப்பி சுஷம்ன வழியாக மூலாதாரத்திலிருந்து சகஸ்ரத்திற்குச் சேர்க்க முடிந்தவன் யோகி.மூன்று ஏக பீஜ மந்திரங்களை ஜபிக்கவும்.க்ஷாம் என்பது நரசிம்ம பீஜம்.ஹ்ரீம் என்பது புவனேஸ்வரி மந்திரம்;க்லீம் என்பது காமராஜ பீஜம்.108 முறை இந்த மந்திரங்களை ஜபம் செய்.இந்தத் தண்ணீரில் அமர்ந்து கொண்டு மந்திரங்களைச் சொல்லியபின் இந்த எண்ணெய்யைக் குடி.இந்த எண்ணெய் சூரிய கிரகணத்தன்று மாலகம் விதையிலிருந்து பாதாள மந்தரிம் வழியாக எடுத்தது.நீ ஜபித்த 108 மந்திரங்களும் உன் மகளுடைய பொம்மையில் குத்தி வைக்கப்பட்டுள்ள 108 முட்களுக்கு எதிராக வேலை செய்யும்.பொம்மை ஏற்கனவே சிதிலமடைந்திருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது.காஷ்மோராவை எதிர்க்கக் கூடியது காளி ஒன்றுதான்.அம்பாளைப் பிரசன்னம் செய்துகொள்.காஷாய வஸ்திரத்துடன் பூசத்தன்று பறித்த விஷ்ணு கிராந்திப்பூக்களின் சூரணத்தை உன் நெற்றியில் திலகமாக வைக்கிறேன்.இந்த திலகத்தை இட்டுக்கொண்டு நீ யாரைப் பார்க்கிறாயோ அவன் உனக்கு அடிமையாகிவிடுவான்.உன் மகளின்மீது சூனியத்தை ஏவிவிட்டவன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடி.இன்ரு 21 வது நாள்.இன்று இரவு 12 மணிக்குள் இது நடந்தாக வேண்டும்.இன்று இரவு 12 மணிக்குப் பொம்மையின் கட்டுக்களை அவிழ்த்து ஹோமத்தில் போடுவான் மந்திரவாதி.அப்படி போடுவதற்குள் நான் சொன்னது நடந்து முடியவேண்டும்.இதோ இந்தப் பலகையின் மீது ஸ்ரீசக்கரத்தைச் செதுக்கி இருக்கிறேன்.இதனால்  தான் அவனை அடிக்க வேண்டும்.இந்த துளசி தீர்த்தத்தை அந்த ஹோமத்தில் போட வேண்டும்.(பக்கம் 282,283)எண்டமூரி விரேந்திரநாத் எழுதிய துளசி தளம்;மாந்திரீகம் பற்றிய நாவல்.