RightClick

யாருக்காகவெல்லாம் ஆன்மீகக்கடல் நடத்தப்படுகிறது?


எனது நண்பர் ஒருவர் அரசுப் பணியாளர் ஆவார்.சுமார் நான்கு ஆண்டுகளாக எங்களிடம் நல்ல நட்பு இருக்கிறது;அவர் எனக்கு அறிமுகமான புதிதில் சொன்னார்: அவர் ஒரு பழைய டூவீலர் வாங்கியிருக்கிறார்;வாங்கியதும்,அதை தனது பெயருக்கு மாற்றியிருக்கிறார்.(நேம் ட்ரான்ஸ்பர் என்று தமிழில் சொன்னால் எல்லோருக்கும் புரிந்துவிடும்!?!)சில மாதங்களுக்குப்பிறகு,அதை வேறுஒருவரிடம் விற்றுவிட்டார்;இவரிடம் அந்த பழைய டூவீலரை வாங்கியவர்,தனது பெயருக்கு மாற்றவில்லை;ஓரிரு ஆண்டுகளில் அந்த பழைய டூவீலர் பலரது கைக்கு மாறிச்சென்றது;ஒரு நாள்,அந்த பழைய டூவீலர் விபத்துக்குள்ளானது;விபத்து வழக்கானது.விபத்திலிருந்து தப்பி ஓடியவர் யாரென்று காவல் துறைக்குத் தெரியவில்லை; எனது நண்பரின் பெயரில் இருந்ததை கண்டுபிடித்த காவல் துறையால்,எனது நண்பரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.அதிலிருந்து எனது நண்பர் மீள்வதற்குள்,நொந்து நூடுல்ஸ்,பிஸ்ஸா ஆகிவிட்டார்.


எனது உறவினரின் நெருங்கிய நண்பர் ஒருவர்! அவர் பல ஆண்டுகளாக உணவகம் வைத்திருந்தார்;விளைவு அவரது சொத்துக்கள் அந்த உணவகம் நடத்திடவே,விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.அவர் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார்;அவரது 114 ஆவது ஜோதிடராம்;அந்த பட்டியலையே என்னிடம் காட்ட வேறு செய்தார்; எனது ஜோதிட ஆலோசனையை அவர் நம்பவில்லை;நானும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை;ஆனால்,இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்னிடம் வந்து அவரது ஜாதகத்தைக் காட்டுவார்;வழக்கம்போல நானும் அவரது ஜாதகப்பலன்களைக் கணித்துச் சொல்லுவேன்;இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடின;இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே நாளில் தனது ஜாதகத்தை வேறு ஒரு ஜோதிடரிடமும்,என்னிடமும் காட்டுவார்;இருவரது ஜாதகக் கணிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்;தற்போது,எனது ஜாதக ஆலோசனையைப் பின்பற்றத் துவங்கியிருக்கிறார்.எனது ஆலோசனைப்படி,அவர் தனது உணவகம் நடத்தும் தொழிலை விட்டுவிட்டு,வாடகை வேன்களை வாங்கி,ட்ரிப் விட ஆரம்பித்தார்; மூன்றே ஆண்டுகளில் அவரது அனைத்து சொத்துக்களையும் திரும்ப வாங்கிவிட்டார்;அல்லது அதற்குச் சமமான அளவுக்குச் சொத்தினை வாங்கி வளமோடு வாழ ஆரம்பித்திருக்கிறார்.
(இதுவரையிலும் அவர் சந்தித்த ஜோதிடர்களில் பலர்,இவரது தொழில் பின்னணியைத் தெரிந்து கொண்டு ஆஹா,ஓஹோ என்று புகழ்ந்தே இவரிடம் பல பரிகாரங்களுக்கு பல்லாயிரக்கணக்கில் பணம் பறித்திருக்கின்றனர்.இவர் ஜோதிடர் ஒவ்வொருவரையும் கடவுளுக்குச் சமமாகவே பாவித்திருக்கிறார்.அது எப்பேர்ப்பட்ட மாபெரும் தவறு என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் புரிந்திருக்கிறது. 

   “எந்தக் கொம்பன்,கொம்பி வந்தாலும் அவரவர் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் உண்மையை எடுத்து தைரியமாக சொல்லு;எவரையும் புகழ்ந்து வாழ வேண்டிய அவசியம் நமக்கில்லை;நமது புகழ்ச்சி அவர்களின் வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை எடுக்க விடாமல் செய்துவிடும்.நம்மை நவக்கிரகங்கள் சபித்தாலும் பரவாயில்லை;நம்மிடம் ஜோதிட ஆலோசனை கேட்பவர்கள் தட்சிணை தராமல் இருந்தாலும் கவலைப்படாதே; நம்மை நம்பி யார் வந்தாலும் சரி;அவர்களின் உண்மை நிலையை எடுத்துச் சொல்வது ஒரு சரியான குருவின் கடமை” இது எனது ஜோதிட குருநாதர்கள் அடிக்கடி சொல்லும் ஜோதிட உபதேசம் ஆகும்.இதையே நானும் பின்பற்றி வருகிறேன்.)

ஒரு அம்மன் கோவில் பூசாரி எனக்கு நண்பரானார்;அவரது கோவிலில் நான் ஒருவரை சந்தித்தேன்.அவருக்கு 49 வயது;எனக்கு எப்போது கல்யாணம் ஆகும்? என்று கேட்டார்;அவரது ஜாதகத்தில் முன்னோர்கள் சொத்துக்காக கடுமையாக சண்டைபோட்ட அடையாளங்கள் தெரிந்தன;மேலும் அந்த சண்டை 4 தலைமுறை வரையிலும் தொடர்ந்திருக்கிறது.இருப்பினும்,15 ஆண்டுகளுக்கு அவருக்கு தொடர்ந்து திருமண யோகம் அமைந்திருக்கிறது.தனது உடன் பிறந்த அக்காவுக்கு திருமணம் முடித்தபின்னரே முடிக்க நினைத்திருந்தார்.இவரது அக்காவுக்கும் திருமணம் நடக்க வில்லை;இவருக்கும் திருமண யோகம் முடிந்துவிட்டது.இனிமேல்,இவருக்குத் திருமணம் முடிந்தால்,இவருக்கு மனைவியாக யார் வந்தாலும்,அந்தப் பெண்மணி சில நாட்களில் இறந்துவிடுவார் என்று தெரிந்தது.என்ன செய்ய உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

எனது நண்பரின் நண்பர் என்னை திருச்சிக்கு வரச் சொல்லியிருந்தார்.வெளியூருக்கு அப்போது ஜோதிடம் பார்க்கப் போனதே இல்லை;இருப்பினும்,அவர் உரிமையோடு என்னை அழைத்தார்.சென்றேன்.அவர் சினிமாக்காரர்! என்னைப் பார்க்க ஒருவரை அழைத்து வந்தார்;வந்தவர் என்னை பார்த்த பார்வையில் ஒருவித கேலி தெரிந்தது; அவரது எண்ணங்கள் எனக்குத் தெரிந்தன. ‘இவனா ஜோதிடர்! பார்த்தாலே சின்னப் பையனாக இருக்கிறானே?’ என்று அவர் நினைத்திருக்கிறார்.எனவே, அவர் நான் அமர்ந்திருந்த டேபிளின் மீது அவரது ஜாதகத்தை வீசியெறிந்தார்.நான்அர்த்தமுள்ள பார்வையோடு சிரித்தேன்.அவரது மனம் துணுக்குற்றது;சட்டென தனது ஜாதகத்தை எடுத்து,என் கையில் கொடுத்தார்.


நீங்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவரோ? என்ற கேட்டேன்.இப்படி நான் சொன்னதும் அவரது பாடிலாங்குவேஜில் ஒரு தன்னடக்கம் சட்டென வந்தது.
எனக்குக் கோபம் வந்தது; உங்களுக்கு என்ன பார்க்கணும்? என்றேன். புரியல என்றார். உங்க ஜாதகத்தில் என்ன கேட்கணுமோ அதைக் கேளுங்க என்றேன்.

எனக்கு ஒரே ஒரு கேள்விதான் ! நான் சினிமாவுல நடிப்பேனா? மாட்டேனா?

எப்படி நடிக்க விரும்புறீங்க?

ஹீரோவெல்லாம் ஆக விருப்பமில்லை;ஒரு காமெடியன், ஒரு கேரக்டர் ரோல் இப்படி ஏதாவது. . .

இப்படி உக்காருங்க! கால் மணி நேரம் பொறுங்க என்றவாறு அவரது ஜாதக நோட்டைப் பிரித்தேன்.(அவர் உட்காராமல் வெளியே தம் அடிக்கப் போய்விட்டார்)அதில் ஜாதகம் முறையாகக் கணிக்கப்பட்டிருக்கிறதா? நவக்கிரகங்கள் அவரது பிறந்த நேரப்படி குறிக்கப்பட்டிருக்கிறதா?இவர் இந்த கேள்விக்குத் தான் விடை தேடி வந்திருக்கிறாரா? என்ற பரிசோதனைகளை முடித்துவிட்டு,திசாபுக்தி,அந்தரம்,கோச்சார சூழ்நிலை,நடப்பில் இருக்கும் திசை இவருக்கு யோக திசையா? கஷ்ட திசையா? என அனைத்தையும் பரிசீலித்துவிட்டு,அவரை அழைத்தேன்.அவரிடம்,
நீங்கள் ஒரு நாளும் கேமிராவுக்கு முன்னாடி வரவே முடியாது. என ஆணித்தரமாக தெரிவித்தேன்.
ஏன்? என அதிர்ச்சியும் மிரட்டும்கோபத்தோடும் கேட்டார்.
ஒரு சினிமா தயாரிப்பதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.அதில் முன்னணி நபராக மாறலாம்.ஆனால்,ஒரு போதும் கேமிராவுக்கு முன்னாடி வரக்கூடிய யோகத்தில் பிறக்கவில்லை;
சரி,நான் சினிமாவில் என்ன தொழில் தான் செய்வது? என ஆதங்கத்தோடு அடுத்த கேள்வி கேட்டார்.
உங்கக் காதைக் குடுங்க
(கோபமாக) எதுக்கு?
காதைக் குடுங்க என அதட்டினேன்.
பரவாயில்லை;நீங்கள் எல்லோருக்கும் தெரியற மாதிரி சொல்லுங்க என்றார்.


நீங்களும் ஒரு மனிதர்! உங்களுக்கென்று ஒரு மதிப்பு உண்டு.அதை நீங்கள் மட்டும் கேட்பதாக இருந்தால் கேளுங்கள்; இல்லாவிட்டால்,இந்தாங்க உங்க ஜாதகம். . .
அவரது காதில் சொன்னேன்: நீங்கள் துணை நடிகை ஏஜண்டாகத் தான் வாழ்ந்தாக வேண்டும்.
மறு நொடியே அவர் தனது தட்சிணையை கொடுத்துவிட்டு,ஜாதகத்தை வாங்கிக்கொண்டு அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினார்.என்னை அழைத்து வந்தவர்,திருச்சி பேருந்து நிலையத்தில் நீங்கள் அவரைப்பற்றி சொன்னது உண்மைதான் என்றார்.


கடன் தொல்லை;நீண்டகால வழக்குகள்,நோய்கள், தீராத பங்காளிச்சண்டை,குடும்பத்தில் ஒற்றுமையின்மை என பல்வேறு ரூபங்களில் தமிழ்நாட்டு மக்களை கர்மவினைகள் வாட்டிக்கொண்டே இருக்கின்றன.அவர்கள் அந்த கர்மவினைகளிலிருந்து முழுமையாக மீள்வதற்காகத்தான் ஆன்மீகக்கடல் வலைப்பூவை நடத்திவருகிறேன்.எவ்வளவுதான் ஒருவர்/ஒருத்தி செல்வச் செழிப்போடு இருந்தாலும் அவரு/ளுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம்/ஏக்கம்/சிரமம்/கர்மவினை இருந்து,அவரை/ளை பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது.இதை அவரவர் பிறந்த ஜாதகத்தை வைத்துக் கண்டுபிடித்துவிடமுடியும்.அப்படிக் கண்டுபிடித்த பின்னர்,அதற்கு தகுந்தாற்போல ஆன்மீக வழிபாடு முதலான சுய பரிகாரங்களைச் சொல்லி ஜோதிட வழிகாட்டிட முடியும்.அந்த பரிகாரங்களை அவரவரே சொந்த உழைப்பில்,சொந்த அக்கறையோடு செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் தான் அவர்கள் நிம்மதியை அடைய முடியும்.அவர்களின் பிரச்னைகளிலிருந்து மீள முடியும்.

.


அவற்றில் மிகச் சுலபமானவைகளே  ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடும்,அண்ணாமலை கிரிவலமும், சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடும்.இவைகளே நாம் நமது கர்மவினைகளிலிருந்து மீள போதுமானவை;

1980களில் ஒரு வருடத்துக்கு ஓரிரு முறை அரிசி விலை தமிழ்நாட்டில் உயரும்;மக்கள் ஓரளவாவது நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்.1990களின் மத்தியில் உலக மயமாக்கல் எனப்படும் குளோபலிஷேசன் வந்தது;இது உலகமயமாக்கல் என்ற முகமூடியோடு வந்த  அமெரிக்க மயமாக்கலே! இதன் விளைவாக இந்திய பெரு நிறுவனங்களே பொருளாதாரத்தில் தள்ளாடத்துவங்கியிருக்கின்றன;சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பல அழிந்துவிட்டன.

இந்த சிறு நிறுவனங்கள் அழிந்துவிட்டன எனில்,அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு அதே வேலை கிடைத்திருக்குமா?அப்படி வேலை கிடைக்காததால்,அவரது குடும்பம் வறுமையில் வீழ்ந்திருக்கின்றன.அந்த குடும்பத்தில் உழைக்கும் தகுதி இந்த ஒருவருக்குமட்டுமே இருந்திருந்தால்,அந்த குடும்பம் விபச்சாரத்தில் விழுந்திருக்காதா?மாதம் தோறும் அரிசி விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது;ஆனால்,ஆண்டுக்கு ஒரு முறையாவது நமது சம்பளம் அதிகரிக்கிறதா? கம்யூட்டர் வந்தால்,வறுமை அடியோடு ஒழிந்துபோகும் என்று 1990களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.நிஜத்தில் கம்யூட்டரைக் கண்டுபிடித்த அமெரிக்காவில் 2000 வாக்கில் வறுமை அடியோடு ஒழிந்தது;2011 இல் அமெரிக்காவும் தள்ளாட ஆரம்பித்திருக்கிறது.தான் ஆரம்பித்த உலக மயமாக்கல் தனக்கே ஆப்பு வைக்கும் என அமெரிக்கா நினைக்கவில்லை;ஒரு காலத்தில் செல்போன், கேபிள் டிவி, இணையம்,ஜீன்ஸ்,ஏ.டி.எம்.,பிஸ்ஸா.,பர்கர்., கார்ன் பிளேக்ஸ்,தனியார் விமான நிறுவனங்கள், எஃப்.எம்.வானொலி இல்லாமல் வாழ்ந்தோம் என நினைத்துப் பார்க்க முடிகிறதா?ஒரு மணி நேரம் வரையிலாவது செல்போனில் அழைப்பு வராமலோ,குறுந்தகவல் வராமலோ இருக்கிறதா?இதுதான் வல்லரசுவாக்கும் வளர்ச்சியோ? ஆண்மையை விற்று திருமணம் செய்யும் இளைஞனின் நிலையில் தான் நமது இந்தியாவின் அரசியலும்,பொருளாதாரமும்,தனி மனித வாழ்க்கையும் இருக்கிறது.உண்மைதானே????


உலகமயமாக்கலின் விளைவாக,ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சாதாரணப்பணியாளருக்கும் கூட சீக்கிரம் கோடீஸ்வரனாகிடணுங்கற வெறிதான் உண்டாகியிருக்குது.காணவில்லை நம்பிக்கையான உறவுகள்!!!


இன்று இவ்வளவு வசதிகள் இருந்தும் எத்தனை பேருக்கு நிம்மதி இருக்கிறது? அந்த நிம்மதியை ஓரளவாவது கொண்டு வரவே ஒற்றை ஆளாக ஆன்மீகக்கடலை நடத்திவருகிறேன்.நான் பட்ட கஷ்டங்களை வேறு எவரும் படக்கூடாது? என்ற நோக்கில் தான் ஆன்மீகக்கடல் நடத்தி வருகிறேன்.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ