RightClick

அறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும் பழக்கம்

1940 களில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது;அதன் விளைவாக அடுத்த 30 ஆண்டுகளில் வாகனப்போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை மனித குலம் சந்தித்தது.

1970களில் மின்காந்த அலைகளைக் கட்டுப்படுத்தும் திறனை மனிதன் அடைந்தான்.அதன் விளைவாக ஓரிடத்தில் பேசுவதை உலகம் முழுக்கவும் பரப்பும் சாமர்த்தியமாக வானொலி நிலையங்கள் உருவாகின;

1980களில் ப்ளாஸ்டிக் மனித குல வாழ்க்கையில் அனைத்தையும் எளிமையாக்கத் துவங்கின.அதுவே இன்று பூமியை மலடாக்கும்,குருடாக்கும் வேலையையும் செய்யத்துவங்கியிருக்கிறது.


1990களில் மனிதகுலத்தில் 5 கோடி ஆண்டு வரலாற்றில் ஒரு புதிய ,இதுவரையிலும் இல்லாத மகத்தான புரட்சியை உண்டாக்கியிருக்கிறது.மனித குலத்தை தகவல் யுகத்துக்குக் கொண்டு வந்த கணிப்பொறி, தகவல் நெடுஞ்சாலை எனப்படும் இணையம் உலகம் முழுக்கப்பரவத் தொடங்கியது.மனிதனின் மூளையின் வடிவமைப்பைப் போலவே, கணிப்பொறியை கண்டுபிடிப்பு அமைந்ததால்,அது மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது.


2000களில் தகவலே ஆயுதம் என்ற சூழ்நிலை உண்டாகிவிட்டது.என்னதான் கணிப்பொறி,தகவல் தொழில்நுட்பம் என்று வளர்ந்தாலும்,தொழில் நுட்ப வளர்ச்சி மனிதர்களிடையே நெருக்கத்தை உருவாக்குவதற்குப்பதிலாக, பெரும் பிளவையே உருவாக்கி வருகிறது.இந்த சூழ்நிலையில்  கடந்த 400 ஆண்டுகளாக உலக வல்லரசு என்று போற்றப்படும் அமெரிக்கா ஒரே ஒரு தனிமனிதனுக்கும்,ஒரே ஒரு இணைய தளத்துக்கும் பயப்பட ஆரம்பித்திருப்பதே, தகவல் யுகத்தின் ஆரம்ப வீச்சு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.அந்த ஒரே ஒரு தனி மனிதன் ஒசாமா பின்லேடன்;அந்த ஒரே ஒரு இணைய தளம் விக்கிலீக்ஸ்!!!

இந்த சூழ்நிலையில் நாம் பிரதமர்,முதலமைச்சர்,உலக அமைப்புக்களின் செயலாளர்கள், ஒரு நாட்டின்  தூதுவர்,பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளி போன்றவர்களின் வாரிசாகப் பிறந்திருந்தால் இந்த பிறவி முழுவதுமே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை;ஆனால்,நடைமுறையில் அப்படி நாம் பிறக்கவில்லை என்பதே நிஜம்.இன்னொரு பக்கம் ஆளும் அரசுகளை கைப்பிடிக்குள் வைத்து,ஆட்டிப்படைப்பது உளவு நிறுவனங்களும்,சர்வதேச கார்பரேட் நிறுவனங்களுமே!குடிக்கும் தண்ணீரைக்கூட வணிகமயமாக்கியது அவைகளின் மாபெரும் வெற்றி.

ஒரு கவுன்சிலரானாலே, மக்கள் நலனை ஓரளவுக்கு மேல் பின்பற்றமுடியாத இக்கட்டான சூழல் இன்று உருவாகிவிட்டது.மறுபுறம்,மனித உணர்வுகளான மொழிப்பற்று,தேச பக்தி, குடும்பப் பாசம்,உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தெய்வ பக்தி,  தியாக மனப்பான்மை போன்றவை சுருங்கத் துவங்கியிருக்கின்றன.இதைத்தான் அடிக்கடி மெட்டீரில் வேர்ல்டு இது; நாம் ஒவ்வொருவருமே ரொம்பவும் பாசம் வைக்கக் கூடாது.அன்பை விட நடிப்பான பாசத்தை நம்பியும், உதவியை விட துரோகத்தாலும்,விட்டுக்கொடுப்பதை விட தன்னை முன்னிலைப்படுத்துவதாலும் பல குடும்பங்கள் சிதைந்து போய்க்கொண்டிருக்கின்றன.சில குடும்பங்கள் வாழும் விதத்தை எழுதினால், தெய்வ நம்பிக்கையே போய்விடும்;இப்பேர்ப்பட்ட கொடூரமான காலகட்டத்தில்,நாம் பிறரை விட கொஞ்சம் கூடுதல் அறிவாளியாக இருந்தால் மட்டுமே உயர்ந்த சம்பளத்தில்,சிறந்த வேலையில் வாழ முடியும்.அப்படி வாழ்வதற்கு உங்கள் குழந்தைகளை நீங்கள் அவர்களின் எட்டாம் வகுப்பிலிருந்து தயார் செய்ய வேண்டும்.உங்கள் வயது 25ஐ விடவும் குறைவாக இருந்தால்,இதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்;ஒருவேளை வயது 45 ஐவிடவும் அதிகமாக இருந்தால்,ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் வீதம் ஓராண்டுக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவேண்டும்;அல்லது ஒரு நாளுக்கு 15 நிமிடம் வீதம் மூன்றாண்டுக்குக் குறையாமல் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.இதன் மூலமாக பொருளாதார தன்னிறைவை எட்ட முடியும்.

உங்கள் குழந்தை எட்டாம் வகுப்பு படித்துவரும் எனில்,தினமும் 30 நிமிடம் வரை தினசரி செய்தித்தாள் படிக்க வைக்க வேண்டும்;அப்படி வாசித்தலிருந்து நீங்கள் உங்கள் குழந்தையோடு (டிஸ்கஸ்) கலந்துரையாட வேண்டும்;அவ்வாறு கலந்துரையாடும்போது உங்களின் குழந்தையை மட்டம் தட்டியோ,முந்திரிக்கொட்டை போலவோ நீங்கள் பேசக்கூடாது;உங்கள் குழந்தையின் சிந்தனையைத் தூண்டும் விதமாக தினசரிச் செய்தித்தாளிலிருந்து செய்திகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்;

தினசரி இவ்வாறு செய்ய முடியாவிட்டால்,வாரம் ஒரு நாள்(ஞாயிற்றுக்கிழமைதான்!) இவ்வாறு உங்களின் குழந்தையை தினசரி வாசிக்கச் சொல்லி,அதிலிருந்து உங்கள் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும்,நிதானமாகவும் பதிலளிக்க வேண்டும்.இந்த 30 நிமிட நேரத்தில் நீங்கள் செல்போன்,டிவி,கணினி,ஐபேடு என அனைத்தையும் தூர வைத்து விடுவது நன்று.இவ்வாறு ஓராண்டுக்குக் குறையாமல் செய்து வந்தால்,அதன் பிறகு உங்கள் குழந்தைக்கு வாசிக்கும் பழக்கம் தானாகவே வந்துவிடும்.
நீங்கள் ஓடி ஓடி யார் யாரிடமோ அவமானப்பட்டும்,கெஞ்சியும் பணம் சம்பாதிப்பது யாருக்காக? அப்படி சம்பாதிக்கும் பணத்தை நிர்வாகிக்க உங்கள் குழந்தைக்கு யார் சொல்லித் தருவார்? எந்த பள்ளிப்பாடத்திட்டத்தில் இதையெல்லாம் சொல்லித் தருகின்றனர்? தினமும் உங்கள் குழந்தையை வீட்டில் சந்தித்ததும்,அவளின்/அவனின் முகம் நோக்கி இன்று பள்ளியில் என்ன நடந்தது? நீ செய்த சாதனை என்ன? உனக்கு எதில் சாதிக்க ஆசை ? என கேட்க நேரமில்லாத அளவுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறோம்.இது நியாயமா?

மேற்கூறியவாறு வாசிக்கும் பழக்கம் வந்தபின்னர்,பத்தாம் வகுப்பு விடுமுறையில் தினமும் உங்கள் ஊரில்  இருக்கும் நூலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் விதவிதமான பத்திரிகைகள்,மாத இதழ்களைப் பற்றி ஒரு விளக்கமளிக்க வேண்டும்.

உதாரணமாக, தினசரி செய்தித்தாள்களில் தினமலர்,தினத்தந்தி,தினகரன்,தினமணி போன்றவை இருக்கின்றன.
அரசியல் புலனாய்வு வார இதழ்களில் ஜீனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் இருக்கின்றன;எல்லோருக்கும் பிடிக்கும் இருவார இதழ்களில் ஆனந்தவிகடன்,இந்தியா டுடே,தமிழ் கம்யூட்டர் உலகம்,தமிழ் கம்யூட்டர்,PC friend போன்றவை இருக்கின்றன.

மாத இதழ்களில் மோட்டார் விகடன்,குமுதம் பக்தி ஸ்பெஷல்,கலைக்கதிர் என ஏராளமாக இருக்கின்றன.சுயமுன்னேற்ற மாத இதழாக தன்னம்பிக்கை என்ற ஒரே ஒரு இதழ் கோயம்புத்தூரிலிருந்து வெளிவருகிறது.மனதத்துவம் பற்றிய மாத இதழ் மனோ சக்தி என்ற இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது.
சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு,இன்றைய நடைமுறை வாழ்க்கையில் உங்கள் குழந்தை தனது லட்சியத்தை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை இந்த வாசிக்கும் பழக்கம் தானாகவே உருவாக்கிவிடும்;அடுத்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு நேர்காணலாக இருந்தாலும்,உங்கள் குழந்தை மிகச் சிறப்பாக எதிர்கொள்வதோடு,வேலையில் சேர்ந்த பின்னர்,வெகு வேகமாக பதவி உயர்வைப் பெற்றுக்கொண்டே இருக்கும்.

25 வயதுக்காரர்கள் தினமும் தினசரி படிக்க வேண்டும்.ஒரே செய்தியை தினமலர் எப்படி வெளியிட்டிருக்கிறது? தினகரன் எப்படி வெளியிடுகிறது? தினத்தந்தி அதை எப்படி செய்தியாக்கியிருக்கிறது?என்பதை சிந்திக்கப் பழக வேண்டும்;தினசரிகளில் வரும் செய்திகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து,அதைப் பற்றி புலனாய்வு செய்து வாராந்திர அரசியல் இதழ்களான ஜீனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்றவை வெளியிடுகின்றன.பல சமயம் வார, இருவார,மாத இதழ்களில் வெளிவரும் செய்திகள் தினசரிகளில் வெளிவருவதில்லை;


9 ஆம் வகுப்புமுடிக்கும்போது,இரண்டு மாதங்களுக்கு ஆங்கில டைப் ரைட்டிங் வகுப்பு அனைவருமே செல்ல வேண்டும்;தவறின்றி டைப் அடிக்கும் பழக்கம் வந்தபின்னர்,கணினியில் அடிப்படைப் பயிற்சியான எம்.எஸ்.ஆபிஸ் மட்டும் பயில கணினி பயிற்சி மையங்களுக்குச் செல்ல வேண்டும்.தனியார் கணிப்பொறி மையங்கள் தரும் டிப்ளமோ பயிற்சிகளால் ஓரளவுக்கு மேல் பலனில்லை; எம்.எஸ்.ஆபிஸ் முடித்தபின்னர்,ஓவியம் வரையும் திறமை இருந்தால், டிடிபி பயிலலாம்;வீட்டில் படிப்புக்கு நன்றாக செலவழிக்கும் திறனிருந்தால் அனிமேஷன் படிக்கலாம்.அனிமேஷனில் டிகிரி படித்தால் மட்டுமே சிறந்த வேலையில் உயர்ந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர முடியும்.கணிதத்தில் , அக்கவுண்டன்சியில் ஆர்வமுள்ளவர்கள் டேலி படிக்கலாம்.இவைகளில் எதுபடித்தாலும்,விரைவாகவும்,தவறின்றியும் பணிபுரியும் திறனே வேலை வாய்ப்புச் சந்தையில் விரும்பத்தக்க தகுதியாகக் கருதப்படுகிறது.

உங்கள் மகன்/மகள் வீட்டில் இருக்கும் கருவிகளை பிரிக்கவும்,சேர்க்கவும் செய்யும் குணமுள்ளவரா?மறக்காமல் ஆண்டு விடுமுறையில் கணினி பழுதுநீக்கும் பயிற்சியான ஹார்டுவேர் ட்ரெயினிங்கில் சேர்ப்பது அவசியம்.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளே இன்று இணையப் பெருங்கடலில் புகுந்துவிளையாடுகின்றன.காரணம் முக நூல் எனப்படும் Face Book இன் அதீதப் பரவவே காரணம் ஆகும்.இது ஆபத்தை நிச்சயம் உண்டாக்கும்.அதே சமயம் எம்.சி.ஏ.முடித்தும் கூட ஒரு மின் அஞ்சலை பார்வேர்டு செய்யத் தெரியாமல் திணறும் கணினி பட்டதாரிகளையும் தமிழ்நாட்டில் நெடுக சந்திக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும் அறிவே சக்தி;வாசிக்கும் பழக்கமே வளமான வாழ்க்கைக்கு வழி!!!

உங்களின் சிந்தனையைத் தூண்டும் சில புத்தகங்களை பரிந்துரைக்கிறேன்.இவை ஒவ்வொன்றையும் ஒரு வருடத்தில் சுமார் 100 முறை திரும்ப திரும்ப வாசிக்கவும்;சிந்திக்கவும்;உங்களது நெருங்கிய நட்பு வட்டத்தில் கலந்துரையாடவும்.நீங்களும் சாதனையாளர் ஆகமுடியும்.

1.கர்மயோகம்=சுவாமி விவேகானந்தர்

2.எண்ணங்கள்=எம்.எஸ்.உதயமூர்த்தி

3.ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

4.உங்களால் வெல்ல முடியும்= ஷிவ் கெரா

5.மறைந்திருக்கும் உண்மைகள்= ஓஷோ

6.காமத்திலிருந்து கடவுளுக்கு= ஓஷோ

7.இது உங்களுக்காக=விகடன் பிரசுரம் வெளியீடு

8.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்=சி.எஸ்.தேவ்நாத்

9.வந்தார்கள்,வென்றார்கள்=விகடன் பிரசுரம் வெளியீடு

10.ஆழ்மனதைப் பயன்படுத்துவது எப்படி?=கண்ணதாசன் பதிப்பகம்

11.மனம் தரும் பணம்=கண்ணதாசன் பதிப்பகம்

12.ஆத்மாவின் ரகசியங்கள்=பி.எஸ்.பி.

13.ஓம்சக்தியும் அணுசக்தியும்

14.என்று காண்போம் எங்கள் சிந்துவை

15.தேசப்பிரிவினையின் சோக வரலாறு

16.நாதுராம் விநாயக் கோட்சே=Z.Y.ஹிம்சாகர்

17.ஸ்ரீரங்கன் உலா

18.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்

19.வீரபாண்டியன் மனைவி= மூன்று பாகங்கள்

20.கூடு=பால குமாரன்

21.விழிமின் எழுமின்=சுவாமி விவேகானந்தர்=விவேகானந்த கேந்திரம் வெளியீடு

22.விவேகானந்தர் பாறைச்சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திரம் வெளியீடு

23.ஒரு யோகியின் சுயசரிதை

24.மனித சக்தியும்,மன சக்தியும்

25.நான் ஏன் நாத்திகனானேன்?=ஈ.வே.ரா.

26.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப் பதிப்பகம்,நாகப்பட்டிணம்

27.வானம் வசப்படும்=பிரபஞ்சன்

28.இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள்

29.விலை ராணி= சாண்டில்யன்

30.ஞான கங்கை = மாதவ சதாசிவ கோல்வல்கர் குருஜி

ஓம்சிவசிவஓம்