RightClick

மார்கழிமாத பவுர்ணமி(8.1.12ஞாயிறு)யைப் பயன்படுத்துவோம்


நம்மை இயக்குபவை நவக்கிரகநாயகர்கள்;இவர்கள் நமது முந்தைய ஐந்துபிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு(பூர்வபுண்ணியம்) ஏற்ப இந்த பிறவியில் யோகங்கள்,அவமானங்கள்,தொழில்,திறமை,மனைவி,குழந்தை,    வீடு,சேமிப்பு,செல்வவளங்கள் முதலானவற்றை வழங்குகின்றனர்.
இந்த நவக்கிரகநாயகர்களை இயக்குவது ,நாம் பிறந்த நேரத்தில் அந்தந்த கிரகங்கள் நின்ற நட்சத்திரங்களே!
இந்த நவக்கிரக நாயகர்களையும்,27 நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துவது ஐம்பூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் ஆகும்.

இந்த ஐம்பூதங்களை செயல்பட வைப்பவர் மஹாவிஷ்ணு ஆவார்.ஏனெனில்,மும்மூர்த்திகளில் காக்கும் பணியைச் செய்பவர் மும்மூர்த்திகளில் திருமால் எனப்படும் பெருமாளே! இவருக்கு உறுதுணையாக இருப்பது இவரது மனைவியான மஹாலட்சுமி ஆவார்.
நம்மை முழுமையாக கண்காணிப்பதும்,வளர்ப்பதும்,மறுஜென்மங்களை நிர்ணயிப்பதும் பிரம்மா+கலைவாணி; திருமால்+மஹாலட்சுமி;ருத்ரன்(சிவன் அல்ல;)+பார்வதி!!!
இவர்களை கட்டுப்படுத்துவதே ஆதிசிவன் ஆவார்.இவருக்கும் மேலே ஒரு மஹா சர்வ சக்தி நம்மை ,பிரபஞ்சத்தையும் இயக்கி வருகிறது.அதுவே வாலை எனப்படும் மனோன்மணி எனப்படும் ஆதிபரப்பிரம்ம சக்தி!!! 12 வயது பெண் வடிவில் இருக்கிறாள்.இவளை இயக்குவது யார் என்று தெரியவில்லை;இவள் எப்படி உண்டானாள் என்பதும் தெரியவில்லை;நம்மில் யாராவது சித்தரை நேரில் சந்தித்தால்,இந்தக் கேள்வியைக் கேட்கலாமா?ஆதிசிவனின் மனித அவதார நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.இந்த நட்சத்திரத்தில் சந்திரன்,மார்கழி மாதத்தில் பவுர்ணமியாக பிரகாசிக்கிறார்;அந்த நாளே 8.1.12 ஞாயிறு ஆகும்.
இந்த பவித்ரமான நாளில் நாம் காலை 11.00 முதல் 12 வரையிலும்,மாலை 6 முதல் 7 வரையிலும் ஓம்அருணாச்சலாய நமஹ ஜபிக்க வேண்டும்.இப்படி ஜபிக்கும்போது நாம் சிறிதும் எதிர்பாராத மன நிலையை உணரலாம்;தவிர,நமது கர்மவினைகள் படுவேகமாக கரைய வாய்ப்புகள் உண்டு.ஏனெனில்,மிதமிஞ்சிய சக்தி வாய்ந்த நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது.
இந்த நாளில் அண்ணாமலை பகலிலோ,இரவிலோ கிரிவலம் சென்றவாறு ஓம்அருணாச்சலாய நமஹ ஜபித்தால்,அடுத்த சில நாட்களில் நமது நீண்டகால/கடுமையான பிரச்னைகள் தீர்ந்துவிடும்.அப்படி கிரிவலம் செல்லும்போது மஞ்சள் ஆடை அணிந்திருக்க வேண்டும்;ஆண் எனில்,மஞ்சள் வேட்டி மட்டும் கட்டியிருக்க வேண்டும்.உடலெங்கும் விபூதி பூசி,இடுப்பில்(வேட்டிக்குள்) ஒரு எலுமிச்சைபழத்தை வைத்திருந்து கிரிவலம் வர வேண்டும்.கிரிவலம் நிறைவடைந்தததும்,அண்ணாமலையாரின் நேர் எதிரே கிழக்குக் கோபுர வாசலில் நின்றவாறு.இரு கைகளையும் மேல் நோக்கியவாறு தூக்கி(இரண்டு கைகளுக்குள்ளும் அந்த எலுமிச்சைபழம் இருக்க வேண்டும்) ஒன்பது முறை ஓம் அண்ணாமலையே போற்றி என்று ஜபித்துவிட்டு,அந்த எலுமிச்சைபழத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.அந்த எலுமிச்சைபழத்தில் நாம் 14 கி.மீ.தூரத்துக்கு ஜபித்திருந்த ஓம்அருணாச்சலாய நமஹ மந்திர ஜபம் பதிந்திருக்கும்;வீட்டு பூஜையறையில் வைத்திருக்க வேண்டும்.அந்த எலுமிச்சை அபாரமான சூட்சும கதிர்வீச்சை வெளியிடும்;நமது கர்மவினைகள்;பிரச்னைகள்;எதிர்மறையான ஆட்களை நம்மிடமிருந்து நீக்கிவிடும்.செய்து பார்க்கலாமா?

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ