RightClick

வேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22


மெக்காலேவின் சுயரூபம் பகுதி 2 ஆராய்ந்து எழுதியவர் டாக்டர் எம்.எல்.ராஜா MBBS,DO,அவர்கள்,ஈரோடு:      செல் எண்:9443370129

தரம்பால் எழுதிய Beautiful Tree என்ற புத்தகத்தில் விளக்கப்பட்ட வில்லியம் ஏடம் என்ற ஐரோப்பியரின் 1835 ஆம் ஆண்டின் குறிப்புக்களின்படி பாரதத்தின் கல்வி நிலை 500 ஆண்டுகளுக்கும் மேலான பாதகமான சூழ்நிலைகளையும் மீறி எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்துள்ளது என்பதை சென்ற இதழில் சிந்தித்தோம்.இதே காலகட்டத்தில் இங்கிலாந்தின் கல்வி நிலை எவ்வாறு இருந்தது என்பதை இந்த இதழில் பார்ப்போம்:
ஞாயிறு பள்ளி இயக்கம்

தரம்பாலின் இப்புத்தகத்தில் 9 முதல் 11 பக்கங்களில் உள்ள குறிப்புக்களின்படி, இங்கிலாந்தில் 1780 களில் Sunday school Movement(ஞாயிறு பள்ளி இயக்கம்) ஆரம்பிக்கப்பட்டது.இதன் நோக்கம் குழந்தைகளுக்குப் பைபிள் சொல்லித் தருவதேயாகும். குழந்தைகள் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது பள்ளிக்கூடம் வந்து ஏதோ கொஞ்சம் படித்துக்கொள்ளட்டுமே என்றுதான் இத்திட்டம் துவக்கப்பட்டது.இதன்பின் 1802 இல் Day School Movement(பகல் நேரப்பள்ளி இயக்கம்) துவக்கப்பட்டது.அதாவது 1802 இல் தான் தினசரி பள்ளி என்ற விஷயமே இங்கிலாந்தில் துவங்கியது.இது அவ்வளவாக வெற்றிபெற வில்லை;மேலும், 1834 இல் நல்லபள்ளிகளின் வகுப்புக்களில் கூட,மத சம்பந்தமான பயிற்சிகள்,படிப்பது,எழுதுவது மற்றும் ஆரம்பநிலை கூட்டல் கழித்தல் கணக்குகள்(Arithmatic) எண் கணிதம் மட்டுமே கற்றுத்தரப்பட்டன.அதாவது, நல்ல பள்ளிகளில் கூட , பாடங்களின் தரம் ஆரம்ப நிலையில் தான் இருந்துள்ளது.ஒருசில கிராமப்பள்ளிகளில் எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது.ஏனென்றால்,எழுதுகின்ற செயல் கொடிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்ற மூட நம்பிக்கை இங்கிலாந்தில் அப்போது இருந்தது.

Fleet’s Act of 1802
1802 இல் அறிமுகப்பட்டுத்தப்பட்ட இந்தச்  சட்டத்தின்படி குழந்தைகள் தொழிலாளர்களாகக் கொண்டுள்ள ஒருவர்,அந்தக் குழந்தைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு எழுதுவது, படிப்பது, அடிப்படை எண் கணிதம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணிநேரம் மத சம்பந்தப்பட்ட பயிற்சிகள் தரவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.ஆனால்,இது வெற்றி பெறவில்லை.இதன்மூலம் 1800 களில் இங்கிலாந்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாது வேலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.இதே காலகட்டத்தில் பாரதத்திலிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படும் முறையான கண்காணிப்புக்கல்வி(Monitorial Method of Education) Joseph Lancaster, Andrew Bell ஆகியோரால் பின்பற்றபட்டது.இம்முறை மூலமாகத் தான் இங்கிலாந்தின் கல்விநிலை மெல்ல முன்னேற ஆரம்பித்தது.1792 இல் இங்கிலாந்து முழுவதும் பள்ளிக்கு வந்த குழந்தைகள் வெறும் 40,000 மட்டுமே! கி.பி.1818இல் 6,74,883. கி.பி.1851இல் 21,44,337.மொத்த பள்ளிகள் கி.பி.1801 இல் 3363.  கி.பி.1851இல் 46,114.மாறாக நம் நாட்டில் கி.பி.1803இல் வங்காளம் மற்றும் பிஹாரில் மட்டும் இருந்த கிராமப்பள்ளிகளின் எண்ணிக்கை 1,00,000.மேலும் டோப்ப்ஸ் (Dobbs)என்பவரின் குறிப்புப்படி, இங்கிலாந்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு ஒழுங்கின்றி விட்டுவிட்டு வருவதால் ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவருடம் படிப்பதற்குப் பதிலாக இரண்டு வருடங்களாக மாற்றப்பட்டது.(Allowing the irregularity of attendance the overage legent of school life rises on a favourable estimate from one year in 1835 to about two year’s in 1851) மேலும் 1851 வரை கணிதம் கற்பிக்கப்படவில்லை.ஆரம்பத்தில் ஆசிரியர்கள் போதுமான திறமைபெற்றவர்களாக இல்லை. லேன்கேஸ்டர்(Lancaster) என்ற ஐரோப்பியர்,ஆசிரியர்கள் அறியாமையில் மூழ்கியிருந்ததோடு குடிபோதையிலும் இருந்ததாகச் சாடியுள்ளார்.(In the beginning, the teachers were seldom competent and Lancaster insinuates that the menwere not ignotant but drunken) இதுதான் 1802 களில் இங்கிலாந்துக் கல்வியின் நிலை மற்றும் தரம். மாறாக பாரதத்தில் கல்வி 1830களில் நன்றாக இருந்துள்ளது.
ஆனால் மெக்காலேவின் சூழ்ச்சிகள் நிறைந்த தரம் தாழ்ந்த கல்வி முறை நமது நாட்டில் திணிக்கப்பட்டதால் நன்றாக இருந்த கல்வி,சீர்குலையத் துவங்கியது. இது தரம்பாலின் இப்புத்தகத்தின் 49 ஆம் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.1840 களில் துவங்கிய சீரழிவு,19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அதன்பின்னரும் மிகவும் மோசமாகத் தரம் தாழ்ந்து போனது.கல்வி மட்டுமில்லாது,அனைத்துத் துறைகளும் ஆங்கிலேயர்களின் மோசமான நிர்வாகம்,சுரண்டல்,ஆணவப்போக்கு,ஐரோப்பாவிற்கு சாதகமாக முடிவெடுத்தல் போன்றவற்றால் சீர்குலைந்து போயின.உதாரணமாக,1769 முதல் 1770 வங்காளப்பகுதியில் ஆங்கிலேயர்களின் தவறான அணுகுமுறை மற்றும் சுரண்டலால் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டனர்.

இனி மெக்காலேவின் 1835 ஆம் ஆண்டின் கல்விக்குறிப்பில் காணப்படும் தவறான விஷயங்களைத் தொடர்ந்து சிந்திக்கலாம்:
Minute of Education by Macallay
6.There are no books on any subject which deserve to be compared to our own(எந்த ஒரு பாடத்தை எடுத்துக் கொண்டாலும்,இங்கிலாந்தின் பாடநூல்களுக்குச் சமமாக ஒரு  புத்தகம் கூட பாரதத்தில் இல்லை) பாரதத்தின் சுஸ்ருத ஸம்ஹிதை என்ற அறுவை சிகிச்சை நூல் குறைந்தபட்சம் 5000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது.இந்த நூல் தனது ஸீத்ர ஸ்தானத்தின் 16 ஆம் அத்தியாயத்தில் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையை விளக்கியுள்ளது.இதன் வழிமுறையில் நம்நாட்டில் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் பல்லாயிரம் ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வந்துள்ளன.Madras Gazette லும் இதைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன.பாரதத்தின் இந்த முறையை 1794 அக்டோபர் இதழில் இங்கிலாந்தின் ஜெந்தில் மேகசின் படத்துடன் விளக்கியுள்ளது.இதனை இண்டர்நெட்டிலும் நாம் காணமுடியும்.இப்பத்திரிகைச் செய்தியின் மூலமாகத்தான் ஐரோப்பியர்கள் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையினை அறிந்து கொண்டார்கள்.இதே போன்று மருத்துவத்தில் சரக ஸம்ஹிதை அஷ்டாங்க ஹ்ருதயம்,வான சாஸ்திரத்தில் ஆர்ய பட்டீயம்,சூர்ய ஸம்ஹிதை என நூற்றுக்கணக்கான நூல்கள் ரசாயனம்(கெமிஸ்ட்ரி), கணிதம்(மேத்ஸ்),இயற்பியல்(பிஸிக்ஸ்) என விஞ்ஞானத்தின் அனைத்துத் துறைகள், பொருளாதாரம்,அரசியல்,தர்ம மற்றும் நீதி நூல்கள்,வரலாற்று நூல்கள் பாரதத்தில் உண்டு. திருக்குறளுக்கும் ஸ்ரீமத் பகவத்கீதைக்கும் ஈடான நூல் ஏதேனும் ஆங்கிலத்தில் இன்றைய அளவிலும் இல்லை;பின்னர் 1800 களில் நிலைமையைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது.ஆனால் மெக்காலே எவ்வளவு தூரம் பொய்யைப் புனைந்துரைத்து தனது அறியாமையையும்,ஆணவத்தையும் காண்பித்துள்ளான்.

7.(doubt whether Sanskrit literature be as valuable as that of Sexon and Norman Progenitors.In some departments in the history for example.a certain that it is much less so)(நமது சேக்ஷான் மற்றும் நார்மன் பழங்குடியினரின் இலக்கியங்களுக்கு இணையாகக்கூட ஸமஸ்க்ருத இலக்கியங்கள் இருப்பது சந்தேகம்.உதாரணமாக வரலாற்று நூல்களில் ஸமஸ்க்ருதம் மிகவும் கீழான நிலையில் இருப்பது உறுதியான ஒன்று) உண்மையில் சேக் ஷான் மற்றும் நார்மன் மக்களின் இலக்கியங்கள்,நூல்கள் என்று எதுவும் இல்லை.இதை விட பொய்மை நிறைந்த ஒன்றை யாரும் கூற முடியாது.ஸமஸ்க்ருதத்தில் உள்ள வரலாற்று நூல்கள் எண்ணற்ற. பாரதத்தில் அரசர்கள் தினமும் வரலாறு படிக்க வேண்டியது ஒரு புனிதமான கடமை ஆகும்.

மாறாக இங்கிலாந்தின் நிலை என்ன? இதனை இங்கிலாந்து பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாற்று புத்தகமான A History of England (இங்கிலாந்தின் வரலாறு) என்பதன் மூலமாகவே பார்ப்போம்: இப்புத்தகத்தின் 38 ஆம் பக்கத்தில், “ஏங்க்லோ ஸேக்சன்களுக்கு(ஆங்கிலேயர்களுக்கு) ஒரு வருடமானது எந்த நாளில் துவங்குகிறது என்ற விஷயம் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் கூட(1200 ஆண்டுகளுக்கு முன்பு) தெரியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் வரலாற்றை ஓரளவுக்காவது எழுதினார் என்று கூறப்படும் நின்னியஸ் என்ற ஆங்கிலேயர், “ தனக்குக் கிடைத்த தகவல்களை வைத்துத் தான் எழுதிய இங்கிலாந்தின் வரலாறு வெறும் குப்பைக்குச் சமம்” என்று குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தின் வேர்கள் உண்மையில் எவை என்று இன்று கூட இங்கிலாந்து மக்களுக்குத் தெரியாது.

8.Within the last hundred and twenty years.a Nation which had previously been in a state of barbarious as that in which our ancestors where before the Crusades.has gradually emerged from the ingnorance புனிதப்போர்களுக்கு முன்பு நமது முன்னோர்கள்((ஆங்கிலேயர்கள் எவ்வாறு இருந்தனரோ, அவ்வாறே பாரதம் காட்டுமிராண்டித்தனமாக இருந்துள்ளது.கடந்த 120 ஆண்டுக்காலத்தில் (ஆங்கில ஆட்சியின் காரணமாக) மெல்ல தனது அறியாமையில் இருந்து மீண்டும் வந்துள்ளது))ஆனால் உண்மை நிலையை சுவாமி விவேகானந்தர் தெள்ளத் தெளிவாக முழங்கியுள்ளார்.மிகப்பண்டைய நாடுகள் என்று கூறப்படும் கிரீசும்,ரோமப்பேரரசும் தோன்றுவதற்கு முன்னரே, இப்போதுள்ள ஐரோப்பியர்களின் முன்னோர்கள், காடுகளில் வாழ்ந்து கொண்டு,தங்களின் உடம்புகளில் நீலநிறச் சாயத்தைப் பூசிக்கொண்டு காட்டுமிராண்டிகளாகக் கிடந்த காலத்திலேயே, பாரதத்தில் மிகச்சிறந்த வாழ்க்கை முறைகள் உருவெடுத்துவிட்டன.அதற்கும் முன்பும், வரலாறு என்ற ஒன்று இருந்தததற்குச் சான்றுகளே இல்லாத காலத்தில் பாரம்பரியங்கள் மிகமிக நீண்டு கிடக்கும் இறந்த பழைய காலத்தில் அந்த காலத்திலிருந்து இன்று வரையில் கருத்துக்களுக்குப் பின்னால் கருத்துகள் இங்கிருந்து அணிவகுத்து உலகெங்கும் சென்றன. ஆனால்,ஒவ்வொரு வார்த்தையும் ஆசிர்வாதத்தின் பின்னணியோடும், அமைதியின் முன்னணியோடும் பேசப்பட்டன. இன்று உலக நாடுகள் அனைத்தின் முன்பும்,நாம் மட்டுமே படையால் யாரையும் வென்று அடிமைப்படுத்தாத இனமாக வாழ்கிறோம்.(இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்கள் வருக! சுவாமி விவேகானந்தர்,ஸ்ரீராமகிருஷ்ண மடம் சென்னை,பக்கங்கள் 3 மற்றும் 4).ஆகவே, வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு நாம் நாகரீகத்தின் உச்சியில் இருந்து வந்தது மட்டுமல்ல,உலகின் அனைத்து நாடுகளை நாகரீகப்படுத்தி மேம்படுத்தவும் செய்திருக்கிறோம்.மாறாக வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஐரோப்பா இருளில்தான் இருந்தது. கி.பி.500 முதல் கி.பி.1500 வரையான காலத்தை “ஐரோப்பாவின் இருண்ட காலம்” என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

9.(((The Languages of Western Europe civilized Russia I can not doubt that they will do for the Hindoo மேற்கூறிய ஐரோப்பிய மொழிகள் ரஷ்யாவை நாகரீகப்படுத்தியது.இதே போன்று அவை ஹிந்துக்களையும் நாகரீகப்படுத்தும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை)))ஏற்கனவே நாம் சுவாமி விவேகானந்தர் மூலமாக பாரதம் மற்றும் ஐரோப்பாவின் உண்மை நிலையைப் பார்த்தோம்.மேலும் மெக்காலே கூறியது போன்று மேற்கு ஐரோப்பாவின் மொழிகள் மூலமாகத்தான் ரஷ்யா நாகரீகம் அடைந்தது என்பது பொய்யே.ரஷ்யர்கள் இதைக் கேட்டால் கொதித்து எழுந்துவிடுவார்கள்.மேலும் பாரதத்தில் உள்ள ரஷ்ய சார்பு அரசியல்வாதிகள்,இதை அப்படியே ஏற்றுக்கொண்டு,தொடர்ந்து மெக்காலேவுக்குச் சேவகம் செய்யத் தயாரா?
நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம்22,23;டிசம்பர் 2011.
ஓம்சிவசிவஓம்