RightClick

நமக்கு உதவும் ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகள்

கடும் பொருளாதார நெருக்கடி நீங்கிட:100 மில்லி பசு வெண்ணெய்யை உருக்கி பசு நெய்யாக்கிக் கொள்ள வேண்டும்.அத்துடன் 100 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கி,தாமரை நூல் திரி போட்டு தீபம் ஏற்றி லட்சுமியை வழிபட்டு வரவேண்டும்.(இந்த முறையைப் பின்பற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது)

குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீர: காலையில் சூரிய உதயத்திற்கு முந்தைய ஒன்றரை மணிநேரத்திலும்,சூரிய அஸ்தமனம் ஆன ஒன்றரை மணி நேரத்திலும் வீட்டில் சாம்பிராணி புகை போட்டு வர வேண்டும்.90 நாட்கள் இவ்வாறு செய்துவர குடும்பத்தில் இருப்பவர்களுக்குள் இருந்துவந்த மனவேறுபாடுகள் அடியோடு நீங்கிவிடும்.அசைவம் சாப்பிடாமல் இருந்து,இவ்வாறு செய்தால் மட்டுமே இது பலன் தரும்.
அபிசாரப்பிரயோகம் யார் செய்தாலும்,அவரது குடும்பத்தில் ஆரம்பத்தில் குழந்தைகளில் ஏதாவது ஒரு இனத்தைச் சேர்ந்தவை மட்டுமே பிறக்கும்;இரண்டு அல்லது மூன்று தலைமுறையாக அபிசாரப்பிரயோகம் எனப்படும் மாந்திரீகப்பிரயோகத்தை தனிமனிதர்களுக்குப் பயன்படுத்தினால்,குழந்தைகளே பிறக்காமல் அந்த குலமே அழிந்துவிடும்.இதற்கு தமிழ்நாட்டில் பல லட்சம் உதாரணங்கள் இருக்கின்றன.

எதிர்மறை எண்ணங்கள் வராமலிருக்க: எக்காரணம் கொண்டும் மாலை 4 முதல் 6 மணிவரையிலும் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.தண்ணீர்கூட அருந்தாமலிருப்பது அவசியம்.சாப்பிட்டால்,எதிர்மறை எண்ணங்களின் தொகுப்பாகவே நாம் வாழ்வோம்.(நான் தான் அப்பவே சொன்னேன்ல; என்று கூறுபவர்கள் இந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்)
நீண்டகாலப்பிரச்னைகள் தீர:ரிஷப பிரதோஷம் வரும் நாட்களில் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் பழமையான சிவாலயம் செல்லவும்;சிவனுடைய சன்னிதியை 12 முறை அப்பிரதட்சணமாக சுற்றி வரவும்;பிறகு, சிவனுக்குரிய மாலையை அணிவிக்கவும்;தேங்காய்,பத்தி,சந்தனம்,நெய் தீபம் வைத்து அர்ச்சனை செய்யவும்;என்ன காரியத்திற்கு அர்ச்சனை(சங்கல்பம்) செய்கிறீர்கள்? என்பதை அர்ச்சகரிடம் தெரிவிக்கவும்.அர்ச்சகர் இல்லாதகோவில்களில்,மானசீகமாக வேண்டினால் போதுமானது;

இதைச் செய்யும் நாட்களில் மட்டுமல்ல;எப்போதும் அசைவம் சாப்பிடாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்துமுடித்து,சிவாலயம் விட்டு வெளியே வரும்போது ஏதாவது ஒரு காளை அல்லது பசுவுக்கு 6 நாட்டு வாழைப்பழங்களை தர வேண்டும்.

இந்தியா விஞ்ஞானப்பாதையில் முன்னேற ஒரு ஆன்மீக வழிமுறை:போகர் 7000,அகஸ்தியர் 12000 இந்த இரண்டு பாடங்களையும் கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்.
இல்லறத்தார்கள் ருத்ராட்சம் அணியலாம்;தீட்டு கிடையாது.துறவறத்தார்கள் தான் ருத்ராட்சங்கள் கொண்ட மாலை அணியவேண்டும்.

புதுவீட்டில் குடியேறுபவர்களுக்கு: புதுவீட்டில் குடியேறியது முதல் 100 நாட்களுக்கு வீட்டில் அசைவம் சமைக்கவோ,சாப்பிடவோ கூடாது;வெளியில் இருந்து வாங்கிவந்தும் சாப்பிடக்கூடாது;அப்படி செய்யாமலிருந்தாலே,அந்த வீட்டில் மன நிம்மதியும்,குடும்ப ஒற்றுமையும் நீடிக்கும்.

ஏழரச்சனியின் தாக்கம் தீர: பழமையான சிவாலயங்களில் இருக்கும் கால பைரவரை சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 10.30 வரையிலும் வெள்ளைப்பூசணிக்காயில் நல்லெண்ணெய் தீபமிட்டு அல்லது 12/21 உளுந்து வடைகளால் மாலையிட்டு கால பைரவ அஷ்டகம் வாசிக்கவும்.அல்லது அந்த நேரம் முழுவதும் கால பைரவர் சன்னிதியின் முன்பாக அமர்ந்து வேண்டினாலும் போதும்.

அல்லது

ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று அவரை வழிபட்டு வரவும்.

அல்லது

முனீஸ்வரர் கோவிலுக்குச் சென்று தினமும் காலை அல்லது 6 முதல் 8 மணிக்குள் வழிபாடு செய்யவும்.(இவ்வழிபாடு செய்பவர்கள் நேர்மையை தனது குணமாக வைத்திருக்க வேண்டும்.இல்லாவிட்டால் எதிர் விளைவாகிவிடும்)

உலகத்தமிழ் மாநாடுகளில் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்குள்ளும்  புதைந்திருக்கும் ஆன்மீக ரகசியத்தை ஆராய்ந்து தமிழறிஞர்கள் கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும்;சித்தர்களின் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை வெளியிட வேண்டும்.வெறும் கவிதை பாடி பலனில்லை; ‘நாயோட்டும் மந்திரம் நமனோட்டும் மந்திரம்,பேயோட்டும் மந்திரம்,பிசாசோட்டும் மந்திரம் “சீ” என்னும் மந்திரம் எனப் பாடல் உண்டு.நம்மில் எத்தனை பேருக்கு இப்படி ஒரு பாடல் இருப்பது தெரியும்?


ஒம்ஸ்வாஹா என்ற மந்திரத்தைத் தான் ஒமேஹா என்று மேல்நாட்டினர் நம்மிடம் கடன்வாங்கிப் பயன்படுத்திவருகின்றனர்.


புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராம உபாசனை கைகூடும்;விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆறுமுக உபாசனை எளிதில் வசமாகும்;பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குபேர உபாசனை செய்தால்,சுலபமாக பணக்காரர் ஆகிவிடமுடியும்.
யாருக்கு பாவ மன்னிப்பு கிடையாது?:= வெள்ளை வேட்டி கட்டியவர்கள் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் உண்டு;காவி வேட்டி கட்டியவர்கள் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் கிடையவே கிடையாது.

யார் ஸ்படிகமாலை அணியலாம்? வயதானவர்களும்,மனைவியை இழந்தவர்களும் அணியலாம்.குடும்பஸ்தர்கள் ஸ்படிக மாலை அணியக்கூடாது.அப்படி அணிந்தால்,ஆண்மையைக் குறைத்துவிடும்.
குண்டலினி சக்தி: ஜெட் விமானத்தின் சக்தி  500 HP ஆகும்.ஆனால்,குண்டலினி சக்தி 2000 HP உடையது என நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது.அதாவது ஒவ்வொரு மனிதனின் மூலத்திற்குள்ளும் 2000 HP சக்தி புதைந்திருக்கிறது.இதை விழிப்படையச் செய்யாமல்,வெறும் காம விகாரத்தில் விழவா நாம் பிறந்தோம்?