RightClick

விஜயபாரதம் பஞ்சாமிர்தம் பகுதியிலிருந்து நல்ல்ல செய்திகள் சில


மீண்டும் இந்துமயமாகிவரும் ரஷ்யாவும்,கொரியாவும்

ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவில் வசிப்பவரான டாக்டர் விக்டர் ஷெவ்த்சோவ்,வயது 56;நவம்பர் 6 முதல் 10 வரை காயத்ரி பரிவார் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹரித்வாருக்கு வந்திருந்தார்.
“ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகாரர்கள் பழைய காலத்து கம்யூனிஸ்டுகளைப் போல ஏக கெடுபிடியாக நடந்துகொள்கிறார்கள்.இந்திய சாதுக்களோ சந்தேகங்களுக்கு பொறுமையாகவும்,யதார்த்தமாகவும் விளக்கம் தருகிறார்கள்.எனவே,ஏராளமான ரஷ்யர்கள் ஹிந்துயிசத்திடம் ஈர்ப்புக்குள்ளாகிறார்கள்”என்றார் இவர்!
தென்கொரியப் பெண் தாஸோம் ஹெர் தனது தாயாருடன் ஹரித்துவாரில் வசிக்கிறார்.இவரது பெற்றோர் ஒரு தென் கொரிய யோகா வகுப்பில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்;யோகாவின் ஈர்ப்பின் முடிவாக இந்த தென் கொரியக்குடும்பமே இந்துதர்மத்தில் கரையக் காரணமாகிவிட்டது.தாயும் மகளும் காயத்ரி பரிவார் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். “இந்தியாவில் தான் நான் அரிய பண்புகளைக் கற்றுக்கொள்ள முடியும்  என எனது அம்மா கருதுகிறார்” என்கிறார் 22 வயது தாஸோம்.

பாரத ராணுவ வீரர்களின் புகழ்பாடும் இஸ்ரேல் பாடநூல்

இஸ்ரேலில் பாரத ராணுவவீரர்கள் புரிந்த சாகசத்தை அந்நாட்டு அரசுபாடநூலில் சேர்க்க முடிவு செய்திருக்கிறது.இதன் விபரம் வருமாறு:முதல் உலகப்போரின்போது 1918இல் இஸ்ரேலில் போரிட்ட இந்திய ராணுவத்தின் குதிரைப்படை வீரர்கள் செப்டம்பர் 23 அன்று துருக்கியிடமிருந்து ஹேபா நகரை அதிரடியாக மீட்டார்கள்.அந்த போர்முனையில் 900 பாரத வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.ஹேபா போரில் அபார சாகசம் புரிந்தவர்கள்:கேப்டன் அமன்சிங் பஹதூர்,ஜோர் சிங்,கேப்டன் அனூப் சிங்,செகண்ட் லெப்டினண்ட் ஸகத் சிங்,மேஜர் தளபத் சிங் ஆகியோர்.இவர்களில் மேஜர் தளபத் சிங் ‘ஹீரோ ஆப் ஹேபா’ என்று போற்றப்படுகிறார்.பாரத ராணுவம் இவர்களுக்கு உயரிய விருதுகள் அளித்து கவுரவித்தது.இந்த ஆண்டு செப்டம்பர் 23 அன்று ஹேபா மாவீரர்களைப் போற்றும் வருடாந்திர ராணுவ நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது.ஹேபா நகர மேயர் ஹேத்வா அலமோங்,பாரத ராணுவத்தின் பிரதம தளபதி ஜெனரல் வி.கே.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இஸ்ரேல் மாணவர்கள் இனி இந்த பாரத வீரர்களைப் போற்றும் வரலாறு படிக்க இருக்கிறார்கள் என்று அப்போது ஹேத்வா அறிவித்தார்.
நன்றி:ராஷ்டிர தேவ்,டேராடூன் 15.10.11

தேசபக்தி நிறைந்த சாப்ட்வேர் நிபுணர்கள் பாரீர்;பாரீர்;பாரீர்!!!

ஒரு சாப்ட்வேர்! அதைக் கொண்டு சாதாரண செல்போன் வாயிலாக விதை,நாற்று,உரம்,பாசனம்,பூச்சிமருந்து முதலியவற்றில் ஆண்டுக்கு ரூ.225/-கட்டணத்தில் 12,000 விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிவருகிறார் விஜய் பிரதாப்சிங் ஆதித்யா என்ற ஐ.டி.வல்லுநர்.
கே.சந்திரசேகர் என்ற ஐ.டி.வல்லுநர் உருவாக்கியுள்ள சாப்ட்வேர்,தொலை மருத்துவ முறையில் கிராமப்புற மக்களுக்கு கண் பரிசோதனை செய்து கண் ‘நார்மல்’ அல்லது ‘டாக்டரை பாருங்கள்’ என்று ஆலோசனை தருகிறது.இந்த நுட்பத்தை சில வெளிநாடுகள் பின்பற்றத்துவங்கியுள்ளன.

ஆலோக் பாஜ்பாயி என்ற ஐ.டி.வல்லுநர் ரயில் ,விமான பயண முன்பதிவு செய்து தரும் சாப்ட்வேர் உருவாக்கியுள்ளார்.இதற்கான இணையதளத்தை லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஐ.டி.வல்லுநர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தனது அறிவாற்றலை தந்தார்கள்.இன்றோ,இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தூண்டுகோலாக இருக்கிறார்கள்.
ஆதாரம்:நியூயார்க் டைம்ஸ் 5.11.11

நன்றி:விஜயபாரதம்,பக்கம்15,பஞ்சாமிர்தம் பகுதி,25.11.11