இந்த மார்கழிமாத தேய்பிறை அஷ்டமியானது,இராகு காலத்திற்குள் அமையவில்லை;17.12.11 சனிக்கிழமை மாலை மணி 4.37க்கு தேய்பிறை அஷ்டமி ஆரம்பித்து,18.12.11 ஞாயிறு மதியம் 2.35க்கு நிறைவடைகிறது.இராகு காலமோ சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 வரையிலும்,ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணிவரையிலும் இருக்கிறது.திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள் மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் அமைந்திருக்கும் அருள்நிறை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதியில் நாளை 17.12.11 அன்றே தேய்பிறை அஷ்டமியைக் கொண்டாடுவர்.விருப்பமுள்ளவர்கள் தாடிக்கொம்புக்கு வருக!!
நாம் நாளை காலை 9 முதல் 10.30க்குள் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவோம்;அவரது படத்தின் முன்பாக நெய் தீபம் ஏற்றிவைத்து,அவரது மூல மந்திரத்தை 330 தடவை ஜபிப்போம்;நாளை மறுநாள் ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் இதேபோல,330 தடவை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரத்தை ஜபிப்போம்;
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூலமந்திரம்:
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சஹவம்ஸ ஆபதுத்தோரணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
இதுவரையிலும் தினமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு வருபவர்களுக்கு,பண ரீதியான பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன; கடுமையான கர்மவினைகள் விலகி,அவரவர் விரும்பிய வாழ்க்கை அமையத்துவங்கியிருக்கிறது.
பல ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் கேட்டுக்கொண்டதன் பெயரில் இந்த ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டின் பலன்களை விவரிக்க சம்மதிக்கவில்லை;எனவே,பணரீதியான பிரச்னைகள் இருப்போர்கள்; தொழிலில் சரிவை நோக்கி செல்லுபவர்கள் தினமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து கடன்களை அடைத்துவிடமுடியும்;தொழிலில் மீண்டும் பிரகாசிக்க முடியும்.குடும்பப் பிரச்னைகளை தீர்க்க முடியும்.