RightClick

சித்தரை தரிசிப்பதை விட,சித்தராகவே மாறிவிட ஒரு சூப்பர் வழி
பல தமிழ்நாட்டு மக்கள் ஏதாவது ஒரு சித்தரை நேரில் தரிசிக்க மாட்டோமா? என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.ஏன் அப்படி ஏங்குகிறார்கள் என ஆச்சரியத்தோடு அவர்களது ஆழ்மனதுக்குள் ஊடுருவினால்,அப்படி ஏதாவது ஒரு சித்தரை தரிசித்துவிட்டால்,அந்த விநாடியோடு நமது கஷ்டங்கள்,அவமானங்கள்,சிரமங்கள் விலகிவிடும் என்பது இவர்களின் நம்பிக்கை;இந்த நம்பிக்கையை நமது புராணக்கதைகள் விளக்கியிருக்கின்றன.

ஆனால்,அந்த புராணக்கதைகளுக்குள் பொதிந்துகிடக்கும் ரகசியத்தை பெரும்பாலானவர்கள் உணருவதில்லை;நானும் பல ஆண்டுகளாக அப்படித் தான் இருந்தேன்.


ஆன்மீக ஆராய்ச்சியாளரும் ,எனது மானசீக ஆன்மீக வழிகாட்டியுமாகிய சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் சொன்ன கருத்து எனது ஆழ்மனத்தைத் தொட்டது:சித்தர்கள்,மகான்களை சந்தித்தால்,அவர்கள் நம்மை ஆசிர்வாதிப்பார்கள்.அவ்வளவுதான்.அதன் பிறகும் கூட,நமது கர்மவினைகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும். என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இன்றும் மந்திராலயத்துக்கு ஏராளமான தமிழ் மக்கள் அடிக்கடி பயணம் செய்துவருகின்றனர்.அவர்களில் பலருக்கு கடுமையான பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.(ஆதாரங்கள்:குமுதம் ஜோதிடம் வார இதழ்கள் பல) ஆனால்,சகஸ்ரவடுகர் ஐயா இப்படி சொல்லியிருக்கிறாரே என்று மண்டையைப் போட்டு குழப்பிக்கொண்டிருந்தேன்.


யார் தனது நீண்ட காலப்பிரச்னை தீராதா? என்ற தவிப்போடு மந்திராலயம் மற்றும் நவபிருந்தாவன்களுக்குச் செல்கிறார்களோ அவர்களுக்கு அங்கு சென்று திரும்பியதும்,பிரச்னைகள் தீர்ந்துவிடுகின்றன.தவிர,அவர்கள் அனைவருமே முன் ஜன்மங்களில் ஏதாவது ஒரு விதத்தில் நவபிருந்தாவனத்து மகான்களில் யாராவது ஒருவருக்கு சேவை செய்தவர்கள் ஆவர்.


அதேபோல,நமது கர்மவினை ரகசியத்தை நமது பிறந்த ஜாதகத்தைக் கொண்டு  கண்டுபிடிக்க முடியும்.அதுவும் இயலாதவர்கள் ஒரிஜினல் நாடி ஜோதிடத்தை அணுகலாம்.

பெரும்பாலான கர்மவினைகள்,நாம் கடந்த ஐந்து பிறவிகளிலும்,நமது நான்கு தலைமுறை முன்னோர்கள் செய்த தவறுகளின் விளைவுகளாலும்(அந்த விளைவுகளில் எட்டில் ஒரு பங்கைத்தான் நாம் ஒரு ஆளாக அனுபவிக்கிறோம்.மற்றவை நமது பங்காளிகளுக்கு பிரிந்து போய்விடுகிறது)உருவாகின்றன.இவையே,பித்ரு தோஷம்,ஸர்ப்ப தோஷம்,மாங்கல்ய தோஷம்,ஸ்ரீ எனப்படும் பெண் தோஷம் என 64 விதமான தோஷங்களாக பரிணமித்திருக்கின்றன.


இந்த தோஷங்களுக்கு நாம் அப்படி என்னதான் முன் ஜன்மங்களில் சேஷ்டைகள் செய்திருப்போம்? என கேட்கிறீர்களா?
விரிவாக எழுத முடியாது.ஏனெனில்,பல சேஷ்டைகள் காமம் சார்ந்தவை;மேலோட்டமாக கோடிட்டுக் காட்ட மட்டுமே முடியும்.புரிந்து கொள்ளுங்கள்.

பணத்தால்,பதவியால் அழகும்,ஏழ்மையும் நிறைந்த பெண்ணை அல்லது பெண்களை கட்டாயப்படுத்தி அனுபவித்தல்;


போதுமான வசதிகள் இருந்தும் உடன் பிறந்தவர்களின் உரிய பங்கு சொத்துக்களைத் தராமல் இழுத்தடித்து,அவர்களின் வறுமையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலிருத்தல்;


ஏதோ ஒரு அல்லது பல காரணங்களால் பசுவை சித்திரவதைப்படுத்துதல் அல்லது கொல்லுதல்;

அந்தணன் அல்லது கோவில் பூசாரி அல்லது துறவியை மனம் நோகடித்தல் மற்றும் மிரட்டி,அடாவடி செய்தல் அல்லது கொல்லுதல்;

 கோவில் சொத்துக்களை  கொள்ளையடித்து,மனைவியல்லாத ,ஒழுக்கங்கெட்ட பெண்களுக்குச் செலவழித்தல்;இவர்களே,குரு நீசமாகிப் பிறந்தவர்கள்(யாருக்கெல்லாம் மகர ராசியில் திரு ஓணம் நட்சத்திரத்தில் குரு இருக்கப்பிறந்தார்களோ,அவர்களே குரு நீசத்துடன் பிறந்தவர்கள்)

அழகும்,அறிவும்,அன்பும் நிறைந்த மனைவி இருக்கும்போது,இன்னொருத்தியுடன் சொகுசாக வாழ்ந்து கொண்டு,மனைவியை கண்டுகொள்ளாமலிருந்தால் கூட ஓரளவே தோஷம்;அதை விடுத்து,சொந்த மனைவியை விபச்சாரி என பிரபலப்படுத்துதல்;

வசதியாக வாழ்வதற்காக பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளுதல் அதற்காக அவளை சித்திரவதை செய்தல்;

இன்னும் இருக்கிறது.எழுதவே கூச்சமாக இருக்கிறது.எனவே. . .

இந்த 64 விதமான தோஷங்களை நீக்கிட  தகுந்த குருவின் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்.அப்படி செய்தால்,முறைப்படி நவகலச யாகம் செய்த திருப்தி கிடைக்கும்.

அப்படிப் பட்ட குருவே ,எனது ஆன்மீக குரு  திரு.சகஸ்ரவடுகர் ஆவார்.அவரது செல் எண்: 9677696967

நவகலச யாகம் செய்ததும்,100 நாட்களில் மிகப்பெரிய நன்மைகள் வந்துசேரும்;அல்லது மிகப் பெரிய பிரச்னைகள் தீர்ந்துவிடும்.அப்படித் தீர்ந்தாலும்,நவகலச யாகம் செய்த பின்னர்,12 அமாவாசைகளுக்கு நமது வாழும் ஊரில் அன்னதானம் செய்ய வேண்டும்.அதுவும் ஒவ்வொரு அமாவாசைக்கும் 9 பேர்களுக்குக் குறையாமல் அன்னதானம் செய்ய வேண்டும்.
தொலைதூரத்தில் வசிப்பவர்கள் தனது ரத்த உறவுகள் மூலமாக சொந்த ஊரில் இதே அன்னதானத்தைத் தொடரலாம்;அல்லது துவாதசி திதியன்று திரு அண்ணாமலைக்கு வருகை தந்து மூன்று வேளைகளுக்கு அன்னதானம் தலா ஒரே ஒருவருக்கு அன்னதானம் செய்யலாம்.

ஆக,எப்படியிருந்தாலும்,திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் ஆராய்ச்சி முடிவின்படி, நமது கர்மவினையைப் போக்கிட மூன்று சுலப வழிகளைச் சொல்லியிருக்கிறார்.அதுவும் 40 வருட ஆன்மீக ஆராய்ச்சிக்குப் பின்னர்!!!

1.அன்னதானம் செய்தல்(நமது ஜன்ம நட்சத்திரம் நிற்கும் நாளில் பழமையான சிவாலயத்தில் அல்லது குலதெய்வக் கோவிலில் செய்ய வேண்டும்)

2.ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு( வீட்டில் தினமும் மற்றும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் கோவிலில்)

3. ஒரு கோடி தடவை ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று மந்திரம் ஜபிப்பது;அதற்குள் நமது கர்ம வினைகள் தீர்ந்துவிடும்.அதன்பிறகு,நாம் ஜபிக்கும் ஒவ்வொரு ஒரு லட்சம் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திர ஜபமும் நம்மை சித்தராக்கிவிடும்.நாம் ருத்ர அம்சத்தோடு,நமது ஆன்மீக வாழ்க்கையில் பல புதிய பரிமாணங்களை உணரலாம்.அதை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது!!!!!!!!!!!!!!ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ