RightClick

அமானுஷ்ய சக்தி படைத்த தெய்வம்:செங்கணூர் பார்வதிதேவி

இயற்கையின் உபாதை மனிதர்களுக்குத்தான் உண்டு என எண்ணியிருந்தோம்.ஆனால் தெய்வங்களுக்கு இது உண்டு என்பதை இந்த சம்பவம் மூலமாக உணரலாம்.
கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் கொட்டாரக்காரா அடூர்க்கு வடக்கேயும்,திருவல்லா என்ற ஊருக்குத் தெற்கேயும் திருச்சூரிலிருந்து மேற்கேயும் இந்த ஊர் அமைந்திருக்கிறது.இந்த ஊரின் பெயர் செங்கணூர்.இங்கு ஒரு சிறிய நரசிம்மர் கோவிலும் மற்றும் மஹாதேவர் என்னும் சிவாலயமும் இருக்கின்றன.இந்த சிவன்கோவிலில் இருக்கும் அம்மனின் பெயர் பார்வதிதேவி.

தமிழ்நாட்டில் இருக்கும் சில சிவாலயங்களில் உலவும் அதே புராணக்கதை.அதாவது சிவன் பார்வதி திருமணத்தின்போது,எல்லோரும் கூடியதால் வடதிசை தாழ்ந்துவிட்டது.அதை சமன்படுத்த அகத்தியரை தென் திசைக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது.அதன்படி அகத்தியர் தென் நாட்டிற்கு வருகை தருகிறார்.அகத்தியர் தென் நாட்டில் இருக்கும் சஹயாத்திரி எனப்படும் சோனாத்திரி  மலைக்குச் சென்று தவம் செய்கிறார்.பரமசிவன் பார்வதி தம்பதியராக வருகை தந்து,அகத்தியருக்கு காட்சி கொடுக்கின்றனர்.அந்த சமயத்தில் பார்வதிதேவி மாதவிடாய்க்கு உள்ளாகிறார்.
தன்னை தூய்மையாக்கி கொள்வதற்காக பார்வதி,பரமேஸ்வரன் தம்பதியர் 28 நாட்கள் அங்கு தங்குகின்றார்கள்.28 நாட்கள் கழிகிறது.அதன்பிறகு பாரம்பரியமாய் அங்குள்ள பஞ்சலோக விக்ரகத்திற்கு உள்ளாடை அணிவித்துத்தான் அலங்காரம் செய்கிறார்கள்.இந்த மாதவிடாய் நிகழ்வு அந்த பஞ்சலோக விக்ரகத்திற்கும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.இந்த மாதிரியான நிகழ்வு உலகத்தில்  எந்த ஒரு சிவாலயத்திலும் நிகழாத ஒரு நிகழ்வு!!!
அதனால்,முதல்நாள் அங்குள்ள முதன்மை குருக்கள்/அர்ச்சகர் முதல்நாள் ஆடை அலங்காரத்தை மறுநாள் காலையில் கண்ணைமூடிக்கொண்டுதான் களைகிறாராம்.அந்த உள்ளாடை மற்ற ஆடைகளைக் கண்ணை மூடிக்கொண்டு தன் உதவி அர்ச்சகரிடம் கொடுக்கிறார்.உதவி அர்ச்சகர் அதில் ஏதாவது ரத்தக்கறை பட்டிருக்கிறதா? என்று நன்கு பார்வையிடுகிறார்.அப்படி ஏதேனும் இருந்தால் அதை அப்படியே குருக்கள்/அர்ச்சகர் மனைவியிடம்  அனுப்பிவிடுகிறார்.அவர் மனைவி அந்த புனிதத்தை உறுதிபடுத்துகிறார்.அதை வாங்குவதற்கு முன்பதிவு செய்துவிடுகின்றார்கள்.அந்த உள்ளாடைக்கு கோவில் நிர்ணயம் செய்த விலை ரூ.10/-தான்!!! ஆனால்,மிக அதிகமான விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள்.

அப்படி வாங்கிய சில முக்கிய பிரமுகர்கள்:முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி,திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பதவி வகித்த சி.பி.ராமசாமி ஐயர் போன்றவர்கள்.
கி.பி.1810 முதல் கி.பி.1814 இல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.


அப்போது  பிரிட்டன் ,நமது பாரதத்தை அடிமைப்படுத்தி,நமது செல்வ வளத்தைச் சுரண்டிக்கொண்டிருந்தது.(நாம்தான் பிரிட்டன் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தது என்று பொய்யான வரலாறு படித்துக்கொண்டிருக்கிறோம்)எனவே,திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசு ஆலோசகராக கர்னல் மன்றோ என்ற கிறிஸ்தவ(ஆங்கிலேய) அதிகாரியை அரசு நியமித்திருந்தது.அவன்,செங்கணூர் வந்து மஹாதேவ ஆலயத்தின் கணக்குகளை தணிக்கை செய்துகொண்டிருந்தான்.அப்பொழுது,அம்மனுக்கு உள்ளாடைச் செலவைப் பற்றி விபரம் கேட்டான்.கோவில் பணியாளர்களும் அம்மனின் மாதவிடாய் பற்றிய அதிசயத்தை விளக்கியிருக்கின்றனர்.

இதைக் கேட்டு வாய்விட்டு சிரித்துவிட்டு,பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட விக்கிரகத்திற்கு இது எப்படி உண்டாகும்? இது அசிங்கமானது;அபத்தமானதும் கூட என்று சொல்லிவிட்டு இந்தச் செலவை நான் நிராகரிக்கிறேன் என்றபடி தனது பேனாவால் அந்த பக்கத்தின் குறுக்கே ஒரு  கோடு  போட்டுவிட்டு இந்த செலவை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான்.
ஆனால்,பார்வதிதேவி(அம்மன்) அவனுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறாள்.எப்படித் தெரியுமா?
கர்னல் மன்றோவின் மனைவிக்கு அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கை உண்டாக்கி,உயிருக்கே ஆபத்தான நிலை வந்துவிட்டது.அதோடு அவனது குழந்தைகளுக்கும் கடுமையான நோய் உண்டாகிறது.அருகில் இருந்த இந்துக்கள்,கோவிலில் நீ இப்படி நடந்துகொண்டதனால்தான் இத்தனை துன்பங்களுக்கும் ஆளாகியிருக்கிறாய் என புத்திமதி கூறினர்.
உடனே,கர்னல் மன்றோ கோவிலுக்கு வந்து அம்மனிடம் மன்னிப்பு கேட்டதோடு,உள்ளாடை கணக்கையும் அங்கீகரித்தான்.அதன்பிறகு,அவனது மனைவியும்,குழந்தைகளும் குணமடைகின்றார்கள்.
நன்றி;ஆவிகள் உலகம்,பக்கம் 34,நவம்பர் 2011.
$ படத்தில் இருப்பது செங்கணூர் மஹாதேவகோயில்,கேரளா
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ