RightClick

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பதற்கான ஆதாரங்கள்: முதன் முதலில் இணையப்பெருங்கடலில்!!!


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் அவ்வப்போது இந்த நினைவுகள் நினைவுக்கு வரும்;அதோடு சரி! ஆனால் இன்று அதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.ஆஹா! சிவபூமிதான் நாம் வாழும் பூமி என்று தெரிந்ததும் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.ஆன்மீகக்கடல் பெருமைப் படுகிறது.

இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.
குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம்  இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி,இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி.இந்த சிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

இலங்கைக்கு தெற்கே கன்னி,குமரி,காவிரி என்று ஒன்பது நதிகளும்,ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற திருத்தலத்தில் வேதங்களும்,ஆகமங்களும் தோன்றி வளர்ந்து சிவமணம் கமழ்ந்து இருந்தது.ஈசன் அருளிச்செய்த புண்ணிய வேத ஆகமங்கள் தோன்றிய தென்னகம் உலகிலேயே மிகவும் புனிதமான திசை என்று வடநாட்டிலிருந்து வந்து தமிழ்த்தொண்டு புரிந்த திருமூலர் போற்றியுள்ளார்.
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுன்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே     (திருமந்திரம்)

மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்  (திருவாசகம்)
என்று தெய்வத் திருமுறைகள் தென்னாட்டு வேதங்களையும் ஆகமங்களையும் போற்றுகின்றன.திருக்கேதீஸ்வரம்,திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம்  351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,வாழ்க்கையையும்,பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.எல்சடை என்றால் கரிய சடையுடையவன்  என்று பொருள்.சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.ஜப்பானில் சந்திகளிலும் சதுக்கங்களிலும் சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். போர்னியா நாட்டுக்குகைகளிலிருந்து ஈசன் திரு உருவங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுமத்திராவில் பெரிய அளவிலான லிங்கப்பரம்பொருளும் அர்த்தநாரீஸ்வர வடிவமும் கிடைத்துள்ளது.ஹர என்ற வடமொழிச்சொல்லும் அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்றாயிற்று.தென் இந்திய இசையின் ஒரு ராகப்பெயர் கனடா.இந்தப் பெயரில் ஒரு வல்லரசு நாடு இருப்பதை நாம் அறிவோம்;அமெரிக்காவிலுள்ள உருகுவே என்ற ஊரின் பெயர் ஒரு தமிழ்ச்சொல்.ஈரான் என்பது இரட்டைப்பசு என்று பொருள் தரும் தமிழ்ச்சொல்.ஈராக் என்பதற்கு இரட்டையுடல் என்ற தமிழ் அர்த்தம் உண்டு.பஞ்சாக்கை என்ற சிவத்தலத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது.பஞ்சாக்கை என்பது இன்றைய பஞ்சாப் ஆகும்.சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச்சொற்களாகும்.பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸ் ஆனது;ஓமன் என்பது ஓங்காரேஸ்வரனைக் குறிக்கும்;ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜலால்கோட்,பாகிஸ்தானில் இருக்கும் ஜெயில் கோட் ஆகிய பெயர்களில் கோட்டை என்ற தமிழ்ச்சொல் உள்ளது.

பாரதப்பெயர்கள் எல்லாம் மூல உச்சரிப்பே தெரியாத வகையில் சிதைத்து வழங்கப்படுவது இன்றும் இயல்பு.தூத்துக்குடி,கோழிக்கோடு போன்றவையெல்லாம் டூட்டிகுரின்,காலிகட் என்றெல்லாம் மாற்றப்படுவழங்கப்படுவது போல,மேற்கூறியவைகளும் மாறியுள்ளன.ஆப்கானிஸ்தானின் பழைய பெயர் காந்தாரம்.இன்றும் இதிலுள்ள ஸ்தானம் என்பது சமஸ்க்ருதப் பெயர்.காந்தார நாட்டு இளவரசியே காந்தாரி.காந்தாரம்,பியந்தைக் காந்தாரம்,காந்தார பஞ்சமம் ஆகியவையெல்லாம் தேவாரத் திருமுறைப் பண்களின் /ராகங்களின் பெயர்களாகும்.ப்ரம்மதேசம் என்பதே இன்றைய பர்மா.அகஸ்தீஸ்வரம் என்பதே இன்றைய ஆஸ்திரேலியா.திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே  முழுகிப்போன தலமே கந்தமாதனம் ஆகும்.(பக்கங்கள் 354,355,356)

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

மொத்தமாய் விலைபேசப்படும் சில்லறை வியாபாரம்! எஸ். குருமூர்த்தி

இப்போது வருகிறது, அப்போது வருகிறது என்று "புலிவருது புலி' பாணியில் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்த சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வந்தேவிட்டது. இந்தியச் சில்லறை வர்த்தகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவைத் திறந்தாகிவிட்டது.
 கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு, அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு, அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்தியச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு.
 உள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த ""மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த'' நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்துக்காக ""பாடுபட்ட சக்திகள்'' வென்றுவிட்டன. ஆனால், ""இந்தியா'' தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.
 பெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
 இந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ, அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.
 சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால், இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.
 இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம். இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம். இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம்.
 பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12) வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும், உள்நாட்டு - வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது.
 அதேசமயம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.
 இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.
 இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.
 வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.
 அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம்! எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் ""கொள்முதல் பாணி'' இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
 இந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன, எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல், இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள்.
 வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் "கொள்முதல் பாணி' ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.
 விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.
 நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.
 மொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.
 சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும்! உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
 கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: ""சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் - அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்''.
 இதைவிட முக்கியம், சிறு - குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள், எதை உண்கிறார்கள், எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சிறு, குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை. இந்த நிலையில், வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால், அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும்.
 கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60%-க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது. சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள்.
 இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது. மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது.
 இந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, ""நகர்ப்புற விலை நிர்ணயம்'' கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள்.
 நகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா?
 அப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும்.
 இப்போதெல்லாம், அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை. ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர்.
 கேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். காரணம், சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை.
 சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு, குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும்!
 இது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40% உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் பிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன? எஞ்சியுள்ள 40% உணவு தானியங்களில் சுமார் 35% அளவு, அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி, வார கிராமச் சந்தைகள், திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன.
 கிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47,000. எஞ்சிய 5% உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6,359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.
 இந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது. இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி, பத்திரப்படுத்துகிறது. மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள்.
 வார, தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன? முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன. ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன. இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன.
 ஒரு சந்தை, சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது. எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன.
 மூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன. நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன. பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன.
 மூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள், சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர். மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும், மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர்.
 இந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை. சமூக, கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர்.
 இங்குதான் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன. வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர்.
 கால்நடைகளை வாங்குவது விற்பது, அவற்றுக்குத்தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும், உழவுக்கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.
 பாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது, விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது, கைப்பிடி போடுவது, சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான்.
 அடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம், அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர்.
 விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.
 திட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு, வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு.
 கிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.
 அப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம். காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல.
 எனவேதான், குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள், எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது.
 இதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு, உணவு தானியத்தில் ""எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது'' என்று மட்டும் தடை செய்திருக்கிறது, அவ்வளவே. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிராமங்கள் பற்றிய நுண்ணறிவு. என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்படி.
 பின்குறிப்பு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு; அது மட்டும் அல்ல, கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது. 2012-ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான்!


நன்றி: தினமணி 26.11.11
 இது தொடர்புடைய பிற பதிவுகள்: 1.இந்தியாவை நேசிப்பவர்கள் அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய புத்தகங்கள்                                                                                                                                                                                                   2.சுதேசி விழிப்புணர்வு இயக்கம்,தமிழ்நாடு                                                                                                                                    3.வேர்களைக் காட்டும் வரலாறு,  ஈரோடு டாக்டர்  எம்.எல்.ராஜா அவர்களின் ஆய்வுக்கட்டுரை,                           

மாதவிலக்கு பிரச்னைகளை நீக்கும் ஸ்ரீசித்தமுனி வழிபாடு,சிவகிரி,நெல்லை மாவட்டம்


உங்களில் மாதவிலக்குப்பிரச்னைகள்,தீராத வயிற்றுவலிகள் இருப்பவர்களுக்கு அதிலிருந்து மீள ஒரு சுலப வழிபாட்டுமுறையை ஆன்மீகக்கடல் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.இந்த வழிபாட்டு முறையை நமக்கு அருளியவர் புளியங்குடி சிவமாரியப்பன் அவர்கள்.அவர்களுக்கும்,நமது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கும் கோடி கோடி கோடி நன்றிகள்!!!                                                                   முழுக்க முழுக்க ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலை ஒன்று,ஒரு கிலோ டையமண்டு கல்கண்டு,ஐந்து அல்லது ஏழு வாழைப்பழங்கள்,ஒரு தரமான பத்திக்கட்டு,ஐந்து ரூபாய்க்கு வெற்றிலை,கொட்டைப்பாக்கு சுமார் மூன்று ரூபாய்களுக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை  இராஜபாளையம் வந்து,தென்காசி செல்லும் வழித்தடத்தில் இருக்கும் சிவகிரிக்கு வரவும்.சிவகிரி பேருந்து நிலையத்தில் இறங்கி,வெளியே வந்தால்,தேரடி முனீஸ்வரர் கோவில் வெறும் 1000 மீட்டர்கள் தூரத்தில் இருக்கும். சிறிய கோயில் இது.ஆனால்,சக்தி வாய்ந்த கோயிலாக அமைந்திருக்கிறது.இந்த கோயிலுக்குள்  நுழையும்போது மாலை 5 மணியாகி இருக்கவேண்டும்.வெற்றிலை,பாக்கு,வாழைப்பழங்கள்,டையமண்டு கல்கண்டு போன்றவற்றை படையலிடவும்.அதன் பிறகு,பத்திக்கட்டினை  பிரித்து பொருத்தி,வாழைப்பழத்தின் மீது வைக்கவும்.நெடுஞ்சாண் கிடையாக தேரடி முனீஸ்வரரை விழுந்து வணங்கவும்.டையமண்டு கல்கண்டை அங்கே விநியோகிக்கவும்.மீதியை கொஞ்மாக எடுத்து வீட்டிற்கு கொண்டு செல்லவும்.இவ்வாறு எட்டு வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து செய்துவருக!!! மாத விலக்குப் பிரச்னைகள் தீர்ந்துவிடும்.வயிற்றுவலி தீர்ந்து விடும்.அபிசாரப்பிரயோகங்கள் செயலிழந்துபோகும். முக்கிய எச்சரிக்கை: இந்த பயணத்தை சுற்றுலாவாக செயல்படுத்தக் கூடாது. இந்த வழிபாடு துவங்கும் நாளிலிருந்து யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமலிருப்பது உத்தமம்.இந்த பரிகாரப்பயணம் எட்டு வெள்ளிக்கிழமைகள் முடிக்கும் வரையிலும்,இது தொடர்பாக,எவரிடமும் சொல்லாமலிருப்பது அவசியம்.வாழ்த்துக்கள்!!!                                                                                        

கார்த்திகை மாத அமாவாசை(24.11.11 வியாழன்)யைப் பயன்படுத்துவோம்

கார்த்திகைமாத அமாவாசை 24.11.11 வியாழக்கிழமை மதியம் சுமார் 2.40 முதல் 25.11.11 வெள்ளி மதியம் சுமார் 12.40 வரை அமைந்திருக்கிறது.இந்த நேரத்தில் நமது ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் ஒன்று சேரும் நேரம் நிஜத்தில் மூன்றே மூன்று விநாடிகளே!!!

சூரியனிடமிருந்து பல கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தில் நாம் வசிப்பதால்,அமாவாசை அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு இருப்பதாக நாம் நம்புகிறோம்.

ஓம்ஹ்ரீம்மஹாபைரவாய நமஹ  மந்திர ஜபம் முதன் முதலாக இந்த நாளில்ஜபிக்க ஆரம்பிக்கலாம்.அப்படி ஆரம்பிக்க ஏற்ற நேரங்கள் :24.11.11 வியாழன் இரவு 8.00 மணி முதல் 8.12க்குள்ளும், 25.11.11 வெள்ளி  காலை 10.00 மணி முதல் 10.12க்குள்ளும்,மாலை 5.00 மணி முதல் 5.12க்குள்ளும் சிறந்த ஓரைகள் ஆகும்.
அப்புறம் ஒரு முக்கிய செய்தி: 21 வயதுக்குக் குறைவானவர்கள்,ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்கக் கூடாது என்பது விதி.ஆனால்,21 வயதை விட குறைந்த ஆண்கள்,பெண்கள் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஒரு நாளுக்கு ஒரே ஒரு முறை 108 தடவை எழுதலாம் என எனது ஆன்மீக குரு புளியங்குடி சகஸ்ரவடுகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.கூடவே,சில நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளார்.


21 வயதை விடக்குறைவான வயதுடையவர்கள் இந்த மந்திரத்தை எழுத ஆரம்பித்தப்பின்னர்,எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது.

அசைவ சூப்கள்,அசைவம் மறைமுகமாக கலந்திருக்கும் உணவுகள்(கேக்குகள்,பன்னாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்) பயன்படுத்திடக் கூடாது.


அதே சமயம்,ஒரு நாளுக்கு ஒரே ஒரு 108 முறை மட்டுமே எழுத வேண்டும்.அதை விட,அதிகமாக எழுதுவது தப்பு.


ஏனெனில்,அதற்கு மேல் எழுதும்போது,அவர்கள் மனதுக்குள் உருப்போடும் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.இதனால்,ஏற்படும் அதீத சிவ சக்தியை தாங்கும் திறன் கிடையாது.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

சித்தரை தரிசிப்பதை விட,சித்தராகவே மாறிவிட ஒரு சூப்பர் வழி
பல தமிழ்நாட்டு மக்கள் ஏதாவது ஒரு சித்தரை நேரில் தரிசிக்க மாட்டோமா? என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.ஏன் அப்படி ஏங்குகிறார்கள் என ஆச்சரியத்தோடு அவர்களது ஆழ்மனதுக்குள் ஊடுருவினால்,அப்படி ஏதாவது ஒரு சித்தரை தரிசித்துவிட்டால்,அந்த விநாடியோடு நமது கஷ்டங்கள்,அவமானங்கள்,சிரமங்கள் விலகிவிடும் என்பது இவர்களின் நம்பிக்கை;இந்த நம்பிக்கையை நமது புராணக்கதைகள் விளக்கியிருக்கின்றன.

ஆனால்,அந்த புராணக்கதைகளுக்குள் பொதிந்துகிடக்கும் ரகசியத்தை பெரும்பாலானவர்கள் உணருவதில்லை;நானும் பல ஆண்டுகளாக அப்படித் தான் இருந்தேன்.


ஆன்மீக ஆராய்ச்சியாளரும் ,எனது மானசீக ஆன்மீக வழிகாட்டியுமாகிய சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் சொன்ன கருத்து எனது ஆழ்மனத்தைத் தொட்டது:சித்தர்கள்,மகான்களை சந்தித்தால்,அவர்கள் நம்மை ஆசிர்வாதிப்பார்கள்.அவ்வளவுதான்.அதன் பிறகும் கூட,நமது கர்மவினைகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும். என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இன்றும் மந்திராலயத்துக்கு ஏராளமான தமிழ் மக்கள் அடிக்கடி பயணம் செய்துவருகின்றனர்.அவர்களில் பலருக்கு கடுமையான பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.(ஆதாரங்கள்:குமுதம் ஜோதிடம் வார இதழ்கள் பல) ஆனால்,சகஸ்ரவடுகர் ஐயா இப்படி சொல்லியிருக்கிறாரே என்று மண்டையைப் போட்டு குழப்பிக்கொண்டிருந்தேன்.


யார் தனது நீண்ட காலப்பிரச்னை தீராதா? என்ற தவிப்போடு மந்திராலயம் மற்றும் நவபிருந்தாவன்களுக்குச் செல்கிறார்களோ அவர்களுக்கு அங்கு சென்று திரும்பியதும்,பிரச்னைகள் தீர்ந்துவிடுகின்றன.தவிர,அவர்கள் அனைவருமே முன் ஜன்மங்களில் ஏதாவது ஒரு விதத்தில் நவபிருந்தாவனத்து மகான்களில் யாராவது ஒருவருக்கு சேவை செய்தவர்கள் ஆவர்.


அதேபோல,நமது கர்மவினை ரகசியத்தை நமது பிறந்த ஜாதகத்தைக் கொண்டு  கண்டுபிடிக்க முடியும்.அதுவும் இயலாதவர்கள் ஒரிஜினல் நாடி ஜோதிடத்தை அணுகலாம்.

பெரும்பாலான கர்மவினைகள்,நாம் கடந்த ஐந்து பிறவிகளிலும்,நமது நான்கு தலைமுறை முன்னோர்கள் செய்த தவறுகளின் விளைவுகளாலும்(அந்த விளைவுகளில் எட்டில் ஒரு பங்கைத்தான் நாம் ஒரு ஆளாக அனுபவிக்கிறோம்.மற்றவை நமது பங்காளிகளுக்கு பிரிந்து போய்விடுகிறது)உருவாகின்றன.இவையே,பித்ரு தோஷம்,ஸர்ப்ப தோஷம்,மாங்கல்ய தோஷம்,ஸ்ரீ எனப்படும் பெண் தோஷம் என 64 விதமான தோஷங்களாக பரிணமித்திருக்கின்றன.


இந்த தோஷங்களுக்கு நாம் அப்படி என்னதான் முன் ஜன்மங்களில் சேஷ்டைகள் செய்திருப்போம்? என கேட்கிறீர்களா?
விரிவாக எழுத முடியாது.ஏனெனில்,பல சேஷ்டைகள் காமம் சார்ந்தவை;மேலோட்டமாக கோடிட்டுக் காட்ட மட்டுமே முடியும்.புரிந்து கொள்ளுங்கள்.

பணத்தால்,பதவியால் அழகும்,ஏழ்மையும் நிறைந்த பெண்ணை அல்லது பெண்களை கட்டாயப்படுத்தி அனுபவித்தல்;


போதுமான வசதிகள் இருந்தும் உடன் பிறந்தவர்களின் உரிய பங்கு சொத்துக்களைத் தராமல் இழுத்தடித்து,அவர்களின் வறுமையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலிருத்தல்;


ஏதோ ஒரு அல்லது பல காரணங்களால் பசுவை சித்திரவதைப்படுத்துதல் அல்லது கொல்லுதல்;

அந்தணன் அல்லது கோவில் பூசாரி அல்லது துறவியை மனம் நோகடித்தல் மற்றும் மிரட்டி,அடாவடி செய்தல் அல்லது கொல்லுதல்;

 கோவில் சொத்துக்களை  கொள்ளையடித்து,மனைவியல்லாத ,ஒழுக்கங்கெட்ட பெண்களுக்குச் செலவழித்தல்;இவர்களே,குரு நீசமாகிப் பிறந்தவர்கள்(யாருக்கெல்லாம் மகர ராசியில் திரு ஓணம் நட்சத்திரத்தில் குரு இருக்கப்பிறந்தார்களோ,அவர்களே குரு நீசத்துடன் பிறந்தவர்கள்)

அழகும்,அறிவும்,அன்பும் நிறைந்த மனைவி இருக்கும்போது,இன்னொருத்தியுடன் சொகுசாக வாழ்ந்து கொண்டு,மனைவியை கண்டுகொள்ளாமலிருந்தால் கூட ஓரளவே தோஷம்;அதை விடுத்து,சொந்த மனைவியை விபச்சாரி என பிரபலப்படுத்துதல்;

வசதியாக வாழ்வதற்காக பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளுதல் அதற்காக அவளை சித்திரவதை செய்தல்;

இன்னும் இருக்கிறது.எழுதவே கூச்சமாக இருக்கிறது.எனவே. . .

இந்த 64 விதமான தோஷங்களை நீக்கிட  தகுந்த குருவின் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்.அப்படி செய்தால்,முறைப்படி நவகலச யாகம் செய்த திருப்தி கிடைக்கும்.

அப்படிப் பட்ட குருவே ,எனது ஆன்மீக குரு  திரு.சகஸ்ரவடுகர் ஆவார்.அவரது செல் எண்: 9677696967

நவகலச யாகம் செய்ததும்,100 நாட்களில் மிகப்பெரிய நன்மைகள் வந்துசேரும்;அல்லது மிகப் பெரிய பிரச்னைகள் தீர்ந்துவிடும்.அப்படித் தீர்ந்தாலும்,நவகலச யாகம் செய்த பின்னர்,12 அமாவாசைகளுக்கு நமது வாழும் ஊரில் அன்னதானம் செய்ய வேண்டும்.அதுவும் ஒவ்வொரு அமாவாசைக்கும் 9 பேர்களுக்குக் குறையாமல் அன்னதானம் செய்ய வேண்டும்.
தொலைதூரத்தில் வசிப்பவர்கள் தனது ரத்த உறவுகள் மூலமாக சொந்த ஊரில் இதே அன்னதானத்தைத் தொடரலாம்;அல்லது துவாதசி திதியன்று திரு அண்ணாமலைக்கு வருகை தந்து மூன்று வேளைகளுக்கு அன்னதானம் தலா ஒரே ஒருவருக்கு அன்னதானம் செய்யலாம்.

ஆக,எப்படியிருந்தாலும்,திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் ஆராய்ச்சி முடிவின்படி, நமது கர்மவினையைப் போக்கிட மூன்று சுலப வழிகளைச் சொல்லியிருக்கிறார்.அதுவும் 40 வருட ஆன்மீக ஆராய்ச்சிக்குப் பின்னர்!!!

1.அன்னதானம் செய்தல்(நமது ஜன்ம நட்சத்திரம் நிற்கும் நாளில் பழமையான சிவாலயத்தில் அல்லது குலதெய்வக் கோவிலில் செய்ய வேண்டும்)

2.ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு( வீட்டில் தினமும் மற்றும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் கோவிலில்)

3. ஒரு கோடி தடவை ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று மந்திரம் ஜபிப்பது;அதற்குள் நமது கர்ம வினைகள் தீர்ந்துவிடும்.அதன்பிறகு,நாம் ஜபிக்கும் ஒவ்வொரு ஒரு லட்சம் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திர ஜபமும் நம்மை சித்தராக்கிவிடும்.நாம் ருத்ர அம்சத்தோடு,நமது ஆன்மீக வாழ்க்கையில் பல புதிய பரிமாணங்களை உணரலாம்.அதை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது!!!!!!!!!!!!!!ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


ஆன்மீகக்கடல் 4 ஆம் ஆண்டுத்துவக்கவிழாப் பரிசு =3
ஆன்மீகக்கடல் 4 ஆம் ஆண்டுத்துவக்கவிழாப் பரிசு=2


கர ஆண்டு,ஐப்பசிமாத பவுர்ணமி பூஜை,ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மழை பொழியும் பத்திரகாளியம்மன் கோவில்
10.11.11 இரவு 10 மணி முதல் 11.11.11 விடிகாலை 2 மணிவரை

ஆன்மீகக்கடல் 4 ஆம் ஆண்டுத்துவக்கவிழாப் பரிசு=1

அண்ணாமலை அதிசயச் செய்திகள்


$ இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி கோவில் மூலவரின் பின்புறம் இருப்பதாக ஒரு செய்தி உலவுகிறது.நாடி ஜோதிடத்தில்,திருஅண்ணாமலையின் மீது இருப்பதாக தெரிகிறது.மலைச்சரிவில் மூங்கில் தோப்பும்,குள்ள நெல்லி இனமும் அபூர்வ மணம் வீசும் அதியப் பூவும் செங்கல் சிதைவுகளும் சுனையும் கூடிய வித்தியாசமான சூழலில் அமைந்திருக்கிறது.யாராவது இந்த மாதிரியான அமைப்பை அண்ணாமலை மீது பார்த்திருக்கிறீர்களா?

$ பால் பிரண்டன் என்ற மேல்நாட்டுக்காரர்,ரமண மகரிஷியின் பக்தர்.இவர் 1930 இல் திரு அண்ணாமலையில் சிறிது காலம் வாழ்ந்தார்.தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதிவெளியிட்டார்.அதில் ரமண மகரிஷி பற்றியும்,திரு அண்ணாமலை பற்றியும் எழுதியிருந்ததால்,அதன்பிறகு,இங்கு ஐரோப்பக் கண்டமும்,அமெரிக்கக் கண்டமும் வரத் துவங்கியது.
$ அண்ணாமலை கோபுரங்களைப் பற்றி எம்.ஹெச்.க்ரேவி என்பவர் அருமையான ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

$ நள்ளிரவு 12 மணிக்கு அண்ணாமலை மீது சித்தர்கள் பூஜை செய்வார்கள்.அப்போது எழுப்பப் படும் சங்கொலியை அண்ணாமலை பக்தர்கள் பலரும் கேட்டிருக்கின்றனர்.
$ஆன் மார்ஷல் என்பவர் எழுதிய இந்தியாவில் குருவைத் தேடி என்ற நூலும், பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியாவில் ஒரு ஆராய்ச்சி என்ற நூலும் பிரபலமானவை.இவைதான் எதிர்காலத்தில் ஐரோப்பாக் கண்டமே இந்து தர்மத்துக்கு மாறுவதற்குக் காரணமாக இருக்கப் போகின்றன.

$ ஆப்தர் ஆஸ்பர்ன் என்பவர் எழுதிய ரமண மகரிஷி அண்ட் தி பாத் ஆப் செல்ப் நாலட்ஜ் என்ற நூல் இங்கிலாந்தில் ஒரு மகத்தான ஆன்மீக புரட்சியை உருவாக்கிவிட்டது.

$ மே 2001 முதல் வாரத்தில் இரவு 9 மணிக்குள் ஒரு பறக்கும் தட்டு வந்தது.திரு அண்ணாமலையின் மலையை ஒரு சுற்றிவிட்டு,தென் மேற்கு திசையில் போய் மறைந்தது.

$ 14.4.1950 இரவு 8.47க்கு அண்ணாமலையில் இரமண மகரிஷி முக்தி அடைந்த நேரம் இது.அப்போது வானில் ஒரு நட்சத்திரம் மின்னி,வடகிழக்கில் நகர்ந்தது.அண்ணாமலையில் கலந்தது.ஜோதிடர்கள் இந்த நேரத்தை வைத்து ஆன்மீக ரீதியாக ஜோதிட ஆராய்ச்சி செய்யலாம்.

$ காக புஜண்டர் வழி நாடி ஜோதிடம் சொல்லும் ஒரு முஸ்லீம் குடும்பம் திரு அண்ணாமலையில் இன்றும் இருக்கின்றனர்.
$ மூன்று பவுர்ணமிகளுக்குத் தொடர்ந்து அண்ணாமலைகிரிவலம் சுற்றினால்,எப்பேர்ப்பட்ட பிரச்னையும் தீர்ந்துவிடும் என்பது நிரூபிக்கப்பட்ட நம்பிக்கை!!!

$ செவ்வாய்க்கிழமை கிரிவலம் சென்றால்,கோடி கோடியாக மோட்சம் கிடைக்கும் என்பது சேஷாத்ரி மகரிஷியின் அருள்வாக்கு!!!

நன்றி: திருவண்ணாமலை அரிய செய்திகள் 1000,எழுதியவர்:ஏ.டி.எம்.பன்னீர்செல்வம், விஜயா பதிப்பகம்,20,ராஜ வீதி,கோயம்புத்தூர்-1.தொலை பேசி:0422-2394614,2382614. விலை ரூ.50/-

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஐப்பசி மாத பவுர்ணமி(10.11.11)யைப் பயன்படுத்துவோம்!!!
9.11.11 புதன்கிழமை அன்று நள்ளிரவு 12.16 மணிமுதல்,10.11.11 வியாழக்கிழமை அன்று நள்ளிரவு மணி 2.14 வரையிலும் ஐப்பசிமாத பவுர்ணமி அமைந்திருக்கிறது.இந்த நாளில் ஏதாவது ஒரு மணி நேரம் (நமக்கு வசதியான நேரத்தில்)ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிப்போம்;
கலிகாலத்தில் பிறந்திருக்கும் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பாவத்தை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்.சிலர் மட்டும் பலவிதமான கர்மவினைகளை அனுபவிக்க பிறந்திருக்கிறோம்;இந்த கர்மவினைகளைக் கரைக்க இறைநாம ஜபத்தால் மட்டுமே முடியும்.இறை நாம ஜபங்களில் மிகவும் சுலபமான கட்டுப்பாடுகளைக் கொண்டதும்,மிகவும் விரைவான பலன்களை நமக்குத் தரக்கூடியதும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாயநமஹ மந்திரம் மட்டுமே!!!
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ மந்திர ஜபத்தை தொடர்ந்து செய்துவருபவர்கள்,தங்களுக்கு ஏற்படும் மந்திர ஜபம் சார்ந்த சந்தேகங்களை எப்போதும் அஞ்சல் அனுப்பிக் கேட்கலாம்.

ஐப்பசி மாத பவுர்ணமிபூஜை 10.11.11 வியாழன் இரவு 10 மணிக்கு

இந்த கர வருடம்,ஐப்பசி மாதத்தின் பவுர்ணமி   நாளை இரவு வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபத்திரகாளியம்மனின் கோவிலில் நாளை இரவு 10 மணிக்கு பவுர்ணமி பூஜை ஆரம்பமாகிறது.     மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் இராஜபாளையத்துக்கு முந்திய ஊர்தான் ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கினால்,சிவகாசி ரோட்டில் ஒரு கிலோ மீட்டர்கள் தூரம் வரை நடந்தால் முதலியார்பட்டித்தெரு வரும்.அந்தத் தெரு முழுக்கவும் நெசவினை தமது குலத் தொழிலாகக் கொண்ட சாலியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்தத் தெருவின் மையப்பகுதியில் வடக்கு நோக்கியவாறு ஒரு ஆர்ச் இருக்கிறது.அதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மனின் கோவிலின் நுழைவாசல்!உள்ளே சென்றால் இருபுறமும் நெசவுச் சப்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.இங்குதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மனின் கோவில் அமைந்திருக்கிறது.                                                         ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி,கையால் பணியாரம் சுடும் பத்திரகாளி கோவிலுக்கு எப்படி போகணும்? என்று கேட்டீர்கள் எனில்,சில நேரம்,சிலர் உங்களை அழைத்துச் சென்றே கொண்டுபோய்விட்டுவிடுவார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரகாளியம்மன் கோவில்கள் இருக்கின்றன என்பதை நினைவிற் கொள்ளவும்.                                          ஒரு பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த பவுர்ணமி பூஜை வரும் முன்பே அவர்களின் மிக முக்கியமான அல்லது மிக தீவிரமான பிரச்னை தீரத்துவங்கும்; அல்லது தீர்ந்திருக்கும்.இது 30 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் அதிசயம் ஆகும்.       ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ                                        

எமனுக்கு சாபநிவர்த்தி செய்த ஸ்ரீகாலகாலேஸ்வரர் திருக்கோயில்,கோவில்பாளையம்(கோயம்புத்தூர்)
ஸ்தல வரலாறு; திருக்கடையூரில் மார்க்கண்டேயனை சம்ஹாரம் செய்யத் துணிந்த எமன்,மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினான்.அது மார்க்கண்டேயன் கட்டியணைத்திருந்த சிவலிங்கம் மீது பட்டதால்,சிவனுக்கு கோபம் உண்டானது;சிவபெருமான் தனது பக்தன் மார்க்கண்டேயனைக் காக்கும்பொருட்டு,எமனுக்கு சாபம் கொடுத்தார்.இதனால்,தனது தெய்வீக சக்திகளை இழந்த எமன்,விஸ்வாமித்ரமகரிஷியை அணுகி,இதற்கான விமோசனத்தைக் கேட்டான்.அவரது ஆலோசனைப்படி,நுரையுடன் கூடிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து,பூஜித்தான்.தொடர்ந்து பல ஆண்டுகளாக பூஜித்ததால்,எமனுக்கு சாப நிவர்த்தி கிடைத்தது.அப்படி சாப நிவர்த்தி கிடைத்த இடமே,ஸ்ரீகாலகாலேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

இறைவன்:ஸ்ரீ கால காலேஸ்வரர்,இறைவி:ஸ்ரீகருணாகரவல்லி

சிறப்புகள்:ஸ்ரீகாலகாலேஸ்வரருக்கும் ஸ்ரீகருணாகரவல்லி தாயாருக்கும் இடையே ஸ்ரீகால முருகன் சன்னதி அமைந்திருக்கிறது.இந்த ஸ்ரீகால முருகன் சன்னதியின் நேர் பின்புறமாக நஞ்சுண்டேஸ்வரர் என்ற பெயரில் ஒரு தனி சிவபெருமான் அமைந்திருக்கிறார்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள் சன்னதி அமைந்திருக்கிறது.

தட்சிணாமூர்த்தியின் திரு உருவம் 5 அடிக்கும் மேலாக காட்சியளிக்கிறார்.

இங்குள்ள வில்வ மரத்தின் காய்கள் உருண்டையாக இல்லாமல்,நீளவடிவில் இருக்கிறது ஒரு சிறப்பு ஆகும்.

கோயிலின் முக்கியத்துவம்:குழந்தைப் பேறு இல்லாமை,நாட்பட்ட நோய்கள் தீரவும்,ஆயுள்பயம் உள்ளவர்கள் திருக்கடையூர் சென்று சதாபிஷேகம்,ஆயுஷ்ஹோமம்,சஷ்டியாப்த பூர்த்தி செய்ய முடியாதவர்கள் இங்குவந்து ஸ்ரீகாலகாலேஸ்வரரை வழிபட்டு சாந்திபூஜைகள் செய்தால்,பூரண நலம் பெறுவார்கள்.

இருப்பிடம்:கோயம்புத்தூரிலிருந்து சத்யமங்கலம் செல்லும் வழியில் 16 ஆவது கிலோ மீட்டரில் கோவில் பாளையம் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது.காந்திபுரத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
தேவதானம் அம்மையப்பர் ஆலயம்.(RAJAPALAYAM)


மாதொரு பாகன் சிவலிங்க ரூபியாகக் கோவில் கொண்டு பக்தர்களின் இடர் களையும் பழைமைவாய்ந்த பல தலங்களில் ஒன்று தேவதானம் அம்மையப்பர் ஆலயம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத் திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேத்தூர். இதன் அருகே அமைந்துள்ள கிராமம்தான் தேவதானம். இந்த கிராமத் திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில்- மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் செல்லும் சாலையையொட்டி- மிக அமைதியான சூழலில் அமைந்துள்ளது இந்த சிவாலயம்.முற்காலத்தில் அடர்ந்த மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இது இருந்ததென்றும்; இங்கு தெய்வம் வந்து குடியேறியதால் தெய்வவனம் என்று பெயர் ஏற்பட்டதென்றும்; அதுவே பின்னாளில் தேவதானம் என மருவியதாகவும் கூறுகின்றனர்.ஆலயத்திற்கு முன்புறம் மிகப்பெரிய குளம் உள்ளது. மூன்று பிராகாரங்களைக் கொண்ட இவ்வாலயத்தில் பரிவார மூர்த்திகள் தனிச் சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர். கருவறையில் நச்சாடை தவிர்த்தருளிய நாதரான அம்மையப்பர் அருள்புரிகிறார்.முன்னொரு காலத்தில், பாண்டிய நாட்டை வீரபாகு பாண்டியன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் இரவில் நகர்க் காவலுக்குச் செல்வது வழக்கம்.அவ்வாறிருந்த நிலையில் அவ்வூரைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். எனவே, அவர் வீட்டையும் கவனமாகக் காவல் காத்து வந்தான் மன்னன். ஒருநாள் இரவு அந்த அந்தணன் வீட்டுக்கு வர, அவனைத் திருடன் என்றெண்ணிய மன்னன் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டான்.இதையறிந்த அந்தணனின் மனைவி மன்னனிடம் கதறியழ, அவளுக்கு ஆறுதல் கூறிய மன்னன் பல உதவிகளையும் செய்து, தன் தவறுக்கு வருந்தி பல தானங்களையும் செய்தான். என்றாலும் அந்தணனைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக மன்னனைப் பற்றிக் கொண்டது. இதன் விளைவாக நாட்டில் பல குழப்பங்கள் விளைந்தன.இந்த விவரங்களைத் தன் ஒற்றன் மூலம் அறிந்த சோழ மன்னன் விக்கிரமன், இது தான் தக்க சமயமென்று பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டியன் மிகுந்த சிவபக்தி கொண்டவனாகையால், அவன் கனவில் தோன்றிய ஈசன், பாண்டியனுக்குத் துணையாகத் தானும் தன் பூத கணங்களும் வந்து போரிடுவதாகக் கூறியருளினார். மறுநாள் நடந்த போரில் இறையருளால் பாண்டியன் வெற்றி பெற, சோழர்படை பின்வாங்கியது.எனினும், பாண்டியனின் ஆட்சிக்குப் பல்வேறு வகைகளிலும் தீங்கிழைக்க சோழன் முயன்றான். இதன் காரணமாக அவன் பார்வை பறிபோனது. பின்னர் சிவனருளால் கண்ணொளி பெற்று, அதன் காரணமாக ஒரு ஆலயம் நிறுவி இறைவனையும் இறைவியையும் பிரதிஷ்டை செய்தான். பார்வை வழங்கிய இந்த ஈசன் திருக்கண்ணீசர் என்று அழைக்கப் பெற்றார்.பெருமான் அருளால் சோழன் பல நன்மைகளைப் பெற்றாலும், ஊழ்வினை வசத்தால் மீண்டும் அவன் பாண்டியனுக்குத் தீங்கிழைக்க எண்ணினான். கொடிய நஞ்சு கலந்த ஒரு ஆடையை உருவாக்கி, அதைத் தூதுவன் மூலம் பாண்டியனுக்குக் கொடுத்தனுப்பினான்.இதையறிந்த ஈசன் பாண்டியனின் கனவில் தோன்றி, "தூதன் கொண்டு வரும் நச்சாடையைக் கையால் தொடாமல் ஒரு கோலால் எடுத்து, அதை அந்தத் தூதன் மேலேயே போர்த்திவிடு' என்று கூறினார்.மறுநாள் ஒரு பெட்டி யில் நச்சாடையை வைத்துக்கொண்டு வந்த தூதன், "சோழ மன்னனின் பரிசு' என்று சொல்லிக் கொடுத்தான். அந்த ஆடையை ஒரு கோலால் எடுத்த பாண்டியன் அதை அந்தத் தூதன் மேலே போர்த்த- நஞ்சின் வீரியத்தால் அவன் அங்கேயே சாம்பலானான். இதன் காரணமாகவே இங்குள்ள ஈசன் நச்சாடை தவிர்த்தருளிய பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.பார்வதிதேவி இங்கே இறைவனைக் குறித்து தவமிருந்தாளாம். எனவே இத்தலத்து அன்னை தவம் பெற்ற நாயகி என்னும் திருப்பெயரால் அழைக்கப் பெறுகிறாள். சப்த கன்னியர்களும் இங்கு அருள்புரிகின்றனர்.இத்தல விருட்சமாக உள்ள நாகலிங்க மரம் சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்கிறது. ""இந்தப் பூவை மூன்று முறை பாலில் ஊற வைத்து விதிப்படி உட்கொண்டால் பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு சித்திக்கும். இப்படி பலன் பெற்றவர்கள் பலர் உண்டு. எனவே இந்த மரத்தை கவனம் செலுத்திப் பாதுகாக்கிறார்கள்'' என்கிறார் அய்யனார் தேவர்.""இங்கே நம்பிக்கையோடு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கிடைக்காதது ஒன்றுமில்லை. நான் தொடர்ந்து இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறேன். இந்த இறைவனின் அருளால் என் பலசரக்கு வியாபாரம் எந்தக் குறையுமின்றி நடந்து வருகிறது'' என்கிறார் சேத்தூரைச் சேர்ந்த வீரபுத்திர தேவர்.பக்தர்களின் அனுபவம் அந்தப் பரமனின் திருக்கருணையைத் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது!THANKS:OUR UK READER

செவி வழி தொடு சிகிச்சை

மருந்து இல்லாமல் சர்க்கரை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தைராய்டு, உடல் பருமன் மற்றும் அனைத்து வகையான நோய்களையும் தாங்களே செவி வழி தொடு சிகிச்சையின் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம். 48 மணி நேரத்திலிருந்து பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.
 ஒரே ஒருமுறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும். இந்தச் செவி வழி தொடு சிகிச்சையில் நோயாளிகளுக்கு எந்த நோயாக இருந்தாலும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் டிவிடி மூலம் 6 மணி நேரம் பேசுவதைக் கேட்க வேண்டும். அவர் பேசும் வார்த்தைகள் நோயாளிகளின் காது (செவி) வழியாகச் சென்று மருந்தாக வேலை செய்து நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும்.
 இதுவரை தமிழகத்தில் சுமார் 10 லட்சம் பேர் இந்தச் சிகிச்சையைப் பின்பற்றி மருந்து அல்லது எந்தவித செலவும் இல்லாமல் முழுமையான ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
 மேலும் விவரங்களுக்கு:-
 நா.செல்வராசன்,
The Art of Self Healing Foundation,
 மனை எண் 7, முகலிவாக்கம் நெடுஞ்சாலை,
 மதனந்தபுரம், (மதனந்த வித்யாலயா அருகில்),
 முகலிவாக்கம்,
 சென்னை-600 125.
 செல்: 9789999333, 9551233444.
 தொ.பே.:க 044-64611100.


thanks: dinamani

வனங்களை காக்க இரண்டு லட்சம் பசுமை போராளிகள்:ஈரோடு கணித பேராசிரியரின் அரிய முயற்சி


மாநிலம் முழுவதும் இரண்டு லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக உருவாக்கி, அதன் மூலம் வனங்களை காக்கும் பணியில், முன்னாள் கணித பேராசிரியர் ஈடுபட்டுள்ளார்.

இந்திய வரைபடத்தில் பசுமையாக காணப்பட்ட தமிழகம், தற்போது பசுமை இழந்து காணப்படுகிறது. இந்தியா முழுவதும் வனத்தையும், வன விலங்கினத்தையும், மரங்களையும் காக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துரித நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்.
வனங்களை பாதுகாக்க இளைஞர் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில், கணித பேராசிரியர் ஒருவர் ஈடுபட்டு வருவது, வனத்துறையிருக்கும், மக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த கணித பேராசிரியரும், கவுரவ வன உயிரின காப்பாளருமான கந்தசாமி கூறியதாவது:வனங்களும், மலைகளும், நதிகளும், நம் மக்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள். ஆனால், தற்போது நதிகள் அனைத்து செத்துவிட்டன. குற்றுயிரும், குலை உயிருமாக உள்ள வனங்களையும், மலைகளையும் பாதுகாக்க நம் மக்கள் அனைவருமே ஒன்றுபட வேண்டும். தற்போதைய சூழலில், இளைஞர் சக்தி ஒன்றிணைந்தால், வனங்களையும், விலங்கினங்களையும் மீட்டெடுக்க முடியும்.கடந்த, 1985ல் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பேராசிரியர்களுக்கு வனங்களை காக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சார்ந்தவர்கள் கலந்து கொண்ட முகாமில், கணித பேராசிரியரான நான் கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சர்யப்பட வைத்தது.

முகாமின் போது, வனம், மலைகளின் பெருமை குறித்து அறிந்ததால், அதனை மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்தது. அன்று முதல் இன்று வரை வனத்தையும், விலங்கினத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.ஈரோடு மாவட்ட வனத்துறையின் துணையோடு, மாணவ, மாணவியருக்கு, காடுகள், விலங்குகள், மலைகள் குறித்து கற்பித்து வருகிறேன். கர்நாடகா மாநிலம் பந்திப்பூர், முதுமலை, ஊட்டி நேஷனல் பார்க், முக்கூர்த்தி, ஆனைமலை காடுகள், கொடைக்கானல் உள்ளிட்ட காடுகளுக்கு, மாணவர்களை அழைத்து சென்று, வனக்கல்வியை அளித்துள்ளேன்.இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களுக்கு, வனக்கல்வியை கற்று கொடுத்தேன். இவர்களை வனங்களை காக்கும் பசுமை போராளிகளாக மாற்றியுள்ளேன். வனங்கள், விலங்குகளை காப்பது குறித்த விழிப்புணர்வை இவர்கள் மாநிலம் முழுவதும் பரப்பி வருகின்றனர்.வனங்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற, இன்னும் பல லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக மாற்ற வேண்டும் என்பதே என் லட்சியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


thanks:dinamalar

ஹிந்துதர்மத்தைக் காக்க இரு தொலைக்காட்சிகள்கடந்த பத்துஆண்டுகளில் மாவட்டத்துக்கொரு கிறிஸ்தவ தொலைக்காட்சிகள் உருவாகிவிட்டன.தொழில்வளம் மிகுந்த மாவட்டங்களில் குறைந்தது ஐந்து கிறிஸ்தவ மதமாற்றச் சேனல்கள் 24 x 7 என்று ஒளிபரப்பாகி,மதமாற்ற வேகம்,சுனாமி வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.நாம் வேலைக்குப் போகிறோம்;வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம்;திமுக,அதிமுக என சண்டையிட்டுக்கொள்கிறோம்;விஜய்,அஜீத் என நமது மகன்கள் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்.நமது இந்து தர்மத்தின் பெருமைகளை அழிக்கவும்,முடிந்தால் நாம் மறக்கடிக்கவும் இந்தியா முழுக்கவுமே புராஜெக்ட் போட்டு கிறிஸ்தவ மதமாற்ற வேலைகள் தீவிரமாகவும்,அதே சமயம் மறைமுகமாகவும் நடைபெற்று,வெற்றிபெற்றும் வருகின்றன.வாடிகன் இந்த வேலைகளால் மிகுந்த சந்தோஷப்பட்டு,மேலும் மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பல நாடுகள் வழியாக இந்தியாவில் பாய்ச்சிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், சன் டிவியும் நமது சித்தர்கள்,புராதன கோவில்களை நக்கலடித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியிருக்கின்றன.அதன் வீரியத்தை நாம் இன்னும் உணரவில்லை;
இந்த சூழ்நிலையில் க்ருஷ்ணஸ்வாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசுவாமி அவர்களும்,ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அவர்களும் இணைந்து “க்ருஷ்ணா டிவி” என்ற சேனை விஜயதசமி 6.10.11 அன்று முதல் அரசு கேபிள் கழகம் மூலம் ஒளிபரப்பத் துவங்கியிருக்கிறது.

அதேபோல் , தமிழன் தொலைக் காட்சியில் :விஸ்வதரிசனம்” என்னும் நிகழ்ச்சி மூலம் நமக்கு மிகவும் அறிமுகமான திரு.குமரி க்ருஷ்ணன் அவர்கள் விஜயதசமியன்று  “தரிசனா டிவி” தொடங்கியுள்ளார்.இந்த டிவியின் துவக்க விழா நிகழ்ச்சியில் கன்னியாக்குமரி வெள்ளிமலை சுவாமிகள் ஸ்ரீ சைதன்ய மஹராஜ், ஹிந்துமுன்னணி தலைவர் இராம.கோபாலன் B.E.,விஸ்வ ஹிந்து பரிஷத்  துணைத்தலைவர் திரு.ஆர்.எஸ்.நாராயண ஸ்வாமி,பா.ஜ.க.தலைவர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன்,பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.இல.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு தரிசனா டிவி சானலைத் தொடங்கி வைத்தனர்.
ஆன்மீகக்கடல் வாசகர்களே! உங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டரிடம் இந்த சேனல்களின் இணைப்பைத் தருமாறு வலியுறுத்துங்கள்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

அமானுஷ்ய சக்தி படைத்த தெய்வம்:செங்கணூர் பார்வதிதேவி

இயற்கையின் உபாதை மனிதர்களுக்குத்தான் உண்டு என எண்ணியிருந்தோம்.ஆனால் தெய்வங்களுக்கு இது உண்டு என்பதை இந்த சம்பவம் மூலமாக உணரலாம்.
கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் கொட்டாரக்காரா அடூர்க்கு வடக்கேயும்,திருவல்லா என்ற ஊருக்குத் தெற்கேயும் திருச்சூரிலிருந்து மேற்கேயும் இந்த ஊர் அமைந்திருக்கிறது.இந்த ஊரின் பெயர் செங்கணூர்.இங்கு ஒரு சிறிய நரசிம்மர் கோவிலும் மற்றும் மஹாதேவர் என்னும் சிவாலயமும் இருக்கின்றன.இந்த சிவன்கோவிலில் இருக்கும் அம்மனின் பெயர் பார்வதிதேவி.

தமிழ்நாட்டில் இருக்கும் சில சிவாலயங்களில் உலவும் அதே புராணக்கதை.அதாவது சிவன் பார்வதி திருமணத்தின்போது,எல்லோரும் கூடியதால் வடதிசை தாழ்ந்துவிட்டது.அதை சமன்படுத்த அகத்தியரை தென் திசைக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது.அதன்படி அகத்தியர் தென் நாட்டிற்கு வருகை தருகிறார்.அகத்தியர் தென் நாட்டில் இருக்கும் சஹயாத்திரி எனப்படும் சோனாத்திரி  மலைக்குச் சென்று தவம் செய்கிறார்.பரமசிவன் பார்வதி தம்பதியராக வருகை தந்து,அகத்தியருக்கு காட்சி கொடுக்கின்றனர்.அந்த சமயத்தில் பார்வதிதேவி மாதவிடாய்க்கு உள்ளாகிறார்.
தன்னை தூய்மையாக்கி கொள்வதற்காக பார்வதி,பரமேஸ்வரன் தம்பதியர் 28 நாட்கள் அங்கு தங்குகின்றார்கள்.28 நாட்கள் கழிகிறது.அதன்பிறகு பாரம்பரியமாய் அங்குள்ள பஞ்சலோக விக்ரகத்திற்கு உள்ளாடை அணிவித்துத்தான் அலங்காரம் செய்கிறார்கள்.இந்த மாதவிடாய் நிகழ்வு அந்த பஞ்சலோக விக்ரகத்திற்கும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.இந்த மாதிரியான நிகழ்வு உலகத்தில்  எந்த ஒரு சிவாலயத்திலும் நிகழாத ஒரு நிகழ்வு!!!
அதனால்,முதல்நாள் அங்குள்ள முதன்மை குருக்கள்/அர்ச்சகர் முதல்நாள் ஆடை அலங்காரத்தை மறுநாள் காலையில் கண்ணைமூடிக்கொண்டுதான் களைகிறாராம்.அந்த உள்ளாடை மற்ற ஆடைகளைக் கண்ணை மூடிக்கொண்டு தன் உதவி அர்ச்சகரிடம் கொடுக்கிறார்.உதவி அர்ச்சகர் அதில் ஏதாவது ரத்தக்கறை பட்டிருக்கிறதா? என்று நன்கு பார்வையிடுகிறார்.அப்படி ஏதேனும் இருந்தால் அதை அப்படியே குருக்கள்/அர்ச்சகர் மனைவியிடம்  அனுப்பிவிடுகிறார்.அவர் மனைவி அந்த புனிதத்தை உறுதிபடுத்துகிறார்.அதை வாங்குவதற்கு முன்பதிவு செய்துவிடுகின்றார்கள்.அந்த உள்ளாடைக்கு கோவில் நிர்ணயம் செய்த விலை ரூ.10/-தான்!!! ஆனால்,மிக அதிகமான விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள்.

அப்படி வாங்கிய சில முக்கிய பிரமுகர்கள்:முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி,திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பதவி வகித்த சி.பி.ராமசாமி ஐயர் போன்றவர்கள்.
கி.பி.1810 முதல் கி.பி.1814 இல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.


அப்போது  பிரிட்டன் ,நமது பாரதத்தை அடிமைப்படுத்தி,நமது செல்வ வளத்தைச் சுரண்டிக்கொண்டிருந்தது.(நாம்தான் பிரிட்டன் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தது என்று பொய்யான வரலாறு படித்துக்கொண்டிருக்கிறோம்)எனவே,திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசு ஆலோசகராக கர்னல் மன்றோ என்ற கிறிஸ்தவ(ஆங்கிலேய) அதிகாரியை அரசு நியமித்திருந்தது.அவன்,செங்கணூர் வந்து மஹாதேவ ஆலயத்தின் கணக்குகளை தணிக்கை செய்துகொண்டிருந்தான்.அப்பொழுது,அம்மனுக்கு உள்ளாடைச் செலவைப் பற்றி விபரம் கேட்டான்.கோவில் பணியாளர்களும் அம்மனின் மாதவிடாய் பற்றிய அதிசயத்தை விளக்கியிருக்கின்றனர்.

இதைக் கேட்டு வாய்விட்டு சிரித்துவிட்டு,பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட விக்கிரகத்திற்கு இது எப்படி உண்டாகும்? இது அசிங்கமானது;அபத்தமானதும் கூட என்று சொல்லிவிட்டு இந்தச் செலவை நான் நிராகரிக்கிறேன் என்றபடி தனது பேனாவால் அந்த பக்கத்தின் குறுக்கே ஒரு  கோடு  போட்டுவிட்டு இந்த செலவை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான்.
ஆனால்,பார்வதிதேவி(அம்மன்) அவனுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறாள்.எப்படித் தெரியுமா?
கர்னல் மன்றோவின் மனைவிக்கு அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கை உண்டாக்கி,உயிருக்கே ஆபத்தான நிலை வந்துவிட்டது.அதோடு அவனது குழந்தைகளுக்கும் கடுமையான நோய் உண்டாகிறது.அருகில் இருந்த இந்துக்கள்,கோவிலில் நீ இப்படி நடந்துகொண்டதனால்தான் இத்தனை துன்பங்களுக்கும் ஆளாகியிருக்கிறாய் என புத்திமதி கூறினர்.
உடனே,கர்னல் மன்றோ கோவிலுக்கு வந்து அம்மனிடம் மன்னிப்பு கேட்டதோடு,உள்ளாடை கணக்கையும் அங்கீகரித்தான்.அதன்பிறகு,அவனது மனைவியும்,குழந்தைகளும் குணமடைகின்றார்கள்.
நன்றி;ஆவிகள் உலகம்,பக்கம் 34,நவம்பர் 2011.
$ படத்தில் இருப்பது செங்கணூர் மஹாதேவகோயில்,கேரளா
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
சென்னை அருகில் இருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில்

சென்னை மேட்டுப்பாக்கம் மண்டலத்தில் வானகரம் நகரில் முருக சித்தர் ஆசிரமத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்புரிந்துவருகிறார்.

ஸ்ரீவி.பத்திரகாளி கோவில் நவராத்திரி பூஜை-6


ஸ்ரீவி.பத்திரகாளி கோவில் நவராத்திரி பூஜை-5


ஸ்ரீவி.பத்திரகாளி கோவில் நவராத்திரி பூஜை-4


ஸ்ரீவி.பத்திரகாளி கோவில் நவராத்திரி பூஜை-3


ஸ்ரீவி.பத்திரகாளி கோவில் நவராத்திரி பூஜை-2