கேள்வி:நான் ஒரு முருக பக்தன்.எந்த மந்திரத்தைச் சொல்லிப்பிரார்த்திப்பது?
பதில்:ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை தினசரி 108 முறை சொல்லுங்கள்.
கேள்வி:சாமி சிலைகள் திருடு போகின்றன.தங்களையே காத்துக்கொள்ல முடியாத தெய்வங்கள் எவ்வாறு மக்களைக் காப்பாற்றும்?
பதில்:’சிவன் சொத்து குல நாசம்’ என்பர்.அவ்வாறு திருடுபவர்களின் வாழ்க்கை கண்டிப்பாக நாசமாகப் போய்விடும்.அதனால்தான் நமது பெரியவர்கள் கோயில் தீபத்தைக் கூட விரலால் தூண்டக்கூடாது என்பர்.விரலில் உள்ள ஒரு துளி எண்ணெய் கூட நமது தலையில் தேய்க்கக் கூடாது என்பதற்காக!
கேள்வி:திருப்பரங்குன்றம் மலையை முஸ்லீம்கள் ‘சிக்கந்தர் மலை’ என்று அழைப்பது ஏன்?
பதில்:அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தமோ அவ்வளவுதான்.மலை மீது ‘சிக்கந்தர் பாட்சா’ என்ற முஸ்லீம் சமாதி கட்டிவிட்டு, மலையை சிக்கந்தர் மலை என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.மலை மீது கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றக்கூட தடுத்துவருகின்றனர்.
கேள்வி:இந்துக்களின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.சில புத்தகங்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லுங்களேன்?
பதில்: ‘பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” என்ற வீரசாவர்க்கர் புத்தகம் நமது நாட்டின் வரலாற்றை விளக்குகிறது.மற்றபடி இந்துக்களின் வரலாறு என்பதாக புத்தகங்கள் வரவில்லை;இந்து தர்மத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ள விவேகானந்தரின் ‘ஞான தீபம்’ போன்ற புத்தகங்களைப் படிக்கலாம்.
மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது.முதலில் ஆனந்த விகடன் கார்டூனிஸ்ட் மதன் எழுதிய ‘வந்தார்கள்;வென்றார்கள்’ படிக்கவும்.மிகவும் பெருமையும்,சாதனையும் நிறைந்த இந்து தர்மம் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பதை போதுமான ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் எழுதிய கூடு என்ற நாவல்
சாண்டில்யன் எழுதிய விலைராணி ,கடல்புறா=நாவல்கள்
ஓஷோ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள்,நான் நேசிக்கும் இந்தியா
ஸ்ரீரங்கன் உலா=இவைகளில் இந்துக்களின் பெருமை மிகுந்த வரலாறு ஒளிந்திருக்கிறது.