RightClick

ரஜினிகாந்த ஜாதகம்சனியும் கேதுவும் கூடி உள்ளது. சந்திரனும் செவ்வாயும் சேர்கை. இத்துடன் புதனும் சுக்கிரனும் இணைந்து இருக்கிறது.


அப்புறம் என்னே? ராஜாதி ராஜாதான்.

ஜெயலலிதா ஜாதகம்ஜெயலலிதா வெற்றியை ஆஹா ஓஹோ என புகழ்கிறார்கள். ஜெயலலிதா சிம்ம ராசி. குருவுக்கு பகை வீடு. குரு இப்போது வக்கிரமாக இருக்கிறார். கெட்டவன் கெட்டால் கிட்டிடும் யோகம் என்ற மொழிக்கு ஏற்பப் இப்போது அவேறது பகை குரு வக்கிரமாக இருப்பதால் மிக பெரிய யோகம் வந்தே தீரும்.

ஜாதகம் பார்ப்பது மேல் மிக பிரியம் உள்ள ஜெயலலிதா இதை கொண்டே கூட்டணி கட்சிகளை தூக்கி எரிந்து முழு பயனையும் அனுபவித்து விட்டார்.தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.

கருணாநிதியின் ஜாதகம்அம்மாவாசையில் பிறந்த கருணாநிதியின் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சம்.

சாதரணமாக ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகமும் நீசம் இல்லாமல் ஏதேனும் ஒரே ஒரு கிரகம் ஆட்சி வீடிலோ அல்லது உச்சத்திலோ இருந்தாலே அவர் நல்ல வாழ்க்கை வாழ்வார் .

கருணாநிதிக்கு மூன்று கிரகம் உச்சம் . அதான் ராஜ வாழ்க்கை.


ஒசாமா பின்லேடனுக்கு நான்கு கிரகங்கள் நீசம். அதனால்தான் அவன் உலகை செய்தான் நாசம்.

உங்கள் ராசியின் அதிபதிஉங்கள் நட்சத்திரத்திற்கு எந்த கிரகம் அதிபதி?

for good reading, click that imageஇராமாயணம் உண்மை என்பதற்கான தமிழ்நாட்டு ஆதாரம்விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,யாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும்.விஜயாபதி  இன்று விஜயாபதி மேலூர்,விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கின்றன.300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.
இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது.இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும்.
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

இந்து பரமபத விளையாட்டு,நன்றிகள்:விஜயபாரதம் =தேசிய வார இதழ்


விஜயாபதியில் இருக்கும் சித்தரின் ஜீவசமாதி


ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இருப்பவர்கள் கோவிலுக்குப் போவதை விட,சனியின் குருவாகிய பைரவரை தினமும் வழிபட வேண்டும்.அல்லது ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று பின்வரும் வழிமுறையைக் கொண்டு வழிபடுவதன்மூலம் சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.இது அனேகரது வாழ்க்கையில் கிடைத்த அனுபவ உண்மை!!


ஆசை உடையவன் மனிதன்.பேராசை,முறையற்ற ஆசை கூடாது.அது நிச்சயம் சீரழிவில் கொண்டுபோய்விடும்.நாம் ஜீவசமாதிகளின் துணை கொண்டு நமது நியாயமான கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் சுமார் 1,00,000 ஜீவ சமாதிகள் இருக்கின்றன.நிச்சயமாக இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத்தான் இருக்கும்.இது தோராய மதிப்பீடு.ஏதாவது ஒரு கோரிக்கையுடன் அமாவாசைக்கு முன்னிரவு,அமாவாசை,அமாவாசைக்கு மறு நாள் இரவு ஆகிய மூன்று இரவுகள் ஏதாவது ஒரு ஜீவசமாதி உள்ள இடத்தில் தங்குங்கள்.ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து ஆயிரம் அடி தூரத்துக்குள் தங்கவும்.


இந்த மூன்று இரவுகளும் தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது;உப்பு,புளி,காரம்,எண்ணெய் சேர்க்கக் கூடாது.பால் பழம் அல்லது பால் சாதம் அல்லது பச்சரிசி சாதம்,வெல்லம் சாப்பிடலாம்.இந்த மூன்று இரவுகளுக்கு முன்பு ஒரு மாதம் வரையிலும் அசைவம்,மது பழக்கத்தைக் கைவிடவும்.ஜீவசமாதியில் இருப்பவரின் ஆவியின் துணையால்,உங்களின் கோரிக்கை நிறைவேறியதாக எண்ணுங்கள்.உங்கள் கோரிக்கை எட்டு தினங்கள் கழித்து நிறைவேறும்.மூன்று தினங்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பிவிடவும்.இதே மாதிரி பௌர்ணமிக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் முயற்சி செய்யலாம்.


ஜீவ சமாதியிடத்தில் தங்கியிருக்கும்போது,உபவாச முறையில் இருக்க வேண்டும்.சமாதியில் இருப்பவரின் பெருமையை எண்ணியவாறு இருக்க வேண்டும்.அனாவசியப் பேச்சு மற்றும் சிந்தனை சிறிதும் கூடாது.பொதுவாக எந்த சமாதியாக இருந்தாலும்,இயன்ற அளவு கனிவர்க்கங்கள் வைத்து வழிபடலாம்.பூக்கள் வைத்தும்,வாசனைப்பொருட்கள் தடவியும் வழிபடலாம்.தீபதூப நைவேத்தியம் சமாதிகளுக்கு உண்டு.கருப்பு திராட்சை,கற்பூர வள்ளி வாழைப்பழம்,பேரீட்சை பழம்,பால்,இளநீர்,சீனா கல்கண்டு,தேன் ஆகியவை முக்கியமான நைவேத்தியங்கள் ஆகும்.பசு நெய்தீபம்,தாமரை நூல் திரியில் ஏற்றுவது நன்று.


அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும்.தங்களுடைய வசதியைப் பொறுத்து கூட்டியோ,குறைத்தோ செய்து கொள்ளலாம்.


இப்படித்தான் காரியம் சாதித்தேன் என்று தேவரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது;என்னதான் மந்திர,தந்திர பூஜைகள் செய்தாலும் அன்னதானத்திற்கு மேல்பட்டது எதுவும் கிடையாது.
எனது ஆன்மீக வழிகாட்டி சகஸ்ரவடுகர் அவர்களுக்கு நன்றிகள்!!!


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

திருஅண்ணாமலையில் இருக்கும் காலபைரவர்,புரட்டாசி மாத பிரதோஷம்


உங்கள் என்ன தசா புத்தி? நீங்களே கண்டுபிடிக்கலாம்.


முதல் வரிசையிலே - மூன்று நட்சத்திரங்கள் இருக்கு இல்லையா? - இந்த நட்சத்திரங்களுக்கு - அதிபதி - கேது. இதைபோலே எல்லா நட்சத்திரங்களுக்கும் யார் யார் நட்சத்திர நாயகர்கள் னு பார்ப்போம்.

கேது - அஸ்வினி, மகம், மூலம்
சுக்கிரன் - பரணி, பூரம், பூராடம்,
சூரியன் - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.
சந்திரன் - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,
செவ்வாய் - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்
ராகு - திருவாதிரை, சுவாதி , சதயம்
குரு - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி
சனி - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி
புதன் - ஆயில்யம் , கேட்டை, ரேவதி

இது எதுக்காக இந்த வரிசைனு கேளுங்க ..?

நீங்க எந்த நட்சத்திரத்திலே பிறந்தாலும் - அந்த நட்சத்திர அதிபரோட தசை தான் - உங்களுக்கு முதல்லெ வரும்... அதன்பிறகு, அடுத்த அதிபர், .. இப்படி வரிசையா வந்து , திரும்ப முதல் தசை கேது, அப்புறம் சுக்கிரன், .. இப்படியே போகும்..

நீங்க பிறந்த நட்சத்திரம் - சித்திரைனு வச்சுக்கோங்களேன் - நீங்க , பிறந்ததும் - முதல் ல வரும் தசை - செவ்வாய் தசை. அதன் பிறகு , ராகு தசை , அப்புறம் - குரு , சனி , புதன் தசை வரும். அதுக்கு அப்புறம் - மேலே போகணும் - கேது தசை , சுக்கிரன், சூரியன்... இப்படியே வரணும்.

ஒவ்வொரு தசையும் எத்தனை வருஷம்னு பார்ப்போம்.

கேது - 7 வருடங்கள்
சுக்கிரன் - 20 வருடங்கள்
சூரியன் - 6 வருடங்கள்
சந்திரன் - 10 வருடங்கள்
செவ்வாய் - 7 வருடங்கள்
ராகு - 18 வருடங்கள்
குரு - 16 வருடங்கள்
சனி - 19 வருடங்கள்
புதன் - 17 வருடங்கள்


ஒரு சுற்று முடிய - 120 வருஷங்கள் ஆகும். So , எல்லாருக்கும் , எல்லா திசையும் வருவது இல்லை. ... உதாரணத்துக்கு , ஒருத்தருக்கு ஜாதகத்திலே சுக்கிரன் - நல்ல நிலை லெ இருக்கும் னு வைச்சுக்குவோம். ஆனா , அவர் பிறந்தது கார்த்திகை நட்சத்திரம் னு வைச்சுக்கோங்களேன். அவரு, கிட்டத்தட்ட் - நூறு வருஷம் முடிச்ச பிறகு தான், சுக்கிர தசையை பார்க்க முடியும். நல்லா இருந்தும், பிரயோஜனம் இல்லை.

மனுஷன் செஞ்ச பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப , சரியாய் இந்த தசை நடக்கும். ..எப்படி எல்லாம் "செக்" வைக்கிறாங்க பாருங்க...

ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் , நான்கு பாதங்கள் இருக்கும். இல்லையா?
உதாரணத்திற்கு பிறந்த நட்சத்திரம் = = = திருவோணம் 3 ஆம் பாதம் னு வைச்சுக்கோங்களேன்.
அதனாலே, முதல்ல சந்திர தசை வரும் இல்லையா. மொத்த வருஷம் - 10 . கரெக்டா?
So , ஒவ்வொரு பாதத்திற்கும் - 2 1 /2 வருடங்கள் வரும். so , மீதி இருப்பது, ( 3 ஆம் பாதம், 4 ஆம் பாதம் மட்டுமே ) 5 வருஷங்கள் இருக்கும். இதிலே , கர்ப்ப செல் போக கழிவு இருப்பு பார்க்கணும். அதை எப்படி பார்க்கிறது னு, நாம மெதுவா பார்க்கலாம். இப்போவே சொன்னா, ரொம்ப கஷ்டமா பீல் பண்ணுவீங்க.. ஒரு உதாரணத்திற்கு - கர்ப்ப செல் இருப்பு. 6 மாதங்கள் னு எடுத்துக்கலாம்.

அதனாலே , அவர் ஜாதகத்திலே - சந்திர தசை இருப்பு - 4 வரு , 6 மாதங்கள், 0 நாட்கள் அப்படின்னு எழுதி இருப்பாங்க.

இப்போ இன்னொரு விஷயம் ஞாபகம் வைச்சுக்கோங்க. மொத்தம் - 10 வருடம் , சந்திரா தசை வருது இல்லையா. ஒவ்வொரு கிரகத்திற்கும் - புத்தி இருப்பு மாறுபடும்.
மொத்தம் 9 கிரகம் இருக்கு. இல்லையா..

சந்திர தசை , வந்ததுனா - முதல்லே - சந்திர புத்தி வரும் (10 மாதங்கள் ) . அப்புறம் செவ்வாய் புத்தி( 7 மாதங்கள் ) , அப்புறம் ராகு புத்தி (18 மாதங்கள்) . ... மொத்தமா எல்லாம் கூட்டினா 10 வருடங்கள் வரும்.

புத்தி இருப்பு எப்படி பார்க்கணும் னு ஒரு பார்முலா இருக்கு.
புக்தி
( B x C / A ) = வருடங்கள்

மொத்த தசை இருப்பு : (A ) - 120 வருடங்கள்
தசா கிரகத்தோட மொத்த வருடங்கள் : (B)
புத்தி பார்க்க வேண்டிய கிரகத்தோட இயல்பான தசை வருடங்கள் : (C )சனி தசை லெ - கேது புத்தி எவ்வளவு னு பார்க்கலாம்.? ( சிறிய டெஸ்ட் ..)

சனி தசை மொத்தம் எவ்வளவு - 19 வருஷம். B = 19 ;
கேது வோட இயல்பான தசை = 7 வருஷம் ; C = 7


( 19 * 7 / 120 ) = 1 .108333 வருதா...? அதை அப்படியே , மாதம் நாளா மாத்திக்கோங்க.
நீங்க இதை 360 ஆலே பெருக்கிக்கோங்க. = 399 வருதா. 13 மாதம் , 9 நாள் வரும்.

(ஜோதிடப்படி, கணக்கு பண்ண ஈஸியா , 1 வரு = 360 நாட்கள் ; 1 மாதம் - 30 நாட்கள் னு எடுத்துக்கோங்க.. )

பிறக்கும் போது , எந்த தசை , எந்த புக்தி இருப்பு னு தெளிவா எழுதி இருப்பாங்க..
அந்த டீடைல் தெளிவா இருந்தாத் தான், உங்களுக்கு இப்போ நடப்பு தசை , புக்தி என்னனு தெளிவா கண்டு பிடிக்க இயலும். .... அது கண்டு பிடிச்சாத்தான் , உங்களுக்கு என்ன பலன்கள் இப்போ ஏற்படும் னு கண்டு பிடிக்க இயலும்.....

எந்த ராசிக்கு யார் அதிபதி? யார் உச்சம்?For Good Reading, Click On That Imagesசாதரணமா ஒரு கிரகத்துக்கு - சக்தி ஒரு மடங்கு னா, ஆட்சி ஸ்தானங்களில் மூன்று மடங்கு சக்தியுடன் இருக்கும்.

அதைப் போல , சில வீடுகள் - அந்த கிரகங்களுக்கு - உச்ச பலம் , நீச பலம் என்றும் இருக்கிறது. உச்ச வீடுகளில் அந்த கிரகங்கள் - ஐந்து மடங்கு பலத்துடன் இருக்கும். நீச வீடுகளில் , பலம் இழந்து பரிதாபமாக இருக்கும்.

இதைப் போல, ஒவ்வொரு இடமும் , ஒவ்வொரு கிரகத்திற்கு , நட்பு, பகை, சமம் என்று மூன்று பண்புகளுடன் இருக்கும். நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே , நாம இருப்போம் இல்லே.. ஒருத்தரைப் பிடிக்கும். ஒருத்தரை பிடிக்காது.. அந்த மாதிரி..

சிவாலயப் புனர்நிர்மாணப்பணியில் பங்கு பெறுவோமா?திருபுவனத்திலிருந்து நரிக்குடி செல்லும் வழியில் 15 வது கிலோமீட்டர் தூரத்தில் கல்விமடை என்ற கிராமம் இருக்கிறது.இந்தக் கிராமம் விருதுநகர் மாவட்டத்தின் எல்லையில், திருச்சுழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது.இந்த கல்விமடைகிராமத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே அருள்மிகு கண்திறந்த நாகேஸ்வரமுடையார் அவர்களும்,அருள்மிகு நாகேஸ்வரி தாயாரும் கடந்த 5,000 ஆண்டுகளாக அருள்புரிந்துவருகின்றனர்.

கோவிலுக்குள்ளே நாக விநாயகர்,கண் திறந்த நாகேஸ்வரமுடையார் சிவனாக கிழக்கு நோக்கி அருள்பாலித்திருக்க,தெற்கு நோக்கியவாறு நாகேஸ்வரி தாயார் அருள்புரிந்துவருகிறாள்.பகலில் நாகேஸ்வரி தாயாரின் கண்கள் ஜொலிக்கிறது.(மதுரை,பரமக்குடி,அருப்புக்கோட்டை,திருச்சுழி,காரியப்பட்டி,நரிக்குடி மக்கள் பலர் சொன்னது.நீங்களும் ஒருமுறை போய் தரிசித்து,வரம் வாங்கி வாருங்கள்;அப்போதுதான் புரியும்!!!)

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு,இந்த நாகேஸ்வரமுடையார்(சிவபெருமான்) ஒரு அதிசயம் நிகழ்த்தியிருக்கிறார்.இவரது கண்கள் பளிச்செனத் தெரிந்தது.தற்போதும் மாலை  6 மணிக்கு மேல் 8 மணி வரையிலும் இவரை வழிபடச் சென்றவர்கள்,சிவபெருமானின் முகத்தை தரித்துவருகின்றனர்.அடிக்கடி பேருந்து வசதியில்லாத உள்ளடங்கிய கிராமத்தில் இந்தக் கோவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. தமிழக அரசின் நிரந்தரமாக ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.
மூலவரைப் பார்த்தால்,மனது ரொம்பவும் வலிக்கிறது.ஆமாம்,இப்போதுதான் அடிப்படைக் கட்டுமானங்கள் இந்தக் கோவிலுக்கு உருவாகிவருகின்றன.ஒரு நாளுக்கு ஓரிரு பக்தர்கள் மட்டுமே கேள்விப்பட்டு வருகின்றனர்.சிவாலயத்துக்கு திருப்பணிகள் செய்ய விரும்புவோர் கல்விமடைக்கு ஒருமுறைப் போய்வரவும்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹமதுரை அழகர்கோவில் பகுதியில் உறைந்திருக்கும் யாகோபுசித்தர்மதுரை அழகர்கோவிலில் இருந்து மேலூர் செல்லும் வழியில் ஒரு கிராமத்தையொட்டி ஒரு சாலை பிரிகிறது;அந்தச் சாலையின் வழியே சென்றால்,சில கிராமங்கள் வருகின்றன.அதையும் கடந்து சாலைகளே இல்லாத பல மாந்தோப்புக்களைக் கடந்தால்,ஒரு வற்றாத சுனை விழுந்துகொண்டிருக்க,அதன் மையப்பகுதியில் யாகோபு சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
சித்தரைப் பற்றி ஆராய்பவர்கள்,ஆன்மீகத் தேடல் உள்ளவர்களில் பலர் மதுரையில் இருக்கின்றனர்.அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த யாகோபு சித்தரின் ஜீவசமாதியின் இருப்பிடம் தெரிந்திருக்கும்.இந்த இடத்துக்கு நமது ஆன்மீகக்கடல் வாசகர் ஒருவரின் மூலமாக செல்லும் பாக்கியம் கிடைத்தது.இந்த பெருமையை ஆன்மீகக்கடல் வாசகர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொள்வதில்,ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.
.
மதுரை ஆன்மீக மக்களின் மத்தியில் இன்னொரு தகவலும் உலவுகிறது.இந்தப் படத்தில் இருப்பது யாகோபு சித்தரின் ஜீவசமாதி அல்ல;அழகர்கோவிலின் மலையுச்சியில் இருக்கிறது.அந்த இடத்துக்கும் பலர் சென்று தியானித்துவிட்டு வருவது உண்டு.

படம் எண்:5:பூதக்கண் சித்தரின் தவச்சாலை

படம் 4;நேர்முகம் மற்றும் பக்கவாட்டுத்தோற்றம்பூதக்கண் சித்தரின் ஜீவ சமாதி,திருபுவனம்,சிவகெங்கை மாவட்டம்சிவகெங்கை மாவட்டம் திருபுவனத்திலிருந்து மடப்புரம் செல்லும் வழியில்,வைகை ஆற்றுப்பாலத்தைக் கடந்ததும்,ஒரு யு வளைவு வரும்.அப்படி வந்ததும்,நால்வர் கோவில் என்று ஒரு பலகை உங்களை வரவேற்கும்.படம் எண்:1A;அந்தப் பலகைக்கு அடுத்ததாக பிரதான சாலைக்கு முதுகு காட்டியபடி ஒரே ஒரு நந்திபகவான் அமர்ந்திருக்கிறார்.படம் எண்:1
அந்த நந்தியின் அருகில் நின்றவாறு சாலையின் எதிர்ப்புறம் பார்த்தால் ஒரு பிரம்மாண்டமான ஆலமரம் தெரியும்.அதுதான்.அதே தான்! பூதக் கண் சித்தரின் ஜீவ சமாதி:படம் எண்:2
ஒரு சிறு ஓடையில் இறங்கி ஏறினால்,நாகராஜாக்களுடன் ஒரு விநாயகர் தென்படுவார்;அவருக்குப் பின்னால்,ஒரு கருங்கல் மண்டபத்தின் மையத்தை ஒரு தொந்தியில்லாத விநாயகர் அருள்புரிந்துவருகிறார்.படம் எண்:3
அப்படியே பக்கவாட்டில் பார்த்தால்,இரண்டு சிவலிங்கங்கள் தென்படும்.இரண்டு சிவலிங்கங்களும் சிறிது வித்தியாசத்துடன் தென்படுகின்றன.படம் எண்:4
தொந்தியில்லாத கணபதிக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான ஆலமரம்,ஒரு சிறிய  கருங்கல் மண்டபத்தையும்  பிளந்துகொண்டு,வானையே முட்டுமளவுக்கு வளர்ந்து கிளைபரப்பி நிற்கிறது.அதன் நடுவே ஒரு சிறு கோயில் போன்ற அமைப்பும் தென்படுகிறது.படம் எண்:5இங்கேதான் பூதக்கண் சித்தர் உறைகிறார்.இங்கிருந்து எதிரே தூரத்தில் பார்த்தால்,முதலில் மடப்புரம் செல்லும் சாலை தென்படும்.இன்னும் தூரத்தில் பார்த்தால் வைகை ஆறு தென்படும்.அந்த வைகை ஆற்றைக் கடந்து தூதூதூரத்தில் திருப்பூவனத்தின் நாதர் புஷ்பவனநாதரின் கோவில் இருக்கிறது.அவ்வளவு தூரத்தில் இருக்கும் எம்பெருமான் புஷ்பவன நாதரை இங்கிருந்து பூதக்கண் சித்தர் நொடிதோறும் தொழுதுகொண்டிருக்கிறார் எனில்,இது எப்பேர்ப்பட்ட தெய்வீக ரகசியம்!!!
ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு இந்தப் புகைப்படங்களை வழங்குவதில் பெருமகிழ்ச்சியும்,பெருமிதமும் கொள்கிறேன்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம்,மதுரை,திருபுவனம்,பரமக்குடி,இராமநாதபுரம்,மடப்புரம்,நரிக்குடி,அருப்புக்கோட்டை வாசகர்கள் இங்கு வந்து,மஞ்சள் துண்டினை விரித்து,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்துக்கொண்டு,ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ ஜபிப்பது நன்று.இதன் மூலமாக நாம் ஜபிக்கும் ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ மந்திர ஜபத்தின் சக்தி அதிகரிக்கும்.ஆன்மீக வாழ்க்கையில் கிடுகிடு முன்னேற்றம் உண்டாகும்.சிலருக்கு பூதக்கண் சித்தரின் ஆசியும்,சந்திப்பும் கிட்டும்.முயலுவோமா?
ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

படம் எண்:3


படம் எண்:2


படம் எண்:1 & 1ஆ


தேசப்பிரிவினைபற்றி சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் கருத்து

1946இல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்(THOUGHTS ON PAKISTAN)என்ற புத்தகம் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தது.அதிலிருந்து சில பகுதிகள்:
உலக நாடுகளில் முஸ்லீம்களின் கடந்தகால வரலாறு,அவர்களது குறிக்கோள்,செயல்பாடுகள்,திட்டங்கள் முதலியவற்றை அவர் அலசி ஆராய்ந்து,முஸ்லீம்கள் எந்தக் கால கட்டத்திலும் பாரதத்தில் இந்துக்களுடன் சேர்ந்து வாழமாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டினார்.

இந்திய முஸ்லீம்களின் செயல்பாடு,மதவெறி,பாகிஸ்தான் கோரிக்கை அனைத்துக்குமே காந்திஜியின் தாஜா செய்யும் கொள்கையே காரணம் என்று அம்பேத்கர் கருதினார்.காந்தியின் ‘கிலாபத் இயக்கம்’ ஒரு ‘பைத்தியக்கார முயற்சி’ என்று என அவர் சாடினார்.துருக்கியில் நடந்த உள்நாட்டுப் புரட்சிக்கும்,இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை;அது இந்தியாவுக்கு தேவையற்றது.கிலாபத் இயக்கத்தின் மூலம் இங்குள்ள முஸ்லீம்களின் மத உணர்வைத் தூண்ட உதவியிருக்கக் கூடாது என்று அம்பேத்கர் அதை வன்மையாகக் கண்டித்தார்.
பிரிவினை வரத்தான் போகிறது என்பதை உணர்ந்த அவர்,நாட்டின் எந்தெந்த மாகாணங்களில்,எந்தெந்தப் பகுதிகளில் முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து,துல்லியமான புள்ளிவிவரங்களுடன் குறிப்பிட்டு,அந்தப் பகுதிகள் தான் பாகிஸ்தான் பகுதிகளாக ஆக வேண்டும் எனக் குறிப்பிட்டார்.ஆனால்,அதன்படி நாடு பிரிக்கப்படவில்லை;முஸ்லீம் பெரும்பான்மையில்லாத பல இடங்கள்,பாகிஸ்தானுக்குச் சென்றன.அதைத் தடுக்க காந்தியும்,நேருவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை:நல்லவேளை! டாக்டர் ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின் கடும் முயற்சியால் முழு வங்காளமும் பாகிஸ்தானாக ஆவது தடுக்கப்பட்டு,கிழக்கு வங்கம் மட்டும் அளிக்கப்பட்டது.
அம்பேத்கர் தனது புத்தகத்தில் இன்னொரு முக்கியமான கோரிக்கையை வைத்திருந்தார். “மக்கள் பரிமாற்றம்”(EXCHANGE OF POPULATION) செய்தபிறகே நாடு பிரிக்கப்பட வேண்டும்.அதாவது பாகிஸ்தான் பகுதியாக ஆக்கப்படவிருக்கும் பிரதேசத்திலிருந்து இந்துக்கள் அனைவரையும் பாரதத்துக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்.அதேபோல் பாரதத்தின் பகுதியில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடவேண்டும் என்று கூறினார்.அதற்கான சில முன்னுதாரணங்களையும்,பரிமாற்றத்துக்கான செயல்முறைகளையும் விளக்கியிருந்தார்.
முதல் உலகப்போருக்குப்பின்,துருக்கி நாட்டின் சில பகுதிகள் கிரீஸ் நாட்டுடன் இணைக்கப்பட்டபோது,கிரீஸ் பகுதியில்    இருந்த முஸ்லீம்கள் துருக்கிக்கும்; துருக்கியில் இருந்த கிறிஸ்தவர்கள் கிரீஸ் நாட்டுக்கும் அனுப்பப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜின்னாவும் இந்தக் கருத்தை ஆதரித்தார்(?!).முஸ்லீம்கள் இந்துக்களுடன் இணைந்து வாழ முடியாது என்பது அவரது திடமான நம்பிக்கை.வீரசாவர்க்கர்,டாக்டர் முகர்ஜி,அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தெரிவித்த இந்தத் திட்டத்தை காந்தியும்,நேருவும் ஏற்கவில்லை;
விளைவு? 3,50,00,000 இந்துக்கள் பாகிஸ்தானின் பகுதியில் சிக்கிக் கொண்டனர்.5,00,000 இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.280,00,000 இந்துக்கள் தங்களது அனைத்து உடைமைகளையும்,சொத்துக்களையும் பாகிஸ்தானிலேயே விட்டுவிட்டு அகதிகளாக,பாரதம் நோக்கி ஓடி வந்தனர்.மற்றவர்கள் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டு சாக்கடை,கழிப்பிடம் சுத்தப்படுத்துதல் போன்ற கீழ்நிலை வேலைகளுடன் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.
இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமைகளை,அம்பேத்கர் தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்து எழுதியிருக்கிறார்.இந்துக்களுக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமைகளுக்கு காந்தியும்,நேருவும் தான் முழுப்பொறுப்பு என்பதை வரலாறு கூறும்.
 எனது நாடு என்று இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய முஸ்லீம்களுக்கு உரிய மரியாதையைக் கூட,பாகிஸ்தான் இன்று வரையிலும் தரவில்லை;இது தொடர்பாக இந்தியா டுடே நேரில் சென்று பேட்டி கண்டு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.பாகிஸ்தானுக்கு இந்தியாவில் வாழும் முஸ்லீம்களைப் பற்றி சிறிதும் அக்கறையில்லை;முன்பு பாகிஸ்தானிலிருந்து பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவுக்கு வந்து குண்டு வைப்பார்கள்;தற்போது இந்தியாவில் இந்துக்களாக இருப்பவர்களை முஸ்லீம்களாக மதம் மாற்றி,அவர்களைக் கொண்டு தீவிரவாதச் சதித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
உலக வரலாற்றை படித்துப் பார்த்தால் பின்வரும் முடிவுக்குத் தான் வர வேண்டியிருக்கும்.உலகம் முழுவதும் ஒவ்வொரு இஸ்லாமியரும்,ஓவ்வொரு கிறிஸ்தவரும் மத உணர்வோடு உருவாக்கப்படுகிறான்.இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு இந்துவும் மதச் சொரணைகூட இல்லாமல் வாழ்ந்து சாகிறான்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

இந்து மதம் பற்றி - நாஸ்டர்டாமஸ் கணிப்பு-பாகம்- 02

ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு இரண்டாம் காண்டத்தில்13வது பாடலாக மலர்கிறது:-
ஆன்மா இல்லாத உடல் இனியும் புனிதமாகக் கருதப்படமாட்டாது
இறந்த தினத்தன்று ஆன்மா அடுத்த பிறவியை நோக்கிப் பயணிக்கிறது
இறைவனின் நினைப்பு ஆத்மாவை சந்தோஷத்திற்குள்ளாக்கும்
என்றுமுள்ள அக்ஷரத்தைக் கண்டவுடன்.

இதர மதங்கள் மறுபிறவியை ஏற்பதில்லை. ஹிந்து மதம் ஒன்றே உடல் ஆத்மாவிற்கு ஒரு சட்டை தான்நலிந்து கிழிந்த சட்டையை உதறுவது போல ஆன்மா பழைய சரீரத்தை உதறி விட்டு அடுத்த சரீரத்தை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது. இறுதி வரியில் வரும் அக்ஷரம் ஓம் என்பதாகும். ஆக மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் ஹிந்து மதக் கொள்கை உலகில் ஓங்கி உயரும் என்பதை நாஸ்டர்டாமஸ் இந்தப் பாவில் தெளிவாக விளக்குகிறார்'.இப்படி ஒரு விளக்கத்தைத் தருபவர் பெங்களூரைச் சேர்ந்த திருஜி.எஸ்,ஹிரண்யப்பா. இவர் ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்டர்டாமஸ் என்ற நூலில் ஹிந்து மதம் பற்றி நாஸ்டர்டாமஸ் பல பாடல்களில் பூடகமாகக் கூறியுள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
நாஸ்டர்டாமஸின் பாடல்களை விளக்கி உலகின் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தகுந்த ஒருசெய்தியாகும்!
thanks: mr.KM

மூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமஸ் (Nostradamus :Part- 05 )


இந்தியா- பாக் இடையே போர் வருமா?
 
ஒரு உலக மகாயுத்தத்தை இந்த நாடுகளும் தான் ஆரம்பித்து வைக்க போகின்றன என்ற அதிர்ச்சி தகவல்களை அவர் எப்போதோ சொல்லி விட்டு போயிருக்கிறார். 2006ம் ஆண்டிலிருந்தே இந்தியா பல சோதனைகளை சந்திக்க தொடங்கும் பட்சத்தில் ஒரு உச்சகட்ட காட்சியாக 2011 அல்லது 2012ல் 3-வது உலக போர் ஏற்படும் என்கிறார். இந்த போர் இடைப்பட்ட எந்த ஆண்டில் வேண்டுமானாலும் நிகழலாம்!. மக்களின் அப்போதைய இறை பக்தியை பொறுத்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
 
இந்தியா-பாகிஸ்தான் என எதிரும் புதிருமான இந்த போரில் அமெரிக்காரஷ்யா,சீனாசவூதி அரேபியாசிரியாஇஸ்ரேல்ஜெர்மனிபிரான்ஸ்லெபனான்ஈரான்,ஆஸ்திரேலியா என உலகின் 21 நாடுகள் முக்கிய களமிறங்கும் என்கிறார் அவர்.
வானத்தில் சனி-ராகு கிரகங்களின் புதிய மாற்றத்தால் இந்தபோர் ஏற்படும். போர்சமயத்தில் அணு ஆயுத வீச்சுகளால் கடல் அலை 100 அடிக்கு எழுந்து ஓயும். சுமார்100 கோடி பேர் மரணத்தை தழுவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் நாஸ்டர் டாமஸ். இதன் பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார் நாஸ்டர் டாமஸ். 

 
போரை பொறுத்த வரை இந்தியாவில் பஞ்சாப்குஜராத்ராஜஸ்தான் மாநிலங்களும்எல்லை பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார்.இந்தியர்கள் 2006க்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பல வகையான மாற்றங்களை காண்பார்கள். மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி திணறுவார்கள். இறை பக்தி குறையும். அரசியலில் பற்பல மாற்றங்கள் நிகழும். உண்மை தோல்வியை தழுவும். பொய் வெற்றி பெறும். மக்கள் அலை பாய்ந்து திரிவார்கள்.
இத்தகைய சுமார் 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இளைய தலைமுறை குழந்தைகளால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் வயதானவர்களால் அவர்கள் அறிவை புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சர்யப்பட்டு போவார்கள். இந்தியா மிக நவீனமாகி விடும். பணம் கொழிக்கும். அனைவரது வாழ்க்கையும் மிக நவீன நாகரீகமடையும். மேலை நாடுகளை போன்ற வாழ்க்கை தரத்திற்கு மாறிவிடுவார்கள். உலக அரங்கில் இந்தியா தலை சிறந்து விளங்கும்.இப்படியெல்லாம் இந்தியா பற்றி ஜாதக பலனை சொல்லி யிருக்கும் நாஸ்டர்டாமஸ்மேற்கண்ட 20 ஆண்டு கால போராட்டத்தை ஒவ்வொருவரும் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார்.
ஒரு நாட்டில் பாவசெயல்கள் பெருகும் போது அந்த நாட்டின் அதற்குரியசிக்கலையும்கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். எனவேபாவசெயல் செய்யாதுஅன்புடன் இருங்கள். அவரவர் வீட்டில் தினமும் இறைவனை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள்.
இத்தகைய பிரார்த்தனை செய்யும் போது மட்டும்தான் மனம் தெளிவடையும். நல்லசிந்தனை பிறக்கும். நெஞ்சு தைரியம் உண்டாகும். நீங்கள் இதை செய்யாவிட்டாலும் இறை சக்தி மிகப்பெரியது. அது செய்ய வைக்கும் என்கிறார் அவர்.
http://keyemdharmalingam.blogspot.com/2011/09/nostradamus-part-05.html

ஏழாம் அறிவு...திரைவிமர்சனம்.


தமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால்  இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய....
பொதுவா 500 வருடங்களுக்கு முன் தோன்றிய அமெரிக்காவை பெருமையா தூக்கி வச்சி கொண்டாடுகின்றோம்..ஆனால் பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னலேயே நாகரிகத்தில் சிறந்து விளங்கி,இன்னைக்கும் 1000 வருடங்கள் கடந்து போன தஞ்சை பெரியகோவிலை பற்றிய பெருமை எத்தனை பேருக்கும் தெரியும்...??? 

ஆயிரம் வருஷத்துக்கு முன்னயே அப்படி ஒரு கோவிலை கட்ட  முடிச்சா அப்ப அதுக்கு முன்னாடி இருந்த மக்கள் எந்த அளவுக்கு நாகரிகத்தில், கல்வியில், கட்டகலையில் சிறந்து விளங்கி இருக்க முடியும்?? 

ஆயிரம் ஆண்டு  கோவில் ஒரு சான்று அவ்வளவே...

250 வருசத்துக்கு முன்னாடி இருக்கும் பொருளை கூட ஒரு அமெரிக்கன் கடவுளை பார்ப்பது போல  பீல் பண்ணி பார்ப்பான்.ஆனா இங்க ஆயிரம் வருஷத்து கோவில் சுவத்துலேயே பான்பராக் போட்டு  எச்சி துப்பி வைப்போம்.....காரணம் நம்ம கிட்ட இருக்கும் அலட்சியம்.. அப்படி அலட்சியம் வரக்காரணம் என்ன?? நாம் மிக மிக பழமையானவர்கள்..


பொதுவாகவே தமிழர்கள் பற்றிய  செய்தியை இருட்டடிப்பு செய்வதற்க்கு என்றே உலகம் முழுவதும் பல குழுக்கள்   இருக்கின்றது.. அவர்களுக்கு தமிழர்கள் என்றால் எட்டிக்காய் போல கசக்கும்...தமிழ் என்ற வார்த்தையை பிரயோகித்தால் நக்கல் விடுவார்கள்.. தமிழில் பேசினால் அவர்களை அசிங்கப்படுத்துவார்கள்...அதனால்தான் இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் கிளர்ச்சியும் முக்கிய கிளர்ச்சியுமான வேலூர் சிப்பாய் கலகத்தை வரலாற்றில் இருந்தே தூக்கி தூர எறிந்தார்கள்..இந்திய அளவில் தமிழன் பெயர் பெற்றவிட்டால்..??

எப்போது எல்லாம்  தமிழர்கள் ஒற்றுமையாக எந்த செயலை செய்தாலும் உறவாடிக்கெடுக்க அவர்கள் காய் நகர்த்துவார்கள்.. அதனை செய்து முடிக்க தமிழ் இனத்திலேயே எட்டப்பர்கள் நிறைய பேர் அவர்களுக்கு உதவி செய்வார்கள்.. உதாரணம் இலங்கை ...இலங்கையில் யாழ் நூலகத்தை எரித்து பசி தீர்த்தார்கள்..ஒரு இனத்தை வேர் அறுக்க அவர்கள் பற்றிய பழம்தகவல்களையும் கலாச்சாரத்தையும் சொல்லும் நூல்களை அழித்தாலே போதும்... உதாரணத்துக்கு தஞ்சை பெரிய கோவிலே இல்லையென்றால் நம்மாளே நம்மளை பத்தி பெருமையா நினைச்சி இருக்கமாட்டான்..

கல் தோன்றுவதற்கு முன் பிறந்த மூத்த தமிழ் என்று பெருமையாக சொன்னால் எல்லாம் நாம் நம்பப்போவதில்லை.. ஏதோ அந்த தஞ்சை பெரிய கோவில் இருப்பதால் இப்ப இருக்கற பயபுள்ளைங்க எங்களுக்கு ஆயிரம் வருஷத்திய பாராம்பரியம் இருக்குன்னு பீத்திக்கிறோம்..


இப்படியாக தமிழ் இனத்தின் மீது திட்ட மிட்ட காய் நகர்த்தலின் காரணமாக ஆறாம் நூற்றாண்டில், இங்கு இருந்து சீனாவுக்கு போய் குங்பூ எனும் தற்காப்பு கலை கத்துக்கொடுத்தது, புத்தமதத்தை பரப்பியவரும், பல்லவ அரச குடும்பத்தில் பிறந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த போதிதர்மர் என்றால்  எந்த தமிழருக்கும் தெரியாது... ஆனால் சீன பயணி யுவான்சுவாங் பல்லவ ஆட்சிகாலத்தில் தமிழகத்துக்கு வந்தார்  என்பதை மட்டும் தொடர்ந்து வாழையடி வாழையாக படித்து வருகின்றோம்.. 

காரணம் மேலே   சொன்னதுதான்.. காலம் காலமாய் நடந்து வரும் தமிழ் இனத்துக்கு எதிரான போர்...தமிழர்கள் புத்திசாலிகள் அவர்களை தட்டி வைக்கவில்லை என்றால் வளர்நது விடுவார்கள் என்பதுதான் பொறாமைக்கான அடிப்படை...

எம்ஜியார், சிவாஜி, ரஜினி , கமல் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கும் தமிழர்களுக்கு சீனா, ஜப்பான்,தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தமிழரின் பெருமையை  சொல்லும்கதைதான்..ஏழாம் அறிவு.. அதை கமர்சியல் கலந்து மசாலா தூவி சொல்லி இருக்கின்றார்...இயக்குனர் முருகதாஸ்.

சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா


புதுடில்லி: இந்தியப்பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இந்தியப்பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது அந்தமான் நிகோபர் தீவுகள். இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்காசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலைத் தாண்டி இந்தியாவுக்கு வந்த எவ்வித ஆபத்தும், அந்தமானை கடந்து தான் இந்தியாவை தொடமுடியும் என்பதால், இப்பகுதி மீது சீனாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை கப்பல் ஒன்று இங்கு உளவு பார்த்த சம்பவம் மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், தனது தவறை தாமதமாக உணர்த்தியும் உள்ளது.

இதையடுத்து தனது பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இந்தியா இறங்கியுள்ளது. இதையடுத்து அங்கு 6 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர். இது தற்போது அங்கிருக்கும் வீரரர்களை விட 3 மடங்கு அதிகம். மேலும் ஒரு டஜன் போர் விமானங்களும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதுகுறித்து இந்திய ராணுவ பிரிகேடியர் பல்விந்தர் சிங் கூறுகையில், அந்தமான் தீவுக்கூட்டத்தில் 572 தீவுகள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பு பணிகளுக்காக ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரித்தார். இவர்கள் அப்பகுதி மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உதவுவர் என்றும் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் சீனாவின் ஆதிக்கம் இப்பகுதியில் பரவாமல் இருக்க மேலும் பல யுக்திகளை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
thanks: dinamalar

சங்கடம் தீர்ப்பார் சனீஸ்வரன்பதிவு செய்த நாள்   10/25/2011 Dinakaran

நவகிரகங்களுள் மிகவும் சக்தியும், பலமும் வாய்ந்தவராக கருதப்படுபவர் சனிபகவான். பற்பல சிவன் கோயில்களில் இவருக்குத் தனிசந்நதிகள் இருந்தாலும், திருநள்ளாரில் இருக்கும் தர்ப்ப£ரண்யேஸ்வரர் சந்நதியின் கிழக்கு கோபுரத்தின் வடக்கு திசையில், மகர& கும்ப ராசிகளின் அதிபனாக காக்கை வாகனத்தோடு, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சாந்தி, பொறுமை, கருணை ஆகிய மேலான குணங்களைக் கொண்டு ஆதிமூர்த்தியாம் அந்த திருநள்ளாராரை தியானிக்கும் பக்தர்களுக்கு தன்னால் வந்த, அதாவது சனி தோஷத்தால் வந்த நோய், பொருள் விரயம், பேராபத்து, சஞ்சலம், துக்கம், விரக்தி, சோம்பல், தொழில் இடையூறு என அனைத்து சோதனைகளையும் நீக்கும் நீதி அரசராக கலியுகத்தில் சனி ஆட்சி செய்யும் இடம் இந்த தர்ப்பைக் காடு என்ற திருநள்ளாறு. இங்கு உள்ள மூலவர் ஆதிமூர்த்தி &நள்ளாரார்&தர்ப்ப£ரண்யேஸ்வரர், தானே உதித்த சுயம்பு மூர்த்தி. இது சப்தவிடங்க சிவ தலங்களுள் மிகவும் போற்றப்படுவது. அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற மேலோர்களால் பாடப்பட்ட தலம். சிவபெருமான் உன்மத்த நடனம் செய்யும் தலம். நூலாறு, வஞ்சியாறு என இரண்டு நதிகள்வடபுறமும், தெற்கே அரசலாறு ஓட இடையே சனி பகவான் கருணையே வடிவாக நின்ற கோலத்தில் அருள் பரிபாலிக்கின்றார். 
மணி என்ன? என்றால் ஏழரை என்று நம் முன்னோர்கள் சொன்னது இல்லை. போடி சனியனே என்று மனைவியை சொன்னால் ஒருவாரம் சோறு கிடையாது. அப்படிப்பட்ட குரூர குணங்கொண்ட சனிபகவான் கருணை, சாந்தம், பொறுமை, மகிழ்ச்சி பொங்கவீற்றிருப்பது இங்குதான். ஏன்?  நள மகாராஜன் என்ற நிஷத நாட்டு சக்ரவர்த்தி, தன் அழகு, நாடு, ஆஸ்தி, மனைவி அனைத்தையும் இழந்து, மடையனாக மாமனின் அரண்மனையிலேயே சமையல் வேலை என்னும் சேவகம் புரிந்து வந்தான். ஒருமுறை நாரதர் அவன் கனவில் தோன்றி, நள்ளாரார் என்னும் சிவனைத் துதிக்கச் சொல்லி, பின் சனி பகவானை வணங்கும் முறையையும், ஸ்தோத்திரத்தையும் உபதேசித்து அருளினார். நளச் சக்ரவர்த்தியும் நள்ளாறு ஈசனுக்கு, பால், தயிர், பழரசம், சந்தனக் குழம்பு, பன்னீர், இளநீர், நல்லெண்ணெய் போன்றவற்றால்அபிஷேகம் செய்து சாதத்தில் நல்லெண்ணெயும், எள் பொடியும் கலந்து நைவேத்யம் செய்தார். இவற்றை எல்லாம் சனி பகவான் ஒரு தூணில் மறைந்து நின்று கண்டு ரசிக்க, போகமார்த்த பூண்முலையாள் நாயகனாம் சிவன், பிரசன்னமாகி, நளன் வாட்டம் போக்கினார். பின் சனி பகவானை நோக்கி, ‘இங்கே நில். இன்று தொட்டு உனக்கும் ஈஸ்வரன் என்ற பெயர் சேரட்டும் என்றார். அன்று முதல் சனி பகவான்,சனீஸ்வரன் ஆனார். சூரிய குமாரன் ஆனதால், வாரத்தில் வரும் முதல்நாள் சூரியனுக்கும், கடைசி நாள் சனிக்கும் என்று வகுத்தார்கள். சனிக்கு கருமை உடல். எனவே, காக்கை வாகனம். கறுப்பு வஸ்திரம். கருப்பு தான்யமாக எள். எள் எண்ணெய் அவர் விரும்புவது. நீலக் குவளை மலர், வன்னி இலை, புளு சபையர் என்ற நீலக்கல் என அனைத்தும் சனீஸ்வரனுக்கு நளன் படைத்து வணங்கினார். அவரைவணங்கும் முன், நளமகாராஜன் ஒரு குளத்தை வெட்டினார். இதுவே நள தீர்த்தம் என இன்றும் போற்றப்படுகிறது. நள தீர்த்தத்தில் எள் எண்ணெய் தேய்த்து நீராடிய பின், பழைய ஆடைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும் என்பது வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதை சனீஸ்வரர் நேசிக்கிறார்.
இப்படி செய்வதினால் எப்படிப்பட்ட தோஷமும், நவகிரஹ கோளாறும் நீங்கும் என்கிறது நாடி. சனிக்கிழமைகளில் ஒரு பொழுது உணவு உண்ணாது விரதம் இருப்பது ஐஸ்வர்யம், ஆரோக்கியம், ஆயுள் எல்லாம் விருத்தி அடையும் என்கிறார் அகஸ்தியர். திருநள்ளார் கோயிலை நளச் சக்ரவர்த்தி கட்டியபின், 7ம் நூற்றாண்டு தொட்டு பற்பல மன்னர்கள் கோயிலை விரிவுபடுத்தினர். நாடியில் திருநள்ளார், ‘நள ஈஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பெயர்ச்சி ஏற்படும்.அப்படி சனி பெயர்ச்சி அன்று உதயாதிவேளையில் கோதை நாச்சியாரால் ஆக்கப்பட்ட திருப்பாவையும் மற்றும் திருவெம்பாவையும் பாராயணம் செய்யப்படுகிறது. ஏனெனில், சனி பகவானை, ‘ஸ்ரீவிஷ்ணு ப்ரியாயை நம என்று நாரதர் போற்றுகிறார். நள மகாராஜன் சொன்ன சனி பகவான் ஸ்தோத்திரத்தை ஒரு நாளைக்கு 107 முறை (108 அல்ல) காலைவேளையில் ஜபித்து வந்தால் கண் திருஷ்டி அகலும். சனி பகவானின் அதாவது சனி ஸ்வரனின் பெரிய அருள் சித்திக்கும்:
ஓம் அங் ஹ்ரீம் ஸ்ரீங் சங்
சநைஸ்வராய நம: ஓம்சனீஸ்வரனின் தாயார் சாயா தேவி. எனவே சனி பகவானின் அர்த்தசாம பூஜையை பக்தர்கள் காணக் கூடாது என்பார்கள். தாயார் சாயாதேவி, தனியாக மகனை தரிசிப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. சனி பகவானின் பிரசாதத்தையோ, சிவபெருமானின் பிரசாதத்தையோ வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டாலும், திருநள்ளாறு சனீஸ்வர பிரசாதத்தை வீட்டிற்கு கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்கின்றனர் சித்தர்களும் ரிஷிகளும். புரட்டாசி மாத பௌர்ணமி பூஜையும், மகாசிவராத்திரி பூஜையும், சனி பெயர்ச்சி பூஜையும் சாலச் சிறந்தவை. இந்த காலங்களில் இங்கு தங்கி வழிபட்டால், முடியாதது ஒன்றும் இல்லை.எதையும் சாதிக்கலாம் என்கிறார் அகஸ்தியர். இங்குள்ள கலிதீர்த்த விநாயகரைத்தான் முதலில் தொழ வேண்டும் என்பது மரபு.
சத்தியம் ஓதுவோம் கேளீர் பாருக்குள்ளே ஏதும் சாதிக்கலாம் தர்ப்யராண்யத்துறை மந்தனாரை மகிமையால் பூஜிக்கவே, குட்டமும்நட்டமுந்தீரும். இதய பீடை தவிடு பொடியாகும். பட்ட துயரெலாம் நீராகும். சனி யவனால் மேன்மை யெல்லாஞ் சித்திக்ககாண்பீரே’‘எப்பாவமும் போக்குவான் வழிக்கு துணையாய் இருப்பான் வழக்கின் போக்கை மாற்றுவான் வாழ்வில் சொல்லொணா மேன்மை தருவான் சனி என்னும் இவ்வீசன் குடிகொளும் தர்ப்பரான்யத்தே யிருந்து’ ‘மரகத விடங்கடனால் உன் விதி மாறும் பாரு திண்ணமாய் சொன்னோம் சோதித்து பாரீர்’&என்று பலவாறாக அகஸ்தியர் திருநள்ளார் சனீஸ்வரன் பெருமையைப் பேசுகிறார்.