RightClick

பெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேலப்பெரும்பள்ளம்நம் எல்லோருக்கும் கீழப்பெரும் பள்ளம் தெரியும்.கேதுஸ்தலம் என்பதும்,கேது சார்ந்த தோஷங்கள் நீங்கவும் இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் போய் வழிபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.மேலப்பெரும்பள்ளம்?ஸ்ரீ தோஷம் நீக்கும் ஸ்தலம் என இணையப்பெருங்கடலில் இந்த கோவிலைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.வேறுவிபரங்கள் கிடைக்கவில்லை.எனது ஆன்மீக குருநாதர்களில் ஒருவர் இந்த ஸ்தலம் பற்றி கூற,கூற இப்படி ஒரு கோவில் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.அதுவும் நமது தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கும் பூம்புகாருக்கும் நடுவே ஒரு சிறு கிராமத்தில் வலம்புரநாதராக சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார் என்பது புரிந்தது.இந்த பதிவில் காட்சியளிப்பது மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் தான்.இந்தப் பதிவினை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.சரி! யாரெல்லாம் இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்?முற்பிறவிகளில் பெண்ணை(*மனைவியை/சகோதரியை/தாயை/மகளை/மருகளை *)அவமானப்படுத்தி,அலங்கோலப்படுத்தியவர்கள் இந்த பிறவியில் அதே மாதிரியான அவமானங்களை அனுதினமும் சந்திப்பார்கள்.யாருக்கெல்லாம் அவர்களுடைய பிறந்த ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருக்கின்றதோ அவர்கள் கட்டாயமாக 24 முறை இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்.ராகுவும் சுக்கிரனும் சேர்ந்திருந்து,ராகு திசையோ அல்லது சுக்கிர திசையோ வந்தால் அந்த ஜாதகரின் நிலை என்ன தெரியுமா?சொல்லவே கூச்சமாகத்தான் இருக்கிறது.இருந்தாலும் வேறு வழியில்லை.உரிய ஜாதகர் இனி நிம்மதியாக வாழ வழி காட்டித்தான் ஆக வேண்டும்.ஒருவரது பிறந்த ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருந்து,சுக்கிரதிசையோ அல்லது ராகு திசையோ வந்தால் அவரது முழு உடலும் புகைப்படம் அல்லது வீடியோவாக இணையத்தில் வெளிவந்துவிடும்.சரி,சுக்கிரனும்,ராகுவும் சேர்ந்திருந்து,சுக்கிர திசை அல்லது ராகு திசை வராவிட்டால்? வாழ்க்கையில் ஒருதடவையாவது காமரீதியான அவமானத்தை அடைய வேண்டும்.இந்த சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை இவர்களின் முன் ஜன்மத் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது.இந்த சுக்கிரன் ராகு சேர்க்கையை குருவின் ஏழாம் பார்வை பார்த்தாலும்,குரு சேர்ந்திருந்தாலும் இதே நிலைதான்!இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் எந்த மதமாக இருந்தாலும்,எந்த மொழியாக இருந்தாலும்,எந்த ஜாதியாக இருந்தாலும் மேற்கூறிய கிரக அமைப்புள்ள ஆண்/பெண் பிறந்தால்,அந்த ஜாதகர் உரிய திசையான ராகு திசை அல்லது சுக்கிரதிசை வரும் போது இந்த மகத்தான அவமானத்தை அடைவார்;இந்த திசை வருவதற்கு முன்பாக இந்த கோவிலுக்கு அதிக பட்சமாக 24 முறையும்,குறைந்த பட்சமாக 6 முறையும் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 முதல் 12 க்குள் (ஆமாம் ,இராகு காலத்தில்)108 அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டப்பின்னர், இந்த வலம்புரநாதரின் சன்னிதிக்கு முன்பாக மஞ்சள் பட்டுத்துண்டில் அமர்ந்து 1008 முறை ஓம்சிவசக்திஓம் என ஜபிக்க வேண்டும்.அகல் விளக்குகள் இந்தக் கோவிலில் போதுமான அளவில் இருக்கின்றன.எனவே ,நெய் மட்டும் வாங்கிக்கொண்டு சென்றால் போதுமானது.தவிர,சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருக்க ஒரு பெண் பிறந்திருந்தால்,அந்தப் பெண்ணுக்கு ஒரு தடவையாவது கர்ப்பம் கலையும்.தவிர வாழ்நாளில் ஒரு தடவையாவது காமரீதியான அவமானங்களை அடைந்தாக வேண்டும்.இதே கிரக அமைப்பில் ஒரு ஆண் பிறந்தால்,ஆண்மைக்குறைவுக்கு ஆளாக வாய்ப்பு உண்டு.அல்லது காதலால் அல்லது பெண்ணால் அவமானப்பட வேண்டும்.அப்படி அவமானப்படாமலிக்க இந்த மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் கோவிலுக்கு 24 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வருகை தந்து காலை 11 முதல் 12 மணிக்குள்ளும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளும் நெய் தீபங்கள் ,அகல் விளக்கில் 108 எண்ணிக்கையில் ஏற்றி வழிபட வேண்டும்.மேலும்,எந்த ஒரு பெண் அல்லது ஆணின் பிறந்த ஜாதகத்தில் ,(எந்த ராசியாக இருந்தாலும்,எந்த நட்சத்திரமாக இருந்தாலும்,எந்த லக்னமாக இருந்தாலும்) கன்னி ராசியில் சுக்கிரன்,செவ்வாய்,இராகு சேர்ந்திருந்தால் அல்லது சுக்கிரன்,செவ்வாய்,கேது சேர்ந்திருந்தால் 24 செவ்வாய்க்கிழமைகளும்,12 வெள்ளிக்கிழமைகளும் இங்கு வருகைதந்து 108 நெய் தீபம் அகல் விளக்கு எனப்படும் மண் சட்டியில் ஏற்றிவிட்டு,சன்னதியில் அமர்ந்து 1008 முறை ஓம்சிவசக்திஓம் ஜபிக்க வேண்டும்.இவர்களுக்கு எந்த நேரக்கட்டுப்பாடும் இல்லை;தமிழ்நாட்டில் பல ஆண்களும் பல பெண்களும் பெற்ற தாய் தந்தையாலேயே அவமானப்படுத்தப்படுகின்றனர்.ஆமாம்! எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வயது 25.எம்.எஸ்.ஸி படித்துவிட்டு,வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.21 வயதில் ஒருவனை காதலித்திருக்கிறாள்.22 ஆம் வயதில் இந்த காதல் அவளது அப்பாவுக்குத் தெரிந்திருக்கிறது.அவர் இந்த காதல் பற்றி எதுவுமே சொல்ல வில்லை;எதிர்க்கவுமில்லை;ஆதரிக்கவுமில்லை;இவளோ பயந்துபோய்,தனது காதலனை உதறியிருக்கிறாள்.இவளது அப்பா தனது அலுவலக நண்பர்கள்,தெரு நண்பர்கள்,உறவினர்கள் என எல்லோரிடமும் இந்த 22 வயது மகளைப் பற்றி எவ்வளவு இழிவாகப் பேச முடியுமோ,அவ்வளவு இழிவாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்.இப்போது அந்த பெண்ணுக்கு வயது 27.பெற்ற அப்பாவே இப்படி அவதூறு பரப்புவதால்,அந்தப் பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.இவரது ஜாதகத்தினைப் பார்த்தப்பின்னர்தான் காரணமும்,இவரது முன் ஜன்ம ரகசியங்களும் புரிந்தது. பரிகாரமாக இந்தக் கோவிலுக்குச் செல்லும்படி வழிகாட்டிட,4 தடவை மட்டுமே இந்தப் பெண் தனது அம்மாவுடன் மிகுந்த போராட்டத்துக்கிடையே போயிருக்கிறாள்.தற்போது மிகச்சிறந்த கணவன் அமைந்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக இந்தப் பரிகார வழிபாட்டு முறையை நமது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.மனிதனாகப் பிறந்த யாராக இருந்தாலும்,தான் செய்த தவறுக்கு மனதார வருந்தி,உரிய பரிகார வழிபாட்டைச் செய்தால் மட்டுமே கிரகங்கள் தீமைகளைக்குறைக்கும்; ‘கடமைக்கே’ என்றோ அல்லது ஜாலி ட்ரிப்பாக செய்தால் பலனில்லை;மேலப்பெரும்பள்ளம் செல்வது எப்படி?மயிலாடுதுறை ,சீர்காழி , பூம்புகார் இந்த மூன்று ஊர்களும் முக்கோணமாக அமைந்திருக்கின்றன.இந்த முக்கோணத்துக்கு நடுவே அமைந்திருக்கிறது.மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் மேலையூரில் இறங்க வேண்டும்.அங்கிருந்து ஆட்டோ பிடித்து செல்ல வேண்டும்.அல்லது சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் என்னுமிடத்தில் இறங்க வேண்டும்.இங்கிருந்தும் ஆட்டோவில் செல்லலாம்.கோவிலின் அருகிலேயே கோவில் காவலாளியின் வீடு அமைந்திருக்கிறது.பல மகான்களும்,சித்தர்களும் சூட்சுமமாக இந்த கோவிலுக்கு அடிக்கடி வருகைதந்து வழிபட்டு வருகின்றனர்.கோவிலின் ஸ்தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது.கோவிலின் உள்ளே ஒரே சன்னதியில் நம்மை இயக்கும் சனிபகவானும்,அவரது குருவும் பிரபஞ்சத்தை இயக்கும் கால பைரவரும் காட்சியளித்துவருகின்றனர்.ஒரு முறை போய்வருவது நல்லது.கோவிலை ஒட்டி ஒரு டீக்கடை கூட கிடையாது.எனவே, அருகில் இருக்கும் ஊரிலேயே அனைத்துப் பொருட்களையும் வாங்கிச் செல்லவும்.இன்னொரு சுலப வழி உண்டு.கீழப்பெரும் பள்ளம் செல்லவும்.அங்கிருந்து ஆட்டோ பிடித்தும் செல்லலாம்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ