RightClick

பள்ளிகளில் பாடமாக பகவத் கீதை

நடப்பு கல்வியாண்டில் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பகவத் கீதை பாடம் போதிக்கப்பட இருக்கிறது.இதற்கான பாடங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.இது மத்தியப்பிரதேச மாநிலத்தில் திரு.சிவராஜ்சிங் தலைமையிலான பா.ஜ.கட்சி அரசு இந்த முடிவெடுத்துள்ளது.இந்துக்கள் அல்லாதோர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால்,பகவத்கீதையை பாடமாக போதிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அந்த மாநில அரசு உறுதியாக இருக்கிறது.ஆதாரம்:தினமணி 2.7.11.விஜயபாரதம் பக்கம் 8,23.9.11ஆன்மீகக்கடலின் கருத்து:பன்னாட்டு நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கும்,புதிய நிர்வாகிககளை தயார் செய்வதற்கும் பகவத் கீதையை பயன்படுத்தத் துவங்கி 20 ஆண்டுகளாகிவிட்டன.இந்த முடிவு தாமதமான முடிவு.பெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேலப்பெரும்பள்ளம்நம் எல்லோருக்கும் கீழப்பெரும் பள்ளம் தெரியும்.கேதுஸ்தலம் என்பதும்,கேது சார்ந்த தோஷங்கள் நீங்கவும் இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் போய் வழிபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.மேலப்பெரும்பள்ளம்?ஸ்ரீ தோஷம் நீக்கும் ஸ்தலம் என இணையப்பெருங்கடலில் இந்த கோவிலைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.வேறுவிபரங்கள் கிடைக்கவில்லை.எனது ஆன்மீக குருநாதர்களில் ஒருவர் இந்த ஸ்தலம் பற்றி கூற,கூற இப்படி ஒரு கோவில் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.அதுவும் நமது தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கும் பூம்புகாருக்கும் நடுவே ஒரு சிறு கிராமத்தில் வலம்புரநாதராக சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார் என்பது புரிந்தது.இந்த பதிவில் காட்சியளிப்பது மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் தான்.இந்தப் பதிவினை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.சரி! யாரெல்லாம் இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்?முற்பிறவிகளில் பெண்ணை(*மனைவியை/சகோதரியை/தாயை/மகளை/மருகளை *)அவமானப்படுத்தி,அலங்கோலப்படுத்தியவர்கள் இந்த பிறவியில் அதே மாதிரியான அவமானங்களை அனுதினமும் சந்திப்பார்கள்.யாருக்கெல்லாம் அவர்களுடைய பிறந்த ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருக்கின்றதோ அவர்கள் கட்டாயமாக 24 முறை இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்.ராகுவும் சுக்கிரனும் சேர்ந்திருந்து,ராகு திசையோ அல்லது சுக்கிர திசையோ வந்தால் அந்த ஜாதகரின் நிலை என்ன தெரியுமா?சொல்லவே கூச்சமாகத்தான் இருக்கிறது.இருந்தாலும் வேறு வழியில்லை.உரிய ஜாதகர் இனி நிம்மதியாக வாழ வழி காட்டித்தான் ஆக வேண்டும்.ஒருவரது பிறந்த ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருந்து,சுக்கிரதிசையோ அல்லது ராகு திசையோ வந்தால் அவரது முழு உடலும் புகைப்படம் அல்லது வீடியோவாக இணையத்தில் வெளிவந்துவிடும்.சரி,சுக்கிரனும்,ராகுவும் சேர்ந்திருந்து,சுக்கிர திசை அல்லது ராகு திசை வராவிட்டால்? வாழ்க்கையில் ஒருதடவையாவது காமரீதியான அவமானத்தை அடைய வேண்டும்.இந்த சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை இவர்களின் முன் ஜன்மத் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது.இந்த சுக்கிரன் ராகு சேர்க்கையை குருவின் ஏழாம் பார்வை பார்த்தாலும்,குரு சேர்ந்திருந்தாலும் இதே நிலைதான்!இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் எந்த மதமாக இருந்தாலும்,எந்த மொழியாக இருந்தாலும்,எந்த ஜாதியாக இருந்தாலும் மேற்கூறிய கிரக அமைப்புள்ள ஆண்/பெண் பிறந்தால்,அந்த ஜாதகர் உரிய திசையான ராகு திசை அல்லது சுக்கிரதிசை வரும் போது இந்த மகத்தான அவமானத்தை அடைவார்;இந்த திசை வருவதற்கு முன்பாக இந்த கோவிலுக்கு அதிக பட்சமாக 24 முறையும்,குறைந்த பட்சமாக 6 முறையும் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 முதல் 12 க்குள் (ஆமாம் ,இராகு காலத்தில்)108 அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டப்பின்னர், இந்த வலம்புரநாதரின் சன்னிதிக்கு முன்பாக மஞ்சள் பட்டுத்துண்டில் அமர்ந்து 1008 முறை ஓம்சிவசக்திஓம் என ஜபிக்க வேண்டும்.அகல் விளக்குகள் இந்தக் கோவிலில் போதுமான அளவில் இருக்கின்றன.எனவே ,நெய் மட்டும் வாங்கிக்கொண்டு சென்றால் போதுமானது.தவிர,சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருக்க ஒரு பெண் பிறந்திருந்தால்,அந்தப் பெண்ணுக்கு ஒரு தடவையாவது கர்ப்பம் கலையும்.தவிர வாழ்நாளில் ஒரு தடவையாவது காமரீதியான அவமானங்களை அடைந்தாக வேண்டும்.இதே கிரக அமைப்பில் ஒரு ஆண் பிறந்தால்,ஆண்மைக்குறைவுக்கு ஆளாக வாய்ப்பு உண்டு.அல்லது காதலால் அல்லது பெண்ணால் அவமானப்பட வேண்டும்.அப்படி அவமானப்படாமலிக்க இந்த மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் கோவிலுக்கு 24 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வருகை தந்து காலை 11 முதல் 12 மணிக்குள்ளும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளும் நெய் தீபங்கள் ,அகல் விளக்கில் 108 எண்ணிக்கையில் ஏற்றி வழிபட வேண்டும்.மேலும்,எந்த ஒரு பெண் அல்லது ஆணின் பிறந்த ஜாதகத்தில் ,(எந்த ராசியாக இருந்தாலும்,எந்த நட்சத்திரமாக இருந்தாலும்,எந்த லக்னமாக இருந்தாலும்) கன்னி ராசியில் சுக்கிரன்,செவ்வாய்,இராகு சேர்ந்திருந்தால் அல்லது சுக்கிரன்,செவ்வாய்,கேது சேர்ந்திருந்தால் 24 செவ்வாய்க்கிழமைகளும்,12 வெள்ளிக்கிழமைகளும் இங்கு வருகைதந்து 108 நெய் தீபம் அகல் விளக்கு எனப்படும் மண் சட்டியில் ஏற்றிவிட்டு,சன்னதியில் அமர்ந்து 1008 முறை ஓம்சிவசக்திஓம் ஜபிக்க வேண்டும்.இவர்களுக்கு எந்த நேரக்கட்டுப்பாடும் இல்லை;தமிழ்நாட்டில் பல ஆண்களும் பல பெண்களும் பெற்ற தாய் தந்தையாலேயே அவமானப்படுத்தப்படுகின்றனர்.ஆமாம்! எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வயது 25.எம்.எஸ்.ஸி படித்துவிட்டு,வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.21 வயதில் ஒருவனை காதலித்திருக்கிறாள்.22 ஆம் வயதில் இந்த காதல் அவளது அப்பாவுக்குத் தெரிந்திருக்கிறது.அவர் இந்த காதல் பற்றி எதுவுமே சொல்ல வில்லை;எதிர்க்கவுமில்லை;ஆதரிக்கவுமில்லை;இவளோ பயந்துபோய்,தனது காதலனை உதறியிருக்கிறாள்.இவளது அப்பா தனது அலுவலக நண்பர்கள்,தெரு நண்பர்கள்,உறவினர்கள் என எல்லோரிடமும் இந்த 22 வயது மகளைப் பற்றி எவ்வளவு இழிவாகப் பேச முடியுமோ,அவ்வளவு இழிவாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்.இப்போது அந்த பெண்ணுக்கு வயது 27.பெற்ற அப்பாவே இப்படி அவதூறு பரப்புவதால்,அந்தப் பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.இவரது ஜாதகத்தினைப் பார்த்தப்பின்னர்தான் காரணமும்,இவரது முன் ஜன்ம ரகசியங்களும் புரிந்தது. பரிகாரமாக இந்தக் கோவிலுக்குச் செல்லும்படி வழிகாட்டிட,4 தடவை மட்டுமே இந்தப் பெண் தனது அம்மாவுடன் மிகுந்த போராட்டத்துக்கிடையே போயிருக்கிறாள்.தற்போது மிகச்சிறந்த கணவன் அமைந்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக இந்தப் பரிகார வழிபாட்டு முறையை நமது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.மனிதனாகப் பிறந்த யாராக இருந்தாலும்,தான் செய்த தவறுக்கு மனதார வருந்தி,உரிய பரிகார வழிபாட்டைச் செய்தால் மட்டுமே கிரகங்கள் தீமைகளைக்குறைக்கும்; ‘கடமைக்கே’ என்றோ அல்லது ஜாலி ட்ரிப்பாக செய்தால் பலனில்லை;மேலப்பெரும்பள்ளம் செல்வது எப்படி?மயிலாடுதுறை ,சீர்காழி , பூம்புகார் இந்த மூன்று ஊர்களும் முக்கோணமாக அமைந்திருக்கின்றன.இந்த முக்கோணத்துக்கு நடுவே அமைந்திருக்கிறது.மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் மேலையூரில் இறங்க வேண்டும்.அங்கிருந்து ஆட்டோ பிடித்து செல்ல வேண்டும்.அல்லது சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் என்னுமிடத்தில் இறங்க வேண்டும்.இங்கிருந்தும் ஆட்டோவில் செல்லலாம்.கோவிலின் அருகிலேயே கோவில் காவலாளியின் வீடு அமைந்திருக்கிறது.பல மகான்களும்,சித்தர்களும் சூட்சுமமாக இந்த கோவிலுக்கு அடிக்கடி வருகைதந்து வழிபட்டு வருகின்றனர்.கோவிலின் ஸ்தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது.கோவிலின் உள்ளே ஒரே சன்னதியில் நம்மை இயக்கும் சனிபகவானும்,அவரது குருவும் பிரபஞ்சத்தை இயக்கும் கால பைரவரும் காட்சியளித்துவருகின்றனர்.ஒரு முறை போய்வருவது நல்லது.கோவிலை ஒட்டி ஒரு டீக்கடை கூட கிடையாது.எனவே, அருகில் இருக்கும் ஊரிலேயே அனைத்துப் பொருட்களையும் வாங்கிச் செல்லவும்.இன்னொரு சுலப வழி உண்டு.கீழப்பெரும் பள்ளம் செல்லவும்.அங்கிருந்து ஆட்டோ பிடித்தும் செல்லலாம்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

பத்திரகாளியின் அருளைப்பெற நாம் செய்யவேண்டியதுஇந்த பதிவின் ஒரு பகுதியாக இருப்பது பத்திரகாளியம்மாளின் புகைப்படம்.சென்ற ஆவணிமாதம் பவுர்ணமிபூஜையன்று,பவுர்ணமி பூஜை நிறைவடைந்த நேரத்தில் எடுக்கப்பட்டது இந்தப்புகைப்படம்.

இதை உங்களின் கணினியின் முகப்பை அலங்கரிக்கும் விதமாக வைத்துக்கொள்ளலாம்;அல்லது இதை கலர் இங்க் ஜெட் பிரிண்டர் மூலமாக பிரிண்ட் எடுத்து ,ஃபிரேம் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

தினமும் காலையில் குளித்து,வேலைக்கு அல்லது தொழிலகத்துக்குப் புறப்படும் முன்பாக இந்த பத்திரகாளியம்மாளின் போட்டோவின் முன்பாக நின்று கொண்டு(முடியாதவர்கள் அமர்ந்துகொண்டு) மனதுக்குள் உங்களுக்கு என்ன வேண்டும்? என்பதை வேண்டுங்கள்.(இந்தக் கோரிக்கையை எவரிடமும் எக்காரணம் கொண்டும் பகிர்ந்துகொள்ளக் கூடாது)

15 நாட்கள் கடந்ததும் என்ன உணருகிறீர்கள்?        

45 நாட்கள் கடந்தபின்னர் என்ன நடக்கிறது?         

90 நாட்கள் கடக்கும் முன்பாக,நீங்கள் புரிந்துகொண்டது என்ன? ஆன்மீகக்கடலுக்கு எழுதுங்கள்.

குதர்க்கம் பேசும் நாத்திகக் கிறுக்கர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? அவனுங்களால் அவனுங்களுக்கே பிரயோஜனம் கிடையாது.நாம் நமது உள் நோக்கிய ஆன்மீகப் பயணத்தை,ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியை வீட்டிலிருந்தே வழிபடுவதன் மூலமாக ஆரம்பிப்போம்.

கொஞ்சம் காதைக் கொடுங்கள்:ஒரு மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளிகோவில் பவுர்ணமிபூஜைக்கு வந்து கலந்து கொண்டாலே,அடுத்த நாளிலிருந்தே,நமது வாழ்க்கையில் அதிரடியான / நாம் எதிர்பார்க்கும் மாறுதல்கள் நடைபெற்றுவருகின்றன. 

துவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்
நமது சொந்த ஊரில் தினமும் 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் (ஒரு வேளை நாம்) செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ,அதே அளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளன்று அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.காசியில் தங்கி ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.துவாதசி திதியன்று திரு அண்ணாமலையில் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால்,காசியில் நாம்,நமது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்தளவுக்குப் புண்ணியம் கிடைத்துவிடும்.அதுபோக,நமக்கு மறுபிறவியில்லாத முக்தியும் கிடைத்துவிடும் என்று சிவமகாபுராணம் தெரிவிக்கிறது.24.9.2011 அன்று சனிக்கிழமையன்று துவாதசி திதி வருகிறது.இந்த நாளானது மஹாளய பட்சம்(பட்சம் என்றால் தூய தமிழில் அரை மாதம் அல்லது 14 நாட்கள் என்று பெயர்.எனவே, ஆன்மீகக்கடல் வாசகர்கள்,இந்தப்பதிவு மூலமாக 24.9.2011 சனிக்கிழமை வரும் துவாதசி திதியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பீர்கள்.நமது ஆன்மீகக்கடல் அறக்கட்டளை மூலமாக இந்த புனிதமான நன்னாளில் ,திரு அண்ணாமலையில் அன்னதானமும்,வஸ்திர தானமும்,பழதானமும் செய்யப் போகிறேன்.மேலும்,இந்த நாளையொட்டி ஐந்து கிலோ நவதானியங்களை வாங்கி திரு அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் மனித காலடி படாத இடங்களில் தூவப்போகிறேன்.அண்ணாமலைக்கு வருகிறீர்களா நமது பித்ருக்கடன்களை சுலபமாகவும்,நிறைவாகவும் தீர்ப்பதற்கு?இந்த வாய்ப்பை எனக்கு அளித்த எனது ஆன்மீக குரு புளியங்குடி சிவமாரியப்பன்  அய்யா அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

மஹாளய அமாவாசை என்றால் என்ன?பித்ருக்களுக்காகவே 14 நாட்கள் நோன்பிருந்து,அந்தந்த நாட்களுக்குரிய பித்ரு பூஜைகளை செய்துகொண்டிருந்த நம் அனைவரையும் மேல் உலகில் இருக்கும் அனைத்து பித்ருக்களும் ஆசி கூற ஆவலுடன் நம் அருகில் வந்து நிற்கும் புண்ணிய நாள் மஹாளய அமாவாசை நாள்(26.9.11 திங்கள்) ஆகும்.இந்த 14 நாட்களில் தாம்பத்தியம் செய்யக்கூடாது;காமரீதியான நடவடிக்கைகளை கட்டாயம் நிறுத்திட வேண்டும்.இது நமது முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதை ஆகும்.பிதுர்கள் எனப்படும் பித்ருக்கள் நம்மை ஆசிர்வாதித்தப்பின்னர்தான்,அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை என்னவென்று கூறுவது.பூமியில் பிறந்த எந்த ஜாதி,மதம்,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அவரவர் கட்டாயமாக இந்த நாளில் தானிய வகைகள்,கரும்பு,அன்னம்(சோறு),பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும்.புளியங்குடி சிவமாரியப்பன் ஐயா அவர்களின் ஆய்வு முடிவுப்படி,ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால்,14 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.பலரது பிறந்த ஜாதகப்படி,பலவித யோகங்கள் இருந்தாலும்,கடன் அல்லது நோய் அல்லது விபச்சாரம் அல்லது சோரம் போகுதல் அல்லது வாழ்க்கைத்துணைக்குத் துரோகம் செய்தல் அல்லது மீளாத பிரச்னைகளில் மாட்டுதல் =இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளால் உலகிற்கு நாகரீகம் கற்றுத்தந்த நம் தமிழினம் தற்போது நாத்திகம் என்னும் நரகலால் பித்ரு தர்ப்பணத்தின் பெருமையை உணராமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது.நாத்திகம் பேசும் நமது தலைவன்கள்,திருட்டுத்தனமாக பித்ரு தர்ப்பணங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.எவ்வளவு சுயநலம்? தனது தொண்டர்கள் மீது எவ்வளவு அக்கறை?சரி போகட்டும்.நாம் இந்த மஹாளயபட்சத்தன்று(26.9.11 திங்கள்) செய்ய வேண்டியது என்ன?நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும்,சுக்கிரவிரல் எனப்படும் கட்டைவிரலுக்கும் இடையே சுக்கிர ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது.அங்கிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை சென்றடைகிறது.மஹாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது.நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள்.அதனால் வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.தர்ப்பண காரியங்கள் செய்யும் ஆண்களுக்கு துணையாக பெண்கள் உதவி புரிய வேண்டும்.மனைவியின் அனுமதியை தர்ப்பண பூஜைகளை நிகழ்த்த ஆண்கள் பெற வேண்டும்.அப்பொழுதுதான் தர்ப்பண நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.மகரிஷிகள்,சித்தர்களின் ஆசி கைகூடும்.பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும்.இந்த 15 நாட்களில்(12.9.11 முதல் 26.9.11 வரை) தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள்,புரட்டாசி அமாவாசை எனப்படும் மஹாளயபட்ச அமாவாசை நாளான 26.9.11 அன்று மட்டுமாவது அரிசி,கோதுமை,துவரம் பருப்பு,உளுந்தம்பருப்பு,ரவை,மைதா,கனிகள்,சாத வகைகள்,உலர்ந்த கனிகள்,ஆடைகள்,பாதணிகள்,ஆபரணங்கள் தானம் அளிக்கலாம்.வசதியுள்ளவர்கள் ராமேஸ்வரம் முதலான சிவாலயங்களில் செய்யலாம்;சராசரி மக்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம்.அயல்நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம்;இது எதுவும் முடியாதவர்கள்,நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள்(எந்த ரகமாக இருந்தாலும்) அளிக்கவேண்டும்.இதை புரட்டாசி அமாவாசை நாளில்தான் செய்ய வேண்டும் என்றில்லை;இன்று 21.9.11 மட்டும் அல்லது 21.9.11 முதல் 26.9.11 வரை தினமும் அல்லது 26.9.11 மட்டும் செய்யலாம்.ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு மட்டுமே ஒரு சிறப்பு ஆன்மீகப் பரிசு:24.9.2011 சனிக்கிழமை அன்று துவாதசி திதி வருகிறது.இந்த நாளில் திரு அண்ணாமலையில் அன்னதானம் செய்தால்,நூறு ட்ரில்லியன் கோடி கோடி கோடி புண்ணியம் நமது பித்ருக்களின் ஆசியால் நமக்குக் கிடைக்கும்.வருகிறீர்களா அண்ணாமலைக்கு? என்னை அங்கே சந்திக்கலாம்.படத்தில் இருப்பது நமது முன்னோர்களின் வடிவமாகிய அண்டங்காக்கை.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


பணம் நிறைய வர ஒரு யோசனை

மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள்.இவர்கள் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறையும்.இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.இந்த தெய்வீக ரகசியம் கடந்த 20 நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டிருந்தது.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்குத் தந்தருளியவர் புளியங்குடி சகஸ்ரவடுகர் அவர்கள்!!!

1.நமது முன் ஜன்ம வினைகள் நமது பிறந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.அந்த கடுமையான கர்மவினைகளே திருமணத் தாமதம்,படிப்புக்கேற்ற/திறமைக்கேற்ற/அனுபவத்திற்கேற்ற சம்பளம் கிடைக்காமை,குடும்ப ஒற்றுமையின்மை என ஏதாவது ஒரு குறையிருக்கும்.இந்தக் குறை நீங்கத்துவங்கும்.அதாவது ஒரே நேரத்தில் நமது கஷ்டங்கள் குறையும்;அப்படி குறையக் குறைய வருமானம் அதிகரிக்கும்.

2.நமக்கு வர வேண்டிய பணம் தானாகவே வரத்துவங்கும்.

3.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமளவுக்கு நமக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

4. இதுவரையில்லாத அளவுக்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி அல்லது தொழில் வளர்ச்சி அல்லது வியாபார முன்னேற்றம் அல்லது குடும்ப ஒற்றுமை(எது நமது ஏக்கமோ அந்த ஏக்கம் தீரத்துவங்கும்) ஏற்படும்.

நாளை தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கிறது.நாளை ராகு காலம் மாலை 3.00 முதல் மாலை 4.30 வரை வருகிறது.செவ்வாய்க்கிழமை இல்லையா?

தமிழ்நாட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கும் கோவில்களின் பட்டியல் மீண்டும் ஒருமுறை:

1.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10 வது கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.

2.தேவக்கோட்டை அருகில் தபசு மலையில் இருக்கிறார்.

3.காரைக்குடி அருகே இலுப்பைக்குடியில் இருக்கிறார்.

4.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜாரில் தனி கோவிலில் அருள் பாலித்துவருகிறார்.

5.சிதம்பரத்தில் இருக்கிறார்.

6.காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் இருக்கிறார்.

7.சென்னை தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.

தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்தக் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தால்,செல்வச் செழிப்பின் உச்சத்தை அடைய முடியும்.

ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமிக்குச் சென்று வந்தாலே,அடுத்த ஒரு மாதத்திற்குள் எதிர்பாராத (நியாயமான)வருமானம் கிடைக்கிறது அல்லது நீண்டகாலக் கடன் தீர்ந்துவிடுகிறது.டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா?

பின்குறிப்பு:தமிழ் பேசத் தெரிந்த ஒவ்வொருவரும் செல்வச் செழிப்போடும்,வறுமையின்றியும் கர்மவினையின்றியும் ,நிம்மதியோடும் வாழ வேண்டும்.அதற்காகவே இந்தப் பதிவு!!!

பசியோடு தினமும் போராடுபவனுக்கு ஆன்மீகத்தைப் போதிப்பதால் என்ன பயன்?

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


சிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்?ஜவஹர்லால்நேருவின் தங்கை க்ருஷ்ணா அதிசிங் அவரின் நூல் “நினைவு கசப்பல்ல”தில் படித்த நினைவு;தம்முடைய அண்ணனைக் காண சிறைக்குச் செல்கிறார்.அவருக்கு அளித்துள்ள பொருட்களை கவனிக்கும்போது கண்ணீர் வடிக்கிறார்.இரண்டே இரண்டு சோபாக்கள்,ஒரே ஒரு கட்டில்,நாலே நாலு நாற்காலிகள் போன்றவை!விநாயக தாமோதர சாவர்க்கரின் கை,கால்களில் மாடுமாதிரி இரும்புச்சங்கிலிகளை மாட்டி செக்கிழுத்து தேங்காய் எண்ணெயை எடுக்க நாள்தோறும் 10 மணி நேரம் இழுத்தார்.சரியான உணவின்றி ‘க்ஷயரோக’பிடித்தவர் மாதிரி,விடுதலைக்கு வழியின்றி,பேசக்கூட மனித சகவாசமின்றி ; ஈ,கொசுக்கடிகளை அந்தமானின் சுட்டெரிக்கும் வெயிலில் சிறை அனுபவித்தவர்.இந்தியாவுக்கு விடுதலை வந்தது1947 இல் நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தது 1948 இல்.

பி.ஏ.ஆனர்ஸ் மொழிபத்திரிகை படிப்பு முடியும் வரை(1956 இல்)வரை கன்னடம்,ஆங்கிலம் பாடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு,அல்லது மோதிலால் நேருவின் தியாக வாழ்க்கை அல்லது கமலா நேருவின் லட்சிய வாழ்நாள் இப்படி நேருக்குடுமத்தைப் பற்றி பாடங்கள் இல்லாத வருடங்களில்லை;

பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களிலும் எல்லா மாணவ மாணவியரின் மனதில் நேரு கதைகளை திணிக்கும் இம்சை தொடர்ந்து நடத்தினர்.இதை தலையில் நிரப்பிவிட்டால் அதைக் கற்று நாட்டில் ஆசிரியராவர்கள்,பேராசிரியர்கள் செய்திகல் மூலம் ஹரிகதையைப் போல நேருவின் மகிமையைப் பற்றி வருங்கால இந்தியர்களுக்கு விதைக்கிறார்கள்.சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் தியாகங்களை அறியும் வாய்ப்பு(இதே போல நமது வ.உ.சி.அவர்களின் வாழ்க்கை மற்றும் எத்தனையோ தேசபக்தர்களின் ரத்த வாழ்க்கையை விவரிப்பதில்லை) எதிர்கால இந்தியர்களூக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ் திறமையாக வே செயல்படுகிறது.எஸ்.எட்.பைரப்பா விஜயகர்நாடகா 17.9.2004. ஆதாரம்:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்149.


இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”
‘காந்தி கொலையில் சாவர்க்கரின் கைவரிசை உண்டு’ என்று பாடும் பாட்டு புதிதல்ல;இதில் சாவர்க்கருக்கு சம்பந்தம் கிடையாதென்று நீதிமன்றமே விடுதலை செய்தது.காங்கிரஸ் ஏஜண்டுகளாக வாழும் சில புத்திசாலிகள் நம்பமுடியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் கல் எறிந்து தேசபக்தியை காட்டினர்.சாவர்க்கரின் தம்பி நாராயணராவ் கல்வீச்சில் கடுமையாகத் தாக்கப்பட்டார்.அன்றைக்கு சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ‘இந்த கொலையில் சாவர்க்கரின் பங்கு இல்லை’ என்று நேருவிடம் கூறினார்.இருந்தும் நேரு கேட்கவில்லை;1948 மார்ச் 11 ஆம் தேதி ஒரு குற்றவாளி ஆக்கப்பட்டார்.வழக்கறிஞர் போபட் அவர்களுக்கு விவரம் கிடைத்தது.வீரசாவர்க்கர் நிரபராதி என்று தனி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.மேல்முறையீட்டு முயற்சியை தைரியமில்லாமல் கைவிட்டார் ஜவஹர்லால் நேரு.நாட்டின் முதல் குடியரசு நாளின் கொண்டாட்டத்திற்கு சாவர்க்கருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று நேரு நினைக்கவே இல்லை.பிரிட்டிஷ் அரசாங்கம் வசப்படுத்திக் கொண்ட சாவர்க்கரின் வீட்டை அவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லை;ஆனால்,இதே நேரு 1950 ஏப்ரல் 4 இல் பாகிஸ்தான் தலைவர் லியாகத் அலி நம் நாட்டிற்கு வந்தபோது சாவர்க்கரை ‘சட்ட ஒழுங்கு’பிரச்னையைக் காரணம் காட்டி கைது செய்ய மறக்க வில்லை;சாவர்க்கரின் நண்பர்கள் கவுரவபூர்ணமாக ‘ம்ருத்யுஞ்ச நாள்’ கொண்டாடியதை வானிலை ஒலிபரப்பு செய்யாமல் இருக்க நேரு தடுத்தார்.அந்தமான் செல்லூலார் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்ட அறையை தரைமட்டமாக்கிட முயன்றார்.நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.கணேசவரின் எதிர்ப்பினார் கைவிட்டார் நேரு.சாவர்க்கரின் வாழ்நாளின் கடைசி நாட்களில்(இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னரும்) சி,ஐ,டிக்கள் வேலை செய்தனர்.கடைசியில் 1966 பிப்ரவர் 26 அன்று சாவர்க்கர் வீரமரணத்தைத் தழுவியபோது கூட சவப்பெட்டி(கன் கேரேஜ்) கிடைக்காமல் செய்தவர் இந்த ஜவஹர்லால் நேரு.உடலைக் கொண்டு செல்ல கன் கேரேஜை ஏற்பாடு செய்தவர் சினிமா நடிகர் வி.சாந்தாராம் ஆவார்.சாவர்க்கரின் இறுதி ஊர்வலத்தில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை; நாடாளுமன்றத்தில் ‘கண்ணீர் அஞ்சலி’ செலுத்தக்கூட அனுமதியளிக்க வில்லை;உறுப்பினரல்லாதவர்கள்(எம்.பி.இல்லாதவர்கள்) நாடாளுமன்றத்தில் கண்ணீர் அஞ்சலி செய்ய அவசியமில்லை என்றார் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் உக்கும் சிங்.ஆனால்,ரஷ்யாவின் அதிபர் ஸ்டாலின் மரணமடைந்தபோது,இந்தியப்பாராளுமன்றம் கண்ணீர் சிந்தியது.இப்போது சொல்லுங்கள் நேரு போன்றவர்களே இப்படி சிறு மனப்பான்மையில் ஊன்றி இருந்தபோது,அவர் குடும்பத்தின் வாலாக இருக்கும் மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் பேசியது தவறா?

‘விஸ்வேஸ்வரபட் நூற்றெட்டு பேச்சு’ பக்கத்தில் விஜயகர்நாடகா 16.9.2004.நன்றி:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்148,எழுதியவர் பேராசிரியர் தச்சம்பட்டு திரு.கே.பழநி(கிரிவலப்பிரியன்) வெளியீடு:ராஷ்ட்ரீய சாகித்ய சங்கமம்,கேசவன்குடில்,தச்சம்பட்டு-606806.திருவண்ணாமலை மாவட்டம்.விலை ரூ.60/-


ஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:18.9.11இந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்?!:ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்!“அஞ்சு வருஷம் எம்.எல்.ஏவா இருந்தார்.நல்லா சம்பாதிச்சார்” என்றுதானே நாமே சொல்கிறோம். ‘அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே!

இந்தப்பொறுப்பு உணர்வு அற்றதன்மைதான் அனைத்துக்கும் காரணம். ‘ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள்.எனவே,அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!ஆன்மீகக்கடலின் கருத்து:நாமே பிராடாக இருந்தால்,நம்மை ஆளும் நமது தலைவர்கள் யோக்கியமாகவா இருப்பார்கள்??:தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்?!: அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்!?:கச்சத்தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.க்ருஷ்ணா கூறியிருப்பது குறித்து?!:எஸ்.எம்.க்ருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே! தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்திருக்கலாம்.ஆன்மீகக் கடலின் கருத்து: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோது,இந்த அமைச்சர் கொந்தளித்ததும் எனக்கு மைல்டாக டவுட்டு வந்தது.இந்திய அமைச்சரவை எப்போதுமே பிரச்னையைக் கண்டு பயப்படுமே? எதுவுமே செய்யாதே? எப்படி இந்த அமைச்சர் மட்டும் இப்படி தன்மானத்தோடு வீறிட்டு எழுகிறார் என எனது வட நாட்டு நட்பு வட்டத்தில் விசாரித்துப் பார்த்தால்,உண்மை தெரிந்தது.

ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டும்,அடிவாங்கியும் தவித்த அனைத்து மாணவர்களும் வட இந்தியா மாணவர்களாம்.ஆக,வட இந்திய மீனவர்கள்,இலங்கைக் கடற்படையிடம் அடிவாங்கினால்தான் இந்த மந்திரிக்கு அறிவு வருமா?

?:முதல்வரைப் பாராட்டி சீமான்(சைமன் என்பது நிஜப்பெயர்) நடைபயணம் கிளம்பியதும்,பாராட்டு விழா நடத்தியதும் பற்றி?!: மூன்று தமிழர்களை முழுமையாக மீட்டபிறகு ,நிச்சயமாகச் செய்யலாம்.காரியம் முடியாவிட்டால்,பின்னோக்கி நடக்க முடியாது.

சைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி?

பசுவின் சாணத்தை உருண்டையாகப்பிடித்து வெயிலில் 3 அல்லது 4 நாட்கள் உலர்த்த வேண்டும்;உலர்ந்த உருண்டைகளை மூடக்கூடிய அளவுக்கு நெல் உமியைக் குவித்து தீக்கனல் இட வேண்டும்.இதற்குப் பெயர்தான் புடம் போடுதல்!!!மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு அவை நன்றாக நீர்த்து இருக்கும்.உமியும்,சாணியும் சாம்பலாகி இருக்கும்.உமிச்சாம்பலை நீக்கிவிட்டு,நீறு இருக்கும் சாணி உருண்டைகளை எடுத்து துணியினால் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.இதுவே சைவ முறையிலான விபூதி அல்லது திருநீறு ஆகும்.எந்தப் பொருளையும் நெருப்பிலிட்டுச் சுட்டால் கருமை நிறமாக மாறும்(சங்கு மட்டும் விதிவிலக்கு);ஆனால்,கருப்பு நிறமான சாணி/சாணம் உருண்டையை நெருப்பிலிட்டு எரித்தால் அது வெண்மை நிறமாக மாறிவிடுகிறது.இந்தியா,தமிழ்நாடு,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் கே.பி.எஸ்.செல்வக்குமார் என்பவர்27.1.2010 முதல் சைவமுறைப்படி(மேற்கூறிய முறைப்படி) விபூதி தயாரித்து,ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவிலுக்கு (மாதம் ஒன்றுக்கு 18 கிலோ)வழங்கி வருகிறார்.இந்த சைவ விபூதியை நாமும் விலைக்கு வாங்கலாம்.ரூ.150/-செலுத்தினால்,(ஓராண்டுக்கு) மாதம் தோறும் விபூதி கூரியரில் பெற்றுக்கொள்ளலாம்.வெளிநாட்டு அன்பர்கள் இவரது செல் போனில் பேசி எவ்வளவு என்பதை உறுதி செய்துகொண்டு,பெற்றுக்கொள்ளலாம்.K.P.S.செல்வக்குமார்,இந்து கலாச்சார விரிவாக்க மையம்,கே.பி.எஸ்.நகை மாளிகை,47,நேதாஜி ரோடு,ஸ்ரீவில்லிபுத்தூர்-626125.விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா.போன்:04563-261274. செல் எண்:94428 40524.நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 7

எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.

நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. அப்படிக் கேட்டு விடும் போது அந்த நேரத்தில் கிடைக்கின்ற திருப்தியே அலாதி என்றாலும் அப்படிக் கேட்டு விட்டு என்றென்றுமாய் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பகைத்துக் கொள்கிறோம் என்பதைப் பலரும் மறந்து விடுகிறோம்.

யாருமே குற்றமற்றவர்கள் அல்ல. எல்லோரும் ஏதாவது சில சமயங்களில் பலவீனர்களாகவே இருந்து விடுகிறோம். பலரும் ஒருசில விஷயங்களில் எப்போதுமே பலவீனர்களாகவே இருக்கிறோம். சிலவற்றை காலப் போக்கில் திருத்திக் கொள்கிறோம். சிலவற்றை காலம் கூட நம்மிடம் மாற்ற முடிவதில்லை. அப்படி இருக்கையில் கடுமையான கூர்மையான வார்த்தைகளால் சிலரின் சில குறைகளையும், குற்றங்களையும் சாடுவது சரியல்ல. யாரை அப்படிச் சாடுகிறோமோ அவர்களும் நம்மை அப்படியே சாடுவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்றில்லா விட்டாலும் என்றாவது அந்த சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தியும் தரக் கூடும். “அன்று என்னைப் பெரிதாகக் கேட்டாயே நீ மட்டும் ஒழுங்கா?” என்கிற ரீதியில் அவர்கள் கேட்க, நாம் ஆத்திரப்பட விளைவாக ஒரு நீண்ட பகை உருவாகி விடுகிறது.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குற்றத்திற்காக ஒவ்வொருவரை நம் நாக்கால் பதம் பார்க்க ஆரம்பித்தால் பின் சுற்றம் என்பதே நம்மைச் சுற்றி இருக்காது. நாம் தனியராகி விடுவோம். சுற்றம் மட்டுமல்ல நண்பர்களும் நமக்கு மிஞ்ச மாட்டார்கள்.

இன்றைய குடும்பங்களில் விவாகரத்துகள் அதிகரிக்க மிக முக்கியக் காரணம் கட்டுப்படுத்தாத நாக்கு தான். உப்புசப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் கூர்மையான கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விடுவது தான். ஒருகாலத்தில் வேறு வழியில்லை என்று சேர்ந்திருந்தார்கள். பொறுமையாக இருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை.

இன்றைய விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பினரும் சொல்கின்ற காரணங்களில் உண்மையான சித்திரவதை, பெரிய குறைபாடுகள் போன்ற காரணங்கள் குறைவு என்றும் பெரும்பாலான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை ஆகத்தான் இருக்கின்றன என்கிறார் ஒரு மூத்த வக்கீல். பள்ளி செல்லும் பிள்ளைகள் போட்டுக் கொள்ளும் சண்டைகளுக்கான காரணங்கள் போலத் தான் அவை இருக்கின்றன என்கிறார். குடும்பம் இரண்டாய் பிரிகிற போது அந்தக் குழந்தைகள் நிலை பரிதாபகரமானது என்பது கூட கவனிக்கப்படுவதில்லை என்கிறார் அவர். பெரும்பாலான தம்பதிகள் கடைசியாகச் சொல்கிற காரணம் இது தானாம். “அந்த அளவு பேசி விட்ட பிறகு அந்த மனிதருடன்/மனுஷியுடன் இனியும் கூட வாழ்வது சாத்தியமில்லை”.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதேநாவினால் சுட்ட வடு.என்கிறார் வள்ளுவர். நாவினால் சுட்ட வடுக்கள் ஆறுவதில்லை. நினைக்க நினைக்க காயங்கள் மேலும் மேலும் ஆழப்படத்தான் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தவறுகள் கூட பல சந்தர்ப்பங்களில் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மன்னிக்கப்படுவதில்லை, மறக்கப்படுவதுமில்லை.

ஒருவர் எத்தனையோ விஷயங்களில் நல்லவராக இருக்கக் கூடும். அவர் மற்றவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கவும் கூடும். ஆனால் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளால் மற்றவர்களை அவர் வேதனைப்படுத்துவாரேயானால் அத்தனை நன்மைகளும், உதவிகளும் மங்கிப் போகும். பேசிய அந்த கடுஞ்சொல் மட்டுமே பிரதானமாக நிற்கும்.

இது குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் மட்டும் பூதாகரமாகும் ஒரு பிரச்சினை அல்ல. அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் கூட நம் அமைதியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்து விடுகிறது. ஒருசில நிமிடங்களில் மறந்து விடக்கூடிய எரிச்சல் மிகுந்த சந்தர்ப்பங்களைக் கூட சுடுசொற்களால் பெரிய விஷயமாக்கிக் கொள்கிற எத்தனையோ உதாரணங்களை நம் தினசரி வாழ்க்கையில் காண முடியும்.

அதற்கென்று யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே போக வேண்டியதில்லை. நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டே இருந்து விடத் தேவையில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், உறுதியுடன் நம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியதும் சில நேரங்களில் அவசியமாகவே இருக்கின்றது. அது போன்ற சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டியதை உறுதியாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள். ஆனால் வார்த்தைகளில் விஷம் வேண்டாம், விஷமமும் வேண்டாம். சொல்வது நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் அது அப்போது ஒத்துக் கொள்ளப்படாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்டவர்களால் உணரப்படும். அப்போது சற்று சங்கடமாக இருந்தாலும் சீக்கிரமாகவே மறக்கப்படும். ஆனால் வார்த்தைகளில் விஷம் தோய்ந்திருக்குமானால் சொல்கின்ற செய்தி உண்மையாகவே இருக்குமானாலும் அது ஆறாத வடுவாக அடுத்தவர் மனதில் தங்கி விடும். நீண்ட பகைமை பிறந்து விடும்.

பல பேர் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையும் சேர்ந்து இழுப்பார்கள். “உங்கள் குடும்பத்திற்கே இந்த புத்தி அதிகம் இருக்கிறது” என்கிற விதத்தில் பேச்சிருக்கும். இது போதும் வெறுப்பின் ஜுவாலையைக் கிளப்ப. சிலர் தேவையில்லாத கடுமையான, குத்தலான அடைமொழிகளைச் சேர்ப்பார்கள். சொல்கின்ற சங்கதியை அந்த அடைமொழி அமுக்கி விடும். இப்படி நாவினால் சுடும் விதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சிலர் பேசுவதை எல்லாம் பேசி விட்டுப் பின்னர் “ஏதோ ஒரு கோபத்தில் சொன்னதை எல்லாம் பெரிது படுத்துவதா?” என்று இறங்கி வரக்கூடும். ஆனால் கேட்டு வேதனைப்பட்டவர்கள் அதில் சமாதானமாக முடிவது கஷ்டம் தான். கோபம் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. எனவே திருப்பி வாங்க முடியாத வார்த்தைகளைப் பேசாமலேயே இருப்பது தான் அறிவு.

எல்லோரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவக்கூடிய நிலையில் இருக்கக் கூடும். அல்லது நம்மை பிரச்சினைக்குள்ளாக்க முடிந்த நிலையில் கூட இருக்கக் கூடும். அந்த நேரத்தில் நாம் பேசிய கடுமையான வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்கு நினைவு வரக்கூடுமானால் நமக்கு அவர்களால் பெரும் நஷ்டமே நேரக்கூடும்.

எனவே வார்த்தைகளால் ஜெயித்து விட்டு வாழ்க்கையில் தோற்றுப் போகாதீர்கள். வார்த்தைகளைத் தீட்டுவதற்குப் பதிலாகப் புத்தியைத் தீட்டுங்கள். குத்தல் பேச்சும், கிண்டல் பேச்சும் அந்த நேரத்தில் நன்றாகத் தெரியலாம். கூட இருப்பவர்களிடம் ’சபாஷ்’ கூடப் பெறலாம். ஆனால் அந்தப் பேச்சால் முக்கியமான மனிதர்களை இழந்து விட்டால், இடையே உள்ள அன்பு முறிந்து விட்டால் உண்மையில் நமக்கு நஷ்டமே என்பதை என்றும் மறக்காதீர்கள்.

மேலும் படிப்போம்.....

-என்.கணேசன்

நன்றி: வல்லமை

swarna agarshana manthiram in english

காசியின் காவலன் பைரவர்For Good Reading, Click On That Images & Again once Click
புண்ணியம் தரும் பைரவர் வழிபாடுFor Good Reading, Click On That Images & Again once Click
பிரிந்தவர் ஒன்று சேர வழிபடுங்கள் வாஞ்சியம் ஈசனை!

For Good Reading, Click On That Images & Again once Clickதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்கள்
முற்பிறவி அல்லது/மற்றும் முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த சில/பல தவறுகளால் ஏற்பட்ட தோஷங்கள்,இந்த பிறவியில் நுண்ணறிவு,உடனே புரிந்துகொள்ளும் திறன்,புத்திரபாக்கியம் அல்லது திருமணத்தடை அல்லது ஏதாவது ஒரு குறை பின்வரும் நாட்களுக்குள் பிறந்தவர்களுக்கு இருக்கும்.11.3.1973 முதல் 2.9.1973 வரை24.10.1973 முதல் 27.12.1973 வரை22.2.1985 முதல் 17.4.1985 வரை

13.5.1985 முதல் 25.12.1985வரை5.2.1997 முதல் 24.3.1997 வரை

12.8.1997 முதல் 29.11.1997வரை20.1.2009 முதல் 5.3.2009 வரைஇந்த நாட்களுக்குள் பிறந்தவர்கள்,மாதம் ஒரு வியாழக்கிழமை வீதம் ஒராண்டுக்கு(52 வியாழக்கிழமைகள்) அல்லது திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில் 24 முறை(அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு) திரு அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்.கிரிவலம் செல்ல வேண்டும்;அப்படி கிரிவலம் செல்லும்போது,மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்;இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்;கிரிவலப்பாதையின் தூரமான 14 கிலோமீட்டர்கள் முழுவதும் யாரிடமும் பேசாமல்,மனதுக்குள் ஓம்அருணாச்சலாய நமஹ ஜபித்துக்கொண்டே செல்ல வேண்டும்;கிரிவலத்தின் போது அன்னதானம் சாதுக்களுக்கும்,பழதானம் பசுக்களுக்கும் செய்ய வேண்டும்.கிரிவலம் முடிந்த பின்னர்,திரு அண்ணாமலையாரையும்,உண்ணாமுலையம்மாளையும் வழிபட வேண்டும்.(முடிந்தால் கிரிவலம் முடியும் வரையிலும் விரதம் இருப்பது இன்னும் நல்லது)இப்படி ஒவ்வொரு தடவையும் செய்து வந்தால்,அவர்களின் நீண்டநாள் பிரச்னைகள்/ஏக்கங்கள்/துயரங்கள் கண்டிப்பாகத் தீரும்.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

(இங்கிலாந்து)கண்கெட்டப்பின்(குடும்ப அமைப்பிற்கு) சூரிய நமஸ்காரம்
சோம்பேறித்தனம்,பொறுப்பின்மை,சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள பிரிட்டன் இளைய சமுதாயத்தை மீட்கவும்,ஒழுக்கம் உள்ள சமுதாயமாக மாற்றவும் அவர்களுக்கு தேசிய சேவை பயிற்சியளிக்க பிரதமர் கேமரூன் நடவடிக்கை எடுத்துள்ளாராம்.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கலவரங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தகப்பன் இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் அல்லது முன் உதாரணமான ஆண் ஆளுமை தெரிவு செய்யத்தெரியாமல் வளர்க்கப்பட்டவர்கள்;அவர்களை வீட்டில் கவனிக்க ஆள் இல்லாததால் அவர்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார்கள். 

ஆஸ்திரேலியாவின் திமிர்த்தனம்ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த TODAY F.M. என்ற பண்பலை வானொலி நிலையத்தில் சமீபத்தில் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் “இந்தியா ஒரு மலக்குழி;கங்கை நதி ஒரு சாக்கடை” என இழிவாக விமரிசித்திருக்கின்றார்கள் .இதனால் ஆஸ்திரேலிய இந்தியர்கள் கவுன்சில்,அந்த வானொலி நிலையமும்,நிகழ்ச்சி தொகுப்பாளரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவிக்க,வானொலி நிலையமும் பணிந்து தவறுக்காக மன்னிப்புக் கோரியது.


கக்கன்:கைசுத்தம் சமய உணர்வினால்!!!கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்ற பெயர் எடுத்தவர் பி.கக்கன்.தாழ்த்தப்பட்ட என்று சொல்லப்படும் சமுதாயத்தில் பிறந்த அவர்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினராகவும்,பத்து ஆண்டுகாலம் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியவர்.பல வருடங்கள் அமைச்சராக இருந்தும் சொந்த வீடு கூட இல்லாமல் தன் கடைசி காலம் வரை வாழ்ந்தார்.

மதுரை அருகில் தும்பைப்பட்டி கிராமம்.அங்குள்ள ஸ்ரீவீரகாளியம்மன் கோவிலில் கக்கன் அவர்களின் குடும்பத்தார் நான்கு தலைமுறைகளாக பூஜாரிகளாக இருந்திருக்கிறார்கள்.கக்கன் அவர்களும் பூஜாரியாக பணியாற்றியவர்;அந்தக் கோவில் 18 கிராமங்களுக்குச் சொந்தம்.
காலை விடியலுக்கு முன்பே எழுந்து,காலைக்கடமைகளை முடித்து நெற்றி நிறைய விபூதி பூசிக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்;பாவக்காரியங்கள் செய்யக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தவர்;இவரின் இந்தக் கொள்கைதான் கறைபடியாத கரங்களுக்குசொந்தக்காரர் என்ற புகழைத் தந்திருக்கிறது.
நன்றி:பஞ்சாமிர்தம் பகுதி,பக்கம் 10,விஜயபாரதம் 9.9.11


ஆலய நகரில் அன்னைக்கு அவதூறா?மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாத்துரை மதுரை மீனாட்சி அம்மனைப்பற்றி தரக்குறைவாக பேசத்துவங்கினார்.அதைக் கேட்டவுடனே பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் மேடைமீது ஏறி மைக்கைப் பிடுங்கி,
“எனது அன்னை மீனாட்சியினைப் பற்றி எவரேனும் அவதூறாகப் பேசினால் எனது கையில் உள்ள வேல் பாயும்” என எச்சரிக்கை விடுத்தார்.இதைக் கண்ட அண்ணாத்துரை தனது பேச்சினை அத்துடன் முடித்துக்கொண்டார் என்பதை அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் அறிவர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தனது வாழ்க்கையின் கடைசி மூச்சு உள்ளவரையிலும் தேசியத்தின் மீதும்,தெய்வீகத்தின் மீதும் அளவற்ற பாசம் கொண்டிருந்தார்.
தகவல்:நா.சடகோபன்
விஜயபாரதம் பக்கம் 10, 9.9.11

மேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கைமேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை
மேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் நவக்கிரகங்களில் செவ்வாயின் மகன்கள் ஆவர்.10.9.11 முதல் 45 நாட்களுக்கு செவ்வாய் கடகராசியைக் கடக்க இருக்கிறார்.ஜோதிடப்படி செவ்வாய் இந்த 45 நாட்களில் நீசமடைகிறார்.எனவே,மேஷம்,விருச்சிக ராசிக்காரர்கள் கோபத்தைக் கைவிட வேண்டும்.பெரிய பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது அவசியம்.மேஷத்தில் குரு பகவான் இருந்தாலும்,நீசம் நீசமே!இந்த காலகட்டத்தில் வாழ்க்கையைச் சமாளிக்க பவளக்கல்லை அணிந்து கொள்வது ஒரு பரிகாரம் ஆகும்.தினமும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது இரண்டாவது பரிகாரம்;தினமும் ஏதாவது ஒரு தியானம் செய்துவருதல் மூன்றாவது பரிகாரம்;தினமும் முருகக் கடவுளைத் தரிசிப்பது(அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று) தரிசிப்பது மூன்றாவது பரிகாரம்;ரத்த தானம் செய்வது நான்காவது பரிகாரம்;இந்த 45 நாட்களில் ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமையன்று திரு அண்ணாமலை கிரிவலம் சென்று வருதல் ஐந்தாவது பரிகாரம்;தினமும் அதிகாலை 30 நிமிடங்கள் செவ்வாய் பகவானின் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது ஆறாவது பரிகாரம்.இன்னும் பல பரிகாரங்கள் இருந்தாலும்,இணையம் வழியாக இவ்வளவு பரிகாரங்களை பக்கவிளைவுகளற்ற பரிகாரங்களாகப் பரப்ப முடியும்.ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்,ஜோதிடம் கற்போர்,ஜோதிடத்தொழில் புரிவோர் இது தொடர்பாக தங்களின் கருத்துக்களை அனுப்பினால்,பரிசீலித்து வெளியிடத்தயார்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
பத்து லட்சம் மரங்கள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருக்கும் போத்தீஸீக்கு ஆதரவளிப்போம்

http://www.gogreenatpothys.com/

துலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 வரை)என்ன செய்யும்?

காலச் சக்கரத்தை சிவபெருமானின் அம்சமாகிய பைரவர் இயக்கிவருகிறார்.அப்படி இயக்குவதன்மூலமாக நவக்கிரகங்கள் தத்தம் கடமைகளைச் செய்து வருகின்றன.ஒரு நாளில் சந்திரன்(குறைந்த பட்சம் 19 மணி நேரத்தில் அதிக பட்சம் 36 மணி நேரத்தில்) ஒரு நட்சத்திரத்தையும்,சராசரியாக மூன்று நாட்களில் ஒரு ராசியையும்,ஒரு மாதத்திற்குள்(குறைந்த பட்சம் 28 நாட்கள்,அதிக பட்சம் 32 நாட்கள்) ஒரு ராசியை சூரியனும் கடக்கின்றார்கள்.இதே காலகட்டத்திற்குள் புதனும்(20 முதல் 30 நாட்களுக்குள்),சுக்கிரனும்(25 முதல் 35 நாட்களுக்குள்) ஒரு ராசியைக் கடக்கின்றார்கள்.45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் ஒரு ராசியைக் கடக்கிறார்;ஒரு வருடத்துக்கு ஒரு ராசியை குரு பகவான் கடக்கிறார்;ஒன்றரை வருடத்துக்கு ஒரு ராசியை ஒரே நேரத்தில் இராகுவும்,கேதுவும் எதிர்க்கடிகாரச் சுற்றில் கடக்கிறார்கள்;இரண்டரை ஆண்டுகளில்(30 மாதங்கள்=900 நாட்கள்)ஒரு ராசியை சனி கடக்கிறார்;26.6.2008 முதல் 30.11.2011 சனிபகவான் கன்னிராசியைக் கடந்து கொண்டிருக்கிறார்.இந்த கன்னிச்சனியானது சிம்மராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனியாகவும்,கன்னிராசிக்கு (ஏழரைச்சனியில் நடுப்பகுதியாகவும்)ஜன்மச்சனியாகவும்,துலாம் ராசிக்கு விரையச்சனியாக(ஏழரைச்சனியில் முதல் பகுதியாகவும்)வும்,கும்பராசிக்கு அஷ்டமச்சனியாகவும்,மிதுனராசிக்கு அர்த்தாஷ்டமச்சனியாகவும்(அஷ்டமச்சனியில் பாதி தொல்லை தரும் விதமாகவும்) பரிணமித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.ஒரே குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் கும்பராசி,கன்னிராசி,சிம்மராசி,துலாம் ராசியினராக இருந்தால் கடந்த இரண்டரை ஆண்டுகள் அந்த குடும்பத்தாருக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக நகர்ந்திருக்கும்;(அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தை நேற்று நான் சந்தித்தேன்;பாவம் அவர்களுக்கு ஜோதிடரீதியாக ஆறுதல் சொல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது)30.11.2011 முதல் சனி துலாம் ராசிக்குள் நுழைகிறார்.இதன் மூலமாக சிம்மராசிக்கு ஏழரைச்சனி முழுமையாக நீங்குகிறது.கன்னிராசிக்கு கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனி நீங்குகிறது.துலாம் ராசிக்கு கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனி ஆரம்பம்!கும்பராசிக்கு அஷ்டமச்சனி நீங்கி,அவர்களுக்கு விரைவான நற்பலன்கள் படுவேகமாக வரத்துவங்கும்.மீனராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பம்.ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகுவதற்கு ஆறு மாதம் முன்பிருந்தே,அடுத்த ராசியிலிருக்கும் பலன்களைத் தரத் துவங்குவார்.ஆமாம்!30.5.2011 முதலே துலாம் ராசிக்கு ஜன்மச்சனியின் பலன்களும்,மீன ராசிக்கு அஷ்டமச்சனியின் பலன்களும்,விருச்சிக ராசிக்கு விரையச்சனியின் பலன்களும்,கடகராசிக்கு அர்த்த அஷ்டமச்சனியின் பலன்களும்(அஷ்டமச்சனியின் பாதி பலன்கள்) ஆரம்பமாகியிருக்கும்.

எனவே,இந்த ராசியினர்,சனியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க(சனி எங்கே தாக்குதல் நடத்துகிறார்?இது வரை நாம் இந்த ஜன்மத்தில் செய்த பாவபுண்ணியத்துக்கேற்றவாறு நமக்கு நிம்மதியையோ,சிரமங்களையோ தருகிறார்.நாம் தான் அவர் மீது பழி சுமத்துகிறோம்)

விநாயகர் வழிபாடு செய்யக்கூடாது;சிவ வழிபாடு செய்யக்கூடாது;இந்த இரண்டு வழிபாட்டினாலும் சனியின் தாக்கத்தைக் குறைப்பது கடினமே!

பதிலாக,ஆஞ்சநேயர் வழிபாடு அல்லது பைரவர் வழிபாடு செய்து வர வேண்டும்.அடுத்த இரண்டரை ஆண்டுகள்(30.11.2011 முதல் ஜீலை 2014 வரை) துலாம்,மீனம் ராசிக்காரர்களுக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்;பொறுமையைச் சோதிக்கும் விதமான தினசரி சம்பவங்கள் நடைபெறும்.எதற்கெடுத்தாலும் எரிச்சலே மிஞ்சும்.மேஷம்,கடகம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கவனக்குறைவு ஒரு தினசரிப்பிரச்னைகளை உருவாக்கிடும்.எனவே,கவனமாக ஒவ்வொரு செயலையும் செய்வது அவசியம்.30.11.2011க்குள் கடகராசியினர் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை கண்டிப்பாக பெற்றுவிடுவார்கள்.இழந்த மரியாதை,பிரிந்த உறவுகள்,ஏமாந்த சம்பவங்கள் மூலமாக வாழ்க்கையைப் புரிந்துகொண்டிருக்கும் கடகம் கும்பம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகள் படிப்படியான முன்னேற்றம் மட்டுமே கைகூடத்துவங்கும்.எனவே, பைரவர் சன்னதி இருக்கும் பழமையான சிவாலயங்களில் சனிக்கிழமை வரும் இராகு கால நேரமாகிய காலை 9 முதல் 10.30 வரை பைரவ அஷ்டகம் வாசிக்க வேண்டும்.பைரவருக்கு தயிர்ச்சாதம் அல்லது உளுந்துவடை அல்லது சாதத்துடன் கலந்து வெல்லம் நிவேதனமாகப் படைக்க வேண்டும்.இதை துலாம்,மீனம்,கடகம் ராசிக்காரர்கள் ஜீலை 2014 வரை விடாமல் செய்துவர வேண்டும்.அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திட வேண்டும்.இல்லாவிடில் நிம்மதியிழந்து தற்கொலை செய்யும் எண்ணம் அடிக்கடி தலைதூக்கும்;எச்சரிக்கை!!!

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹஆவணி மாத பவுர்ணமியைப்(11.9.11 ஞாயிறு இரவு) பயன்படுத்துவோம்;
ஆவணி மாத பவுர்ணமியானது எதிர்வரும் ஞாயிறு (11.9.11) மதியம் துவங்கி,திங்கள் மதியம்(12.9.11) வரை இருக்கிறது.நவக்கிரகங்களில் முதன்மையானதும்,முக்கியமானதுமாகிய ரவி எனப்படும் சூரியன் ஆட்சியாகி,அதற்கு நேர் ஏழாம் ராசியில் சந்திரன் முழு பலம் பெறும் நாளே ஆவணி மாத பவுர்ணமியாகும்.இதையே ஆவணி அவிட்டம் என பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகிறோம்.இந்த நாளில்,ஞாயிறு இரவு ஒன்பது மணி முதல் நம்மால் எவ்வளவு நேரம் முடியுமோ,அவ்வளவு நேரத்துக்கு ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிப்போம்.

எவ்வளவு உயரமான இடத்திலிருந்து நாம் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்கிறோமோ,அவ்வளவு விரைவாக நமக்கு மந்திர ஜபம் விரைவான பலனைத் தரும்.

இதுவரையிலும்,ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்க ஆரம்பிக்காதவர்கள்,இன்று மாலை 6 மணி முதல் 6.12க்குள் வரும் குரு ஹோரையில் குரு சூட்சும ஹோரையில் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்கத் துவங்கலாம்;

பல நாட்கள்/வாரங்கள்/மாதங்களாக ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்துவந்து,இடையில் பல்வேறு காரங்களால் அதை ஜபிக்க முடியாமல் நிறுத்தியவர்கள்,இந்த நாளில்- 11.9.11 ஞாயிறு மாலை 6 முதல் 7 மணி வரையிலும் மீண்டும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்க ஆரம்பிக்கலாம்;தொலைதூர நாடுகளில் வாழும் தமிழ் வாசகர்கள்,ருத்ராட்சம் இல்லாமலும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்க ஆரம்பிக்கலாம்;ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்சித்தர்கள் கண்டறிந்த வாதவித்தையே சிறந்த விஞ்ஞான, ரசாயன ஆராய்ச்சியாகும். உலோகங்கள், உப்புக்கள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், விதைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும் பல கடல் பொருட்கள், விலங்குகளின் உடல்களில் இருந்து கிடக்கும், கஸ்தூரி, புனுகு, சலம், சாணம் முதலியவற்றின் குணங்களை எல்லாம் கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்களே. அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

இவ்வாறு ஆராய்ந்து இவற்றைச் சேர்த்தால் இன்ன மருந்து கிடைக்கும். இன்ன நோய்க்கு இன்ன மருந்து. இந்த மருந்து இன்னின்ன நோய்களுக்குப் பலன் தரும், நுகரும் மருந்து, பூசும் மருந்து, குடிக்கும் மருந்து எனப் பலவகையான மருத்துவ ஆய்வுகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

இன்று இருப்பது போல விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்கள் இல்லாத அந்தக்காலத்தில் காட்டிலும் , மலையிலும், குகையிலும் வாழ்ந்த இந்த பேரறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தி ஒவ்வொன்றின் மருத்துவப் பண்புகளை கண்டறிந்து மக்களுக்கு தெரிவித்துள்ளது வியப்பளிக்கும் செய்தியாகும்.

இதேபோல வானவியல், சோதிடம், மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தெளிவான முடிவுகளை அறிவித்தே உள்ளனர்.

ஆகவே சித்தர்களை உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றும், விஞ்ஞானத்தின் முன்னோடிகள் என்று கூறலாம். மனிதனும், நாடும், உலகமும், நலம் பெற, முன்னேற பல்வேறு அறிவுரைகளை நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள், இக் காலத்தில் உள்ளது போன்று பல்வேறு உபகரணங்கள் இல்லாத அக்காலத்தில் மனித சமூகம் வளம்பெற, உடல் நலம்பெற, ஆன்மிகம் தளைத்தோங்க, மருத்துவ இயல், வானவியல், போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை தம் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் பாடி சென்றுள்ளனர். இது யாராலும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

ஆகவே,
சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றால் அது மிகைப் படுத்தல் அல்லவே. நன்றியுடன் www.sith

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாள்!!!
பைரவர் அர்ச்சனையின் பலன்கள்

For Good Reading, Click On That Images & Again once Clickஆகாச லிங்கம்

நமது பாரதத்தின் மேலும் இரு பெருமைகள்டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் உலகப்புகழ் பெற்றவை என நாம் பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம்.
அவ்வளவுதான்.அதென்ன உலகப்புகழ்? எனப்பார்த்தால் அந்த மஸ்லீம் துணி பெரும்பாலும் பெண்கள் அணியும் சேலைதான்.அந்த சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.

தீப்பெட்டி அக்காலத்தில் எவ்வளவு சிறியதாக அல்லது பெரியதாக இருந்தது எனத் தெரியாது நமக்கு.ஆனால் அந்த சேலைகளானது அவ்வளவு மெல்லிசானது என நம்மில் சிலர் கேள்விப்பட்டிருப்போம்.
வியாபாரம் செய்ய வந்த கிறிஸ்தவ ஆங்கிலேயனுக்கு இந்த சேலையின் தரம் எரிச்சலைத் தந்தது. பார்த்தான். இந்த சேலை நெய்பவர்களின் விரல்களை வெட்டிவிட்டான்.
மஸ்லீம் துணிகளுக்கான உலகச்சந்தையை இங்கிலாந்து கைப்பற்றி விட்டது.

இதே போல களரி என்ற வீரக்கலை சேரநாடு எனப் போற்றப்படும் கேரளத்தில் இருந்தது.மிகவும் உன்னதமான கலையாகும்.
எப்படி நம் தமிழ்நாட்டில் சிலம்பம் ஒரு வீரக்கலையோ அந்தளவுக்கு களரி இருந்தது.
களரி பயில 7 வயதில் குரு குலத்தில் சேரவேண்டும். 22 வயதில் தலைசிறந்த களரி ஆசானாக முடியும்.
சுதந்திரத்துக்கு முன்பு, ஒரு ஆங்கிலேயத் தளபதி இதைப் பற்றி அறிய விரும்பினான். அவன் ஒரு களரி குருகுலத்துக்கு வந்தான்.
ஒரு பெரிய மைதானத்தில் வட்டமாக 300 இளைஞர்கள் குனிந்தவாறு நிறுத்தப்பட்டனர். களரி ஆசான் தனது குறுவாளின் முனையில் சுண்ணாம்பைத் தடவி, எம்பிக் குதித்தார். சில விநாடிகளில் 300 பேர்களின் முதுகையும் தனது குறுவாளால் லேசாக தொட்டுவிட்டு தனது இடத்தில் இறங்கினார்.
ஆங்கிலேயத் தளபதி அந்த 300 இளைஞர்களின் முதுகையும் பார்த்தான்.எல்லோரது முதுகிலும் சுண்ணாம்பு முதுகின் மையத்தில் சிறிது பதிந்திருந்தது.
அந்த கிறிஸ்தவ ஆங்கிலேயத் தளபதி களரி ஆசான்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றான்.
எவையெல்லாம் நமது பெருமைகளோ அவைகளை கிறிஸ்தவ ஆங்கிலேயன் அழித்தான்.எவற்றையெல்லாம் அழிக்க முடியாதோ அவற்றை நாமும் நமது சந்ததியினரும் படிக்க முடியாமல் தடுத்தான். பெருமையும் சிறப்பான வாழ்வும் தரும் நமது பாரம்பரிய வேர்களை இழந்தோம். எதற்கெடுத்தாலும் பயப்படுகிறோம்.
இதை எப்போது நாம் மாற்றப்போகிறோம்?

உணவு ஆன்மிகம்

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால்
நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி
முதலியவற்றின் தாக்கம் குறையும்.
· தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத்
துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்
அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.
· கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை
எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது.
· ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை
உருவாக்கும்.
· பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள்
உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்)
நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
· தேங்காய் தொடர்ந்து உண்டால்(அதாங்க இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது
விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.
· நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத
அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்
. · வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்
டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட
மூலிகைப்புகை போடுவது நல்லது.
· இயேசு கிறிஸ்து விஸ்வகர்மா குலத்தில் அவதரித்தார்.
· நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணை(மூன்றாவது கண் நம் எல்லோருக்கும் புருவமத்தியில்
இருக்கிறது)த் திறக்கும்.காதணி நல்ல கண்பார்வையைத் தரும்.ஒட்டியாணம் துர்
ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும்.
· காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும்
மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.
· கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே(கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.

· நீங்கள் குரு உபதேசம் பெற விரும்புகிறீர்களா?
· சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும்
விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.
· கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும்
நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

பல சிறப்புகள் கொண்ட குக்கி சுப்ரமணியா கோவில்


அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்
மூலவர் : குக்கி சுப்ரமண்யர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : குமாரதாரா
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : குக்கி சுப்ரமண்யா
மாவட்டம் : தட்ஷின கன்னடா
மாநிலம் : கர்நாடகாபாடியவர்கள்:

ஆதிசங்கரர்

திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் நடத்தப்படுகிறது.

தல சிறப்பு:

முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா-577 238 தட்ஷின கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம்.


பொது தகவல்:

சமஸ்கிருதத்தில் இத்தலம் "குக்ஷி' என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் "குக்கி சுப்ரமண்யா' என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர்.

கால பைரவர் சன்னதி உள்ளது.
நாகர் பிரகார ஈசான மூலையில் உள்ளது. நாக தோஷ பரிகார ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை

நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அபயம் அளித்துள்ளதால், ராகு, கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள்.பிரம்மஹத்திதோஷம் (கொலை பாவம்), முன் ஜென்ம பாவங்கள், பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்ப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.நேர்த்திக்கடன்:

சர்ப்பஹத்தி தோஷம், காலசர்ப்ப தோஷ நிவர்த்திக்கு ரூ. 1500 கட்டணத்தில் சிறப்பு பூஜையும், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வேலை வாய்ப்பு வேண்டுபவர்களுக்கு ரூ. 250 கட்டணத்திலும் பூஜை நடத்தப்படுகிறது.

தலபெருமை:

தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது "குக்கி சுப்ரமண்யா' கோயிலாகும்.
இது பல யுகம் கண்ட கோயிலாகும்.கந்தபுராணத்தில் "தீர்த்த ÷க்ஷத்ரா மகிமணிரூபணா' அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கியது இம்மலை.முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.
தல வரலாறு:

காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர்.முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது.வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின.சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, ""எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான்,'' என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது.இந்த நதி தற்போது கர்நாடகத்தில் ஓடுகிறது. அந்த நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் பெயரே "சுப்ரமண்யா' என்பது தான். சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், "குக்குட த்வஜ கந்தஸ்வாமி' என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.
சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


பழனி முருகன் போல மேற்கு பார்த்த முருகன் இங்கே!


அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்
மூலவர் : சுவாமிநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : கந்தாஸ்ரமம்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடுபாடியவர்கள்:

-

திருவிழா:

கந்தசஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி, சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, அமாவாசை, அனுமன் ஜெயந்தி

தல சிறப்பு:

சுமார் 19 அடி உயரம் உள்ள, பஞ்சலோகத்திலான பிரமாண்ட சுதர்சன மூர்த்தி கிழக்கு நோக்கியும் அவருக்கு பின்னால் மேற்கு நோக்கி லட்சுமி நரசிம்மரும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக சுதர்சன கரத்தின் பின்புறம் யோக நரசிம்மர் இருப்பார். ஆனால், இங்கு லட்சுமி நரசிம்மர் இருப்பது சிறப்பு. தஞ்சை பிரகதீஸ்வரர் பாணத்தை விட உயரமான பாணத்தையுடைய லிங்கம் இங்கு உள்ளது. இது ஆயிரம் லிங்கங்களை உள்ளடக்கிய சகஸ்ரலிங்கமாக அமையும். தஞ்சாவூர் லிங்கத்தின் பாணம் (ஆவுடையாருக்கு மேலுள்ள பகுதி) 7 அடி 6 அங்குலம் உயரமுள்ளது. இந்த சகஸ்ரலிங்கத்தின் பாணம் 8 அடி 1 அங்குலமாக இருக்கும். இதன் எதிரே 6 அடி உயர நந்தி உள்ளது. இந்த அஷ்ட சகஸ்ரலிங்கத்தில் வரிசைக்கு 53 என்ற கணக்கில் 19 வரிசைகளில் 1007 சிறு லிங்கங்கள் இருக்கும். பிரமாண்ட லிங்கத்துடன் சேர்த்து 1008 லிங்கங்கள் என கணக்கில் கொள்ளப்படும். இதன் எடை 20 டன்.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கிழக்கு தாம்பரம் கந்தாஸ்ரமம், -600 073. சென்னை மாவட்டம்.பொது தகவல்:

தினமும் மதியம் அன்னதானம் நடக்கிறது. அன்னதான மண்டபத்தில் அன்னபூரணி தனி பீடத்தில் அருளுகிறாள்.
கோபுரங்கள் ஒரிசா மாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளன.
அமைதியான முறையில் தியானம் செய்ய மண்டபம் உள்ளது.

பஞ்சலோகத்தில் ஆன பிரமாண்டமான ஐயப்பன் சிலை வேறு எங்கும் இல்லை.
அஷ்டா தசபுஜ மகாலட்சுமி, துர்கா தேவி அருள்செய்கின்றனர்.
பிரார்த்தனை

ஞானம், செல்வம் பெருக மேற்கு பார்த்த முருகனையும், எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரபேஸ்வரரையும் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

பஞ்சமுக ஹேரம்ப கணபதி
கணபதியின் 32 அம்சங்களில் ஒருவரான பஞ்சமுக ஹேரம்ப கணபதி, சென்னை கந்தாஸ்ரமத்தில் அருளுகிறார். 12 அடி உயரம், ஐந்து முகம், பத்து கரம், சிங்க வாகனத்துடன் கன்னி மூலையில் இருக்கிறார். அபயம், வரம், பாசம், தந்தம், ருத்ராட்ச மாலை, மாவட்டி, பரசு, உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை தாங்கியுள்ளார். சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில் விசேஷ அபிஷேக ஆராதனை உண்டு. இவரது சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) பால கணபதி, பஞ்சமுக ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி உள்ளனர்.

சுவாமிநாத சுவாமி
இங்குள்ள முருகன் "சுவாமிநாத சுவாமி' என்ற திருநாமத்துடன் 12 அடி உயரத்தில் அருளுகிறார். பழநியைப்போன்று இங்கும் முருகப்பெருமான் மேற்கு பார்த்துள்ளார். வலது கையில் தண்டம் பிடித்து, இடது கையை இடுப்பில் வைத்து, வேலை வலது கை மேல் சாத்திய நிலையில் கேட்ட வரம் தரும் வள்ளலாக விளங்குகிறார். மேற்கு பார்த்த முருகனை வணங்கினால் ஞானம், செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
சூரனை வதம் செய்வதற்காக தாயை வணங்கி, வேல் பெற்றதை நினைவு படுத்தும் வகையில் தாய் புவனேஸ்வரியின் எதிரில், பணிவுடன் நிற்கிறார். தந்தைக்கே பாடம் சொல்லிக்கொடுத்தால் ஏற்பட்ட "சுவாமிநாதன்' என்ற திருநாமத்துடன் "குருவின் குருவாக' அருள்பாலிக்கிறார். குருபெயர்ச்சி நாளில் இவரை வணங்குவது சிறப்பு.

கந்தசஷ்டி விரதத்தை ஒட்டி ஆறு நாட்களும் இவருக்கு விதவிதமான அலங்காரம் செய்யப்படும். கிருத்திகை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உண்டு. இவரது கோஷ்டத்தில் பாலமுருகன், கதிர்காம முருகன், அறுபடை வீடு முருகன் மற்றும் ஒன்பது வகையான முருக வடிவங்கள் உள்ளன.

பஞ்சமுக ஆஞ்சநேயர்
கோயிலின் வாயு மூலையில் இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, கிழக்கே வானர முகம், தெற்கே நரசிம்ம முகம், மேற்கே கருட முகம், வடக்கே வராஹ முகம், மேல் நோக்கி குதிரை முகம் ஆகியவை உள்ளன. 12 அடி உயரமுடையவர். கத்தி, சூலம், மரம், மலை, பாசம், அங்குசம், சின்முத்திரை, பிண்டிபாலம், கட்வாங்கம், குண்டிகை ஆகியவற்றுடன் காட்சிதரும் இவருக்கு அமாவாசை, அனுமன் ஜெயந்தி, மூல நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வணங்குகின்றனர். கோஷ்டத்தில் பக்த ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர் உள்ளனர்.

சரபேஸ்வரர்
10 அடி உயரத்தில் வீற்றிருக்கும் சரபேஸ்வரரின் கையில் மான், மழு, சர்ப்பம், நெருப்பு ஆகியன உள்ளன. விசேஷ காலங்களில் இவருக்கும், எதிரே உள்ள லிங்கத்திற்கும் அபிஷேகம் நடக்கிறது. பிரதோஷம் மற்றும் ஞாயிறு ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படும். எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட வருகின்றனர். கோஷ்டத்தில் அஷ்ட பைரவர்கள், சுவர்ணஹர்ஷண பைரவர் அருளுகின்றனர்.

பிரத்யங்கிரா தேவி
சரபேஸ்வரருக்கு எதிரில் இவள் அருளுகிறாள். இவள் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். இவளது உதவியுடன் தான் சரபேஸ்வரர் நரசிம்மரின் கோபத்தை தணித்ததாக புராணங்கள் கூறுகின்றன. 10 அடி உயரத்தில் சிங்கமுகத்துடன் கூடிய இவளது கையில் சூலம், கபாலம், பாசம், டமருகம் உள்ளன. சிங்க வாகனத்தில் அமர்ந்திருக்கும் இவளுக்கு அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.

இங்குள்ள யாக சாலையில், தினமும் காலை 9.15 முதல் 11.15 மணி வரை பிரத்யங்கிரா கோடி ஹோமம் நடக்கிறது. தேவதைகளின் அனுக்கிரஹ சக்தி அதிகரிக்கவும், தெய்வ பலம் ஏற்படவும், கோயில் நிறுவனர் சாந்தானந்தசுவாமிகள் கூறியபடி இதற்கான மூல மந்திரங்களை ஒரு கோடி தடவை ஜபித்து, ஹோமங்கள் நடந்து வருகின்றன.

சுதர்சன மூர்த்தி
சுமார் 19 அடி உயரம் உள்ள, பஞ்சலோகத்திலான பிரமாண்ட சுதர்சன மூர்த்தி கிழக்கு நோக்கியும் அவருக்கு பின்னால் மேற்கு நோக்கி லட்சுமி நரசிம்மரும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

பொதுவாக சுதர்சன கரத்தின் பின்புறம் யோக நரசிம்மர் இருப்பார். ஆனால், இங்கு லட்சுமி நரசிம்மர் இருப்பது சிறப்பு. சுதர்சனரின் அருகே பிரகலாதனும், எதிரே 5 அடி உயரத்தில் சுதையால் ஆன வெங்கடாசலபதி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

பெரிய்ய... லிங்கம்
தஞ்சை பிரகதீஸ்வரர் பாணத்தை விட உயரமான பாணத்தையுடைய லிங்கம் இங்கு உள்ளது. இது ஆயிரம் லிங்கங்களை உள்ளடக்கிய சகஸ்ரலிங்கமாக அமையும். தஞ்சாவூர் லிங்கத்தின் பாணம் (ஆவுடையாருக்கு மேலுள்ள பகுதி) 7 அடி 6 அங்குலம் உயரமுள்ளது. இந்த சகஸ்ரலிங்கத்தின் பாணம் 8 அடி 1 அங்குலமாக இருக்கும். இதன் எதிரே 6 அடி உயர நந்தி உள்ளது. இந்த அஷ்ட சகஸ்ரலிங்கத்தில் வரிசைக்கு 53 என்ற கணக்கில் 19 வரிசைகளில் 1007 சிறு லிங்கங்கள் இருக்கும். பிரமாண்ட லிங்கத்துடன் சேர்த்து 1008 லிங்கங்கள் என கணக்கில் கொள்ளப்படும். இதன் எடை 20 டன்.

இந்த லிங்கம் அமையும் சன்னதியைச் சுற்றி தெட்சிணாமூர்த்தி, அலமேலு தாயார்- வெங்கடாசலபதி, பிரம்மா சிலைகள் உள்ளது.

தத்தாத்ரேயர்
பிரம்மா, விஷ்ணு, சிவனின் அம்சமான இவர், அத்ரி மகரிஷிக்கும் அனுசூயாவுக்கும் அவதரித்தவர். சுமார் 12 அடி உயரத்தில் அமைந்துள்ள இவருக்கு பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

சனி பகவான்
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு எதிரில் 12 அடி உயரத்தில் சனிபகவான் அருளு கிறார். வலதுகாலை காக வாகனத்தில் ஊன்றியபடி நிற்கும் இவரை வணங்கி னால் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. கோஷ்டத்தில் மூன்று கோலங்களில் சனிபகவான் காட்சி தருகிறார். மாதத்தின் முதல் சனியன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.

ஸ்ரீசக்ர பூஜை
கோயிலின் நடுவே ஐந்தடி உயரத்தில் பஞ்சலோகத்தில் மகாமேரு அமைந்து உள்ளது.
இதற்கு அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி திதிகளில், நவாவர்ண பூஜை (மாலையில்) நடக்கிறது.

இதில் ஆட்சிசெய்யும் திரிபுரசுந்தரியை வழிபட்டால் நவக்கிரக தோஷம் விலகும் என்கின்றனர்.
நாள்தோறும் மாலை 4.30 - 5.30 மணிக்கு ஸ்ரீதுர்கா ஸப்தசதி பாராயணமும், அஷ்டலட்சுமியின் அருள் வேண்டி தினமும் காலை 7 மணிக்கு கோபூஜையும் நடக்கிறது.தல வரலாறு:

சாந்தானந்த சுவாமி
புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் ஸ்வயம்பிரகாசர். இவரது சீடர் சாந்தானந்த சுவாமி. 1921ல் அவதரித்த இவரது இயற்பெயர் சுப்ரமண்யம்.

இந்த பெயர் காரணமாகத்தான், இவரால் ஸ்தாபிக்கப்பட்ட தலங்கள் "கந்தாஸ்ரமம்' என பெயர் பெற்றன. சேலம் கந்தாஸ்ரமத்தை அமைத்தவரும் இவரே. 2002 மே 27ல் இவர் மகா சமாதி அடைந்தார்.சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: தஞ்சை பிரகதீஸ்வரர் பாணத்தை விட உயரமான பாணத்தையுடைய லிங்கம் இங்கு உள்ளது. இது ஆயிரம் லிங்கங்களை உள்ளடக்கிய சகஸ்ரலிங்கமாக அமையும். தஞ்சாவூர் லிங்கத்தின் பாணம் (ஆவுடையாருக்கு மேலுள்ள பகுதி) 7 அடி 6 அங்குலம் உயரமுள்ளது. இந்த சகஸ்ரலிங்கத்தின் பாணம் 8 அடி 1 அங்குலமாக இருக்கும். இதன் எதிரே 6 அடி உயர நந்தி உள்ளது. இந்த அஷ்ட சகஸ்ரலிங்கத்தில் வரிசைக்கு 53 என்ற கணக்கில் 19 வரிசைகளில் 1007 சிறு லிங்கங்கள் இருக்கும். பிரமாண்ட லிங்கத்துடன் சேர்த்து 1008 லிங்கங்கள் என கணக்கில் கொள்ளப்படும். இதன் எடை 20 டன். இந்த லிங்கம் அமையும் சன்னதியைச் சுற்றி தெட்சிணாமூர்த்தி, அலமேலு தாயார்- வெங்கடாசலபதி, பிரம்மா சிலைகள் உள்ளது.சோழவந்தான் பிரளய நாதரை (சிவன்) தெரியுமா?


அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில்
மூலவர் : பிரளயநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பிரளயநாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சோழவந்தான்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடுபாடியவர்கள்:

-

திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற திருவிழாக்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

தல சிறப்பு:

செவ்வாய் தோஷம்உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம்.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பிரளயநாதசுவாமி திருக்கோயில், சோழவந்தான்- 624 215. மதுரை மாவட்டம்.
பொது தகவல்:

சுவாமி, அம்பாளுக்கென தனித்தனி சன்னதிகள் உள்ளன. அவ்விரு சன்னதிகளுக்கு நேரே நந்திகள் உள்ளன. மூலவர் பிரளயநாதராகவும், அம்பாள் பிரளயநாயகியாகவும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தின் வலப்பக்கம் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கி வலம்புரி விநாயகரும், வள்ளி, தெய்வானையுடன் முருகனும், அனுமன், லட்சுமி ஆகியோர் தனி சன்னதிகளிலும் , சுவாமிக்கு இடப்புறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி எதிரே நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.

இத்தல விநாயகர் பாலகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
பிரார்த்தனை

இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சுவாமிக்கு இடதுபுறத்தில் எட்டு கரங்களுடன் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்கைக்கு செவ்வாய்கிழமை தோறும் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி செவ்வரளி பூவால் அர்ச்சனை செய்தால் திருமணத் தடை மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை நிர்வத்தியாகும் என்பது ஐதீகம்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

வில்வ தீபம்: இங்குள்ள முருகப்பெருமான் மிகவும் விசேஷமானவர். கந்த சஷ்டியின்போது, ஆறு நாட்களும் சிறப்பு பூஜை நடக்கும். சஷ்டிக்கு மறுநாள் (ஏழாம் நாள்) 40 படி அரிசியில் தயிர் சாதம் செய்து "திருப்பாவாடை தரிசனம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்குள்ள பைரவரும் விசேஷமானவர்.

இவருக்கு இத்தலத்து விருட்சமான வில்வத்தின் காயை உடைத்து, அதன் ஓடுகளில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர். இதன் மூலம் நம் பக்கம் நியாயமிருக்கும் வழக்குகளில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையும், பாதுகாப்பான வாழ்வைப் பெறலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கியுள்ள ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி, மறுநாள் அந்த வெண்ணெயை பிரசாதமாக வாங்கி அருந்தினால் தீராத வியாதியும் குணமடையும் என்பது நம்பிக்கை.தல வரலாறு:

சில நூற்றாண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், காசியிலிருந்து ஒரு லிங்கம் கொண்டுவந்து, வைகை ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

ஒருசமயம் ஆற்றில் உலகம் அழியும் காலத்தில் (பிரளயம்) ஏற்படுவது போல கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயந்த மக்கள் சிவனை பிரார்த்தனை செய்தனர். சிவன் இரக்கம் கொண்டு வெள்ளத்தை நிறுத்தினார். பிரளயத்தில் காத்தருளியவர் என்பதால் இவர், "பிரளயநாதர்' என்று பெயர் பெற்றார்


ஆங்கரை கிராம சிவன் கோவிலின் விசேஷம் தெரியுமா?


அருள்மிகு மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : மருதாந்தநாதேஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : சுந்தர காஞ்சனி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : லால்குடி அருகிலுள்ள ஆங்கரை
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடுபாடியவர்கள்:

-

திருவிழா:

தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திர நாட்களில் சிறப்பு பூஜை உண்டு.

தல சிறப்பு:

அம்பாளையும் சுவாமியையும் ஒரே நேரத்தில் சுற்றிவந்துவிடலாம். இவ்வாறு அமைவது மிகவும் அபூர்வமானதாகும்.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில், லால்குடி, ஆங்கரை திருச்சி மாவட்டம்.

போன்:

-

பொது தகவல்:

இங்கு தெட்சிணாமூர்த்தி, விநாயகர், தண்டபாணி, சுப்ரமணியர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. ஒரே பிரகாரம் கொண்ட இக்கோயிலில் துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்ரக சன்னதியும் உள்ளது.1968ல் கும்பாபிஷேகம் நடந்தது.பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

இக்கோயில் கிழக்கு நோக்கி இருந்தாலும் தெற்கு நோக்கிய வாசலே பயன்படுத்தப்படுகிறது. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும், சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அமைக்கப்பட்டு, ஒரே மண்டபமாக கட்டப்பட்டுள்ளது.அம்பாளையும் சுவாமியையும் ஒரே நேரத்தில் சுற்றிவந்துவிடலாம். இவ்வாறு அமைவது மிகவும் அபூர்வமானதாகும்.
தல வரலாறு:

மருதாந்தன் என்பவன் சுஹோலர் என்ற முனிவரின் மகன். முனிவரின் மனைவி தறிகெட்டு நடந்தாள். எனவே முனிவர் அவளை ஒதுக்கிவிட்டார்.விலகிப்போன மனைவியோ பாவத்தொழிலை செய்துவந்தாள். மருதாந்தன் வாலிபனானான். அந்நாட்டு இளவரசனின் நட்பு அவனுக்கு கிடைத்தது. இளவரசன் பெண்பித்தனாக இருந்தான். அவனோடு சேர்ந்த மருதாந்தனும் அவனைப்போலவே ஆனான். ஒருமுறை அவர்கள் தங்களைவிட வயதில் கூடிய ஒரு பெண் வீட்டிற்கு சென்றனர்.அந்த பெண்ணிற்கோ இளவரசனுடன் வந்திருந்த வாலிபனைப் பார்த்ததும் சந்தேகமாக இருந்தது. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்பிறகே அந்த பெண் வந்த வாலிபன் தனது மகன் என்பதை தெரிந்துகொண்டாள். அந்த வாலிபனோ எப்பேர்ப்பட்ட பாவத்தை செய்துவிட்டோம் என புலம்பித்தீர்த்தான்.அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. காட்டில் போய் தியானத்தில் அமர்ந்துவிட்டான். இறைவனைக் காணாதவரை எதுவுமே சாப்பிடுவதில்லை என்று உறுதியெடுத்தான். அறியாமல் பெரும்பிழை செய்த அந்த வாலிபனின் முன் சிவபெருமான் தோன்றினார். அவன் செய்த பிழைக்கு மன்னிப்பு வழங்கினார்.""எந்த ஒரு வாலிபனும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவனது தாயாகவே கருதவேண்டும். இதை உலகிற்கு உணர்த்தவே இந்த கொடும் நாடகம் ஆடினேன். கலியுகத்தில் இதுபோன்ற கொடுமைகள் நிகழலாம். அவர்கள் எல்லாம் திருந்தவே இவ்வாறு செய்தேன்,'' என்றார்.
இருப்பினும் அந்த வாலிபனின் மனது படாதபாடு பட்டது.இந்த தோஷத்திற்கு விமோசனம் என்ன என கேட்டான். அதற்கு இறைவன் தனக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டால் பாவம் தீரும் என்றார். அதன்பின் தனது சொந்த உழைப்பில் மருதாந்தன் சிவனுக்கு கோயில் அமைத்தான். அவனுக்கு அம்பாள் ஆறுதல் கூறினாள். சுந்தர காஞ்சனி அம்பாள் என இவள் அழைக்கப்படுகிறாள்.


புத்திரபாக்கியம் தரும் ராஜபாளையம் சிவன்கோவில்அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில்
மூலவர் : மாயூரநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : அஞ்சல் நாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : காயல்குடி நதி
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : பெத்தவநல்லூர், ராஜபாளையம்
மாவட்டம் : விருதுநகர்
மாநிலம் : தமிழ்நாடுபாடியவர்கள்:

-

திருவிழா:

கார்த்திகை, பவுர்ணமி, சிவராத்திரி, சங்கடகா சதுர்த்தி, பிரதோஷம், பிரம்மோற்சவம், நவராத்திரி விழா, சோம வார பூஜை, தனுர் பூஜை, ஆருத்ரா தரிசம், 1008 திருவிளக்கு பூஜை, மகா சிவராத்திரி விழா, பங்குனி உத்திர திருவிழா

தல சிறப்பு:

மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலாமாகும். குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை வேண்டிக் கொண்டால், சிவநேசி என்ற பெண்ணுக்கு புத்திரப்பேறு பெற உதவியது போல் அனைத்து தாய்மார்களுக்கும் தானே உதவிடுவார்.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் பெத்தவநல்லூர், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.பொது தகவல்:

இந்த சிவாலயத்தின் உள்ளே நுழைந்ததுமே விநாயகர், முருகன், பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என அனைவருமே நம்மை ஆசிர்வதிப்பது போன்ற அமைப்பு. ஸ்தல விநாயகர் கன்னி முலையில் இருந்தபடியே அருள்பாலிக்கிறார்.கிழக்கு பார்த்து அமைந்த இந்த சிவலாயத்தில் நந்தி தேவரை வணங்கி விட்டு மாயூர நாதரை தரிசிக்க செல்வோம். இந்த உலகிற்கே நான்தான் தலைவன் என்பது போன்ற ராஜஅலங்காரத்தில் இறைவன் காட்சி தருகிறார்.அவரிடம் நமக்கு வேண்டியதை கேட்டுப் பெற வேண்டும் என்ற நினைப்புடன் சென்றால், மாயூர நாதரைப் பார்த்தவுடன் அவரை தரிசித்தாலே நமது பிறப்பு அர்த்தமுள்ளதாக அமைந்து விட்டது என்ற திருப்தி ஏற்படுகிறது. அருகிலுள்ள அன்னை அஞ்சல் நாயகியை தரிசிக்க செல்வோம். அங்கு சென்று அந்த தலைவியை பார்த்தால் அதற்கு மேல் அழகே இல்லை என்பது போன்ற ஒரு திருக்காட்சி. அம்மை, அப்பன் இருவரின் சன்னதிக்கு நடுவில் சோமஸ்கந்தர் சன்னதி, அதன்பின் நவகிரகங்களை வழிபட்டு பின் கொடி மரத்தின் இடதுபுறம் சென்றால் நாயன்மார்கள் சிவனை சேவித்தபடி காட்சி தருகிறார்கள்.இவர்களையெல்லாம் தரிசித்த பின் கொடிமரத்தின் கீழ் வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்தால், நமக்கு மேல் குருபகவான் 12 ராசிகளுடன் நமது எதிர்காலத்தை வளமுள்ளதாக அமைக்க தாயாராக இருக்கிறார். நாம் கொடிமரத்தின் முன் உள்ள ஆமை மீது கைவைத்து தான் இறைவனை நமஸ்காரம் செய்கிறோம். ஆமையானது சிவனின் ஆபரணத்தில் ஒன்று. மேலும் தண்ணீரில் இருக்கும் வரை ஆமை நன்றாக சுற்றித்திரியும். ஆனால் கரைக்கு வந்தவுடன் தன் உடலை ஓட்டிற்குள் அடக்கி அமைதியாகி விடும். அதுபோலவே நாமும் வெளியில் இருக்கும் வரை நமது எண்ணங்களை அலைபாய விட்டாலும், சிவ சன்னதி உள்ளே வந்தவுடன் மனதை அடக்கி இறைவனை வழிபட்டு அவனருள் பெற வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த நமஸ்கார வழிபாடு. வில்வமே இக்கோயில் தல விருட்சமாகும்.

பிரார்த்தனை

பிரிந்து வாழும் தம்பதியினர், குழந்தைப் பெறப்போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூர நாததை வேண்டிக் கொண்டால், புத்திரப்பேறு பெற தாய்மார்களுக்கு தானே உதவிடுவார் என்பது நம்பிக்கை.நேர்த்திக்கடன்:

தம்பதியினர் இக்கோயிலுக்கு வந்து 48 நாட்கள் சுவாமி அம்மனுக்குரிய பள்ளியறை பூஜையின் போது ஏலக்காய் போட்ட தித்திப்பான பால் நைவேத்தியம் செய்து வழிபட்டால் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

தலபெருமை:

-


தல வரலாறு:

முன்னொரு காலத்தில் சிவநேசி என்ற பெண் சிவன் கோயில் வழியாக தன் தாய் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள். சிவநேசிக்கு அது பேறுகால சமயம். நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். அங்கிருந்த சிவன் கோயில் வாசலில் அமர்ந்து அழுது புரண்டாள். இந்த துன்பத்தை கண்ட கருணை வடிவான சிவன் தானே அந்த பெண்ணின் தாய் உருவில் வந்து புத்திரப்பேறு உதவினார். அத்துடன் குழந்தையை பெற்ற பெண்ணின் தாகம் தீர காயல்குடி நதியை வரவழைத்து அதன் நீரை மருந்தாக பருகவும் உதவினார். (இந்த நதியே தற்போது இந்தக் கோயிலின் தீர்த்தமாக உள்ளது)தன் பெண்ணின் பிரசவ செய்தியை கேள்விப் பட்ட தாய், சிவனே தன் உருவில் தாயாக வந்து பிரசவம் பார்த்ததை அறிந்து இறைவனை நினைத்து வழிபட்ட போது, சிவன் உமையவள் சமேதராய் காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.