RightClick

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகள்-48.8.2004 முதல் தினமும் பத்திரகாளியின் கோவிலுக்குச் சென்று அன்னை பத்திரகாளியை வழிபட்ட பின்னரே,வேலைக்குச் செல்லத்துவங்கினேன்.எனக்கு புத்திமதி கூறும் சாக்கில் என்னைப் புகழ்ந்து,அவர்களின் கஷ்டமான வேலைகளை என்னை வைத்து செய்தவர்களின் நரித்தனங்கள் எனக்குப் புரிந்தது.8.8.2005க்குள்ளாகவே எனது முன் கோபம் காணாமல் போனது.இதனால்,பிறரின் சதிவலைக்குள் சிக்காமலிருக்கத் துவங்கினேன்; ஜோதிடத்தில் எனது கணிப்புகளுக்கிடையே பத்திரகாளியின் அருளும் கலந்ததால்,என்னையறியாமல் ஜோதிடபலன்கள் சொல்லும்போது சில ஜோதிட பலன்களையும் சொல்லியிருக்கிறேன்.அப்படி எனது ஜோதிட கணிப்பையும் மீறி நான் என்னையறியாமல் சொன்ன சில ஜோதிட பலன்கள் உரியவர்களுக்கு முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுக்க உதவியது.எதற்கெடுத்தாலும் கோபப்படும் நான்,இன்று நியாயமான விஷயங்களுக்குக் கூட காட்டுக் கத்து கத்தாமல் ரெண்டே ரெண்டு வார்த்தைகளால் நறுக்கென திட்டுமளவுக்கு பக்குவப்பட்டது எனது ஸாரி ,நமது அன்னை பத்திரகாளியின் அருளால் மட்டுமே!!என்னை திட்டும் சாக்கில்,எனக்கு என்னைச் சுற்றியிருப்பவர்களின் ஏமாற்றுதல்களிலிருந்து என்னைக் காத்தவர்களையும் பத்திரகாளி புரியவைத்தாள்.எனவே,அவர்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்ததோடு,அவர்களை எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொண்டேன்.பொதுவாக உக்கிர பெண் தெய்வங்களை வழிபட,வழிபட நமக்கு பழிவாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.ஆனால்,இந்த பத்திரகாளியை வழிபட,வழிபட நாம் யாரைப் பழிவாங்கிட நினைக்கிறோமோ,அவர்கள் தானாகவே செல்வாக்கு இழந்து காணாமல் போவதை உணரலாம்.தவிர,இந்த பத்திரகாளியம்மாள் உக்கிர ரூபம் அல்ல;அப்படி உக்கிர ரூபத்துடன் இருக்கும் பல முத்துமாரியம்மன்,பத்திரகாளியம்மன்,பட்டத்தரசியம்மாள்,அங்காளப்பரமேஸ்வரி,புவனேஸ்வரியம்மாள் கோவில்களில் இருக்கும் பூசாரிகள் கோவிலுக்குள் வரும் முன்போ,வந்தப்பின்னரோ சிறு தவறுகள் செய்தாலும்,அவர்களை காவு வாங்கிய கதைகள் பல லட்சம் தமிழ்நாட்டிலிருக்கின்றன.பூசாரியையே காவுவாங்கினால்,அந்த அம்மன்களை வழிபடச் செல்லும்போது,தெரியாமல் சுத்தமில்லாமல் செல்லும் பக்தர்களின் நிலைமை என்னாகும்?இந்த பத்திரகாளியம்மாள் சாந்த சொரூபியாக இருப்பதால்,இந்த அம்மாவை வழிபட,வழிபட நமது வாழ்க்கையும் சாந்தமாகவே மாறிவருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் வெளியூர் ஆன்மீகக்கடல் வாசகர்கள்,முதலியார்பட்டி பத்திரகாளியம்மாள் கோவில் என்றோ,கையால் பணியாரம் சுடும் பத்திரகாளி என்றோ விசாரித்தால்,விரைவாக இந்தக் கோவிலுக்கு வழி கிடைத்துவிடும்.ஏனெனில்,ஸ்ரீவில்லிபுத்தூரில் பத்திரகாளியம்மாளின் கோவில்கள் நான்கைந்து இருக்கின்றன.ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி,சிவகாசி ரோட்டில் நடந்து வந்தால்,முதலில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலைய வளாகம் வரும்;அடுத்த படியாக நான்கு ரோடு சந்திப்பு வரும்.அங்கே சிவகாசி ரோட்டை(கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை) அடைந்தால்,சில நிமிடங்களுக்குள் கனரா வங்கியும்,அதற்கடுத்த படியாக கைகாட்டி கோவில் பஜாரும் வரும்;அதற்கடுத்த படியாக ஒரு பாலமும்,அந்த பாலத்தில் இருபுறமும் ஓடைகளும்,பாலத்தைக் கடந்தால் ஐந்து கடை பஜார் என்ற பகுதியும் வரும்.ஐந்து கடை பஜாரைக் கடந்ததும் சிவகாசி ரோட்டிலேயே வடக்கு நோக்கி கொளூர்பட்டி காளியம்மன்கோவில் வரும்.அந்தக் கோவிலுக்கு மேற்கே ஒரு நெசவாளர்த் தெரு ஒன்று இருக்கிறது.இந்தத் தெருவின் பெயரே முதலியார்பட்டித்தெரு.இதன் பட்டப்பெயர் தெற்குப்பட்டி!அந்தத் தெருவின் நடு மையத்தில் நெசவாளர்களாகிய சாலியர் மக்களுக்கு நடுவே அமர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களைக் காத்து வருகிறாள் பத்திரகாளியம்மாள்.வெறும் ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டே இரண்டு புராதனமான கோவில்கள் இருக்கின்றன.ஸ்ரீஆண்டாள் கோவில்,ஸ்ரீவைத்தியநாத சுவாமித் திருக்கோவில்;ஓரே ஒரு பவுர்ணமிக்கு நீங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வருகைதந்து,வழிபட்டுச் சென்றால்,மறுநாளே ஒரு மாபெரும் பிரச்னை தீரும்;அல்லது நமது நீண்ட நாள் ஏக்கம் ஒன்று மட்டும் நிறைவேறும்.இதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே உணர முடியும்.எதெற்கெடுத்தாலும்,மறுக்கும் பிடிவாதக்காரர்களுக்கு இதைப்புரிய வைக்க முடியாது.ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் பவுர்ணமிபூஜை நள்ளிரவு 12.30க்குள் முடிந்துவிடும்.அதன்பிறகு,ஒரு மணி நேரத்துக்கு அன்னதானம் நடைபெறும்.இது அகால அன்னதானக்கணக்கில் வராது.பவுர்ணமி பூஜையின் ஒரு பகுதியே ஆகும்.இந்த பவுர்ணமிபூஜைக்குத் தேவையான பால்,இளநீர்,பழங்கள்,பூக்கள்,அன்னதானத்துக்குத் தேவையான அரிசி,காய்கறிகள்,சமைக்க ஆட்களை பத்திரகாளியம்மாள் கோவில் பூசாரி எனக்குத் தெரிந்து யாரிடமும் கேட்டதே யில்லை.பூசாரி செல் எண்:9003353286.(((கவனிக்கவும் 8.8.2004 முதல் 8.8.2011 வரையிலான ஏழு ஆண்டுகள்,84 பவுர்ணமிகளை நினைவிற்கொள்ளவும்.))நீங்கள் அசுபதி,பரணி,கார்த்திகை நட்சத்திரத்தில்(மேஷம் ராசி)ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று நீங்கள் பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் வாங்கி(முதல் நாளே)தந்து,பவுர்ணமி பூஜை முடிந்தப்பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.மறுநாள் உங்களின் கர்மவினையில் பெரும்பகுதி கரைந்து போயிருக்கும்.மனதிலும்,தினசரி வாழ்க்கையிலும் ஒருவித மென்மையான மிதமான லேசான போக்கு தென்படத்துவங்கும்.இதே போல,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்(ரிஷபராசியில் பிறந்தவர்கள்) இதே போல,கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று செயல்படுத்திப்பார்க்கலாமே!மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மிதுன ராசிக்காரர்கள்,மார்கழி மாத பவுர்ணமியன்றும்,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த கடக ராசிக்காரர்கள்,தைமாத பவுர்ணமியன்றும்.மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் மாசி மாத பவுர்ணமியன்றும்,உத்திரம்,அஸ்தம்,சித்திரை நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த கன்னி ராசிக்காரர்கள் பங்குனி மாத பவுர்ணமியன்றும்,சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த துலாம் ராசிக்காரர்கள் சித்திரை மாத பவுர்ணமியன்றும்,விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்கள் வைகாசி மாத பவுர்ணமியன்றும்,மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த தனுசு ராசிக்காரர்கள் ஆனி மாத பவுர்ணமியன்றும்,உத்திராடம்,திரு வோணம்,அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்த மகர ராசிக்காரர்கள் ஆடி மாத பவுர்ணமியன்றும்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்த கும்பராசிக்காரர்கள் ஆவணி மாத பவுர்ணமியன்றும்(12.9.2011 திங்கள் அன்று இந்த ஆண்டு வருகிறது),பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மீன ராசிக்காரர்கள்,புரட்டாசி மாத பவுர்ணமியன்றும் இதைப் போல ஒரு முறை பரீட்சித்துப்பாருங்கள்.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹபடத்தில் இருப்பது கோவிலின் பக்க வாட்டுத்தோற்றம்.