RightClick

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் பெருமைகள்-1
இந்த கோவில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்= முதலியார்பட்டித்தெருவில் நடுப்பகுதியில் அமைந்திருக்கிறது.ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் அரைகிலோமீட்டர் தூரத்தில்,ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உள்ளேயே முதலியார்பட்டித்தெரு அமைந்திருக்கிறது.நெசவுத்தொழிலைப் பிரதானமாகக் கொண்ட சாலியர்கள் வாழும் தெரு முதலியார்பட்டித்தெரு ஆகும்.சுமார் 300 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி கோவில் இங்கே இருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அருள்பாலித்துவருகிறாள்.

எனது வாழ்க்கையில் மட்டுமே சுமார் 1000 அதிசயங்களை நிகழ்த்தியிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளைப்பற்றி விரிவாக எழுதாமலிருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது.வேறுவிதமாகச் சொல்வதானால்,நயவஞ்சகமும்,பித்தலாட்டமும் நிறைந்த இக்காலத்தில் எனது ரத்த உறவுகளாலேயே நான் வீண்பழியால் சிறைக்குச் செல்லும் சூழ்நிலை இருந்தது.இந்த நிலையை மாற்றி,இந்த நொடி வரையிலும் என்னைக் காத்து வருபவள்,எனது அம்மா ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாள் தான்.தினமும் தூங்கும் முன்பும்,தூங்கியெழுந்த உடனேயும் எனது அம்மா பத்திரகாளியின் முகத்தில் விழிப்பதை ஒரு பெருமைமிக்க கடமையாக நான் கருதுகிறேன்.இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவின் மூலமாக என்னபுகழ் கிடைத்தாலும்,எனது அம்மா பத்திரகாளிக்கே அர்ப்பணம்!!!

ஜோதிடரான நான்,ஒரு சிறு சம்பவத்தின் மூலமாக இந்த பத்திரகாளியம்மாள் சக்தி வாய்ந்தவள் என்பதை உணர்ந்தேன்.அதன் பிறகு,தினமும் பத்திரகாளியை வழிபட்டப்பின்னரே,வேலைக்குச் செல்லும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டேன்.இதனால்,நான் வேலைபார்க்கும் அலுவலகத்தில் எனக்கெதிராக செய்த சதிகள் தானாகவே முறியடிக்கப்பட்டன.இதுபற்றி,சுமார் ஆயிரம் பதிவுகளைத் தர திட்டமிட்டிருக்கிறேன்.

சுருக்கமாக,நீங்கள் நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழ விருப்பமா? 12 பவுர்ணமிகளுக்கு இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் கோவிலுக்கு வருக!!!(ஒரு பவுர்ணமிக்கு நீங்கள் இங்கு வந்து கலந்து கொண்டாலே,அடுத்த சில நாட்களில் உங்கள் வாழ்க்கை பத்திரகாளியின் பாதுகாப்பில் இயங்கத்துவங்கும் என்பது பலரின் அனுபவ உண்மை)
எல்லா பவுர்ணமிநாட்களிலும் இரவு 10 மணிக்கு இங்கு பவுர்ணமி பூஜை ஆரம்பிக்கும்.நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைந்து,1 மணி வரை அன்னதானம் நடைபெறும்.எனக்குத் தெரிந்து,இந்த ஒவ்வொரு பவுர்ணமிபூஜைக்கும் பூசாரி எவரிடமும் பவுர்ணமி பூஜைக்கு இதை நீங்கள் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டதே இல்லை.இதை வைத்தே ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் சக்தியைப் புரிந்துகொள்ளலாம்.

ராகு திசை நடப்பவர்கள்,திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில்/லக்னத்தில்  பிறந்தவர்கள் இங்கு வந்து பத்திரகாளியை வழிபட,வழிபட உங்களின் சிரமங்கள் பனியாகக் கரைந்து போய்விடும்.தவிர மற்ற ராசிக்காரர்களுக்கும் தான்!!!

இந்தக் கோவிலுக்கு முதன்முறையாக வந்த அன்றே ஒரு அதிசயம்,உங்களின் வாழ்வில் நிகழ்வதை உணரலாம்.இந்தக் கோவிலுக்கு வந்ததால்தான்,இந்த அதிசயம் நிகழ்ந்தது என்பதையும் உணருவீர்கள்.

அடுத்த பவுர்ணமி 13.8.2011 சனிக்கிழமை இரவு வருகிறது.அன்று இரவு 10 மணிக்கு பவுர்ணமி பூஜை இங்கு நடைபெற இருக்கிறது.நேரில் சந்திப்போமா?
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ