RightClick

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகள்-48.8.2004 முதல் தினமும் பத்திரகாளியின் கோவிலுக்குச் சென்று அன்னை பத்திரகாளியை வழிபட்ட பின்னரே,வேலைக்குச் செல்லத்துவங்கினேன்.எனக்கு புத்திமதி கூறும் சாக்கில் என்னைப் புகழ்ந்து,அவர்களின் கஷ்டமான வேலைகளை என்னை வைத்து செய்தவர்களின் நரித்தனங்கள் எனக்குப் புரிந்தது.8.8.2005க்குள்ளாகவே எனது முன் கோபம் காணாமல் போனது.இதனால்,பிறரின் சதிவலைக்குள் சிக்காமலிருக்கத் துவங்கினேன்; ஜோதிடத்தில் எனது கணிப்புகளுக்கிடையே பத்திரகாளியின் அருளும் கலந்ததால்,என்னையறியாமல் ஜோதிடபலன்கள் சொல்லும்போது சில ஜோதிட பலன்களையும் சொல்லியிருக்கிறேன்.அப்படி எனது ஜோதிட கணிப்பையும் மீறி நான் என்னையறியாமல் சொன்ன சில ஜோதிட பலன்கள் உரியவர்களுக்கு முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுக்க உதவியது.எதற்கெடுத்தாலும் கோபப்படும் நான்,இன்று நியாயமான விஷயங்களுக்குக் கூட காட்டுக் கத்து கத்தாமல் ரெண்டே ரெண்டு வார்த்தைகளால் நறுக்கென திட்டுமளவுக்கு பக்குவப்பட்டது எனது ஸாரி ,நமது அன்னை பத்திரகாளியின் அருளால் மட்டுமே!!என்னை திட்டும் சாக்கில்,எனக்கு என்னைச் சுற்றியிருப்பவர்களின் ஏமாற்றுதல்களிலிருந்து என்னைக் காத்தவர்களையும் பத்திரகாளி புரியவைத்தாள்.எனவே,அவர்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்ததோடு,அவர்களை எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொண்டேன்.பொதுவாக உக்கிர பெண் தெய்வங்களை வழிபட,வழிபட நமக்கு பழிவாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.ஆனால்,இந்த பத்திரகாளியை வழிபட,வழிபட நாம் யாரைப் பழிவாங்கிட நினைக்கிறோமோ,அவர்கள் தானாகவே செல்வாக்கு இழந்து காணாமல் போவதை உணரலாம்.தவிர,இந்த பத்திரகாளியம்மாள் உக்கிர ரூபம் அல்ல;அப்படி உக்கிர ரூபத்துடன் இருக்கும் பல முத்துமாரியம்மன்,பத்திரகாளியம்மன்,பட்டத்தரசியம்மாள்,அங்காளப்பரமேஸ்வரி,புவனேஸ்வரியம்மாள் கோவில்களில் இருக்கும் பூசாரிகள் கோவிலுக்குள் வரும் முன்போ,வந்தப்பின்னரோ சிறு தவறுகள் செய்தாலும்,அவர்களை காவு வாங்கிய கதைகள் பல லட்சம் தமிழ்நாட்டிலிருக்கின்றன.பூசாரியையே காவுவாங்கினால்,அந்த அம்மன்களை வழிபடச் செல்லும்போது,தெரியாமல் சுத்தமில்லாமல் செல்லும் பக்தர்களின் நிலைமை என்னாகும்?இந்த பத்திரகாளியம்மாள் சாந்த சொரூபியாக இருப்பதால்,இந்த அம்மாவை வழிபட,வழிபட நமது வாழ்க்கையும் சாந்தமாகவே மாறிவருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் வெளியூர் ஆன்மீகக்கடல் வாசகர்கள்,முதலியார்பட்டி பத்திரகாளியம்மாள் கோவில் என்றோ,கையால் பணியாரம் சுடும் பத்திரகாளி என்றோ விசாரித்தால்,விரைவாக இந்தக் கோவிலுக்கு வழி கிடைத்துவிடும்.ஏனெனில்,ஸ்ரீவில்லிபுத்தூரில் பத்திரகாளியம்மாளின் கோவில்கள் நான்கைந்து இருக்கின்றன.ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி,சிவகாசி ரோட்டில் நடந்து வந்தால்,முதலில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலைய வளாகம் வரும்;அடுத்த படியாக நான்கு ரோடு சந்திப்பு வரும்.அங்கே சிவகாசி ரோட்டை(கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை) அடைந்தால்,சில நிமிடங்களுக்குள் கனரா வங்கியும்,அதற்கடுத்த படியாக கைகாட்டி கோவில் பஜாரும் வரும்;அதற்கடுத்த படியாக ஒரு பாலமும்,அந்த பாலத்தில் இருபுறமும் ஓடைகளும்,பாலத்தைக் கடந்தால் ஐந்து கடை பஜார் என்ற பகுதியும் வரும்.ஐந்து கடை பஜாரைக் கடந்ததும் சிவகாசி ரோட்டிலேயே வடக்கு நோக்கி கொளூர்பட்டி காளியம்மன்கோவில் வரும்.அந்தக் கோவிலுக்கு மேற்கே ஒரு நெசவாளர்த் தெரு ஒன்று இருக்கிறது.இந்தத் தெருவின் பெயரே முதலியார்பட்டித்தெரு.இதன் பட்டப்பெயர் தெற்குப்பட்டி!அந்தத் தெருவின் நடு மையத்தில் நெசவாளர்களாகிய சாலியர் மக்களுக்கு நடுவே அமர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களைக் காத்து வருகிறாள் பத்திரகாளியம்மாள்.வெறும் ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டே இரண்டு புராதனமான கோவில்கள் இருக்கின்றன.ஸ்ரீஆண்டாள் கோவில்,ஸ்ரீவைத்தியநாத சுவாமித் திருக்கோவில்;ஓரே ஒரு பவுர்ணமிக்கு நீங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வருகைதந்து,வழிபட்டுச் சென்றால்,மறுநாளே ஒரு மாபெரும் பிரச்னை தீரும்;அல்லது நமது நீண்ட நாள் ஏக்கம் ஒன்று மட்டும் நிறைவேறும்.இதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே உணர முடியும்.எதெற்கெடுத்தாலும்,மறுக்கும் பிடிவாதக்காரர்களுக்கு இதைப்புரிய வைக்க முடியாது.ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் பவுர்ணமிபூஜை நள்ளிரவு 12.30க்குள் முடிந்துவிடும்.அதன்பிறகு,ஒரு மணி நேரத்துக்கு அன்னதானம் நடைபெறும்.இது அகால அன்னதானக்கணக்கில் வராது.பவுர்ணமி பூஜையின் ஒரு பகுதியே ஆகும்.இந்த பவுர்ணமிபூஜைக்குத் தேவையான பால்,இளநீர்,பழங்கள்,பூக்கள்,அன்னதானத்துக்குத் தேவையான அரிசி,காய்கறிகள்,சமைக்க ஆட்களை பத்திரகாளியம்மாள் கோவில் பூசாரி எனக்குத் தெரிந்து யாரிடமும் கேட்டதே யில்லை.பூசாரி செல் எண்:9003353286.(((கவனிக்கவும் 8.8.2004 முதல் 8.8.2011 வரையிலான ஏழு ஆண்டுகள்,84 பவுர்ணமிகளை நினைவிற்கொள்ளவும்.))நீங்கள் அசுபதி,பரணி,கார்த்திகை நட்சத்திரத்தில்(மேஷம் ராசி)ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று நீங்கள் பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் வாங்கி(முதல் நாளே)தந்து,பவுர்ணமி பூஜை முடிந்தப்பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.மறுநாள் உங்களின் கர்மவினையில் பெரும்பகுதி கரைந்து போயிருக்கும்.மனதிலும்,தினசரி வாழ்க்கையிலும் ஒருவித மென்மையான மிதமான லேசான போக்கு தென்படத்துவங்கும்.இதே போல,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்(ரிஷபராசியில் பிறந்தவர்கள்) இதே போல,கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று செயல்படுத்திப்பார்க்கலாமே!மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மிதுன ராசிக்காரர்கள்,மார்கழி மாத பவுர்ணமியன்றும்,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த கடக ராசிக்காரர்கள்,தைமாத பவுர்ணமியன்றும்.மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் மாசி மாத பவுர்ணமியன்றும்,உத்திரம்,அஸ்தம்,சித்திரை நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த கன்னி ராசிக்காரர்கள் பங்குனி மாத பவுர்ணமியன்றும்,சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த துலாம் ராசிக்காரர்கள் சித்திரை மாத பவுர்ணமியன்றும்,விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்கள் வைகாசி மாத பவுர்ணமியன்றும்,மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த தனுசு ராசிக்காரர்கள் ஆனி மாத பவுர்ணமியன்றும்,உத்திராடம்,திரு வோணம்,அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்த மகர ராசிக்காரர்கள் ஆடி மாத பவுர்ணமியன்றும்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்த கும்பராசிக்காரர்கள் ஆவணி மாத பவுர்ணமியன்றும்(12.9.2011 திங்கள் அன்று இந்த ஆண்டு வருகிறது),பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மீன ராசிக்காரர்கள்,புரட்டாசி மாத பவுர்ணமியன்றும் இதைப் போல ஒரு முறை பரீட்சித்துப்பாருங்கள்.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹபடத்தில் இருப்பது கோவிலின் பக்க வாட்டுத்தோற்றம்.

பழமொழிகள்

25.“சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன.”

 26. “உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.”

27. “மன உறுதியைப்போல் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.”

28. “உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்.”

29. “நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது; இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்.”

30. “எழுதுவது அருமை; எழுதியதைப் பழுதறக் கற்றல் அதிலும் அருமை; அதன்படி நடத்தல் அருமையோ அருமை thanks

விஜயபாரதம் கேள்விபதில் 26.8.2011
?:பகவத் கீதை ஒரு அமைதியான இடத்தில் இல்லாமல் ஏன் போர்க்களத்தில் போதிக்கப்பட்டது?!! மனிதனின் வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் என்பதை புரிய வைப்பதற்காக.ஸ்ரீகிருஷ்ணன் போர்க்களத்தை தேர்ந்தெடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.?:பரதனாரே, தாயின் அன்பு,இறைவனின் அன்பு எதற்கு முதலிடம் கொடுப்பது?!! உங்கள் கேள்வியிலேயே முதலில் தாயின் அன்பைத்தானே குறிப்பிட்டுள்ளீர்கள்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்பதுதானே நமது முன்னோர்களின் வாக்கு.ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

முற்பிறவிகள் உண்மை என்பதை நிரூபிக்கும் மனோதத்துவம்காரணம் இல்லாமல் எதையாவது பார்த்ததும் பயம் வருகிறது என்றால் அது முன் ஜன்மத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்கிறார் எடித்.எடித் பையர் என்பவர் முன் ஜன்மம் பற்றியும் மறு ஜன்மம் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர்.இவர் ஹிப்னாடிச முறையில் முற்பிறவி நினைவுகளைக் கண்டறியக்கூடியவர்.ஒரு பெண் எப்போதும் தண்ணீரைக் கண்டாலே பயந்து நடுங்கினாள்.வயதானபிறகும் இந்த பயம் இவரை விட்டு நீங்க வில்லை;ஆட்டிப்படைத்தது.பயத்துக்கு என்ன காரணம் என்பதை அறிய,இந்தப் பெண் எடித் பையரைத் தொடர்பு கொண்டாள்.

எடித் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி,முற்பிறவி நினைவுகளை ஆய்வு செய்தார்.முதல் பிறவியில் அவர் சிறுமியாக இருந்தபோது,ஏரியில் படகில் சென்று விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்திருக்கிறார்.இரண்டாவது பிறவியில் மீனவராக பிறந்து புயலில் சிக்கி கடலுக்குள் விழுந்து இறந்திருக்கிறார்.மூன்றாவது பிறவியில் மாலுமியாக இருக்கும்போது,கப்பல் கவிழ்ந்து இறந்திருக்கிறார்.இந்த நிகழ்ச்சிகள் அவரது ஆன்மாவில் படிந்து அச்ச உணர்வை தோற்றுவித்திருக்கிறது.மெல்ல மெல்ல முன் ஜன்ம நினைவுகளை மறக்கச் செய்து தண்ணீர் பயத்தைப் போக்கினார் எடித் பையர்.இதே போல உயரமான இடம் என்றாலே ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும் தொழிலதிபர் ஒருவர் இருந்தார்.இந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவர் முற்பிறவியில் ஒரு கூலி வேலையாளாக இருந்தார்.உயரமான சர்ச கூரைகளின் மீது ஓடுகளை பழுது பார்க்கும் வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.அப்படி ஒரு சர்ச்சில் அவர் ஓடுகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த போது கீழே தவறிவிழுந்து இறந்திருக்கிறார்.அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து,மறுபிறவியிலும் பயம் காட்டிக்கொண்டிருந்தது.மனோதத்துவ சிகிச்சையின் மூலமாக அந்த பயம் போக்கப்பட்டது.

இதுபோன்ற பல முன் ஜன்ம பிரச்னைகளைத் தீர்த்து வைத்த எடித் இந்த அனுபவங்களை யூ ஹேவ் பீன் ஹியர் பிஃபோர்(you have been here before)என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.நமது முன் ஜன்ம நினைவுகள் அனைத்தும் நமது வலது பக்க மூளையில் பதிந்திருக்கின்றன.அவற்றைக் கொண்டே நாம் நமது வாழ்க்கையில் சம்பாத்தியம்,துணிச்சல்,பயம்,முன் ஜன்ம மனைவி,நட்பு,எதிரி என அனைவரையும் எதிர்கொள்கிறோம்.

ஆதாரம்:தினத்தந்தி,நெல்லைப் பதிப்பு 9.3.2011,
ஆவிகள் உலகம் மாத இதழ்,ஜீன் 2011 பக்கம் 37.

நேரடி ஜோதிடப்பயிற்சி


வேதத்தின் கண்கள் எனப்படுவது இந்து ஜோதிடம் ஆகும்.நவக்கிரகங்களின் செயல்பாடுகளை தினமும் கவனிக்கும் பாக்யம் நமக்குக் கிடைத்தால்,அடுத்த நிமிடம்,அடுத்த நாள்,அடுத்த மாதம் நமது வாழ்வில் என்ன நடக்கும்? என்பதை ஜோதிட அடிப்படைக் கற்பதால் உணர்ந்து கொள்ள முடியும்.அஞ்சல் வழியே ஜோதிடம் கற்பவர்கள் நேரடிப்பயிற்சியின் மூலமாக பல்வேறு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.அனுபவம் முந்தியது;சாஸ்திரம் பிந்தியது.ஒரு நாளுக்கு 90 நிமிடம் வீதம் காலையிலும் மாலையிலும் என 45 நாட்களில் ஜோதிடத்தை தொழில் முறையாகக் கற்றுக்கொள்ளலாம்.இந்தப் பயிற்சியில் சேரத் தேவையான கல்வித்தகுதி:குறைந்த பட்சம் பத்தாவது வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

45 நாட்களுக்கு உங்கள் சொந்தச் செலவில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தங்க வேண்டும்.

கட்டணம் உண்டு.

மேலும் விபரமறிய மின் அஞ்சல் அனுப்பவும்.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

எங்கேதான் தேவையில்லை இந்த சுத்தமும் சுகாதாரமும்“என் அப்பா அம்மா மனிதக்கழிவுகளைத் தோளில் சுமந்து என்னைப் படிக்க வைச்சாங்க.அவங்க கஷ்டம் எனக்குத் தெரியும்.அவர்கள் போல சென்னையில் துப்புரவு வேலை செய்கிற 10,00,000 ஆதி ஆந்திர மக்கள் இருக்காங்க.அவங்க வாழ்க்கை முன்னேற்றம் அடைய அவங்க வேலை செய்யற அதே கழிவறை மூலமா போராடிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஆதி ஆந்திர இளைஞர் சங்கத்தலைவர் வெங்கடேஸ்வரலு மாதிகா.சென்னை காசிமேடு,உயர்நீதிமன்றம் போன்ற இடங்களில் இவர் பராமரித்து வரும் கழிவறைகல் பற்றிய வர்ணனை இதோ: காற்றில் மெலிதாகப்பரவும் பாடல்,ஆண்கள் பெண்கள் கழிப்பறைகளுக்கு நடுவில் உள்ள அறை முழுவதும் நறுமணம்,அறையில் விநாயகர் சன்னதி;பளிச்சென்று துடைத்த முகம் பார்க்கும் கண்ணாடி;நடப்பதற்கு சிவப்புக்கம்பளம்;சிறுநீர் கழிக்க ரூ.1/- மற்றதுக்கு ரூ.2/-பணி செய்யும் இடத்தை கோயிலுக்குச் சமமாகக் கருதுவதால் பிள்ளையார் படம் வைத்திருப்பதாகச் சொல்லுகிறார் வெங்கடேஸ்வரலு.உயர்நீதிமன்றம் வந்த கடலூர் நீதிபதி,இந்தக் கழிவறை பராமரிப்பை என்னிடம் ஒப்படைத்திருப்பதாகத் தெரிவித்தார் என்று இவர் சொல்வது இவரது தொழில் நேர்த்திக்கு அத்தாட்சி.ஆதாரம்:தினமலர் 2.8.11.விஜயபாரதம் 26.8.11

போகிற போக்கில் புண்ணிய காரியம்


2011 ஜீன் 15 அன்று,கொச்சி ஹோட்டல் ஒன்றில் ஆஸ்திரிய பெண் எஸ்பிரெய்டு மரியா ஸ்மித் மரணமடைந்தார்.எட்டு ஆண்டுகளாக அங்கே தனிமை வாசம் செய்த இந்த யூத மூதாட்டி(77) தன்னை தகனம் செய்த சாம்பலை கடலில் கரைக்கும்படி எழுதி வைத்திருந்தார்.அவ்வாறே செய்யப்பட்டது.2003 இல் “ஒரு சில நாட்களுக்காக” என்று கூறி அறை எடுத்தவர் அங்கிருந்து வெளியே போகவே இல்லை.தன் சொத்துக்களில் பாதியை ராஜஸ்தான்,மத்தியப்பிரதேச புலிகள் சரணாலயத்திற்காக எழுதி வைத்தவர் இவர்.இவரது உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது.இதுவும் இவரது விருப்பப்படியே!!!நன்றி:பஞ்சாமிர்தம் பகுதி,பக்கம் 15,விஜயபாரதம் 26.8.11

சில பண மொழிகள்:அனுபவ உண்மைகள் :மறுபதிவுஉனது வாயையும் பணப்பையையும் கவனமாகத் திற;அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை.

நல்லவர்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பார்கள்.

பணத்தின் குவியல் = கவலைகளின் குவியல்

ஏழ்மை பொல்லாதது,அது சிலரைப் பணிவுள்ள மனிதராக மாற்றுகிறது.ஆனால் பலரை தீதும் சூதும் கொண்ட மனிதராக வாழ்ந்து மடியக் காரணமாகின்றது.

எமனுக்கு அஞ்சாத நெஞ்சம் கடன்கொடுத்தவனை நினைத்து அஞ்சும்.

தயவு செய்து எவரிடமும் கடன்படாதீர்கள்.நாயிடம் கடன் பட்டிருந்தால் கூட அதை ‘ஐயா’ என அழைக்கவேண்டியிருக்கும்.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்;இல்லாதவனுக்குக் கவலை.

பணம் நம்மிடம் வரும்போது அதற்கு இரண்டுகால்கள்.நம்மை விட்டுப்போகும் போது அதற்கு பல கால்கள்.

பணத்தை வெறுப்பதாகக்கூறுபவர்கள் வெறுப்பது பிறரது பணத்தைத் தான்!

இன்று நாம் செய்யவேண்டிய காரியம் இரண்டு தான்.
ஒன்று. பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்.
இரண்டு.  ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பணக்காரர்கள் அறிய வேண்டும்.

தனிமையும், தான் யாருக்கும் வேண்டப்படாதவராகிவிட்டோமோ என்ற உணர்வும் மிகக் கொடிய வறுமையாகும்.

எவனால் சிரிக்க முடிகிறதோ,அவன் கட்டாயம் ஏழையாக இருக்க மாட்டான்.


நீ பணக்காரனாக வேண்டுமா? நிறைய்ய்ய பணம் புழங்கும் இடத்திற்கு தினமும் ஒருமுறை போய்வருவது உனது கடமைகளில் முதன்மையானதாக இருக்கட்டும்.அடுத்தசில வருடங்களில் உனது இடத்தில் பணம் ஒரு ஊற்றாக பெருக்கெடுக்கும்.

குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்க்கும் வரைதான் அதை நாம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.அதன் பிறகு, அது நம்மையும், தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும்;கூடவே தன்னையே பல மடங்கு பெருக்கிக் கொண்டே செல்லும்.இது அனுபவ உண்மை.


இயேசு நாதர் பற்றிய உண்மைகளைக் கூறும் இன்னொரு புத்தகம் :மறுபதிவுஹோல்கர் ஹெர்ஸ்டன் என்ற ஜெர்மனியர் Jesus Lived in India  என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதில் ‘நிக்கோலய் நோட்டோவிச்’ என்ற ரஷ்யர் கி.பி.1887 ஆம் வருடத்தில் திபத் வரை நடந்து வந்து ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயம். “இயேசு இந்தியாவில்தான் படித்தார்”.இதை எழுதியதற்காக அவரை ரஷ்ய அரசு சைபீரியா சிறைக்கு அனுப்பியது. விடுதலையானது அவர் திரும்பவும் திபத்துக்கு வந்து லாமாக்களின் நூலகத்தில் சுவடிகளையெல்லாம் ஆராய்ந்து இயேசுவைப் பற்றி எழுதப்பட்டிருக்கிற நூல் இது.இயேசுவின் இளமைக்காலம் (13 வயது முதல் 33 வயது வரை) இந்தியாவில்தான் கழிந்தது என்பதை ஏராளமான சான்றுகளுடன் கூறுகிறது.நன்றி:குமுதம் 6.5.1999. பக்கம் 13.

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகள்-3சரணாகதி தத்துவம் என்பது இந்துதர்மத்தில் இறைவழிபாட்டில் இருக்கும் ஒன்று.கேட்கும் வரமெல்லாம் தரும் ஒரு கோவிலும்,கடவுளும் அமைந்துவிட்டால் நாம் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை;அப்படிப்பட்ட ஒரு கோவிலாக ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி கோவில் அமைந்திருக்கிறது.

கடவுளையே சந்தேகப்படும் குணம் நம்மில் பலருக்கு உண்டு.ஏனெனில்,ஏமாற்றுவது பெரும்பாலான மக்களுக்கும்,ஜோதிடர்களுக்கும்,சாமியார் வேஷத்திலிருப்பவர்களுக்கும் இயல்பு சுபாவமாக இருக்கிறது.அவர்களிடமெல்லாம் ஏமாந்துவிட்டு,இவர்களையும் நம்மையும் படைத்த கடவுளையே நம்பாமலிருப்பதும்,கடவுளின் பெருமைகளை உணர்ந்தவர்கள் சொல்லும்போது,அதை நாம் கேலி செய்வதும் இன்று வழக்கமாக இருக்கிறது.

நாம் நம்முடைய முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த திமிரான காரியங்கள்,அகம்பாவமான அட்டுழியங்கள்,பணத்திமிர்,கல்வித்திமிர்,அரசியல் செல்வாக்கினால் செய்யும் அட்டகாசங்கள் எல்லாமே நம்மை இந்த ஜன்மத்தில் திருப்பித்தாக்கும்.அதுவும் கலிகாலமாக இருப்பதால் காமம் சார்ந்த அவமானங்கள்தான் பெரும்பாலானவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது.இதைப் பற்றி விரிவாக எழுதினால்,ஆன்மீகக்கடல் காமக்கடலாகிவிடும்.இந்த ஒரு வரியிலேயே நமக்குள் புதைந்திருக்கும் சோகங்களை உணர்ந்துகொள்வோம்;இப்படிப்பட்ட சோகங்கள் நீங்கிட மாதம் ஒரு முறை ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியை பவுர்ணமிபூஜையன்று வழிபட விடிவு கிடைக்கத்துவங்கும் என்பது அனுபவ உண்மை!!!

சீனிவாசன் என்பவர் நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது அறிமுகமானார்.அப்போது வருடம் 2006 என நினைக்கிறேன்.ஒரு நாள் அவர் என்னை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.அது எனக்கு மதிய உணவு நேரம் என்பதால்,நிதானமாக அவரது பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து,கணக்கிட்டு அவரைப்பற்றி சுமார் இரண்டு மணிநேரம் ஜாதகபலன்களை விவரித்தேன்.அப்போது அவருக்கு அஷ்டமத்துச்சனி நடந்துகொண்டிருந்தது.ஒரு குறிப்பிட்ட காலத்தை(சுமார் மூன்று மாதங்கள்)க் குறிப்பிட்டு,இந்த கால கட்டத்தில் உங்களுக்கு வாகனத்தால் உயிருக்குச் சமமான கண்டம் உண்டாகும்;இருப்பினும் நீங்கள் தப்பித்துவிடுவீர்கள் என விளக்கினேன்.

இந்த சம்பவம் நிகழ்ந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தன.நான் இந்த ஜோதிடக்கணிப்பை மறந்தே போனேன்.திடீரென ஒரு நாள் சீனிவாசன் எனது வீடு தேடி வந்து,அவரது காரில் என்னை அழைத்துச் சென்றார்.அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று,தனது கையாலேயே எனக்கு உணவு பரிமாறினார்.அவரது வீடு மூன்று கூடங்களாக இருந்தன.வீட்டில் யாரும் இல்லை;பெரும்பாலும் நான் எவரது வீட்டிலும் சாப்பிடுவது கிடையாது.அவரது கட்டாயத்தால்,என்னால் அதை எதிர்க்க  முடியவில்லை;சாப்பிட்டு முடித்ததும்,அவர் சொன்னது என்னைத் திகைக்க வைத்தது.

அவர் சொந்தமாக கார் வைத்திருக்கிறார்.ஒரு டாக்டரை அவரது குடும்பத்துடன் சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பும்போது, விருதுநகர் மாவட்டத்துக்குள் நுழைந்ததும்,ஒரு நூற்பாலைக்கு அருகில் வேகமாக வந்த லாரியால் விபத்து அதிகாலையில் ஏற்பட்டிருக்கிறது;விபத்தில் டாக்டர் குடும்பத்தினர் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு விதத்தில் ரத்தகாயம் அடைந்தனர்.ஆனால்,இவரோ ஒரு காயமும் படாமல் தப்பித்திருக்கிறார்.இவரது காரோ இரண்டாகப் பிளந்திருக்கிறது.சட்டரீதியான,காவல் ரீதியான நடைமுறைகளை முடித்துவிட்டு,ஒரு மாதம் கடந்து எனது நினைவுகளும்,நான் சொன்ன இறைவழிபாட்டைச் செய்து வந்ததையும்,அதனால்,அவர் விபத்திலிருந்து தப்பித்ததையும் நினைத்து அவருக்கு பெருமை தாங்க வில்லை;அதனால்தான் கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க வேண்டியதாகிவிட்டது ;கட்டாயப்படுத்தியமைக்கு மன்னிப்பும் கோரினார்.எனக்கு எனது அன்னை பத்திரகாளிதான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அதன் பிறகு,அவர் தினமும் காலை 8 மணிக்குள் எனது வீட்டுக்குத் தினமும் வரத்துவங்கினார்.அவர் ஸ்ரீவில்லிபுத்தூரின் வடக்கு எல்லையில் ஒரு தெருவில்  குடியிருந்தார்.நானோ,ஸ்ரீவில்லிபுத்தூரின் கிழக்கு எல்லையில் இருக்கும் கடைசித் தெருவில் வாழ்ந்து வந்தேன்.
அவரது பழைய ஸ்கூட்டரில் என்னை ஒரு கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு,என்னை அனுப்பிவைத்துவிட்டு,புறப்படுவதை அவர் வழக்கமாக்கிக் கொண்டார்.நான் தினமும் நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்.என்னைத் தேடி வராதீர்கள் என்று பலமுறைகூறியும் கேட்பதாக இல்லை;

ஒவ்வொரு நாளும் நான் வேலைக்குப் புறப்படும்போதும்,பக்கத்துத் தெருவில் இருக்கும் பத்திரகாளியம்மாளின் கோவிலுக்குப் போய் அன்னையை வழிபட்டப்பின்னரே,புறப்படுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.எனது தெருவுக்கும்,பத்திரகாளி கோவில் இருக்கும் முதலியார்பட்டித்தெருவுக்கும் நடுவே சிவகாசி ரோடு செல்கிறது.

சீனிவாசன் அண்ணன் அந்த ரோட்டின் ஓரத்தில் இருக்கும் ஒரு டீக்கடையில் நின்று கொண்டு போய்விட்டு வாருங்கள் என்பார்.நானும் பத்திரகாளியை தரிசனம் செய்தபின்னரே,அவரது ஸ்கூட்டரில் அமர்ந்து,பேருந்து நிறுத்தத்திற்குச் செல்வேன்.இப்படியே பல மாதங்கள் சென்றன.

ஒரு நாள்,சீனிவாசன் அண்ணன் என்னிடம் கேட்டார்.ஆமா,இந்த தெருவுக்குள் போகுறீங்களே! எங்கதான் போறீங்க என்று கேட்டார்.
எங்கம்மாவைப் பார்க்கப் போகிறேன்.நீங்களும் வாங்க என்றேன்.தினமுமா உங்கம்மாவைப் பார்ப்பீங்க என்றார்.ஆமாம்.எங்கம்மா பத்திரகாளியைப் பார்த்துவிட்டுத்தான் வேலைக்கே போவேன் என்றேன்.அவருக்கு ‘புரிந்தது’.
அது ஒரு வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன்.அன்று ஸ்கூட்டரில் நான் அமர்ந்ததும்,சீனிவாசன் அண்ணன் கேட்டார்:நானும் உங்க அம்மாவைப் பார்க்க வரலாமா?

“இனிமேல் பத்திரகாளி நம்ம அம்மா! தாரளமாக நீங்களும் வாருங்கள்” என்றேன்.

இருவரும் பத்திரகாளியம்மாளின் கோவில் வாசலில்(முதலியார்பட்டித்தெருவின் மையப்பகுதியில்) இறங்கினோம்.கோவில் இருக்கும் சந்துக்குள் நுழைந்தோம்.

கோவில் வாசலை எட்டும்போது,கோவிலுக்குள்ளிருந்து ஒரு சிறுவன்(சுமார் 12 வயதிருக்கும்) வேகமாக ஓடி வந்தான். ‘பொன் மகள் வந்தாள்;பொருள் கோடி தந்தாள்’ என்ற சினிமாப் பாடல் வரிகளை சத்தமாகப் பாடியவாறு ஓடிப்போனான்.சீனிவாசன் அண்ணன் முகத்தில் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி தென்பட்டதைக் கண்டேன்.எனக்கோ,ஒரு ஆழ்ந்த சிந்தனை தோன்றியது.பாட்டு சிவாஜிகணேசன் பாட்டு.இதை எப்படி 12 வயது சிறுவன் பாடுகிறான்? என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.அடுத்த சில நாட்களில் அந்தப் பாடல் ரீ மிக்ஸ் என்பதும்,அதை நடிகர் விஜய் நடித்த சினிமாவில் வந்திருக்கிறது என்பதையும் கண்டறிந்தேன்.
அன்றிலிருந்து,அவரது விவாகரத்து வழக்கில் நம்பிக்கை ஒளி தெரிய ஆரம்பித்ததை பிற்பாடு விவரித்தார்.அன்று மாலை அவரது வழக்கறிஞர் முதன்முறையாக அவரிடம் மரியாதையாகவும்,எதார்த்தமாகவும் பேச ஆரம்பித்தார்.அவரது விவாகரத்து வழக்கின் இறுதி முடிவு எப்படி இருக்கும்? என்பதையும் அன்றே விவரித்தார்.அன்று இரவுதான் சீனிவாசன் அண்ணன் நிம்மதியாகத் தூங்கினார்.இதை அவரே மறு நாள் காலையில் எனது வீட்டுக்கு வரும்போது சொன்னார்.

ஒன்பது மாதங்கள் கடந்தன;செவ்வாய் கோட்சாரப்படி 45 நாட்கள் நீசமாகத்துவங்கியது.சீனிவாசன் அண்ணன் செவ்வாயின் ராசிகளான மேஷம்/விருச்சிகம் ராசிகளில் ஒன்றில் பிறந்தவராக இருந்ததால்,அவரிடம் ஜோதிட எச்சரிக்கையை விவரித்தேன்.

“அண்ணே,இன்றிலிருந்து 45 நாளுக்கு அதாவது இத்தானம் தேதி வரையிலும் யார் உங்களை அவமானப்படுத்தினாலும்,அவர்கள் பக்கம் நியாயமிருந்து உங்கள் மீது பழிவிழுந்தாலும்,அடக்கி வாசிங்க.மீறினால்,வரும் சிக்கல்கள் இன்னும் பல பிரச்னைகளை உங்களுக்கு உருவாக்கிவிடும்”

22 ஆம் நாளில் இவரது விவாகரத்து வழக்கு இறுதிகட்டத்தை எட்டியது.அப்பா,அம்மா இல்லாதவராக இருந்த இவருக்கு இரண்டு அண்ணன்கள்,இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள்.இவர்களில் ஒரு அக்காவுடன் வாழ்ந்துவருகிறார்.திருமணத்தரகர் ஏமாற்றி இவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டனர்.இவரது மனைவியோ பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவிக்கு தாம்பத்திய சுகம் தரும் தகுதி பிறவியிலேயே கிடையாது.இவரது மனைவியின் பெற்றோர்கள்,இவரது வசதியான வீடு,வேலையை புரிந்துகொண்டு,பெண் கொடுத்த கையோடு இவரது சொத்துக்களை அமுக்கிவிட திட்டமிட்டிருந்தனர்.ஆனால்,வெறும் 15 நாளிலேயே இவரது மனைவி தனது தாயாரின் வீட்டுக்குப் போனவர்,வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.சுமார் எட்டு ஆண்டுகளாக விவாகரத்து வழக்கு நடைபெற்றது.

இந்நிலையில் இவரது தரப்பு கருத்தை அறிய அன்று நீதிமன்றத்தில் கூண்டில் ஏறினார்.கருத்து கூறிவிட்டு,இறங்கியதும்,பெண்ணின் அம்மா,பெண்ணின் அத்தை இருவரும் இவரை அடிக்க கோர்ட் வளாகத்திலேயே பாய்ந்தனர்.அந்த நேரத்தில்,இவருக்கு நான் சொன்ன ஜோதிட எச்சரிக்கை ஞாபகத்துக்கு வந்தது.உடனே,அவர் தனது சட்டைப்பையில் வைத்திருந்த பத்திரகாளிகோவில் மஞ்சள் காப்பை தனது நெற்றியில் பூசினார்;அதற்குள் இவரது மனைவியின் அம்மாவும்,அத்தையும் இவரை அடிக்க நெருங்கிவிட்டனர்;இவரோ கோர்ட் வளாகத்தைச் சுற்றி ஓட ஆரம்பித்தார்.கோர்ட் வளாகம் மொத்தமும் இவரது ஓட்டத்தையும்,அந்தப் பெண்களின் கோபத்தையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

அடேய்,அயோக்கியப்பயலே,எம் பொண்ணுக்கு அஞ்சு லட்சம் குடுடா ராஸ்கல் என்று திரும்பத் திரும்ப கத்திக்கொண்டே சீனிவாசன் அண்ணனைத் துரத்திட,இவரோ சுமார் மூன்று முறை கோர்ட் வளாகத்தை சுற்றிவந்துவிட்டார்.இந்த பரபரப்பில் விஷயம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிக்குத் தெரிய வர,சீனிவாசன் அண்ணனின் எதிர்தரப்பு வக்கீலுக்கு செம திட்டு விழுந்தது.உடனே,அந்த வக்கீலும் ஓடோடிச் சென்று,தனது தரப்பு பெண்களை சமாதானப்படுத்தினார்.

அடுத்த மூன்று மாதங்களில் இவருக்கு விவாகரத்துத் தீர்ப்பு கிடைத்தது.அதுவும் எப்படி? ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியம் இல்லை என்ற வரிகளில் அவரது ஆச்சரியத்துக்கு அளவே இல்லை;அவரும் தினமும் ஸ்ரீபத்திரகாளியம்மாளின் கோவிலுக்கு வர ஆரம்பித்துவிட்டார்.

இதுபோல இன்னும் ஏராளமான சம்பவங்களில் பத்திரகாளியின் அருளை நாம் ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வாசிக்கப் போகிறோம்.

ஓம்ஹ்ரீம்மஹாபைரவாய நமஹ

ஆவணி மாத அமாவாசை(28.8.11)ஐப் பயன்படுத்துவோம்
நவக்கிரகங்களில் முதன்மையானவர்;எட்டுக்கிரகங்களை இயங்க வைப்பவர்;மனிதனின் மூளையை இயக்குபவர் சூரியன் எனப்படும் ரவி ஆவார்.அவர் ஆட்சி பெறுவது சிம்ம ராசியில்! ஆட்சி பெறும்(பலம் பெறும்) மாதம் இந்த ஆவணி மாதம்.இந்த ஆவணியில் நாளை அமாவாசை வருகிறது.


பல நாட்கள்/பல மாதங்கள் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ மந்திரத்தை ஜபித்துவந்தவர்கள்,ஏதாவது சிலபல காரணங்களால்  ஜபிக்க முடியாமல் நிறுத்தியவர்களும் நாளை தொடர ஆரம்பிக்கலாம்;இனி தடங்கல் வராது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்ய ஆரம்பிக்க மிகவும் ஏற்ற நாள் நாளை 28.8.2011 ஞாயிற்றுக்கிழமைஆகும்.ஞாயிறும் அமாவாசையும்,சூரிய பலமும் சேர்ந்து வரும் அரிய அற்புதமான நாள் நாளை என்பதால்,இந்த நாளில் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டைத் துவக்கலாம்.துவக்கும் காலம் நாளை இராகு கால நேரமாகிய மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான காலம் ஆகும்.
நவக்கிரகங்களில் சூரியன் என்னும் ரவியின் பிராண தேவதை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.எனவே, நாளை மிக அரிய நாளாகும்.ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஒரிஜினல் புகைப்படம் இது வரை ஆன்மீகக்கடல் மூலமாக வாங்காத வாசகர்கள் செய்ய வேண்டியது,நாளை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தினை மாலை 4.30 முதல் 6.00 மணி வரை 330 தடவை உங்கள் வீட்டுப்பூஜை அறையில் ஜபிக்கலாம்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-10
கேள்வி:சித்தர்கள் ஆட்சி பூமியில் ஆரம்பிக்க இருப்பதாக எழுதியுள்ளீர்கள்.எப்போது பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்கும்? ஏன் துவங்கும்?பதில்:நல்ல கேள்வி!!! ஏற்கனவே விரிவான விளக்கத்துடன் ஆன்மீகக்கடலில் வெளிவந்திருக்கிறது.இருப்பினும்,இன்னொரு தடவை விவரிப்பதில் மகிழ்ச்சியே!பூமியில் 435 கோடி வருடங்கள்,இந்துதர்மத்தில் படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கு ஒரு நாள்.அப்படி பிரம்மா நூறாண்டுகள் வரை வாழ்ந்து,மனித படைப்புக்களை நிர்வாகிப்பார்;26.12.2012 அன்றோடு அவருக்கு நூறு வயது நிறைவடைகிறது.அடுத்த பிரம்மாவாக இராமாயணத்தில் ஸ்ரீஇராமபிரானின் பக்தன் ஆஞ்சநேயர் பொறுப்பேற்க இருக்கிறார்.அப்படி அவர் பிரம்மாவாகப் பொறுப்பேற்க ஆகும் இடைவெளி வானுலகில் ஓரிரு நாட்கள்/ஓரிரு மணித்துளிகள் தான்.ஆனால்,அதுவே பூமியில் 72,000 ஆண்டுகளாக ஆகிவிடும்.இந்த இடைவெளியில் சித்தர்களின் ஆட்சி பூமியில் இருக்கும்.இது சிவபெருமானில் சதாசிவன் என்பவர் அகில பிரபஞ்சத்தையும் நிர்வாகிப்பவர்.அவரது அனுமதியோடு சித்தர்கள் ஒவ்வொருவராக பூமியை ஆளப்போகிறார்கள்.

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குவதற்கான முதல் அடையாளம் தமிழ்நாட்டின் புராதனமான கோவில்களின் குளங்களில் எப்போதும் நறுமணம் வீசத்துவங்கும்.சித்தர்களின் ஆசி பெற்ற ஒரு தேசபக்தன் + மாவீரன் இந்தியாவின் தலைமை பீடத்தை அடுத்த சில ஆண்டுகளில் கைப்பற்ற இருக்கிறார்.அதற்கு அடையாளமாக பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவப்பட்டு,அதன் வழிபாட்டு முறையில் சிறந்த மாற்றம் வரும்;திரு அண்ணாமலை சர்வ தேச சுற்றுலாத்தலமாக பிரபலமடையும்.திரு அண்ணாமலையின் வழிபாட்டு முறையிலும் அதிரடியான மாற்றம் வரும்.தென் இந்தியா இரண்டு தீவுகளாக மாறும்.சென்னை ஒரு தீவாகவும்,சென்னையிலிருந்து கேரளாவரை சில குறிப்பிட்ட பகுதி சூயஸ் கால்வாய் போலவும் மாற இருக்கிறது.

உலகில் இருக்கும் அனைத்து மதத் தலைவர்களும் தங்களின் ஆன்மீக சக்தியை இழப்பார்கள்.அப்படி இழந்ததற்கு சென்னையில் இருக்கும் ஒரு துறவியே காரணம் என்பதை அறிந்து,நேரடியாக வருவார்கள்.இதைத்தான் சுவாமி விவேகானந்தர், “சென்னையிலிருந்து புறப்படும் ஒரு ஆன்மீகப்பேரலை இந்த உலகம் முழுவதையும் தாக்கும்.அதன் தாக்குதலால் கத்தியாலும்,வாளாலும்,பீரங்கிகளாலும்,துப்பாக்கிகளாலும் எந்த மதங்கள் பரவினவோ,அவை அனைத்தும் சக்தியிழக்கும்” என்று எப்போதோ சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்.ஐரோப்பா கிறிஸ்தவ மதத்தைக் கைகழுவி விட்டு,இந்து மதத்தை ஏற்கும்.உலகம் இந்து மயமாகும்.
முதலில் கொங்ணர் 120 ஆண்டுகளுக்கு இந்த பூமியை ஆட்சி செய்வார்.அதன் ஆரம்பமாக பத்து கிலோ மீட்டர்கள் நீளமும் மூன்று கிலோமீட்டர்கள் உயரமும் கொண்ட ஒரு கடலலை சென்னையைத் தாக்கி,நாறடிக்கும்.2010 ஆம் ஆண்டில் சதுரகிரியில் சித்தர்கள் மாநாடு நடைபெற்றிருக்கிறது.அதன் முடிவாக,சித்தர்கள் ஆசி பெற்ற அந்த மாவீரன் வெகு விரைவில் இந்தியாவின் தலைமைபீடத்தை அலங்கரிக்கப்போகிறார்.மறுபக்கம்,இந்தியா கடக ராசியாக இருப்பதால்,30.11.2011 அன்று வர இருக்கும் துலாம் சனிப்பெயர்ச்சியானது இந்தியாவுக்கு 2014 வரை கடுமையான சோதனைகளைத் தரப்போகிறது.சீனாவின் தொல்லை,இந்தியாவின் வணிகம்,அரசியல்,தனிமனித வாழ்க்கை,தேச பாதுகாப்பு,சிறு தொழில்,பங்குச்சந்தை என எல்லாவற்றிலும் கடுமையான பாதிப்பைத் தரப்போகிறது.இது பற்றி எந்த பத்திரிகையும் வாய் திறக்காது.அவர்களுக்கு அமெரிக்காவை கண்மூடித்தனமாக எதிர்க்கத் தெரியும்.பிரசவ வலியைத் தாய்மார்கள் உணர்ந்திருப்பார்கள்.அது மறு ஜன்மம் எடுப்பதற்குச் சமம்.அதேபோல,இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவும் முன்பாக இந்து தர்மசக்தியை அழிக்க ஒழித்துக்கட்ட உலகமே திரண்டு கொண்டிருக்கிறது என்பது நிஜம்.2010 முதல் 2027 வரையிலுமான கால கட்டம் இந்தியாவை மையமாக வைத்து உலக அரசியல் சுழலப்போகிறது.இதில் இந்தியாவில் தொலை நோக்கு இல்லாத தலைவர்களால் நாம் ஏராளமானவற்றை இழக்கப்போகிறோம்.இந்த இழப்புகள் பெருமளவு குறைய வேண்டுமென்பதற்காகத்தான் எனது ஆன்மீகக்கடல் வாசகர்களை தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஓம்ஹ்ரீம் மஹாபைரவாயநமஹ  ஜபிக்க வற்புறுத்துகிறேன்.சித்தர்கள் ஆட்சி ஆரம்பிக்கும் வரையிலும் நீதி நேர்மைக்காக மட்டுமே வாழ்ந்து வந்தவர்கள்,அதனாலேயே சொத்துக்கள்,குடும்பத்தை இழந்தவர்கள்,அவர்களின் வாரிசுகள் செல்வச்செழிப்போடும்,நிம்மதியோடும் வாழத்துவங்குவார்கள்.சுருட்டுவதையே முழு நேரத்தொழிலாகக் கொண்டவர்கள் ஆயுள் முழுக்கவும்,அடுத்த ஜன்மத்திலும் கஷ்டப்படப்போகிறார்கள்,நாத்திகச்சிங்கங்களுக்கு இந்தக்கருத்துக்கள் மூடநம்பிக்கையின் சிகரமாக இருக்கட்டும்.அவர்களிலும் நேர்மையாக இருந்தவர்கள் தப்பித்தார்கள்;மற்றவர்கள் ஒழிந்தார்கள் என்பது இன்றிலிருந்து சில மாதங்களிலேயே உணரத்துவங்குவார்கள்.இந்த நூற்றாண்டு முடிவதற்குள்ளாக நமது பங்காளிநாடு மூன்றாக உடையும்.அதில் ஒன்று இந்தியாவுடன் இணையும்;மற்றது வலிமையான ஆப்கானிஸ்தானுடன் இணையும்.


1990 முதல் இன்று வரையிலும் நாடி ஜோதிடம்,ஜோதிட இதழ்களில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பாக இதை நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணாடி மாளிகையும்,நமது கர்ம நிவாரணப்பரிகாரமும்

இன்று தொலைக்காட்சித்தொடர்களால்,பொறாமை என்பது செல்போன் அளவுக்கு மலிந்துவிட்டது.தான் மட்டும் நன்றாக,சொகுசாக இருக்கவேண்டும்;தன்னைத் தவிர மற்ற அனைவருமே நாசமாகப் போக வேண்டும் என்ற எண்ணம் சகஜமாகிவிட்டது.அதேசமயம்,எந்த ஒரு நயவஞ்சகத்தையும் எதிர்கொள்ளத் தெரியாத அப்பாவித்தமிழர்களின் எண்ணிக்கையே இன்று தமிழ்நாடு மக்கள்த் தொகையில் 80% பேர்கள் இருக்கின்றனர்.எனவே,கண் திருஷ்டி,பொறாமையின் தாக்கத்தால் பலரது தொழில் மற்றும் வேலை பல தடைகளை தினமும் சந்திக்க வேண்டியிருக்கிறது.இதை நீக்கிட,ஒரு சுலபப் பரிகாரத்தை  சகஸ்ரவடுகர் அவர்கள் நமக்கு அருளியுள்ளார்.

ஏதாவது ஒரு ஏகாதசி திதியன்று காலையில் விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரவும்.வந்து,செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமியின் மானுடப்பிறப்பாகிய ஸ்ரீஆண்டாளைத் தரிசித்து,தமது பெயருக்கு அர்ச்சனை செய்யவும்.செய்தபின்னர்,அங்கிருக்கும் கண்ணாடிமாளிகைக்குள் செல்ல நுழைவுச்சீட்டு எடுத்துக்கொள்ளவும்.ஆனால்,இந்தப் பரிகாரப்படி 16 தடவை சுற்றி வர வேண்டியிருக்கும்.அதற்கு ஏற்றாற்போல்,தயாராகவும்.

கண்ணாடி மாளிகைக்குள் முதலில் கன்னி மூலையில் ஒரு நிமிடம் நின்று உங்களின் குல தெய்வத்தை முதலில் மனதார வேண்டிக்கொள்ளவும்;அடுத்ததாக விநாயகரை மனதார வேண்டிக்கொள்ளவும்;பிறகு உங்களின் வாழ்க்கை லட்சியத்தை வேண்டவும்.பிறகு கால் பங்கு சுற்றிவிட்டு,வாயுமூலையில் நின்று எதிரே இருக்கும் கண்ணாடிகளைப் பார்த்தவாறு இதே போல், ஒரு நிமிடம் வரை வேண்டவும்.அடுத்த கால் பங்கு சுற்றிவிட்டு,அக்னி மூலையில் நின்று இதே போல் ஒரு நிமிடம் வேண்டவும்.உடலுக்குள் ஒரு வித எரிச்சல் வெளிப்படுவதை உணர்வீர்கள்.பிறகு அடுத்த கால் பங்கு சுற்றி ஈசான மூலையில் இதே போல ஒரு நிமிடம் நின்று வேண்டவும்.

ஒரு சுற்று முடிந்தது.மீதி 15 முறை மிகவும் நிதானமாக மேற்கூறியது போல செய்து கண்ணாடிகளில் தெரியும் உங்களின் உருவங்களைப் பார்த்தவாறு சுற்றவும்.வெளியே வந்து யாருக்காவது ஒரு வேளை அன்னதானம் அல்லது பசுவுக்கு பழதானம் அல்லது அகத்திக்கீரைதானம் செய்யவும்.

இது போல,தொடர்ந்து 9 நாட்கள் செய்ய வேண்டும்.வெளியூர்,வெளிமாநிலம்,தொலைதூர நகரங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்வதற்குப்பதிலாக வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் அல்லது ஓரிரு வாரத்துக்கு ஒரு நாள் வீதம் ஒன்பது நாட்கள் செய்து முடித்ததும்,அவர்களின் அத்தனை சிரமங்களும் நீங்கும்.முயன்று பார்க்கலாமா?

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

* படத்தில் தெரிவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருக்கும் கண்ணாடி மாளிகை
சித்தராக விரும்பினாலும்,சித்தரை சந்திக்க விரும்பினாலும் அதை நிறைவேற்றும் பைரவ மந்திர ஜபம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,தினத்தந்தியில் ஹனுத்தாஸன் அவர்கள் அகத்தியர் நாடி ஜோதிடம்,அதிசய சித்தர்கள் என்ற இரு தொடர்களை தினத்தந்தியில் எழுதி தமிழ் உலகத்தில் மாபெரும் புரட்சியை உண்டாக்கினார்.இந்த தொடர்கள் மூலமாக,தமிழ்மக்கள் தமது கர்மாக்களை நீக்கி நிம்மதியோடு வாழ ஹனுமத்தாஸனை சந்திக்க துடித்தனர்.மேலும் சதுரகிரி இன்று பரபரப்பான சிவாலயமாகிவிட்டது.

ஏராளமான தமிழ் இளைஞர்கள் சித்தர்களில் யாரையாவது ஒருவரை சந்திக்கத் துடித்துக்கொண்டிருப்பது இன்று இயல்பாகிவிட்டது.அவர்கள் அனைவரும் செய்ய வேண்டியது இதுதான்: ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்துவர வேண்டும்.அப்படி அவர்கள்  ஜபித்து வந்தால்,அவர்களின் ஜப எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியதும்,அவர்கள் விரும்பிய சித்தரை தரிசிக்கும் சுலப வழிமுறை கிடைக்கும் என்பது உறுதி.

சித்தராக வேண்டுவோர்கள் செய்ய வேண்டியது,அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10,00,000 தடவை ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்துவிட்டால்,அஷ்டமா சித்திகளும் கைகூடி,சித்தராக முடியும்.
சித்தர்களில் முதன்மையானவர்கள் 18 பேர்கள்.சித்தர்களின் உலகில் பல்லாயிரம்பேர்கள் இருக்கின்றனர்.கலிகாலத்தில் மட்டுமே சுலபமாக சித்தராக முடியும் என்பதை உங்களால் நம்ப முடியுமா?

சித்து நிலையை எட்டியவர்கள் எப்போதும் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதில்லை;

1,00,00,000 தடவை ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்தால்,ஜபிப்பவருக்கு சிவதரிசனம் கிடைப்பது சர்வ நிச்சயம்.சிவ தரிசனம் செய்தவருக்கு மறு பிறவி கிடையாது என்பது சிவபுராணத்தகவல்.ஒரு கோடி தடவை ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்க,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காலம் ஆகுமாம்.
ஆன்மீகப்பாதையில் ஒவ்வொரு பதவி உயர்வும் இன்றைய கலிகாலத்தில் பத்திரிகையில் விளம்பரப்படுத்திட முடியாது.எனவே, சித்தராக விரும்புவோர்,முதலில் அசைவத்தைக் கைவிட வேண்டும்.அடுத்ததாக,ஆசைகளை,பந்தபாசங்களை அறுக்க வேண்டும்.உங்களால் முடியுமா? முடியும் எனில் ஒரு கோடி ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்கத் தயாராகுங்கள்.27.9.2011 செவ்வாய்க்கிழமையன்று புரட்டாசி அமாவாசை வருகிறது.சித்தர்களுக்கும் செவ்வாய்க்கிழமைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.எனவே,இந்த நன்னாளைப் பயன்படுத்தி,உங்கள் குலதெய்வத்திடம் ஆசியும்,அனுமதியும் வாங்கிக்கொண்டு,முழு முதற்கடவுள் கணபதியை வழிபட்டு விட்டு,ஒருகோடி ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்க ஆரம்பியுங்கள்.

(ஒருவேளை இந்த முயற்சியில் ஏதாவது தடை வந்தாலும் அடுத்த பிறவியில் இந்த முயற்சி ஜெயிக்கும்.)

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


திருபோரூர் சுயம்பு கந்தசாமி கோவில் பெருமைகள்இந்த கோவிலில்தான் விடுதலை புலி பிரபாகரனின் திருமணம் நடந்தது.


இந்த கோவில் முருகனை கொண்டுதான் விக்ரம் நடித்த "கந்தசாமி" படம் எடுக்கப்பட்டது.இந்த கோவிலில் தான் எடுக்க பட்டது.


அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
மூலவர் : கந்தசுவாமி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : திருப்போரூர்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடுபாடியவர்கள்:

அருணகிரிநாதர், சிதம்பர சுவாமிதிருவிழா:

கந்தசஷ்டி, நவராத்திரி, வைகாசி விசாகம்

தல சிறப்பு:

கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார்.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் திருப்போரூர்-603 110 காஞ்சிபுரம் மாவட்டம்.பொது தகவல்:

இங்கே இதெல்லாம் சிறப்பு!* பிரளயத்தால் ஆறு முறை அழிவைச்சந்தித்து, ஏழாவது முறை கட்டப்பட்ட கோயிலே தற்போது இருக்கிறது.* ஓம்கார அமைப்பில் அமைந்த இக்கோயில், சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சன்னதியிலிருந்து பார்த்தால், முன்னால் செல்பவர்களின் முதுகு தெரியாதபடி நுட்பமாக கட்டப்பட்டுள்ளது.* கொடிமரம் கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது.* சுவாமிமலை, திருத்தணி தலங்களைப்போலவே இங்கும் சுவாமி எதிரே ஐராவதம் (வெள்ளையானை) வாகனமாக உள்ளது.* வள்ளி தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.* முருகன் சன்னதி கோஷ்டத்தில் பிரம்மாவின் இடத்தில், பிரம்ம சாஸ்தா (முருகனின் ஒரு வடிவம்) இருக்கிறார். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.* வைகாசி விசாகத்தன்று சுவாமிக்கு திருப்பாவாடை வைபவமும், தைப்பூசத்தை ஒட்டி சுவாமிக்கு தெப்பத்திருவிழாவும் விசேஷமாக நடக்கும்.

பிரார்த்தனை

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள யந்திர முருகனை வழிபடுகின்றனர். மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.நேர்த்திக்கடன்:

இங்குள்ள சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்தும், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

யந்திர முருகன்: கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன் என்பதால், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இந்த யந்திரத்திற்கு (ஸ்ரீசக்ரம்) திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.முருகன் சன்னதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்வதுண்டு.மும்மூர்த்தி அம்ச முருகன்: சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சமாக வழிபடுவர். பிரணவ மந்திர பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலடைத்தபோது, முருகனே படைப்புத்தொழில் செய்தார். இதனால் இவரை பிரம்மாவின் அம்சமாகவும் வழிபடுவதுண்டு. திருச்செந்தூர் போன்ற தலங்களில் விழாக்காலங்களில் சுவாமி, மும்மூர்த்திகளின் அலங்காரத்தில் எழுந்தருளுவார். இங்கு கந்தசுவாமி, மும்மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி தருகிறார். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை இவரிடம் உள்ளது. சிவனைப்போல வலது கையை ஆசிர்வதித்தபடி அபயஹஸ்த நிலையிலும், பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலையிலும் காட்சி தருகிறார்.அபிஷேகம் இல்லை: கந்தசுவாமி இத்தலத்தில் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தியாக அருளுகிறார். கோயிலுக்கு அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோயில் உள்ளது. இவ்வாறு மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம் இது. முன்பு, முருகன் சிலை மட்டும் இருந்தது. பின்னர் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர். முருகன் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்துகின்றனர்.மருமகள்களுக்கு நவராத்திரி: சிவன் கோயில்களிலுள்ள அம்பாளுக்கும், பெருமாள் கோயில்களில் தாயாருக்கும் தான் நவராத்திரி விழா நடத்துவது வழக்கம். ஆனால், இங்கு அவளது மருமகள்களான வள்ளி தெய்வானைக்கு நவராத்திரி நடத்துகின்றனர். இந்நாட்களில் வள்ளி, தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படும். சிவனைப்போல இங்கு ஐப்பசி பவுர்ணமியில் முருகனுக்கு அன்னாபிஷேகமும், சிவராத்திரியன்று இரவிலும் நான்கு கால பூஜையும் நடக்கிறது. இங்குள்ள அம்பிகை புண்ணியகாரணியம்மன் எனப்படுகிறாள்.பனை பாத்திரம்: இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம். நைவேத்தியத்திற்கான அரிசியை இதில்தான் வைத்துள்ளனர்.முருகனருள் பெற்ற அடியவர்: இக்கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார். சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோயில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை வைபவம் நடக்கும். இவ்வேளையில் முருகன் எதிரே, சிதம்பர சுவாமிகளை வைத்து, அவர் சுவாமியுடன் இரண்டறக் கலப்பது போல பாவனை செய்வர்.வேதங்களின் தலைவர்: அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலம் பற்றி பாடியுள்ளார். அவர் கந்தசுவாமியை, சகல வேதங்களின் வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் சுவாமிக்கு வேத உச்சி யாக சுவாமி என்றும் பெயருண்டு. அனைத்து வேதங்களுக்கும் தலைமையாக இருப்பவர் என்பது இதன்பொருள். கல்வியில் சிறக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.உபதேச முருகன்: கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இவ்வேளையில் கஜமுகன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன், அஜமுகி, தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார். மாசி பிரம்மோற்ஸவத்தின்போது, முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்யும் வைபவம் நடக்கும். முருகன், வாய் மீது கை வைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் சிலையும் இங்குள்ளது. இவ்வேளையில் மகாவிஷ்ணு, விநாயகர், நந்தி, பிரம்மா, இந்திரன் ஆகியோரும் உடனிருப்பர். இவ்விழாவின் மூன்றாம் நாளில் முருகன், ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடாவார். கையில் வில்லேந்தி, மயில்மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமிக்கும் இங்கு சிலை உள்ளது.அதிரச அம்பிகை: கோயில் பிரகாரத்தில் வான்மீகநாதர் சன்னதி உள்ளது. பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்க காரணமாக இருப்பதால் இவருக்கான அம்பிகைக்கு புண்ணியகாரணியம்மன் என்று பெயர். வழக்கமான சுவாமி விமானத்தின் மேலே ஒரு கலசம்தான் இருக்கும். இவளது சன்னதி விமானம், ஐந்து கலசங்களுடன் இருக்கிறது. கேதார கவுரி நோன்பன்று (தீபாவளிக்கு மறுநாள் வரும் விரதம்) இவளது சன்னதியில் விசேஷ பூஜை நடக்கும். இச்சமயத்தில், பெண்கள் சுமங்கலி பாக்கியத்திற்காக இவளுக்கு அதிரசம் படைத்து வேண்டிக்கொள்வர்.
தல வரலாறு:

முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். இங்கு கந்தசுவாமி என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. இக்கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார். சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோயில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும். இவ்வேளையில் முருகன் எதிரே, சிதம்பர சுவாமிகளை வைத்து, அவர் சுவாமியுடன் இரண்டறக் கலப்பது போல பாவனை செய்வர்.
சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார்.

சோழவந்தான் சுயம்பு சனிஸ்வர பகவானை தெரியுமா?அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில்
மூலவர் : சனீஸ்வர பகவான்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : மாவலிங்க மரம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சோழவந்தான்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு-

திருவிழா:

சனிப்பெயர்ச்சி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

தல சிறப்பு:

இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், சோழவந்தான்-625 214, மதுரை மாவட்டம்.பொது தகவல்:

சனி பகவானுக்காக அமைந்துள்ள தனிக்கோயில்களில் இதுவும் ஒன்று.
பிரார்த்தனை

விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார ÷க்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:

சனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.

தலபெருமை:

மாவலிங்மரத் தடியில் சுயம்புவாக தோன்றியதால் இதுவே ஸ்தல விருட்சமாயிற்று. விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார ÷க்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.


தல வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தானிலுள்ள ஆஞ்சநேயர் மற்றும் சித்திவிநாயகர் கோயிலுக்கு புத்தம்புது மலர்கள் பறிப்பதற்காக அமைக்க ஒரு நந்தவனம் அமைக்கப்பட்டது. இந்த தோட்டத்தில் பாரிஜாதம், நாகலிங்கம், மாவலிங்க பூ மரங்களும், மூலிகை குணம் கொண்ட செடிகளும் வளர்க்கப்பட்டன. அக்ரஹார மக்கள் இந்த நந்தவனத்தை பராமரித்து வந்தனர். காலப்போக்கில் இந்த நந்தவனம் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் அடர்ந்து விஷஜந்துக்கள் வசிக்கும் இடமாக மாறி விட்டது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பயத்தில் ஆழ்ந்தனர். 40 ஆண்டுகளுக்க முன்பு, இந்த இடத்தை பக்தர்கள் மீண்டும் சுத்தப்படுத்தினர். மாவலிங்க மரத்தடியில் இளைஞர் ஒருவர் புற்களை அகற்ற மண்வெட்டியால் தோண்டிய போது ஏதோ தென்பட்டது. மூன்றடி ஆழத்திற்கு தோண்டியதும், காக வாகனத்துடன், நின்ற கோலத்தில் சனீஸ்வரபகவான் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இவரை தரிசிக்க வந்தனர்.

சிருங்கேரி மற்றும் காஞ்சி சுவாமிகளின் அருளாசியுடன் சுயம்பு சிலையை நிறுத்தி பீடம் அமைத்து கோயில் கட்டடம் கட்ட அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மக்கள் விரும்பினர். 1975ல் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை,மாலையில் சனீஸ்வரபகவானுக்கு பூஜைகள் நடந்து வருகிறது.சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.


ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி பாகம் 9
கேள்வி:எந்த அடிப்படையில் ஆன்மீகக்கடல் வலைப்பூவுக்கு செய்திகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?


பதில்:தினமும் செய்தித்தாள்,மாத வார இதழ்கள் வாசிப்பது எனது குணம்.அவற்றில் முதல் முறையாக வாசிக்கும்போதே,எந்த செய்தி எனது நட்பு வட்டத்துக்குத் தேவையோ,அதை மனதில் பதிந்துகொள்வேன்.ஓரிரு நாட்களுக்குப் பிறகும்,அந்த செய்தி அனைவருக்கும் அவசியம் தேவை என்ற எண்ணம் வந்தால்,ஆன்மீகக்கடலில் பதிவாக வெளியிடுவதுண்டு. . .

கேள்வி:ஆனால்,அடிக்கடி அனுபவ உண்மை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களே?

பதில்:(ஆழமான பார்வை பார்த்துவிட்டு) நிஜம்தான், எனக்கு ஓரளவு வருமானம் வருவதால்,என்னால் நிறைய சிந்திக்க, ஆராய நேரம் கிடைக்கிறது.
கேள்வி:உங்களின் வார்த்தைகள் எனக்குள் மயிர்க்கூச்செரியச் செய்கிறது.நீங்கள் நிராகரித்த ஆன்மீக விஷயங்களில் ஒன்றிரண்டைச் சொல்ல முடியுமா?

பதில்:(மிக நீண்ட நேரத்துக்குப்பின்) இந்தப் பிறவியில் அன்னதானம் செய்பவர்கள்,அடுத்த பிறவியில் நல்ல கலராக பிறப்பார்கள் என்பது ஒரு ஆன்மீகக் கருத்து.

இந்தக் கருத்தின் அடிப்படையில்,நடிகை தமன்னாவை எடுத்துக்கொள்வோம்.16 ஆம் வயதில் சினிமா உலகத்துக்கு அந்தப் பெண் அறிமுகமானாள்.அவளது கலரைப் பார்த்தே அவள் ஒரு அழகி என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.அவளைப் பார்த்து மயங்க வேண்டியிருக்கிறது; அந்த கலரை எடுத்துவிட்டால்,தமன்னாவும் ஒரு சராசரி இளம்பெண்தான்.இந்தக் கருத்து உண்மையென்று வைத்துக்கொண்டால்,இதை உணர மறு ஜன்மம் எடுத்து நான் ஆன்மீகக்கடலை நடத்த வேண்டியிருக்கும்.

கேள்வி:ஹா ஹீ ஹ்ஹோ ஹா ஹா ஹாஹ் ஆ

பதில்:இது போன்று பல விஷயங்களை நிராகரித்து இருக்கிறேன்.

கேள்வி:நீங்கள் சொல்வதைப் பார்த்தால்,தாங்கள் நிராகரித்த ஆன்மீக ரகசியங்களைக் கேட்டாலே சிரிப்பு வரும்போல. . .

பதில்: சிரிப்பு மட்டுமல்ல;நான் ஆன்மீகக்கடல் மூலமாக மூட நம்பிக்கையைப் பரப்ப விரும்ப வில்லை;கஷ்டப்படும் தமிழ் சகோதர,சகோதரிகள் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாகவும்,ஸ்ரீகாலபைரவ வழிபாட்டுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும் எந்தப் பிரச்னையுமின்றியும்,நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும்,யாருக்கும் எந்த விதத்திலும் தீங்கு தராமலும் வாழ வேண்டும்.நாத்திகம் பேசுபவர்களைப்பற்றி எனக்கு சிறிதும் கவலையில்லை;

எதையும் மறுப்பது சுலபம்;அதை நிரூபிப்பது சிரமம்.நான் சிரமப்படத் தயார்.மறுக்கும் நாத்திகவாதிகளால் அதை நிரூபிக்க முடியாது.சும்மா கத்திக்கொண்டே போக வேண்டியதுதான்.

பேட்டி தொடரும். . .

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
அறிவியல் வளர்ச்சியும்,ஆன்மீகப்புரட்சியும்


மேலே இருக்கும் புகைப்படம் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்டது.புவியியல் வரைபடம் பற்றிய அடிப்படை ஞானமுள்ளவர்களுக்கு இதில் மேற்கு ஐரோப்பா இருப்பது புரியும்.
பளிச்சென்று தெரியும் பகுதியில் நீலமாக இருப்பது கடல் பகுதி;பச்சையாக இருப்பது வனாந்திரப்பகுதி;இருட்டாக இருப்பது இரவு எப்படி பூமியின் சில பகுதிகளைக் கவ்வுகிறது என்பதைக் காணலாம்.இந்த புகைப்படம் மனித அறிவாற்றலின் உச்சம் எனக் கூறலாம்.

இந்த புகைப்படத்தை சில கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தால்,பூமியில் நிலப்பரப்பிலும்/நீர்ப்பரப்பிலும் என்னென்ன கனிமவளங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.இதுவும் மனித அறிவாற்றலின் உச்சமே!ஆனால்,இவையெல்லாம் புற உலகிற்குத் தேவையான விஷயங்களில் சாதனை செய்திருக்கிறோம் என்பதற்குச் சான்றாகும்.

அமெரிக்காவோ,ஜெர்மனியோ,இங்கிலாந்தோ மனித கனவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறதா?அதன் முடிவுகளை வெளியிடமுடிகிறதா?

சோவியத் ருஷ்யாவில் ஒரு காமிராவைக் கண்டறிந்துள்ளனர்.கிர்லியன் கேமிரா என்பது அதன் பெயர்.ஒரு கிர்லியன் கேமிராவின் விலை ரூ.40 லட்சம்.அதன் மூலம் ஒரு புகைப்படம் எடுத்தால்,அதன் விலை ரூ.20,000/-ஒரு மனிதனை காலையில் கிர்லியன் கேமிரா மூலமாக புகைப்படம் எடுத்தால்,அவனது தலையைச் சுற்றி சுறுசுறுப்பைத்தரும் ரோஜா அல்லது வெள்ளை நிற வட்டம் ஒளிருகிறது.மதியத்தில் அதன் அடர்த்தி குறைந்து ,இரவில் அது கறுப்பாக மாறிவிடுகிறது.மனித எண்ணங்களை ஓரளவு மட்டுமே படம்பிடிக்க முடிகிறது.இந்த கிர்லியன் கேமிராவை பிரம்மாண்டமாக தயார் செய்து ஒரு செயற்கைக்கோளில் அதைப் பொருத்தி,விண்ணில் ஏவ வேண்டும்.அப்படி ஏவியபின்னர்,அந்த செயற்கைக் கோளை இந்தியாவுக்கு நேரான வான் பகுதியில் நிலைநிறுத்திட வேண்டும்.இந்தியாவின் புராதனமான நகரங்களான காசி,நவபிருந்தாவனம்,திரு அண்ணாமலை,ஸ்ரீரங்கம்,சதுரகிரி போன்ற பகுதிகளை ஓராண்டு வரை ஒரு விநாடி கூட விடாமல் இந்த கிர்லியன் கேமிரா மூலமாக படங்களை எடுத்துக்கொண்டே இருந்தால்,அது மனித ஆன்மீக வரலாற்றில் மகத்தான அதிசயங்களை அள்ளி,அள்ளித்தரும் என்பது சர்வ நிச்சயம்.

மேல்நாட்டு அறிவியல் மனதுக்குள் சென்று ஆராய வில்லை? மனித உயிர் மனிதனின் உடலுக்குள் எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டறிய வில்லை? மாறாக மனிதனது ஆயுளை அதிகரிக்க செயற்கையான வழிகளைக் கண்டறியவே முயலுகிறது.

நாமோ,இன்னும் மேல்நாட்டுக் கலாச்சாரமே உயர்ந்தது என்னும் மயக்கத்தில் இருக்கிறோம்.நமது இந்துப்பண்பாடு எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்ந்தால்,நாமெல்லாம் ஜீன்ஸ்,ஐபேடு,ஹாலிவுட் படங்கள்,கோகோ கோலா வைப் பயன்படுத்துவோமா?


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


சம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை


தென்னாட்டிலிருந்து காசி யாத்திரை செல்பவர்கள்
முதலில் ராமேஸ்வரம் சென்று சங்கல்பம் செய்து, அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, கடலில் மூழ்கி மணல் எடுத்து பின்னர் மூதாதையருக்கு சிரார்த்த காரியங்களை செய்து பிதுர் தர்ப்பணம் முடித்து, ராமநாத சுவாமி கோயிலில் உள்ள மற்ற 21 தீர்த்தத்திலும் நீராடி, ராமநாதசுவாமி தரிசனம் முடித்தபின்னர்,
அக்னி தீர்த்தத்தில் எடுத்த மணலை பத்திரமாக பூஜை செய்து, காசி யாத்திரைஆரம்பித்த பின்னர் முதலில் பிரயாகை-திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து, ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை கரைத்தபின்னர்,
பின்னர் காசி சென்று, கங்கையில் ஸ்நானம் செய்து, காசி விஸ்வேஸ்வரர்,அன்னபூரணி, விசாலாட்சி மற்ற தெய்வங்களை தரிசித்து பிறகு கடைசியாக காலபைரவரை தரிசித்து ஆசி பெற்று விடை பெற்று,
பிறகு கயாவிற்கு சென்று மறைந்த மூதாதையர்களுக்கு சிரார்த்தங்களை செய்து மீண்டும் திரிவேணி சங்கமம் வந்து கங்கையில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு பின்னர் ராமேஸ்வரம் சென்று ராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.
சம்பிரதாயப்படி இப்படி தான் செய்யவேண்டும் இருந்தாலும் இன்றைய அவசர உலகத்தில் யாத்ரீகர்கள் செளகர்யத்தை உத்தேசித்து சிலவற்றை கடைபிடிக்க முடியவில்லை.
காசி பிரயாகை கயா யாத்திரை செல்ல முடிவேடுத்தபின்னர்,சம்பிரதாயமாக எவ்வாறு செல்வது என்று புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் பார்த்து அறிந்து அதற்கேற்றவாறு பயணத்தை அமைத்துக்கொண்டோம்,
சேலத்திலிருந்து காசி சென்றடைய 2000௦௦௦ கிலோ மீட்டர் பயணம் தான்.முதலிலேயே ரயிலில் படுக்கை வசதி போக வர பதிவு செய்திருந்ததால் நிம்மதியாக சென்று வர முடிந்தது. சைவ சாப்பாடு ஆனதால் வழி பயணத்தில் சாப்பாட்டிற்கு சிறிது கஷ்ட்டப்பட வேண்டியதாகிவிட்டது பால், தயிர், லஸ்சி,மோர், பழம் என்று கிடைப்பதை சாப்பிட்டு சமாளித்தோம். நாற்ப்பது பயணிகளுடன் பயணித்த அனுபவம், இறை இன்பம் அனைத்தும் சுகானுபவமே.. அதை அனுபவத்தில்தான் உணர முடியும்.
காசி உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காசி நகர் புனிதமான கங்கை கரையின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது மோசல் சராய் ரயில் நிலையத்திலிருந்து 15 கி மீ தொலைவில் வாரணாசி ரயில் நிலையம் உள்ளது.
காசி வாரணாசி (பனாரஸ்) அனைத்தும் ஒன்று தான் . அருகிலேயே உள்ளது.இவ்விரண்டு இடங்களிலும் ரயில் ஏறி இறங்கலாம் காசி ரயில் நிலையத்திலிருந்து விஸ்வநாதர் ஆலயம் 3 கி மீ தூரம் தான்.
வருணா ஆசி ஆகிய இரு நதிகளின் சங்கமத்தளம் ஆதலால் வாரணாசி என்று பெயர். ஜோதிலிங்க முக்தி தரும் தலங்களில் எழில் ஒன்று.


சிவபெருமானை தரிசிக்க உதவும் சைவ மந்திரம்


இந்த பஞ்சாட்சர கோத்திரத்தை விடியற்காலையில் படித்தால் தெய்வ சக்தி கிட்டும். இந்த மந்திரத்தை லிங்கம் வைத்து பாராயணம் செய்தால் கல்வி, ஞானம் மேன்மை கூடும். ஐதீகம் சிவனே கண்முன் தோன்றுவார் என்பது. மந்திரத்திலேயே சக்தி வாய்ந்த மந்திரம்.

அராவினை அணியாய்க் கொண்டான் அரனெனும் மகேசுவரதன் தான் விபூதியை தரித்த மேனி விளங்குவோன் நித்தன் சுத்தம்
அபேதமும் பேதம் ஆன அரிய திகம் பரனை யந்த
நகாரமாய் உருக்கொள் வோனை நலமுறத் துதிக்கின்றேன்

கங்கையிற் கலந்த சாந்தம் களபமாய்ப் பூசுவார்காண்
நந்தியுள்ள  ளிட்டோரான நற்கணநாதன் ஆனான்
மந்தாரை மலரின் பூஜை மல்கிடும் மகேச னான
மகாரமாய் உருக் கொள் வோனை மனங்கொளத்துதிக் கின்றேனே த

க்கனின் யாகம் தன்னைத் தகர்த்து  சாட்சாயனியின்
மிக்கதோர் வதன காந்தி அவித்தவன் நீல கண்டன்
தொக்கமா விடைக் கொடிகொள் தூயனை அரனை அந்தச்
சிகாரமாய் உருக் கொள் வோனைச் சிவனையாள் துதிக்கின்றேனே

வசிட்ட கதத்திய ரோடு வல்லவர் கௌதமர் போல் த
வத்தினில் சிறந்தோர் தேவர் தாமுறை தொழு வாழ்த்தும்
சந்திர சூர்யாக் னியாமெனும் சார்முக் கண்ணன் தன்னை
வகாரமாய் உருக்கொள் வோனை வள்ளலைத் துதிக்கின்றேனே.

 யட்ச சொரூபம் கொண்ட யாக செஞ் சடையைக் கொண்ட
கட்க பிணாக ஹஸ்தக் கடவுளை அழிவற்றோரை
தொக்க மங்களங்கள் யாவும் தொடர்திகம் ப்ரராம் துய்ய
யகாரமாய் உருக்கொள் வோனை யாண்டுமே துதிக்கின்றேனே.


சாமி சிலைகள் செய்ய பாறைகள் உடைக்கபடுவது எங்கே?

For Good Reading, Click On That Images & Again once Clickமன நோய் நீக்கும் மகாலிங்க பெருமான்

For Good Reading, Click On That Images & Again once Clickபெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன்

For Good Reading, Click On That Images & Again once Click

உலகிலேயே மிக எளிதான செயல் உடல் எடை குறைப்பு மற்றும் தொப்பை குறைப்பு. எப்படி?

உணவு மூலம் எடுத்துகொள்ளப்படும் கலோரி தான் நம் உடல் எடைக்கு காரணம்.தினமும் ஆயிரம் முதல் ஆயிரத்தி ஐநூறு கலோரீஸ் வரை எடுத்துக்கொண்டால் பதினைந்து கிலோ எடையை இரண்டு முதல் மூன்று மாதங்களில்

குறைத்துகொள்ளமுடியும். எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் கலோரி கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடை குறைப்பு சாத்தியம் இல்லை.

தமிழ் பெண்களின் மார்பை அறுக்கும் சிங்களன் -- சீமான் அறிக்கை


click for srilankan real war effect
http://www.channel4.com/news/sri-lanka-civil-war


For Good Reading, Click On That Images & Again once Click
பிரதோஷம் பிறந்த கதை

For Good Reading, Click On That Images & Again once Clickநாகதோஷம் நீக்கும் நாகராஜா கோவில்

For Good Reading, Click On That Images & Again once Click

எந்த நோயும் வராமல் இருக்க ஒரு எளிய சிறந்த பயிர்ச்சி- சூப்பர் puththagam

For Good Reading, Click On That Images & Again once Click

பல கோடிருபாய் வைத்திருந்தாலும் வியாதிகளுடன் இருந்தால் வெறும் நூறு ருபாய் வைத்திருந்து அதை நல்ல ஆரோக்கியத்துடன் அனுபவிக்கும் ஒருவரைவிட நீங்கள் கீழானவரே!வியாதிகளுடன் இருப்பது ஒரு வகையில் வீட்டு சிறை.ஏதேனும் ஒரு பொருள் தூக்கிகொண்டு இருந்தால் அதை விருப்படி இறக்கி வைத்துகொள்ளலாம்.ஆனால் வியாதியை ஒவ்வொரு நொடியும் தூக்கிகொண்டேதான் திரிய வேண்டும்.
இந்த நடை பயிர்ச்சி மேற்கொண்டால் நீங்கள் உங்களை அறியாமேலேயே ஒரு நடமாடும் மெடிக்கல் ஸ்டோர் போல திகழ்வீர்கள். நடைபயிர்ச்சி வியாதி அம்புகள் நம் மீது விழாமல் காக்கும் கவசம். எங்கே கிளம்பிடீங்க? நடை பயிற்சிகா?வளம் தரும் நவகிரக யந்திரம்
நவகிரக தியான பலன்கள்
For Good Reading, Click On That Images & Again once Click
பங்காளி சச்சரவுகளை தீர்க்கும் திருவாமாத்தூர் ஈஸ்வரன்

For Good Reading, Click On That Images & Again once Clickயார் யாருடைய சொத்துகளை அனுபவிக்கக்கூடாது?

For Good Reading, Click On That Images & Again once Clickகளவாணி வேலை செய்ய சம்பளம் - Hacking படியுங்கள்

ஒரு அமைப்புக்காகச் செய்தால் அது உளவு, நீங்களே செய்தால் அது களவு!
இந்த இரட்டை வரிகள்தான் தற்போதைய ஐடி நிறுவனங்களின் உளவுத்துறை மந்திரம். ஐடி நிறுவனங்களில் உளவுத்துறை எதற்கு என நீங்கள் யோசிக்கலாம். இன்றைய கால கட்டத்தில் மிகப்பெரிய திருட்டு எது தெரியுமா? தங்கத்தை கொள்ளையடிப்பதோ, கரன்சியை சுருட்டுவதோ இல்லை. இது தகவல் யுகம் என்பதால், தகவல்தான் இன்று பணம். எனவே நிறை தகவல்களை அதாவது டாட்டாக்களை கொள்ளையடிக்க முடிந்தால் அதுவே மிகப்பெரிய திருட்டு. இந்த திருட்டையும், திருட்டை பிடிப்பதையும் ஐடி நிறுவனங்கள் இன்று லீகலாகவே செய்து வருகின்றன.சட்டத்துக்கு உட்பட்டு களவா?இதென்ன விசித்திரம் என்று நீங்கள் யோசிக்கலாம். விசித்திரம்தான் ஆனால் நிச்சயம் தினந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது. டெக்னிகலாகச் சொல்வதென்றால் இந்த களவாணி வேலைக்கு Hacking என்று பெயர். இந்த வேலையைச் செய்ய ஐடி நிறுவனங்கள் பணத்தை அள்ளி இரைத்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் தற்போதைய ஐடி நிறுவனங்கள் அனைத்துமே ஏதோ ஒரு நாட்டில் இருக்கும், ஏதோ ஒரு நிறுவனத்தை கணிணி வழியாக நிர்வகித்துக் கொண்டிருக்கின்றன. எனவே அந்நிறுவனங்களின் மிகப்பெரிய சொத்தே மற்ற நிறுவனங்களைப் பற்றிய டேடாக்கள் தான். அந்த டாட்டாக்களில், பெயரிலிருந்து, பாங்க் இரகசியங்கள் வரை அனைத்தும் உண்டு. இவை வெளியே கசிந்துவிட்டால், நம்பிக்கை போய், பிசினசும் போய், பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலையும் போய்விடும். எனவே இந்த டாடாக்களை பாதுகாக்க ஐடி நிறுவனங்கள், உளவாளிகள்-களவாணிகள்-அல்லது Hackerகளை சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்துகின்றன.இந்தக் களவாணி ஹேக்கர்கள் என்ன வேலை செய்வார்கள்?வாசலில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, வேப்பங்குச்சியில் பல் குத்திக் கொண்டிருகும் காவலாளியை இரண்டு நாள் தொடர்ந்து பார்த்து, சினேகமாகச் சிரித்துவிட்டு, மூன்றாவது நாள் சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்தால், நான்காவது நாள் நம்மை சல்யூட் அடித்து உள்ளே விட்டுவிடுவான். சில அபார்ட்மெண்ட் வாசல்களில் இது போன்ற அபத்திரமான காவலாளிகள் இருக்கிறார்கள். இவர்களை நம்பி நாம் நம் வீட்டை விட்டுவிட்டுச் செல்ல முடியாது இல்லையா? அதே போல ஐடி நிறுவனங்களில் இருக்கும் டாடாக்களை பாதுகாக்க, பாஸ்வேர்டு, நெட்வொர்க் இரகசியங்கள்,ஃபயர்வால்கள் என என்னென்னவோ அடுக்கடுக்கான போலீஸ் வேலைகள் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் சுலபமாக உடைத்துக் கொண்டு, டாடாக்களை திருடும் ஹாக்கர்கள் அதிகரித்துவிட்டார்கள். தங்கள் வீட்டுக் கணிணியில் அமர்ந்து கொண்டு, கோக் குடித்துக் கொண்டே, பன்னாட்டு நிறுவனங்களின் டாடாக்களை திருடி விற்று சம்பாதிக்கிறார்கள். சமீபத்தில் இந்திய சீன அரசுகளின் சில வெப்சைட்டுகள் மற்றும் அமெரிக்க அரசின் இராணுவ இணைய தளங்களுக்குள்ளும் புகுந்து தங்கள் கை வரிசையைக் காட்டிவிட்டார்கள். ஒரு உளவாளிக்குதான் இன்னொரு உளவாளியின் நடமாட்டம் நன்றாகத் தெரியும் என்பதால், இந்த உளவாளிகளைத் தடுக்க, தனக்கே தனக்கு என உளவாளிகளை ஐடி நிறுவனங்கள் வைத்துக் கொள்கின்றன. அதாவது ஹேக்கிங்கை தடுக்க, ஹேக்கர்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றன.ஐடி நிறுவனங்களிடம் சம்பளம் வாங்கி உளவுகளை தடுப்பவர்களும், உளவு பார்ப்பவர்களும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். அதாவது ஒரு நிறுவனம் யாரும் உள்ளே புக முடியாத ஒரு ஃபயர்வால் நெட்வொர்க்கை தனது நிபுணர்களை வைத்து உருவாக்குகிறது என வைத்துக் கொள்வோம். அதை சோதித்துப் பார்க்க, நிஜ ஹேக்கர்கள் வரும் வரை காத்திருப்பதில்லை. தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேக்கர்களையே திருட்டுத்தனமாக உள்ளே போக முடியுமா என சவால் விடுகிறார்கள். அவர்கள் உள்ளே புகுந்துவிட்டால், அந்த ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டு அடைக்கப்படும். எனவே நீங்கள் ஒரு ஹேக்காராக ஒரு நிறுவனத்துக்குள் நுழைந்தால், அந்த நிறுவனத்தையே ஹேக் செய்தால்தான் நீங்கள் திறமைசாலி. இல்லையென்றால் உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இந்த வேலைக்கு ஆங்கிலத்தில் Ethical Hackers என்று பெயர். உங்களின் கள்ளச்சாவி செய்யும் திறமையைப் பொறுத்து, அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. நீங்கள் அதிக பூட்டுகளைத் திறந்தால், அதிக திறக்க முடியாத பூட்டுகளை நிறுவனம் செய்து கொண்டே இருக்கும். இது அந்த நிறுவனத்தின் டாட்டா பாதுகாப்புக்கு நல்லது.

உங்களால் வலிமையான நெட்வொர்க்குளை உடைத்து டேடாக்களை நெருங்க முடிந்தால், உங்களைப் போலவே வலிமையான, திறமையான நிஜ ஹாக்கர் வெளியிலும் இருக்கிறார், அவரும் உள்ளே வர வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனவே அதை மனதில் கொண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே ஹாக்கர் என்றால் நெகட்டிவ்வாக யோசித்து அதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். ஹேக்கிங் என்பது இன்று எல்லா சட்ட திட்டங்களுக்கும் உட்பட்ட, ஒரு white hat தொழில். களவை வைத்தே களவாணிகளை ஓரம்கட்டுவதுதான் ஒரு திறமையான ஹேக்கரின் வேலை. இதை ethical hacking அல்லது penetration testing என்று சொல்கிறார்கள்.தங்கள் நிறுவன டேடாக்களை பாதுகாக்க 3வது நபர் வருவதை விட, தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஹாக்கர்களே பாதுகாப்பானவர்கள் என்று ஐடி நிறுவனங்கள் நம்புகின்றன. உலக அளவில் இன்று ஹேக்கர்களுக்கு செம டிமாண்ட். இன்றைய தேதியில் 60,000 ஹேக்கர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் திருட்டுத்தனமாக ஹேக்கர்கள் இருக்கிறார்களே தவிர, சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் white hat ஹேக்கர்கள் இல்லை. என்ன கொடுமைசார் இது! கை நிறைய சம்பளம், ஏசி, கார்.. இந்த வேலைக்கு உடனே தயார் ஆகுங்கள். விப்ரோ, ஐபிஎம், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஏர்டெல் என எல்லா பெரிய ஐடி தொடர்புள்ள, நிறைய தகவல்களை கையில் வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஹேக்கர்களுக்காக காத்திருக்கின்றன. எனவே உடனே ஒரு பயோ டாட்டாவுடன் புறப்படுங்கள்.ஹேக்கிங் படித்தால் எந்த மாதிரியான வேலைகள் கிடைக்கும்?Ethical Hacker/Penetration Tester

Security Auditor

Web Security Administrator

Cryptographer

Secured Programmer

Network Defence Analyst

Network Defence Infrastructure support,

Network Security Administrator

Server Administrator,

Application Security Tester.

ஐடி நிறுவனங்களில் தற்போது இந்த வேலைகளுக்கு 100 பேர் தேவை என்றால் 10 பேர்தான் கிடைக்கிறார்கள். ஏனென்றால் இது பற்றிய போதிய விபரங்களும், படிப்புகளும் இல்லை. எனவே எல்லோரும் ஒரே திசையை நோக்கி பயணிக்காமல்,ஹேக்கிங் பக்கம் தன் கவனத்தை திருப்பினால், பெருகி வரும் ஐடி வேலைப் போட்டியில், எளிதில் வெல்லலாம்.சம்பளம் எப்படி இருக்கும்?

வழக்கமான ஐடி வேலைகளுக்கு கிடைப்பதை விட 25-30 சதவிகிதம் கூடுதலாகவே சம்பளம் கிடைக்கும். எனவே உடனே முந்துங்கள். உங்கள் திறமையை நிரூபித்துவிட்டால் உலகம் முழுவதும் உங்களுக்கு டிமாண்ட் இருக்கிறது. பரபரப்பாக இருக்கிற கூகுள், யாகூ, ஃபேஸ்புக், டிவிட்டர் இவர்களிடமிருந்து யாராவது டாட்டாவை திருடி விட்டால் என்ன ஆகும். அவ்வளவு பரபரப்பும் அடங்கி, உலகமே இயக்கத்தை நிறுத்திவிடும். இந் நிறுவனங்களை பாதுகாப்பது என்றால், சாதாரண வேலையா? எனவே உடனே ஹேக்கிங் திசையில் கவனம் திருப்புங்கள்.ஹேக்கிங் படிக்க அடிப்படை தகுதிகள் என்ன?

கணிணி பட்டதாரிகள் எல்லோருமே படிக்கலாம். புரோகிராமிங்கும், நெட்வொர்க்கிங்கும் தெரிந்திருந்தால், நச்சென்று இந்த கோர்ஸில் பொருந்திவிடுவீர்கள்.என்னென்ன கோர்ஸ்கள் உள்ளன?Certified Ethical Hacker (EC - Council)

Cerfified Hacking Forensic Investigator (EC- Council)

GIAC Certified Penetration Tester (GPEN) offered by SAN

GIAC Certified Intrusion Analyst (GCIA)

உங்களுடைய முதன்மைத் தகுதிக்கு ஏற்ப 5 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை கோர்ஸ் படிக்க வேண்டியதிருக்கும். பத்தாயிரம் முதல் 15000 வரை கட்டணங்கள் இருக்கக்கூடும். நேரமிருப்பவர்கள் இன்ஸ்டடியூட் போய் படிக்கலாம், மற்றவர்கள் ஆன்லைன் வழியாகவும் படிக்கலாம்.கோர்ஸ் நடத்துவோர் பற்றிய சில விபரங்கள்

(உங்களில் யாருக்கேனும் தெரியுமென்றால் விபரங்களைக் கொடுங்களேன்)Appin Knowledge Solutions

www.appinonline.come/acse.phpAdept Technology

www.adepttechno.com/ec-council-ceh.aspJodo Institute

www.jodoinstitute.com/boot-camp-cdh-v6.phpInnoBuzz Knowledge Solutions

www.innobuzz.in/ethicalhacking.htmlAnkit Fadia Certified Ethical Hacker course

www.ankitfadia.in/atech.html(கம்ப்யூட்டர் உலகம், ஆகஸ்டு இதழில் இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்)

thanks: mr.prakash

தினமும் நாம் ஒவ்வொருவரும் ஒரு மரம் நடுவோம்

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாததுதான். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில், 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்குக் கூட, ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தைப் போல், வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.


சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... 50 ஆண்டுகளுக்கு முன், இப்படியா சென்னை இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.


ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன், "விருட்ச ஆயுர்வேதம்' என்ற நூலை, சம்ஸ்கிருதத்தில் சுரபாலர் எழுதினார். நம்முடைய அலட்சியத்தால், அழிந்து போக இருந்த சம்ஸ்கிருதப் பொக்கிஷங்களில், இந்நூலும் ஒன்று.

கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்நூலைக் கொண்டு போய், லண்டனில் வைத்துக் கொண்டனர். 1996ம் ஆண்டுதான், இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது, இயற்கை விஞ்ஞானி, ஆர்.எஸ் நாராயணன், இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

விருட்ச சாஸ்திரத்தின்படி, நம் ஜென்ம நட்சத்திரத்துக்கும், பாதத்துக்கும் தகுந்தாற்போல், இன்ன மரம் நட வேண்டும் என, சொல்லப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும், 4 பாதங்கள்; ஆக மொத்தம், 108 மரங்கள்.நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு ஏற்ற மரத்தை நட்டால், நம் வாழ்வு வளம் பெறும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், "பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரத்தை விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல; உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.எந்த நகரமும், 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பதில்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் மட்டும் வெட்டி விடுகின்றனர்."மெரீனா கடற்கரையை அழகு படுத்துகிறோம்' எனச் சொல்லி, அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கீரீட் போட்டு விட்டால், அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்தபட்சம், 50 ஆண்டுகள் தேவை; ஆனால், மரத்தை வெட்ட ஒரு மணி நேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால், திரும்பக் கொண்டு வர முடியுமா? மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவேதான், காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதேபோல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து, இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா?மரங்கள் இருப்பதால்தானே, மனிதனால் பூமியில் உயிர் வாழ முடிகிறது? இப்படிப்பட்ட மரங்களை அழிப்பது, மனித குலத்துக்கே விரோதமான செயல் அல்லவா?

"மரம் நடுங்கள்' என, தெருவுக்குத் தெரு போஸ்டர் ஒட்டி, மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு நிர்வாகமே, தொடர்ந்து மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது, இந்த ஆட்சியிலாவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.ஏனென்றால், மரம் நடுவது தனி மனிதர்களின் கைகளில் இல்லை; இதில், அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். முக்கியமாக, மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஜெயலலிதா, இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்ய வேண்டும்.இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது? காரணம், நாம் சிறுவயதில் படித்தோம்; மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று.

அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2,300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும்.மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தைப் போல், நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாடு. மாடு என்றால் சீமை மாடு அல்ல; நாட்டு மாடு. இந்த நாட்டு மாட்டின், காலையில் நிலத்தில் படாத கோமியத்தை ஆவியாக்கி, அந்த ஆவியிலிருந்து வடியும் நீரை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதன் பெயர் அர்க். 10 லிட்டர் கோமியம், 5 லிட்டராக வடிய வேண்டும்."இந்த அர்க்கை, 30 மில்லி எடுத்து, 100 மில்லி தண்ணீரில் கலந்து குடித்தால், புற்றுநோயே வராமல் தடுக்கலாம்' என, கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோமியம் ஆவியான பிறகு, பானையில் தங்கும் அடி வண்டலின் பெயர் கண்வெட்டி. இதையும் மருதமரப் பட்டையையும் கலந்து உட்கொண்டால், இதயநோயைத் தவிர்க்கலாம்.

இதுபோல், அர்க் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படை, நாட்டு மாடுகளின் கோமியம். நம் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, நாட்டு மாடுகள்தான் விவŒõயப் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்திருக்கின்றன.மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் கும்பிடும் காட்டுமிராண்டித்தனம் என்று, இந்தியக் கலாசாரம் பற்றிக் குறிப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ். ஆனால், நஞ்சில்லாத இயற்கை விவசாயத்துக்கு இன்றைய விஞ்ஞான உலகம் சிபாரிசு செய்வது, மேற்கண்ட கோமியத்தையும், சாணத்தையும்தான்.ரŒõயனப் பொருட்களால் உலகம் அழிந்து கொண்டிருப்பது பற்றி, மேற்குலக விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கும் நிலையில், இதற்கு ஒரே மாற்றாக இருப்பது, இந்தியப் பாரம்பரிய இயற்கை விவசாயமும், இயற்கை மருத்துவமும் தான்.ஒரு விவசாயி, மாடுகளை வைத்தே தன் வாழ்க்கையை சீராக ஓட்ட முடியும். மாட்டிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், நமக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இப்போது, கல் மாவிலிருந்தெல்லாம் விபூதி தயாரிக்கப்படுகிறது. ஆனால், பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படுவதே உண்மையான விபூதி என்பது நமக்குத் தெரியும்.

"பஞ்ச கவ்யம்' என்பது, ஒரு அருமையான இயற்கை உரக் கரைசல். பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டது இது. ரசாயன உரங்களால் இன்று, உலகம் முழுவதும் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.நம் விவசாய நிபுணர்கள், இந்தப் பஞ்ச கவ்யத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், இதற்கு அரசாங்கம் ஆதரவு தந்தால், இதன் மூலம் நமது விவசாயம் மட்டுமல்ல, இதை ஏற்றுமதியும் செய்து, நாம் பொருளாதார ரீதியில் தன்னிறைவைப் பெறலாம்.

ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.

இந்தியப் பாரம்பரிய சிந்தனா முறை பற்றி, பல ஆய்வுகளைப் படித்துக் கொண்டிருந்த போது, அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயர், எனக்கு முக்கியமாகத் தெரிய வந்தது. அவர் எழுதியுள்ள, "பஞ்ச கவ்யம்' பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடிக்கிறார்:ஆபிரகாமிய அகங்காரப் பண்பாட்டில் உருவான முதலாளித்துவத்துக்கும், மார்க்சியத்துக்கும் அப்பால், மூன்றாம் பாதை ஒன்று இங்கு இருக்கிறது. கிராமக் கோவில்களில் அம்மன் சிலைகளுக்கு முன்னால், மண்விளக்குகளில் ஆமணக்கு எண்ணெயில் ஏற்றப்படும் தீபமென, அமைதியாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒளி, உலகமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட பண்பாடுகளின் உள்ளொளி. ஐயாயிரம் ஆண்டுகள், அதை நாம் பாதுகாத்து வந்தோம். இனி அதை வளர்த்தெடுத்து உலகுக்கு அளிப்போம்.அதற்கு என்ன செய்யலாம் நாம்?
thank:dinamalar 18.8.11