RightClick

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-5
கேள்வி:உங்கள் சிந்தனைகள்,எழுத்துக்களைப் பார்க்கும்போது நீங்கள் இந்தியாவையும்,இந்துதர்மத்தையும் அளவின்றி நேசிக்கின்றீர்கள் என்பது தெரிகிறது.இந்த சிந்தனையை உங்களுக்குள் உருவானது எப்படி?


பதில்:மிக்க மகிழ்ச்சி! இந்தியாவில் இருக்கும் 121 கோடி இந்தியர்களில் வெறும் 30 கோடி இந்தியர்கள் இந்தியாவை நேசிக்க ஆரம்பித்தாலே போதும்.இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது.


படிப்படியாகத்தான் நான் நமது இந்தியாவையும்,இந்து தர்மத்தையும் நேசிக்கத் துவங்கினேன்.


 கல்லூரியில் பி.ஏ.படிக்கும்போது,நூலகமே கதியாகக் கிடப்பேன்;பெரும்பாலான நூலகங்கள் எனக்குத் தெரியும்.அவற்றின் வேலை நேரம் தெரியும்.


நான் தங்கிப்படித்த மாணவர் விடுதியில் இருந்த நூலகத்தில் இருந்த 1800 நூல்களையும் மூன்று ஆண்டுகளில் ஒருமுறையாவது வாசித்திருக்கிறேன்.அதில் ஹிந்து ராஷ்டிரத்துக்கு அறைகூவல் என்ற தலைப்பில் விவேகானந்த கேந்திரம் வெளியிட்ட புத்தகம் எனது சிந்தனையைத் தூண்டியது.இந்த புத்தகம்,இந்தியாவில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவரும்,முஸ்லீமும் வாசிக்க வேண்டியபுத்தகம்.


கேள்வி:அவ்வளவு சிறப்பானதா அந்த புத்தகம்.அந்த புத்தகம் தற்போது கிடைக்கிறதா?


பதில்: விவேகானந்தா கேந்திரம்,விவேகானந்தபுரம்,கன்னியாகுமரி என்ற முகவரியில் அந்த புத்தகம் கிடைக்கிறது.தலைப்புதான் மாறியிருக்கிறது.அதன் தற்போதைய தலைப்பு “விழிமின்;எழுமின்” விலை ரூ.50/-க்குள் இருக்கும்.


இந்த புத்தகத்தில் இந்துதர்மத்தின் பெருமைகள்,அதை  கிறிஸ்தவ பிரிட்டன் சிரழித்த விதம்,அதனால் இந்திய குடும்பங்களில் உண்டான சீரழிவு போன்றவைகளையும்,அதிலிருந்து நாம் மீள வேண்டிய வழிமுறைகளை சுவாமி விவேகானந்தர் பேசியிருக்கிறார்.


தவிர,இந்துதர்மத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை எப்படியெல்லாம் சீரழித்து,தெய்வ பக்தியில்லாத,ஆங்கிலத்தையும்,ஆங்கில நாகரீகமே உயர்ந்தது என்ற கருத்தைப் பரப்பிட இங்கிலாந்து செய்த நரித்தனமான செய்கைகளையும் விவரித்துள்ளனர்.


இதன் விளைவுதான்,இன்று பள்ளி ஆசிரியராக இருப்பவர் கூட தன்னிடம் படிக்கும் மாணவிகளை கற்பழிக்குமளவுக்கு தனிமனித ஒழுக்கம் சீரழிந்திருக்கிறது.


கேள்வி:இந்த புத்தகம் எங்கெல்லாம் கிடைக்கும்?


பதில்:விவேகானந்த கேந்திரத்தில் மட்டுமே கிடைக்கும்.வேறு எங்குமே கிடைக்காது.


இந்த புத்தகத்தை இதுவரை சுமார் 30 40 முறை திரும்பத் திரும்ப வாசித்திருப்பேன்.இது தவிர இரண்டு சம்பவங்கள் அடிமை இந்தியாவில் நடைபெற்றன.அவைகளை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.1999 முதல் 2010 வரை இருக்கும் காலகட்டத்தில் இந்த சம்பவங்களை வாசிக்க நேர்ந்தது.


முதல் சம்பவம்:


சுதந்திரத்துக்கு முன்பு,நமது நாட்டு மகாராஜாவும்,ஒரு ஆங்கிலேயத் தளபதியும் நண்பர்களாக இருந்தார்கள்.அப்போது நமது நாட்டு மகாராஜா,அந்த ஆங்கிலேயத் தளபதியிடம் ஒரு கேள்வி கேட்டார்:


ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?


அதற்கு அந்த ஆங்கிலேயத்தளபதியின் பதில்,


அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களின் மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக்கொள்;அது போதும்!


இந்த பதிலுக்குள் மறைந்திருக்கும் உண்மையை,ஆன்மீகக்கடலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணர வேண்டும்.


இரண்டாவது சம்பவம்:


கோவா கடற்கரை;நமது நாட்டு மன்னர் ஒருவரும்,அவரது நண்பராகிய ஆங்கிலேயத் தளபதியும் கடலை நோக்கி அமர்ந்திருந்தனர்.நமது மன்னர்,அந்த தளபதியிடம் ஒரு கேள்வி கேட்டார்.


எனக்கொரு சந்தேகம்?


என்ன சந்தேகம் வேண்டுமானாலும் கேளுங்கள் மன்னா?


6000 மைல்கள் தூரத்தில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு எங்கள்(இந்தியா) நாட்டின் பண்பாடைப் பற்றித் தெரியாது;எங்களின் வரலாற்றைப் பற்றியும் தெரியாது;30 கோடி மக்கள்தொகை கொண்ட எங்களை,வெறும் 200 பேர்களைக் கொண்ட நீங்கள் எப்படி அடிமைப்படுத்திட முடிந்தது?


அந்த ஆங்கிலேயத்தளபதி புன்னகைத்தவாறு,


“உங்கள் படைவீரர்கள் 10 பேரை கடலை நோக்கி அணிவகுக்க உத்தரவிடுங்கள்”

மன்னரும் உடனே அதுபோல,உத்தரவிட்டார்.


ஆங்கிலேயத் தளபதியும் தனது ஆங்கிலேயப் படைவீரர்களை அவர்களுக்குச் சமமாக கடலை நோக்கி அணிவகுக்க உத்தரவிட்டான்.


இரண்டு அணிகளையும் ஒரே நேரத்தில்,கடலை நோக்கி கவாத்து செய்ய உத்தரவிட்டான்(லெப்ட்,ரைட்)


இரண்டு குழுவினரும் கடலை நோக்கி ராணுவ மிடுக்கோடு நடக்க ஆரம்பிக்கின்றனர்.மணல் பகுதியை இரண்டு அணியினரும் கடக்கின்றனர்.அலைகள் மணலைத் தழுவும் இடம் வருகிறது.சில அடிகளிலேயே,கடலுக்குள் நடக்கும் சூழ்நிலை உருவாகிறது.


ஆங்கிலேயர்கள் படைப்பிரிவு சிறிதும் அஞ்சாமல்,கடலுக்குள் இடுப்பளவு வரை விடாமல் அணிவகுத்துச் செல்கின்றனர்.ஆனால்,இந்திய படைப்பிரிவு முழங்கால் அளவு கடல் வரைகூட செல்லாமல்(மன்னரோ,ஆங்கிலேயத்தளபதியோ நிற்கச்சொல்லி உத்தரவிடாமலேயே) நின்ற இடத்திலேயே லெப்ட்,ரைட் பயிற்சி செய்கின்றனர்.


இதைக் கவனித்த மன்னருக்குக் கோபம்;ஆங்கிலேயத்தளபதி,தனது படைப்பிரிவுக்கு நிற்கச்சொல்லி உத்தரவிட்டு,


“மன்னரே,கவனித்தீர்களா? தனது தளபதி சொன்னதை அப்படியே செய்வது எங்கள் ஆங்கிலேயர்களின் குணம்;நாடாளும் நல்லவர்;வல்லவர்;(அழுத்தமாக) உங்கள் கடவுளுக்குச் சமமாக மதிக்கும் மன்னராகிய நீங்கள் உத்தரவிட்டும் கூட,உங்கள் உத்தரவை விட,உங்கள் படைவீரர்களுக்கு உயிர் வெல்லக்கட்டி” இதுதான் காரணம் !!!


அப்புறம் இன்னொரு விஷயம். . .

நமது ஆயுர்வேத,சித்தவைத்தியம் சொல்லும் மருத்துவக்குறிப்பு என்னவெனில்,காலையில் நாம் தூங்கியெழுந்ததும்,நமது பல்லின் கசப்பு,துவர்ப்புச் சுவைதான் பட வேண்டும்.ஆனால்,இன்று இந்தியாவில் விற்பனையாகும் பற்பசைகளில் பெரும்பாலானவை இனிப்புச்சுவையுடையவை;தவிர,பெட் காபி குடிப்பது இந்தியப்பாரம்பரியங்களில் ஒன்றாகிவிட்டது.இதன் விளைவுதான் மிக குறைந்த காலத்தில் பல்லுடன் கம்பி கோர்ப்பதும்;பல் செட்களை மாட்டுவதும்.


வெறும் வியாபாரத்துக்காகவே இங்கிலாந்தும்,அமெரிக்காவும் இந்தியாவின் பண்பாட்டைச் சிதைக்கும் போது,மனிதகுலம் முழுவதும் போரின்றியும்,நிம்மதியாகவும் வாழ இந்து தர்மத்தைப் பரப்புவதில் என்ன தவறு இருக்கிறது?


கேள்வி: அட! ஆமாம்!!