RightClick

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு சந்திப்பு:பேட்டி 3:இடைவேளைக்குப் பிறகுகேள்வி:நீங்கள் கோபப்படுவதைப் பார்த்தால்,இந்துதர்மத்தின் பெருமைகளை பல ஆண்டுகளாக கிறிஸ்தவ இங்கிலாந்து அழித்துக்கொண்டிருக்கும் போல் தெரிகிறதே? இதெல்லாம் நிஜம் தானா?

பதில்:பலவீனமான மனதில்தான் பொறாமை வரும் என்பது மனதத்துவ உண்மை.இந்துதர்மத்தின் பெருமைகள்,மனித குலம் முழுவதற்கும் சொந்தம்.கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள்,ஜைனர்கள்,சீக்கியர்கள் மற்றும் எந்த மதத்தவரும் இந்துதர்மத்தின் பெருமைகளைப் பின்பற்றலாம்.இந்துதர்மத்துக்கு மாற வேண்டிய அவசியமில்லை;

1950க்கு முன்பாக,காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களை சந்திக்க ஒரு வெள்ளைக்காரர் வந்திருந்தார்.சுமார் ஒரு மாதம் காஞ்சிமடத்தில் விருந்தினராக தங்கியிருந்தார்.அவரது கல்வி சார்ந்த ஆராய்ச்சி இந்துமதம் சார்ந்தது.அவரது ஆய்வுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்ததும்,அவர் சங்கராச்சாரியாரை சந்தித்து புறப்படுவதாக தெரிவித்தார்.அப்படி தெரிவித்தப்பின்னர்,அவர்,தான் இந்துமதத்துக்கு மாற விரும்புவதாக சொன்னார்.

அதற்கு காஞ்சி சங்கராச்சாரியார், ‘உங்களின் கிறிஸ்தவத்தில் என்ன குறை கண்டீர்கள்?’ எனக்கேட்டார்.
‘இல்லை;எனக்கு இந்துதர்மத்தின் அனைத்து அம்சங்களும் பிடித்திருக்கின்றன.’

‘கிறிஸ்தவத்தின் பைபிளை முழுமையாக கற்று உணர்ந்திருக்கிறீர்களா?’ என மீண்டும் காஞ்சி சங்கராச்சாரியார் கேட்டார்.

‘இல்லை’என்றே அந்த வெள்ளைக்காரர் சொன்னார்.

‘நீங்கள் முதலில் பைபிளையும்,கிறிஸ்தவத்தையும் முழுமையாக உணர முயலுங்கள்’ என பெருந்தன்மையோடு அவரை திருப்பி அனுப்பிவிட்டார்.


தவிர, இந்துக்கோவில்களை இடிப்பதை அந்தக் காலத்திலேயே கிறிஸ்தவர்கள் செய்திருக்கின்றனர்.எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய வானம் வசப்படும் என்ற நாவல் மத்திய அரசின் சாகித்ய அகடமி விருது பெற்றது.எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் ஆனந்த ரங்கப்பிள்ளை டைரிக்குறிப்புகள் என்ற நிஜ சம்பவங்களைத் தொகுத்து வெளிவந்த நூலைத் தழுவி,இந்த நூலை எழுதியிருக்கிறார்.தஞ்சாவூர் சரபோஜி நூலகத்திலிருந்து சுமார் 3 கோடி ஓலைச்சுவடிகளை இங்கிலாந்து தனிக்கப்பலில் 1947க்கு முன்பு எடுத்துச் சென்றது.அப்படி எடுத்துச் சென்று அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்;மூல நூலான சமஸ்க்ருத ஓலைச்சுவடியையும்,மொழிபெயர்ப்பான ஆங்கில கையெழுத்துப்பிரதியையும் ஒப்பிட்டுப்பார்க்க இந்தியாவிலிருந்து சாஸ்திரங்கள் தெரிந்த பிராமணர்கள் மிரட்டி அழைத்துச் செல்லப்பட்டனர்.அப்படிச் சென்றவர்களைக் கொண்டு,அவை ஒப்பிட்டுப்பார்க்க வைத்தனர்.மூலப்பிரதியிலிருக்கும் கருத்துச்சாரம் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்தால்,மூலப்பிரதி எரிக்கப்பட்டது.

இப்படி,இந்துதர்மத்தின் படைப்புகளிலிருந்து பிறந்தவையே இன்றைய எண்கணிதம் எனப்படும் நியூமரலாஜி,ரேடாரில் சிக்காத விமானம் மற்றும் ஆடை தயாரிக்கும் நிர்வாக வழிமுறை!!!

இந்தியாவின் பொருளாதார வரலாற்றின் நிஜப்பக்கங்கள் பொன்னேடுகளால் பொறிக்கப்பட வேண்டியவை.ஆமாம்! தி ரைஸிங் அண்டு பாலிங் பவர் ஆஃப் கிரேட் பவர்ஸ் என்ற புத்தகத்தை இரண்டு பொருளாதாரப்பேராசிரியர்கள்,உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து,பல நாடுகளின் ரகசிய ஆவணங்களை ஆராய்ந்து எழுதியுள்ளனர்.இவர்கள் இருவரும் நடுநிலையோடு செயல்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆவர்.இவர்கள் இந்த புத்தகத்தில் சொல்லியிருப்பது நமக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியைத் தருகிறது.

ஆமாம்! 1700 வரை முடிந்த 25 நூற்றாண்டுகளுக்கு உலக வல்லரசாக இந்தியாவும் சீனாவும் இருந்தன.உலக பொருளாதார உற்பத்தி 30%ஆகவும்,உலக பொருளாதாரத்தில் 25% பங்காகவும் இந்தியாவின் பங்களிப்பு இருந்தது.
ஒவ்வொரு 300 ஆண்டுகளுக்கும் ஒருமுறை உலகின் முதன்மையான சுயச்சார்பான பொருளாதார வல்லரசுநாடுகளாக இந்தியாவும்,சீனாவும் மாறிமாறி வந்திருக்கின்றன.இந்தியாவின் இந்த செல்வச் செழிப்புதான் இந்தியாவுடன் வாணிகத் தொடர்பு கொள்ள ஐரோப்பிய நாடுகள்,கடல்வழியைக் கண்டறிய முயன்றன.அதாவது உலக வரலாறே இந்தியாவை மையமாகக் கொண்டே சுழன்றுவருகின்றது.

வியாபாரம் செய்ய வந்த இங்கிலாந்து,இந்துதர்மத்தின் பரந்த மனப்பான்மையை ‘புரிந்து கொண்டு’ இந்தியாவை அடிமைப்படுத்தியது.300 ஆண்டுகளாக இந்தியாவை,இங்கிலாந்து சுரண்டியது.1947 இல் இந்தியாவுக்கு சுதந்திரம் தரும்போது,உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 1% ஆக சுருங்கிவிட்டது.

மேலும்,இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட போர்ச்செலவுகளை இந்தியாமீது சுமத்தியது.இந்தியாவின் பொருளாதார வளங்களை சூறையாடியது;அல்லது அழித்தது.டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் உலகப்புகழ் பெற்றவை.ஒரு பெண் அணியும் சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் மடித்துவிடலாம்.தீப்பெட்டி அவ்வளவு பெரிது அல்ல;சேலை அவ்வளவு மெல்லியது.இந்த சேலை நெய்யும் நெசவாளர்களின் விரல்களை வெட்டியது இங்கிலாந்து.அதன்பிறகே,இங்கிலாந்தின் தரங்கெட்ட துணிமணிகள் உலகம் முழுவதும் விற்பனையாகின.

விவசாயத்தில் ஒவ்வொரு 150 சதுர கிலோமீட்டருக்கும் வெவ்வேறுவிதமான விவசாயக்கருவிகளைப் பயன்படுத்தி வந்தனர் இந்துக்கள்.விவசாயத்துக்கு ஏராளமான சலுகைகள் இந்து மன்னர்களால் தரப்பட்டிருந்தன.அதை நிர்மூலமாக்கி,விவசாயிகளை கொத்தடிமையாக்கும் திட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன.


தொடரும் .  . .