RightClick

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு சந்திப்பு:3


கேள்வி:இந்துதர்மத்தின் அடிப்படை ஆதாரமே சகிப்புத்தன்மைதான்! நீங்கள் இந்துதர்மத்தின் பெருமைகளை சேகரித்தும்,அனுபவித்தும்,நேரில் உணர்ந்தும் வெளியிடுகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி!!!
பிற மதத்தை,மதத்தைச் சேர்ந்தவர்களை வசைபாடுவதுகூட ஒரு பாவம் என இந்து தர்மம் போதிக்கிறது.


பதில்:
நீங்கள்,உங்களைப் பெற்ற அன்னையை இழிவாகத் திட்டினால் என்ன செய்வீர்கள்?

கேள்வி:(திடுக்கிட்டு)திட்டுபவனை நாலு தட்டு தட்டுவேன்.

பதில்:எதற்காக திட்டுபவனை அடிப்பீர்கள்?

கேள்வி(கோபமாக)என்னைப் பெற்ற தாயைத் திட்டுவதைக் கேட்டுக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது.

பதில்: இந்த கோபம் எப்படி உண்டானது?

கேள்வி:(நிதானமாகி)நான் கோபப்படாவிட்டால்,நான் மனிதனே இல்லை;இது ஒரு ஆதாரபூர்வமான மனித உணர்ச்சி:பதில்:

பதில்:அதேபோலத்தான் நமது இந்து தர்மமும்! நாம் பெற்ற தாயின் மரியாதை நமக்கு எவ்வளவு முக்கியமோ,அதை விட நாம் பிறந்த சனாதன தர்மத்தின் மரியாதை நமக்கு முக்கியம்.


பதில்; இந்த ஆதாரபூர்வமான மனித உணர்ச்சியை மழுங்கடிக்கும் வேலையை இன்றைய மேல்நாட்டு அமைப்புகள்,இந்தியாவில் சுமார் 150 ஆண்டுகளாக செய்துவருகின்றன.அதன் இறுதிகட்டம்தான்,மெமரிகார்டுகளின் பரவலும்,கேமிரா செல்போன்களின் விலைக்குறைப்பும்,இணையம் எனப்படும் இண்டர்நெட்டின் உபயோகமும்!!!

கேள்வி:நீங்கள் சொல்வது புரியவில்லை? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.

பதில்: விளக்கமாக மட்டுமல்ல;விரிவாகவே சொல்கிறேன்.

இந்துதர்மம் எவ்வளவு பழமையானது;விஞ்ஞானபூர்வமானது என்பதை மேல்நாடுகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன.அதன் முடிவாக அவர்களின் இயற்பியல்,வேதியியல்,விண்வெளி இயற்பியல்,உயிரியல்,மருத்துவம்,மனோதத்துவம் முதலான அனைத்துத் துறைகளிலும் அவர்களால் ஓரளவுக்கு மேல் ஆராய்ச்சிகளைச் செய்ய முடியவில்லை;அதற்கான காரணமும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை;இந்நிலையில் அவர்களின் ஆராய்ச்சிவெற்றிடம் இந்துதர்மத்தின் புராதனமான நூல்களாகிய வேதங்கள்,உபநிஷத்துக்கள்,புராணங்களில் புதைந்துகிடக்கின்றன.அப்படிப் புதைந்துகிடப்பதைக் கண்டறியும் நவீன விஞ்ஞான அறிவு,இந்துக்களாகிய நமக்கு இல்லை;அப்படி இல்லாமல் செய்யும் விதமாக இந்தியாவை ஆண்ட பிரிட்டன் பல மாற்றங்களைச் செய்தது.

முதலாவதாக,மெக்காலே கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தது;அதன்மூலமாக, ‘கண்ணால் பார்த்து கையால் செய்யும்’ நமது கல்வித்திட்டம் அழித்து நாசமாக்கப்பட்டது.இதனால்,சிந்திக்கும் திறனை கல்வித்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டனர்.(அவ்வாறு நீக்கப்பட்டவைகளை தமது நாட்டின் பாடத்திட்டத்தில் சேர்த்தும் விட்டனர்)வெறும் மனப்பாடம் செய்யும் திறன் இருந்தால் போதும்.கல்வியில் வெற்றிபெற்றுவிடலாம்.
இதனால்தான்,நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு பத்தாம் வகுப்புப்பொதுத்தேர்வு முடிவு வெளிவந்தப்பின்னர்,சுமார் 10,000 தமிழ்நாட்டு மாணவ,மாணவியர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இது எப்பேர்ப்பட்ட கயமைத் தனம்!


இவர்களுக்கு இந்தியாவின் விவசாயம் பற்றியோ,இந்தியத் தொழில்களின் வரலாறுபற்றியோ சிறிதும் தெரியாது;இந்தியாவைநிர்வாகிக்கவும் தெரியாது.

அடுத்தபடியாக,ஆங்கிலம் படித்தால்,அரசு வேலை;60 வயதுவரை அரசுப்பணியில் இருந்தால்,60 வயதுமுதல் வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஊதியம் என்ற நடைமுறையைக் கொண்டுவந்தது.இதன்மூலமாக,சோம்பேறித்தனம் கொண்ட ஒரு கூட்டத்தை நாம்,நமது ஆபிசர்களாக ஏற்றுக்கொண்டோம்.இவர்கள்,தனது பணிகாலத்தில் தனது மீது எந்த விதமான வீண்பழியும் வரக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்துவருகின்றனர்.தவிர,எந்த ஒரு அரசு அதிகாரியும் சுயகவுரவத்தோடு வேலை பார்க்க,அவர்களின் மேலதிகாரி விடுவதில்லை;இந்த இடத்தில் தமிழ்த்திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தை நினைவுகூறவும்.

மூன்றாவதாக,இந்துதர்மத்தின் சிறப்பு சகிப்புத்தன்மைதான்.அதில் சந்தேகமேயில்லை;அந்த சகிப்புத்தன்மையின் உச்சம்தான்,சில நிமிடங்கள் ஆசுவாசப் படுத்தியப்பின்னர்,

பதில்:என்ன அருந்துகிறீர்கள்? மீண்டும் காபியா?

கேள்வி:கோபமாக இருக்கிறீர்கள்.எனவே,ஏதாவது ஒரு குளிர்பானம் சொல்லலாமே!

இருவரும் குளிர்பானம் அருந்துகின்றனர்.