RightClick

ஆன்மீகக்கடல் ஆசிரியரிடம் ஒரு பேட்டி-1
கேள்வி:உங்களைப் பற்றி கொஞ்சம் நமது வாசகர்களுக்குச் சொல்லுங்கள்பதில்:எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.

1990களின் முற்பாதியில் சென்னை  கல்லூரியில் பி.ஏ.முடித்தேன்.பட்டப்படிப்பிலும் சுமாரான மாணவன் தான்.என்னைப் பற்றிய ஒரே தற்பெருமை எதுவெனில்,நான் தினமும் சிந்திக்கிறேன்.அதன்மூலமாக என்னோடு பழகுபவர்களையும் சிந்திக்கத் தூண்டுகிறேன்.அவ்வளவுதான்.கேள்வி:ஆன்மீகக்கடல் வலைப்பூவை ஆரம்பித்ததற்கான நோக்கம் என்ன?பதில்: தற்போது நடப்பது தகவல் யுகம்.இந்த பூமியில் மனிதன் கண்ணுக்குத் தெரியும் அனைத்துப் பொருட்களைப் பற்றியும் கண்டுபிடித்துவிட்டதாக நினைக்கிறான்.அதனால்,நாம் தகவல் யுகத்துக்கு வந்திருக்கிறோம்.இது ஓரளவே உண்மை. . .கேள்வி:ஓரளவே உண்மையா?பதில்:ஆமாம்.கண்ணுக்குத் தெரியாத மனித மனம்,நாம் தூங்கும்போது பார்க்கும் கனவுகள்,நமது மரணத்தேதி,நாம் எப்படி இறப்போம்? என்பதைப் பற்றி யாருமே ஆராய்வதில்லை;ஒரு பெண் எப்போது எப்படி எந்த இடத்தில் பருவமடைவாள்? என்பதையெல்லாம் ஆராயாது.அது வெட்டிவேலை!இதுபற்றிய விடைகள் நமது இந்து வேதங்களில் ஒளிந்திருக்கின்றன.இவைபற்றி அமெரிக்கா,ஜெர்மனி,இங்கிலாந்து நாடுகள் ரகசியமாக (இந்தியாவிலிருந்து திருடிச்செல்லப்பட்ட ஓலைச்சுவடிகளைக் கொண்டு)ஆராய்ச்சி செய்துவருகின்றன.அதே சமயம்,இவைபற்றி இந்தியா ஆராய்ச்சி செய்யாமலிருக்கும்படி கவனமாகப் பார்த்துக்கொள்கின்றன.கேள்வி:அதை எப்படி உங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்?பதில்: கொஞ்சம் விரிவான பதிலாக இருக்கும் பரவாயில்லையா?கேள்வி:பரவாயில்லை.நமது ஆன்மீகக்கடல் வாசகர்கள் பொறுமையானவர்கள்.அவர்கள் அரிய தகவல்களுக்காகத்தான் காத்துக்கொண்டும்,வாசித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.பதில்: ரேடாரில் சிக்காத விமானத்தை அமெரிக்கா மட்டுமே வைத்திருக்கிறது.இதன் தொழில் நுட்பத்தை நமது இந்து மத ஓலைச்சுவடிகளிலிருந்து அது ‘கண்டறிந்திருக்கிறது’.

ரேடாரில் சிக்காத விமானத்தின் மேல் பாகத்தில் ஒரு வித ரசாயனப்பூச்சு பூசுவார்கள்.அது ரேடாரிலிருந்து வெளிவரும் மின் காந்த அலைகளை உறிஞ்சிவிடும்.இந்த ரசாயனப்பூச்சு இல்லாத விமானங்களில்,மின் காந்த அலைகள் மோதி திரும்பவும் ரேடாருக்குச் செல்லும்.அப்படிச் சென்றதும் ரேடாரிலிருக்கும் மதிப்பீட்டுக் கருவிகள்,ரேடாரின் மின் காந்த அலைக்குள் செல்லும் விமானம் எந்த மாடல்,அதன் பறக்கும் வேகம் மற்றும் திசை இவற்றை மதிப்பிட்டு சில நொடிகளில் சொல்லிவிடும்.இதுபற்றிய இந்து ஓலைச்சுவடியின் பெயர்

வைமானிகா சாஸ்திரம் ஆகும்.இதை எழுதியவர் போஜராஜா மகாராஜா ஆவார்.இதில் தரையில் செல்லும் 448 விதமான வாகனங்களை உருவாக்கும் விதங்களைப்பற்றியும்,நீரில் செல்லும் 665 விதமான வாகனங்களை உருவாக்குவது,செயல்படுத்துவது பற்றியும்,விண்ணில் செல்லும் 332 விதமான வாகனங்களை உருவாக்குவது,செயல்படுத்துவது,பழுதுபார்ப்பது பற்றியும் பாடல்களாக இருக்கின்றன.உதாரணமாக,விண்ணில் செல்லும் வாகனத்தை இயக்குபவர்,ஒரு கண்ணாடி அணிந்திருப்பார்.அந்தக் கண்ணாடியில் கழுகின் கண்ணினைப் பிழிந்து ஒருவித ரசம் பூசியிருக்க வேண்டும்.இது வான்வெளிக் கதிர்வீச்சிலிருந்து விமான ஓட்டியின் கண்களைப் பாதுகாக்கும்.இதுபற்றி பத்தாண்டுகளுக்கு முன்பு நெல்லை சு.முத்து என்பவர் தினமணியில் எழுதியிருக்கிறார்.கேள்வி;சொல்லுங்கள்.ஆன்மீகக்கடல் ஆரம்பித்தற்கான நோக்கம் என்ன?பதில்: நான் ஒரு புத்தகப்புழு.எனது எட்டாம் வகுப்பிலிருந்து தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு.நமது இந்து தர்மம் ஜாதிப்பிரச்னை,மொழிப்பிரச்னை,வல்லரசு ஆதிக்கம்,குடும்பப் பிரச்னைகள்,சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அதன் படைப்புகள் பல கோடி.அவற்றில் பெரும்பகுதி நமது தாய்மொழியாம் தமிழிலேயே இருக்கின்றன.இருந்தபோதிலும்,அதன் பெருமைக்குரிய வாரிசுகளாகிய நமக்குத் தெரியாமலேயே மறைக்குமளவுக்கு இந்திய அரசும்,தமிழக அரசியல் வாதிகளும்,நமது பாடத்திட்டமும் செயல்பட்டுவருகிறது.ஏன் நமது இந்து தர்மத்தின் பெருமைகளையும்,தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு உலகிலேயே மிகவும் சிறந்தது என்று தெரிந்தும் அதைப் பாதுகாக்கும் பணியில் இறங்காமல்,அழிக்கும் வேலையில் நாமே ஈடுபடுகிறோம் என்ற எண்ணம் எனக்கு கல்லூரிப்பருவத்திலேயே உண்டானது?

இதற்கான விடை 1996 ஆம் ஆண்டில்தான் எனக்குக் கிடைத்தது.
எம்.ஜி.ஆர். பாடியது போல என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்ற பாடல் 200 சதவீதம் உண்மையே!ஒரே ஒரு வளம் மட்டும் இல்லை என்பது எனது கணிப்பு.அதுதான் தொலை நோக்குடைய,தேசபக்தி நிறைந்த,மன உறுதிநிறைந்த இந்தியப்பிரதமர் நமக்கு கிடைக்கவேயில்லை;ஆன்மீக நாடு இந்தியாவாக இருந்தாலும்,இந்துதர்மத்தின் ஆன்மீகக்கருவூலம் நமது தமிழ்நாடுதான்.தியானம்,மனம்,வழிபாடு இவற்றில் கடவுளையே தேவைப்படும்போது நேரில் வரவழைக்கும் சக்தி தமிழ் மக்களுக்கு இன்றும்(6.7.11) உண்டு.இதை அறிந்துகொண்ட மேல்நாடுகளும்,சீனாவும் இங்கே நாத்திகம் என்ற கருத்தை விதைத்து,அதை போற்றிப் பாதுகாக்கிறது.சீனாவிலிருந்து மாதச்சம்பளம் பெறும் கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் ஆன்மாவாகிய இந்துதர்மத்தின் பெருமைக்குரிய ஆதாரங்களை அழிப்பதை தனது தொழிலாகவே கொண்டிருக்கின்றன.இதற்கு ஒரே ஒரு ஆதாரம் இப்போது சொல்லமுடியும்.இந்து தர்மத்தை சித்தாந்த ரீதியாக அழிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் டெல்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகும்.இதை உருவாக்குதன்பின்னணியில் கம்யூனிஸ்டுகள் இருந்தனர்.1950களில் இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.அப்போது டெல்லி மாநிலம் முழுவதும் ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

உங்களிடம் இருக்கும் பழமையான ஓலைச்சுவடிகளைக் கொடுங்கள்.நேரு பல்கலைக்கழகம் அதை ஆராய்ந்து அதிலிருக்கும் தொன்மையான இந்துதர்மப்பெருமைகளை புத்தகமாக வெளியிடும் என்பதே அந்த அறிவிப்பின் சுருக்கம்.டெல்லி மக்களும் அருகிலிருக்கும் பஞ்சாப்,ஹரியானா,உத்திர பிரதேச மக்களும் கூட பல லட்சக்கணக்கான கிடைப்பதற்கே அரிதான ஓலைச்சுவடிகளை தனது சொந்தச் செலவில் நேரில் வந்து ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழகத்தில் கொடுத்தனர்.அவற்றில் இந்துதர்மத்தின் பெருமைகளான ஜோதிடம்,வானியல் ரகசியங்கள்,ஆயுர்வேதம்,மனித உடல்நலக்குறிப்புகள்,ஜோதிட அனுபவக்குறிப்புகள்,ஆட்சி நிர்வாகக் கலை போன்றவை இருந்தன.அவைகள் அனைத்தும் ஆராய்ச்சிக்கு செல்லாமல் அனைத்தும் எரிக்கப்பட்டன.இந்த செய்தியை நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேள்விப்பட்டு,சில நாட்களாக தூங்கவில்லை;நமது இந்துதர்மத்தை இப்படியெல்லாமா அழிப்பார்கள்? என்ற ஆத்திரம் வந்தது.அதைப் போலவே இன்று வரையிலும் மறைக்கப்பட்ட நமது இந்து தர்மத்தின் பெருமைகளை அழிப்பதும்,நமது தமிழினப் பெருமைகளை சிதைப்பதும் கேள்விப்படும்போதெல்லாம் நான் டென்ஷன் ஆகிறேன்.அதன் ஆற்றாமையே இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூ!!!

தமிழர்ப் பண்பாட்டுச் சிதைவினை இரு உதாரணங்களுடன் உங்களுக்குப் புரிய வைக்க விரும்புகிறேன்.சூரியன் பலம் பெறும் நாளே தை முதல் நாள்.அதுவே பொங்கல் திருநாள்.உழவர்களைப் போற்றும் பெரு நாள்.இதன் பெருமைகள் தமிழர்களாகிய நாம் தற்காலத்தில் வெறும் சடங்காக மாற்றிவிட்டோம்.இதற்கு சாட்சியே ஒரு சினிமாப்பாடலில் “. . . போக்கிரி பொங்கல்” என்று ஒரு தமிழ் கதாநாயகர் பாடுகிறார்.

பொங்கல் கொண்டாடுபவர்களெல்லாம் என்ன போக்கிரிகளா?


சிவகாசி என்ற ஒரு தமிழ்த்திரைப் படம் வெளிவந்தது.அது நூறு நாள் ஓடியதன் வெற்றிவிழாவை சிவகாசி நகரிலேயே கொண்டாடிட அந்த படம் சார்ந்தவர்கள் முடிவு செய்தனர்.அதன் கதாநாயகர் மதுரை வரையிலும் விமானத்தில் வந்தார்.மதுரையிலிருந்து சிவகாசிக்கு காரில்வந்தார்.அவருக்கு திருத்தங்கல் எல்லையில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் பூரண கும்பம் முதல் மரியாதையை அந்த ஊர் மக்கள் செய்தார்கள்.அது அவர் மீதுஇருக்கும்பிரியத்தின் விளைவு! ஆனால்,அந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கதாநாயகர் என்ன செய்தார் தெரியுமா?

நமது மாரியம்மன் கோவிலுக்குள் ஷீ போட்டுக்கொண்டு உள்ளே வந்தார்.பிறர் ஒரு கன்னத்தில் அறைந்தால்,மறு கன்னத்தைக் காட்டு என போதித்த ஏசுவின் மதத்தில் பிறந்த அந்த கதாநாயகர்,சக மதத்தின் அடிப்படை விதிமுறையைக் கூட மதிப்பதில்லை;