RightClick

ஜீவசமாதியில் இருக்கும் மகான்களின் அருளைப்பெறும் வழிமுறை

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இருப்பவர்கள் கோவிலுக்குப் போவதை விட,சனியின் குருவாகிய பைரவரை தினமும் வழிபட வேண்டும்.அல்லது ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று பின்வரும் வழிமுறையைக் கொண்டு வழிபடுவதன்மூலம் சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.இது அனேகரது வாழ்க்கையில் கிடைத்த அனுபவ உண்மை!!


ஆசை உடையவன் மனிதன்.பேராசை,முறையற்ற ஆசை கூடாது.அது நிச்சயம் சீரழிவில் கொண்டுபோய்விடும்.நாம் ஜீவசமாதிகளின் துணை கொண்டு நமது நியாயமான கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் சுமார் 1,00,000 ஜீவ சமாதிகள் இருக்கின்றன.நிச்சயமாக இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத்தான் இருக்கும்.இது தோராய மதிப்பீடு.ஏதாவது ஒரு கோரிக்கையுடன் அமாவாசைக்கு முன்னிரவு,அமாவாசை,அமாவாசைக்கு மறு நாள் இரவு ஆகிய மூன்று இரவுகள் ஏதாவது ஒரு ஜீவசமாதி உள்ள இடத்தில் தங்குங்கள்.ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து ஆயிரம் அடி தூரத்துக்குள் தங்கவும்.


இந்த மூன்று இரவுகளும் தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது;உப்பு,புளி,காரம்,எண்ணெய் சேர்க்கக் கூடாது.பால் பழம் அல்லது பால் சாதம் அல்லது பச்சரிசி சாதம்,வெல்லம் சாப்பிடலாம்.இந்த மூன்று இரவுகளுக்கு முன்பு ஒரு மாதம் வரையிலும் அசைவம்,மது பழக்கத்தைக் கைவிடவும்.ஜீவசமாதியில் இருப்பவரின் ஆவியின் துணையால்,உங்களின் கோரிக்கை நிறைவேறியதாக எண்ணுங்கள்.உங்கள் கோரிக்கை எட்டு தினங்கள் கழித்து நிறைவேறும்.மூன்று தினங்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பிவிடவும்.இதே மாதிரி பௌர்ணமிக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் முயற்சி செய்யலாம்.

ஜீவ சமாதியிடத்தில் தங்கியிருக்கும்போது,உபவாச முறையில் இருக்க வேண்டும்.சமாதியில் இருப்பவரின் பெருமையை எண்ணியவாறு இருக்க வேண்டும்.அனாவசியப் பேச்சு மற்றும் சிந்தனை சிறிதும் கூடாது.பொதுவாக எந்த சமாதியாக இருந்தாலும்,இயன்ற அளவு கனிவர்க்கங்கள் வைத்து வழிபடலாம்.பூக்கள் வைத்தும்,வாசனைப்பொருட்கள் தடவியும் வழிபடலாம்.தீபதூப நைவேத்தியம் சமாதிகளுக்கு உண்டு.கருப்பு திராட்சை,கற்பூர வள்ளி வாழைப்பழம்,பேரீட்சை பழம்,பால்,இளநீர்,சீனா கல்கண்டு,தேன் ஆகியவை முக்கியமான நைவேத்தியங்கள் ஆகும்.பசு நெய்தீபம்,தாமரை நூல் திரியில் ஏற்றுவது நன்று.


அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும்.தங்களுடைய வசதியைப் பொறுத்து கூட்டியோ,குறைத்தோ செய்து கொள்ளலாம்.


இப்படித்தான் காரியம் சாதித்தேன் என்று தேவரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது;என்னதான் மந்திர,தந்திர பூஜைகள் செய்தாலும் அன்னதானத்திற்கு மேல்பட்டது எதுவும் கிடையாது.இந்த தெய்வீக ரகசியத்தை எனக்கு அருளிய எனது ஆன்மீக வழிகாட்டி  சகஸ்ரவடுகர் ஐயா  அவர்களுக்கு நன்றிகள்!!!


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
பொறாமையை எதிர்கொள்வது எப்படி?

யாருக்கெல்லாம் மனதில் உறுதி இல்லையோ,யாருக்கெல்லாம் அதிசயத்தின் மீது பற்றுகொண்டு,உழைக்காமல் அல்லது தனது தேவையான அளவுக்கு உழைக்க வில்லையோ அவர்களுக்கு பொறாமை உண்டாகிறது.1995 முதல் உலகமயமாக்கலின் விளைவாக,கேபிள் டிவி தொழிலில் ஒரு புரட்சி வந்தது.சன் டிவி உருவாகி,இன்று தனது திட்டமிட்ட நிர்வாகத்திறமை மற்றும் அரசியல் செல்வாக்கினால் தமிழ்நாட்டுக்குடும்பங்களின் உறுப்பினர்கள் அளவுக்கு வளர்ந்துவிட்டது.சன் டிவி குழுமம் தான் மெகா தொடர்களை அறிமுகப்படுத்தியதோடு,குடும்ப உறவுகளை கொச்சைப்படுத்தியதோடு,முறையற்ற உறவுகளுக்கு ஒரு அங்கீகாரம் வாங்கித்தந்தது.மேலும்,எப்படியெல்லாம் பொறாமைப்படுவது? நிம்மதியாக,யாருக்கும் கெடுதி தராத உறவுகளை எப்படி பிரிப்பது? என்ற நரித்தனத்தை தமிழ்நாட்டுக்கே சொல்லித்தந்தது.இதனால்,பல நல்ல தமிழ் உள்ளங்கள் முழுவதும் நச்சு நிறைந்த நயவஞ்சக மனமாகி,நிம்மதியில்லாத தமிழ்நாடாகிவிட்டது.இதுபற்றி,ஓ.ஆர்.ஜி. ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தால் நல்லது.அப்படி எடுக்க யார் பணம் தருவார்?


சரி மேட்டருக்கு வருவோம்.


எனது மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்.அவள் தினமும் ஐந்துமணிக்கு எழுந்து,ஆறுமணிக்குள் தயாராகிவிடுவாள்;ஆறு மணிமுதல்,இரவு வரையிலும் சுறுசுறுப்பாக அவளது கடமைகளைச் செய்வாள்.ஒருநாள்,அவள் தனது வகுப்புத் தோழியிடம் கூறினாள்: நான் தினமும் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவேன்.அது குளிர்காலமாக இருந்தாலும் சரி,மழைக்காலமாக இருந்தாலும் சரி


இப்படிச் சொன்ன மறு நாளிலிருந்து,அவளால் ஆறுமணிக்கு மேல்தான் எழுந்திருக்கவே முடிகிறது.தற்போது,அவளது தினசரி வாழ்க்கை அரக்க பரக்க ஓடிக்கொண்டிருக்கிறது.


ஏன் இப்படி எனது மகளுக்கு ஆனது?


நண்பர்களின்/உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது,சில நாட்களில் வற்புறுத்திச் சாப்பிடச் சொல்லுவார்கள்.அப்படிச் சாப்பிடும்போது,அவர்களின் கண்களை கவனிப்பேன்;அதில் ஒரு எதிர்பார்ப்பு தெரியும்.


சாப்பிட்டு முடித்த சில மணிநேரங்களிலேயே, எனக்கு வயிற்றுப்போக்கு வந்துவிடும்.இப்படி என்றாவது ஒரு நாள் நிகழ்ந்தால் அது தப்பில்லை;அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.இதனால்,சொந்த ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மட்டுமே சாப்பிடும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டேன்.ஏன் இப்படி எனக்கு நிகழ்கிறது?


சில ஜோதிட மாத இதழ்களில் ஜோதிடம் சார்ந்த கட்டுரைகள் எழுதத் துவங்கியிருக்கிறேன்.அப்படி எழுதி,அவற்றை திருத்தி,அவற்றில் எனது சிந்தையில் விடுபட்டவற்றை மீண்டும் சேர்த்து,அனுப்பினாலும்,ஒரு சில கட்டுரைகள் மட்டுமே வெளிவருகின்றன.அதில், எனது பெயர்,முகவரி,செல் எண்ணை வெளியிடுகின்றனர்.என்னதான் பிறரின் பொறாமையிலிருந்து தப்பிக்க நினைத்தாலும்,நமது நட்பு மற்றும் உறவு வட்டத்தில் நமது மதிப்பை அதிகரிக்க ஏதாவது பில்ட் அப் செய்வது பிறரின் சுபாவம்;நான் என்ன செய்து வருகிறேன்? என்பதை வெளிப்படுத்துவது எனது குணம்.எனது ஜோதிட நண்பர்கள் மத்தியில் இப்படி எனது ஜோதிடக்கட்டுரை வெளிவந்திருக்கிறது என நான் சொல்லும் நாட்களிலெல்லாம் அவர்களின் கண்களிலிருந்து ஒரு வித சூட்சும அலை,மொத்தமாகப் புறப்பட்டு என்னைத் தாக்கும்.அப்படி நான் அவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாக சொன்ன நாட்களில்,எனது ஜோதிடத் தொழில் டல்லடிக்கும்;அல்லது எனது நெருங்கிய உறவில் திட்டு வாங்கியிருக்கிறேன்.


ஒருதடவை,எனது பக்கத்துவீட்டு அம்மாவிடம்,அம்மா,நாளைக்கு ஆடி அமாவாசை! நான் ராமேஸ்வரம் போகப்போகிறேன்.என்றேன்.அதற்கு அந்த அம்மா,ஆடி அமாவாசைக்கு எதுக்கு அங்கே போறீங்க? எனக் கேட்டார்.


உடனே,ஆடி அமாவாசையின் பெருமைகளை விவரித்து,ராமேஸ்வரம் சென்று நான் அங்கு செய்ய இருக்கும் பித்ரு தர்ப்பணங்களைப் பற்றி விலாவாரியாகச் சொன்னேன்.அப்படிச் சொன்ன உற்சாகத்தில்,அவர்களின் கண்களைக் கவனிக்க வில்லை;மறுநாள்,விடிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து தூங்கியும் கூட,அந்த அலாரம் ஐந்து முறை அலறியும் கூட,நான் தூங்கி எழுந்தது காலை 6 மணிக்குத்தான்.பிறகென்ன? ராமேஸ்வரம் செல்லவில்லை.


இதற்குப் பெயரும் அதுதான்!!!


ஆக,சிவமாரியப்பன் ஐயா ஒரு சத்சங்கத்தில் சொன்னது போல்,மனிதனுக்கு விஷகலை அதிகம்.அதனால்தான் அவன் நடக்கும் இடத்தில் புல் முளைப்பதில்லை;பிறரது பொறாமை,சாபங்கள்,வயிற்றெரிச்சல் நம்மையும்,நமது தொழிலையும்,நமது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்காமல் இருக்க நாம் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்.


1.தினமும் ஏதாவது ஒரு ரூபத்தில் மஞ்சள் நிற ஆடை/கர்ச்சீப்/பனியன்/சட்டை பயன்படுத்த வேண்டும்.மஞ்சள் நிறப்பொருளில்,ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் தரப்படும் எலுமிச்சை பழம் வைத்திருக்கலாம்.மஞ்சள் நிற ஆடை/கர்ச்சீப் பிறரது பொறாமையிலிருந்து நம்மைக் காக்கும்.அந்த தீய எண்ணங்களை ஈர்த்துக்கொள்ளும்.


2.நம்மைச் சுற்றியுள்ளவர்களே நமது உலகம்.அவர்களிடம் நமது பெருமைகளையும்,அவமானங்களையும் ஒரு போதும் சொல்லக்கூடாது.ஆனால்,நமது மனம் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பாராட்டுக்கு ஏங்கும்.அது அவசியம்தான்.அப்படி அவர்களின் பாராட்டு உங்களுக்கு வேண்டுமானால்,உங்களின் வளர்ச்சி/சாதனையை நீங்களே தம்பட்டம் அடிக்கக்கூடாது.(அவர்களிடம் சொல்லக்கூடாது).


நமது பெருமையை நாமே சொன்னால்,அது தற்பெருமைதான்.நம் மீது நிஜமாகவே மரியாதை வைத்திருக்கும் ஓரிரு உளறுவாயர்களை நாம் பாக்கெட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.அவர்களிடம் நமது பெருமைகள்/சாதனைகள்/முன்னேற்றங்களை மொத்தமாக அவர்களிடம் சொல்லக்கூடாது.அவர்கள் மறந்துவிடுவார்கள்.


போன தடவை/போன மாதம்/போன புராஜக்ட்/போன வருடம் செய்த சாதனையைத் தான் இப்போது அவர்களிடம் ரகசியமாக சொல்லி, ‘யாரிடமும் சொல்லாதே’ என்று தெரிவித்தவாறு,அவர்களை சிறு சிறு பரிசு கொடுத்து,அவர்களை வளர்க்க வேண்டும்.


பொறாமைபிடித்தவர்கள் இதை உறுதிபடுத்திட, நம்மிடம் ‘நல்ல மூடு’ இருக்கும்போது கேட்பார்கள்.அதை நாம் சந்தோஷமாகவும்,பெருமையாகவும் ஆமா என சொல்லக்கூடாது.அது போன மாசமே நடந்திருச்சே என தெரிவிப்பதன் மூலமாக,அவர்களின் பொறாமை பொங்காமல் சிறுத்து,சிதறிவிடும்.


அதே சமயம்,ஏதோ அதிர்ஷ்டத்தால் நடந்தது என்றவாறு சொல்லிவிட வேண்டும்.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-6கேள்வி:உங்கள் வீட்டு சாப்பாடு மிக நன்றாக இருந்தது.மிக்க நன்றிகள்.


பதில்:தமிழர்களின் பண்பாடு வீடு தேடி வந்தவர்களை உபசரிப்பதுதானே!

கேள்வி:ஓ! . . .உண்மைதான்! நமது பண்பாட்டை நாமே விட்டுக்கொடுக்கக் கூடாது;மறந்துவிடக்கூடாது;
கேள்வி:உலக மயமாக்கல் பற்றி சொல்லுங்கள்.


பதில்:நமது ஆன்மீகக்கடலின் 2010,2011 ஆம் ஆண்டு பதிவுகளை வாசியுங்கள்.போதுமான அளவுக்கு விவரித்திருக்கிறேன்.மேலும்,பல பதிவுகள் வர இருக்கின்றன.


தவிர, உலகமயமாக்கல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள் எனில்,பின்வரும் முகவரிக்கு ஆண்டுச்சந்தா அனுப்பவும்.


கேள்வி:அது என்ன பத்திரிகை?


பதில்:சுதேசிச் செய்தி என்பது அந்த மாத இதழின் பெயர்.சுதேசி விழிப்புணர்வு இயக்கம்,தமிழ்நாடு இந்த மாத இதழை நடத்திவருகிறது.தனிப்பிரதி ரூ.7/-ஆனால்,கடைகளில் இந்த இதழ் பெரும்பாலும் கிடைப்பதில்லை;ஆண்டுச்சந்தா ரூ.75/- முகவரி:swadeshiseithi@yahoo.co.in கேள்வி:இருந்தாலும் உலகமயமாக்கலைப் பற்றி கொஞ்சம் சொல்லக்கூடாதா?


பதில்: டைனோசரை தீப்பெட்டிக்குள் அடைக்க ஆசைப்படுகிறீர்கள்.சரி,முயலுவோம்.


உலகப் பொருளாதார மந்தம் மீண்டும் உலகை அச்சுறுத்தாமல் இருப்பதற்காக 1945 ஆம் ஆண்டு ஆர்தர் டங்கல் என்பவர் உருவாக்கிய திட்டமே இன்று குளோபலிஷேசன் என்ற பெயர் தாங்கி,உலக நாடுகளை வியாபார ரீதியில் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.நோக்கம் என்னவே பேப்பரில் நன்றாக இருக்கிறது.ஆனால்,நடைமுறையில்,அமெரிக்காவும்,ஐரோப்பாவும் வெகுவிரைவில் பரம ஏழைநாடுகளாகப் போகின்றன.அப்படிப் போகும் முன்பு,உலகமயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கு உலக நாடுகளின் சட்டங்களை அழித்து,அவை பிழைக்கவும்,உலக ஏழைகளின் உழைப்பை உறிஞ்சவும் செய்யப்பட்ட விரிவான ஏற்பாடுதான் இது!


இந்தியாவில் (ஃபேஷன் என்ற பெயரில் அலங்கோலமான ஆடை அணிந்தவர்களின் நடையழகை ஒளிபரப்பும்) எஃப் டிவி தடையின்றி பரவுவதற்கும்,அமெரிக்காவில் சன் டிவி தெரிவதற்கும் இந்த உலக மயமாக்கமே காரணம்.தவிர,நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் இப்போதே உள்நாட்டுத்தயாரிப்பாக இல்லை;இன்னும் பத்தாண்டுகளில் இந்திய நிறுவனங்களே உற்பத்தித்துறையில் இல்லாத சூழ்நிலை உண்டாக்விடும்.ஒருவேளை அப்படி இருந்தாலும்,அவை இந்திய பன்னாட்டு நிறுவனங்களாக இருக்கும்.


கேள்வி: கொஞ்சம் விரிவாக. . .


பதில்:புது டெல்லியில் மட்டும் 4000 குளிர்பான நிறுவனங்கள் இருந்தன.ஒரு குளிர்பான நிறுவனம் 100 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு தருகிறது எனில்,4000 நிறுவனங்கள் 4,00,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பினை புது டெல்லியில் மட்டும் இயங்கும் குளிர்பான நிறுவனங்கள் கொடுத்துக்கொண்டு வந்திருக்கின்றன.இந்த 4000 நிறுவனங்களை ஒரே ஒரு பெப்ஸியும்,ஒரேஒரு கோகோ கோலா நிறுவனமும் அழித்துவிட்டது.விளைவு? 4,00,000 பேர்களுக்கு வேலை போய்விட்டது.ஒரு குடும்பத்துக்கு 4 பேர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொண்டால், 16,00,000 பேர்களுக்கு வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருக்கிறது.


நமது தமிழ்நாட்டில் வின்சென் ட் சோடா,மாப்பிள்ளை விநாயகர் போன்ற சோடா நிறுவனங்கள் எங்கே?


கேள்வி: இருக்கட்டுமே! இதனால்,நமது நாட்டுக்கு என்ன நஷ்டம்?


பதில்:நல்ல கேள்வி! ஒன்றரை லிட்டர் செவன் அப் விலை என்ன?


கேள்வி:சுமார் ரூ.40/- இருக்கும்.

பதில்:அந்த ஒன்றரை லிட்டர் செவன் அப்பை தயாரிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?


கேள்வி: தெரியவில்லை.நீங்களே சொல்லுங்கள்.


பதில்:வெறும் 30 பைசாக்கள்.


கேள்வி:அது எப்பிடிங்க?


பதில்; மாஸ் புரடக்ஷ்சன் என்பது மேல்நாடுகளின் புரடக்ஷன் பாலிஸி! பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்தப்பின்னர், கிரேட் மாஸ் புரடக்ஷன் என்பது இந்தியாவுக்கான பாலிஸி!!!


கேள்வி: 30 பைசாவுக்கு தயாரித்து 45 ரூபாய்க்கு விற்கிறார்களே,ஏஜண்டுகளுக்கு கமிஷன் நன்றாகக்கிடைக்குமே


பதில்: உரத்துச் சொல்லிவிடாதீர்கள்.ஏஜண்டுகள் உங்களை உதைக்க வந்துவிடப்போகிறார்கள்.இன்னொரு உண்மையைக் கேளுங்கள். உலக மென்பொருள் ஜாம்பவான் மைக்ரோசாப்ட். . .


கேள்வி: ஆமாமா,நம்ம பில் கேட்ஸ் கம்பெனி


பதில்:(கிண்டலாக) நம்ம பில் கேட்ஸ் அல்ல;ஒரு விண்டோஸ் ஓ.எஸ்.ஸின் விலை இந்தியாவில் ரூ.4500/-அதே ஓ.எஸ்ஸின் விலை அமெரிக்காவில் ரூ.200/- நம்ம பில்கேட்ஸ்தான் இதையெல்லாம் செய்கிறார்.


கேள்வி: இது உண்மையாக இருந்தால் ஸ்பெக்ட்ரம் கொள்ளையை விட அநியாயமாக இருக்குதே!


பதில்: இதை எதிர்த்து,சில ஆண்டுகளுக்கு முன்பு,மதுரையில் இருக்கும் கணிப்பொறி விற்பனை நிறுவனங்கள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தின.தினமலர் செய்தியாக வந்தது.


கேள்வி: நம்மை பன்னாட்டுநிறுவனங்கள் ராணுவத்தை அனுப்பாமலேயே,நம் மாநிலத்தின் பிரபல நடிகர்கள்,நடிகைகளை விளம்பரங்களில் நடிக்க வைத்து, அடிமைப்படுத்திவிட்டன.
தினமும் ஒரு டீன் ஏஜ் பெண் 300 மிலி குளிர் பானங்களில் ஏதாவது ஒன்றை அருந்தி வந்தால்,வெறும் 90 நாட்களுக்குப் பிறகு,அவளின் மாதவிடாய் ஒழுங்கு கெட்டுப்போய்விடும்.அதன் பிறகு,அவளுக்கு இரண்டுமாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மாத விலக்கு வரும் என்பதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.இந்தச் செய்தி பரவாமலிக்கவும்,இது தொடர்பாக எந்த சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்காமலிருக்கவும் பல திரைமறைவு வேலைகளை இந்த நிறுவனங்கள் ஆதாரமில்லாமல் செய்து வருகின்றன.

ஜீரோ டிகிரியில் தண்ணீரானது பனிக்கட்டியாகிவிடும்.ஜீரோ டிகிரியிலும் கூட இந்த கோலா/பெப்ஸி பானங்கள் உறைவதில்லை;எதில் க்ளைக்கால் என்ற வேதிப்பொருள் இதில் சேர்க்கப்படுகிறது.இது மனித உடலுக்குள் ஏராளமான தீங்குகளை விளைவிக்கிறது.


உலக மயமாக்கலின் விளைவுகளில் இதுவும் ஒன்று.இதைத்தான் நான் கிண்டலாகச் சொல்வதுண்டு.

கேள்வி:ஹா ஹா ஹா


பதில்: ஹா ஹா ஹா

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-5
கேள்வி:உங்கள் சிந்தனைகள்,எழுத்துக்களைப் பார்க்கும்போது நீங்கள் இந்தியாவையும்,இந்துதர்மத்தையும் அளவின்றி நேசிக்கின்றீர்கள் என்பது தெரிகிறது.இந்த சிந்தனையை உங்களுக்குள் உருவானது எப்படி?


பதில்:மிக்க மகிழ்ச்சி! இந்தியாவில் இருக்கும் 121 கோடி இந்தியர்களில் வெறும் 30 கோடி இந்தியர்கள் இந்தியாவை நேசிக்க ஆரம்பித்தாலே போதும்.இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது.


படிப்படியாகத்தான் நான் நமது இந்தியாவையும்,இந்து தர்மத்தையும் நேசிக்கத் துவங்கினேன்.


 கல்லூரியில் பி.ஏ.படிக்கும்போது,நூலகமே கதியாகக் கிடப்பேன்;பெரும்பாலான நூலகங்கள் எனக்குத் தெரியும்.அவற்றின் வேலை நேரம் தெரியும்.


நான் தங்கிப்படித்த மாணவர் விடுதியில் இருந்த நூலகத்தில் இருந்த 1800 நூல்களையும் மூன்று ஆண்டுகளில் ஒருமுறையாவது வாசித்திருக்கிறேன்.அதில் ஹிந்து ராஷ்டிரத்துக்கு அறைகூவல் என்ற தலைப்பில் விவேகானந்த கேந்திரம் வெளியிட்ட புத்தகம் எனது சிந்தனையைத் தூண்டியது.இந்த புத்தகம்,இந்தியாவில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவரும்,முஸ்லீமும் வாசிக்க வேண்டியபுத்தகம்.


கேள்வி:அவ்வளவு சிறப்பானதா அந்த புத்தகம்.அந்த புத்தகம் தற்போது கிடைக்கிறதா?


பதில்: விவேகானந்தா கேந்திரம்,விவேகானந்தபுரம்,கன்னியாகுமரி என்ற முகவரியில் அந்த புத்தகம் கிடைக்கிறது.தலைப்புதான் மாறியிருக்கிறது.அதன் தற்போதைய தலைப்பு “விழிமின்;எழுமின்” விலை ரூ.50/-க்குள் இருக்கும்.


இந்த புத்தகத்தில் இந்துதர்மத்தின் பெருமைகள்,அதை  கிறிஸ்தவ பிரிட்டன் சிரழித்த விதம்,அதனால் இந்திய குடும்பங்களில் உண்டான சீரழிவு போன்றவைகளையும்,அதிலிருந்து நாம் மீள வேண்டிய வழிமுறைகளை சுவாமி விவேகானந்தர் பேசியிருக்கிறார்.


தவிர,இந்துதர்மத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை எப்படியெல்லாம் சீரழித்து,தெய்வ பக்தியில்லாத,ஆங்கிலத்தையும்,ஆங்கில நாகரீகமே உயர்ந்தது என்ற கருத்தைப் பரப்பிட இங்கிலாந்து செய்த நரித்தனமான செய்கைகளையும் விவரித்துள்ளனர்.


இதன் விளைவுதான்,இன்று பள்ளி ஆசிரியராக இருப்பவர் கூட தன்னிடம் படிக்கும் மாணவிகளை கற்பழிக்குமளவுக்கு தனிமனித ஒழுக்கம் சீரழிந்திருக்கிறது.


கேள்வி:இந்த புத்தகம் எங்கெல்லாம் கிடைக்கும்?


பதில்:விவேகானந்த கேந்திரத்தில் மட்டுமே கிடைக்கும்.வேறு எங்குமே கிடைக்காது.


இந்த புத்தகத்தை இதுவரை சுமார் 30 40 முறை திரும்பத் திரும்ப வாசித்திருப்பேன்.இது தவிர இரண்டு சம்பவங்கள் அடிமை இந்தியாவில் நடைபெற்றன.அவைகளை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.1999 முதல் 2010 வரை இருக்கும் காலகட்டத்தில் இந்த சம்பவங்களை வாசிக்க நேர்ந்தது.


முதல் சம்பவம்:


சுதந்திரத்துக்கு முன்பு,நமது நாட்டு மகாராஜாவும்,ஒரு ஆங்கிலேயத் தளபதியும் நண்பர்களாக இருந்தார்கள்.அப்போது நமது நாட்டு மகாராஜா,அந்த ஆங்கிலேயத் தளபதியிடம் ஒரு கேள்வி கேட்டார்:


ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?


அதற்கு அந்த ஆங்கிலேயத்தளபதியின் பதில்,


அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களின் மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக்கொள்;அது போதும்!


இந்த பதிலுக்குள் மறைந்திருக்கும் உண்மையை,ஆன்மீகக்கடலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணர வேண்டும்.


இரண்டாவது சம்பவம்:


கோவா கடற்கரை;நமது நாட்டு மன்னர் ஒருவரும்,அவரது நண்பராகிய ஆங்கிலேயத் தளபதியும் கடலை நோக்கி அமர்ந்திருந்தனர்.நமது மன்னர்,அந்த தளபதியிடம் ஒரு கேள்வி கேட்டார்.


எனக்கொரு சந்தேகம்?


என்ன சந்தேகம் வேண்டுமானாலும் கேளுங்கள் மன்னா?


6000 மைல்கள் தூரத்தில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு எங்கள்(இந்தியா) நாட்டின் பண்பாடைப் பற்றித் தெரியாது;எங்களின் வரலாற்றைப் பற்றியும் தெரியாது;30 கோடி மக்கள்தொகை கொண்ட எங்களை,வெறும் 200 பேர்களைக் கொண்ட நீங்கள் எப்படி அடிமைப்படுத்திட முடிந்தது?


அந்த ஆங்கிலேயத்தளபதி புன்னகைத்தவாறு,


“உங்கள் படைவீரர்கள் 10 பேரை கடலை நோக்கி அணிவகுக்க உத்தரவிடுங்கள்”

மன்னரும் உடனே அதுபோல,உத்தரவிட்டார்.


ஆங்கிலேயத் தளபதியும் தனது ஆங்கிலேயப் படைவீரர்களை அவர்களுக்குச் சமமாக கடலை நோக்கி அணிவகுக்க உத்தரவிட்டான்.


இரண்டு அணிகளையும் ஒரே நேரத்தில்,கடலை நோக்கி கவாத்து செய்ய உத்தரவிட்டான்(லெப்ட்,ரைட்)


இரண்டு குழுவினரும் கடலை நோக்கி ராணுவ மிடுக்கோடு நடக்க ஆரம்பிக்கின்றனர்.மணல் பகுதியை இரண்டு அணியினரும் கடக்கின்றனர்.அலைகள் மணலைத் தழுவும் இடம் வருகிறது.சில அடிகளிலேயே,கடலுக்குள் நடக்கும் சூழ்நிலை உருவாகிறது.


ஆங்கிலேயர்கள் படைப்பிரிவு சிறிதும் அஞ்சாமல்,கடலுக்குள் இடுப்பளவு வரை விடாமல் அணிவகுத்துச் செல்கின்றனர்.ஆனால்,இந்திய படைப்பிரிவு முழங்கால் அளவு கடல் வரைகூட செல்லாமல்(மன்னரோ,ஆங்கிலேயத்தளபதியோ நிற்கச்சொல்லி உத்தரவிடாமலேயே) நின்ற இடத்திலேயே லெப்ட்,ரைட் பயிற்சி செய்கின்றனர்.


இதைக் கவனித்த மன்னருக்குக் கோபம்;ஆங்கிலேயத்தளபதி,தனது படைப்பிரிவுக்கு நிற்கச்சொல்லி உத்தரவிட்டு,


“மன்னரே,கவனித்தீர்களா? தனது தளபதி சொன்னதை அப்படியே செய்வது எங்கள் ஆங்கிலேயர்களின் குணம்;நாடாளும் நல்லவர்;வல்லவர்;(அழுத்தமாக) உங்கள் கடவுளுக்குச் சமமாக மதிக்கும் மன்னராகிய நீங்கள் உத்தரவிட்டும் கூட,உங்கள் உத்தரவை விட,உங்கள் படைவீரர்களுக்கு உயிர் வெல்லக்கட்டி” இதுதான் காரணம் !!!


அப்புறம் இன்னொரு விஷயம். . .

நமது ஆயுர்வேத,சித்தவைத்தியம் சொல்லும் மருத்துவக்குறிப்பு என்னவெனில்,காலையில் நாம் தூங்கியெழுந்ததும்,நமது பல்லின் கசப்பு,துவர்ப்புச் சுவைதான் பட வேண்டும்.ஆனால்,இன்று இந்தியாவில் விற்பனையாகும் பற்பசைகளில் பெரும்பாலானவை இனிப்புச்சுவையுடையவை;தவிர,பெட் காபி குடிப்பது இந்தியப்பாரம்பரியங்களில் ஒன்றாகிவிட்டது.இதன் விளைவுதான் மிக குறைந்த காலத்தில் பல்லுடன் கம்பி கோர்ப்பதும்;பல் செட்களை மாட்டுவதும்.


வெறும் வியாபாரத்துக்காகவே இங்கிலாந்தும்,அமெரிக்காவும் இந்தியாவின் பண்பாட்டைச் சிதைக்கும் போது,மனிதகுலம் முழுவதும் போரின்றியும்,நிம்மதியாகவும் வாழ இந்து தர்மத்தைப் பரப்புவதில் என்ன தவறு இருக்கிறது?


கேள்வி: அட! ஆமாம்!!

புத்தகங்கள் பீரங்கிகளை விட வலிமையானவை!!!
ஜீலியஸ் சீசர் கிரேக்க நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறான்.கிரீஸ் துறைமுகத்தில் அவனது போர்க்கப்பல்கள் நங்கூரமிடுகின்றன.ஆனால்,அந்த நாட்டினர் முகங்களில் போர் அச்சம் துளிகூட இல்லை;ஒரு வேளை படைபலம் பெரிதாக இருக்குமோ என்று தனது படைத்தலைவனிடம் கேட்கிறான்.படைத்தலைவன் ஒற்றர் பிரிவுக்கு இதற்கான விடையைக் கண்டறியுமாறு பணிக்கிறான்.சில நாட்களில் விபரம் தெரிகிறது.

அலெக்ஸாண்டரியா நகரத்தில் ஒரு நூலகம் இருக்கிறது.அங்கே பல லட்சம் நூல்கள் இருக்கின்றன.அவற்றைக் கற்றுணர்ந்த மக்கள்,அதன் மூலம் பெற்ற தெளிந்த அறிவினால்,நிலைகுலையாத மனப்பக்குவத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதே அந்த உளவுப்பிரிவின் முடிவு.

படைத்தலைவன் சிரிக்கிறான்.சீசர் சிரிக்கவில்லை;ஆயுத பலத்தை சமாளித்துவிடலாம்;அறிவுபலத்தை சமாளிக்க முடியாது என்பதை உணர்கிறான்.பிறகு துவங்கிய போரில் அவன் முதன்முதலில் அழித்தது அந்த நூலகத்தைத் தான்!!!

புத்தகங்களை அழிப்பதன் மூலம் ஒரு சமூகத்தை குருடாக்கிவிடலாம்.பெண்களை அழிப்பதன்மூலம் ஓர் இனத்தை மலடாக்கிவிடலாம்.

இலங்கையில் இரண்டும் நிகழ்ந்திருக்கிறது.  யாழ்ப்பாணத்தில் தமிழ் நூலகத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினர்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! நொந்து நூடுல்ஸான ஒரு சக வலைப்பதிவரின் சோக கதை..! | Jul 23, 2011e
I am a blogger , I am a blogger என்று  காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் , சக வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி ! மிகப் பெருந்தன்மையோடு , உங்கள் வாசகர்கள் பின்னூட்டம் இட வசதியாக , நீங்கள் கொடுத்திருக்கும்  " Post your comments "  வசதியால் வந்த வினை இது. 

வாசகர்கள் பதிவை , நீங்கள் படித்துப் பார்த்து பின்பு publish பண்ணாமல்  - " {Comments Moderator - Enable பண்ணாமல்} , தானே உங்கள் வலைப்பூவில் சில பின்னூட்டங்கள் சென்று விடும். அந்த மாதிரி ஒரு வலைப்பூவில் , சென்று விழுந்த பதிவு - இன்று அந்த பதிவரை " CRIME BRANCH " என்கொயரியில் தள்ளி விட்டு இருக்கிறது.. 

நடந்தது இதுதான் :

வலைப்பூ மூலம் , கணிசமாக சம்பாதிக்கூடியவர் என் நண்பர் ஒருவர். பக்கா intellectual . well decent family . மிக சின்சியராக , ஒரு ஐந்து ப்ளாக் நடத்திக்கொண்டு இருக்கிறார்.எல்லாமே தரமான , இன்டர்நேஷனல் லெவெலில் ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் வருகிற "ப்ளாக்" குகள்.  வாசகர்கள் தாராளமாக தங்கள் பின்னூட்டங்களை பதிவு இடுவர்.  பெரிய , பெரிய பதிவர்கள் - ஏதோ ஒரு prestige issue போல - கமெண்ட்ஸ் களை " மாடரேட் " செய்யாமல் ஆட்டோ பப்ளிஷ் செய்து விடுகின்றனர். ஒரு அறியாமையில் இவரும் அதே போல் வைத்து இருக்கிறார். 

ஒரு பையனுக்கும், பொண்ணுக்கும் ஏதோ தகராறு போல. அந்த பையன் , கொஞ்சம் வில்லங்கமாக அந்த பெண்ணைப் பற்றி  எழுதி , மொபைல் நம்பரும் போட்டு - பின்னூட்டத்தில் தட்டி விட்டுருக்கிறான். அதன் பிறகு,  தினமும் அந்த பெண்ணிற்கு - நூற்றுக் கணக்கில் அனாமதேய கால்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த  அந்த பெண் , கடைசியில் காவல் துறையில் ரிப்போர்ட் செய்ய , விஷயம் சைபர் கிரைம் டிபார்ட்மென்ட் க்கு சென்று இருக்கிறது.. 

அவர்கள் , இணையத்தில் தோண்டி துருவி ஆராய , நம்ம நண்பரின், வலைப்பூ, IP அட்ரஸ் , வீட்டு டெலிபோன் - என்று நெருங்கி , அவரது வீட்டில் வந்து விசாரித்து விட்டுப் போயிருக்கின்றனர். 

மன உளைச்சலில் , மிரண்டு போயிருக்கின்றனர்  நண்பரும், அவரது வீட்டில் உள்ளோரும்.. இப்போது உண்மையான குற்றவாளி யார் என்று போலீசும் , முழு வீச்சில் இறங்கி இருக்கின்றனர்... !

முதல்ல பின்னூட்டம் போட்டு இருக்கிறேன் , எனக்கு வடை னு சொல்லி , சொல்லி - அச்சடிச்ச சோறு ஆக்கிடப்போறாங்க... !

அதனால் , பதிவுலக நண்பர்களே ... நீங்களும் கொஞ்சம் உஷாராகவே இருங்க !
மன நோயாளிகள் இன்னும் இந்த உலகத்தில் அதிகம்.. உங்களையும் , அந்த மாதிரி ஆக்கிடப்போறாங்க..  உங்களால் முடிந்தவரை , உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்க...!!

புதிதாக வலைப்பூ தொடக்கி இருந்கும் நமது வாசகர்களே.. நீங்களும் அவசியம் தெரிஞ்சுக்கோங்க... !!

 நன்றி,

ரிஷி... Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_2901.html#ixzz1TE4WsJm1

கடகராசியும் துலாம் சனிப்பெயர்ச்சியும்26.6.2008 அன்றோடு கடகராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டாலும்,பெரும்பாலான கடகராசிக்காரர்களுக்கு இன்னும் பொருத்தமான தொழில் அல்லது வேலை அமையவில்லை;நேரில் பல கடகராசிக்காரர்கள் என்னை திட்டவும் செய்திருக்கிறார்கள்.எதுவுமே செட்டாகவில்லை; என்னதான் ஜோசியம் சொன்னே? என்று!

அத்தனை கடகராசிக்காரர்களுக்கு 30.11.2011க்குள் அவரவரின் இயல்பு சுபாவம்,திறமை,தொழில் வல்லுநர் தன்மை(எக்ஸ்பர்ட்),வயது இவற்றுக்குப் பொருத்தமான வேலை அல்லது தொழில் அமைந்துவிடும்.மிகுந்த சாமர்த்தியமும்,திறமையும் கொண்ட கடகராசிக்காரர்களுக்கு 16.12.2014க்குள் மிக உயர்ந்த தொழில்/வேலை அமையும்.தாமதமாக சனிபகவான் கர்மாவை(தொழில்/வேலை) தந்தாலும் நிரந்தரமாகத் தந்துவிடுவார்.

நமது பாரத நாட்டின் சுதந்திர ஜாதகப்படி,கடகராசியே வருகிறது.இதன்படி,இன்னும் தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்த எவரும் இந்தியாவை இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் மந்திரியாகக் கூட இல்லை;இந்த நிலை வெகுவிரைவில் மாறிவிடும்.சித்தர்கள் ஆசி பெற்ற ஒருவன் இந்தியாவின் தலைமை பீடத்தைக் கைப்பற்றுவார்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

கும்பம்,மிதுனம்,ரிஷபம்,மகரம் ராசிகளும்,துலாம் சனிப்பெயர்ச்சியும்30.11.11 முதல் கும்பராசிக்கு அஷ்டமச்சனி விலகுகிறது;மிதுன ராசிக்கு அர்த்த அஷ்டமச்சனி விலகுகிறது;ரிஷப ராசிக்கு சனி ஆறாமிடத்துக்கும்,மகரத்துக்கு ஒன்பதாமிடத்திலிருந்து பத்தாம் இடத்துக்கும் சனிப்பெயர்ச்சி ஆகிறது.

கும்பராசிக்காரர்களுக்கு இதுவரை இழுவையாகி வந்த பதவி உயர்வு நிச்சயமாகிவிடும்;கன்னிப்பெண்களுக்கு கல்வியில் அசுர வளர்ச்சி ஏற்படும்;திருமணத்தடை நீங்கும்;சுய தொழில் செய்துவருவோர் படிப்படியான ஆனால் உறுதியான வளர்ச்சியைப் பெறுவார்கள்.உடல்நிலை சீராகும்.உயர்கல்விக்கான இடம் கிடைக்கும்.சிறை அல்லது வழக்கில் சிக்கியவர்கள் விடுபட்டு நிம்மதியின் முக்கியத்துவத்தை அனுபவிப்பார்கள்.2013ஆம் ஆண்டில் சனி உச்சமாகப் போவதால்,மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் அவரவர் துறைகளில் கொடிகட்டிப்பறப்பார்கள்.உலகெங்கும் நீதி நிலைநாட்டப்படும்.

மிதுனராசிக்காரர்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழில் கிட்டும்.எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் உதவிகள் கிடைத்து,விறுவிறு வளர்ச்சியைக் காண்பார்கள்.எனவே,இந்த ராசிக்காரர்கள் சேமிக்கத்துவங்கலாம்.

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஜன்மச்சனி & அஷ்டமச்சனியை எப்படி எதிர்கொள்வது?ஏழரைச்சனி என்பது ஏழரை ஆண்டுகளாக தொடரும் சனி ஆட்சிகாலமாகும்.நமது ராசிக்கு முந்தைய ராசியில் இரண்டரை ஆண்டுகள் விரையச்சனியாகவும்,நமது ராசியில் இரண்டரை ஆண்டுகள் ஜன்மச்சனியாகவும்,நமது ராசிக்கு அடுத்த ராசியில் இரண்டரை ஆண்டுகள் வாக்குச்சனி அல்லது பாதச்சனியாகவும் செயல்படும்.

26.6.2008 முதல் 30.11.2011 வரையிலும் சிம்மராசிக்கு வாக்குச்சனியாகவும்,கன்னிராசிக்கு ஜன்மச்சனியாகவும்,துலாம் ராசிக்கு விரையச்சனியாகவும் செயல்பட்டுவருகிறது.இதே காலகட்டத்தில் கும்பராசிக்கு அஷ்டமச்சனியாகவும் செயல்பட்டுவருகிறது.

ஏழரைச்சனிகாலத்தில் ஒருவர் என்னவெல்லாம் கஷ்டப்படுவாரோ,அதே கஷ்டத்தை அஷ்டமச்சனிகாலமாகிய இரண்டரை ஆண்டுகளில் பட்டுவிடுவார்.

30.11.2011 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2014 வரையிலும் கன்னிராசிக்கு வாக்குச்சனியாகவும்,துலாம் ராசிக்கு ஜன்மச்சனியாகவும்,விருச்சிகராசிக்கு விரையச்சனியாகவும் ஏழரைச்சனி பரிமளிக்கிறது.மீனராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனியாகவும் இந்த காலம் இருக்கும்.

ஒருமனிதனின் 30 ஆண்டுகள் வாழ்க்கையில் வெறும் பத்தாண்டுகள் மட்டுமே சனியின் தொல்லையில்லாமல் நிம்மதியில்லாமல் வாழ முடியும்.

ஏழரைச்சனிகாலத்தில் நமது உழைப்புக்குரிய மரியாதை,அங்கீகாரம் இராது.நிரந்தர வருமானத்தில் இருக்க முடியாது;எல்லோரும் நம்மை உதாசீனப்படுத்துவர்.ஒரே தடவையில் ஒரு சின்ன வேலையை முடிக்க முடியாது.நாமெல்லாம் ஏன் உயிர் வாழணும்? என்ற எண்ணத்தை உருவாக்கிய சில மாதங்களில் ஜன்மச்சனி நம்மை விட்டுவிலகிவிடும்.இது உண்மையா?இல்லையா? என்பதை அறிய உங்களுக்குத் தெரிந்த கன்னிராசிக்காரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒருவருக்கு ஏழரைச்சனி முடிந்து பனிரெண்டரை ஆண்டுகள் வரை மட்டுமே நிம்மதியாக வாழமுடியும்.அஷ்டமச்சனி ஒருவருக்கு முடிந்தால்,அது முடிந்த ஏழரை ஆண்டுகள் வரை மட்டுமே நிம்மதியாகவும்,வேலை/தொழில் முன்னேற்றத்துடன் இருக்க முடியும்.

ஏழரைச்சனி முடிந்து பனிரெண்டரை ஆண்டுகளில் தொழில் அல்லது வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.வருமானம் கூடும்.நமது இயற்கையான சுபாவமும் வெளிப்படும்.இந்த பனிரெண்டரை ஆண்டுகளில் முடிந்தவரையில் யாருக்கும் மனதாலோ,உடலாலே தீங்கு செய்தால்,அதற்கான பிரதிபலன் உடனடியாகக் கிடைத்துவிடாது.அஷ்டமச்சனியில் மொத்தமாகக் கிடைக்கும்.ஏழரைச்சனி வரும் முன்பு,நீங்கள் பரம ஒழுக்கமானவராக இருந்தால்,அது வாழ்க்கையின் மறுபக்கத்தை ஏழரைச்சனிகாலத்தில் காட்டும்.

அதே சமயம்,ஏழரைச்சனி வரும் முன்பு,நீங்கள் மனம்போன போக்கில் வாழ்ந்துவந்தால்,ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர வைக்கும்.

இந்த விதி,சிலருக்கு மட்டும் பொருந்தாது.ஏழரைச்சனி,அஷ்டமச்சனி காலத்தில் கூட,சிலருக்கு சனியின் தீமை சிறிதும் பாதிக்காது.அவர்கள் ரிஷப லக்னத்தில் பிறந்து,திரிகோணங்களில் சனி நின்றால்,அவருக்கு ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் யோகமும் வளர்ச்சியும் நிறைந்த கால கட்டமாக அமையும்.சனி உச்சமாக இருந்தாலும் இதே நிலைதான்.


சரி போகட்டும்.சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

விநாயகரை வழிபட சனி துன்பம் விலகும்.சிவனை வழிபட சனித்தொல்லை இராது என கேள்விப்பட்டிருப்போம்.ஆனால்,அப்படி செய்தவர்களுக்கு சனித்தொல்லை இருந்திருக்கிறது.
சனி தொல்லை நீங்கிட,சுலப வழி பைரவர் வழிபாடுதான்.இதை ஆராய்ந்து நமக்காக அறுதியிட்டவர் எனது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்.

அவரது ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகளை உங்களுக்குத் தருவதில் ஆன்மீகக்கடல் பெருமைப்படுகிறது:
30.11.2011 முதல் 2014 வரையிலும் ஜன்மச்சனி இருக்கும் துலாம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டியது.
1.அசைவம் சாப்பிடுவதை 30.11.2011 முதல் 2014 வரையிலும் கைவிடுவது.முடியாதவர்கள் சனிக்கிழமைகளில் மட்டுமாவது கைவிடுவது அவசியம்.நிரந்தரமாக கைவிடுவதே சிறந்தது.

2.சனிக்கிழமைகளில் வரும் ராகு காலமாகிய காலை 9 முதல் 10.30 வரையிலும் மண் அகல் விளக்கை,கருப்பு வண்ணம் பூசி,பாதி நெய்,பாதி இலுப்பையெண்ணெய் கலக்கி அதில் நிரப்ப வேண்டும்.ஒரு சொட்டு எலுமிச்சை சாறு அதில் கலக்கி பைரவர் சன்னிதியில் விளக்கேற்ற வேண்டும்.

இதை மகன்/மகளுக்காக அம்மா/அப்பா/சகோதரன்/சகோதரி/கணவன்/மனைவி செய்துவரலாம்.உரியவரே செய்துவருவது மிகவும் உத்தமம்.

3.துலாம் ராசிக்காரர்கள் ஆறுமாதத்துக்கு ஒரு முறை ஷேவிங் செய்வது நன்று.
4.சனிக்கிழமைகளில் அனாதைகளுக்கு ஒரு வேளை மட்டுமாவது அன்னதானம் செய்துவருவது அவசியம்.

5.சனிக்கிழமைகளில் மட்டுமல்லாமல்,எப்போதும் பைரவருடைய காயத்ரி மந்திரத்தை மனதுக்குள் ஜபிப்பது அவசியம்.

30.11.2011 முதல் 2014 வரை அஷ்டமச்சனியை எதிர்கொள்ள இருக்கும் மீனராசியினர் செய்ய வேண்டியதைப் பார்ப்போம்:

1.சனிக்கிழமை தவறாமல் இரவு 7.30க்குமேல் 9.30க்குள் பைரவருக்கு கருப்புப் பட்டு அணிவித்து( வாரம் ஒரு முறை முடியாதவர்கள் ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை கூட போதும்)உளுந்துவடைமாலை,கருங்குவளை மாலை/நீலோர்பல மாலை அணிவித்து,புனுகு பூசி கறிவேப்பிலை சாதம் படையலிட்டு,இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

2.சனிக்கிழமைகளில் அசைவம் வீட்டிலும்,வெளியிலும் சாப்பிடக்கூடாது.இந்த இரண்டரை ஆண்டுகள் முழுவதும் சாப்பிடாமலிருப்பதே நன்று.

3.சனிக்கிழமைகளில் அனாதைகள்/ஊனமுற்றோர்கள்/நிராதரவாக இருக்கும் வயதானவர்களுக்கு உணவு அளிப்பது(அன்னதானம் தான்) மிகவும் நல்ல செயல் ஆகும்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

அருமையான பலன்கள் தரும் அம்மன் திருத்தலங்கள்.

click on this image to enlarge & again once click for good reading

துலாம் சனிப்பெயர்ச்சி என்ன செய்யும்?


உலகத்தின் தலையெழுத்தை மாற்றிடப்பிறந்த நவக்கிரகமே சனிபகவான் ஆவார்.ஆமாம்! வெறும் காடு,மலை,வனம் என்றிருந்த இந்த பூமியை இன்று தொழில்நுட்ப உலகமாக மாற்றிய பெருமை சனியைச் சேரும்.சனி மட்டுமல்ல;ஒன்பது நவக்கிரகங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிந்துதான் இந்த கணிப்பொறியும்,இணையமும் சார்ந்த உலகத்தை வடிவமைத்துள்ளார்கள் என்பது நிரூபிக்கப்படாத சூட்சும நிஜம்!!!

30.11.2011 அன்றுவரையிலும் முடிவடைந்த இரண்டரைஆண்டு  வரையிலும்  கன்னிராசியில் இருந்த சனிபகவான்,30.11.2011 முதல் துலாம் ராசிக்குள் நுழைகிறார்.இது வானியல் எனப்படும் அஸ்ட்ரானமியில் சாதாரண விஷயம் ஆகும்.ஆனால்,இந்துதர்மப்படி,துலாம் ராசியில் சனிபகவான் பெயர்ச்சி ஆவதன் மூலமாக துலாம்ராசிக்கு ஏழரைச்சனியில் கடுமையான காலகட்டமான ஜன்மச்சனியும்,மீனராசிக்கு கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையை தணிக்கை செய்யும் அஷ்டமச்சனியும்,மேஷராசிக்கு கண்டகச்சனியும்,உலகத்தின் தலைவர்கள் பிறந்த கடகராசியில் பிறந்தவர்களுக்கு அர்த்தாஷ்டகச்சனியும் ஆரம்பமாகிறது.

துலாம் ராசியானது தர்மம் நீதி நியாயம் இந்த பூமியில் நிலைநிறுத்திடப்பிறந்த ராசியாக இருப்பதால்,துலாம் சனியானது இந்த உலகின் இந்துதர்மத்தை நிலைநிறுத்திடப்பெயர்ச்சி ஆகப்போகிறது. எனவே,இன்று முதலே மேற்கூறிய ராசிக்காரர்கள் தினமும்  சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வது நன்று.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டகச்சனி நடக்கும்போது  விநாயகரை வழிபடக்கூடாது என்பது அனுபவ நிஜம்.அப்படி வழிபட்டால்,நிம்மதி குறையும்.சனியின் குருவாகிய பைரவரை வழிபடுவதன் மூலமாக நிம்மதியும் பிரச்னையில்லாத வாழ்க்கையும் அமையும்.

30.11.2011 முதல் ரிஷபராசிக்காரர்கள் அபாரமான வளர்ச்சி அடைவார்கள்.மிதுனராசிக்காரர்கள் 2016 வரையிலும் சிக்கலில்லாத முன்னேற்றத்தை எட்டுவார்கள்.

கும்பம்,மகரம்,சிம்மம்,தனுசு ராசிக்காரர்கள் படிப்படியான தொழில் வளர்ச்சியை எட்டுவார்கள்.பிரிந்தவர்கள் சேருவார்கள்;
புதிய கோடீஸ்வரர்கள் தோன்றுவார்கள்.

கடகராசிக்காரர்களின் புத்திசாலித்தனம் செயலிழ்ந்துபோகுமளவுக்கு பல சிக்கல்கள் உருவாகும்.ஆனால்,அந்த சிக்கல்களின் விளைவுகள் பாதிப்பை உருவாக்காது.

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

பின்குறிப்பு:இவை பொதுப்பலன்களே! முழு மற்றும் துல்லிய விபரங்கள் வேண்டுவோர் மின் அஞ்சல் அனுப்பி விபரங்கேட்டுக்கொள்ளவும்.

கிரகங்கள் என்ன செய்யும் என்பதை ஆராய்வோமா? 
மிதுனம்,கன்னி,கும்பம் ராசியில் பிறந்தவர்களா நீங்கள்? உங்களுக்கு ஆன்மீகக்கடலின் ஒரு வேண்டுகோள்.இன்று 25.7.2011 திங்கள் முதல் 10.9.2011 சனிக்கிழமை வரையிலும் உங்களின் தினசரி வாழ்க்கையில் பிரச்னைகள் சராசரியை விட தலைதூக்கிட வாய்ப்புகள் அதிகம்.உலக அரசியலில் மிதுனராசிக்கும்,இங்கிலாந்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனவே,இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து தீவிரவாதத்தினாலோ,பூகம்பத்தினாலோ பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தனி மனித ரீதியாக,கன்னிராசிக்காரர்களும்,கும்பராசிக்காரர்களும் செய்யாத தப்புக்கு பலியாடாகப்போவது இந்த காலகட்டத்தில் தான்!ஏதாவது ஒரு காரணத்துக்காக காவல் நிலையம் செல்லும் சந்தர்ப்பமோ,விபத்தில் சிக்கும் வாய்ப்போ,நெருங்கிய ரத்த உறவுகளே இவர்களை அவமானப்படுத்தும் சூழ்நிலை உருவாகும்.மேற்கூறியதில் ஏதாவது ஒன்று மட்டுமே உருவாகும் சந்தர்ப்பம் இப்போது உருவாகியிருக்கிறது.

இருப்பினும்,இந்த ராசியைச் சேர்ந்தவர்களில் யார் தினமும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் செல்கிறார்களோ,,யார் தினமும் காலபைரவர் சன்னதியின் முன்பாக நின்று கொண்டு ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஜபித்தவாறு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு இராது.

எனவே,கன்னி,கும்பம்,மிதுனம் ராசிக்காரர்களே,தினமும் கோவிலுக்குச் செல்வதை ஒரு பழக்கமாக்குங்கள்.தவிர,விருச்சிக ராசிக்காரர்கள் எதிலும் நிதானத்தைப் பின்பற்றவும்.உங்களுக்கு உங்கள் வாயே எதிரி என்பதை இப்போது உணருவீர்கள்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

இப்போதாவது இந்தியா விழித்துக்கொள்ளுமா?
உலகின் ஒரே வல்லரசாக வேண்டுமென்ற பேராசையில் துடித்துக்கொண்டிருக்கும் சீனா,அதற்கான ஆரம்பக்கட்டப்பணிகளை 1940 களிலேயே ஆரம்பித்துவிட்டது.தற்போது அது இறுதிக்கட்டத்தினை எட்டி இருக்கிறது.சுதந்திரமான பேச்சுரிமை,எழுத்துரிமை,ஜனநாயக சுதந்திரம் சீனர்களுக்கு சீன அரசு தராவிட்டாலும்,சீன மக்களுக்குத் தேவையான பல அடிப்படைக் கட்டமைப்புகளை செய்துகொண்டே இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு,சீன ராணுவம் தேசிய கணினி பாதுகாப்புக்கல்லூரி என்ற பெயரில் சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு கணினி,இணையம்,இணைய வலைப்பின்னல்களை ஊடுருவுவது பற்றியும்,சைபர் க்ரைம்களை செய்வது பற்றியும் பயிற்சியளித்தது.சுமார் 3 ஆண்டுகளுக்கு இப்படி ஒரு லட்சம் சீனர்கள் பயிற்சி பெற்றனர்.அமெரிக்காவின் கடுமையான நெருக்கடிக்குப்பின்னர்,அந்த கணினி பாதுகாப்புக்கல்லூரி மூடப்பட்டது.

இந்த கல்லூரி ஆரம்பித்ததும்,இந்தியாவின் பாதுகாப்புக்குச் சோதனைதான்! எப்போதுமே கண்கெட்டப்பின்னரே சூரிய நமஸ்காரம் என்பது போல,சீனாவின் தகவல்தொழில்நுட்ப ராணுவப்பிரிவு இந்தியாவின் ராணுவ ரகசியங்களை திருடியப்பின்னர்தான், நமக்கும் அதேபோல் ராணுவ கணினி பாதுகாப்புக்கல்லூரி துவங்கும் அவசியம் புலப்பட்டது;அதுவும்,நாம் ஒரு கனடா கணினி முகமையை அணுகி,சீனா எந்தெந்த இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடியிருக்கிறது? என்பதினைக் கண்டறியும் படி (பணம் கொடுத்துதான்) வேண்டியபின்னரே,இந்த பிற்காப்பு(தற்காப்பு=முன்கூட்டியே செய்வது;பிற்காப்பு=அசிங்கப்பட்டப்பின்னர் செய்வது) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல,இணையம் வழியே திருடியது சீனாவுக்கு,சீனாவின் வெளியுறவுக்கொள்கைகளை எதிர்கால நோக்கில் வடிவமைப்பதற்குப் போதுமானதாக இல்லை;எனவே,சீனா அடுத்த திட்டத்தில் இறங்கியிருக்கிறது.அதுதான்,நேரடியாக சீன உளவாளிகளை,ஒற்றர்களை அனுப்புவது.இதற்காக சீனா எட்டு கல்லூரிகளை திறக்கப்போகிறது.ஆமாம்,நேஷனல் இன் டலிஜன்ஸ் காலேஜ் என்ற பெயரில் சீனா முழுக்கவும் திறக்க இருக்கிறது.அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் சி.ஐ.ஏ.வுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் இந்தச் செயலால்,இந்தியாவில் படிக்கவரும் சீன மாணவ மாணவிகளையும் இனி நாம் கண்காணிக்க வேண்டியிருக்கும்.

இந்தியாதான் அடுத்த உலக வல்லரசு என்பதை நார்ஸ்டர்டாமஸ் எப்போதோ தனது நூற்றாண்டுகள் என்ற புத்தகத்தில் தீர்க்க தரிசனமாக சொல்லிவிட்டார்.இருப்பினும்,அரசியல்,அரசு ரீதியாக நாம் என்ன செய்யப்போகிறோம்?

இந்த விஷயத்திலாவது இந்தியா விழித்துக்கொள்ளுமா? எனது முன்னோர்களாகிய சித்தர்களே! இந்தியாவின் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

நடிகர் ராஜேஷின் ஜோதிட அனுபவம்


click on this image to enlarge & again click once for good reading

ஆடி அமாவாசை(30.7.11)யைப் பயன்படுத்துவோம்;இந்த கர வருடத்தில் ஆடி அமாவாசை சனிக்கிழமையன்று வருகிறது.சனி என்றாலே கர்மத்தின் அடையாளமே! பொதுவாக மகர,கும்ப லக்னம் அல்லது ராசியில் பிறந்தாலே முன்னோர்களின் கர்மாக்கள் குறிப்பிட்ட அளவைத் தாண்டிவிட்டன என்றே அர்த்தம்.

இந்த ஆடி அமாவாசையானது கர்மத்தை அழிக்கும் விதமாக சனிக்கிழமையன்று வருகிறது;சனிக்கிழமையன்று 30.7.11 காலை 7.14 முதல் சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரமும் உதயமாகி மறு நாள் காலை வரையிலும் நிற்கிறது.இது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!!!

ஆமாம்! ராமேஸ்வரம்,திருச்செந்தூர்,கன்னியாகுமரி,விஜயாபதி,நாகப்பட்டிணம்,பாண்டிச்சேரி என கடலோரம் இருக்கும் கோவில்களுக்குச் சென்று கடலில் அன்று அதிகாலை 5.30 முதல் 6.00 மணி வரையிலும் மூன்று முறை மூழ்கி எழுந்து,ஏதாவது ஒரு காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்;அதன் பிறகு முடிந்தால்,அன்று பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல், சிவமந்திரம் ஜபிப்போம்;இந்த நாளில் காலை 9 மணிக்குள்ளும்,மதியம் 12 முதல் 2 மணிக்குள்ளும்,இரவு 7 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளும் அன்னதானம் செய்வோம்;

இதைச் செய்ய இயலாதவர்கள்,உங்கள் ஊரிலிருக்கும் ஏதாவது ஒரு சிவாலயம் சென்று மாலை 4.30 முதல் 6.00 மணி வரையில் மஞ்சள் விரிப்பு விரித்து,இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சம் வைத்து சிவமந்திரம் ஜபிக்கலாம்;

இதுவும் செய்ய இயலாதவர்கள்,அண்ணாமலைக்கு வருகை தந்து,காலை 4.30 முதல் 6.00 மணிவரையிலும் கோவிலுக்குள்ளும்,மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் கோவில் வளாகத்தினுள்ளும் ஓம்அருணாச்சலாயநமஹ ஜபித்துவிட்டு,இரவு ஏழு மணியளவில் கிரிவலம் செல்லலாம்.அப்படிச் செல்லும்போது ஓம்அருணாச்சலாய நமஹ ஜபித்துச் செல்லலாம்.

இந்த ஆடி அமாவாசைக்கு கிரிவலப்பாதையில் மஞ்சள் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்த ஒரு குழு கிரிவலம் செல்ல இருக்கிறது.அது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் வாசகர்கள் குழு!!! அனைவரும் வருக!!!

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

தேப்பெருமாநல்லூர்

மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர் (திருநாகேஸ்வரம்-கும்பகோணம் அருகில்) . புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.
மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.""யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர் கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்று சொல்கிறார் ஆலய குருக்கள் சதீஷ் சிவாச்சாரியார். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வை யால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், ""நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள்.எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,""என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள். சனி பகவான், ""நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்'' என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, ""ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.இதனைக் கண்ட நாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!'' என்று போற்றிப் புகழ்ந்தார்.""பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ""பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, ""மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.சாந்தமடைந்த அகத்தியர், ""மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள்.இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணி களைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர் சிவகுமார் என்பவர்.மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்எபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதி யர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத் திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர்.இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.பூஜைக்குரிய பொருட்களை நாம் வாங்கிச் செல்வது நல்லது. குருக்களின் வீடு அருகிலேயே இருப்பதால் நாம் செல்லும் நேரத்தில் தரிசனம் காணலாம். விரைவில் கும்பாபிஷேகம் காணவிருக்கும் இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.சிறப்புச் செய்திதினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.