RightClick

சொர்ண ஆகர்ஷணபைரவர் படமும் வழிபாட்டுமுறையும்
சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும்;மகாலட்சுமி அல்லது குபேரன் அல்லது பெருமாளை வழிபட்டால் செல்வம் பெருகும்.ஆனால்,இந்த இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெற வேண்டுமெனில்,நாம் பைரவர்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வேண்டும்.ஒரே நேரத்தில் நமது பாவங்கள் எனப்படும் கர்மங்கள் நீங்கும்;அதே சமயம் நமது வேலை அல்லது தொழில் மூலமாக வருமானம் பெருகிக் கொண்டே செல்லும்.நேற்று தேய்பிறை அஷ்டமிநாள்.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் எட்டாவது கிலோ மீட்டர் தூரத்தில் தாடிக்கொம்புகிராமம் அமைந்திருக்கிறது.இங்கே அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவில் இருக்கிறது.இந்த கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.காலை 9.30,11.30 மாலை 3.30,5.30 மற்றும் இரவு 7.30க்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம் சொர்ண ஆகர்ஷணபைரவருக்கு நடைபெறுகிறது.இதில் கலந்து கொண்டாலே நமது வருமானம் பெருகும்;பாவங்கள் குறைந்து கொண்டே வரும்.கொடுத்த கடன் திரும்பிவராமல் தவிப்போர்கள்,தொழிலில் கொடிகட்டிப் பறந்துதிடீரென வீழ்ச்சியை நோக்கிப் பயணிப்போர்கள்,வாங்கிய கடனை திருப்பித் தரமுடியாமல் தவிப்பவர்கள்,அரசியலில் மாபெரும் சாதனை செய்ய விரும்புவோர்,முன் ஜன்ம வினைகளால் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டவர்கள் சொர்ண ஆகர்ஷணபைரவரை தொடர்ந்து எட்டுதேய்பிறை அஷ்டமிகளுக்கு இங்கு வந்து வழிபட வேண்டும்.ஒருமுறை வந்ததுமே மாபெரும் முன்னேற்றம் அடைவதை உணரலாம்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹஒரு மதமாற்ற வழக்கு:போலந்து நாட்டில் !
போலந்து நாட்டின் தலைநகரம் வார்சாவில் கன்னியாஸ்திரி ஒருவர் அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கமாகிய இஸ்கானுக்கு எதிராக ஒரு வழக்கினைத் தொடர்ந்தார்.வழக்கும் விசாரணைக்காக வழக்காடும் மன்றத்தில் வந்தது.“இஸ்கான் அமைப்பு தன் நடவடிக்கைகள் மூலம் இந்து மதத்தையும் கடவுள் கிருஷ்ணனையும் பற்றி விளக்கம் தந்து போலந்து மக்களைக் கவர வேலை செய்து வருகிறது.அது என்போன்ற கன்னியாஸ்திரிகளை மிகவும் புண்படுத்துகிறது.ஏனென்றால்,16,000 கோபிஸ்திரீகளை மணந்த கிருஷ்ணன் நன்னடத்தை இல்லாதவர்.அவரைப் பற்றி ஆகா,ஓஹோ என்று புகழ்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, ‘இஸ்கான்’ அமைப்பிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதாடினார் வழக்கு தொடர்ந்த கன்னியாஸ்திரி.‘இஸ்கான்’ அமைப்பின் சார்பாக வாதாடியவர் நீதியரசரிடம் சொன்னார்:

“மேன்மை தாங்கிய நீதிபதி அவர்களே,அந்த கன்னியாஸ்திரி,தான் கன்னியாஸ்திரியாக பதவிப் பிரமாணம் எடுத்த வரிகளை தயவு செய்து அவர் வாயாலேயே திருப்பிச் சொல்லச் சொல்லுங்கள்”நீதியரசரும் அவ்வாறே கூறுமாறு,கன்னியாஸ்திரியிடம் கேட்டுக் கொண்டார்.ஆனால்,கன்னியாஸ்திரியோ மவுனம் காத்தார்.

இஸ்கானுக்காக வாதாடியவர், “நான் அதைப் படிக்கலாமா? நீதிபதி அவர்களே” என்று கேட்டார்.நீதிபதியும் அந்த பதவிப் பிரமாண வாசகங்களைப் படிக்க அனுமதி அளித்தார்.அந்த பதவிப்பிரமாணத்தின் போது கன்னியாஸ்திரிகள் ஏசுபிரானை தாங்கள் மணந்து கொள்வதாகக்கூறியுள்ள வாசகங்களைப் படித்துக் காட்டிவிட்டு,பின்னர் நீதிபதியிடம் வினவினார்.

“ஐயா நீதிபதி அவர்களே! லட்சோப லட்ச கன்னியாஸ்திரிகள் தாங்கள் ஏசுவை மணந்துகொள்வதாக உறுதி பூண்டுள்ளனர்.அப்படியானால்? இதில் ஒழுக்கத் தளர்வு எவருக்கு? கண்ணனுக்கா? கன்யாஸ்த்ரீகளுக்கா?”அதன் பின்னர் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.நன்றி: இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு,ஜனவரி 1,2011.

இதோ ஒரு சமுதாய மாற்றம்;நமது தமிழ்நாட்டில்!!!
இரண்டே இரண்டு மனிதர்கள்! திரு.உமாபதி,திரு.தங்கராஜ்

வடசென்னை வியாசர்பாடி குடிசைப்பகுதி சிறுவர்கள் 6000 பேர்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக கால்பந்தாட்டப் பயிற்சியளித்துள்ளனர்.இவரிடம் கால்பந்தாட்டப்பயிற்சி பெற்றவர்களில் பலர் இன்று சர்வதேசப் போட்டிகளுக்குத் தேர்வாகியிருக்கின்றனர்.குறித்த நேரத்துக்கு கால்பந்தாட்டப்பயிற்சிக்கு சிறுவர்களை வரச் செய்ததன் மூலமாக அவர்களின் கெட்டப் பழக்கங்களிலிருந்தும் மீட்க முடிந்தது என இந்த இரண்டு மா மனிதர்கள் கூறியுள்ளனர்.இதன் மூலமாக இப்பகுதிச்சிறுவர்கள் தினசரி பள்ளிக்கும் ஒழுங்காகச் செல்லத் துவங்கியிருக்கிறார்கள்.பிரிட்ஜ்,வாட்டர் கூலர் இந்தியத் தயாரிப்பு

பத்தாம் வகுப்பு கூட தேறாத திரு.மன்சுக் பாயி பிரஜாபதி மண்ணால் ஆன குளிர்சாதனப்பெட்டியை உருவாக்கியிருக்கிறார்.பிழைப்புக்காக இயந்திர செங்கல் சூளை தொழிலகத்தில் வெலைபார்த்த அனுபவம் இந்த மாதிரியான சுதேசிப் பொருளைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்திருக்கிறது.18 வயதில் ரூ.30,000 வங்கிக்கடன் பெற்று சொந்தமாகத் தொழில் தொடங்கினார்.மண்ணாலான வாட்டர் பில்டரை செய்து 1995 இல் சந்தைப்படுத்தினார்.விலை ரூ.350 முதல் 400க்குள் என்பதால் அமோக வரவேற்பு பெற்றது.2005 இல் நான்ஸ்டிக் கடாய்(வாணலி)யை மண்ணால் செய்தார்.இதை டாடா கெமிக்கல்ஸ் ஆய்வு செய்து அதன் தரத்திற்கு சான்றிதழ் வழங்கியது.இதையடுத்து இவர் உருவாக்கிய மண்ணாலான,ஓசை எழுப்புகிற ‘பிரஷர் குக்கர்’ மத்திய,மாநில ஊரக வளர்ச்சித் துறைகளின் சான்றிதழ் பெற்றது.கடைசியில் மிட்டி கூல் என்ர பெயரில் இவர் உருவாக்கிய மின்சாரமே இல்லாமல் இயங்கும் ஃபிரிஜ் அமோக வரவேற்பு பெற்றது.எனவே,மன்சுக் ரூ.10,00,000/-கடன் பெற்று உற்பத்தியைத் தொடர்ந்தார்.வங்கிக் கடன் தவணைகளை தவறாமல் செலுத்தி வருகிறார்.மிட்டி கூலில் பால் ஒரு நாள் முழுவதும் கெடாமல் இருக்கிறது.காய்கறிகள் ஒருவாரம் வரை பசுமை கெடாமல் இருக்கிறது.டிஸ்கவரி டிவி சேனல் இவரது சாதனைகளை உலகறியச் செய்தது.இது போன்ற சுதேசி தயாரிப்புக்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போம்.ஆம்! இதுபோன்ற சுதேசித் தயாரிப்புப் பொருட்கள் மனித நலத்தை மேம்படுத்துபவை ஆகும்.

(ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடப்படும் தண்ணீர்,உணவு போன்றவை நமது உடல் நலத்தைக் கெடுக்கின்றன.இது பற்றி யாரும் ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள்.ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டால்,அவற்றின் விற்பனை படுத்துவிடும் இல்லையா?)

மன்சுக்கின் தொலைபேசி:02852-221156.அலைபேசி:098251-77249.மின் அஞ்சல் முகவரி:

info@mitticool.in, இணையதளம்:http://www.mitticool.in/

கங்கையைக் காக்கப் போராடியவர் சிவனடி சேர்ந்தார்டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்தவர் சுவாமி நிகாமனானந்த். இவர் கங்கை நதி மாசுபடுவதை தடுத்து கங்கை நதியை காக்க வேண்டும் எனவும், ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறும் பகுதிகளை சுற்றிலும் அமைந்துள்ள கல் குவாரிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் நான்கு மாதங்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து டேராடூனில் உள்ள இமாலயன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் கடந்த மே மாதம் 2-ம் தேதிஅவர் கோமாநிலைக்கு சென்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார்.


thanks;www.dinamalar.com 14.6.11
நாளை 15.6.2011 புதன்கிழமை இரவு 11.45 மணி முதல் நள்ளிரவு 1.40 வரையிலும் சந்திரகிரகணம் இருக்கிறது.இது ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ மந்திரஜபம் செய்யும் நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் ஒரு மாபெரும் வரப்பிரசாதம் ஆகும்.

பொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்கும் குடும்பத்தலைவி
குடும்பத் தலைவி என்ற இடம் சமுதாயத்தில் மிக உயர்ந்த பொறுப்புடையது.குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே மனப்பாங்கு உடையவர்களாக இருப்பதில்லை; இவர்கள் பலவிதமான பண்புகள்,வித்தியாசமான மனம்,குணம் படைத்தவர்களாக இருக்கின்றனர்.இவர்கள் அனைவரையும் அனுசரித்து,சமாளித்துத் திருப்திப்படுத்தி,எல்லோரிடமும் நன்மதிப்பைப் பெற வேண்டிய பெரிய பொறுப்பு இவர்களுக்கு உண்டு.இது தவிர, பலவித குணாதிசயங்களைக் கொண்ட உறவினர்களையும் அனுசரித்து மனம் கோணாமல் நடந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் பொறுப்பு கடினமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.பெண்கள் மின்காந்தம் போன்று நடுநிலையில் இருந்து அனைவரையும் கவர்ந்து நற்பெயர் பெறுவது எவ்வளவு கடினமானது?கணவன் ஒரு வகை,மகன் ஒரு வகை,மகள் ஒரு வகை என மாறுபட்ட குணங்கள் உடையவர்களிடம் பண்பு,பாசம்,நேசம்,அன்பு என்ற அனைத்தையும் தந்து அவரவர்களின் தேவைகளையும் உணர்வுகளையும் உணர்ந்து அதற்கேற்ப நடப்பது என்பது சாதாரண காரியமா? தன் அறிவுக்கூர்மையாலும் தனி ஒரு பெண் சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியமன்று.இதற்கு மிகச்சிறந்த குணமும்,மனமும்,பொறுமையும்,அறிவும்,ஆற்றலும்,அடக்கமும்,பண்பும்,தெளிவான சித்தமும் எதையும் தன்னில் ஏற்றுக்கொண்டு தாங்கும் மனப்பக்குவமும் உடையவளாகப் பெண் இருக்க வேண்டும்.இப்படி இல்லாவிட்டால்,அந்தக் குடும்பமே குழப்பத்தில் வீழ்ந்து சீரழிந்து தெருவுக்கு வந்துவிடும்.அதனால்,இப்படி ஓர் உயர்ந்த,சிறந்த,கடினமான,பொறுப்பான பதவியை வகிக்கும் பெண்களுக்குத் தியானம் அவசியம் தேவை என மகரிஷி மகேஷ்யோகி வலியுறுத்துகிறார்.தமிழ்நாட்டில் தற்போது இரண்டே இரண்டு இடங்களில் ஆழ்நிலை தியானம் சொல்லித் தருகின்றனர்.

1.மகரிஷி தோட்டம்,மகரிஷி வித்யா மந்திர்,டாக்டர் குருசாமி சாலை,சேத்துப்பட்டு,சென்னை2.காந்தி மியூசியம்,மதுரைஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இங்கு அறிமுக வகுப்புகள் மாலை 5 மணிக்குத் துவங்கும்.மறுநாள் ஞாயிறு துவங்கி ஐந்து நாட்களுக்கு தினமும் 90 நிமிடங்களுக்கு ஆழ்நிலை தியானம் ரூ.700/- குருதட்சிணையுடன் பயிற்றுவிக்கப்படுகிறது.உலகிலேயே மிக எளிதான,சுலபமான ஆனால் சக்தி நிறைந்த தியானம் ஆழ்நிலைதியானமே!நாமும் ஆழ்நிலை தியானம் செய்வோம்;சக்தி வாய்ந்த மனிதராவோம்.

தியானம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்பெண்கள் நமதுநாட்டின் கண்கள் என்று பல கவிஞர்கள் பாடியுள்ளனர்.ஆனால்,மகரிஷியோ பல படிகள் மேலே சென்றுள்ளார் என்பதற்கு அவர் 1975 இல் மேல்நாட்டில் பேசியதை இங்கே சுருக்கித் தந்துள்ளோம்.கடவுளின் படைப்பில் மிக உயர்ந்த படைப்பு பெண்கள்.இவர்கள் சக்தியின் சொரூபங்கள்(Mother Divines)பெண்கள் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டும்.இந்த நிலையைப் பெண்கள் இழந்துவிட்டால் நாட்டில் சண்டை சச்சரவு ஏற்படும்.மக்கள் துன்பங்களையும்,கொடூரங்களையும்,குழப்பங்களையும் சந்திக்க நேரிடும்.ஏனெனில் இவை அனைத்திற்கும் நேர்மாறான போக்குடையவர்கள்.அத்துடன் பெண்களின் உடலமைப்பு ஆண்களைவிட மென்மையானது.அவர்கள் உயர்ந்த குண அமைப்பும் உடையவர்கள்.நல்லது,அழகு,இறைத்தன்மை,உயர்ந்தது ஆகியவற்றை முதலில் உணர்பவர்கள் பெண்களே!சொன்னவர்:மகரிஷி மகேஷ் யோகி


இந்திய சீனப்போரை நிறுத்திய மகரிஷி மகேஷ்யோகி

1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது.சீனப்படையினர் இந்திய வீரர்களையும்,ஆயுதங்களையும் கைப்பற்றி முன்னேறிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் இங்கிலாந்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.அங்குள்ள மக்களிடம்,

“போரின் காரணமாக என் நாடு சண்டையில் ஈடுபட்டுள்ளது.உடனடியாக நான் இந்தியா போக வேண்டும்” என்று சொல்ல,அங்குள்ள மக்கள் மகரிஷியிடம்,

“உங்கள் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும்” என்று கேட்டனர்.உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டேப் ரெக்கார்டரை எடுத்து வருமாறு பணித்தார்.

Science of being and art of Living என்ற தலைப்பின் கீழ் ஆன்மீக சொற்பொழிவாற்றி அவர்களுக்கு அளித்தார்.பின்னர் அச்சொற்பொழிவைப் புத்தக வடிவில் Penguin என்ற நிறுவனத்தினர் வெளியிட்டனர்.அது அவர்களுக்குக் கோடிக்கணக்கில் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது.இந்தியா வந்த மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,இந்திய ஜனாதிபதியைச் சந்தித்து,

“இப்போரை என்னால் தடுத்து நிறுத்த முடியும்.ஆனால்,நான் சொல்கிறபடி சில செயல்களை போர் நடக்கும் இடத்தில் செய்ய உங்களால் முடியுமா?” எனக் கேட்டார்.

அதற்கு இந்திய ஜனாதிபதி, “முடியாது.எங்கள் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு கூறுவார்கள்.ஆகவே,அரசு சம்பந்தப்படாமல் தாங்களே தனியாக எதுவும் செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என தனது இயலாமையை வெளியிட்டார்.உடனே,மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,தனது செயலாளர் தேவேந்திராவுடன் போர் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்றார்.சென்று,

“இந்தப் போர் நடப்பதற்கு சீனாவில் உள்ள ஒரு மனித மூளையே காரணம்.அவர் மனதை மாற்றிவிட்டால் போதும். அதை தியானம் செய்து மாற்றப் போகிறேன்.நான் வெளியில் வரும்வரை காவலாக இரு.யாரையும் உள்ளே விடாதே” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்.பின்,24 மணி நேரம் கழித்து வெளியே வந்த மகரிஷி மகேஷ்யோகி பக்கத்திருந்த ஊருக்குச் சென்று தினசரிப் பத்திரிகை வாங்கி வா என்று அனுப்பி வைத்தார்.பத்திரிகை வங்கிப்படித்த மகரிஷியின் செயலாளருக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆம்,சீனா சண்டையை நிறுத்தி விட்டது.தன் படைகளை இந்தியாவின் எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டது.இதைப் படித்ததும் அவரால் நம்ப முடியவில்லை; ‘இப்படியும் நடக்குமா?’ என்று ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார்.

நன்றி:மகரிஷியின் ஆழ்நிலை தியானம்,பக்கம்71,72.வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,சென்னை 4.விலை:ரூ.80/-

செவ்வாய் கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தாலா ? பிரமிப்பூட்டும் தகவல்கள் !!
Jun 6, 2011

நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கும். ஆனால், உண்மையிலேயே வியக்க வைக்கும் தகவல்கள் கொண்டது இந்த கட்டுரை.

இதிலே கூறப்பட்டு இருக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வெகு வேகமாக நமது பூமியும், செவ்வாய்க் கிரகம் போலே ஆகிவிடும் போல் தெரிகிறது. படித்துப் பாருங்கள். ஒரு இரண்டு வருடம் முன்பே , இணையத்தில் வெளியாகி உள்ள கட்டுரை இது. சமீபத்தில் பார்க்க நேர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை ‘அம்மா’ என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?வழக்கமாக நம் மூளையில் பதியப்பட்ட தகவல்களின்படி, ‘இல்லை’ என்பதே நம் பதிலாக இருக்கும்.ஆனால் இதெல்லாம் நடந்தது .... என்று சொல்கிறார்கள் போரிஸ்காவின் பெற்றோர்.சிலருக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வரும். அந்த மாதிரி , இந்த பையனுக்கு பூர்வ ஜென்ம வாசனை வந்து, நான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த பையன் என்று கூறி, அதன் பிறகு விஞ்ஞான உலகையே அவனது தகவல்களால் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறான்.யார் இந்த போரிஸ்கா?ரஷ்யாவில், சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியானோவிச், சுருக்கமாக போரிஸ்கா. மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளாக மாற்றியவன். தற்போது 12 வயதாகிறது இந்தச் சிறுவனுக்கு.இவனது அசாத்தியமான ஆற்றல்களைக் கண்டு கவலைப்படுகின்றனர் பெற்றோர். புதிரான சில வழிகளின் மூலம் அவனுக்குள் தகவல்கள் ஊட்டப்படுவதாக எண்ணுகின்றனர்.இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே ‘தானாக’ பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறுகின்றனர்.சில நேரங்களில், சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம், அங்கு நிலவிய வாழ்க்கை முறை, இதர கிரக அமைப்புகள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறானாம் போரிஸ்.தான் செவ்வாய் கிரகத்திலிருந்து பிறப்பெடுத்து இங்கு வந்ததாகவும், இன்றும் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிப்பதாகவும், ஆனால் பயங்கரமான பேரழிவினால் தற்போது நிலத்தின் அடிப்பரப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறான். மேலும், செவ்வாய் கிரக வாசியாக இருந்தபோது, பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாகவும் கூறுகிறான்.லெமூரியக் கண்டத்தின் ஆய்வுப் புத்தகம் ஒன்றை அவனது தாய் அவனுக்குக் கொடுத்தபோது, ஆச்சரியத்துடன் பார்த்த போரிஸ், லெமூரியா கண்டத்தின் அழிவு பற்றி பரபரப்பாக விவரிக்க ஆரம்பித்தான். இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டால், எல்லாம் நினைவில் இருக்கிறது என்று பதிலளிக்கிறான்.பெரிய பிரமிடுகளைப் பற்றிப் பேசும் போரிஸ், மனிதத் தலை, சிங்க உடம்பாக காட்சியளிக்கும் Sphinx பிரமிடுக்குள் மனித வாழ்க்கையின் ரகசியங்கள் இருக்கின்றன என்றும், அதைத் திறப்பதற்கான வழி அதன் காதுப் பகுதியில் உள்ளதுபோலத் தெரிவதாகவும் விவரிக்கிறான்.போரிஸ்காவைப் போன்ற குழந்தைகள் பிறப்பது சமீப காலத்தில் சாத்தியமாகியுள்ளது என்றும் பொதுவாக 1980க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற இயற்கையின் கொடை கிடைத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இத்தகைய தன்மையுடையோரை ‘இண்டிகா குழந்தைகள்’ என்றும் அழைக்கின்றனர்.மாறிவரும் பூமியின் காந்தப் புலனானது 2009 மற்றும் 2012 காலகட்டங்களில் மிகப் பெரும் இரண்டு அழிவுகளை ஏற்படுத்தும் என்று போரிஸ் கூறுகிறான்.செவ்வாயில் ஏற்பட்ட பேரழிவிற்கு அணு ஆயுதப் போரே காரணமென்றும், கதிரியக்கங்களின் வீரியம் காரணமாக, தப்பிப் பிழைத்தவர்கள் வெளியே வரமுடியவில்லை என்றும் பாதுகாப்பான கவச அறைகளில் அவர்கள் பாதாளத்தில் வாழ்வதாகவும் கூறும் போரிஸ், அவர்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து வாழ்பவர்கள் என்றும் கூறுகிறான்.பூமியைப் பொறுத்த வரை ஆக்ஸிஜனை மட்டுமே சுவாசிக்க முடியும் என்றும், ஆனால் இந்த பிராணவாயு மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதாகவும் சொல்கிறான்.விண்வெளியைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருக்கும் போரிஸ் UFOக்களைப் பற்றியும் நிறைய பேசுகிறான். செவ்வாயில் இருக்கும்போது ஸ்பேஸ்கிராஃப்டை இயக்கும் பயிற்சி பெற்றிருந்ததாகவும் கூறுகிறான்.இவனை வியப்புடன் நோக்கும் விஞ்ஞான உலகம், விஞ்ஞான பேராசிரியர்களே சரளமாக உரையாடுவதில் உள்ள சிக்கல்கள் இவனுக்கு இல்லை எனத் தெரிவிக்கிறது.போரிஸ்காவைப் பொறுத்தவரை “கள்ளங்கபடமில்லாத அன்பும், எதையும் மன்னிக்கும் தயாள குணமுமே மக்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி என்றும், இதைத் தாண்டிய எந்தவொரு விஷயமும் மனித குல அழிவிற்கு வழிவகுக்கும்” என்கிறான்.போரிஸ்காவின் கூற்றுகளின் படி, நாம் வாழும் இப்பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஆயத்தமாகி வருவது போலத் தெரிகிறது.இன்னும் விரிவான தகவல்கள் அடங்கிய ஆங்கில கட்டுரை வாசிக்க இங்கே அழுத்தவும்...

thanks:www.livingextra.com

DRDO Chief சிவதாணுப்பிள்ளையின் பேட்டிDRDO Chief சிவதாணுப்பிள்ளையின் பேட்டிகேள்வி:இந்தியாவுக்காக நிறைய ஏவுகணைகள் உருவாக்கியிருக்கீங்க.உங்களுக்குப் பிடிச்ச ஏவுகணை எது?


இந்திய ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரமோஸ்.இது ஒலியைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பாயும்.அதை ஏழு மடங்கு அதிக வேகத்தில் பாயச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கோம்.


இப்போதைய பிரமோஸ் ஏவுகணையை எதிர்க்கும் ஏவுகணையை எந்த நாடும் இதுவரை கண்டுபிடிக்கலை;ஏழு மடங்கு வேகத்தில் பாயும் பிரமோஸை உருவாக்கிட்டா, அதைத் தடுத்து நிறுத்த அவங்களுக்கு இன்னும் 30 வருஷங்கள் தேவைப்படும்!


கேள்வி:சீனாவோடு ஒப்பிடும்போது இந்தியாவின் ராணுவபலம் வலுவாக இருக்கிறதா?


தரைப்படையில் நம்மைவிட சீனர்கள் கூடுதல் சோல்ஜர்களை வைத்திருக்கிறார்கள்.ஆனால்,அந்த இடைவெளியை நாங்கள் உருவாக்கிய ப்ருத்வி ஏவுகணை மூலம் நிரப்பலாம்.பொதுவாக,ஏவுகணைகள் ஒரே பாதையில் பயணம் செய்து தாக்கும்.எங்கே இருந்து வருகிறது? எதைத் தாக்கவிருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.ஆனால்,ப்ரித்வி பாம்பைப் போல வளைந்து,நெளிந்து பாதையை மாற்றிக் கொண்டே பாயும்.இது செல்லும் திசையை யாராலும் கணிக்க முடியாது.இந்திய ராணுவத்தின் பலமே இதுபோன்ற உயர் தொழில்நுட்பம்தான்!


நன்றி:ஆனந்த விகடன்,20,21;1.6.11

1947 முதல் வழக்கே இல்லாத இந்திய கிராமம்

உத்திரப்பிரதேசமாநிலம்,பிஜனூர் மாவட்டம்,தர்மபூரை அடுத்த லட்டாவாலா,மக்கள் தொகை 200 மட்டுமே!!! மூதாட்டிகள் மூவரைத் தவிர மற்ற எல்லோருமே படித்தவர்கள்.இந்தியா சுதந்திரமடைந்த 1947 முதல் இன்று வரையிலும் இந்த ஊரிலிருந்து காவல் நிலையத்தில் ஒரு வழக்கு கூட பதிவாக வில்லை;

இத்தனை ஆண்டுகளாக எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும்,எல்லோரும் கூடிப்பேசி,அவ்வூர்ப் பெரியவர்கள் சொல்லும் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள்.எந்தத் தேர்தல் வந்தாலும்,எந்த அரசியல்கட்சியும் இந்த ஊர்மக்களின் ஓட்டுக்களைப் பிரிக்க முடியாது.கட்சிகளின் பிரமுகர்கள் வந்து தலைகீழாக நின்று அரசியல் செய்தாலும் பலிக்காது.காவல் துறை ஆய்வாளர் சுரேந்திரசிங்க்,தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட 109 ஊர்களில் லட்டாவாலா அமைதியானது என்கிறார்.

நன்ரி:திரிகுடா சங்கல்ப ஜம்மு ஹிந்தி மாத இதழ் பிப்ரவரி 2007இதழியல் என்பது மேல்நாடுகளில் உண்டானது.குற்றங்களையும்,தவறுகளையும் விலாவாரியாக எழுதுவதே மேல்நாட்டு இதழியல் முறை;

நல்ல செய்திகளையும் சமூக நலத்தோடும் எழுதுவது இந்திய இதழியல் முறை;

மூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமுஸ் ( Part : 05 )குவைத் நாட்டின்மீது சதாம் ஹூஸைன் ஆக்கிரமிப்பு நடத்தியபோதும் சரி, சமீபத்தில் நியூயார்க் கட்டிடங்கள் மீது ஓஸாமா -பின்- லேடன் தாக்குதல் நடத்தியபோதும் சரி, உலகமக்கள் பரபரப்பாகப் பேசியது ஒருவரைப் பற்றித்தான்.அவர்தான் நாஸ்டர்டாமஸ்.

அவர் சொன்ன நிகழ்ச்சி நடந்தாகிவிட்டது.அவர் சொன்னபடியே மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் மூண்டுவிடுமா ?இதுதான் உலக மக்களின் திகிலுடன் கூடிய எதிர்பார்ப்பு. 400 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு துல்லியமாக்க் கணித்துள்ளார் அந்த மனிதர்.

நம்மூர் செய்தித்தாள்கள் நீல டர்பன் கட்டிய நபர் 'என்ற அடையாளத்துடன் நாஸ்டிரடாமஸ் சொன்ன பாடலை பிரசுரம் செய்தன. எங்கிருந்து வந்தது அவருக்கு இவ்வளவு ஆற்றல், என்னென்ன சொல்லியிருக்கிறார், அவர்,இனி எதிர்காலத்தில் என்னென்ன நிகழப்போகிறது

இந்தியா- பாக் இடையே போர் வருமா?ஒரு உலக மகாயுத்தத்தை இந்த 2 நாடுகளும் தான் ஆரம்பித்து வைக்க போகின்றன என்ற அதிர்ச்சி தகவல்களை அவர் எப்போதோ சொல்லி விட்டு போயிருக்கிறார்.2006ம் ஆண்டிலிருந்தே இந்தியா பல சோதனைகளை சந்திக்க தொடங்கும் பட்சத்தில் ஒரு உச்சகட்ட காட்சியாக 2011 அல்லது 2012ல் 3-வது உலக போர் ஏற்படும் என்கிறார்.இந்த போர் இடைப்பட்ட எந்த ஆண்டில் வேண்டுமானாலும் நிகழலாம்!. மக்களின் அப்போதைய இறை பக்தியை பொறுத்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.இந்தியா-பாகிஸ்தான் என எதிரும் புதிருமான இந்த போரில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சவூதி அரேபியா, சிரியா, இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், லெபனான், ஈரான், ஆஸ்திரேலியா என உலகின் 21 நாடுகள் முக்கிய களமிறங்கும் என்கிறார் அவர்.வானத்தில் சனி-ராகு கிரகங்களின் புதிய மாற்றத்தால் இந்தபோர் ஏற்படும். போர் சமயத்தில் அணு ஆயுத வீச்சுகளால் கடல் அலை 100 அடிக்கு எழுந்து ஓயும். சுமார் 100 கோடி பேர் மரணத்தை தழுவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் நாஸ்டர் டாமஸ்.இதன் பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார் நாஸ்டர் டாமஸ்.போரை பொறுத்த வரை இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் எல்லை பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார்.இந்தியர்கள் 2006க்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பல வகையான மாற்றங்களை காண்பார்கள்.மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி திணறுவார்கள். இறை பக்தி குறையும். அரசியலில் பற்பல மாற்றங்கள் நிகழும். உண்மை தோல்வியை தழுவும். பொய் வெற்றி பெறும். மக்கள் அலை பாய்ந்து திரிவார்கள்.இத்தகைய சுமார் 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இளைய தலைமுறை குழந்தைகளால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் வயதானவர்களால் அவர்கள் அறிவை புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.இந்தியா மிக நவீனமாகி விடும். பணம் கொழிக்கும். அனைவரது வாழ்க்கையும் மிக நவீன நாகரீகமடையும். மேலை நாடுகளை போன்ற வாழ்க்கை தரத்திற்கு மாறிவிடுவார்கள். உலக அரங்கில் இந்தியா தலை சிறந்து விளங்கும்.இப்படியெல்லாம் இந்தியா பற்றி ஜாதக பலனை சொல்லியிருக்கும் நாஸ்டர் டாமஸ் மேற்கண்ட 20 ஆண்டு கால போராட்டத்தை ஒவ்வொருவரும் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார்.ஒரு நாட்டில் பாவசெயல்கள் பெருகும் போது அந்த நாட்டின் அதற்குரிய சிக்கலையும், கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். எனவே, பாவசெயல் செய்யாது அன்புடன் இருங்கள். அவரவர் வீட்டில் தினமும் இறைவனை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள்.இத்தகைய பிரார்த்தனை செய்யும் போது மட்டும்தான் மனம் தெளிவடையும். நல்ல சிந்தனை பிறக்கும். நெஞ்சு தைரியம் உண்டாகும். நீங்கள் இதை செய்யாவிட்டாலும் இறை சக்தி மிகப்பெரியது. அது செய்ய வைக்கும் என்கிறார் அவர்.ஆழ்நிலைதியானம் கற்றுத்தரும் இடங்கள்

மகரிஷி வித்யா மந்திர்,டாக்டர் குருசாமி சாலை,சேத்துப்பட்டு,சென்னை 31.காந்தி மியூசியம்,மதுரை.

இறவாநிலையைத் தரும் துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம்நமது கர்மவினையைப் போக்கும் சக்தி அன்னதானத்திற்கு உண்டு.
அன்னதானத்தில் ஒரு போதும் அசைவம் படைக்கக் கூடாது.
நள்ளிரவில் அன்னதானம் செய்வதும் தவறு.அன்னதானம் செய்யும்
போது யாரையும் வற்புறுத்தி,சாப்பிடச் சொல்லக்கூடாது.அன்னதானம்
செய்யும் விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கவேண்டும்.இதனால்
மற்றவர்களின் பொறாமையிலிருந்து தப்பிக்கமுடியும்.தமிழ்நாட்டில்
மிகவும் சுலபமான தொழில் பொறாமைப்படுவதுதான்.

நமது சொந்த ஊரில் அல்லது வசிப்பிடத்தில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம்
பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம்
கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில்
ஒரே ஒருவருக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசியில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்வீதம் ஓராண்டுக்கு தினமும்
அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,
அவ்வளவு புண்ணியம் திருஅண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில்
ஒரே ஒரு வறியவருக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
துவாதசி திதி அன்று திருஅண்ணாமலையில் ஒருவருக்கு அன்னதானம்
செய்தால்,அன்னதானம் செய்தவர் தனது வாழ்நாள் முழுக்க அன்னதானம்
செய்த புண்ணியத்தைப் பெறுவதோடு,அவருக்கு மறுபிறவியில்லாத
முக்தி கிடைக்கும் என அருணாச்சலபுராணம் தெரிவிக்கிறது.

ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்களுக்கு துவாதசி திதி வருகிறது.இந்த
மாதம் 12.6.2011 ஞாயிற்றுக்கிழமையன்று துவாதசி திதி வருகிறது.
இந்த நாளில் நாம் அருணாச்சலம் எனப்படும் அண்ணாமலைக்குச் செல்லுவோம்.
காலை.மதியம்,இரவு என மூன்றுவேளைகளுக்கு தலா ஒருவருக்கு
அன்னதானம் செய்வோம்;நமது கர்ம வினைகளைப் போக்குவோம்.

இந்த நாளில் காலையில் எட்டு மணிக்குள் அண்ணாமலையாரின் கிழக்கு கோபுர
வாசலில் அன்னதானம் செய்வோம்;செய்துவிட்டு கிரிவலம் செல்லுவோம்;
மதியம் கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்வோம்;
மாலையில் கிரிவலம் முடித்தப்பின்னர் மாலை எட்டுமணிக்குள்
மீண்டும் ஒரு முறை அன்னதானம் செய்வோம்.
அண்ணாமலையாரின் அருளால் முக்தி பெறுவோம்.

ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு

ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு இரண்டாம் காண்டத்தில் 13வது பாடலாக மலர்கிறது:-
ஆன்மா இல்லாத உடல் இனியும் புனிதமாகக் கருதப்படமாட்டாது

இறந்த தினத்தன்று ஆன்மா அடுத்த பிறவியை நோக்கிப் பயணிக்கிறது

இறைவனின் நினைப்பு ஆத்மாவை சந்தோஷத்திற்குள்ளாக்கும்

என்றுமுள்ள அக்ஷரத்தைக் கண்டவுடன்.‘இதர மதங்கள் மறுபிறவியை ஏற்பதில்லை. ஹிந்து மதம் ஒன்றே உடல் ஆத்மாவிற்கு ஒரு சட்டை தான்; நலிந்து கிழிந்த சட்டையை உதறுவது போல ஆன்மா பழைய சரீரத்தை உதறி விட்டு அடுத்த சரீரத்தை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது. இறுதி வரியில் வரும் அக்ஷரம் ஓம் என்பதாகும். ஆக மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் ஹிந்து மதக் கொள்கை உலகில் ஓங்கி உயரும் என்பதை நாஸ்டர்டாமஸ் இந்தப் பாவில் தெளிவாக விளக்குகிறார்'.இப்படி ஒரு விளக்கத்தைத் தருபவர் பெங்களூரைச் சேர்ந்த திரு ஜி.எஸ்,ஹிரண்யப்பா. இவர் ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்டர்டாமஸ் என்ற நூலில் ஹிந்து மதம் பற்றி நாஸ்டர்டாமஸ் பல பாடல்களில் பூடகமாகக் கூறியுள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

நாஸ்டர்டாமஸின் பாடல்களை விளக்கி உலகின் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தியாகும்!

இந்தியா பற்றி நாஸ்டர்டாமஸ்
நாஸ்டர்டாமஸின் பாக்களுக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயன்றோர் ஏராளம்; இன்னும் முயன்று வருவோரும் ஏராளம். அவரது பாக்களுக்கு விளக்கம் கூறி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்து விட்டன. இந்த எல்லா நூல்களிலும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு கருத்து இந்தியா மிகப் பெரும் வல்லரசாகும் என்பதுதான்!கி.பி, 3797ம் ஆண்டு வருவதற்கு இன்னும் 1787 ஆண்டுகள் உள்ளன. அவர் இந்த ஆண்டுகளுக்காகக் கூறியுள்ள பலன்களோ ஆயிரக்கணக்கானவை. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:ஆறாம் காண்டம் பாடல் 8: இந்தியாவில் ஒரு பெரும் தலைவர் உருவாவார். அவரைக் கொல்லப் பெரும் சதி நடக்கும். அவரைக் காப்பாற்ற மருத்துவர்களால் முடியாமல் போகும். ஆனால் அதிர்ஷ்டத்தினால் அவர் பிழைப்பார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர் இந்தியத் தலைவர் என்று நாஸ்டர்டாமஸின் விளக்க நூல்கள் குறிப்பிடுகின்றன.

மங்கோலியர் ஆயுதங்களை உபயோகித்து சாவின் ரேகைகளைக் காண்பிக்கும் போது உலகப் போர் துவங்கும். இந்தப் போர் சக்தி மிகுந்த இரண்டு நாடுகளின் மீது கொண்டிருக்கும் நட்பால் இந்தியாவிற்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்!ஆறாம் காண்டம்; 27ம் பாடல் :-ஐந்து நதிகள் பாயும் இடத்தில் பயங்கரமான பறக்கும் ஆயுதத்தால் நாசம் ஏற்படும். ஆறு பேர் மட்டுமே தப்பிப்பர். (இது பாகிஸ்தானைக் குறிப்பதாக விளக்கம் அளிக்கப்படுகிறது ).மூன்றாம் காண்டம்;2ம் பாடல்:-தெய்வீக எழுத்து வானம்.பூமி, செல்வம் அனைத்தையும் தரும். (இது ஓம் என்ற அக்ஷரம் உலகில் ஏற்றம் பெறுவதைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது)மேலும் உலக நாடுகள் பற்றி இவர் கூறியுள்ளவை பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றது.எட்டாம் காண்டம் 99ம் பாடல் மற்றும் இரண்டாம் காண்டம் 41ம் பாடல்:- போப் ஆண்டவர் ரோமை விட்டு நீங்க நேரிடும். இது குறித்து இங்கிலாந்து புலம்பும். அது வலிமையற்ற நாடாகி விடும்.ஐரோப்பா தனது மதத்தை இழந்து உலகின் பழமையான மதத்தை ஏற்றுக் கொள்ளும்.இப்படி நூல் நெடுக இந்தியாவின் ஏற்றத்தை நாஸ்டர்டாமஸ் அள்ளித் தருவது உலகினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.நுண்மையாக எல்லாப் பாடல்களையும் அலசி ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்த்தால் மட்டுமே நாஸ்டர்டாமஸின் பாடல்களுக்குள் புதைந்திருக்கும் எதிர்கால உண்மைகள் புரியும். ஆகவே செஞ்சுரிஸ் நூலை ஒரு நாளில் கற்றுத் தேற முடியாது. இதற்கான வியாக்யான நூல்களை முதலில் படித்து விட்டு மூலத்தைப் படிக்க வேண்டும்.ஜெர்மானியக் கவிஞரான கதே (1749-1832) இந்த நூலை ஆழ்ந்து படித்து விட்டு வியந்து போனார். அவர் கூறினார்:-

"செஞ்சுரிஸ் நூலிலிருந்து எதிர்காலத்தை நன்கு அறியலாம்"அந்தக் கவிஞரின் கூற்று முக்காலும் உண்மை என்பதை நாஸ்டர்டாமஸின் ஆரூடப் பலன்கள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருவதன் மூலம் அறியலாம்.
அனைவருக்கும் பொதுவான சுலப பரிகாரம்

அளவற்ற கடன் அல்லது கடுமையான நோய் அல்லது குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டு/ புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வசிப்போர்களின் எண்ணிக்கை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையளவிற்கு உயர்ந்து கொண்டே செல்லுகிறது.(நமது தமிழ்நாட்டில்)

அவரவர் பிறந்த ஜாதகம் பார்த்து பலன் சொல்லி பரிகாரம் சொல்லி அதிலிருந்து மீள்வதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆகலாம்;அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் கூட ஆகலாம்;இந்நிலையில் இரண்டே இரண்டு பரிகாரங்கள் மூலமாக நமது பிறந்த ஜாதகத்திலிருக்கும் தோஷங்களை நீக்கமுடியும்.

அவை :

1.அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 20 முறை (அதிகபட்சம் நூறு முறை)திருஅண்ணாமலை கிரிவலம் செல்லுதல்2. தினமும் காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை/இரவு ஒரு மணி நேரம் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்தல்இந்த இரண்டை மட்டும் செய்ய ஆரம்பித்தாலே நமது சிக்கல்கள் தீரத் துவங்கும்.திரு அண்ணாமலை கிரிவலத்தை பவுர்ணமி அல்லது அமாவாசையில்தான் செல்லவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;மிகவும் சாதாரண நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்.இப்படிச் செல்லுவதாலும் நமது கடுமையான தோஷங்கள்,கடன்கள்,நோய்/கர்மநோய்/எதிர்ப்பு/எதிரி/அரசு சார்ந்த பிரச்னைகள் தீரத் துவங்கும் என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.அதேபோல, தினமும் இருமுறை (காலை ஒரு மணி நேரம் மாலை/இரவு ஒரு மணி நேரம்) ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்து வர வேண்டும்.இப்படி ஓராண்டு வரை ஜபித்துவந்தால்,ஒரு மாதம் ஜபித்ததுமுதல் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ மந்திரம் நமக்கு அற்புதமான அரிய வழிகளைக் காட்டும்.அது பணப்பிரச்னையாக இருந்தாலும் சரி; மனப்பிரச்னையாக இருந்தாலும் சரி; மானப்பிரச்னையாக இருந்தாலும் சரி; போலீஸ் பிரச்னையாக இருந்தாலும் சரி;வம்பு வழக்குகளாக இருந்தாலும்சரி; சொத்துத் தகராறாக இருந்தாலும் சரி; உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் ஜெயிக்கும்;நீண்டகால பிரச்னைகள் தீரும்.

சீனாவின் பேராசை

தாலிபான்கள் மற்றும் அல் கொய்தாவுக்கு இஸ்லாமிய நாடுகளே ஆதரவளிக்கத் தயங்கும்போது சீனா மட்டும் திருட்டுத்தனமாக ஆதரவளிப்பது ஏன்?இதுவரை அல் கொய்தாவின் உலகளாவிய குண்டுவெடிப்புக்களுக்கு ஒரே ஒரு கண்டன அறிக்கை சீனா விடாதது ஏன்?ஆப்கானிஸ்தான் முழுவதும் தகவல் தொழில்நுட்ப நெட்வொர்க் அமைப்பதற்காக சீனாவின் ஹீவாவேய் டெக்னாலஜீஸ் என்னும் நிறுவனம் காண்டிராக்ட் பெற்றது.அதற்கு முன்பாக, அல் கொய்தாவுடன் ரகசிய ராணுவ ஒப்பந்தம் போட்டது சீனா!!இதுபற்றி இந்தியாவின் பெரும்பாலான பத்திரிகைகள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

நன்றி:விஜயபாரதம் மே,2011.