RightClick

சைபர் குற்றங்களைக் கண்டுபிடிக்கப் பயிற்சி

நீங்கள் கம்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட் ஒர்க்கிங்கில் ஓரிரு ஆண்டுகளாவது அனுபவம் உள்ளவரா?

சைபர் க்ரைம் பற்றிய படிப்புகளை  www.ascl.org காணலாம்.நீங்கள் விரும்பியதைப் படிக்கலாம்.

உங்கள் குழந்தைகளை ஏன் தமிழ் மீடியத்தில் சேர்க்க வேண்டும்?

உலகில் எந்த குழந்தையும் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும்(ஐந்து வயது முதல் பத்து வயது வரை) தாய்மொழிக்கல்வியிலேயே கற்றால் மட்டுமே மொழித்திறனும்,படைப்புத்திறனும் வளரும் என்பது மனோதத்துவ உண்மை.

இன்றைய நிலவரப்படி எட்டாம் வகுப்புக்குப் பிறகு ஆங்கிலத்தை ஒரு பாடமாகவோ அல்லது இங்கிலீஷ்மீடியம் பள்ளி எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளியிலோ நமது குழந்தையைப் படிக்க வைப்பது நன்று.

ஆனால்,நடைமுறையில் நமது தருமம் மிகு தமிழ்நாட்டில் இருப்பது என்ன?

3 வயதிலேயே இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.தாய்மொழியாம் தமிழே தெரியாத ஒரு இனம் உலகில் உருவாகிவிட்டது எனில் அது நமது தமிழ்நாடாகத் தான் இருக்கமுடியும்.விளைவு?

படிக்கும் வயதில் பள்ளியிலும்,வீட்டிலும் தரப்படும் தொல்லைகளால் ஏராளமான தமிழ்நாட்டுக்குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாகி,வலிப்பு நோய் மாநிலமயமாகிவிட்டது.இதை எங்கள் ஊர் குழந்தை சிறப்பு மருத்துவர் சொன்னது.ஆனால்,கொந்தளிக்கும் நிஜம்.(எனவே,எனதருமை தமிழ்ப்பெற்றோர்களே,உங்கள் கால்களில் விழுந்து மன்றாடிக்கேட்கிறேன்.உங்கள் குழந்தையை தமிழ் வழிக்கல்வியில் சேருங்கள்)

ஆனால்,நாம் என்ன செய்கிறோம்? எம்புள்ள இங்கிலீஷ் மீடியம் படிக்கிறது என பீற்றிக்கொள்கிறோம்.

இங்கிலீஷ் மீடியம் பள்ளி நடத்துபவர்களின் பின்னணி பணம் பண்ணுவது மட்டுமே.இம்மாதிரியான பள்ளிகளின் ஆசிரியர்களில் எத்தனை பேர்கள் தகுதி வாய்ந்தவர்கள்?வெறும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்கள் சம்பளத்துக்கு வரும் ஆசிரியைகளின் கோபங்கள் பிஞ்சுகளை அடிக்கவும்,உதைக்கவுமே!!

உங்கள் குழந்தையின் படைப்புத்திறனையும்,சிந்திக்கும் திறனையும்,தன்னம்பிக்கையையும் நீங்கள் நாசமாக்குகிறீர்கள்.அப்படி நாசமாக்குவதை ஒரு மரபாக ஆக்கிய பெருமை  டாக்டரைச் சேரும்.

இதிலும் பணம் சம்பாதிக்க வழி செய்த இவரா தமிழறிஞர்?புதிய சமுதாயப்பிரச்னையை உருவாக்கி,தமிழினத்தின் தரத்தை சிதைத்துவிட்ட இவரா தமிழ்க்காவலர்?

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு தொழில்முறை ஜோதிடப்பயிற்சி
ஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம்,ஒரே மாதத்தில் ஜோதிடம் தொழில்முறையாக கற்றுக்கொள்ளுமளவுக்கு நமது ஆன்மீகக்கடல் பயிற்சியளித்துவருகிறது.இந்த ஒரு மாதத்திற்குப்பிறகு,நீங்கள் உங்கள் பகுதியில் ஜோதிடத்தொழில் செய்யலாம்.இதற்குத் தேவையான தகுதிகள்:குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரை உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம்,(விருதுநகர் மாவட்டம்)நகரில் வந்து தங்க வேண்டும்.ஜோதிடம் பயிலுவதற்குக் கட்டணம் உண்டு.மேலும் விபரமறிய மின் மடலில் aanmigakkadal@gmail.com க்கு தொடர்புகொள்ளவும்.ஆன்மீகக் கடல் வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்


புத்தகம் வாசிப்பது என்பது இலக்கில்லாத மிக நீண்ட பயணம்;யார் தனது பள்ளிப்பருவத்தில் தினமும் செய்தித்தாள் வாசிக்கிறார்களோ,அவரே கல்லூரிப்பருவம் மற்றும் அதன்பிறகும் வாசிக்கும் பழக்கத்துக்கு அடிமையாவார்;அறிவே சக்தி என்ற கிரேக்க ஞானியின் கருத்து இந்த தகவல்யுகத்திற்கு மிகவும் பொருந்தும்.

நேற்று தினகரன் தினசரியில் ஒரு செய்தியை வாசித்தேன்.அது எனது மனதை மிகவும் பாதித்தது.கேரளாவில் ஒரு தம்பதி!கணவன் தனக்குப் பிடித்த நடிகையின் போட்டோவை தனது செல்போனின் முகப்பில் வைத்திருந்தான்;அதைப் பார்த்த மனைவி,அந்த நடிகையின் போட்டோ தனது கணவனின் கள்ளக்காதலி என நம்பி தற்கொலை செய்துகொண்டாள்.

இந்த செய்தியில் இரண்டு உண்மைகள் தெரிகின்றன.ஒன்று,அந்த மனைவிக்கு உலக நடப்பு பற்றிய அடிப்படை ஞானமில்லை;இரண்டு எந்தக் கணவனாவது தனது கள்ளக்காதலியை செல்போனில் எல்லோரும் பார்க்கும்விதமாக வைத்திருப்பானா? என சிந்திக்கவில்லை;மூன்று தனது கணவனிடம் யார் இவள்?என்று கேட்கவில்லை

இதன் மூலமாக அந்த மனைவி சிந்திக்கத் தெரியாதவள் என்பது புலனாகிறது.தினமும் எதையாவது படித்தால் தானே சிந்திக்கும் சுபாவம் வளரும்?

ஆக,வேர்களைப் பலப்படுத்திட,ஏற்கனவே பதிவிட்ட ஒன்றை சிறு மாற்றங்களுடன் மீண்டும் வெளியிடுகிறேன்.

யாரிடம் எப்படிப் பேசுவது? எங்கே எவ்வாறு நடந்து கொள்வது? என்பது பற்றி பலருக்குத் தெரியாமைக்குக் காரணமே வாசிக்கும் பழக்கம் இல்லாமையே!

இந்தப் பட்டியலில் இருக்கும் புத்தகங்களை இதில் சொல்லப்பட்டுள்ள வரிசைப்படி வாசிக்கவேண்டும்.ஒவ்வொரு புத்தகத்தையும் ஆறு மாதங்கள் வரையிலும் அடிக்கடி திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும்.

எப்போதெல்லாம் நீங்கள் மன வருத்தத்தில் இருக்கிறீர்களோ,அப்போது முதல் புத்தகத்தை வாசிக்கவும்.ஓராண்டு கழிந்தபிறகு,உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பேச்சுக்கு உள்ளார்த்தம் என்ன? அவர்கள் ஏன் அப்படிப் பேசுகின்றனர்? என்பது உங்களுக்குப் புரியும்.

சில புத்தகங்கள் நாவல்கள்,புதினங்கள்,வரலாற்று உண்மையை விவரிக்கும் கதைகளாக இருக்கும்.அவற்றை எப்போதும் எப்படியும் வாசிக்கலாம்.

1.எண்ணங்கள் / எம்.எஸ்.உதயமூர்த்தி=வானதி பதிப்பகம்

2.கர்மயோகம் /சுவாமி விவேகானந்தர்=ஸ்ரீஇராமகிருஷ்ணமிஷன் வெளியீடு

3.வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்/ ஜேம்ஸ் ஆலன்

4.வந்தார்கள்;வென்றார்கள்/மதன்=விகடன் பிரசுரம் வெளியீடு

5.மனம் தரும் பணம்/நெப்போலியன்ஹில்=கண்ணதாசன் பதிப்பகம்

6.விழிமின்;எழுமின்/சுவாமி விவேகானந்தர்=விவேகானந்த கேந்திர வெளியீடு(அங்கு மட்டுமே கிடைக்கும்)

7.விலை ராணி/சாண்டில்யன்=வானதி பதிப்பகம்

8.ஆழ்மனதின் சக்திகள்=கண்ணதாசன் பதிப்பகம்

9.மனோசக்தி மாத இதழ்,சென்னையிலிருந்து உலகெங்கும் வெளிவருகிறது

10.தேசப்பிரிவினையின் சோக வரலாறு/ஹெ.வே.ஷேசாத்ரி

11.பாரதத்தின் விஞ்ஞானச் சாதனைகள்/இராம.கோபாலன்

12.என்று காண்போம் எங்கள் சிந்துவை/கேப்டன் எஸ்.பி.குட்டி

13.முன்கதைச் சுருக்கம்/பாலகுமாரன் அவர்களின் சுயசரிதை

14.ஓம்சக்தியும் அணுசக்தியும்

15.ஏழை படும்பாடு/விக்டர் ஹ்யூகோ/தமிழில் சுத்தானந்த பாரதியார்

16.நான் ஏன் நாத்திகனானேன்?/தந்தைப் பெரியார்

17.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப் பதிப்பகம்

18.நாதுராம் விநாயக் கோட்சே/இஜட்.ஒய்.ஹிம்சாகர்=குமரிப் பதிப்பகம்

19.எப்படி ஜெயித்தார்கள்?சில மார்க்கெட்டிங் சாகசங்கள்/ரமேஷ் பிரபா

20.மனசே,ரிலாக்ஸ் ப்ளீஸ்/சுவாமி சுகபோதானந்தா=விகடன் பிரசுரம் வெளியீடு

21.அர்த்த சாஸ்திரம்

22.சதுரகிரி ஸ்தல புராணம்=தாமரை நூலகம்

23.ஞான கங்கை /குருஜி=சக்தி புத்தக நிலையம்

24.அர்த்தமுள்ள இந்துமதம் 18 பாகங்கள்/கண்ணதாசன்

25.கூடு/பாலகுமாரன்

26.கோட்டைப்புரத்து வீடு/இந்திரா சவுந்தரராஜன்

27.அடுத்த நூற்றாண்டு/சுஜாதாசென்னை அடையாறில் ஒரு தமிழ்பண்பாட்டை வெளிப்படுத்தும் கடை

ழ கஃபே என்ற பெயரில் அருள் அரசி என்பவர் சென்னை அடையாறில் நடத்திவருகிறார்.இங்கே பதநீர்,இளநீர்,கோலி சோடா முதலான சுதேசி பானங்களுடன்,தமிழ்ப்பண்பாட்டை வெளிப்படுத்தும் பல்லாங்குழி(?!),மண்பானைக்குள் வைக்கப்பட்ட ஸ்பீக்கர் போன்றவை உண்டு.ஆனால்,வெளிநாட்டுக் குளிர்பானங்கள் மட்டும் கிடையாது.

இதற்கு சகோதரி அருள் அரசி சொல்லும் கருத்து:மல்டி நேஷனல் கம்பெனிகளின் நம்மூர் நிறுவனங்களைக் கபளீகரம் பண்ணி,மார்க்கெட்ல ஆதிக்கம் செலுத்தறத ஏத்துக்க முடியாது;இந்த பானங்களை விற்பதைத் தவிர்க்குறது மூலமா எங்களோட சின்ன எதிர்ப்பைக் காட்டுறோம்.இதில் மட்டும் நாங்க சமரசம் செய்யவே மாட்டோம்

தமிழினத் தலைவர் என சொல்லிக்கொள்ளுபவர்கள் செய்ய வேண்டிய தேச சேவையை ஒரு சாதாரண அருள் அரசி,சாப்ட்வேர் என் ஜினியர் செய்வதை நினைத்து,ஆன்மீகக்கடல் இவரைப் போற்றுகிறது.

நன்றி:குமுதம்,18.5.2011 பக்கம் 94,95,96.டைரக்டர் கே.வி.ஆனந்த் நம்ம ஆளு

சினிமாவுல பணிபுரியணும்கிற ஆர்வத்துல வர்ற இளைஞர்களுக்கு நான் சொல்றது இதுதான்.

‘இவன் நல்லா சம்பாதிக்கிறாண்டா. . . புகழ்,பெருமை கிடைச்சிருக்கு’னு சினிமாவுக்கு வராதீங்க.நிறைய புத்தகங்கள் படிங்க;இண்டர்நெட் பாருங்க;உங்களுக்குப் புடிச்சதைச் செய்யுங்க.அதற்கான படிப்புகளைப் படிங்க;சினிமாவுக்கான பயிற்சி படிப்புகளைப் படிங்க;இப்போ அதிகமா இருக்கு;ஊர்ல இருந்து மஞ்சள்பையை வைச்சுக்கிட்டு பஸ் ஏறி இங்கே வந்து டைரக்ஷன் பண்ண முடியாது;படிங்க;வாசிப்பு ரொம்ப முக்கியம்;அதுதான் நம்மை வளர்த்தெடுக்கும்.உங்களை சினிமாவுக்கு மட்டுமல்ல;நீங்கள் விரும்பும் எந்தத் துறைக்கும் தயார் படுத்தும்.

பணம்,புகழுக்கு மட்டும் ஆசைப்பட்டு வந்தா சாதிக்க முடியாது.

நேருவுக்குப் புரியாத ராணுவ நம்பிக்கை

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்பது உறுதியானவுடன்,இந்திய ராணுவத் தலைமைத் தளபதியைத் தேர்வு செய்வதற்காக நேரு தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.

நீண்ட ஆலோசனைக்குப்பின்,நேரு சொன்னார்:

“ஆங்கில அதிகாரி ஒருவரிடம்,இந்தியாவின் ராணுவத் தலைமைத் தளபதி பொறுப்பை ஒப்படைத்துவிடுவோம்.ஏனென்றால்,நம்மவர்களுக்கு,ராணுவத்தை நடத்திச் செல்வதற்குப் போதுமான அனுபவம் கிடையாது”என்றார்.கூட்டத்திற்கு வந்த அனைவரும்,இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால்,ஒரு ராணுவ அதிகாரி மட்டும், “ஐயா,ஒரு வேண்டுகோள்”என நேருவிடம் கூறிவிட்டு,

“இந்த நாட்டை நல்ல முறையில் ஆட்சி நிர்வாகம் செய்வதற்குக் கூட நம்மவர்களுக்குப் போதுமான அனுபவங்கள் இல்லை.ஆகையால்,நம் இந்தியாவின் முதல் பிரதமராக ஒரு ஆங்கிலேயரை நியமித்துவிடலாமா?” என உறுதியான குரலில் கேட்டார்.

கூட்டத்தில் அதிர்ச்சியும்,அமைதியும் நிலவியது.நேரு வழக்கத்துக்கு மாறாக கோபப் படாமல்,

“இந்தியாவின் ராணுவத்தின் தலைமைத் தளபதிப் பதவியை ஏற்பதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?”எனக் கேட்டார்.

ஆனால்,அந்த ராணுவ அதிகாரியோ, “எனக்கு வேண்டாம்.எங்கள் உயர் அதிகாரியாகிய லெப்டிணெண்ட் ஜெனரல் கரியப்பா தான் இந்தப் பொறுப்புக்கும்,இங்குள்ளவர்களுக்கும் பொருத்தமானவர்”என்றார்.

பிரதமரின் கருத்துக்கு எதிராக இப்படி கருத்து தெரிவித்தவர் லெப்டிணெண்ட் ஜெனரல் நட்டுசிங் ரத்டோர்.சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ லெப்டிணெண்ட் ஜெனரல்!!!

00000000000000000000000000000000000000000000000

சைபர் தேசம்:


பெர்ட்ராண்டு ரஸ்ஸல் என்பவர், “சைபர் நாட்டிலிருந்து வருகிற உங்களை வரவேற்கிறேன்” என்றதும்,ஆடிப்போனார் ஜவஹர்லால் நேரு.

உடனே, ‘என்ன இது,ஒன்றுமில்லா தேசத்தில் இருந்து வருவதாகச் சொல்கிறாரே’ என அவருக்குக் குழப்பம்.

அவரது இந்த எண்ணத்தை முகக்குறிப்பால் உணர்ந்த பெர்ட்ராண்டு ரஸ்ஸல், “கணித அறிவியலில் மிகப்பெரிய மேதைகளைக் கொண்டது உங்களுடைய பாரத நாடு.சைபர் என்னும் பூஜ்ஜியம் எண்ணைக் கண்டுபிடித்து,உலகுக்கு வழங்கிய நாடால்லவா உங்கள் பாரதம்! அந்தப் பெருமையை நினைவுபடுத்தும் விதமாகத் தான் அப்படிச் சொன்னேன்” விளக்கினார்.அதன் பிறகே,நேரு அமைதியடைந்தார்

வாழைப்பழம் படைப்பது ஏன்?


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.ஆனால்,வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும்கூட மீண்டும் முளைப்பதில்லை.இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.அது மட்டுமல்ல தேங்காய்,வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு,கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.ஆனால்,தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.பழம் கொட்டை என்பது கிடையாது.அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.இதுவே இந்துதர்மத்தின் தனிச்சிறப்பு.

சொன்னவர்:வாதவூரான்,சமய சொற்பொழிவாளர்

புற்றுநோய் தடுப்பு மருந்துக்கு அமெரிக்க காப்புரிமை வாங்கியிருக்கும் இந்துதர்ம ஆய்வு அமைப்பு
பசுவின் மூத்திரமாகிய கோமயத்திலிருந்து பெறப்பட்ட புற்றுநோய் தடுப்பு மருந்தை கோ விஞ்ஞான் அனுசந்த்ன் கேந்த்ராக் கண்டுபிடித்திருக்கிறது.இம்மருந்தின் உயிரியல் குணத்திற்காக அமெரிக்கக் காப்புரிமைபெற்றிருக்கிறது.

காமதேனு அர்க் என்ற வணிகப்பெயர் சூட்டப்பட்ட மருந்து கோ விஞ்ஞான் அனுசந்தன் கேந்திராவும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையமும் இணைந்து இந்த ஆய்வு செய்து கண்டுபிடித்ததாகும்.

கோமயத்திலிருந்து காய்ச்சி வடிக்கப்பட்ட இந்த மருந்து மனித உடலின் டி.என்.ஏ.செல்களை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடியதாகும்.

அதனுடைய நோய்த் தடுப்பு வீரியத் தன்மையின் அடிப்படையில் அதற்கு மூன்றாவது அமெரிக்கக் காப்புரிமைபெறப்பட்டுள்ளது.

செம்மொழிமாநாட்டில் கிடைத்த அரிய தகவல்


ஜார்ஜ் ஹார்ட் என்ற அயல்நாட்டுத் தமிழறிஞர் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் சொன்னது:

பண்பாட்டில் சிறந்தது பாரதம்.தத்துவச் செறிவால் உயர்ந்தது இந்து தர்மம்.இலக்கியச் செழுமையால் உயர்ந்தது தமிழ் மொழி

(*எனதருமை தமிழ் ஹீமோகுளோபின்களே!நம்மில் எத்தனை பேருக்கு திருக்குறள் தெரியும்? எத்தனை பேர்களின் வீட்டில் திருமந்திரம் இருக்கிறது?எத்தனை பேர்களிடம் திருப்பாவை,திருவெம்பாவை ரிங் டோனாக இருக்கிறது?)

சனிதோஷம் நீக்கும் முருகக் கடவுள்:இராமநாதபுரம்
சனிபகவானின் தோஷத்தினால் வாழ்வே வெறுத்துப்போயிருப்பர் சிலர்.உதாரணமாக இந்த 2011 முடியும் வரையிலும் கன்னிராசிக்கு ஜன்மச்சனியும்,கும்பராசிக்கு அஷ்டமச்சனியும் நடைபெற்றுவருகிறது.2012 ஜனவரி முதல் மீனராசிக்கு அஷ்டமச்சனியும்,துலாம் ராசிக்கு ஜன்மச்சனியும் கடகராசிக்கு அரை அஷ்டமச்சனியும் நடைபெற இருக்கிறது.

இவர்கள் ராமநாதபுரம் பேருந்து நிலையம் எதிரே இருக்கும் வழிவிடும் முருகன் கோவிலுக்குச் செல்வது அவசியமாகும்.இந்த கோவிலில் சனிபகவானின் தாயாராகிய சாயாதேவி மரமாக இருக்கிறாள்.இந்த மரத்தை “சாயாமரம்” என்றே அழைக்கின்றனர்.இங்குவந்து சாயாமரத்தை வழிபடும் பக்தர்களுக்கு சனி தோஷம் உடனே விலகிவிடும்.ஏனெனில்,சனிபகவான் தனது தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு,தனது கெடுபலன்களைக் குறைத்துக்கொள்வதாக ஐதீகம்.

இதே வழிபாடு இலங்கை கதிர்காமம் முருகன் கோவிலிலும் இருக்கிறது.இந்துதர்மம் பட்ட சிரமங்களை அறிய உதவும் புத்தகங்கள்

1.வானம் வசப்படும்=எழுதியவர் பிரபஞ்சன்(சாகித்ய அகாடமி விருது பெற்றது.தினமணியின் ஞாயிறு இணைப்பான தினமணிச்சுடரில் தொடராக வெளிவந்தது)

2.வந்தார்கள்,வென்றார்கள்=எழுதியவர் மதன்,விகடன் பிரசுரம் வெளியீடு

3.தேசப்பிரிவினையின் சோக வரலாறு=ஹெ.வே.சேஷாத்ரி,

சக்தி புத்தக நிலையம்,1,எம்.வி.தெரு,சேத்துப்பட்டு,சென்னை-31.

4.என்று காண்போம் எங்கள் சிந்துவை?=எழுதியவர் கேப்டன் எஸ்.பி.குட்டி

5.ஸ்ரீரங்கன் உலா

6.கோவா வரலாறு

7.மருது பாண்டியர் வாழ்க்கை வரலாறு=மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக வெளியீடு

8.வீரபாண்டியக் கட்ட பொம்மன் கதை

9.நாதுராம் விநாயக் கோட்சே=எழுதியவர் இஜட்.ஒய்.ஹிம்சாகர்,தமிழில் வெளியீடு:குமரிப் பதிப்பகம்,8,நீலா தெற்கு வீதி,நாகப்பட்டிணம்.

10.Lecters from Columbo to Almora=Swami Vivekananada

11.விவேகானந்தர் பாறை:நினைவுச்சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திர வெளியீடு

12.விழிமின்;எழுமின்;=வெளியீடு விவேகானந்த கேந்திரம்,விவேகானந்த புரம்,கன்னியாக்குமரி.

13.நான் நேசிக்கும் இந்தியா=எழுதியவர் ஓஷோ

14.விநாயக தாமோதர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு

15.இந்தியாவின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்

பாம்பன்சுவாமிகள் அருளிய சண்முகக் கவசத்தின் மகிமை

முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன்சுவாமிகள்.இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல் இது பயமும் நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை;
பாம்பன் சுவாமிகள்,சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.

தமிழில் இருக்கும் உயிர் எழுத்துக்கள் 12 ஐயும்,மெய் எழுத்துக்கள் 18 ஐயும்,முதல் எழுத்தாகக் கொண்டு 30 பாடல்களுடன் பாடப்பட்டது சண்முக கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.குறிப்பாக முருகக் கடவுள் பிறந்த வைகாசி விசாகத்தன்று(17.5.2011 செவ்வாய்க்கிழமை)பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2011


மிதுனத்திலிருந்து ரிஷபத்திற்கு கேதுபகவானும்,

தனுசிலிருந்து விருச்சிகத்திற்கு ராகு பகவானும் பெயர்ச்சி ஆகின்றனர்.இவர்கள் இந்த ராசியில் தலா 18 மாதங்கள் இருப்பர்.

இந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு ரிஷபராசியினரும்,விருச்சிக ராசியினரும் ஒரு முறையாவது காமரீதியில் அவமானப்பட வேண்டியிருக்கும்.அல்லது காவல் நிலையம் செல்ல வேண்டியிருக்கும்.

இதற்கு ஒரே பரிகாரம்:தினமும் ஏதாவது உக்கிர பெண் தெய்வத்தை வழிபட்டு வர வேண்டும்.அல்லது குல தெய்வத்தை வழிபட்டு வர வேண்டும் அல்லது மனவளக்கலையில் அகத்தாய்வு முடித்திருக்க வேண்டும்.அப்படி முடித்திருந்தாலும் தினமும் மனவளக்கலை தியானம் செய்து வர வேண்டும் அல்லது ஏதாவது ஒரு தியானப் பயிற்சியில் ஈடுபட்டு,அதில் குறிப்பிட்ட நிலையை எட்டியிருக்க வேண்டும்.

தவிர,மேஷ ராசியினர்,துலாம் ராசியினர் புறங்கூறுவது,பிறரது அந்தரங்க விஷயங்களைப் பேசாமலிருப்பது கட்டாயம்.எச்சரிக்கை.!!!

குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2011
மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குருப் பெயர்ச்சி ஆகிறார்.வாக்கிய கணித,திருக்கணித வேறுபாடுகள் இருந்தாலும் இந்த மே 2011 முதல் மே 2012 வரை குருபகவான் மேஷராசியைக் கடக்கிறார்.

இந்த குருப்பெயர்ச்சியால்,மீனம்,ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு ராசிக்காரர்கள் அதிகபட்சமான நன்மைகளைப் பெறுவர்.கும்பம்,மேஷம்,கடகம் ராசியினர் ஓரளவு நன்மைகளைப் பெறுவர்.

கன்னி,மகரம்,விருச்சிகம் ராசியினர் சிறிதளவு மட்டுமே நன்மைகளைப் பெறுவர்.

6,12,18,24,30,36,42,48,54,60 என ஆறின் மடங்குகளில் வயதைக் கொண்டவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் அளவற்ற நன்மைகள் உண்டாகும்.மேலும் விபரமறிய உங்களின் பிறந்த ஜாதகத்தை எமக்கு அனுப்பவும்.நடிகர் சிவக்குமாரின் பேட்டி

கேள்வி:நடிகர் சிவக்குமார் ‘இலக்கியம்,ஆரோக்கியம்,இல்லறம்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகளுக்கு ஆற்றிய உரையை தமிழ்ப்புத்தாண்டு அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பினார்களே,பார்த்தீர்களா?உங்கள் கருத்து என்ன?
பதில்:  விஜய் டிவி,சிவக்குமாரின் நிகழ்ச்சி மூலமாக பரிகாரம் தேடிக்கொண்டுவிட்டது.சிவக்குமாரின் கருத்துக்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை.குறிப்பாக,வேலைக்குச் சென்ற பெண்கள் உடனடியாக திருமணம் செய்ய வேண்டும்;குடும்ப அமைப்பை காப்பாற்ற வேண்டும் என்பது.

எண்டோசல்பான் விளைவுகளை ஸ்லோ பாய்சனிங் ஆஃப் இந்ஹ்டியா என்ற ஆவணப்படம் தெளிவாக விளக்குகிறது.இப்படத்தில்,குறைபாடு உடைய குழந்தைகளைப் பார்த்தால்,சமூக உணர்வுடைய மனிதரால் தூங்க முடியாது.அவ்வளவு பாதிப்புகளை எண்டோசல்பான் ஏற்படுத்தி உள்ளது.பார்க்க:www.video.google.com/videoplay?docid=&6926416900837431283#

ஒரு ஆன்மீகக் கேள்வி பதிலும்;ஆழ்ந்த சிந்தனையும்
கேள்வி:ஐயா,ஒரு மனிதனை அதிகளவில் துன்புறுத்துவது அவனுடைய முன் ஜென்ம பாவமா அல்லது முன்னோர்கள் செய்த பாவமா?

பதில்:அனுபவமிக்க ஜோதிடர் சொன்னது:முன்னோரிடமிருந்து பெறப்பட்ட உடலின் மரபு அணுக்கள் வழியாக வரும் பாவம் எட்டில் ஒரு பங்கு மட்டுமே!

தானே முந்தைய பிறவிகளில்(ஏழு மனித பிறப்பு வரை) செய்த பாவமே எட்டில் ஏழு பங்கு வரும்.

இந்த கேள்வி பதில் ஒரு ஜோதிட மாத இதழில் வெளிவந்திருக்கிறது.இந்த மே மாதம் 2011 இல் வெளிவந்திருக்கிறது.

ஆக, நமது இப்பிறவி கஷ்டங்கள்,நோய்கள்,துயரங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.