RightClick

பண நெருக்கடியிலிருந்து மீள உதவவும்,செய்யும் தொழிலில் ஏற்படும் விழ்ச்சியைத் தடுக்கவும்,நமது கர்மங்களை அழித்தவாறே,நமக்குச் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு


 எனது ஆன்மீக குரு சிவ.மாரியப்பன் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்த கட்டுரையை ஆன்மீகக் கடல் வலைப்பூ வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த பைரவர் வழிபாட்டினை மீண்டும் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் திரு.சிவமாரியப்பன்,புளியங்குடி அவர்கள்.இவர் சுமார் 30 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு தனது அனுபவங்களால் பல்லாயிரக்கணக்கான மக்களை மாந்திரீக பாதிப்பிலிருந்து நீக்கியவர்;கடுமையான கர்ம வினைகளைப் போக்கி பலரது வாழ்க்கையில் நிம்மதி,செல்வ வளம் என்னும் தீபங்களை ஏற்றியவர்.

அவரது லட்சியங்கள்

 பைரவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணரச்செய்வது

 அன்னதானத்தின் பெருமைகளை நித்யக் கடமையாக்குவது

இறுதியாக ஆன்மீக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு தேவையான உதவிகள்,வழிகாட்டுதல்கள் செய்து அவர்களது முதுமைக் காலத்தில் கஷ்டமில்லாமல் வாழ வைப்பது.

இதில் முதல் மூன்று லட்சியங்களை கை.வீரமுனியாகிய நான் ஆன்மீகக்கடல் வலைப்பூ மூலமாகவும்,பல ஜோதிட மாத இதழ்கள் மூலமாகவும் பரப்பத் துவங்கியிருக்கிறேன்.இதில் அடுத்த கட்டமாக பைரவர்களில் வீட்டில் வைத்து வழிபடக்கூடியவரான சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினைப் பிரபலப்படுத்துவது என முடிவு செய்து,எனது ஆன்மீக குரு சிவ.மாரியப்பன் அவர்களின் அனுமதியைக் கேட்டேன்.அவர் எனக்கு பரிபூரணமாக ஆசிர்வாதித்து அனுமதித்தார்.இன்னும் பல ஆன்மீக சூட்சும ரகசியங்கள் நமது ஆன்மீகக் கடல் வலைப்பூவில் வெளிவர விருக்கின்றன.
90 நாட்கள் தொடர்ந்து நமது வீடு அல்லது அலுவலகத்தில் சொர்ண பைரவரின் போட்டோவை வைத்து வழிபாட்டு முறையைப் பின்பற்றினால்,எந்த ஜாதகராக இருந்தாலும் அவரது பண நெருக்கடி தீரத்துவங்கும்.

வேலையில்லாதவர்களுக்கு நல்ல அவரவரின் திறமை,தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.பலர் கொடுத்த கடனை திருப்பிவாங்கிட முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பர்;அவர்களுக்கு வராகடன் வசூலாகும்;

செய்தொழிலில் திடீரென நெருக்கடியோ வீழ்ச்சியோ துவங்கியிருக்கும்;அந்த நிலையை மாற்றி தொழிலில் படிப்படியான எழுச்சி உண்டாகும்.சொர்ண பைரவரின் போட்டோசொர்ண பைரவரின் வழிபாட்டு முறை தேவைப்படுவோர் aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.போட்டோவுக்கும்,வழிபாட்டு முறைக்கும் வாங்கப்படும் தொகையில் பெரும்பகுதி  பைரவர் வழிபாட்டு முறையைப் பரப்புவதற்கு செலவிடப்படும்.


தவிர,ஆன்மீகக் கடல் வலைப்பூவில் சொல்லப்பட்ட பல ஆன்மீகப் பரிகாரங்கள்,வழிபாட்டு முறைகள் என்னால் அல்லது என்னிடம் ஜோதிடம் பார்த்தவர்களால் பரிசோதனை செய்யப்பட்டப் பின்னரே,ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வெளியிடப்பட்டு வருகின்றன.எனவே, நீங்கள் உங்களது வாழ்க்கையில் நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் (ஆன்மீகக் கடல் வழிகாட்டுதலின் படி) வாழ்க வளமுடன்!!!தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்

இலங்கையில் வாழ முடியாமல் தவிக்கும் நமது தமிழ் உறவுகளுக்கு விடிவு கிடைத்திட,பின்வரும் பதிகத்தினை தினமும் ஏதாவது ஒரு சிவாலயத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலோ அல்லது அவரவர் வீட்டிலோ பூஜை அறையில் ஒரு முறை வாசித்து வரவேண்டும்.இப்படி 90 நாட்கள் வரை தினமும் வாசித்து வர,நமது கடல் கடந்த தீவு உறவுகளுக்கு நிம்மதியான மறுமலர்ச்சி நிறைந்த வாழ்க்கை நிச்சயம் கிடைக்கும்.
இப்படி ஜபித்து முடித்ததும்,ஒரு தம்ளர் தண்ணீர் அல்லது ஒரு தம்ளர் இளநீர் அருந்திவிட்டு,ஓம்அருணாச்சலாய நமஹ என ஜபித்து இந்த பதிகவாசிப்பை நிறைவு செய்வது நன்று.

வளைந்தது வில்லு:;விளைந்தது பூசல்;
உளைந்தன முப்புரம்-உந்தீ பற!
ஒருங்கு உடன் வெந்தவாறு-உந்தீ பற!

ஈர் அம்பு கண்டிலம்,ஏகம்பர தம் கையில்;
ஓர் அம்பே முப்புரம்-உந்தீ பற!
ஒன்றும் பெருமிகை-உந்தீ பற!

தச்சு விடுத்தலும்,தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்தது என்று-உந்தீ பற!
அழிந்தன முப்புரம்-உந்தீ பற!

உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே-உந்தீ பற!
இளமுலை பங்கன் என்று உந்தீ பற!

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி-உந்தீ பற!
உருத்திர நாதனுக்கு-உந்தீ பற!

ஆஆ திருமால்,அவிப்பாகம் கொண்டன்று,
சாவாது இருந்தான் என்று-உந்தீ பற!
சதுர்முகன் தாதை என்று-உந்தீ பற!

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று-உந்தீ பற!
கலங்கிற்று வேள்வி என்று-உந்தீ பற!
பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே? ஏடி-உந்தீ பற!
பணை முலை பாகனுக்கு-உந்தீ பற!

புரந்தனார் ஒரு பூம் குயில் ஆகி,
மரம் தனில் ஏறினார்-உந்தீ பற!
வானவர் கோன் என்றே-உந்தீ பற!

வெம் சிவ வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சினவா பாடி-உந்தீ பற!
தொடர்ந்த பிறப்பு அற-உந்தீ பற!

ஆட்டின் தலையை விதிக்குத் தலை ஆகக்
கூட்டியவா பாடி-உந்தீ பற!
கொங்கை குலுங்க நின்று-உந்தீ பற!

உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே,
கண்ணைப் பறித்தவாறு-உந்தீ பற!
கருக் கெட,நாம் எலாம்-உந்தீ பற!

நாமகள் நாசி; சிரம் பிரமன்,படச்
சோமன் முகம் நெரித்து-உந்தீ பற!
தொல்லை வினை கெட-உந்தீ பற!

நான்மறை யோனும்,அகத்திய மான்படப்
போம் வழிதேடுமாறு-உந்தீ பற!
புரந்தரன் வேள்வியில்-உந்தீ பற!

சூரியனார் தொண்டை வாயினில் பற்களை
வாரி,நெரித்த ஆறு-உந்தீ பற!
மயங்கிற்று வேள்வி என்று-உந்தீ பற!

தக்கனார்,அன்றே தலை இழந்தார்;தக்கன்
மக்களைச் சூழ நின்று-உந்தீ பற!
மடிந்தது வேள்வி என்று-உந்தீ பற!

பாலகனார்க்கு அன்று,பால் கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே-உந்தீ பற!
குமரன் தன் தாதைக்கே-உந்தீ பற!

நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று-உந்தீ பற!
உகிரால் அரிந்தது என்று-உந்தீ பற!

தேரை நிறுத்தி,மலை எடுத்தான் சிரம்
ஈர் ஐந்தும் இற்ற ஆறு-உந்தீ பற!
இருபதும் இற்றது என்று-உந்தீ பற!

ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று-உந்தீ பற!
அதற்கு அப்பாலும் காவல் என்று-உந்தீ பற!

இராமேஸ்வரம் மீனவர்களின் நலனுக்காகவும்,தமிழ் இனத்தின் நலனுக்காகவும் இந்த பதிகத்தை தினமும் வீட்டுப் பூஜையறையில் வாசிக்க நலம் உண்டாகும் நம் இனத்துக்கு!!!

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

கடன்கள் நீங்கி செல்வம் பெருக வசிஷ்ட மகரிஷியால் கூறப்பட்ட தாரித்ரிய தஹந சிவ ஸ்தோத்திரம்விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய


கவுரீப்ரியாய ரஜநீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காத ராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரிய துஹ கதஹநாய நமஹ சிவாய

பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாமஸீந்ருத்யகாய
தாரித்ரிய் துஹ் கதஹநாய நமஹ சிவாய

சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலேஷணாய மணிகுண்டலமண்டி தாய
ம்ஞ்ஜீரபாதயுகளாய ஜடாதராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

பஞ்சாநநாய பாணிராஜவிபூஷணாய
ஹோமாம்சுகாய புவனத்ரய மண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோமயாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

பானுப்ரியாய பவஸாக ரதாரணாய
காலாந்தகாய கமலாஸநபஜிதாய
நேத்ரத்ரயாய சுபலஷண லக்ஷிதாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

ராமப்ரியாய ரகுநாதவரதப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவதாரணாய
புண்யேஷீ புண்ய பரிதாய ஸீரார்சிதாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

முக்தேச்வராய பலதாய கணேச்வராய
கீதப்ரியாய வருஷபேச்வரவாஹநாய
மாதங்க சர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

வசிஷ்டேநக்ருதம் ஸ்தோத்ரம் ஸர்வ ரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ரபவுத்ராதி வர்த்தனம்
த்ரிஸந்த்யம் யஹ படேந்நித்யம் ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்

இதி ஸ்ரீ  வஸிஷ்டவிரசிதம்
தாரித்ரிய தஹநசிவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

இம்மந்திரத்தை நமக்கு அனுப்பிய ஆன்மீககடல் வாசகர் கோவை  அவர்களுக்கு பரிபூரண நன்றிகள்!!!

தினசரி ஆன்மீகக் கடமைகள்

நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ,வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ,அங்கெல்லாம் செல்வம் குவியும்.எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ,எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும்,இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.எந்த வீட்டில் நிர்வாணமாக குளிக்காமலும்,நிர்வாணமாக தூங்காமலும் இருக்கிறார்களோ,கணவனின் காமத் தேவைகளை மனைவியும்,மனைவியின் காமத் தேவைகளை கணவனும் மறுக்காமலும்,வெறுக்காமலும் நிறைவேற்றுகிறார்களோ அங்கே செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.ஒரு வீட்டில் ருத்ராட்சம் இருந்தாலே அங்கே பேய் பிசாசு,பில்லி சூனியம் வேலை செய்யாது;யார் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று அம்மனின் அருட் பிரசாதமான எலுமிச்சை பழம் அல்லது மஞ்சள் காப்பு அல்லது குங்குமம் அல்லது இவை அனைத்தும் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் நிரம்புமோ அங்கே நிம்மதியும்,செல்வச் செழிப்பும் நிரம்பிக் கொண்டே இருக்கும்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் தொழில்நுட்ப யுத்தம்
உங்களின் செல் எண்ணுக்கு ஒரு அழைப்பு வரும்.அதில் உங்களது செல் எண்ணை செக் செய்கிறோம்.ஒரு முறை #09 என்றோ அல்லது #90 என்றோ டைப் செய்யச் சொல்லும் அந்தக் குரல்.

அதன் படி செய்தீர்களெனில்,உங்கள் செல் எண் தொழில் நுட்ப ரீதியாக திருடப்படும்.ஆம்! இந்த தொழில் நுட்பத் திருட்டு நோக்கியா மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சி.என்.என். தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

பலரது கவனத்துக்கு இந்த செய்தி குறுந்தகவலாக வந்திருக்கும்.இருந்தபோதிலும்,ஆன்மீகக் கடல் வாசகர்களுக்காக இந்த செய்தி வெளியிடப்படுகிறது

ஊழலுக்கு எதிரான அறப்போருக்கு ஆதரவு தாருங்கள்;இந்தியா வல்லரசாகுதோ இல்லியோ,இந்தியர்களின் வறுமை நீங்க வேண்டும்.
பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் ஒரே நல்லரசு மற்றும் வல்லரசு இந்தியாவாகிய நமது நாட்டில் ஊழல் செல்போன் அலைகளைப் போல எங்கும் பரவியிருப்பதை எதிர்த்துப் போராட,நமது தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் அரசியல் ஆயுதமான உண்ணாவிரதப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

நாடு முழுக்க ஆதரவு குவிவதைக் கண்டு ஊழல் காங்கிரஸ் அரசு நடுங்கிப் போய்விட்டது.

நேற்றோடு அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துவிட்டார்.இருந்த போதிலும் நாமும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமா?

02261550789 என்ற எண்ணுக்கு நமது செல்லிலிருந்து ஒரு நழுவிய அழைப்பு கொடுப்போம்;(இதற்குக் கட்டணம் கிடையாது)இந்த ஒரே ஒரு நழுவிய அழைப்பின் மூலமாக நமது ஊழலுக்கு எதிரான ஆதரவு பதிவாகிவிடும்.இப்படி பதிவாகியதும்,நமது செல்லுக்கு ஒரு குறுந்தகவல் வரும்.


இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட அரிசி மற்றும் காய்கறிகள்!!!


ரசாயன உரங்களால் வளர்க்கப்பட்ட அரிசி,காய்கறிகளை நாம் சாப்பிட்டு வருவதால்,தாய்ப்பால் கூட கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாகி வருவதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வு நம் இந்தியாவில் நிரூபித்தது.

இந்த நிலையை மாற்றிட முழுக்க முழுக்க இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடப்பட்டு அரிசி,காய்கறிகள் விளைவிக்கப்பட்டு நமது தமிழ்நாட்டிலும் விற்பனை செய்துவருகின்றனர்.

கிலோ ரூ.35/-,ரூ.45/-க்கு சாதாரண அரிசியும்,ரூ.45/-ரூ.55/-க்கு பொன்னி அரிசியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசியை நாம் தினமும் சோறாக்கி உண்பதால் சர்க்கரை நோய்,மூட்டு வலி முதலான நோய்களின் வேதனை குறைகின்றன.சில காலங்கள் தொடர்ந்து சாப்பிடும்போது நமது மருந்துச்செலவும் குறைகிறது.

படிக்கும் குழந்தைகள் இந்த வகையான உணவுகளைச் சாப்பிட்டு வரும்போது நினைவுத்திறன் அதிகரிக்கிறது;ஞாபக மறதி குறைகிறது என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

பித்ருக்களின் உலகமும்,நமது கடமையும்


பிதுர்கள் உலகமும் நமது கடமையும்
உலகம் படைக்கப்பட்டதோ,அன்றே பித்ருக்களின் உலகத்தில் பசுக்கள்,ருத்திரர்கல்,ஆதித்யர்கள் என்ற 31 பித்ரு தேவதைகளும் சிருஷ்டிக்கப்பட்டனர்.மகத்தான சக்தி பெற்ற இந்த தேவதைகள் பித்ருக்களின் உலகில் எழுந்தருளியுள்ளனர்.

நாம் மறைந்த முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம்,திதி,சிரார்த்தம் ஆகியவற்றின் தெய்வீக சக்தியை அன்னமாக(உணவாக)மாற்றி மறைந்த நமது முன்னோர்களுக்கு இந்த தேவதைகள் அளிக்கின்றனர்.இவற்றைப் பித்ரு தேவதைகளின் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் நமது மூதாதையர்கள் மிகவும் மகிழ்ச்சியையும்,திருப்தியையும் அடைந்து நம்மை ஆசிர்வாதிக்கின்றனர்.
இவ்வாறு நமது பித்ருக்கள் நமக்கு அளிக்கும் ஆசிர்வாதம் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன்கலையும்,ஒரு லட்சம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்த பலன்களையும்,நூறு ஏழை கன்னியர்களுக்கு விவாகம் செய்து கொடுத்த (கன்னிகாதானம் செய்வித்த)புண்ணியத்தையும்,கங்கை நதியில் நீராடும் புண்ணியப்பலன்களையும்,அனாதையாக இறந்தவர்களுக்குச் செய்யும் அந்திமக்கிரியைகளினால் ஏற்படும் புண்ணியப்பலனையும் அளிக்கிறது.
ஆதலால்,மிக எளிய,ஆனால் அளவற்ற புண்ணிய பலன்களை நமக்கு உடனுக்குடன் அளிக்கக் கூடிய பித்ரு பூஜையை நாம் விட்டுவிட்டால் மேற்கூறிய அரிய நற்பலன்களை நாம் இழக்க வேண்டியிருக்கும்.எனவே,திலா ஹோமம் செய்ய வேண்டியவர்கள்(உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,3,5,9 ஆம் இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால்) உடனடியாகச் செய்யவும்.
நன்றி:குமுதம் ஜோதிடம் 28.3.2003,பக்கம்12.
நடைமுறை அனுபவத்தில்,பித்ரு பூஜை,சிரார்த்தம்,திதி தொடர்ந்து செய்துவருவதால் நமக்கு திடீரென ஏற்பட இருக்கும் அவமானங்கள்,விபத்துக்கள்,ஏமாற்றங்கள் நம்மை அண்டாமல் சூட்சுமமாக நமது பித்ருக்கள் காப்பாற்றிவிடுகின்றனர்

ஸ்பருலினாவின் நிரூபிக்கப் பட்ட மருத்துவகுணங்கள்41 வயதாகும் அவருக்கு குடிப்பழக்கம் மூச்சுவிடும் அளவுக்கு வந்துவிட்டது.24 மணி நேரமும் எதையாவது ஆல்கஹாலை அருந்தாவிட்டால்,கைகால்கள் நடுங்கத்துவங்கும்.மறுவாழ்வு மையத்துக்குச் சென்றும் கூட ஓரளவுக்கு மேல் சரி செய்ய முடியாத நிலை.இந்நிலையில் சும்மா ஒரு பரிசோதனைக்கு ஸ்பருலினா மாத்திரையை காலை 3 மாலை 3 என சாப்பிட வைத்துள்ளனர் அவரது மனைவியும் மகளும்!ஒரு மாதம் ஆனப்பின்னர் மதுவின் போதையிலிருந்து மீண்டுவிட்டார்.அவர்களின் ஆனந்தக் கண்ணீருக்கு அளவே இல்லை.

27 வயதுப் பெண்மணி அவர்.பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்ததால்,முதுகுவலி வந்துவிட்டது.ஓராண்டாகியும் முதுகுவலி தீரவில்லை(அடிக்கடி பேருந்தில் நீண்டதூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும்,டூவீலரில் பயணித்தவாறே வாழ்பவர்களுக்கும் இதே நிலையே!)ஒரு நாளுக்கு 4 கிராம் வீதம் 45 நாட்களுக்கு (காலை 2,மதியம் 2,இரவு 2) என ஸ்பைருலினா கடல் பாசி மாத்திரை சாப்பிட்டு வர இன்று முதுவலியைக் காணவில்லை.

5 வருடங்களாக இருந்துவந்த மலச்சிக்கல் பலருக்கு தினமும் ஸ்பைருலினா மாத்திரை ஒரே ஒரு மாதம் சாப்பிட்டதில் தீர்ந்துவிட்டது.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.சர்க்கரை நோயால் கைகால்களில் மதமதப்பு வந்துவிட்டது.சுமார் இரண்டாண்டுகளாக எப்போதும் கைகளும் கால்களும் அரித்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? ஸ்பைருலினா சாப்பிட்டு வந்த ஒரு மாதம்கழிந்து இந்த மதமதப்பு தீர்ந்தது.


தினமும் ஆறு மாத்திரைகள் சாப்பிட்டுவர,உங்களது நோய்கள் குணமாகும்.

ஸ்பைருலினா ஒரு கடல் பாசியாகும்.

மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து


சோலைமலை முருகன் கோயிலில் 35 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.


  13 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. எனது தந்தை திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா' என்று கேட்டபோது, திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்து
அளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .

ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கல்யாணத்தன்று, 30,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது. கடந்தா இரண்டாண்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு , காவல்துறை தடைவிதித்தனர்.இந்த ஆண்டு திருக்கல்யாணம் 15-04-2011 அன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.  இந்த விருந்தில், பூந்தி, மூன்று வகை காய்கறிகள், அப்பளம், வடை, பாயாசம், சாம்பார், ரசம், மோர், வாழைப்பழம் இடம்பெறுகிறது.


14-04-2011 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது ,மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும். விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.


 திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்யஅழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.


"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை"
C/o சாமுண்டி விவேகானந்தன்
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001

நடுத்தரக்குடும்பத் தேவையை நிறைவேற்றும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாயநமஹ


தினந்தோறும் உயரும் விலைவாசியால் இந்தியாவின் 121 கோடி பேர்களில் 120.5 கோடி இந்தியர்கள் படும் கஷ்டத்தை ஒரு பக்கத்தில் விவரிக்க முடியாது;மன்மோகன் துவங்கி,நமது முதல்வர் வரையிலும் தேசபக்தியும் கருணையும் கொண்டவர்கள் நமது நாட்டில் நமது தலைவர்களாக இருக்கிறார்களா?

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாயநமஹ  மட்டுமே துணையிருக்கிறது!!!

மாதக்கடைசி நாட்களான 25 ஆம் தேதி முதல் 30,31 ஆம் தேதி வரையிலும் சமாளிக்கும் குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தை ஒரு ஆண்டு வரையிலாவது இந்தியாவின் பெண் அரசியல் வாதிகளுக்கு உணர்த்திட வேண்டும்.சரி அது போகட்டும்.எதற்கு வீண் கற்பனை?

ஒரு குடும்பத்தில் ஒரு மகனும்,மகளும் பெற்றோரும்!

குடும்பத்தலைவரும்,குடும்பத்தலைவியும் தினமும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாயநமஹ ஜபித்து வருகின்றனர்.ஜபிக்கத் துவங்கும் முன்பாக இருந்த குடும்ப சூழ்நிலை இப்போது மெதுவாக மாறிவருகிறது.

ஒரு நாள் இந்த குடும்பத் தலைவர்,ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்கத் துவங்குகையில் தனக்கு இன்று ரூ.500/- கிடைக்க வேண்டும் என்ற சிற்ற்ற்ற்று கோரிக்கையோடு ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ  ஜபிக்கத் துவங்கினார்.ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்துவிட்டு, அலுவலகம் புறப்பட்டுவிட்டார்.

நீண்ட நாட்களாக அவருக்கு வர வேண்டிய அலுவலகத் தொகை( பயணப்படி) ரூ.512/- அந்த நாளில்,அலுவலகத்திற்குள் நுழைந்ததும் ஒப்படைக்கப்பட்டது.அசந்தே போனார். நம்மிடம் இந்த சாதனையைப் பகிர்ந்து கொண்டார்.

மாதக் கடைசி நாட்களில் இந்த ரூ.512/- எப்படியெல்லாம் கைகொடுத்தது? என்பதையும் என்னிடம் விவரிக்க எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.


புத்திர பாக்ய வேள்வி அழைப்பிதழ்குழந்தைச் செல்வம் வேண்டும் தம்பதியர்கள் இந்த புத்திர பாக்ய வேள்வியில் கலந்துகொள்ளலாம்.1.5.11 ஞாயிறு மற்றும் 2.5.11 திங்கள் என இரு நாட்களில் கொழுக்கட்டைச் சாமியாரின் பதினெண் சித்தர்கள் தர்ம சேவாசிரமத்தில்,வைத்து நடைபெற இருக்கிறது.

முகவரி:கொழுக்கட்டை சாமியார் ஆசிரமம்,சதுரகிரி அடிவாரம்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம்,வத்திராயிருப்பு சாலை,மகாராஜாபுரம்,வத்திராயிருப்பு.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.திருப்பதி கோவிலில் சேவை செய்யும் ஊழியராக இருக்க விருப்பமா?
உங்கள் வயது 20 முதல் 60 வரை இருக்க வேண்டும்;உங்கள் ஊரிலிருந்து திருப்பதிக்கு உங்கள் சொந்தச் செலவில் போய் வர ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.குறைந்தது ஒரு வாரம் தங்கிட வேண்டும்.ஒரு நாளுக்கு 4 மணி நேரம் வரை திருப்பதி கோவிலுக்குள் அல்லது கோவில் பகுதியில் கோவில் நிர்வாகம் ஸ்ரீவாரி சேவை செய்ய பொறுப்பு தரும்.

குறைந்தது 10 பேர்கள் கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.அதிகபட்ச எண்ணிக்கைக்கு வரம்பு ஏதுமில்லை;இந்த குழுவில் எத்தனை ஆண்களும்,எத்தனை பெண்களும் இருக்கலாம்.சுயச்சார்பு அப்துல்கலாமும்;சுயநல இந்திய ஆள்பவர்களும்

3கி.பி.2006 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்,இந்தியாவுக்கு வருகை தருவதாக அறிவித்தார்.பாதுகாப்புக்காரணங்களுக்காக ஜனாதிபதி மாளிகையின் வரவேற்பறை,வராந்தா பகுதி,தரைக் கம்பளங்களை மாற்ற வேண்டும் என்றனர் அமெரிக்க அதிகாரிகள்.அதோடு, ‘குடியரசுத் தலைவர் மாளிகையை புஷ்ஷின் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.இந்தியப் பாதுகாப்பை நாங்கள் நம்ப மாட்டோம்’ என்றும் அமெரிக்கத் திமிர்த்தனத்தைக் காட்டினர்.

ஆனால்,நமது தேசத்தை நேசிக்கும் நமது நிரந்தர ஜனாதிபதி அப்துல் கலாம் மிகுந்த கண்ணியத்துடனும்,தெளிவான குரலுடனும் இரண்டையும் மறுத்துவிட்டார்.

“உலகப்புகழ் பெற்ற தலைவர்கள்,ஞானிகள் பலரின் பாதம்பட்ட ‘கார்பெட்’களில்,புஷ் அவர்களின் பாதம் படுவது பெருமைக்குரிய விஷயம்.எனவே,அதை மாற்ற இயலாது”என்று இந்தியாவின் சுயமரியாதையை அமெரிக்க அதிகாரிகளுக்கு உணர்த்தினார்.


அத்துடன்,இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் புஷ்ஷை,எங்கள் பாதுகாப்புப் படையினர்,உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாப்பர்.வேண்டுமானால்,அமெரிக்க காவல் துறையிலிருந்து ஒரே ஒரு அதிகாரி மட்டும் வந்து,மாளிகையின் மேலிருந்து கண்காணிக்கலாம்.அதுவும்,கையில் துப்பாக்கி வைத்திருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என அப்துல் கலாம் அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.