RightClick

ஸ்பைருலினாவின் மருத்துவ குணங்கள்
கி.பி.1965 ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமலியா மக்களைப் போல மெலிந்து போயினர்.இருந்தபோதிலும்,சார்டு என்ற என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள்(மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும்,அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்க வில்லை;வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்திருந்தனர்.இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவர்களின் ஆய்வுமுடிவுப்படி,சார்டு பகுதி மக்கள் குடித்த தண்ணீரில் பெருமளவு கடல்பாசி எனப்படும் ஸ்பைருலினா கலந்திருந்தது தெரிய வந்தது.அப்போது துவங்கிய ஆராய்ச்சிகள் இன்று நாம் அனைவரும் தினசரி சாப்பிட்டால்,நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக ஐ.நா.சபை அங்கீகரிக்குமளவுக்கு உயர்ந்திருக்கிறது.

முனைவர் எம்.பாபு ,1995 ஆம் ஆண்டில் சத்துக்களும் புற்றுநோயும் தொகுப்பு 24 எஸ்.2;பக்கம் 197 முதல் 202 வரை.ஆய்வு மேற்கொண்ட இடம் கேரளாமாநிலம்.ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்கள் புகையிலை மெல்லும் பழக்கம் இருக்கும் கிராமப்புறமக்கள்.இதில் ஸ்பைருலினாவை சாப்பிடுவதால் நோயெதிர்ப்புத்திறன் மேம்பாடு 45% அளவுக்குக் கிடைத்தது.

அடுத்ததாக,டாக்டர் V.அன்னபூரணா,1991,தேசிய சத்துணவு ஆய்வகம்,ஹைதாரபாத்.வெளியீடு.பயோகெம்.சத்துக்கள் தொகுப்பு 10;பக்கம் 151 முதல் 165 வரை.இந்த ஆய்வில் பள்ளிசெல்வதற்கு முந்தைய பருவகுழந்தைகள் .தாவர உணவுகள் மற்றும் கீரை இனங்களில் இருப்பதை விட கரோட்டின் சத்து ஸ்பைருலினாவில் அதிகம் இருப்பதாக அறியப்பட்டது.

சென்னையில் எ.எம்.எம்.முருகப்ப செட்டியார் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்தவர் முனைவர்.சி.வி.சேஷாத்திரி,1993.ஆய்வு 150 நாட்கள் நடத்தினார்.ஆய்வு 5000 பள்ளி சிறுவர்கள்,சிறுமிகளுக்கு நாளென்றுக்கு ஒரு ஸ்பைருலினா மாத்திரை வீதம் 150 நாட்கள் தரப்பட்டன.வைட்டமின் ஏ சத்து அபரிதமாக ஸ்பைருலினா மூலமாக அந்த பள்ளிச்சிறார்களுக்குக் கிடைத்தது.ஏற்பாடு இந்திய அரசு.

ஸ்பைருலினாவில் இருக்கு சத்துக்கள்:

வேறெந்த உணவுப்பொருளையும் விட 60 முதல் 70 சதவீதம் புரதம் ஸ்பைருலினாவில் இருக்கிறது.இந்த புரதம் 90 சதவீதம் ஜீரணத்திறன் கூடியது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து மனித உடலை பாதுகாக்கிறது.

பீட்டா கரோட்டின்: அனைத்துவிதமான புற்று நோய் அபாயத்தினைக் குறைக்கிறது.பார்வை கூர்மையை அதிகரிப்பதுடன் உடல் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.செயற்கையான பீட்டா கரோட்டினைப்போல இராமல்,ஸ்பைருலினாவில் இயற்கையான பீட்டா கரோட்டின் இருக்கிறது.

காமாலினோலெனிக் அமிலம்:ஸ்பைருலினாவைத் தவிர தாய்ப்பாலில் மட்டுமே இந்த அமிலம் இருக்கிறது.இந்த அமிலமானது கொழுப்புத்தேக்கம்,உடல்பருமன்,மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.மேலும் மாதவிடாய்க்கு முன் தோன்றும் பிரச்னைகளின் கடுமையைக் குறைக்க உதவுகிறது.

வைட்டமின்கள்:வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.அதுவும் முழுமையாகவும் சமச்சீராகவும் நமது உடலுக்கு அதிக சக்தியளிப்பதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.ஊட்டச்சத்துகுறைந்த குழந்தைகளுக்கு உகந்தது.வைட்டமின் பி12 உள்ள ஒரே சைவ மூலப்பொருள்.

தாதுச்சத்துக்கள்:தாதுச்சத்துக்களின்றி வைட்டமின்களின் முழுப்பயனைப் பெற இயலாது.இரும்பு,துத்தநாகம்,கால்சியம்,மக்னீசியம்,செலினியம் உட்பட அனைத்து தாதுச்சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது ஸ்பைருலினா.இதில் இருக்கும் இரும்புச்சத்து எளிதில் ஜீரணிக்கப்படுவதுடன் ஒவ்வாமை போன்ற எந்த பக்கவிளைவுமற்றது.இரத்த சோகையை அடியோடு நீக்கும்.கர்ப்பிணிப்பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவு ஸ்பைருலினா எனப்படும் நீலக்கடல் பாசி.

பாலிசாக்ரைடுகள்:ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.எனவே,சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

உடலை தூய்மைப்படுத்தவும்,விஷத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும் காரணமான குளோரோபில் இதில் அதிகமாகக் காணப்படுகிறது.

என்சைம்கள்:ஸ்பைருலினாவில் இருக்கும் சூப்பர் ஆக்ஸைடு டிஸ்முடேஸ் என்ற என்சைம் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து,இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கிறது.

பாலி அமைன்கள்:செல் ஜவ்வை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.பலவீனமான, அமிலத்தன்மை கொண்ட உடலை ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிற சிறந்த ஆல்கலின் உணவு.

80% ஆல்கலினும் 20% அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு.

80% ஆல்கலின் உணவு:பழங்கள்,காய்கறிகள்,பாசிகள் போன்றவை.

20% அமில உணவு:இறைச்சி, கடல் உணவுகள்,கோதுமை போன்றவை.

ஒரு கிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.