RightClick

சீனாவும் ஜிமெயிலும்

பீய்ஜிங்: உலகில் அதிகளவில் இணையதள சேவையினை பயன்படுத்தும் நாடான சீனா, கூகுள் தேடுதல் வலைதளத்தில் உள்ள ஜிமெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக பகிரங்கபுகார் தெரிவித்துள்ளது. சீனாவில் தான் கூகுள் தேடுதல் வலைதளத்தினை 470 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் ஜிமெயில் சேவையினை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டுனீசியா, எகிப்து, போன்று நாடுகளில் சமூக வலைதளங்களினால் தான் ஆட்சி மாற்றம் பொதுமக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சீனாவில் தற்போது மல்லிகை புரட்சி வெடித்துள்ளது. இதற்கு காரணம் கூகுளின் ஜிமெயில் சேவை என கூறப்படுகிறது. ஏற்கன‌வே சீனா தனது ‌சொந்த ‌மொழியில் உள்ள இணையதளங்களை முடக்கி வைத்துள்ளது. அதே போன்று உலகபுகழ்பெற்ற கூகுள் இணையதளத்தின் ஜி -மெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி வி.பி.‌என். எனப்படும் தனிநபர் இணைப்புகளையும் துண்டித்துள்ளது சீனா. இதனால் சீனாவில் ஜிமெயில் வாயிலாக வர்த்தக பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிரகப்பார்வைகளின் தோஷத்தைப் போக்கும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
24.3.2011 வியாழன் முதல் 45 நாட்களுக்கு ஜோதிடப்படி,செவ்வாயும் சனியும் நேர் எதிர் ராசிகளில் நிற்கப்போகின்றன.இதன் விளைவாக,மிதுனம்,கன்னி,கும்பம்,சிம்மம் ராசியினர் அதிகமாகப் பாதிப்படப்போகின்றனர்.தவிர,மீதி ஏழு ராசியினரும் ஏதாவது ஒருவிதத்தில் மன நிம்மதியிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்;அல்லது எதிர்பாராத விபத்து,கோபத்தில் தற்கொலை அல்லது கொலை செய்வதற்கான தூண்டலாக இருப்பதற்குக் காரணமாக இருக்கவுள்ளனர்.

எனவே,இந்த காலகட்டத்தில் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ  ஜபிக்கும் கால அளவை அதிகரிப்பது நல்லது.இதன் மூலமாக யுத்த கிரகங்களின் போக்கினால் நமக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துக்கள்,விபத்துக்கள்,மன மற்றும் உடல் ரீதியான உபாதைகளின் தாக்கத்தை 80 சதவீதம் வரையிலும் குறைக்கலாம்.

கொடூரம் நிறைந்த இந்த கலிகாலத்தில் நமது சொத்து எதுவெனில்,கடன் இல்லாமலும்,நோய் இல்லாமலும்,எதிரி மற்றும் கர்ம நோய்கள் இல்லாமலும் நிம்மதியாக வாழ்வதே! அப்படி வாழ நமக்கு வழிகாட்டியாகவும்,உறுதுணையாகவும் இருப்பது தினசரி ஒரு மணி நேர ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ  மந்திர ஜபம் மட்டுமே!!!

அனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்டுநிறுவனம்


சென்னையில் ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை கி.பி.2004 ஆம் ஆண்டில் நிறுவி,அனாதையாக இறப்பவர்களின் உடலை உரிய மரியாதையோடு ஈமச்சடங்கு செய்து வைக்கின்றனர்.இப்படிச் செய்வதும் புண்ணிய காரியங்களில் தலைசிறந்தது ஆகும்.

இவ்விதம் புறக்கணிக்கப்பட்ட சடலங்களுக்கு அந்திமக்கிரியைகளைச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு என்பதை தர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

இப்படிச் செய்வது பத்து அஸ்வமேத யாகப்பலன்களுக்கான பலன்களை இது அளிக்கும் என நமது முன்னோர்களாகிய ரிஷிகள் அருளியுள்ளனர்.

“அனாத பிரேத சம்ஸ்காராத் தச அஸ்வமேத பலம் லபேத்”

இதற்காக காஞ்சி ஸ்ரீபூஜ்யஸ்ரீ மகாப்பெரியவரின் அருள் கட்டளையினால் ஆரம்பிக்கப்பட்டு,தமிழக அரசு காவல்துறையினரின் அனுமதியோடும்,ஒத்துழைப்போடும் செயல்பட்டுவருகிறது.

இப்படி அனாதைச்சடலங்களுக்கு அந்திமச்சடங்குகள் செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆத்மா உரிய புண்ணிய உலகத்தை அடையும்.இப்படி அனாதையாக இறப்பவர்களில் சிறு குழந்தைகள்,சிசுக்கள்,நடுத்தர வயதினர்,வயோதிகர்கள் என எல்லா வயதினரும் அடங்குவர்.

ஒவ்வொரு அந்திமக்கிரியைக்கும் கி.பி.2007 ஆம் ஆண்டில் ரூ.750/- செலவாகிறது.இந்தப் புண்ணியக்காரியத்துக்கு,அன்பளிப்பு வழங்கிட விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரி,செல் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

திரு.எம்.வி.ரமணி,மானேஜிங் டிரஸ்ட்,

செல்:98410 12779,98410 115322

திரு.ஆர்.சுப்பிரமணியன்,சேர்மன்,ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட்,பழைய எண்:41,புது எண்:42,சுப்பிரமணியன் தெரு,மேற்கு மாம்பலம்,சென்னை-33.

செல்:98409 22614.

யுத்தகிரகங்களின் நேரடிப்பார்வையும்,உலகளவில் பதட்டமும்
ஜோதிட அறிவியலின் படி,கன்னி ராசியில் சனிபகவான் 26.6.2008 முதல் 2011 இறுதி வரையிலும் சஞ்சாரித்துவருகிறார்.எதிர்வரும் 24.3.2011 விடிகாலை முதல் 45 நாட்களுக்கு மீனராசியில் செவ்வாய் பகவான் சஞ்சாரிக்கப்போகிறார்.இதில் செவ்வாய் நெருப்பு மற்றும் யுத்தக் கிரகம் ஆகும்;சனி காற்றுக்கிரகம் ஆகும்.சனியின் முழுப்பார்வை மிதுனராசியைப் பார்க்கிறது;செவ்வாயின் நான்காம் பார்வையும் 24.3.11 வியாழன் முதல் மிதுன ராசியைப் பார்க்கப்போகிறது.இதன் விளைவாக,மிதுன ராசியில் பிறந்தவர்கள்,மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத விபத்து,சண்டை,வாக்குவாதம்,அனாவசியமான ஆவேசம் அதனால் ஆத்திரமான செயல்பாடுகள்,தற்கொலை முதலானவைகளில் ஈடுபடுவர்.மிதுன ராசியில் சுமார் ஓராண்டாக KETHU பகவான் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.மிதுன ராசிக்கும் ,உலக தீவிரவாத நாடு அமெரிக்காவின் தாயகம் இங்கிலாந்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனவே,24.3.2011 முதல் 45 நாட்களுக்கு இங்கிலாந்தும் ஏதாவது ஒரு அழிவைச் சந்திக்கும்.இது தவிர,12 ராசிக்காரர்களும் ஏதாவது ஒருவிதத்தில் இந்த 45 நாட்களுக்குப் பாதிக்கப்படப்போவது உறுதி.

ஆழ்ந்த தெய்வபக்தியும்,தினசரி ஏதாவது ஒரு மந்திர ஜபமும் செய்பவர்களையும்,ஸ்ரீஇராகவேந்திரர்,சித்தர்களில் யாராவது ஒருவர்,குலதெய்வ வழிபாடு தினமும் செய்பவர்,தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லுவோரை இந்த சனி செவ்வாய்ப் பார்வை பெருமளவு பாதிக்காது.இது அனுபவ உண்மை!!!

நாத்திக சிந்தனையுடன் இருந்த இயக்குநர் பாலாவிற்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவம்!!!


கேள்வி:ஆன்மீகத்தால் பல நல்ல விஷயங்கள் நடக்கும்போது உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு?

தமிழ் திரைப்பட இயக்குநர் பாலா:ஆன்மீகத்தை நான் வெறுக்கல.நல்ல விஷயங்கள் நடக்குறதா சொல்றீங்க சரி.என்ன வேணாலும் சேவை பண்ணுங்க.எதுக்காக பட்டையை அடிச்சுகிட்டு அங்கியை மாட்டிகிட்டு சேவை பண்றீங்க.மனிதனா சேவை பண்ணாமல் மதத்தின் போர்வையில் சேவை செய்யறது உண்மையான சேவையா எனக்குத் தெரியல.

அதே சமயம் சமீப காலமா ஆன்மீகத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.அதுக்குக் காரணம் ரெண்டு சம்பவம்.ஒரு கோயில்ல ஷீட்டிங் எடுத்தப்போ கோயில் சுவத்துல எண்ணெயில் ஏதேதோ எழுதியிருந்தது.அதுல ஒரு இடத்துல, ‘சாமி! எங்க அக்காவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்’னு ஒரு சின்னப்பையன் எழுதியிருந்தான்.இதுக்கு மேல ஒரு அடி எனக்கு வேணுமா?

இன்னொரு சம்பவம்.நான் தேனியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்துல ஒரு கோயில்ல ஐம்பதுபேர் சேர்ந்து, ‘என் தாலியை காப்பாய் சிவசக்தி. . .’ன்னு உருகிப் பாடிக்கிட்டிருந்தாங்க.அந்த ஐம்பது பேரும் என்னை முச்சந்தியில் நிறுத்தி வெச்சு செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சு.அவங்க நம்பிக்கையைத் தவறுன்னு நான் எப்படி சொல்ல முடியும்.தப்புன்னு சொல்ல நான் யாரு.இனி நாத்திகக் கருத்துக்களை நான் பேசவே மாட்டேன்.
நன்றி:குமுதம் பக்கம் 54,16.3.11

திருமூலரின் திருமந்திரப்பாடல்கள் 100 மட்டும் விளக்கவுரையுடன் இலவச வெளியீடுசென்னையைச் சேர்ந்த திரு.கு.அறிவுநிதி என்பவர் திருமூலரின் திரு மந்திரத்தில் அரியக் கருத்துக்களைக் கொண்ட 100 பாடல்களுக்கு மதிப்புரை எழுதி அன்பே சிவம் என்ற 64 பக்க புத்தகம் வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்தில் திருமந்திர விளக்கவுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கிறது.தமிழ் வேதம் எனப்படும் திருமந்திரம் தமிழ் நெஞ்சங்களிடையே பரவும் நோக்குடன் இதை இலவசமாக வெளியிட்டுள்ளார்.விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
திரு.கு.அறிவுநிதி,
H/4/2 ஹபீப் காம்ப்ளக்ஸ்
என்:2-3,டாக்டர் துர்காபாய் தேஷ்முக் சாலை,
ராஜாஅண்ணாமலைபுரம்,சென்னை-28.

நன்றி:குமுதம் ஜோதிடம்,பக்கம் 27;18.3.11;

ஸ்பைருலினாவின் மருத்துவ குணங்கள்
கி.பி.1965 ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமலியா மக்களைப் போல மெலிந்து போயினர்.இருந்தபோதிலும்,சார்டு என்ற என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள்(மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும்,அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்க வில்லை;வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்திருந்தனர்.இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவர்களின் ஆய்வுமுடிவுப்படி,சார்டு பகுதி மக்கள் குடித்த தண்ணீரில் பெருமளவு கடல்பாசி எனப்படும் ஸ்பைருலினா கலந்திருந்தது தெரிய வந்தது.அப்போது துவங்கிய ஆராய்ச்சிகள் இன்று நாம் அனைவரும் தினசரி சாப்பிட்டால்,நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக ஐ.நா.சபை அங்கீகரிக்குமளவுக்கு உயர்ந்திருக்கிறது.

முனைவர் எம்.பாபு ,1995 ஆம் ஆண்டில் சத்துக்களும் புற்றுநோயும் தொகுப்பு 24 எஸ்.2;பக்கம் 197 முதல் 202 வரை.ஆய்வு மேற்கொண்ட இடம் கேரளாமாநிலம்.ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்கள் புகையிலை மெல்லும் பழக்கம் இருக்கும் கிராமப்புறமக்கள்.இதில் ஸ்பைருலினாவை சாப்பிடுவதால் நோயெதிர்ப்புத்திறன் மேம்பாடு 45% அளவுக்குக் கிடைத்தது.

அடுத்ததாக,டாக்டர் V.அன்னபூரணா,1991,தேசிய சத்துணவு ஆய்வகம்,ஹைதாரபாத்.வெளியீடு.பயோகெம்.சத்துக்கள் தொகுப்பு 10;பக்கம் 151 முதல் 165 வரை.இந்த ஆய்வில் பள்ளிசெல்வதற்கு முந்தைய பருவகுழந்தைகள் .தாவர உணவுகள் மற்றும் கீரை இனங்களில் இருப்பதை விட கரோட்டின் சத்து ஸ்பைருலினாவில் அதிகம் இருப்பதாக அறியப்பட்டது.

சென்னையில் எ.எம்.எம்.முருகப்ப செட்டியார் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்தவர் முனைவர்.சி.வி.சேஷாத்திரி,1993.ஆய்வு 150 நாட்கள் நடத்தினார்.ஆய்வு 5000 பள்ளி சிறுவர்கள்,சிறுமிகளுக்கு நாளென்றுக்கு ஒரு ஸ்பைருலினா மாத்திரை வீதம் 150 நாட்கள் தரப்பட்டன.வைட்டமின் ஏ சத்து அபரிதமாக ஸ்பைருலினா மூலமாக அந்த பள்ளிச்சிறார்களுக்குக் கிடைத்தது.ஏற்பாடு இந்திய அரசு.

ஸ்பைருலினாவில் இருக்கு சத்துக்கள்:

வேறெந்த உணவுப்பொருளையும் விட 60 முதல் 70 சதவீதம் புரதம் ஸ்பைருலினாவில் இருக்கிறது.இந்த புரதம் 90 சதவீதம் ஜீரணத்திறன் கூடியது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து மனித உடலை பாதுகாக்கிறது.

பீட்டா கரோட்டின்: அனைத்துவிதமான புற்று நோய் அபாயத்தினைக் குறைக்கிறது.பார்வை கூர்மையை அதிகரிப்பதுடன் உடல் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.செயற்கையான பீட்டா கரோட்டினைப்போல இராமல்,ஸ்பைருலினாவில் இயற்கையான பீட்டா கரோட்டின் இருக்கிறது.

காமாலினோலெனிக் அமிலம்:ஸ்பைருலினாவைத் தவிர தாய்ப்பாலில் மட்டுமே இந்த அமிலம் இருக்கிறது.இந்த அமிலமானது கொழுப்புத்தேக்கம்,உடல்பருமன்,மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.மேலும் மாதவிடாய்க்கு முன் தோன்றும் பிரச்னைகளின் கடுமையைக் குறைக்க உதவுகிறது.

வைட்டமின்கள்:வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.அதுவும் முழுமையாகவும் சமச்சீராகவும் நமது உடலுக்கு அதிக சக்தியளிப்பதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.ஊட்டச்சத்துகுறைந்த குழந்தைகளுக்கு உகந்தது.வைட்டமின் பி12 உள்ள ஒரே சைவ மூலப்பொருள்.

தாதுச்சத்துக்கள்:தாதுச்சத்துக்களின்றி வைட்டமின்களின் முழுப்பயனைப் பெற இயலாது.இரும்பு,துத்தநாகம்,கால்சியம்,மக்னீசியம்,செலினியம் உட்பட அனைத்து தாதுச்சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது ஸ்பைருலினா.இதில் இருக்கும் இரும்புச்சத்து எளிதில் ஜீரணிக்கப்படுவதுடன் ஒவ்வாமை போன்ற எந்த பக்கவிளைவுமற்றது.இரத்த சோகையை அடியோடு நீக்கும்.கர்ப்பிணிப்பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவு ஸ்பைருலினா எனப்படும் நீலக்கடல் பாசி.

பாலிசாக்ரைடுகள்:ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.எனவே,சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

உடலை தூய்மைப்படுத்தவும்,விஷத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும் காரணமான குளோரோபில் இதில் அதிகமாகக் காணப்படுகிறது.

என்சைம்கள்:ஸ்பைருலினாவில் இருக்கும் சூப்பர் ஆக்ஸைடு டிஸ்முடேஸ் என்ற என்சைம் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து,இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கிறது.

பாலி அமைன்கள்:செல் ஜவ்வை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.பலவீனமான, அமிலத்தன்மை கொண்ட உடலை ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிற சிறந்த ஆல்கலின் உணவு.

80% ஆல்கலினும் 20% அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு.

80% ஆல்கலின் உணவு:பழங்கள்,காய்கறிகள்,பாசிகள் போன்றவை.

20% அமில உணவு:இறைச்சி, கடல் உணவுகள்,கோதுமை போன்றவை.

ஒரு கிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.கேமத்துவ தோஷம் என்றால் என்ன?

பெரும் செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்து,வாழ்க்கை என்றால் என்ன?எப்படி வாழ வேண்டும்? என்ற ஞானம் 22 வயது அல்லது 31 வயதுக்குள் ஏற்படும்.அப்படி உருவாகும் முன்பே,திடீரென சொத்துக்கள்,வசதிகள்,யோகங்கள் அனைத்தையும் இழந்துவிட்டால் அவர்களுக்கு கேமத்துவ தோஷம் இருக்கிறது என்று அர்த்தம்.

இதனால்,இவர்களின் தினசரி வாழ்க்கை ஏழ்மையில் இருக்கும்.பலருக்கு வேலை,திருமணம்,காதல்,அரசுப்பணி,நல்ல தொழில் வாய்ப்பு போன்றவை கடைசி நிமிடத்தில் கைகூடாமல் போய்விடும்.ஒரு வேளை உணவுக்காக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.சோற்றுக்காக போராடுவதே வாழ்க்கையாகப் போய்விடும்.

இவர்களின் பிறந்த ஜாதகத்தில் குருவை சனியோ,சனியை குருவோ பார்க்கும் விதமாக கிரகநிலை அமைந்திருக்கும்.சிலருக்கு குருவும் சனியும் ஒரே ராசியில் இருக்கும்.தற்போது 2008,2009,2010,2011 ஆம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட கிரக நிலை அமைந்துகொண்டே இருக்கிறது.இந்த நான்கு ஆண்டுகளிலும் சனியை குருவும் குருவை சனியும் நேர் ஏழாம் பார்வையாகப் பார்த்துவருகின்றனர்.முற்பிறவியில் தனது அழகு,கவர்ச்சியால் ஏராளமானவர்களை ஏங்க வைத்தவர்களுக்கு இப்பிறவியில் கேமத்துவ தோஷம் இருக்கும்.

ஜாக்கிரதை:இப்பிறவியில் காம வெப்சைட்டுகள்,வலைப்பூக்கள்,மின் அஞ்சல் குழுக்கள் நடத்துபவர்களுக்கு இதே நிலைதான் அடுத்த பிறவியில் ஏற்படும்.

தவிர ஷகீலா போன்றவர்களுக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என நினைக்காதீர்கள்.உங்களின் சொந்த காம அனுபங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்;நீங்கள் கேள்விப்பட்ட காம கிசுகிசுக்களையும் மறந்துவிடுங்கள்;உங்கள் தெருவில் நடைபெற்ற காம அவமானங்களை தெருவையும் கடந்து யார் யாருக்கோ இறக்கை முளைத்து பறக்கும்;உங்கள் அலுவலகத்தில் நடக்கும் முறையற்ற காம கூத்துக்களும் இதே நிலைதான்.இதுமாதிரியான சம்பவங்களில் ஈடுபடுபவர்களைவிட இவர்களைப் பற்றி தமது கற்பனையையும் கலந்து உரியவர்களை அசிங்கப்படுத்துவதில் ஒரு பரமசுகம் என நம்பும் தமிழ் மக்கள் அதிகம்.இவர்கள் அனைவருக்கும் கேமத்துவ தோஷம் ஏற்படும்.

மிகவும் கடுமையான கேமத்துவ தோஷம் ஒருவருக்கு காமத்துணையை வாழ்நாள் முழுக்கக் கிடைக்காமல்,ஏங்கியே சாக வைக்கும்.

கடுமை குறைந்த கேமத்துவ தோஷம் சில ஆண்டுகளுக்காவது கணவன் மனைவி பிரிவினையை உருவாக்கும்.

மிகக் குறைந்த கேத்துவ தோஷம்,எந்த வித காமக் குற்றங்கள் செய்யாமலேயே ஒழுக்கமற்றவர் என்ற பெயரை உருவாக்கும்.நான் கேள்விப்பட்டவரையில்,தனது மகனையும்,மகளையுமே ஒழுக்கங்கெட்டவன்/ள் என எல்லோரிடமும் தூற்றும் அம்மா,அப்பாக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

இப்படி தரங்கெட்ட அம்மா,அப்பா உருவாக பல காரணங்கள் உண்டு.அதில் ஒரு முக்கிய காரணம் டிவியில் வரும் பிரபல நெடுந்தொடர்கள் தான்.எப்படி எல்லாம் ஒருவரது பெயரைக் கெடுப்பது? என்பதை சொல்லித்தருகின்றன.

பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி

திண்டிவனம்: திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார்.10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில் பி.ஏ., முடித்து உள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்திலும், மெயின் தேர்விற்கு சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்திலும் படித்து தேர்வுகளை எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து சுஜிதாவுக்கு வாழ்த்துக்கள் குவியத் துவங்கியுள்ளன.வெற்றி குறித்து சுஜிதா கூறியதாவது:இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித் தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார்.என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன். ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆள்வினை உடைமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள

"ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்' என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும். இந்த திருக்குறளை என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன், என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காக, என்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றுவேன்.இவ்வாறு மாணவி சுஜிதா மகிழ்ச்சி பொங்க கூறினார்.
thanks:www.dinamalar.com

கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி பத்திர காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, 77 வயதான முத்தம்மாள், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு. பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மகா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெரு பத்திர காளியம்மன் கோவிலில் கொதிக்கும் நெய்யில், கையால் அப்பம் சுட்டு வழிபாடு நடத்துவது, கடந்த 48 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக மடத்துப்பட்டி முத்தம்மாள், மூன்று மாதம் விரதமிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து வந்த முத்தம்மாள், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். பதமாக வெந்த அப்பத்தையும் கையாலேயே எடுத்தார். இவ்வாறு 25 பெட்டி நிறைய அப்பம் சுட்டார். இதை பார்க்க ராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின் இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
thanks:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=199071

விமானத்தைக் கண்டுபிடித்த இந்து தால் படயே:மறுபதிவு

விமானத்தைக் கண்டுபிடித்த இந்து;திரு.தால் படயே,புனே,இந்துயா.


அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல.உலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு.

1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 10,000 அடிகள் உயரத்தில் பறந்தது.சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது)அடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை?ஆதாரம்:vedic world heritage,volume VIIஅதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.

வைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்!!!

தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் படம் சீடன்ஏமாற்றமும்,பித்தலாட்டமும் நிறைந்த இந்தக் காலத்தில் தெய்வ நம்பிக்கை ஜெயிக்கும் என்பதை மென்மையாக வெளிப்படுத்தும் விதமாக சீடன் படத்தை இயக்கிய சுப்ரமணிய சிவா மற்றும் அதன் குழுவினரை ஆன்மீகக்கடல் வலைப்பூ பாராட்டுகிறது.
இந்து தர்மத்தை கொச்சைபடுத்தும் படமாக வெளிவந்துள்ள நடுநிசி நாய்கள் படத்தை இயக்கிய கவுதம் மேனனின் சீக்கு பிடித்த சிந்தனையை ஆன்மீகக்கடல் வன்மையாகக் கண்டிக்கிறது.