RightClick

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் சக்தியை அறிய நேரில் வருக!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி ரோட்டுடன் இணைந்திருக்கும் முதலியார்பட்டித்தெருவில் நடுவில் அமைந்திருப்பது பத்திரகாளியம்மன் திருக்கோவில்.நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஓரத்தில் இருக்கும் புகைப்படம் இந்த பத்திரகாளியம்மாளின் புகைப்படமே.

ஒவ்வொரு வருடமும் வரும் சிவராத்திரியன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் (கரண்டி இல்லாமல்)வெறும் கையாலேயே அப்பம் சுட்டு எடுப்பார்.அப்படி எடுக்கப்பட்ட அப்பங்கள் பத்திரகாளியம்மாளுக்கு படைக்கப்பட்டு,அன்றிரவே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த பத்திரகாளியம்மாளின் சக்தியை,அருளாற்றலை வெளிப்படுத்தும் விதமாக இந்த அதிசய சம்பவம் சுமார் 40 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

இந்த கோவிலுக்கு தினமும் வருபவர்களின் வாழ்க்கையில் தீராத பல பிரச்னைகள் தீருகின்றன.இந்த பத்திரகாளியம்மனின் அருளாற்றலை விவரிக்க ஒருதனி வலைப்பூவே நடத்திட முடியும்.அப்படி பிரச்னை தீர்ந்தவர்களில் நானும் ஒருவன்.எனது பகுத்தறிவினால்,பலமுறை இந்த பத்திரகாளியின் சக்தியை உணர்ந்தவன்.8.8.2004 முதல் இன்றுவரையிலும் என்னை இயக்கிக் கொண்டிருப்பவள்;என்னை பாதுகாப்பவள்;எனக்கு மாபெரும் பிரச்னைகள் வந்த போதெல்லாம் எந்த வித அரசியல் செல்வாக்கும்,போலீஸ் செல்வாக்கும் பண செல்வாக்கும் இல்லாமலேயே என்னை அந்த பிரச்னைகளிலிருந்து காத்துவருபவள் இந்த பத்திரகாளியம்மன் மட்டுமே!

நீங்களும் ஒருமுறை எனது அம்மனை வந்து தரிசித்து,ஆசிர்வாதம் பெற்று,நிம்மதியாக வாழ்க!

2.3.2011 புதன் கிழமையன்று இந்த வருடம் சிவராத்திரி வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டித்தெருவிற்கு வருக!!!எனது அம்மா பத்திரகாளியன்னையின் அருளைப் பெறுக!!!தமிழர்களின் புராதனக்கலைகளில் ஒன்று அவதானம்
அவதானம் என்றால் நினைவுத்திறன் என்று பெயர்.அஷ்டாவதானி என்றால் எட்டு விதமான விஷயங்களை ஒரே நேரத்தில் கவனிப்பது என்று பெயர்.சோடேச அவதானி என்றால் ஒரே நேரத்தில் 16 விதமான விஷயங்களைக் கவனித்து பதிலை பின்னர் கூறுதல் என்று பொருள்.சதாவதானி,தசாவதானி என்றெல்லாம் நமது தாத்தாக்கள் இருந்திருக்கிறார்கள்.

தசாவதானி எனில் ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை கவனித்தல்

சதாவதானி எனில் ஒரே நேரத்தில் நூறு விஷயங்களை கவனித்தல்

சகஸ்ராவதானி எனில் ஒரே நேரத்தில் ஆயிரம் விஷயங்களைக் கவனித்தல்
உதாரணமாக,திருக்குறளின் 1330 பாடல்களை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.அதன்பிறகு, கரும்பு என்ற சொல் எத்தனாவது பாடலில் இருக்கிறது என்பதை சொல்லும் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

நொடித்துப்போனவர்களை மீண்டு வரவைக்கவும்,கொடுத்த பணம் திரும்பக் கிடைக்க வைக்கவும்,செய்யும் தொழிலில் மகத்தான வளர்ச்சியைத் தரவும் உதவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு
ஒவ்வொரு மனிதர்களின் மனதுக்குள்ளும் தைரிய உணர்ச்சியாக இருப்பவர் பைரவர்.பைரவர்களில் வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர் சொர்ண பைரவர் மட்டுமே!!!அனுபவ ரீதியாக எனது குரு  சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் ஆலோசனைப்படி தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து வழிபட்டுவரவேண்டும்.இப்படி குறைந்தது எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபட்டுவர நமது செய்தொழில் அபாரமான வளர்ச்சியை அடையும்.

எந்த தொழில் செய்து நொடித்துப்போனாலும்,ஊருக்கெல்லாம் கடன் கொடுத்து அந்தப் பணம் திரும்ப வராமல் போனதாலும்,செல்வச் செழிப்பிலிருந்து வறுமையின் புதைகுழிக்குள் வீழ்ந்தவர்களும் தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்துவந்து மாபெரும் வெற்றியடையலாம்.

அரசியலில் மகத்தான பதவிகளை அடைய விரும்புவோர்கள் இதே வழிமுறையைப் பின்பற்றி உச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் சொர்ண ஆகர்ஷணபைரவர்களின் கோவில்கள் வருமாறு:

படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் அமரர் படப்பை சித்தர் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் சொர்ணகால பைரவருக்கு தனி கோவில் இருக்கிறது.

சிதம்பரம் கனக சபையில் சொர்ண ஆகர்ஷணபைரவர் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம் அருகில் திருச்சேறையில் காலபைரவரை வழிபட,கடன் தொல்லை நீங்கும்.

திருச்சியில் மலைக்கோட்டைக்கு தெற்கே பெரிய கடைவீதியில் சொர்ணபைரவநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

திருமயம் அருகே இருக்கும் தபசுமலையில் சொர்ண ஆகர்ஷணபைரவர் கோவில் இருக்கிறது.திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு என்னும் கிராமத்தில் அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதி இருக்கிறது.மிகவும் சக்திவாய்ந்த பைரவராக இருக்கிறார்.

தேவக்கோட்டையில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தனிக்கோவில் இருக்கிறது.

விருதுநகரில் ரயில்வே நிலையம் அருகே சுடலை கோவில் அருகே சொர்ண ஆகர்ஷண பைரவர் ஒரு தனியார் கோவிலாக இருக்கிறது.

இனி,அடுத்துவரும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் பட்டியலை நாம் பார்ப்போம்:24.2.11 வியாழன் இரவு 11.22 முதல் 25.2.11 வெள்ளி இரவு 10.06 வரை

26.3.11 சனி காலை 11.35 முதல் 27.3.11 ஞாயிறு காலை 11.12 வரை

24.4.11 ஞாயிறு நள்ளிரவு 12.44 முதல் 25.4.11 திங்கள் நள்ளிரவு 1.22 வரை

24.5.11 செவ்வாய் மதியம் 2.52 முதல் 25.5.11 புதன் மாலை 4.18 வரை

23.6.11 வியாழன் காலை 5.44 முதல் 24.6.11 வெள்ளி காலை 7.38 வரை

22.7.11 வெள்ளி இரவு 9 முதல் 23.7.11 சனி இரவு 10.52வரை

21.8.11 ஞாயிறு மதியம் 12.9 முதல் 22.8.11 திங்கள் மதியம் 1.25 வரை

19.9.11 திங்கள் நள்ளிரவு 2.44 முதல் 20.9.11 செவ்வாய் நள்ளிரவு 3.05வரை

19.10.11 புதன் மாலை 4.15 முதல் 20.10.11 வியாழன் மாலை 3.39 வரை

18.11.11 வெள்ளி விடிகாலை 4.58 முதல் நள்ளிரவு 3.31 வரை

17.12.11 சனி மாலை 4.36 முதல் 18.12.11 ஞாயிறு மாலை 2.35 வரை

15.1.12 ஞாயிறு நள்ளிரவு 3.38 முதல் 16.1.12 திங்கள் நள்ளிரவு 1.19 வரை

14.2.12 செவ்வாய் மதியம் 2.08 முதல் 15.2.12 புதன் காலை 11.52 வரை

14.3.12 புதன் நள்ளிரவு 12.18 முதல் 15.3.12 வியாழன் நள்ளிரவு 10.24 வரை

எல்லாம் சரி! ஏன் சொர்ண ஆகர்ஷண பைரவரை அஷ்டமியில் வழிபட வேண்டும்?
நமக்குச் செல்வச்செழிப்பைத் தருவது அஷ்ட லட்சுமிகளே! இவர்கள் வரம் தந்து கொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறைந்துகொண்டே வரும்.அப்படி குறையும் சக்தியை ஒவ்வொரு அஷ்டமியிலும்,அதுவும் தேய்பிறை அஷ்டமியிலும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டே பெருக்கிவருகின்றனர்.இது எப்பேர்ப்பட்ட தேவரகசியம்!!!

மனிதர்களாகிய நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும்,சொர்ண ஆகர்ஷண பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.
.


மாசி மகம் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்
மாசி மாதம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது வண்டாடி சித்தர்கள் என்பவர்கள்,மனித வடிவில் பறந்து வருவர்.ஆனால்,அவர்களின் வடிவம் ஒரு வண்டின் அளவுக்கு சிறியதாக இருக்கும்.இந்த வண்டாடி சித்தர்களின் கிரிவலப்பயணத்தை தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களின் பிரச்னைகள் அடுத்த சில மாதங்களில்(அபூர்வமாக சில நாட்களில்) தீர்ந்துவிடுகின்றன.இந்த ஆண்டு,மாசி மகம் எனப்படும் மாசி பவுர்ணமி 17.2.2011 வியாள க்கிழமையன்று வருகிறது.

நீதித்துறையில் இருப்பவர்கள்,நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் போன்றோருக்கு நியாயமான பதவி உயர்வுகளையும்,சீரான புகழையும் அளிப்பதுடன் தர்மம்,நியாயம்,சத்தியம் தவறாது நடப்பவர்களுக்கு உரிய தார்மீக ரீதியான கீர்த்தியும்,விருதுகளும் பதவிகளும் மாசி மகத்தன்று அண்ணாமலை கிரிவலம் செல்வதால் கிட்டும்.

கல்வித் துறையில் இருப்பவர்களுக்கும்,மின் அணுத்துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மேன்மைகளை இந்த மாசி பவுர்ணமி கிரிவலம் தரும்.

பல குடும்பங்களில் கணவன் தன்னுடன் அன்புடன் இருப்பதில்லை என்று ஏங்குகின்ற மனைவியின் ஏக்கத்தை நீக்கிட விரும்பும் இல்லத்தரசிகள் மாசி மாத பவுர்ணமியன்று தனது தாய் தந்தை அல்லது சகோதர சகோதரிகளுடன் அல்லது மகன் மகளுடன் கிரிவலம் வரலாம்.அப்படி ஒரே ஒருமுறை மாசிமகத்துக்கு கிரிவலம் வந்தாலே கணவனின் பூரண அன்பு கிடைக்கும்.

கலப்படம் செய்பவர்கள்,கொடுத்த கடன்கள் திருப்பி வராததால் நொடித்திருப்போருக்கு அவர்களின் சொல்ல முடியாத முன் ஜன்மவினைகளே காரணம்.அந்த முன் ஜன்ம வினைகள் நீங்கவும்,பிறருடைய சொத்துக்களை அபகரித்தவர்கள் மனம் திருந்தி வாழவும் ,குடும்பத்தில் அழுத்தும் நீண்ட காலக்கடன்கள் தீரவும் இந்த மாசி மாத பவுர்ணமியன்று 17.2.2011 வியால க்கிழமையன்று திரு அண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருக! வருக!! வருக!!!

அண்ணாமலைக்கு வருக! அனைத்துவித வளங்களும் பெறுக!!!

இந்த பதிவு நமது ஆன்மீகக்கடலின் மறுபதிவு ஆகும்.

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்: மறு பதிவு


உங்கள் மனைவிக்கு கைப்பிடி சோறும்,கட்டுவதற்கு புடவையும் நீ கொடுத்து அவளை காப்பாற்றினால் நீ கால் ஞானி!

பெற்ற பிள்ளைக்கு பிடி சோறும் கற்பதற்குக் கல்வியும் நீ கொடுத்தால் நீ அரை ஞானி!

மூதாதையர்களையும் மூத்தவர்களையும் மதித்து ஆதரித்து நடந்தால் நீ முக்கால் ஞானி!!

இந்த மூன்றையும் நீ கடைசிவரை செய்து வந்தால் நீ முழு ஞானி!!!

நிர்மலான மனதுடன் நிச்சயம் செய்து வந்தால் உன் மனம் நிர்மலாகும்.உங்களது பிறந்த ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் உங்கள் வாழ்வில் பிதுர்தோஷத்தை உண்டாக்குகின்றன.உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.

பித்ரு தோஷம் பரிகாரம் செய்தபின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும்.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.

மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.

திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம் என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டை பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.

வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.
மாசி மகம் 18.2.11 வெள்ளியன்று வருகிறது;பயன்படுத்துங்கள்18.2.2011 வெள்ளிக்கிழமை அன்று மாசி மாதத்து பவுர்ணமி வருகிறது.இந்த நாளை நமது ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்கப்பயன்படுத்துவோம்.

சந்தர்ப்பம் இருப்பவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் செல்லுங்கள்.அன்று இரவு 10 மணி முதல் 12 அல்லது 1 மணிவரையிலும் பவுர்ணமி பூஜை நடைபெறும்.சென்னை,கோவை,மதுரை முதலான மாநகரங்களில் இரவு 8 முதல் 10 மணிக்குள் பவுர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த சமயத்தில்,அம்மனின் அபிஷேகம் நடைபெறும்போது,நாம் அம்மனின் சன்னதியில் கடைசி ஆளாக நமது மஞ்சள் துண்டினை விரித்து,இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து,உள்ளங்கைகளை மடக்கி,ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவோம்.அம்மன் சன்னதியில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது தவறில்லை;பாவமும் இல்லை;ஏனெனில்,இந்த மந்திரத்தில் அனைத்து தெய்வங்களும் சூட்சுமமாக இருக்கின்றன.எனவே,குற்ற உணர்ச்சி வேண்டாம்.

குறிப்பாக,கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள்,அசுபதி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முடிந்தவரையிலும் அதிக நேரத்திற்கு ஓம்சிவசிவஓம் ஜபிப்பது உங்களின் பாவத்தைப் போக்கும்.இது செய்ய இயலாதவர்கள்,இந்த நாளில் நள்ளிரவு(வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 11.45 முதல் 1.15 வரை) வீட்டின் மொட்டை மாடியில் ஜபித்துவருவது மிகவும் அதிக நற்பலன்களைத் தரும்.அளவற்ற மன உறுதி உள்ளவர்கள்,இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் ஜபிக்கலாம்.விடுப்பும்,போதுமான பணமும் இருப்பவர்கள் உங்கள் ஊரில் அமைந்திருக்கும் மலைக்கோவில்களில் (உதாரணமாக கொல்லிமலை,சதுரகிரி,பர்வதமலை,பண்பொழி முருகன் கோவில்,திருத்தணி,பழனிமலை,சத்தியமங்கலம் காட்டுப்பகுதி)அங்கே சென்று,அன்று முழுவதும் விரதமிருந்து இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வரவேண்டும். ஜபித்து முடித்தப்பின்னர், பால் சாப்பிட்டோ அல்லது இளநீர் சாப்பிட்டோ ஜபத்தை முடிக்கலாம்.எந்த ஒரு மந்திர ஜபத்தையும் ஜபித்து முடித்துவிட்டு,ஒரு டம்ளர் இளநீர் அருந்தினால்,நாம் அன்று ஜபித்த மந்திர ஜபத்தின் மொத்த எண்ணிக்கையும் நமது உடலுக்குள் பதிவாகிவிடும்.இளநீர் கிடைக்காதவர்கள்,குடிநீர் அருந்தினாலும் போதுமானது.இந்தக் கருத்தை ஆராய்ந்து நமக்கு உபதேசித்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

வரி விலக்கு கவிதை:தி.உதயக்குமார்
ஜப்பானியப் படம் ஒன்றிலிருந்து

கதையைச் சுட்டோம்

அமெரிக்காவிலிருந்து அனிமேஷனுக்கு

ஆள் கூட்டி வந்தோம்

நடனமாட மும்பை அழகிகளை

இறக்குமதி செய்தோம்

பாடுவதற்கு பாலிவுட் பாடகர்களைப்

பயன்படுத்தினோம்

தெலுங்கு பேசும் ஹீரோவையும்

மலையாள வாசம் வீசும் ஹீரோயினையும்

இடம்பெறச் செய்தோம்

அதிக ஆங்கில வரிகளைச் சேர்க்குமாறு

ரைட்டரிடம் கேட்டுக்கொண்டோம்

கடைசியில். . .

படத்துக்குத் தமிழில் பெயர் வைத்து

வரிவிலக்கும் பெற்றுக்கொண்டோம்.நன்றி:ஆனந்த விகடன்

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு தொழில்முறை ஜோதிடப்பயிற்சிஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம்,ஒரே மாதத்தில் ஜோதிடம் தொழில்முறையாக கற்றுக்கொள்ளுமளவுக்கு நமது ஆன்மீகக்கடல் பயிற்சியளித்துவருகிறது.இந்த ஒரு மாதத்திற்குப்பிறகு,நீங்கள் உங்கள் பகுதியில் ஜோதிடத்தொழில் செய்யலாம்.

இதற்குத் தேவையான தகுதிகள்:குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரை உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம்,(விருதுநகர் மாவட்டம்)நகரில் வந்து தங்க வேண்டும்.ஜோதிடம் பயிலுவதற்குக் கட்டணம் உண்டு.

மேலும் விபரமறிய மின் மடலில் aanmigakkadal@gmail.com க்கு தொடர்புகொள்ளவும்.

இந்திய தத்துவ மரபு வெறும் கற்பனை அல்ல


இந்திய மரபுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இத்தாலிய எழுத்தாளர் ராபர்ட்டோ கலாஸ்ஸோ,ரிக் வேதத்தின் அடிப்படையாகக் கொண்டு நவீன காலப்புனைவாக உருவாக்கியுள்ள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளியாகியுள்ள நூல் “க”.இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஜனவரி 16(2011) அன்று சென்னையில் நடைபெற்றது.அவ்விழாவில் பேசிய கலாஸ்ஸோ, “இந்திய தத்துவ மரபு வெறும் கற்பனை அல்ல; இந்திய வேதங்கள்,உபநிஷத்துகள்,புராணங்கள்,இதிகாசங்கள் ஆகியவற்றின் உள்ளுறையாக விளங்குவது அறிவார்த்தமான முடிவற்ற தேடல்தான். இந்திய தத்துவ மரபோடு ஒரு படைப்பாளி என்ற முறையில் நான் நடத்திவரும் உரையாடல் தொடரும்”

ஏன் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்?
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.தேவ,அசுர,மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து,இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.தன் தமையன் எமன்,பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

 ஓம் ஹ்ரிம் மஹா பைர வாய நமஹ 

மந்திரங்களின் சக்தி பற்றிய அனுபவம்

சில ஆண்டுகளுக்குமுன் எனக்கு மந்திரங்களில் நம்பிக்கை கிடையாது. மந்திரங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தேன். என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவரின் அனுபவம் ஒன்றை கூறினார். அவர் ஒரு அரசு ஊழியர். அவருடன் பணிபுரிந்த ஒருவர் திடீர் என்று மூன்று மாதங்களாக அலுவலகம் வரவில்லை. அவர் மீண்டும் அலுவலகம் வந்தபோது கிறிஸ்தவ கண்காணிப்பாளர் வெளியில் அவர் நிற்பதை பார்தவுடன் "இது மடம் என்று நினைத்தாரா. நினைத்தால் வருவதற்கும் போவதற்கும். என்ன செய்கிறேன் என்று பாருங்கள். " என்று திட்ட ஆரம்பித்துள்ளார். என் நண்பர் வெளியே நின்றிருந்த அவரிடம் சென்று " இப்போது அலுவலதிற்குள் வராதீர்கள். கண்காணிப்பாளர் வீட்டில் சென்று பார்த்து விட்டு வாருங்கள். இப்போது கடும் கோபத்தில் இருக்கிறார்." என்று சொல்லி இருக்கிறார்.


அதற்கு அவர் "நான் இப்போது வருகிறேன். என்ன செய்கிறார் என்று பாருங்கள் என்று சொல்லிவிடு சிலநிமிடங்கள் கழித்து அலுவலகதில் வந்திருக்கிறார். கண்காணிப்பாளர் அவரை பார்தவுடன் "சார் வாங்க. எப்படி இருக்கீங்க. " என்றவர் பக்கதிலிருந்த எழுதரிடம் சாருக்குரிய சம்பளம் எல்லாவற்றையும் போட்டுக்கொடு என்று கூறியிருக்கிறார். என் நண்பருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்ன செய்தீர்கள் என்று கேட்டபோது ஒன்றுமில்லை. ஒரு மந்திரம் சொன்னேன். அவ்வளவுதான் என்றிருக்கிறார். எனக்கும் சொல்லிக்கொடு என்று இவர் கேட்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் அந்த மந்திர வித்தையை பெண்களை வசியம் செய்ய பயன்படுத்தி அற்ப ஆயுளில் இறந்து விட்டார்.
என் நண்பரே நாயின் வாயை கட்டும் மந்திரம் அறிந்தவர். மற்றொரு பெரியவர் பார்வை பார்த்து தேள் பூரான் பாம்பு கடி விஷங்களை நீக்கி குணமாக்குவார். அவரிடம் பேசியபோது என்ன மந்திரம் சொல்லி குணமாக்குகிறீர்கள் என்று நான் கேட்டபோது நம் தெய்வங்களின் பெயர்கள் தான். ஓடும் தண்ணீரில் நின்று லட்சம் தடவை சொல்லி உரு ஏற்றவேண்டும் அவ்வளவுதான் என்றார். இது போன்ற சில சம்பவங்களினால் மந்திரங்களின் மேல் நம்பிக்கை வந்தது. அகத்தியர் கருவூர் சித்தர் போன்ற சித்தர்கள் பாடல்களை படித்தபோது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் வியாதிகளை போக்குவதற்கும், மூலிகை வைத்தியம் மட்டுமல்லாது மந்திரங்களாலும் தீர்க்க முடியும் என்பதை அறிந்தேன்.

எனவே மந்திரங்களுக்கு மாபெரும் சக்தி உண்டு என்பதை உறுதியாக நம்பலாம்.

மெல்ல எழும்பும் நியாயக்குரல்:அசிம் பிரேம்ஜி
பொருளாதாரத்தினை திறந்துவிடுவது பற்றி மேலை நாடுகள் செய்யும் உபதேசங்கள் அலுப்பைத் தருகின்றன.அவர்களது உபதேசத்தை அவர்களே கடைபிடிப்பதில்லை என விப்ரோ நிறுவனத் தலைவர் திரு.அசீம் பிரேம்ஜி அமெரிக்க தடையுத்தரவுகள் பற்றி சாடியுள்ளார்.அவர் இதை உலக பொருளாதார மன்றத்தில் பேசினார்.பிற நாடுகல் அமெரிக்க பொருட்களுக்கு தடைவிதிக்கக் கூடாது என எதிர்பார்க்கும் அமெரிக்கா,தனது நாட்டில் வெளிநாட்டுப்பொருட்களுக்கு தடை விதிக்கிறது.அமெரிக்காவின் விசா கட்டண உயர்வு மற்றும் சேவை இறக்குமதித் தடைகளை பற்றி அவர் தனது கோபத்தினை வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவிலிருந்து நாம்(இந்தியா) 50 பில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும்,இந்தியா 50,000 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 10 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நன்றி:சுதேசி செய்தி,பக்கம் 25,பிப்ரவரி 2011.

மேல்நாட்டு இதழியல் முறையும்,கீழ்நாட்டு இதழியல் வடிவமைப்பும்
இலங்கையின் அதிபர் இராஜபக்ஷேவுக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.இதனால்,இதற்கு முந்தைய புகைப்படங்களை விட,தற்போதைய புகைப்படத்தில் முகத்தில் வீக்கம் தெரிகிறது.

இதுதான் மேல்நாட்டு இதழியல் முறைப்படி உலகம் முழுவதும் பரவியிருக்கும் செய்தி.இனி கீழ்நாட்டு இதழியல் முறைப்படி,இந்த செய்தியை வாசிப்போமா?எத்தனையோ பிறவிகளாக சேர்த்துவைத்த புண்ணியத்தின் விளைவாக இலங்கை நாட்டின் மன்னனாகும் வாய்ப்பு,இந்தப்பிறவியில் இராஜ பக்ஷேவுக்கு கிடைத்தது.அப்படி கிடைத்த வாய்ப்பினை அவர் தனது ராஜதந்திரத்தினால் இலங்கையின் சமாதான புறா என்ற பெயரை எடுத்திருக்கலாம்.உலக வரலாற்றில் அழியாத அற்புதமான தலைவர் என்ற பெயரையும் எடுத்திருக்கலாம்.

ஆனால்,குறுகிய கண்ணோட்டத்தாலும்,அரக்கத்தனத்தை வெளிப்படுத்திட வாய்ப்பு கிடைத்தது போலவும்,தனது சிங்கள இனத்தின் காவலனாகவும் காட்டிக்கொள்ளும் விதமாக தனது நாட்டின் குடிமக்களையே கொடூரமாகவும்,மனித குல தர்மங்களை மீறியும்,ஒரு ட்ரில்லியன் (ஆயிரம் கோடி கோடி)ஹிட்லருக்குச் சமமாகவும் அழித்து இந்த அரிய மானிடப்பிறவியையும்,அற்புத அதிபர் பதவியின் மரியாதையையும் கெடுத்துக்கொண்டார்.

தமிழினத்தைச் சேர்ந்த பெண்கள்,சிறுவர்கள்,முதியவர்களை இன்று வரையிலும் நிம்மதியாகவும்,மன மகிழ்ச்சியோடும் வாழ வைக்காவிட்டாலும் பரவாயில்லை;தினசரி வாழ்க்கையையே நரகத்தை விடவும் வாழ வைத்து,புத்த மதத்தின் மாண்பையே சிதைத்து,இன்று கல்லீரல் புற்றுநோயாளியாகிவிட்டார்.

இவர் செய்த கொடூரபாவத்தை இவர் நீக்கிட இன்னும் பல கோடி மனித பிறப்பெடுக்க வேண்டியிருக்கும் என இந்துதர்ம நீதி நூல்கள் தெரிவிக்கின்றன.